Tamil books

Wednesday, 31 July 2013

அறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்

சு. பொ. அகத்தியலிங்கம்

மனித அறிவுத் தேடலின் முழுக்கதைஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
ஆசிரியர் : பில் பிரைசன், தமிழில் : ப்ரவாஹன்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,421, அண்ணா சாலை, தேனாம் பேட்டை,சென்னை - 600 018. 044 24332424
பக் :640,  விலை : ரூ. 400.

தமிழுக்கு புதிதாக வந்துள்ள காத்திரமான வரவு இந்நூல். A Short History of Nearly Everything என்கிற ஆங்கில நூலின் தமிழாக்கம்.“கிட்டத் தட்ட அனைத்தின் சுருக்கமான வரலாறு”என்பதே ஆங்கில நூலின் தலைப்பு. புரிதலுக்காகவும் - தமிழ் வாசகர் பரப்பைச் சென்ற டைவதற்காகவும் - “அனைத்தையும் குறித்த சுருக்க மான வரலாறு;மனித அறிவுத் தேட லின் முழுக்கதை” என விரிந்த தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் . நன்று. ஆறு பாகங்கள் , 30 அத்தியாயங்கள் , 640 பக்கங்களில் பிரபஞ்சம் குறித்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த உயிரினம் குறித்த - மனிதன் குறித்த - சரியான அறிவியல் உண்மைகளைச் சென்றடைய உலகம் நடத் திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல். அது மட்டுமா? இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2400கி.மீ குறுக்காக விசும்பில் நாம் இப்போது இருக் கிற இடத்தில் திரண்டு ஒருங்கிணைந்து புவியான செய்திமுதல் ; 440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியி லிருந்து பிய்ந்து நிலா உருவான கதை என “பிரபஞ் சத்தில் தொலைந்து போனது” என்கிற முதல் பாகம் மீவெடிப்பு குறித்து பேசுகிறது .

சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படிக் கண்டடைந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடி யது .மண்ணியலும் வேதியலும் எப்போது அறிவிய லின் முன்னணிக்கு வந்தது; டைனசார் கண்டு பிடிக்க நடந்த பெரும் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது; தோல்விகளும் ஏமாற்றங்களும் பலிகளும்பழி வாங் கல்களும் அறிவியல் வரலாற்றிலும் ஊடாடி இருக்கி றது ; இவற்றை எல்லாம் “புவியின் அளவு” என்கிற இரண்டாவது பாகம் நயம்பட உரைக் கிறது. ஆங்கி லம் தெரியா மல் ஸ்வீடன் மொழியில் எழுதியதால் ஷீலேவுக்கு அவர் ஆக்ஸிசனைக் கண்டுபிடித்த புகழ் கிடைக்க வில்லை. குளோரினை ஷீலேவே கண்டு பிடித்திருந்தாலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு பிடித்த ஹம்ப்ரி டேவிக்கே அந்த பெருமை சேர்ந்தது என்கிற உண்மை நம்மைச் சுடுகிறது .அறிவியல் மேதை நியூட்டன் உட்பட பல அறிவி யல் மேதைகளின் மறுபக்கம் இந்நூல் நெடுக நம்மி டம் சொல்லும் செய்திகள் பல . அறிவுத் தேடலும் மூடநம்பிக்கைகளும் சேர்ந்தே பயணித்திருக்கின்றன .தனிப்பட்ட பலவீனங்களை மீறி அறிவியல் உண்மை கள் வெளிச்சக் கீற்றுகளை பாய்ச்சியுள்ளன.அணு, குவார்க் , புவிநகர்வு என இயற்பியல் கூறுகள் பலவற்றில் அறிவியல் வரலாற்றை ஐன்ஸ்டீனில் தொடங்கிய அந்த புதிய சகாப்தத்தை மூன்றாம் பாகம் படம்பிடிக்கிறது. டால்டனின் அணுக் கொள்கை எவ்வாறு பிந்தைய கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது என்பது அறிவியல் கருத்து களும் ஒன்றையொன்று மோதி புதிய தடத்தில் முன் னேறுவதின் சாட்சியாகும்.“ஒரு நூற்றாண்டுக்கும் சற்றேகுறைந்தகாலம் வரை யிலும் புவியின் உள்ளே இருப்பது பற்றி, நன்கு விவரம் தெரிந்த வர்களுக்கும் கூட ஒரு நிலக் கரிச் சுரங்கப் பணியாளருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்திருக்க வில்லை”. என்று கூறுகிற நூலாசிரியர் எரிமலை உட் பட பல உட்கூறுகளை வியப்பூட்டும் விதத்தில் நமக்கு நான்காம் அத்தியாயம் நெடுக விளக்குகிறார். அறி வியல் வளர்ச்சி எல்லா துறை களிலும் ஏககாலத்தில் நடப் பதே. ஆனால் அளவீட்டில் கூடுதல் குறைவு இருக் கலாம். ஒவ்வொரு பாகமும் ஒருமையச் செய்தியைச் சொன்னாலும் பிற செய்திகளும் விரவியே இருக்கிறது.புவியில் 130 கோடி கன கி. மீ தண்ணீர் உள்ளது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதனை எட்டிவிட் டது. 1872 வரை கடல்கள் குறித்த முறையானமுதல் ஆய்வு உண்மையில் நிகழவில்லை . 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு 3 ஆண்டுகள் கடல் ஆய்வில் ஈடுபட்டது. எழு பதினாயிரம் கடல்மைல்கள் பயணம் செய்து; 4700 கடல் உயிரிகளைச் சேகரித்தனர். 19 ஆண்டுகள் உழைத்து 50 தொகுதிகளாக அறிக்கைகள் தொகுத்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டோரில் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகி நான் கில் ஒருவர் கடலில் குதித்தனர். இப் படி உயிர் கொடுத்து கண்டுபிடிக் கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வரலாறு ஐந்தாம் அத்தியாயத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறது .

உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர், நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்? உங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல“அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் நவீன தலை நிமிர்ந்த உடல் கொண்ட பிராணி ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறி பரவத் தொடங்கியது . 60000 ஆண்டுகளுக்கு முன்மனிதர்களிடையே மொழியே தோன்றியிருக்கவில்லை. நமது வரலாற்றை நாமறி வோமா?“திகைத்து நிற்கின்ற ஒரு குறுகிய காலத்தில் சிறந்த இந்நிலைமைக்கு வந்திருக்கிறோம் . நடத் தை யைக் கொண்டு நவீன மனிதர்களாகக் கருதப்படு வோர் , புவியின் வரலாற்றில் சுமார் 0.0001 சதவீதத் திற்கும் அதிக காலமாக இருக்கவில்லை” என்கிறார் நூலாசிரியர். ஆனால் இந்த சொற்ப காலத்தில் அறிவி யல் பயணித்திருக்கும் தூரமும் காலமும் பரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்நூல் அத னை நமக்குச் சொல்கிறது. பகுத்தறிவின் மீதான பற்று தலை நம்பிக்கையை பிரகடனம் செய்கிறது. மொழிபெயர்ப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். அது குறித்து தீர்ப்புச் சொல்ல நான் தேர்ந்த புலமையாளன் அல்லன். ஆனால் வாசகன் என்ற முறையில் மொழி பெயர்ப்பு எனக்குக் கடினமாகவேபடுகிறது . வழக்க மாக வேகமாக வாசிக்கும் பழக்கம் உடையவன் நான். என்னால் இந்நூலை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் திருப்பிப் படிக்கும் தேவை ஏற்பட்டது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த அரியகொடையை அனைத்து வாசகர்களும் அட்டியின்றி பருக மொழியாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என் பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருப் பினும் சமூகமாற்றத்திற்காக உழைக்க உறுதி பூண் டோர் அனைவரும் இந்நூலை ஒரு முறைக்கு இரு முறை - தேவைப்படின் இன்னொரு முறை என வாசித்து உள்வாங்கல் மிக அவசியம்.

நன்றி:தீக்கதிர்

Saturday, 27 July 2013

நூறு எரிமலைகளும் ஒரு வாசிப்பு மேசையும்... !


உலக வரலாறு என்பது ஒரு திறந்த புத்தகம். அதன் சாலைகளின் மைல் கற்களை உற்றுப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் ஒரு புத்தகம்!
2011ம் வருடத்தின் உலக புத்தக தலைநகரமாக  யுனெஸ்கோ நிறுவனம் அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் ஆரஸ் நகரை தேர்வு செய்துள்ளார்கள். அந்த குட்டி ஊரில் 86 சதவிகித மக்கள் தங்களது ஒரே பொழுதுபோக்காக புத்தக வாசிப்பைக் கொண்டுள்ளதாக வாசிக்க நேர்ந்தது. உலக புத்தக தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாய் அங்கே நூலகத்தில் தங்களைக் கவர்ந்த 100 புத்தகங்களைக் கொண்டுவந்து காட்சிக்கு வைக்கும் நிகழ்வை குழந்தைகள் நிகழ்த்தப்போவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதையும் வாசித்தபோது உலக அளவில் பெரிய மாற்றங் களை விதைத்ததாய் நான் கருதும் 100 புத்தகங்களை தொகுத்துப் பார்க்கும் எண்ணம் வந்தது.
உலக மனித இன வரலாற்றை புத்தகங்களே புரட்டிப் போட்டன. வால்டேர் புத்தகங்களை மனப்பாடமாக மக்கள் ஒப்புவித்த பிரெஞ்சு புரட்சியும், கருப்பர் இன விடுதலையையும் எழுதிய அடிமை ஒழிப்பு நூல்களும், மூடநம்பிக்கைகளையும் குருட்டுப் பழமைவாதத்தையும் புதை குழியில் தள்ளிய அறிவியல் நூல்களும், மக்களே அரசியலின் நீதிபதிகள் என்பதை நிறுவிய அரசியல் சித்தாந்தமும், உழைப்பாளர் வழியில் உலகம் என நிலைநாட்டிய மார்க்சிய கோட்பாட்டு நூல்களும் வந்த பாதை இலகுவானதல்ல. இந்த நூல்களில் பலவற்றை படைத்ததற்காக இதன் கர்த்தாக்கள் சிறை சென்று, சித்திரவதை செய்யப்பட்டு, ஏன் பலர் கொல்லப் பட்டதும் வரலாறு என்றாலும் இறுதி வெற்றி என்றுமே புத்தகங்களுக்குதான். மொத்தம் 143 நாடுகளில் தடை செய்யப்பட்டும் டார்வினின் சார்பு தத்துவத்தை முன் வைத்த Ôஉயிரிகளின் தோற்றம்Õ நூல் இப்போதும் விற்பனை சாதனை பட்டியல்களில் உள்ளதை மறக்கக்கூடாது.
உலக சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்த இந்த 100 புத்தகங்களையும் படைத்தவர்கள் மிக சாதாரண குடும்பங்களில் பிறந்து வறுமையை வாழ்வின் அங்கமாய், போராட்டத்தை தனது பாதையின் அடையாளமாய் மனிதநேயத்தை தனது புரிதலின் தோழமையாய் பாவித்து தான் கண்ட பாதையில் உயிரைத் துச்சமென மதித்து, பிடிவாதமாய் இருந்தவர்கள். பெரும்பாலான இந்த நூலாசிரியர்கள் பெரிய பரிசுகளை பெற்றதைவிட அவமானங்களும், தண்டனைகளுமே அதிகம் பெற்றனர். சிலர் புத்தகம் எழுதியதே சிறைவாசத்தின்போதுதான்.
ஈசாப் கதைகளைப் பற்றி தன் பார்வையில் அவற்றை சாக்ரடீஸ் மாற்றி எழுதினாராம். அந்த புத்தகத்தின் ஒரு பிரதி இன்றி அன்றைய அரசு அழித்துவிட்டது. ரஷ்யாவின் அற்புத எழுத்தாளன் நிக்கோலாய் கோகுல் செத்த ஆன்மாக்கள் நூலின்  இரண்டாம் பாகத்தை வெளியிட்டபோது தேவாலயம் அதை வாசிப்பவர்களை எல்லாம் கொல்லப் போவதாக அறிவித்தது. ஒரு பிரதி பாக்கிஇன்றி கையெழுத்துப் பிரதி சேர்த்து அவரே எரித்துவிட்டார். இப்படி நமக்கு கிடைக்காமல் போன நூல்களும் உண்டு.
ஹெலன் கெல்லர், பார்வையற்றும், காது கேளாதவரா கவும், வாய் பேசாதவராகவும் பிறந்தும்கூட 27 புத்தகங்கள் எழுதினார். அவருக்காகவது மற்றபடி உடல் உபாதை இல்லை. ஜீன் டோமினிக் பாபியை பற்றி அறிந்தபோது நான் பல இரவுகள் உறங்க முடியவில்லை. ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் அவர். 1995ல் தனது 43 வயதில் ஸ்ட்ரோக் வந்து தனது உடலசைவு அனைத்தையும் இழந்தார். ஸ்டீபன்ஹாக்கின்ஸ் கம்ப்யூட்டர் பித்தான்களை அழுத்தி யாவது உரையாட முடிந்தது. டோமினிக் பாபியால் அசைக்க முடிந்த ஒரே உறுப்பு கண்  இமைதான். 1998 வரை தான் உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் குறித்துவிட்டார்கள். இத்தனை முறைகண் இமைத்தால் இந்த எழுத்து என பாபி தனது சுய வாழ்க்கை கதையை தனது உடன் வேலை பார்த்த தோழியின் உதவியோடு எழுத முடிவு செய்தார். ஒரு வார்த்தைக்கு 200,000 முறை அவர் இமைக்க வேண்டி இருந்தது. கோமாவிலிருந்து மீண்டும்கூட குடும்பத்தோடு குதூகலிக்க முடியாத முடக்குவாத நோயாளியின் துயர எண்ணங்களைப் பதிவு செய்யும் முக்கிய புத்தகம்.. தி டைவிங் பெல் அண்டு தி பட்டர் பிளை(The Diving bell and the butterfly) என அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். 1997ல் புத்தகம் வெளிவந்த இரண்டே நாட்கள் கழித்து பாபி இறந்துவிட்டாலும், தன்னம்பிக்கை புத்தகங்களிலேயே சிறந்ததான இந்தப் புதையல் இன்று உலகெங்கும் மருத்துவத் துறையில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது. இந்த புத்தகம் முடியும் கடைசி வரிகளில், மீண்டும் மனிதன் பிறப்பான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அப்படி ஒன்று இருக்குமேயானால் நான் உலக புத்தகதினத்தில் பிறக்க விரும்புவேன்.. புத்தகங்களோடு வாழத்துடிப்பேன்Õ என பாபி எழுதி நம்மைக் கண்கலங்க வைப்பார்.
புத்தகங்களை நேசிக்கும் பலரும் இந்த 100 நூல்களில் பலவற்றை வாசித்திருப்பார்கள். இதுவே முடிவான பட்டியல் அல்ல. தமிழின் முதன்மையான 100 நூல்களை  ஒருவர் தொகுக்கலாம். உங்களின் 100 தேர்வு என்பது வேறாகவும் இருக்கலாம். இது எனது தேர்வு. இந்தத் தேர்வை நமது தமிழ் மண்ணிலிருந்து உலக நூல்களைக் கற்றுத் தேர்வதில் நமக்கெல்லாம் முன்னோடியாய் இருந்த சிந்தனைச் செல்வர் சிங்காரவேலருக்கு சமர்ப்பிப்பேன். நூறு  என்பது சும்மா எண்ணிக்கைக்கு தான். மற்றபடி அந்த 101வது உலக மகா புத்தகத்தை எழுதப்போவது நீங்களாகவும் இருக்கலாம்.எபிக் ஆஃப் கில்காமெஷ்
பாபிலோனிய மொழிநூல்
(கி.மு. _ 300)

