Tamil books

Wednesday 20 April 2011

நோபெல் இலக்கியம் - சில தகவல்கள்

 சுகுமாரன்

பெருவாரியான மக்களை விரைவாகக் கொல்லுவதற்காக எப்போதும் இருந்ததை விடவும் எளிய வழிகளைக் கண்டுபிடித்து விற்பனை செய்து செல்வந்தரான டாக்டர். ஆல்பிரட் பெர்னார்ட் நோபெல் நேற்று மரணம
டைந்தார். நோபல் பரிசுகளின் நிறுவனரது மறைவைப்
பற்றி அந்த நாளைய பிரெஞ்சு நாளிதழ் இவ்வாறு செய்தி
வெளியிட்டது. டைனமைட் என்ற அபாயகரமான வெடி-
மருந்தைக் கண்டுபிடித்து விற்பனையும் செய்தார் என்ற
தார்மீகக் கோபத்தில் அந்தக் கருத்து உருவாகியிருக்கலாம்.
ஆனால் இன்று ஆல்பிரட் நோபெல் நினைவு கூரப்படுவது
வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்ற நிலையிலல்ல;
மனித மேம்பாட்டுச் சாதனைகளுக்கு வழங்கப்படும் உலகின்
ஆகப் பெரிய பரிசுகளை நிறுவியவர் என்ற அடிப்படை-
யில்தான். கண்டுபிடிப்பாளராகவும் தொழிலதிபராகவும்
பெரும் பொருளீட்டிய நோபெல் இலக்கியத்துக்கான
பரிசுகளை நிறுவக் காரணம் அடிப்படையில் தன்னை ஓர்
எழுத்தாளன் என்று கருதியிருந்ததுதான். தொழில்சார்ந்த
நெருக்கடிகளுடன் வாழ்ந்த அவர் தனது இறுதிக் காலத்தில்
Ôநெமிசிஸ்Õ என்ற நாடகத்தை எழுதி இலக்கிய ஆர்வத்தைப்
பூர்த்தி செய்து கொண்டார். ஆங்கிலக் கவிஞரான
ஷெல்லி எழுதிய Ôசென்சிÕ என்ற கவிதை நாடகத்தைத்
தழுவி எழுதப்பட்ட உரைநடை நாடகம் அது. ஆல்பிரெட்
நோபெலின் மரணத்துக்குப் பின்னர் நாடக நூலின்
எல்லாப் பிரதிகளும் _ மூன்று படிகள்தவிர _ அழிக்கப்பட்
டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆல்பிரெட்
நோபெலின் நாடகம் மீண்டும் வெளியிடப்பட்டது.
Ôநெமிசிஸ்Õ நாடகத்தின் மையக் கதை உண்மையான
வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டிருந்தது. பதினாறாம்
நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த பிரபுக் குடும்பத்துப்
பெண்ணான பியாட்ரீஸ் சென்சி கதையின் முதன்மைப்
பாத்திரம். அவள்மீது அதே குடும்பத்தைச் சேர்ந்த
பிரான்சிஸ்கோ சென்சி கொள்ளும் முறையற்ற உறவுதான்
கதைப் பொருள். அந்தக் கால ஒழுக்க மதிப்பீடுகளுக்கு
எதிரானது என்று கருதப்பட்ட இந்த உண்மை வாழ்க்கைக்
கதையை மேற்கத்திய இலக்கியவாதிகள்பலர் கையாண்டி-
ருக்கிறார்கள். ஷெல்லி தவிர ஸ்டெந்தால், அலெக்சாந்தர்
டூமா, ஜார்ஜ் எலியட், ஆல்பெர்ட்டோ மொராவியா
போன்ற பல எழுத்தாளர்களும் பியாட்ரீசின் கதையை
இலக்கியமாக்கி இருக்கிறார்கள். அவை அனைத்தும் தடை
செய்யப்பட்டன. அபாயகரமான வெடிமருந்தைக் கண்டு-
பிடித்த அதே சவாலான மனநிலையில் ஆல்பிரெட்
நோபலும் இந்தக் கதையைக் கையாண்டிருக்கலாம்.
