Tamil books

Wednesday 20 April 2011

உலகை குலுக்கிய புத்தகம் - ரூசோவின் சமுதாய ஒப்பந்தம்

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்ÕÕ எனும்
மனித உரிமை முழக்கங்களை 18ஆம் நூற்றாண்டில்
உலகிற்குத் தந்த சிந்தனையாளர் ரூசோ, தனது வாழ்க்கை
வரலாற்றை The Confessions of jean jacques Rousseaw எனும் தலைப்பில் எழுதியுள்ளார். தனது குற்றங்குறைகளை மறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்-
கொண்டு எழுதிய இந்நூல் உலகம் புகழும் ஈடு இணையற்ற
தன் வரலாற்று இலக்கியமாகக் கருதப்படுகிறது.
ÔÔமனிதன் சுதந்திரத்தோடு தான் பிறக்கிறான்; ஆனால்
எங்கு நோக்கினும் அவன் அடிமைத் தளைகளில்
பிணைக்கப்பட்டே காட்சி அளிக்கிறான்.
ÔÔஅமைதி நிறைந்த அடிமைத்தனத்தைவிட ஆபத்துடன்
கூடிய சுதந்திரமே மேலானது.
ÔÔபல கடவுள்களும், பல மதங்களும் உலகத்தில்
துன்பத்தைத் தான் புகுத்தியுள்ளன ‘‘கடவுளைத்
தொழுவதற்கு வேதப் புத்தகமும்
ஆலயமும், சடங்குகளும்,
இடையில் தரகர் வேலை
செய்யும் குருமார்களும்
தேவையில்லை.
நேர்மையும், பொறுப்பும்,
கண்ணியமும் உள்ள ஒரு
மனிதனை உலகின் மூலை
முடுக்குகளிலெல்லாம் தேடுகி-
றேன்; ஆனால் இன்னும் என்னால் கண்டுபிடிக்க
முடியவில்லை.கலைகளின் மீது ஈடுபாடும் கவனமும்
ஏற்பட்டால் அவை கடைசியில் பகட்டில் தான் போய்
முடியும். எந்த இனத்திற்குக் கலாசாரப் பகட்டிலே பிடிப்பு
உண்டாகி விடுகிறதோ அந்த இனம் போராட்டப் பண்பைத்
துறந்து விடுகிறது.
இவையெல்லாம் சிந்தனையாளர் ரூசோவினின்றும்
வெளிப்பட்ட சிந்தனை முத்துக்களுள்சில. பதினெட்டாம்
நூற்றாண்டில் வால்டேர் பழமையை அழிக்கப் புறப்பட்-
டார்; ரூசோ புதுமையை உருவாக்கக் கிளர்ந்தெழுந்தார்.
ரூசோ மூட்டிய விடுதலை வேட்கை எனும் நெருப்பு
பின்னாளில், பிரெஞ்சுப் புரட்சிக்கும் அமெரிக்க விடுதலைக்-
கும் அடிகோலியது என்றால் அது மிகையில்லை. இவ்விரு
நாட்டின் சுதந்திரப் பிரகடனங்களிலும் ரூசோவின் ÔÔசமுதாய
ஒப்பந்தம்ÕÕ (The Social Contract) என்ற நூலின் வாசகங்கள்
இடம் பெற்றுள்ளன. ஜெர்மானிய தத்துவ அறிஞர்
இம்மானுவேல் கண்ட், ரஷ்ய தத்துவ அறிஞர் டால்ஸ்டாய்,
சாமுவேல் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய
ஜேம்ஸ் பாஸ்வெல், ஆகியோரெல்லாம் ரூசோவின்
கருத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்; ரூசோவை வியந்து
பாராட்டியவர்கள்; இயற்கையை வியந்து, அதில் ஈடுபாட்டுடன் திளைத்து, மகிழ்ந்து வெளியிட்ட ரூசோவின் உயர்
எண்ணங்கள்பின்னாளில் தோன்றிய நாத்திகக் கவிஞன்
ஷெல்லி, பைரன், வேர்ட்ஸ் ஒர்த் முதலிய ஆங்கிலக்
கவிஞர்களின் கவிதைகளில் எதிரொலிக்கின்றன. பொது-
வுடைமைத் தத்துவத்தின் தந்தை கார்ல் மார்க்சின்
கருத்துகளிலும் ரூசோவின் சிந்தனையின் தாக்கம்
இல்லாமல் இல்லை.
ஜெனீவாவில் 28.6.1712 இல் பிறந்த ரூசோ, தான் பிறந்த
10ஆம் நாளில் தாயை இழந்தார்; தந்தையையும் பிரிந்த
இவர் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். தன் வாழ்நாள்
முழுதும் ஊர் ஊராக, நாடு நாடாக, தன் துணிவு மிக்க
கருத்துகளுக்காகப் பிற்போக்காளர்களால் விரட்டி
அடிக்கப்பட்டு ஓடிக்கொண்டே, கழித்தார் என்றால் அது
மிகையில்லை; வறுமை காரணமாக, வேலை தேடி, பல
இடங்களில் தங்கி, துன்பங்க
ளை ஏற்று, அன்றாட
வாழ்வில் அல்லலுற்றதும்
இதில் அடக்கம். இத்தனைக்-
கும் இடையில் நெருப்பில்
பூத்த மலராக, அவரது
சிந்தனைக் கருவூலங்கள்
நூல்கள்வடிவில் வெளிவந்
தன என்பது வியக்க
வைக்கும் செய்தி.
ஆறு வயது வரை எப்படி வாழ்ந்தேன் என்று எனக்குத்
தெரியாது என்று கூறிய ஒருவர், பள்ளிக் கல்வி பயிலாத
ஒருவர், தான் பெற்ற பிள்ளைகளை வளர்த்து, கல்வி
கற்பிக்க இயலாமல் அனாதை விடுதியில் விட்ட ஒருவர்,
எழுதிய எமிலி என்ற கல்வியைப் பற்றிய ஆய்வு நூல்
ஐரோப்பாவையே கதிகலங்கச் செய்தது! அதேபோல்,
அரசியல், சமத்துவம், மனித உரிமைகள்பற்றிய சீரிய
சிந்தனைகளை வழங்கிய சமுதாய ஒப்பந்தம் எனும் நூலும்
உலகையே குலுக்கியது! நாத்திகன், மதவிரோதி,
பைத்தியக்காரன், வெறிபிடித்த ஓநாய்என்றெல்லாம் அவர்
இகழப்பட்டு, இவ்விரு நூல்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்
டன; நாடு கடத்தப்பட்டு, விரட்டி அடிக்கப்பட்டார்.
அவர் இறக்கும் வரை துன்பமும் துயரமும் மிக்க, நிம்மதியற்ற
வாழ்வு வாழ்ந்ததாகவே அவரின் வரலாறு கூறுகிறது.
ரூசோ. 2.7.1778_இல் தனது 66ஆவது வயதில் மறைந்தார்.
அவர் வாழ்நாளில் சந்தித்த துன்பங்களும், ஏச்சுகளும்,
பின்னாளில் அவரின் பெருமையை மறைத்துவிட
முடியவில்லை.

No comments:

Post a Comment