கி.மு.2700களில் தொடங்கும் கதை ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கிறது.  ஒரு நூறு வருடங்கள் பல பேர் அடுத்தடுத்து எழுதிய ஒரு கூட்டு முயற்சி. மண் சில்லுகளில் ஒரு 1300 பக்கங்கள். பாபிலோனிய மொழியின் ஒரே இலக்கியம். கடவுளைப் பற்றி பேசாத முற்கால இலக்கியம்! மேக்மிலன் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.கன்ஃபூசியஸ் ஆனலெக்ட்
(ஜிலீமீ கிஸீணீறீமீநீts ஷீயீ சிஷீஸீயீuநீவீus) கன்ஃபூசியஸ்
(கி.மு. 478) சீனம்

சீன தத்துவப் பேராசான் கன்ஃபூசியஸ் பேசிய, சொல்லி வலம் வந்த, சீடர் களோடு உரையாடலாக நிகழ்த்திய இன்னும் எழுதிப் பார்த்த அனைத்தின் தொகுப்பு. இதை அவர்கூடவே வாழ்ந்த  600 பேர் பதிவு செய்து தொகுத்திருக்கிறார்கள். கல்வி, சமூகம் போன்றவற்றில் பெரிய தாக்கம் ஏற்படுத்திய நூல்.லியனார்டோவின் நோட்டுப் புத்தகம்
(ஜிலீமீ ழிஷீtமீ ஙிஷீஷீளீs ஷீயீ லிமீஷீஸீணீக்ஷீபீஷீ)
லியனார்டோ டாவின்சி
ஆங்கிலத்தில்: எட்வார்ட் மெக் கர்டி.

பல்துறை வித்தகரான  லியனார்டோ டாவின்சி தன் கருத்து கண்டுபிடிப்புகளை எழுதி வைத்த டைரி. சிறப்பான விஷயம் இந்த டைரி (12000 பக்கம்) கடையில் (நம் காலம் போல) வாங்கியது அல்ல. (அந்த நோட்டுப் புத்தகத்தையும் அவரே கண்டுபிடித்தது) ஆங்கில மொழிபெயர்ப்பாக ஆக்ஸ்போர்டு பிரஸ் கொண்டு வந்துள்ள இந்த நூலில் மட்டும் ஒரு ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளன.