அவருக்கும் அதே தடை வந்து சேர்ந்தது.
இந்த முன்கதையை யோசிக்கக் காரணம் தனது
சொத்துக்களிலிருந்து ஓர் அறக்கட்டளையை உருவாக்கி
அதன் மூலம் மனித மேம்பாட்டுச் சாதனைகளுக்குப்
பரிசுகள்வழங்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்த
ஆல்பிரெட் நோபெலின் பட்டியலில் இலக்கியம் இடம்
பெற்றது எவ்வாறு என்ற கேள்விதான். இயற்பியல்,
வேதியல், மருத்துவம் ஆகிய மூன்று அறிவியல் துறைகளுக்கு
ப் பிறகு முதன்மையான மானுட ஆற்றல் சார்ந்த
துறையாக இலக்கியத்தைத் தனது உயிலில் நோபெல்
குறிப்பிட்டிருப்பது அவரது ஆர்வத்தையும் நம்பிக்கை-
யையும் அடையாளப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
அமைதிக்கான பரிசு கூட இலக்கியத்துக்குப் பின்னரே
குறிப்பிடப்படுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக நோபெல்
அறக்கட்டளை உலக மானுடச் சிந்தனையிலும் பண்-
பாட்டிலும் காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தி
வருகிறது. மனித ஆற்றலின் பெரும் சாதனைகளுக்கான
நிதி மதிப்பு மிகுந்தவையும் பரவலான அங்கீகாரம்
பெற்றவையுமான பரிசுகள்நோபெல் பரிசுகள்தாம். 1901
ஆம் ஆண்டு முதன் முறையாக நோபெல் பரிசுகள்அறிவிக்
கப்பட்டன. அன்று இலக்கியத்துக்காகப் பரிசு பெற்றவர்
பிரெஞ்சுக் கவிஞரும் தத்துவருமான சுல்லி ப்ருதோம்.
அன்று முதல் வெவ்வேறு நாடுகளையும் மொழிகளையும்
பண்பாட்டுப் பின்னணிகளையும் சேர்ந்த பல இலக்கியவா
திகள்பரிசு பெற்றிருக்கின்றனர். இவர்களில் சிலர்
முன்னரே வாசக அங்கீகாரம் பெற்றவர்கள். பலர் நோபல்
பரிசு பெற்றதன் மூலமே உலக வாசக கவனத்துக்கு
ஆளானவர்கள்.
இலக்கியத்துக்காக இதுவரை நோபெல் பரிசு
பெற்றிருப்பவர்கள்104 பேர். முதல் மற்றும் இரண்டாம்
உலகப் போர்கள்நடைபெற்ற காலங்களில் பரிசுத் தொகைகள்
நிறுத்தப்பட்டு சிறப்பு நிதியாகச் சேமிக்கப்பட்டன.
கவிஞர்கள், நூலாசிரியர்கள், நாடகக்காரர்கள்என்று
இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டவர்கள்
நோபெல் பரிசுக்குரியவராகத் தேர்வு பெற்றனர். இலக்-
கியத்தின் பெயரால் ஓர் அரசியல் தலைவரும் பரிசு பெற்றா
ர். அவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில். 1953ஆம் ஆண்டு சர்ச்சிலுக்கு நோபெல் பரிசு
வழங்கப்பட்டதன் காரணம் இலக்கியமல்ல; அரசியல்
என்பது நோபெல் தேர்வுக் குழுவுக்கு எதிராக வைக்கப்பட்
ட விமர்சனம். நோபெல் பரிசு பற்றிய அபிப்-
பிராயங்களில் ஊனத்தை ஏற்படுத்தியது இந்த விமர்சனம்.
