Tamil books

Thursday, 21 April 2011

ஆழி பதிப்பகம்

ஈழம்: இனப் படுகொலைகளுக்குப் பின்னால்    யோ. திருவள்ளுவர்    100    "பேரினவாதம், இனத் துரோகம், வல்லரசுகளின் ராஜதந்திர சதிகள்... உலகமே சேர்ந்து தோற்கடித்த
ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில், மாதங்களில், நாட்களில் நடந்தது என்ன? அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த நூல். யோ. திருவள்ளுவர் எழுதிய இந்த நூல் தமிழர்கள் மத்தியில் ஆற்றாமையோடு படிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள ஈழத் தமிழர்களால் கண்ணீரோடு வாசிக்கப்பட்டது."

எம்.ஜி.ஆர். பேட்டிகள்    தொகுப்பாளர்: எஸ். கிருபாகரன்    100    "நடிகராக புகழின் உச்சியில் இருந்த காலம் முதல் முதலமைச்சராக கோலோச்சிய காலம் வரை பல்வேறு தருணங்களில் எம்.ஜி.ஆர் அளித்த பேட்டிகளும் பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் மனத்தை அவரது வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ள
ஓர் அரிய வாய்ப்பாக இப்புத்தகம் அமைந்துள்ளது. பத்திரிகையாளர்
எஸ். கிருபாகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடித்தேடி சேர்த்த அரிய பேட்டிகளின் தொகுப்பு. வெளிவந்த முதல் மாதத்திலேயே இரண்டு பதிப்புகள் கண்ட இந்த நூல் எம்.ஜி.ஆருக்கு இன்றும் உள்ள பிரபலத்தைக் காட்டுகிறது."

டிராகன் : புதிய வல்லரசு சீனா    செ.ச.செந்தில்நாதன்    250    "சீனா முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைப் போலவே ஏழைத் தேசம். இன்று பெரிய வல்லரசு. இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக சொல்கிறார் நூலாசிரியர் செ.ச.செந்தில் நாதன். 

சீனாவின் முழு வரலாற்றையுமே சித்தரிக்கும் இந்த புத்தகம், டெங் ஷியாவ்ப்பிங் காலத்துக்குப் பின்னால் சிலிர்த்தெழுந்த நவீன சீனாவை விலாவரியாக, வியப்பும் விமர்சனமும் கலந்து படம்பிடித்துக் காட்டுகிறது. இந்திய-சீன உறவு குறித்து ஒரு சிறப்பு அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது.

இது வெறும் தகவல் களஞ்சியமல்ல. சீனாவைப் பற்றி தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களிலேயே மிகவும் முழுமையானது விரிவானது, ஆழமானது, சுவாரஸ்யமானது."
கொதிக்கும் பூமி    ஆதி வள்ளியப்பன்    60    "இன்றைய உலகின் ஹாட் டாபிக் குளோபல் வார்மிங். வெப்பநிலை உயர்வு, கடல்மட்ட உயர்வு, புயல், வெள்ளம், பனிமலைகள் உருகுதல், துருவப்பிரதேசங்களில் பனிப்படலங்கள் மெலிதல் என அதன் அச்சுறுத்தல் பரிமாணங்கள் பல.

குளோபல் வார்மிங் (புவி வெப்பமடைதல்) குறித்த இந்த அறிமுக நூல், பிரச்சினையின் ஆழத்துக்குச் சென்று விவாதிக்கிறது. அதை எப்படி எதிர்ெகாள்வது என்பதையும் விரிவாக எடுத்துச்சொல்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான ஆதி வள்ளியப்பன்."
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்    வ.ஐ.ச.ஜெயபாலன்    70    "புகழ்பெற்ற ஈழக் கவிஞரான வ.ஐ.ச ஜெயபாலன் எழுதிய கவிதைகள். ஈழத்தில் தமிழினப் போராட்டம் தோற்றுப்போனதின் வலியைத் தாங்கி வந்திருக்கிறது இந்த நூல். ஈழத்திலும் புகலிட தேசங்களிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழ்ந்துெகாண்டிருக்கும் தமிழர்களில் அவரும் ஒருவர்.

ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்தவர்:
பெயர்ந்த புலம் ஆகாசம்.
களம் மட்டுமே நிலம்.
புத்திசாலிகளின் கோட்டை
எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து
ஆகாசத்துள் உயர்கிறது..."

முள்    முத்துமீனாள்    60    "கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் வாசகர்கள் உலகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல் இது.
சமுதாயத்தால் ஒதுக்கப்படும் நோயின் தாக்கத்தையும், அதன் விளைவினையும் எதிர்கொள்ள வயதோ, கால அவகாசமோ எதுவுமின்றி, தனக்கு அமைத்துத் தரப்பட்ட வாழ்க்கையை, வாய்ப்பை, வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, முன்னுக்கு வந்த முத்துமீனாளை பாராட்டத் தோன்றுகிறது.
தனக்கும், தன்னைச் சுற்றி உள்ளோருக்கும் ஏற்படும் மாற்றங்களை, நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து அவற்றைப் பதிவுசெய்துள்ள எளிமையும் நேர்மையும் நிறைந்த நாவல் இது."