எலிமெண்ட்ஸ் (ணிறீமீனீமீஸீts) இயூக்லிட் (கி.மு.300)

நமது சிறுவர்கள் பயன்படுத்தும் ஜியாமெண்டரி பெட்டி இதிலிருந்து வந்ததுதான். ஒருவகை சுண்ணாம்பு சில்லுகளில் எழுதி இருக்கிறார். அந்த சில்லுகளை வரிசையாக வைத்தால் ‘நிலா’ வந்து விடும். அவ்வளவு பெரிய நூல். தன் காலத்து வரையான கணித வரலாறு, அறிவியல் அறிவு அனைத்தையும் தொகுத்துள்ளார் இயூக்லிட்.எலிமண்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி
(ணிறீமீனீமீஸீts ஷீயீ சிலீமீனீவீstக்ஷீஹ்) 1789
ஆண்டன் லெவாய்சியர்
ஆங்கிலத்தில்: ராபர்ட்கெர்

தனது 76 கண்டுபிடிப்புகள் மூலம் ஆரம்ப கால வேதியியல் உலகை உலுக்கிய மாபெரும் அறிஞர். லெவாய்சியர் தான் Ôகெமிஸ்ட்ரிÕ என்ற பெயரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். பிரெஞ்சு புரட்சியின்போது இலத்தினில் வெளியிடப்பட்ட அவரது இந்த நூல் தன் காலத்தில் பெயரிடப்படாத தனிமங்களுக்கு வேதிப்பொருட்களுக்கு முதலில் பெயரிட முயன்ற நூல்.மூலதனம் (ஞிணீs ரிணீஜீவீtணீறீ)கார்ல் மார்க்ஸ்

தொழிலாளர் மற்றும் பாட்டாளி வர்க் கத்தின் பார்வையில் உலக வரலாறை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி எங்கனம் வரலாறு என்பது தொழிலாளர் போராட் டங்களால் ஆனது, சாதாரண மக்களால் படைக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் உன்னதப் படைப்பு. உலகப் பொருளாதாரத்தின் முதலாளிய வர்க்கம்களின்  தொழிலாளர் உழைப்பை மூலதனமாக்கி சுரண்டலையே அன்றாட வாழ்வாக்கியதை இயங்கியல் வழி நின்று மார்க்ஸே முதலில் பதிவு செய்கிறார். உலகப் போராட்டங்கள் மற்றும் புரட்சிகளுக்கு வித்திட்ட அரிய படைப்பு. இன்றளவும் பொருளாதாரத்தில் முக்கியப் பாடநூல்.இலியாட் ஒடிஸி ஹோமர்

உலக இலக்கியத்தில் நீங்கா இடம் பிடித்த தோடு இன்றுவரை பல பாதிப்புகளை ஏற்படுத்தும் காவியம். கிரேக்க மொழியில் 3500 ஆண்டுகளுக்கு முன் ஹோமர் படைத்த இந்நூல் ட்ரோஜான் யுத்தத்தின் நடுவிலிருந்து தொடங்குகிறது. இது இரு புத்தகங்களாய் எழுதப்பட்டது. மேற்கின் பெரிய சாம்ராஜியமாய் கிரேக்கர்கள் வடிவெடுத்த வரலாறு பற்றியது. இந்த ஒரு நூலைக் கொண்டு சுமார் 600 நூல்களும் 167 திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.அழு... என் அன்பிற்குரிய தாய்நாடே!
(சிக்ஷீஹ் tலீமீ ஙிமீறீஷீஸ்மீபீ சிஷீuஸீtக்ஷீஹ்) ஆலன் பேட்டான்.
தொன்னூறு சதவீதம் கொண்ட கருப்பின மக்களை பத்து கொண்டு வந்து குடியேறிய வெள்ளை எஜமானர்கள் ஆட்சி செய்த தென் ஆப்பிரிக்காவின் வரலாறு இப்படி ஒரு தலைப் பில் எழுதப்பட்டது. 1948ல் தான் எழுதப் படிக்க கற்ற ஆறாவது ஆண்டில் ஆலன் இப்படி ஒரு நாவலைப் படைத்து உலகையே அதிர்ச்சியுறச் செய்தார். தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இதைத் தடை செய்தது. ஆனால் உலக இலக்கிய வரலாற்றில் தனி இடம் பிடித்த இந்த நாவல் சுதந்திர வேட்கையின் ஒப்பற்ற மைல்கல்லாக இன்றும் விளங்குகிறது.தத்துவத்தின் கோட்பாடுகள்
(ஜிலீமீ றிக்ஷீவீஸீநீவீஜீறீமீs ஷீயீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்)
ரெனே தெக்கார்த்தே. (1442)

மி tலீவீஸீளீ ணீஸீபீ sஷீ மி ணீனீ  என்று ரேனே  தெக்கார்தே உலகிற்கு அறிவித்த ஒப்பற்ற தத்துவநூல். கணிதத்தையும் மரபார்ந்த தத்துவ விசாரத்தையும் நவீன சிந்தனை மரபில் கலந்து அவர் இதில் தருகிறார். எண்களையும் வடிவங்களையும் வரைபடத்தாள் (நிக்ஷீணீஜீலீ) மூலம் முதலில் இணைத்த இந்த மாமேதையின் எழுத்துப் பிரவாகம் எளிமையும் புதுமையும் ஒருங்கே கொண்டதாக இருப்பதைக் காணலாம்.


ஹெரோடோட்டஸின் வரலாறு
ஹெரோடோட்டஸ்
(துருக்கி) கி.மு. 500

ஹெரோடோட்டஸ் வரலாற்று இயலின் தந்தை என்று போற்றப்படுகிறார். அவர் துருக்கியில் கி.மு. 500ல் வாழ்ந்தவர். வரலாற்று சம்பவங்களைப் பதிவு செய்ய முதலில் அதனை ஆவணங்களாக கல்வெட்டுகளாக எழுதும் முறையை அறிமுகம் செய்தவர். இவரது வரலாற்று நூல் உலகில் ஐரோப்பா, ஆசியா என மூலை முடுக்குகள் நாகரீகங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்தது.அரித்மெடிக் டிஸ்க்விஷிஷன்ஸ் (கிக்ஷீவீtலீனீமீtவீநீ ஞிவீsஹீuவீstவீஷீஸீs) கார்ல் பெடரிக் காஸ்
சாதாரண தோட்டத் தொழிலாளி மகனாகப் பிறந்து உலகின் தலைசிறந்த கணிதமேதையான காஸ் தனது வாழ்நாள் சாதனையாகப் படைத்த பல்வேறு தேற்றங்களின் அழகிய தொகுப்பு. இன்று வரி முதல் நிலஅளவை வரை எங்கும் புகுந்துள்ள காஸ் அளவை முறையை நேரடியாக அவர் முதன் முறை இந்த நூலில் அறிமுகம் செய்வதும், 1056 தேற்றங்களின் நிரூபணம் அளித்துள்ளதும் இதன் தனிச் சிறப்பு.
கிரேக்க ஈஸாப் கதைகள்
அடிமை ஈஸாப் கி.மு. 620