எந்தப் பரிசும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டதல்ல
என்பதன் அடையாளம் இது. எனினும் நோபெல் பரிசு
அதற்குரிய இலக்கிய முக்கியத்துவத்தை இழந்து
விடவில்லை.
உலக இலக்கியத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும்
ஒரு வாசகனுக்கு புதிய இலக்கியவாதிகளை அடையாளம்
காட்டுவது நோபெல் பரிசுதான். வாசகனாக அயல்மொழி
எழுத்தாளர்கள்பலரை அறிமுகம் செய்து கொள்ள
எனக்கு உதவியது நோபெல் பரிசு நிகழ்வு என்பதை
நினைவு கூர்கிறேன். இந்த நிகழ்வு ஓர் இலக்கியப்
பரிந்துரை. ஓர் இலக்கியவாதியை முன்னிறுத்தி அவர்
செயல்படும் மொழியின் இலக்கியத்தை அது இயங்கும்
பண்பாட்டைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்ட
முறையில் இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன்.
ஓர் உதாரணத்தை முன் வைக்கலாம். சீன இலக்கியம்
பற்றிய எனது வாசிப்பு லூசுனுடனும் சீன அரசு அதிகாரபூ
ர்வமாக அனுமதித்திருந்த இலக்கியங்களுடனும் தேங்கிப்
போயிருந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் சீன சமூகம்
பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தது. அந்த
மாற்றங்கள்என்னவாக இலக்கியத்தில் பதிவு பெற்றிருக்-
கின்றன என்று அறிந்து கொள்வதற்கான இலக்கியத்
தரவுகள்கிடைப்பது அரிதாக இருந்தன. அரசியல் காரணங்களுக்
காகப் புதிய இலக்கியப் போக்-குகளைப் பற்றிய
விவாதங்கள்தடை செய்யப்பட்டிருந்தன. அந்த நிலையில்
2000ஆம் ஆண்டுக்கான நோபெல் இலக்-கியப் பரிசு சீன
எழுத்தாளரான காவோ ஜின்ங்சியானுக்கு வழங்கப்பட்டது.
Ôசோல் மவுண்டன்Õ என்ற அவரது நாவலை முன்வைத்துப்
பரிசு அறிவிக்கப்பட்டது. அதுவரை சமூக எதார்த்தம்
சார்ந்த படைப்புகளே சீன இலக்கியமாகத் தெரிய வந்திருந்த
சூழலில் ஒரு தனி மனிதனின் நினைவுப் பின்னல்களும்
பண்பாட்டுப் புரட்சிக்குப் பிந்திய சீனாவில் நிலவிய அரசு
அடக்குமுறை அனுபவங்களும் படைப்-பாக்கப்பட்ட அந்த
நாவல் புதிய கண்ணோட்டத்தை அளித்தது. நோபெல்
பரிசு அறிவிக்கப்படாமலிருந்திருந்தால் காவோ ஜின்சியாங்
உலக இலக்கிய வாசகனை அடைவது எளிதாக
இருந்திராது.
நோபல் பரிசு பெற்றவை என்ற தகுதியில் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்ட பல நூல்கள்புதிய அறிமுகத்தை-
யும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தன. செல்மா லாகர்லாவ்,
நட் ஹாம்சன், எர்னெஸ்ட் ஹெமிங்வே, பெர்லாகர்
குவிஸ்ட், தாமஸ்மன், பேர்ல் எஸ் பக், கிரேசியா டெலடா
போன்ற படைப்பாளிகள்அறிமுகப்படுத்தப்படுவதற்கான
முகாந்திரம் அவர்களது இலக்கியப் பெறுமதி என்பது
போலவே நோபெல் பரிசுக்கு உரியவர்களாக இருந்தனர்
என்ற உபரி மதிப்பும் கூடத்தான். க.நா.சு., தி. ஜானகிராமன்,
வல்லிக்கண்ணன், ச.து.சு.யோகி, திரிலோக சீதாராம் போன்ற
முன்னோடிகள்இந்த உபரி மதிப்பைச் சார்ந்த அந்த
ஆசிரியர்களைத் தமிழில் மொழிபெயர்த்தனர். கிரேசியா
டெலடாவின் Ôஅன்பு வழிÕ நாவலை வாசித்திருக்கும் ஓர்
இலக்கியவாசகனுக்கு வண்ணநிலவன் கதைகள்மேலதிக
மெருகுடன் விளங்குவது நோபெல் இலக்கியப் படைப்புகள்
தரக்கூடிய நுண்ணனுபவத்துக்குச் சான்றாக இருக்கலாம்.