சார்லஸ் டார்வின் : பரிணாமத்தின் பரிமாணங்கள்    சா.தேவதாஸ்    80    "டார்வின் பிறந்து இருநூறு ஆண்டுகளாவதை ஒட்டி உலகமே ெகாண்டாடி வருகையில், தமிழில் ஒரு பதிவாவது செய்ய வேண்டும் என்னும் ஆசையில் இந்த நூலை முன் வைத்திருக்கிறார் சா. தேவதாஸ்.
டார்வினின் கதையை மட்டுமல்ல, அவரது பங்களிப்பு குறித்து பிற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பும் இதில் வெளியாகியிருக்கிறது."

தாண்டவராயன் கதை    பா.வெங்கடேசன்    575    "இதுவரை தமிழில் வந்த நாவல்களில் மிகச்சிறந்த நாவல் எது என்று பட்டியலிட்டால், இந்த நாவலைப்படித்தவர்கள் எவரும் இதற்குத்தான் முதலிடம் தருவார்கள். நாவலாசிரியர் பா.வெங்கடேசன் இதன்மூலம் தற்கால இந்தியாவின் தலைசிறந்த நாவலாசிரியாக ஆகியிருக்கிறார்.
தன் மனைவியின் கண் நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்துகொள் ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிருந்து மூதாதை யர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டவ்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மயாமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தையையும் கற்றுவைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்."

பங்கு சந்தை : அடிப்படை முதல் ஐ.பி.ஓ. வரை    சந்திரன்    100    தொலைக்காட்சி ஊடகம் மூலமாக இன்று தமிழகம் நன்கு அறிந்திருக்கும் தமிழின் மிகச்சிறந்த வணிக ஊடகவியலாளர் சந்திரனின் நூல் இது. “பங்கு சந்தைப் பற்றி ஒரு அனுபவம் கலந்த கட்டுரைத் தொகுப்பாகவே எழுத முயன்றுள்ளேன். ஒரு பத்திரிகையாளனாகவும், பார்வையாளனாகவும், இடையிடையே பங்கு முதலீட்டாளராகவும் இருந்து கற்றுக் கொண்டவைதான் இந்தப் புத்தகம் எழுதப் பயன்பட்டுள்ளது. புதிதாக இந்த சந்தையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இது கட்டாயமாகப் பயன்படும் என்று நம்புகிறேன்” என்கிறார் சந்திரன்

வெற்றி கி முதல் ஞீ வரை    ஒய்.எஸ்.ராஜன்    160    "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) நீண்ட காலம் பணியாற்றி, விண்வெளி ஆய்வுகளில் முக்கிய பங்காற்றியவர் ஓய்.எஸ்.ராஜன். 

ராஜன் எழுதிய இந்த நூல் இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற நூல்களிலேயே மிகவும் வித்தியாசமானது. இது ஒரு அகராதி முறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. நமது முன்னேற்றம் குறித்து எப்போது எந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ அப்போது அதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. இன்ஸ்டண்ட் ஆலோசகரைப் போல. 

இந்த நூல் அதன் ஆங்கில, இந்தி பதிப்புகளிலும் தேசிய அளவில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது."

இரவுகளில் பொழியும் துயரப்பனி    தமிழ்நதி    70    "'இந்த ஆண்டு (2009)ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் சபிக்கப்பட்ட ஒன்றாயிருக்கிறது. எதனாலும் எவராலும் இட்டு நிரப்பப்பட முடியாத இழப்புகளை நாம் எதிர்ெகாண்டிருக்கிறோம்.  

எல்லா இழப்புகளையும் துயரங்களையும் மேவி, வாழ்க்கையின் மீதான பெருங்காதல் நம்மை இயக்குகிறது என்று கூறும் தமிழ்நதியின் கவிதைத் தொகுதி."

உடல் உறுப்பு தானம்    டாக்டர் அசோகன்    30    "2008 ஆம் ஆண்டு விபத்தில் மூளைச்சாவுக்கு உள்ளான தனது மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாகக் ெகாடுத்து நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்து மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய டாக்டர் அசோகன் எழுதியிருக்கும் புத்தகம்.