கிரேக்க நாட்டில் ஒரு அரச செல்வந்
தனுக்கு அடிமையாய் இருந்த ஈஸாப் குட்டிக்கதைகள் சொல்வதில் வித்தகராய் இருந்து விடுதலையைப் பெற்றவர். கி.மு.300 வரை வாய்மொழியாக இருந்து பிறகு எழுத்து வடிவம் பெற்றன. நமது உலகம் முழுதும் அதிகப் பேரை அடைந்த கதைகள். கதை சொல்லிகள் என்னவோ அடிமைகளிலிருந்தே பிறக்கிறார்கள்.இரு வேறு உலகு குறித்த விவாதம்.
(ஞிவீணீறீஷீரீuமீ நீஷீஸீநீமீக்ஷீவீஸீரீ tலீமீ tஷ்ஷீ சிலீவீமீயீ கீஷீக்ஷீறீபீ ஷிஹ்stமீனீs
கலீலியோ கலீலி ஆங்கிலத்தில் ஸ்டில்மன் டிரேக்.

போப்பாண்டவரின் உத்தரவிற்கு இணங்கி பிரபஞ்சத்தின் மையம் பூமியா, சூரியனா என்பதை தாலமி மற்றும் கோபர்நிக்கசின் பாடல்களை கொண்டு ஆராய்ந்து கடைசியில் கோப்பர்நிகசின் பாடலான பிரபஞ்சத்தின் மையம் சூரியனே! என்ற முடிவைக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நூல் அக்காலத்தில் பெரும் அதிர்ச்சி அலையை இந்நூல் ஏற்படுத்தியதன் காரணமாக கலிலீயோவிற்கு தண்டனையும் கிடைத்தது. சத்தியத்தின் சுடரை இப்புத்தகத்தில் நம்மால் தரிசிக்க முடியும்.


தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன்
(பண்பாட்டின் வரலாறு)
வில் டுராண்ட், ஏரியால். (11 தொகுதிகள்)

தனது துணைவியாரான  ஏரியால் அம்மை யாரோடு சேர்ந்து 43 ஆண்டுகள் வில்டுராண்ட்  இந்த நூலுக்காக உழைத்து மனித சமூகப் பண்பாட்டின் வரலாற்றை பதினோறு தொகுதிகளாய் எழுதிச் செல்கிறார். ராகுல சாங்கிரித்யாயரால் இப்புத்தகம் உலகின் தலைசிறந்த ஆவணம் என்று வர்ணிக்கப்பட்டது.

‘ஸெரிபெரல் கார்டெக்சும் உடலியலும்’
(றிலீஹ்sவீஷீறீஷீரீவீநீணீறீ ணீநீtவீஸ்வீtஹ் ஷீயீ நீமீக்ஷீறீu நீமீக்ஷீமீறீவீக்ஷீணீறீ நீணீக்ஷீtமீஜ்)
ஐ.பி. பாவ்லோவ் ஆங்கிலத்தில் ஸ்டீர் புரூமன்.

ரஷ்ய விஞ்ஞானி பாவ்லோவ் நாய்களைக் கொண்டு நிகழ்த்திய முக்கிய ஆய்வுகளின் முடிவுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தூண்டுதல் எனும் பதம் கல்வி முதல் இன்று அனைத்து துறைகளையும் கோலோச்சுவதைக் காண்கிறோம். மூளையின் செரிபெரல் கார்டக்ஸ் நமது சீரண மண்டலம் உட்பட அனைத்தையும் எவ்விதம் செயல்படத் தூண்டுகிறது என்பதை உலகிற்கு முதலில் விளக்கி நோபல் பரிசு பெறவைத்த நூல் இது.பினோக்சியோ சாகசங்கள்
(ஜிலீமீ கிபீஸ்மீஸீtuக்ஷீமீ ஷீயீ றிவீஸீஷீநீநீலீவீஷீ)
கார்லோ கொல்லோடி (இத்தாலிய மொழி)

உலகக் குழந்தைகள் இலக்கியத்தில் நீங்கா இடம் பிடித்த நூல் இது. பினோக்சியோ என்பது பொம்மலாட்ட பொம்மை! பினோக்சியோ பொம் மையும் அவனது ஏழ்மையில் வாடும் தந்தை பொம்மையும் படும் பாடுகள்தான் சாகசங்களாக கார்லோ கொல்லோடியால் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காக என்றே எழுதப்பட்ட உலகின் முதல் புதினம் என்று இது அழைக்கப்படுகிறது.நவீன அறிவியலின் தோற்றம்
(ஜிலீமீ ளிக்ஷீவீரீவீஷீஸீ ஷீயீ விஷீபீமீக்ஷீஸீ ஷிநீவீமீஸீநீமீ)
1300 - 1800 ஹெர்பர்ட் பட்டர்ஃபீல்டு
அறிவியல் வரலாறு என்பது பல்வேறு கடும் முயற்சிகள், போராட்டங்களால் ஆனது. பல்லாயிரம் பேரின் பல லட்சம் பங்களிப்புகளை விழுங்கியே இந்த நவீன உலகு பிறந்தது. மின்சாரம் விமானம், ராக்கெட் வரை அனைத்திற்குமான தொடக்கத்தை இந்த  நூல் வரலாறாக முன் வைக்கிறது. பள்ளிக் கல்லூரி பாடப் புத்தகங்களில் அவசியம் இடம்பெற வேண்டிய அற்புத புத்தகம் இது.