தன்னிச்சையான ஓர் அறக்கட்டளைதான் நோபெல்
பரிசுகளைத் தீர்மானிக்கிறது. எனினும் அவ்வப்போது
அரசியல் தலையீடுகள்சார்ந்து பரிசுகள்நிர்ணயிக்கப்ப
டுகின்றன என்ற விவாதங்களும் எழுகின்றன. இன்னொரு
தளத்தில் நோபெல் பரிசுகளுக்கான அங்கீகாரமும் அரசியல்
நோக்கில் முன்வைக்கப்படுகின்றன. இலக்கியவாதியல்லாத
சர்ச்சிலுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டதும் உயர்ந்த
இலக்கியத் தரமற்ற எழுத்தாளர்களான பேர்ல் பக்
போன்றோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசியல்
காரணங்களுக்காக என்று கூறப்படுவதுண்டு. பாரிஸ் பாஸ்ட
ர்நாக், நோபெல் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்
டபோது அவரைப் பரிசு பெற அனுமதிக்காத அன்றைய
சோவியத் அரசு மைக்கேல் ஷோலகோவ் தேர்ந்தெடுக்கப்பட்
டபோது அரசாங்கச் செலவில் அவரை அனுப்பி
வைத்தது. நோபெல் அங்கீகாரம் அரசியல் சார்ந்து உருவா-
கிறது என்பதற்கு இது சான்று. இவற்றை மீறி ஓர் இலக்கிய
வாசகனுக்கு நோபெல் பரிசு அறிவிப்பு ஒரு புதிய எழுத்-
தாளனை ஒரு புதிய பண்பாட்டின் இலக்கிய வெளியை
அறிமுகப்படுத்தும் செயல் என்றே கருதுகிறேன். புத்தக
வெளியீடு, விற்பனை என்ற அளவிலும் நோபெல் அறிவிப்பு
ஓர் உபரி மதிப்பு. நோபெல் பரிசு பெற்ற இலக்கியம்
என்ற அடிப்படையில் நூல்களின் மொழிபெயர்ப்புகளும்
விற்பனையும் தூண்டப்படுகின்றன. பெயரளவில் தெரிய
வந்த இலக்கியவாதிகள்கையருகில் வந்து சேர இது
உதவுகிறது என்றே நினைக்கிறேன். நோபெல் பரிசுக்குரியவரா
கத் தேர்ந்தெடுக்கப்படாமலிருந்தால் ஒரான் பாமுக்கை
ஆங்கிலம் வழியாக அறிந்து கொள்ளக் கூடத் தாமதமாகி
இருக்கலாம். எல்பிரெட் ஜெனலிக் என்ற பெண் எழுத்-
தாளரை நான் அறியாமலே போயிருக்கக் கூடும்.
நூற்றாண்டு காலமாக வழங்கப்பட்டு வருவது என்ற
அளவில் நோபெல் பரிசளிப்பு ஓர் இலக்கிய மரபை
உருவாக்கியிருக்கிறது. பரிசுத் தேர்வுகளைப் பற்றிய
விவாதங்கள்என்னவாக இருந்தாலும் இலக்கியத்துக்குக்
கிடைக்கும் உலகளவு அங்கீகாரம் என்பது எளியதல்ல.
ஏதோ ஒரு மொழியின் வாசகனுக்கு இன்னொரு மொழியி
ல் உருவாகியிருக்கும் பெரும் படைப்புகளைத் தெரிந்து
கொள்ளும் வாய்ப்பை உருவாக்குவது எளிமையானதல்லவே.