உடல் உறுப்பு தானம் குறித்த எளிய கையேடாக விளங்குகிறது இந்நூல். உடல் உறுப்புகளை தானம் செய்வது எப்படி என்பது முதல் இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பது வரை விரிவாக விவரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் டாக்டர் அசோகன்."
உனக்கும் எனக்குமான சொல்    அழகிய பெரியவன்    100    "2008 ஆம் ஆண்டுக்கான தமிழ் புதுக்கவிதைக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்ற நூல். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என விஸ்வரூபம் எடுத்துவரும் அழகியபெரியவனின் கவிதையின் அம்சம் இந்த நூலின் தலைப்பிலேயே காணக்கிடைக்கிறது.

அழகிய பெரியவனின், நீ நிகழ்ந்த போது, அரூப நஞ்சு ஆகிய தொகுப்புகளின் கவிதைகளையும், அண்மைக் கவிதைகளையும் சேர்த்த இது வரையிலான முழு கவிதைகளின் தொகுப்பு."

ஞானக்கூத்தன் கவிதைகள்    ஞானக்கூத்தன்    280    "ஞானக்கூத்தன் எழுதிய மொத்தக் கவிதைகளின் தொகுப்பு. தமிழில் நவீன கவிதை மரபில் நெடுங்காலம் கோலோச்சி வந்துெகாண்டிருக்கும் ஞானக்கூத்தனின் கவிதைகள் தமிழுலகுக்கு கிடைந்த மிகப்பெரிய பொக்கிஷம்.

அழகிய கட்டமைப்பில், மிகச்சிறந்த தாளில், அற்புதமான அச்சமைப்பில், இந்த ஒரு புத்தகத்தை வாங்கி நீங்கள் படிக்கலாம், தலைமுறை தலைமுறைக்கும் படிக்கக் கொடுக்கலாம்."

சோளி க்கே பீச்சே : பெண்கள் எழுதிய கதைகள்    ரவிக்குமார்    80    "உலகின் வேறுபட்ட நாடுகளை, கலாச்சாரங்களைச் சேர்ந்த பதினொரு பெண்கள் எழுதிய சிறுகதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கண்ணீரை, புன்னகையை, வேட்கையை - மொழியின், நாட்டின் எல்லைக்கோடுகள் பிரித்துவைக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கதைகள்.

இவற்றை அற்புதமான மொழிநடையில் தமிழில் அளித்திருக்கிறார் தமிழகத்தின் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவரும் மீடியா மூலம் தமிழகம் நன்கு அறிந்தவருமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்."
நல்ல வாழ்வு, நல்ல மரணம்    தலாய் லாமா    120    "உலகப் புகழ்பெற்ற திபெத்திய தலைவரும் வாழும் ஞானியுமான தலாய் லாமாவின் நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை. ஆங்கிலத்தில் இந்த நூல் (கிபீஸ்வீநீமீ ஷீஸீ ஞிஹ்வீஸீரீ: கிஸீபீ லிவீஸ்வீஸீரீ ணீ ஙிமீttமீக்ஷீ லிவீயீமீ) ஏற்கனவே மிகப்பிரசித்தி பெற்றதாகும்.
  
மனத்தின் உள்ளாழங்களில் நிகழும் மர்மங்களைத் திறந்து காட்டும் விளக்கங்களுக்கும் மரணத்தில் நிகழ்பவற்றை முன்னரே வாழ்க்கைப் பயிற்சிகளில் ஆழ்ந்து தியானித்திருந்து அதன் மூலம் உண்மையில் மரணம் நேரும்போது எவ்வாறு குறிக்கோளாகிய விமோச்சனம் அடைவதைத் துரிதப்படுத்துவது என்று காட்டும் யோக தந்திரப் போதனைகளுக்கும் திபெத்திய பெளத்தம் புகழ் பெற்றதாகும். மொழிபெயர்ப்பு- ஒ.ரா.ந. கிருஷ்ணன்."
பாண்டிச்சேரி சைவ அசைவ சமையல் வகைகள்    அமலோற்பவ மேரி டி சாமி    80    "பாண்டிச்சேரி என்றால் எப்பவுமே ஸ்பெஷல்தான். அரிக்கமேடு காலத்திலிருந்து பிரெஞ்சு காலம் முடிந்து இப்போது தனியரசு செய்யும் காலம் வரை, பல கலாச்சாரங்களின் பிரியாணிதான் பாண்டிச்சேரி.

அங்கிருந்து வரும் சைவ, அசைவ உணவுகளின் சுவை பிரத்யேகமாக இருக்காதா என்ன? சமையல் பிரியர்களுக்கு இந்த அற்புதமான விருந்தைப் படைத்திருக்கிறார் அமலோற்பவ மேரி டி சாமி."
சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை    இரா.செழியன்    350    "தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் நாட்டின் மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவருமான இரா. செழியன் (முன்னாள் எம்.பி.) அவர்கள் பல ஆண்டுகளாக எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு.

