Tamil books

Thursday, 25 April 2013

உலக புத்தக தினம்புதுக்கோட்டை

ஈரோடு

திருப்பூர்


கரூர்

திருவாரூர்

நாகை

கோவை

பாண்டிச்சேரி

உலக புத்தக தினத்தை யொட்டிதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கம்தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி கரூர் எல்ஐசி அலு வலகம் முன்பு நடைபெற்றது.

கரூர், ஏப். 24 -உலக புத்தக தினத்தை யொட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி கரூர் எல்ஐசி அலு வலகம் முன்பு நடைபெற்றது. தமுஎகச மாவட்டத் தலை வர் .வெங்கடேசன், மாவட் டக்குழு உறுப்பினர் வி.கணே சன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலா ளர் .ஜான்பாட்ஷா வரவேற் றுப் பேசினார். பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எல்..சி கிளை இரண்டின் மேலாளர் .லூர்து செல்வகுமார் முதல் விற்பனை யை பெற்றுகொண்டார். சிஜடியு கௌரவத் தலை வர் ஜி.ரத்தினவேலு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.சுப்பிரமணியன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.ஜோதி பாசு, தமுஎகச தலைவர் ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோர்ட் ராஜேந்திரன், மனோகரன், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியம், அருணகிரி, சுப்பராயன், பிரகாஷ், ஜெயஸ்ரீ, பட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பாரதி புத்தகாலயத்தின் இந்த புத்தகக் கண்காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
--
திருவாரூரில் உலக புத்தக தினம்
திருவாரூர், ஏப். 24 -உலக புத்தக தினத்தை முன்னிட்டு, திருவாரூரில், தமுஎகச சார்பில் புத்தக கண்காட்சியும் சிறப்பு விற்ப னையும் நடைபெற்றது.கிளைத் தலைவர் எம். சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் கி.ரா.சங் கரன் சிறப்புரையாற்றினார். கிளை துணைத்தலைவர் இரா.கோவிந்தராஜ் வரவேற் றார். மாநில செயற்குழு உறுப்பினர் சோலை சுந்தர பெருமாள், மாவட்டத் தலைவர் கே.வேதரத்தினம், மாவட்டச் செயலாளர் இரா.தாமோதரன், கிளைச் செயலாளர் மனிதநேயன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் அறிவொளி கே.சந்திரசேக ரன் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். சங்கத் தின் பொருளாளரும் நகர் மன்ற உறுப்பினருமான ஜி. வரதராஜன் நன்றி கூறினார். பொதுமக்கள், இளை ஞர்கள், மாணவ- மாணவி யர் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

திருச்சிராப்பள்ளி, ஏப். 24 -உலக புத்தக தினத்தை யொட்டி பாரதி புத்தகால யம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 75 மையங்களில் புத்தக விற்பனை நடைபெறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மண்ணச் சநல்லூர் வட்டக்குழு சார் பில் நம்பர் 1. டோல்கேட் பேருந்து நிலையத்தின் அரு கில் செவ்வாயன்று மாலை சிறப்பு விற்பனை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். சிறப்பு விற்பனை யை பிச்சாண்டார்கோவில் ஊராட்சிமன்றத் தலைவர் .கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் சீனி ராமராஜ் வாழ்த்துரை வழங் கினார்.பாரதி புத்தகாலயத்தின் கன்வீனர் எஸ்.சிவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.அண் ணாதுரை, வட்டச் செய லாளர் ஜே.சுப்ரமணி யன், விதொச மாநிலக்குழு உறுப்பினர் செல்லம்மாள், கட்சியின் வட்டக்குழு உறுப் பினர்கள் ராஜா, அருணாச் சலம், கிளைச் செயலாளர் கள் அகமதுபாட்ஷா, கிளை உறுப்பினர் தேவன், ராஜ் குமார், இன்ஜினீயர் அன்பு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நாகையில் புத்தகக் கண்காட்சி, விற்பனை விழா
நாகப்பட்டினம், ஏப். 24-உலகப் புத்தக தினத்தை யொட்டி, பாரதி புத்தாலயத் தின் நாகைக் கிளை சார்பில், நாகை அரசு ஊழியர் சங்கக் கட்டடம் முன்பு, புத்தகக் கண்காட்சி மற்றும் விற் பனை விழா நடைபெற்றது.இந்தப் புத்தகக் கண்காட் சியில் பாரதி புத்தகாலயத் தின் ஏராளமான புத்தகங் கள் இடம் பெற்றிருந்தன. இவற்றுடன், நாகையில் பிர பலமான பதிப்பகங்களான இமயம், குமரி, கங்கா-காவிரி, ராஜி புத்தக நிலையம் ஆகி யவற்றின் புத்தகங்களும் கண்காட்சியில் இடம் பெற் றிருந்தன.புத்தகக் கண்காட்சி மற் றும் விற்பனையைத் துவக்கி வைத்து சட்டமன்ற முன் னாள் உறுப்பினரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னருமான வி.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் . வி.முருகையன் சிறப் புரை யாற்றினார்.மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கணேசன், நாகை நகரச் செயலாளர் பி. பாலசுப்பிரமணியன், அரசு அனைத்து ஓய்வூதியர் சங்க நாகை(தெற்கு) மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ண மூர்த்தி, ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கா.மணியன், விவ சாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பி.காத்த முத்து, இமயப் பதிப்பகத் தின் சார்பில் வி.சீனிவாசன், விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பாரதி புத்தகாலயத்தின் நாகைக் கிளை நிர்வாகி வி.பாலசுப் பிரமணியன் நன்றி கூறினார். காலையிலிருந்து மாலை வரை ஏராளமானோர் புத்த கக் கண்காட்சியைப் பார் வையிட்டனர். அதிகமான புத் தகங்கள் விற்பனையாகின.
--
கரூரில் கோடை விளையாட்டுப் போட்டிகள்
கரூர், ஏப். 24 -கரூர் மாவட்டத்தில், கோடை கால விளையாட்டு பயிற்சி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பரணிபார்க் மெட்ரிக்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் .ஜெயந்தி, விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவ லர் செ.புண்ணியமூர்த்தி, பரணி பார்க் கல்வி நிறுவன தாளாளர் எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி, முதன்மை ஜீடோ சங்க மாநில துணைத் தலை வருமான டாக்டர் ராமசுப்பிர மணியன், வாலிபால் சங்க செயலர் காமலுதீன், கேரம் சங்க செயலர் சுரேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை, ஏப். 23 -புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல் லூரியில் உலக புத்தகதின விழா கடந்த திங்கட்கிழமை யன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். கே.ஆர்.குணசேக ரன், கே.ரெங்கசாமி, . கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். “புத் தகங்களும் புதுமைப் பெண் களும்என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் ஜீவி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, “வகுப்பறைக்கு வெளியி லும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை வாசிப்பு உணர்த் தும். படைப்பாளியின் அனுபவப் பிழிவுகள்தான் புத்தகங்கள். மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல ஆடைகளை கேட்பதற்குப் பதில் அறிவை வளர்க்கும் நல்ல புத்தகம் வாங்கித்தர வற்புறுத்தும் காலம் வர வேண்டும். புத்தகம் வாசிக்க வாசிக்கப் புதிதாகிறது. வாசிப்பவரைப் புதிதாக்குகி றதுஎன்று குறிப்பிட்டார்.முன்னதாக பேராசிரியர் மு.பாலசுப்பிரமணியன் வர வேற்க, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். ரம்யா நன்றி கூறி னார்.