லாஸ்ட் வேர்ல்டு 1710 _ பிரெஞ்சு (லிஷீst கீஷீக்ஷீறீபீ) சைமன் டைசாட் டிபெட்டாட்

உலகின் முதல் எதிர்கால நாவல்! 3012ல் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கும் அற்புதப் புத்தகம் இது. புவியின் இயற்கை ஆதாரங்கள் முற்றிலும் தீர்ந்து நிர்மூலமாகும் ஹாலோ எர்த் (பிணீறீறீஷீஷ் ணிணீக்ஷீtலீ) சிந்தனையை முதலில் விதைத்த நூல். புவியின் கடைசி நாட்களை வாசிக்கும் ஒருவர், அடையும் அதிர்ச்சியும் பிரமிப்பும் இன்றுவரை இதன் மீது தீராமோகம் கொள்ள வைக்கிறது.குடியரசு (ஜிலீமீ ஸிமீஜீuதீறீவீநீ) பிளேட்டோ
வசதியான கிரேக்க வம்சத்தில் பிறந்தும் சாக்ரடீஸால் ஈர்க்கப்பட்டு அறிவின் உரையாடலுக்குள் வந்த மாபெரும் மனிதன் பிளேட்டோ, அரிஸ்டாட்டிலின் ஆசிரியர். ÔகுடியரசுÕ இவரது உரையாடல் வடிவ நூல். அரசு, சுதந்திரம் ஜனநாயகம் போன்றவைகள் குறித்த மனித இனத்தின் முதல் பதிவு. உலகின் முதல் பல்கலைக்கழகமான தனது ÔஅகாடமிÕயில் அவர் நிகழ்த்திய சூடான கலந்துரையாடல்களின் தொகுப்பு தான் குடியரசு.இருபது காதல் கவிதைகளும்
ஒரு துயரப்பாடலும்
பாப்லோ நெருதா.
1924ல் பாப்லோ நெருதாவின் பத்தொன்பது வயதில் இந்த ஸ்பானிஷ் மொழி கவிதைத் தொகுதி வெளிவந்தது. லத்தீன் அமெரிக்காவின் புரட்சிகர ஆண்டுகளின் ஒற்றை ஆன்மாவாக செயல்பட்ட இந்த மாபெரும் கவிஞனின் உயிரோட்டமான முதல் படைப்பு இது. மக்களின் மூச்சுக்காற்றையும் புரட்சியின் ரத்த ஓட்டத்தையும் அறிந்திருந்த ஒரு மக்கள் கவிஞனின் உன்னதப் படைப்பு. பல்லாயிரம் இளைஞர்களை படைப்பிலக்கியத்தை நோக்கி ஈர்த்த புத்தகம்.தாய் (ஜிலீமீ னீஷீtலீமீக்ஷீ) மக்சீம் கார்க்கி.
அலெக்சி பெஷ்கோவ் எனும் தனது இயற்பெயரை மக்சீம் கார்க்கி ஆக்கிக் கொண்ட சோவியத் நாட்டின் தலை சிறந்த படைப்பாளியின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று. உலகப் புரட்சியாளர் பலரது பயணப் பைகளில் போராட்ட ஆயுதமாய் பரிணமித்த நாவல். உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட இது போல்ஷிவிக் புரட்சியின் இதயத் துடிப்பைத் தாங்கியது என ஜோசப் ஸ்டாலினால் வர்ணிக்கப்பட்டது. யதார்த்தவாத இலக்கியத்தின் வெற்றிக்கான சாட்சியமாய் என்றென்றும் நிலைக்கும் படைப்பு.


நிக்கோமாஷியன் எத்திக்ஸ்
(ழிவீநீஷீனீணீநீலீமீணீஸீ ணிtலீவீநீs) அரிஸ்ட்டாடில்
அரிஸ்ட்டாடிலின் அனைத்து சிந்தனை களையும் அவரது மகன் நிக்கோமாஷியஸ் மற்றும் அரிஸ்டாட்டிலின் மாணவர்கள் தொகுத்துள்ளனர். பல ஆயிரம் பக்கங்கள். அரிஸ்டாட்டிலின் தந்தை பெயரும் நிக்கோமாஷியஸ் தான். இயற்கையை எப்படி ஆய்வு மூலம் அறிவியல் முறைப்படி அறிவது என்பதை முதலில் உலகிற்கு உணர்த்தும் இந்த நூல் கணக்கைத் தவிர வேறு எல்லாம் பேசுகிறது. மேக்மில்லன் சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.


அங்கிள் வான்யா ஆண்டன் செக்காவ்
 1899ல் வெளிவந்த ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவின் ஆகச்சிறந்த நாவல். வயது முதிர்ந்த கல்லூரிப் பேராசிரியன், அவனது இளம் மனைவி எலினா ஆகியோரின் மத்திய தரவாழ்வின் அவலங்களை அடுக்கிச் செல்லும்  கதையில் பேராசிரியரின் மகள் சோனியா, நண்பர்கள் ஆஸ்ட்ரோவ், வான்யா போன்ற காலத்தால் அழியாத பாத்திரங்களின் வழியே கண்ணீரும் துயரமுமாய் நகரும் சம்பவங்களின் வழியே நமது சொந்த வாழ்வின் கிழிசல்களை  தரிசிக்கலாம்.குழந்தைப் பருவ சிந்தனைப் போக்கும் முடிவெடுக்கும் ஆற்றலும்
(யிuபீரீமீனீமீஸீt ணீஸீபீ ஸிமீணீsஷீஸீவீஸீரீ வீஸீ tலீமீ சிலீவீறீபீ)
ழீன் பியாகெட் (1928)
குழந்தைகளை உலகம் நடத்தி வந்த முறை மிகக் கொடுமையானது ழீன் பியாகெட்டின் இந்த புத்தகம் தான் முதலில் குழந்தைகள் உரிமை குறித்துப் பேசிய புத்தகம். பள்ளிக் கூடங்கள் என்பவை எப்படி இருக்க வேண்டும், குழந்தைகளின் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு என அவர் யாவற்றையும் விவரிக்கிறார். பெற்றோர்கள், ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பெட்டகம்.விலங்குகளின் நடத்தையியல்
(ஜிலீமீ ழிமீஷ் ஷிநீவீமீஸீநீமீ ஷீயீ கிஸீவீனீணீறீ ஙிமீலீணீஸ்வீஷீக்ஷீ) (1909)
ஜான் பி. வாட்சன்.
டார்வினியத்திற்கு ஆதரவாக வாட்சன் வரிந்து கட்டும் முக்கிய ஆவணம் இந்த நூல். மனிதன் விலங்கின் ஏதோ ஒரு பிரதிநிதித்துவ பிரதியாகவே இருக்க முடியும் என்பதற்காக  விலங்கியல் நடத்தை ஆதாரங்களை அடுக்கும் வாட்சன் உளவியல் எனும் துறையின் ஆரம்ப கால கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மனித நடத்தை இயலின் மீது  பெரிய தாக்கத்தை இந்த  நூலின்  மூலம் ஏற்படுத்தியவர்.மெண்டலின் மரபியல்
(விமீஸீபீமீறீs றிக்ஷீவீஸீநீவீஜீறீமீs ஷீயீ
பிமீக்ஷீமீபீவீtஹ்)
வில்லியம் பேட்ஸன் (1909)
தனது வாழ்வின் 27 ஆண்டுகளை பட்டாணிச் செடிகளின் ஆய்வுகளுக்கு செலவிட்டு பரம்பரை குணங்கள் எப்படி ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என்பதை நிரூபித்தார் கிரிகர் மெண்டல். அதை அப்போதைய விஞ்ஞான உலகம் கண்டுகொள்ளவில்லை. அவர் இறந்து இருபதாண்டுகள் கழித்து அவரது கண்டுபிடிப்புகளை வில்லியம் பேட்ஸன் என்பவர் நூலாக எழுதினார். அவரது கண்டுபிடிப்பு இன்றைய மரபியலாய் வளர்ந்துள்ளது. அறிவியல் மருத்துவத் துறையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு.