அவசரநிலைக் காலத்தில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய சரித்திரப் புகழ்பெற்ற உரை இதில் இடம் பெற்றிருக்கிறது.  அரசியல், பொருளாதாரம், திராவிட இயக்கம், பாராளுமன்ற ஜனநாயகம், உலக விவகாரங்கள் என பலவிதக் கட்டுரைகள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அரசியல் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும், அரசியலை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவேண்டிய அதி முக்கியமான நூல். (சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுடையது.)"

பாழி    கோணங்கி    300    பெண்பாழி - 'உலகம் விரிகிற ஒரு தானியம்' என்றாள் முதல் ஸ்திரீயான தானியாள் எனப்பட்ட பச்சை நிறமானவள், இலைகள் மூடிய அகலமான அந்தத் தானியத்தை சுற்றிவந்த கல்பறவையை தானியாள் கேட்டாள், 'யாருக்காக இனி ராஜியத்தை அமைக்கப் போகிறாள்'. கண்ணீருக்காகவும் தானிய மணிகளில் பிறக்கப்போகிற உன் குழந்தைகளுக்காகவும் பறவைகளுக்காகவும் சூதறியா மிருகங்களுக்காகவும் இலைகள் படரும் விருட்சங்களுக்குமாக உலகம் இனி வரும்..... இப்படிப் போகிறது இந்த நாவல். கோணங்கியின் தமிழ் தனித்தமிழ், அவர் உலகம் தனி உலகம், அவரது படைப்பு தனிப்படைப்பு. அவரைப் படிக்காமல் இருப்பது நமக்கு தனி இழப்பு.

ஓபாமா    செ.ச.செந்தில்நாதன்    60    "ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, நிறவேறுபாட்டின் ெகாடுமையைச் சுமந்தவர் பாராக் ஓபாமா. ஆனால் கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி, தனது வாக்கு சாதுரியத்தாலும் செயல் வன்மையாலும் அமெரிக்காவின் அதிபரானார். இந்த நூல் அவரது வாழ்க்கையை ஒரு விறுவிறுப்பான நாவலைப் போல சொல்கிறது. செ. ச. செந்தில்நாதன் எழுதிய இந்த நூல் 2008 இன் தமிழின் டாப் 10 நூல்களில் ஒன்றாக குமுதம் இதழால் கணிக்கப்பட்டது.

அத்துடன் அவரது  அரசியல் கொள்கைகளை அறிமுகப்படுத்தி விமர்சிக்கவும் செய்கிறது. ஓபாமா எழுதிய நூல் ஒன்றிலிருந்து ஒரு பகுதி மொழிபெயர்த்தும் தரப்பட்டிருக்கிறது."
தமிழராய் உணரும் தருணம்    ரவிக்குமார்    100    ஈழப் பிரச்சினை தொடர்பாகவும் ஈழம் தொடர்பான தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மெளனம், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் மூலம் நமக்கு வழங்குகிறார் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ரவிக்குமார்.
காஷ்மீர்    சந்திரன்    220    "சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, ரத்தமும் ரணங்களுமான காஷ்மீர் வரலாற்றை மிகவும் விரிவாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் முன்னணி பத்திரிகையாளர் சந்திரன்.

காஷ்மீர் மக்களின் சிதைந்த கனவுகளையும் காஷ்மீர் பிரச்னையில் இந்தியா, பாகிஸ்தான், போராளிகள் என மூன்று தரப்பினரும் ஆடும் ஆடு புலி ஆட்டத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கிறார். காஷ்மீர் பிரச்சினை குறித்த தமிழில் முழுமையான நூல் இது."

புத்தர் அருள் அறம்    ஜி.அப்பாதுரையார்    175    "அயோத்திதாசரின் பவுத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் பிரதானமானவராக செயற்பட்டவர் தங்கவயல் ஜி. அப்பாதுரையார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் எழுதத் துவங்கி 40 ஆண்டுகால பவுத்த செயற்பாட்டின் பின்னணியில் எழுதிப் பதிப்பித்த நூல் புத்தர் அருள் அறம்.

இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் பழமைச்சுவை பொங்கும் தமிழில் எடுத்துரைக்கிறது. முதலில் வெளிவந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீள்பதிப்பு காண்கிறது."

தகவல் அறியும் உரிமைச் சட்டம்    தியாகச் செம்மல்    30    "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிறப்பு, வளர்ப்பு, சாதனை என அனைத்தையும் எளிமையாக விவரிக்கிறார் நிபுணரும் பத்திரிகையாளருமான தியாகச் செம்மல்.

தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்நூல் பதில் அளிக்கிறது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட பல முக்கியமான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது நூலின் கூடுதல் பலம்."

