Tamil books

Wednesday 20 April 2011

தமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள்

 ஆ. செல்லபெருமாள்

தமிழகத்தின் அறிவுச் சூழலில் கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்குடி
என்று தமக்குத் தாமே தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிப்
பெருமை பாராட்டிக் கொள்ளுகின்ற நிலையும், மிகப்
பழமையான மொழியைக் கொண்டிருப்பதாகப் பறை
சாற்றிக் கொள்ளும் நிலையும் ஒருபுறம் காணப்படுகிறது.
இதற்கு மாறாக தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றே
நடைமுறையில் இல்லை. இலட்சியப் பண்பாடு என்ற
ஒன்றுதான் உண்டு என்று பிழைபடக் கூறும் சூழல்
மறுபுறமும் காணப்படுகிறது. இப்படி தமிழ்ப் பண்பாடு
குறித்த மிகைப்பட்ட மதிப்பீடும், தரக்குறைவான மதிப்பீடும்
இருப்பதற்கெல்லாம் காரணம்
தமிழக அறிவுச்சூழலில் மானிட-
வியல் இன்னும் அதற்குரிய
இடத்தைப் பெறாமையே ஆகும்.
இத்தகைய சூழலில் பண்பாட்-
டினைப் பற்றி ஆராயும்
அறிவியல் புலமான மானிடவியலின்
முக்கியத்துவம் எப்படிப்பட்
டது என்பதையும் தமிழர்-
கள்அவசியம் வாசிக்க வேண்-
டிய சில மானிடவியல் நூல்கள்
குறித்தும் இக்கட்டுரையில்
காண்போம்.
மானிடவியலைத் தமிழில்
அறிமுகப்படுத்தும் முயற்சி
கடந்த நூற்றாண்டின் இறுதி முதலாக மிகச் சிறப்பாக
இருக்கின்றது. 1952_ஆம் ஆண்டு அப்போதைய
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னைப்
பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பேராசிரியர்
கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட
பண்பாட்டு மானிடவியல் என்ற நூலை வெளியிட்டது.
இந்நூல் தான் தமிழில் மானிடவியல் பற்றி வெளிவந்த
முதல் நூல். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1960_ஆம்
ஆண்டு உளவியல் மானிடவியலில் புகழ்பெற்ற ரூத்
பெனடிக்ட் அம்மையார் எழுதிய பண்பாட்டுக் கோலங்கள்
எனும் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டது. ஆனால்,
அதற்குப் பிறகு மேற்கூறப்பட்ட இரண்டு நூல்களைத்
தவிர்த்து இன்று வரை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
மானிடவியல் தொடர்பான நூல் எதனையும்
வெளியிடவில்லை. பட்டப் படிப்பிலோ அல்லது
முதுகலைப் படிப்பிலோ மானிடவியல் தமிழ் மொழியில்
தொடங்கப்படாததே இதற்குக் காரணமாகலாம்.
ஆங்கிலம் வழியாக மானிடவியல் கல்வி தமிழ்நாட்டில்
வேண்டிய அளவிற்கு இன்றளவும் தொடங்கப்படவில்லை
என்றே கூறலாம். தமிழ்நாட்டில் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் 60 ஆண்டுகளாக
மானிடவியலுக்கு என்று ஒரு துறை இருந்துவருகிறதென்ற
போதிலும் 1976_ஆம் ஆண்டு முதற்கொண்டுதான் அது
ஒரு முழுமையான துறையாகச் செயல்பட்டு வருகின்றது.
அப்பொழுதிலிருந்துதான் முதுகலை மற்றும் முனைவர்
பட்ட ஆய்வுகள்தொடங்கப் பெற்றன. இத்துறையின்
மூலம் 1976_ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மூத்த
மானிடவியல் பேராசிரியரான முனைவர் நெ. சுப்பாரெட்டி
அவர்களின் சீரிய தலைமையில்
பலர் முறைப்படி பயிற்சி
பெற்றனர்.
தமிழக அரசு 1960_ஆம்
ஆண்டு வெளியிட்ட தமிழ்க்
கலைக் களஞ்சியத்தில்
ஏறத்தாழ இருபது
கட்டுரைகள்வெளிவந்தன.