நோவம் அர்கானம்
பிரான்ஸிஸ் பேக்கான்
இங்கிலாந்தின் நீதி அரசர் பிரான்ஸிஸ் பேக்கான் அறிவியல் ஆய்வுகள் செய்யும்  தற்போதைய படிநிலைகளை அறிமுகம் செய்தவர். அறிவியலில் தனித்தனித்துறைகளையும் இந்தப் புத்தகமே முதலில் முன்மொழிந்தது. இது அறிமுகம் செய்த இன்னும் பலதுறைகள் வரவேண்டியுள்ளது என்பதையும் வாசித்து அறியலாம்.


என்றார் ஸராதஸ்ட்ரா
 பெடரிக் நீட்சே
 ‘தத்துவப் பேருலகின் துயரக்குழந்தை’ என்று நீட்சே வர்ணிக்கப்படுவார். தனது ஸராதஸ்ட்ரா பாத்திரம் மூலம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டு தான் வாழ்ந்து பதினெட்டாண்டு கிருத்துவ விமர்சனத்தை நீட்சே முன் வைக்கிறார். கவிதையா உரைநடையா உரை வீச்சா எது எப்படியோ ஒருவர் பத்தே நாட்களில் இப்படி ஒரு அற்புதத்தை எழுதி முடிக்க முடியுமா?

மனித இனங்கள் நி. நெஸ்துர்ஹ்

மனிதனின் தோற்றம் முதலாய் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மங்கோலியா என பல இடங்களிலிருந்து விதவிதமான மனித இனம் தோன்றி உருவான அறிவியலைப் பதிவு செய்யும் முக்கிய நூல். மீர் பதிப்பகம் (மாஸ்கோ) 1970களில் வெளியிட்ட மக்கள் பதிப்பு. நெஸ்துர்ஹ் மிகப் பிரபலமான சோவியத் ஆந்த்ர பாலஜிஸ்ட். இன்னும் அந்தத் துறையில் முக்கிய ஆரம்பப் பாடநூலாக இருக்கும் நூல்.ருபியாத் உமர் கயாம்
எட்வர்ட் ஃபிட்ஸெரால்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காமல் போயிருந்தால் உமர் கயாமை உலகம் அறிந்திருக்காது. நாலே வரியில்  பார்சி மொழியில் அமைவதால் அதற்கு ருபியாத் (பார்சியில் நாலு வரி என்பதற்கான சொல்) எனப் பெயர். காதல், மரணம், வெறுமை, மத நக்கல் வாழ்வின் மீதான சமாதானமற்ற சாடல் என உமர் கயாம் ஒரு சகாப்தமாய் மின்னுகிறார். பதினோராம் நூற்றாண்டின் படைப்பு என வாசிக்கும் போது தெரிவதில்லை. நம்முன் உட்கார்ந்து நம்மைக் கேலி செய்வதுபோல  அப்படி ஒரு தத்ரூபம்.குடியரசு குறித்து

 சிசெரோ
சிசெரோ, ஜுலியஸ்சீஸர் காலத்தில், கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவஞானி. நேர்மையற்ற கொடுங்கோல் மன்னர்கள் மக்களையும் அவர்களது உழைப்பையும் எப்படிச் சூரையாடினர் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. மன்னர் ஆட்சி மகத்துவம் பற்றியே எல்லாம் பேச இந்த நூல்  மக்களது பார்வையில் ஆட்சியை விமர்சிக்கும் வித்தியாசமான முயற்சி மூலம் நூற்றாண்டு கடந்தும் வாசிக்கப்படும் வரலாற்று ஆவணமாய்த் திகழ்கிறது.


பெட்ரோ பேரமோ
ஜொவான் ரொல்ஃபோ
ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் உலகின் தலைசிறந்த நாவல் என்று ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலை முன்மொழிகிறார். ஆங்கில மொழியாக்கம் 1997ல் தான் வெளிவந்தது என்றாலும் நாவல் 1955லேயே வந்துவிட்டது. தாய்க்கு அளித்த சத்தியத்தைக் காக்க தந்தையைத் தேடிப் புறப்படும் ஜோவான் அது நிறைவேறாமல் இடையில் இறப்பதிலிருந்து தந்தையான பெட்ரோ பேரமோ துக்க இரவுகளில் அன்பின் அர்த்தத்தை தேடி துயருறும் அவலங்கள் வழ¤யே சபிக்கப்படும் நகரம் அவனது உழைப்பை இழந்து பட்டினியில் சாவுண்டு கிடக்கிறது என்பதே அவனைத் தேடும் மகனின் சாவாகிறது.