திரை கடலோடியும் துயரம் தேடு    யோ. திருவள்ளுவர்     90    "அயல்நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. திரவியம் தேடி வளைகுடா நாடுகளுக்கும், தென்கிழக்காசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களும், பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் ெகாஞ்சமல்ல. மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம்
நெஞ்சை உலுக்கக்கூடியது. வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் துயரம் கொடூரமானது. கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் யோ. திருவள்ளுவர் இந்தக் கொடிய உலகத்தை அம்பலப்படுத்துகிறார்."
எசப்பாட்டு - இந்தியா டுடே கட்டுரைகள்    ஆனந்த் நடராஜன்    70    "இந்தியா டுடே தமிழ் பதிப்பின் அசோசியேட் எடிட்டர் ஆனந்த் நடராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

“ஆனந்த் நடராஜனின் எசப்பாட்டுக் கட்டுரைகளைத் தனித்தனியாகப் படித்தபோது அவை எல்லா ஆசிரியர்களும் அந்தந்த நேரத்துக்கு எழுதும் தலையங்கங்களாகத் தோன்றியது. ஆனால் ஒருசேரப் படிக்கும்போதுதான் பக்குவம் வாய்ந்த, நீடித்த சமூக அக்கறை கொண்ட ஒரு சிந்தனையாளனை இவை அடையாளம் காட்டுகின்றன - அசோகமித்திரன், அணிந்துரையில் இருந்து..."

இந்திரன் காலம்    இந்திரன்    100    “தான் வாழ்ந்த காலத்தை இங்கே பதிவு செய்கிறார் இந்திரன். அவர் நேரில் சந்தித்துப் பழகிய நக்சலைட் நாயகர் சாரூ மஜும்தார், ஓஷோ ரஜ்னீஷ், மிருணாள்சென், நிசிம் எசிகில்,  த. ஜெயகாந்தன், கி.ரா., எஸ்.பொ., மீரா என்று அபூர்வ மனிதர்கள் ரத்தமும் சதையுமாய் நம்மிடையே உலவத் தொடங்குகிறார்கள். சீனப் படையெடுப்பிலிருந்து, இந்தி எதிர்ப்பு வரை எமெர்ஜென்சி தொட்டு கீழ்வெண்மணி சோகம் வரை ஈழத்தமிழர் பிரச்சினை தொட்டு சுனாமி வரை சால்வடோர் டாலியின் பிரபஞ்சம் தொட்டு பத்தூர் நடராசர் பிரச்சினை வரை... இந்திரனின் காலம் உயிர்பெற்று எழுகிறது.” - கவிஞர் சிற்பி

துயரத்தின் மேல் படியும் துயரம்    ரவிக்குமார்    70    கான்ஷி ராம், வி பி சிங், கே ஆர் நாராயணன், பால சிங்கம், சுப தமிழ்ச்செல்வன், இளையபெருமாள் என தலைவர்கள் ஒரு பக்கம், வீரப்பன், பூலான்தேவி போன்றவர்கள் ஒரு பக்கம், சுந்தர ராமசாமி, வில்வரத்தினம் போன்ற இலக்கிய ஆளுமைகள் மறு பக்கம், இன்னொரு பக்கத்தில் ழாக் தெரிதா, ழான் போத்ரியா, வில்லியம் சஃபையர் போன்ற உலகறிந்த சிந்தனையாளர்கள்... இவர்களின் மறைவின் போது தான் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகளைத் தொகுத்து நாம் வாழும் காலத்தின் பல்வேறு முகங்களை பிரதிபலிக்கிறார் ரவிக்குமார்.

அமர்தியா சென் - ஒரு சுருக்கமான அறிமுகம்    சா.தேவதாஸ்    30    "புகழ்பெற்ற பொருளாதாரவாதியும் சிந்தனையாளருமான அமர்தியா சென் குறித்த சுருக்கமான ஆனால் தெளிவான அறிமுகம் இந்த நூல். சா தேவதாஸின் ஈர்ப்புள்ள நடையில்.

சென்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துலகம், ெகாள்கைப்பிடிப்பு, நிலைப்பாடுகளைக் கொண்டு, 'இவர்தான் அமர்தியா' என்று முத்திரை குத்திவிட முடியாது. இடதுசாரி செயல் வேகத்துடன் மாணவப் பருவத்தில் செயல்பட்ட சென், இறுக்கமான சித்தாந்தங்களிலும் சூத்திரங்களிலும் தன்னை இழந்துவிடாதவர்."

ரஷோமான்    ஸிணீsலீஷீனீணீஸீ    80    "அகிரா குரோசவாவின் உலகப் புகழ் பெற்ற திரைப்படத்தின் திரைக்கதை வடிவம் இது.

இதை மிகவும் லாவகமாக தமிழில் ெகாடுத்திருக்கிறார் நடிகரும் திரைப்பட ஆர்வலருமான தி சு சதாசிவம். குரோசவோ பற்றிய மிக நீண்ட அறிமுகம் இந்தப் புத்தகத்தின் முக்கியப் பகுதியாகும்.

குரோசவாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணம் இது..."
லியோனார்டோ டாவின்ஸி குறிப்புகள்    சா.தேவதாஸ்    75    "தன் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் முடிவுகளையும் சந்தேகங்களையும் பரிசீலனைகளையும் ஆய்வுகளையும் 5000 பக்கக் காகிதங்களில், இடமிருந்து வலமாக, புதிர்ப் புதையலாக விட்டுச்சென்றுள்ளார் லியோனார்டோ டாவின்சி. 

 இந்த மகத்தான அறிவியல், கலை, வரலாற்று, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகளிலிருந்து ஒரு சிறு பகுதிதான் இந்த நூல். தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார் சா.தேவதாஸ்"
தீண்டப்படாத நூல்கள்    ஸ்டாலின் ராஜாங்கம்    60    "பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், சுவாமி சகஜானந்தா போன்றோர் தலித்களின் வரலாற்றை மட்டுமல்ல, தமிழ் சமூகத்தின் வரலாற்றையும்கூட மீட்க முயன்றனர்.

அவர்களை பிறகு தமிழ்நாடு மறந்துவிட்டது. அந்த தவறை பிட்டுபிட்டு வைக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்."
நளிர்    நாகார்ஜுனன்    275    "நாகார்ஜுனன் எழுதிவரும் திணை இசை சமிக்ஞை தளத்திலிருந்து நூறு முக்கிய ஆக்கங்களை நளிர் என்ற இந்தத் தொகுப்பில் நீங்கள் வாசிக்கலாம்.

தமிழ் மற்றும் உலக இலக்கியம், கலை, அறிவியலின் வரலாறு, சூழலியல், திரை, அரசியல், கோட்பாட்டு அலசல், ஊடகம், பயணம், ஃப்ரெஞ்சிலிருந்து நேரடித் தமிழாக்கம் என பலவிதமான தளங்களில் பலவிதமான கட்டுரைகள், கவிதைகள்..."

கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும்    ஹெச்.ஜி.ரசூல்    70    கடந்த எண்ணூறு ஆண்டுகால தமிழ் இஸ்லாமிய மரபின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார் ஹெச். ஜி. ரசூல். உமறுப் புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு முதல் இன்று தோப்பில் முகமது மீரான், ஜாகிர்ராஜா வரை... கூடவே பிற நாட்டு இஸ்லாமிய இலக்கிய ஜாம்பவான்கள் பற்றியும்.
நிசி அகவல்    அய்யப்ப மாதவன்    60    "ஓரு கவிதை தொடங்கி முடியும்வரை உள்ள சொற்களை ஊன்றிக் கவனித்து அவசியமற்றதை தின்ன முடியாத பழத்தின் கொட்டைகளைப் போல அலட்சியத்துடன் தூக்கி எறிந்துவிடுகிறேன். இப்பொழுது கவிதையின் சுவை தித்திப்பாயிருப்பதை சாசுவதமாய் நம்புகிறேன்.