இதற்கிடையில் அவ்வப்போது
சென்னை அருங்காட்சியகம்
தென்னிந்திய அளவில்
பழங்கால கற்கருவிகள்,
பழங்குடிகள்போன்ற சிறு
குறிப்பு நூல்களை தமிழில்
வெளியிட்டது. இதற்கிடையில்
தமிழ்த் தொல்லியல் மானிடவியல் குறித்த பல நூல்கள்
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் மூலம்
வெளியிடப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
மொழியியல் உயர் ஆய்வு மையத்தின் மூலமாக இனக்குழு
மொழியியல் (மொழியியல் மானிடவியல்) தொடர்பான
ஏராளமான ஆய்வுகள்வெளிவந்தன. அவை பெரும்பாலும்
தமிழ்நாட்டின் ஏராளமான பழங்குடிகள், சாதிகள்பற்றிய
கிளை மொழிகளையும், வாழ்வியலையும் எடுத்துக்காட்டும்
முறையில் அமைந்தன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986_லிருந்து வெளியிட்ட
வாழ்வியல் களஞ்சியம் தொகுதிகள்தமிழில்
மானிடவியலின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக
அமைந்தன. வாழ்வியல் களஞ்சியத்தின் எல்லாத்
தொகுதிகளிலும் காணப்படும் மானிடவியல் சார்ந்த
கட்டுரைகள்அனைத்தும் பல அறிஞர்களால்
எழுதப்பட்டவை. அவை அனைத்தும் தனியே தொகுத்து
பதிப்பித்தால் அது தமிழில் மானிடவியலுக்குப் பெரும்
கொடையாக அமையும். தமிழ்ப் பல்கலைக்கழகம் எட்கர்
தர்ஸ்டன் 1909_ல் எழுதிய தென்னிந்திய குலங்களும்
குடிகளும் என்ற 7 தொகுதி நூலின் ஓரிரு தொகுதிகளை
மொழிபெயர்த்து வெளியிட்டது.
கல்வி நிறுவனங்கள்அல்லாத பல பதிப்பகங்களும்,
ஆய்விதழ்களும் தமிழில் மானிடவியலின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றி வருகின்றன. அவற்றுள்மணிவாசகர்
நூலகம் வெளியிட்டுள்ள சூ. சக்திவேல் (1983) மானிடவியல்
கலைச்சொல் அகராதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியிட்டுள்ள (1980) மந்திரம் சடங்குகள்(ஆ.
சிவசுப்பிரமணியன், 1988), வறுமையின் பின்னணி
(ட்ஜீர்ஃபெல்ட் & லிண்ட்பெர்க் 1990) போன்ற நூல்கள்,
பாரிவேல் பதிப்பகம் வெளியிட்ட ஸ்ட்ரக்சுரலிசம்
(தமிழவன்: 1981) போன்ற நூல்கள்குறிப்பிடத்தக்கவை.
மேலும் ஆய்விதழ்களில் ஆராய்ச்சி, தமிழ்க்கலை, நாட்டார்
வழக்காற்றியல், நாட்டுப்புறவியல், ஆய்வுக்கோவை, சமூக
விஞ்ஞானம் போன்றவை ஆற்றிய / ஆற்றிவரும் பணிகளும்
மிகுந்த சிறப்புடையவை.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின்,
1987_ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற
நாட்டார் வழக்காற்றியல் முதுகலைப் பட்டப் படிப்பிற்குச்
சமூகப் பண்பாட்டு மானிடவியல் எனும் ஒரு தாள்தமிழில்
பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், அக்கல்லூரியின் நாட்டார்
வழக்காற்றியல் ஆய்வு மைய வெளியீடுகளான தேவியின்
திருப்பணியாளர்கள், பண்பாட்டு வேர்களைத் தேடி போன்ற
வெளியீடுகள்தமிழ் மானிடவியலுக்கு முக்கியமான
வரவுகளாகும். மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட
பண்பாட்டு மானிடவியல் (1990), மற்றும் புதுச்சேரி
வல்லினம் பதிப்பகம் வெளியிட்ட மானிடவியல்
தொடர்பான சில நூல்களின் வருகையினால் தமிழில்
இன்றுவரை நிலவிவந்த அங்கொன்றும் இங்கொன்றுமான
மானிடவியலின் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு
ஒரு சீரான ஆழமான ஆய்விற்கு அடிப்படை
அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாக் காலத்திய எல்லா இடங்களிலுமான எல்லா
மனிதர்களின் அனைத்து அம்சங்களையும் பற்றிப்
படிக்கின்ற ஒரு அறிவுப் புலம் மானிடவியலாகும். உறவு
முறை, சமூக அமைப்பு, அரசியல், தொழில் நுட்பம்,
பொருளாதாரம், சமயம், மொழி, கலை, புராணவியல் என
மானிடவியல் ஆராய்கின்ற அம்சங்களின் பட்டியல் மிக
நீண்டது. சமூக அறிவியல்களிலேயே மானிடவியல் மட்டும்
தான் மனிதனின் உயிரியல் கூறுகளையும் (உடற்கூறு
மானிடவியல்) பண்பாட்டுக் கூறுகளையும், (பண்பாட்டு
மானிடவியல்) ஒருங்கிணைந்து படிக்கக் கூடியதாகும்.