இந்த வாய்ப்புகளில் பெரும் படைப்பாளிகள்பலர் விடு-
பட்டுப் போயிருப்பதை நோபெல் தேர்வுக் குழுவின் கவனக்
குறைவு என்றும் திட்டமிட்ட சதியென்றும் வகைப்ப
டுத்தலாம். டால்ஸ்டாயும் போர்ஹெயும் தேர்ந்தெடுக்கப்படா
தது அவமானம். ஆனால் விஸ்லவா சிம்போர்ஸ்காவும்
யோசே சரமாகோவும் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமிதம்.
இந்தப் பரிசைப் பற்றிய புள்ளிவிவரங்களில் சில சுவாரசியங்களும்
இருக்கின்றன. இதுவரை நோபெல் இலக்கியப்
பரிசு பெற்ற படைப்பாளிகள்104 பேர். இவர்களில் பரிசைப்
பெற்றுக் கொள்ள மறுத்தவர் பிரெஞ்சுத் தத்துவவாதியும்
எழுத்தாளருமான சார்த்தர். பரிசைப் பெற அனுமதிக்கப்படா
தவர் ரஷ்யக் கவிஞர் பாஸ்டர்நாக். பரிசைப் பெறுவதற்கா
க நாட்டை விட்டு வெளியேறியவர் அலெக்சாந்தர்
சோல்செனித்சின். இந்த ஆண்டு பரிசு பெற்றவரான டோரிஸ்
லெஸ்ஸிங் உட்பட 11 பெண்கள்இலக்கியத்-துக்-காகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 104இல் 11 எத்தனை சதவீதம்?
வாசகன் என்ற நிலையில் நோபெல் இலக்கியப் பரிசுகள்
எனக்குப் பல எழுத்தாளர்களை, கவிஞர்களை
அறிமுகப்படுத்தியிருக்கின்றன. நோபெல் பரிசுக்குரியவர்
என்ற காரணத்தால் மட்டும் சிலரை வாசித்திருக்கிறேன்.
பிரிட்டிஷ் எழுத்தாளர் வில்லியம் கோல்டிங்குக்கு பரிசு
கிடைத்திராவிட்டால் அவரது படைப்புகளை நான்
வாசித்திருக்கவே வாய்ப்பில்லை. நோபெல் பரிசு இல்லை-
யென்றால் டெரக் வால்காட்டையும் சீமஸ் ஹீனியையும்
பொருட்படுத்தியிருக்க முடியாது. சரியாகச் சொன்னால்
பரிசு பெற்ற நூற்றிச் சொச்சம் படைப்பாளர்களை ஒரு
வாசகன் வாசித்து மதிப்பீடு உருவாக்கிக் கொள்வது
இயலாதது. எனினும் ஓர் எழுத்தாளரை அறிந்து கொள்ள
முயலும்போது அதைத் தொடர்ந்து பிறரும் பிறவும்
முன்வந்து கவனத்தைக் கோரி நிற்கின்றன. ஹெமிங்க்வேயை
வாசிக்கத் தொடங்கினால் நீங்கள்தவிர்க்க இயலாமல்
வில்லியம் ஃபாக்னரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாப்லோ நெரூதாவை நெருங்கினால் காப்ரியேலா
மிஸ்ட்ராலையும் காப்ரியேல் கார்சியா மார்க்கேசையும்
விலக்க முடியாது. இந்த இலக்கியப் பின்னல் உலகப்
படைப்புகளைப் பற்றி யோசிக்கும் வாசகனுக்கு ஒரு
வசீகரமான வலை. கடலில் வாழும் எல்லா மீன்களையும்
தெரிந்து கொள்ள முடியாதவனுக்கு வலையில் சிக்கும்
வெவ்வேறு மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவது
ஒரு வாய்ப்புத்தானே?

No comments:

Post a Comment