கவிதை ஓரிரு சமயங்களில் கவிதையாய் மாறிவிடுவதும் நிகழாமலுமில்லை என்பதும் ஒரு கவிஞனுக்கான சோகம்தான். காயம்பட்ட ஒரு கவிதைப் பறவையை அப்படியே விட்டுவிட்டு போகாமல் வேண்டிய மருந்தால் காயம் ஆற்றி தலையை கோதி பறக்கவிடுதல்தான் தலையாய வேலையாய் இருக்கவேண்டும். இந்தத் தொகுப்பு நிறைவடைகிறபோது உள்ளுக்குள் ஒரு களிப்பு நடனம். இது போன்ற திருப்தி வேறெதில் கிடைத்தாலும் முழுமையாகும் கவிதைகள் பெண்ணில் வீழ்கிற நொடிகளாய் ஆவதில்தான் ஆழ்ந்த கிறக்கம்  - அய்யப்பமாதவன்"
முட்டம் - அலைகள் பாறைகள் மணல்மேடுகள்    சிறில் அலெக்ஸ்    45    "சிறில் அலெக்ஸ் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கடலோரக் கவிதையான முட்டத்தில் பிறந்தவர். இப்போது அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மென்பொருள் வல்லுநர். தனது ஊரைப் பற்றி மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் சிறில். அவரது எழுத்துக்குள் கடலலைகள் வந்துபோகின்றன, ஓயாத கடலின் சப்தம் கேட்கிறது.
“இந்நூல் ஒரு பெரிய நாவல் இன்னும் தொடங்காமல் முகாந்திரங்கள் மட்டும் நிகழ்ந்துகொண்டிருப்பது போலிருக்கிறது. கடற்கரைச் சித்திரங்கள், கடல் வர்ணனைகள், கடலும் வானும் மனிதனை சிறியதாக ஆக்கும் பேரனுபவ வர்ணனைகள், மீன்கள், மனிதர்கள், தேவாலயங்கள்... கோலம் போட சாணி தெளிக்கப்பட்டுவிட்டது. புள்ளிகள் தொடங்கிவிட்டன. இனி கோடுகள் மூலம் நாவல் உருவாகி வரவேண்டும்” என்று சிறிலின் படைப்புகள் பற்றி பேசுகிறார் ஜெயமோகன்."
கட்டற்ற மென்பொருள்    ரிச்சர்டு எம். ஸ்டால்மன்    60    "திக்ஷீமீமீ ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ, ளிஜீமீஸீ ஷிஷீuக்ஷீநீமீ ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ. லீனக்ஸ், நிழிஹிஎன ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும்
ரிச்சார்டு எம். ஸ்டால்மனைத் தெரியும். இந்த நூல் அவரது கட்டுரைகளின் தொகுப்பு. குனு இயக்கத்தின் சித்தாந்தத்தை அழகாக விளக்குகிறார் ஸ்டால்மன். அதை அழகிய தமிழில் அளித்திருக்கிறார் ஆமாச்சு எனப்படும் ம.ஸ்ரீ.ராமதாஸ். மென்பொருள் உருவாக்குநர்கள் மட்டுமல்ல, அதன் முக்கியத்துவம் அறிந்த அனைவரும் படிக்கவேண்டிய நூல்."
நீ உன் மீதே நின்று கொண்டிரு    க. முத்துக்கிருஷ்ணன்    40    புலரியின் நிர்மால்யத்திலிருந்து வைகறையின் இளவெயில் வரை..... முத்துக்கிருஷ்ணனின் அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகள். “ஒரு சொல்லின் தீயை ஒரு சொல்லாலேயே அணைக்கிறார்” - கல்யாண்ஜி தனது முன்னுரையில்.
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்    சீனுராமசாமி    40    இக்கவிதை நூலில் மண்ணின் மரபார்ந்த தொன்மங்களைக் காப்பதிலும் நகரமயமாக்க இயற்கை - எதிர் கலாச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புகளை சஞ்சலங்களை பதிவு செய்வதிலும் கவிதையை தன்னியல்பின் ஜீவரசம் தொனிய எழுதியிருக்கிறார் இயக்குரும் கவிஞருமான சீனுராமசாமி.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பிரபஞ்சன்    பிரபஞ்சன்    160    தமிழின் முன்னணி எழுத்தாளரான பிரபஞ்சனுக்கு இதுவரை வசப்படாத தமிழ் வானம் ஏதுமில்லை.  இந்த நூல் அவரது சிறந்த கதைகள் சிலவற்றின் தொகுப்பு.
வான் கா    அஜயன் பாலா    40    ஓவிய உலகின் மாபெரும் மன்னன், முப்பத்தி ஏழே வயதில் தற்கொலை செய்துகொண்ட வான் கா பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்து எல்லோரையும் வசீகரித்த அஜயன் பாலாவின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று நூல் இது. வான் காவின் பல படங்களோடு அருமையாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
காலத்தை செரிக்கும் வித்தை    குட்டி ரேவதி    40    குமுதம் தீராநதியில் நிறைமாதச் சித்திரங்கள் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகள். குட்டி ரேவதியின் முதல் கட்டுரைத் தொகுப்பு. நுண்மையான சில பெண்ணிய வெளிகளைத் தமிழர் தளத்துக்குத் தருகின்றன இவரது விவாதங்கள்...
உவன் இவன் அவன்    சந்ரு    100    ஓவியராக நன்கு அறியப்பட்ட சந்ருவின் சிறுகதைகள் இவை. இவர் மொழியையே கித்தானாகப் பயன்படுத்தி அதில் அற்புதமாக தனது கோட்டோவியங்களைப் போன்ற எழுத்தோவியத்தைப் படைத்திருக்கிறார். வித்தியாசமான மனிதரிடமிருந்து, வித்தியாசமான மொழியில்...
ஊழிக்குப் பின்    ஆர்தர் ரைமபோ    50    ஃப்ரெஞ்சு மொழியின் நவீன கவிதை-யுகத்தைத் தொடங்கியவர் ஆர்தர் ரைம்போ. தம் கவிதைகள் யாவையும் எழுதி முடித்திருந்த போது, ரைம்போவின் வயது இருபத்தொன்றே.  ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் நாகார்ஜுனன்.
மேன்ஷன் கவிதைகள்    பவுத்த அய்யனார்    40    “பவுத்த அய்யனாருக்கு மேன்ஷன் சில கவிதைகளைச் சொல்லியிருக்கிறது. ஒரு குழந்தையின் காட்சிப்புலன் உணர்வோடு உலகத்தைப் பார்க்கிறார். உங்கள் மனசுக்குள் நீர்த்துப்போய்க் கிடக்கும் கழிவிரக்கத்தைத் தொட்டு, உங்களை உங்களுக்குக் கூசவைக்கிற கவிதைகள்.” - பிரபஞ்சன்,  முன்னுரையில்...
செம்மூதாய்    ச.முருகபூபதி    100    தமிழின் இளம் நாடகக்காரன் முருகபூபதியின் நாடகங்கள் இவை. அவற்றின் மீதான விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. முருகபூபதியின் நாடகங்கள் தமிழ் நாடகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்றன.
அக்னி மற்றும் பிற கதைகள்    ஸிதாரா.எஸ்    70    "ஸிதாரா என்ற பெண் லக்ஷமணக் கோடுகளை ஒவ்வொன்றாக மிதித்துத் தள்ளி வெளியே கடக்கிறாள். பாலியலைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குக் கூடத் தயாராகாத கபடம் நிறைந்த சமூகத்திடம் பாலியல் மைய சர்ச்சைக்குரிய நானாவிதக் கதைகளைச் சொல்லிக்ெகாண்டு எந்தவொரு அபிநயங்களும் இல்லாமல் நிற்கிறாள்.