மானிடவியலின் இரு அடிப்படைக் கேள்விகளாகப்
பின்வருவனவற்றைக் கூறலாம். ஒன்று பல்வேறுவிதமான
பண்பாட்டு முறைமைகள்எவ்வாறு செயல்படுகின்றன?
இரண்டு, தற்போது இருக்கின்ற பல்வகை பண்பாட்டு
முறைகள்எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கக் கூடும்? இந்த
இரண்டு விளக்கங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்குக்
காலம் மற்றும் தள ரீதியில் அழுத்தம்
கொடுக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும். உலகில்
இருக்கின்ற அனைத்துப் பண்பாடுகளும் ஒரேமாதிரி
இருக்கின்ற பட்சத்தில் மானிடவியல் என்ற புலத்திற்கே
தேவை இருக்காது என்று கூடச் சொல்லி விடலாம்.
வேறுபாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் அதே
அளவிற்கு, பண்பாடுகளின் ஒப்புடைமை கண்டறிவதிலும்
மானிடவியல் கவனம் செலுத்துகின்றது. உலகப்
பண்பாடுகளின் வேறுபாடுகள்பளிச்சென நம் கண்களுக்குப்
புலப்படுகின்றன. ஆனால் பண்பாடுகளின்
ஒப்புடைமைகளைக் கண்டறிய ஆழமான மானிடவியல்
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட
ஆழமான ஆய்வுகளுக்கு வழிகோலும் விதமாக 1991_ஆம்
ஆண்டு பேராசிரியர் தே. லூர்துவின் முயற்சியால் நாட்டார்
வழக்காற்றியல் ஆய்விதழ் வெளியிட்ட மானிடவியல்
கோட்டுபாட்டுச் சிறப்பிதழ் விளங்குகின்றது. அந்தச்
சிறப்பிதழில் ஆ. செல்லபெருமாள்ஐந்து கட்டுரைகளைத்
தொகுத்துள்ளார். அவற்றுள்முதல் மூன்று
கட்டுரைகளான பண்பாட்டுப் படிமலர்ச்சி, பரவலியல்
கோட்பாடுகள், செயல்பாட்டியற் கொள்கை ஆகியவை
மானிடவியலின் கோட்பாட்டு வளர்ச்சி நிலைகளை
எடுத்துக்காட்டும் வகையில் ஒன்றன்பின் ஒன்றாக
வைக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு கட்டுரைகள்
முறையே தமிழரின் உறவுமுறை பற்றியும்,
மானிடவியலுக்கும், நாட்டார் வழக்காற்றியலுக்கும் உள்ள
தொடர்பினைப்பற்றியும் விளக்குகின்றன.
மானிடவியல் மனுக்குல வரலாற்றின் அறிவியலாக
உருவானது. மனுக்குலப் பண்பாட்டினை முழுதளாவிய
அμகுமுறையில் ஆராய்ந்தறிவதற்காகப் பல கோட்பாடுகள்
மானிடவியலர்களால் முன்வைக்கப்பட்டன. அந்தக்
கோட்பாடுகளில் இன்றியமையாத சிலவற்றை விளக்குவதும்
அவை எதிர்கொண்ட திறனாய்வுகளை முன்வைப்பதும்
அந்தத் தொகுப்பின் தலையாய நோக்கமாகும். பரந்து
விரிந்து கிடைக்கின்ற பல கோட்பாட்டு விளக்கங்களை
ஓரளவுக்குச் சுருக்கித் தர அத்தொகுப்பின்
கட்டுரையாளர்கள்முயன்றுள்ளனர்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் தமிழில்
வெளிவந்துள்ள மானிடவியல் நூல்கள், ஆய்வுகள்
ஆகியவை எத்திறத்தன என்று பார்த்தோம். தமிழில்
வெளிவந்த மானிடவியல் நூல்களும், ஆய்வேடுகளும் தான்
குறைவே தவிர தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட
மானிடவியல் ஆய்வுகள்பல. ஆனால், அந்த ஆய்வுகள்
பெரும்பாலும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான்
போன்ற மொழிகளிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின்
பல கிராமங்கள்மானிடவியல் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தமிழக
கிராமங்களின் சமூக அமைப்பு, அரசியல் பொருளாதார
மாற்றங்கள்நுண்நிலையில் விளக்கப்பட்டுள்ளன. தமிழகத்
தலைநகராகிய சென்னை அடைந்து வரும் நவீனத் தன்மை
குறித்த ஓர் ஆய்வு நூல் வந்துள்ளது. தமிழ்நாட்டில்
வசிக்கும் கிட்டத்தட்ட எல்லா பழங்குடிகளைப் பற்றியும்,
கணிசமான மக்கள்தொகையினைக் கொண்ட