புதுச்சேரி, ஏப். 24-
ஏப்ரல் 23 உலகபுத்தக தினத்தை யொட்டி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கம், பாரதி புத்தகாலயம், புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் புதுச்சேரி யில் ஆறு இடங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது.புதுச்சேரி பேருந்து நிலையம்புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை எதிரில் நடைபெற்ற கண்காட்சிக்கு புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். பாரதி புத்தகால யத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் இராம கோபால், அறிவியல் இயக்க நிர்வாகிகள் ரகுநாத், ரமேஷ், விஜயமூர்த்தி, விசாகன், சரவணன் ஆகியோர் இதில் பங்கேற்ற னர். முன்னதாக பேருந்து பயணிகளிடம் புத்தகம் விற்பனை செய்யப்பட்டது.எல்..சி அலுவலகம்புதுச்சேரி சாரம் எல்..சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்காட்சிக்கு லிகாய் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். லிகாய் சங்க கல்விக்குழு தலைவர் ஆர்.எம்.ராம்ஜி புத்தக விற்பனை இயக் கத்தை துவக்கிவைத்தார்
.மூலகுளம்மூலகுளம் பேருந்து நிறுத்தத்தில் நடை பெற்ற கண்காட்சிக்கு முஎகசவின் செயற் குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்ளாட்சி துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் கண் காட்சியை துவக்கிவைத்து பேசினார். மத் திய கலால்துறை கண்காணிப்பாளர் பாவலர் சண்முகசுந்தரம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி செயலா ளர் இரகு.அன்புமணி, பொருளாளர் எஸ். கோவிந்தராஜன், நிர்வாகிகள் கல்பனா, சாந்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.தவளக்குப்பம்தவளக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு முஎகச செயற்குழு உறுப்பினர் புதுவை ஆர்.மோகன் தலைமை தாங்கினார். முஎகச கிளை செயலாளர் எஸ்.ராமஜெயம் முன்னிலை வகித்தார். மணவெளி சட்டமன்ற உறுப் பினர் புருஷோத்தமன் புத்தக விற்பனை கண்காட்சியை துவக்கி வைத்தார். முஎ கசவின் புதுவை தலைவர் .பரசுராமன், துணை செயலாளர் வி.ஞானசேகர், திவேக், ராஜபிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகடிப்பட்டுமதகடிப்பட்டு கடை தெருவில் நடை பெற்ற கண்காட்சிக்கு முஎகசவின் செயற் குழு உறுப்பினர் வி.விநாயகம் தலைமை தாங்கினார். விற்பனை இயக்கத்தை தேசிய நல்லாசிரியர் கு.சோமு துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க பிரதேச பொரு ளாளர் பி.உலகநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குணசேகரன் முஎகச வின் செயற்குழு உறுப்பினர் வி.செல்வம்,கிளை தலைவர் வி.உமா ஆகியோர் பேசினர்.திருக்கனூர்திருக்கனூர் தொலைப்பேசி நிலை யத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் .உமா தலைமை தாங்கினார். புதுச்சேரி சட்டப்பேரவை துணை தலைவர் பி.ஆர். செல்வம் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். கிருஷ்ணாபொறியியல் கல்லூரி தாளாளர் .கே.குமார் வாழ்த்தி பேசினார். சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் செயலா ளர் சா.அமரநாதன், முற்போக்கு சிந்தனை யாளர்கள் சரவணன், காளிதாஸ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.அம்பேத்கர் பயிற்சி மையம்அம்பேத்கர் பயிற்சி மையத்தில் நடை பெற்ற புத்தக வாசிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மையத்தின் ஒருங்கிணைப் பாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினர். பயிற்சி மையத்தின் மாணவர்கள் திரளா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.