சுதந்திரத்தைப் பற்றிய முடிவில்லாத கனவுகள் கொண்ட எழுத்தாளியின் கட்டமைப்பில் உருமாதிரிகள் உதிர்ந்து வீழ்கின்றன. செரிமானித்ததும், தெவிட்டியதும், இற்று வீழ்ந்ததுமான பெண் கற்பிதத்திலிருந்து வேர்பிடித்து ஒரு புதிய பெண், ஒரு புதிய பெண்-ஆண் உறவு, ஒரு புதிய காலம் இவைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகளை வழங்கும் கதைகள் இவை. தமிழில் ஷாராஜ்."
கொண்டாட்டம்    பாமா    80    "தமிழின் மிகமுக்கிய எழுத்தாளரான பாமாவின் சமீபத்திய சிறுகதைகள் இவை.

“பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட பல கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பெண் இருத்தலுக்கான, இயங்கலுக்கான, பெண்வெளி, பெண்மொழி, பெண்சக்தி, பெண்மனம் போன்றவை பற்றி எழுதப்பட வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றுதான் எண்ணுகிறேன். நான் சந்திக்கும் மனிதர்களின் மன ஆழங்களை, மன எழுச்சிகளை, கனவுகளை, மகத்தான ஆற்றல் மூலங்களை முழுமையாக அறிந்திடவோ, அறிந்தவற்றை வார்த்தைகள் ஆக்கிடவோ முடிவதில்லை என்று தோன்றுகிறது”  - பாமா  "
ருதுவனம்    தாரா கணேசன்    60    “இயற்கையின் ஊடான மனித போதம்  தனது மொழியால் காட்சி உலகில் ஊடுருவும்போது உண்டாகும் தன்னிலை சிலிர்ப்புகளை வியந்து போற்றும் தாரா கணேசனின் கவிதைகள் ஓடும் நதி போல பல சுழிப்புகளுடன் நம்மை விரைவாகக் கடக்கின்றன. நினைவுக்கும் அ-நினைவுக்கும் இடையே தறியோட்டம் கொள்ளும் இம்மொழி தீர்க்கமான காமத்துக்கும் அதன் செவ்வியல் பண்புக்கும் இடையே  நெகிழ்ந்து நிற்கும் அழகியலை ஒப்புக்கொடுக்கிறது.  படிமச் சிக்கல்கள் ஏதுமற்ற, எளிய, நேரடி வாசிப்புக்கு ஆதரவான தாரா கணேசனின் இக்கவிதைகள் சிலவற்றில் உடல்
மொழியின் தீவிர உயிராற்றலையும் நாம் உணரலாம்.”  -  யவனிகா ஸ்ரீராம்

மையம் கலைத்த விளிம்புகள்    அ.ராமசாமி    100    "தலித்களுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்கள் கூர்மையடையும்போது தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அவர்கள் பேர்போன சமூக நீதி வீரர்களேயாயினும் - எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழம்பிப் போகிறார்கள். மிகவும் துல்லியமான முறையில் தலித் அரசியலை 'கட்டுடைத்து', அதை விமர்சித்து, தங்களைத் தற்காத்துக் ெகாள்கிறார்கள்.  இப்படி நுணுக்கமாக விமர்சித்துக்கொண்டே செல்லும்
அ. ராமசாமியின் இந்த நூல் மிகவும் முக்கியமான விமர்சனத் தொகுப்பு."
பெருந்தாழி    ம.தவஸி    100    ராமநாதபுரத்து பகுதி மக்களின் வாழ்வும் மொழியும் வாய்மொழிக் கதைகளும் அவர்களது வீடுகளிலும் தெருக்களிலும் ஓடிய பேய்களும் கடவுள்களும் மாயக்கோல் சுழற்றும் மாந்திரீகப் புனைவுகளும் கதைகளெங்கும் அலைந்து திரிகின்றன.