பெரும்பாலான சாதிகளைப் பற்றியும், பல இனவரைவியல்
நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. தமிழக
மக்களிடையே நிலவிவரும் பன்முகத்தன்மை கொண்ட
கடவுளர், நம்பிக்கை, அமைப்பு, சமயம் போன்றவை குறித்து
வெளிவந்த நூல்களும் ஏராளம். தமிழகத்தில் வழங்கி வரும்
புதிய புத்தகம் பேசுது | ஏப்ரல் 2008 60 60
பல நிகழ்கலைகள்பற்றிய ஆய்வும் வெளிவந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் உலகளாவிய விதத்தில்
மானிடவியலர்களின் பெரும் கவனத்திற்குரிய உறவுமுறை
அமைப்புடையோராகத் தென்னிந்தியாவின் திராவிடர்கள்
ஆராயப்படுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட இவர்களின்
உறவுமுறை அமைப்பு திராவிட உறவுமுறை அமைப்பு
என்றே அழைக்கப்படும். தமிழ்நாட்டுச் சாதியினரிடையே
தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற மானிடவியலர்கள்பலரால்
உறவுமுறை ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆய்வு முடிவும் திராவிட உறவுமுறை
அமைப்பில் புதுப்புது பரிமாணங்களைக் கொடுத்து,
மொத்தத்தில் மானிடவியலில் இயங்கிவரும் இருபெரும்
உறவுமுறை கோட்பாடுகளான மணஉறவு மற்றும்
வழிமுறைக் கோட்பாடுகளுக்குப் புதிய பங்களிப்புகளை
வழங்கி வருகின்றன. ஐராவதி கார்வே, லூயி டியுமோ,
(பிரமலைக் கள்ளர்களைப் பற்றி ஆராய்ந்தவர்)
பிரண்டாபெக், (கொங்கு வேளாளர்களை ஆராய்ந்தவர்),
ட்ராட்மன் ஆகிய நால்வரும் தமிழகத்தின் சில
சாதியரிடையே மேற்கொண்ட உறவுமுறை ஆய்வுகளின்
முடிவுகளும் தமிழர்கள்வாசிக்க வேண்டிய தமிழர்தம்
ஆய்வு நூல்களாகும். டியுமோ, பிரண்டாபெக், ட்ராட்மன்
ஆகிய மூவரும் தமிழர் உறவு முறையில் மணஉறவுக்
கோட்பாட்டினை வலியுறுத்துபவராகவும், ட்ராட்மன்
வழிமுறைக் கோட்பாட்டினை வலியுறுத்துபவராகவும்
இருப்பதை அந்நூல்களைப் படிப்போர் அறிந்து
கொள்ளலாம். தமிழர்களிடையே வழங்கி வரும் உறவுச்
சொற்களை ஆராயும்போது அவை எவ்விதம் இருவகை
உறவுமுறைகள்இருப்பதை வெளிக்காட்டுகின்றன
என்பதையும் அந்நூல் ஆசிரியர்கள்விளக்குகின்றனர்.
தமிழில் 1998_ஆம் ஆண்டு சமூக மானிடவியல் என்ற
தலைப்பில் வெளிவந்த ஆ. செல்லபெருமாள்எழுதிய
அத்துறையின் முதல் நூலும் தமிழர்கள்வாசிக்க வேண்டிய
ஓர் ஆய்வு நூல். அந்நூல் மானிடவியலின் அனைத்துப்
பரப்புகளையும் வெளிக்காட்டிடவில்லை எனினும் அதன்
சில இன்றியமையாத பரிமாணங்களைக் கோட்பாட்டு
நிலையிலும், பயன்பாட்டு நிலையிலும் நிச்சயமாக
விளக்குகின்றது. அந்நூல் மானிடவியல் படிக்கும்
மாணவர்களுக்கும் மானிடவியல் தொடர்புடைய
ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கும் பண்பாடு
குறித்து ஆழமாக ஆய்ந்தறிய விரும்புவோருக்கும்
உதவக்கூடிய ஒரு நூல்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள நாட்டார்
வழக்காற்றியல் ஆய்வுகளிலும், மானிடவியல்
சார்புடையவை எவை, பிற துறை சார்புடையவை எவை
என சீர்தூக்கிப் பார்க்க திருவனந்தபுரம் தென்னிந்திய
மொழிகளின் நாட்டார் வழக்காற்றியல் கழகம் 2005_ல்
வெளியிட்ட தமிழக நாட்டார் வழக்காற்றியல் விளக்க
நூல்அடைவு உதவும்.
மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள்நம்மிடையே பரவி
நிலவும் இன மையவாதப் போக்கையும், சாதி சமயப்
பூசல்களையும் களைவதற்கு உறுதுணையாக அமையும்.
பண்பாடுகளில் சிறந்தவை என்றோ, தாழ்ந்தவை என்றோ
எதனையும் சொல்ல இயலாது என்பதையும் அந்நூல்கள்
உணர்த்தும்.

No comments:

Post a Comment