ஜுலியஸ் சீசர் வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் மிக அற்புதமானது. சீசர்சுய நலம் பிடித்த கொடுங்கோலன் ஆகிவிடுவான் என அஞ்சி அவனது நண்பன் புரூட்டஸ் அவனைப் படுகொலை செய்கிறான். இன்னொரு நண்பன் மார்கியஸ் ஆண்டனி மக்களிடம் சென்று விரிவாய்ப் பேசி நாட்டை தனது உரைகள் மூலம் கிளர்ந்தெழச் செய்கிறான். ஷேக்ஸ் பியர் நாடகங்களில் மக்கள் போராட்டத்தை முன்வைக்கும் கதை இது. கடலும் கிழவனும்  எர்னஸ்ட் ஹெம்மிங்வே
1952ல் வெளிவந்த புதினம் இது. கியூப மீனவக் கிழவனுக்கும் கடலுக்குமான ஜீவமரணப் போராட்டம். மனிதனை உலகே அழிக்க ஒன்று கூடுமேயானால் அப்படி ஒன்று நடப்பதை உணர்ந்தே மனிதன் அழிவான்.. அழிக்கும் உலகோ அது குறித்த தூல அறிவின்றியே செயல்படும் என்பதை ஹெம்மிங்வே அழுத்தமான தனது எழுத்தின் வழியே முன்வைக்கிறார். மரணத்தின்  வாயிற் கதவைத் தட்டும் கிழவனின் தனிமைப் போராட்டம் வெற்றி அடையும் இடத்தில் ஹெம்மிங்வேயின் எழுத்துப் பாதை மாறியதோடு யதார்த்தவாத இலக்கியத்தின் புதிய பரிமாணமும் கிடைத்தது.வேதி அட்டவணை (ஜிலீமீ றிமீக்ஷீவீஷீபீவீநீ ஜிணீதீறீமீ)
பிரைமோ லெவி
ஆங்கிலத்தில் ரெமாண்ட் ரோசென் தான் ஹிட்லர் மரண யாத்திரைகளில் பங்கேற்று உயிரோடு மிச்சமிருந் தவர்களில் ஒருவராகி அற்புதமான பின் நவீனத்துவ இலக்கியம் படைத்த பிரைமோ லெவியின் வேதியியல் நூல் இது. ஒரு தேர்ந்த விஞ்ஞானியின் அணு குறித்த அணுகுமுறையை இந்த சுவையான நூலில் காணலாம். ஒரு அணுவின் பயணக்கதை இதில் உள்ள அதிசயிக்கத் தக்க கட்டுரை.


சுழற்சிக் கோட்பாடுகள் (ளிஸீ ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீs)
நிக்கோலஸ் கோபர்நிகஸ் போலிஷ்  1543
பொலிவியாவில் ஒரு கிருத்துவப் பாதிரியராக இருந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ்... தனது சூரியன் மையக்கோட்பாட்டை முன் வைக்கிறார். 617 பக்க கணித வழி நிரூபணம் ஒரு உண்மையான அற்புதம். இன்றுவரை பல நாடுகளில் இப்புத்தகத்திற்கு தடை நீக்கப்படவில்லை. புவி தன்னைத்தானே சுற்றுவது நாள். சூரியனைச் சுற்றுவது ஒரு ஆண்டு என்பதை அழகாக நிரூபித்த ஆதார அறிவியல் நூல்.

பிரின்சிபியா மேத்தமாட்டிகா
(றிலீவீறீஷீsஷீஜீலீவீமீ ழிணீtuக்ஷீணீறீவீs றிக்ஷீவீஸீநீவீஜீவீணீ விமீtலீணீனீணீtவீநீணீ)
1689 சர் ஐசக் நியூட்டன்
மனித இனத்தின் அறிவியல் தேடலின் முதல் தங்கச் சுரங்கம் என ஐன்ஸ்டீன் வர்ணித்த புத்தகம் இது. புவி ஈர்ப்பு விசை முதல் இயக்க விதிகள், முடுக்கக் கோட்பாடுகள் என ஒரு பதினாறு நோபல் பரிசுகளுக்கு இணையான பதிவுகளை இந்த நூலில் காணலாம். கணிதம், இயற்பியல் தத்துவம் என பல துறைகளை புரட்டிப் போட்ட அரிய பொக்கிஷம்.

புவியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்
(கி யிஷீuக்ஷீஸீமீஹ் tஷீ tலீமீ நீமீஸீtமீக்ஷீ ஷீயீ tலீமீ ணிணீக்ஷீtலீ) ஜுல்ஸ் வெர்ன்
அறிவியல் புனைகதை உலகின் தந்தை என்று போற்றப்படுபவர் ஜுல்ஸ் வெர்ன். சந்திரனுக்கு மனிதன் விஜயம் செய்வதை அது நடப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன் பதிவு செய்த அவரது எழுத்துக்களில் Ôஎண்பதே நாட்களில் உலகை வலம் வருதல்Õ உட்பட பல இருந்தாலும் Ôபுவியின் மையம் நோக்கிய பயணம்Õ, மிகவும் அற்புதமானது. எரிமலை, ஆழ்கடல், தாது உலகம், பாறைப் படிவுகள், கரி, வைரம் என ஒரு பெரிய கற்பனை உலக அரங்கத்தை நமக்கு சுவைபட விவரித்து மனிதனுக்கு அதுவரை பிடிபடாத நமது புவியின் உட்புதையல்களை வெளிச்சமிடும் புத்தகம்

கெஞ்சியின் கதை முராசாக்கி ஷிக்கிபு.
(ஜப்பானிய மொழி 11ம் நூற்றாண்டு)
ஜப்பானிய அரசு குடும்பத்தில் பிறந்தும் ஒரு பெண் என்பதால் ராஜகிரீடம் மறுக்கப்பட்ட ஷிக்கிபு எழுதிய உலகின் முதல் பெண் நாவல். ஜப்பானிய அரச வாழ்க்கை விதவைகளை எப்படி வேசிகளாக மாற்றுகின்றன என்பதை எழுதிச் செல்லும் ஷிக்கிபு, ஆண் வர்க்க ஆதிக்கப்போக்கு, யுத்தங்களை கொள்ளைக்காகவும் பெருங்குற்றங்கள் புரியவும் அரசே தரும் வாய்ப்பாக இருப்பதை நிறுவுகிறார். எட்வர்ட் சைடென்கர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

தி பிளாக் பியூட்டி ஆன்னா செவல்
பெயரில் கருப்பு என்று வருகிறது என்பதால் அமெரிக்காவும், தென் ஆப்பிரிக்காவும் இந்த நாவலைத் தடை செய்தன. ஒரு குதிரை இந்த நாவலின் கதை சொல்லி. அதன் பார்வையில் உலகம், அதன் ஏற்றத் தாழ்வு, குதிரைக் காப்பாளனின் வறுமை  மரணம் என நெஞ்சுருக வைக்கும் எழுத்து. ஒரு குதிரையின் சுயசரிதை என்றாலும் இது மனிதர்கள் பற்றிதான் பேசுகிறது என்பதை வாசித்து கண்களில் நீர் வந்ததும் உணரலாம்.

பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்
(ஜிலீமீ றிவீறீரீக்ஷீவீனீs றிக்ஷீஷீரீக்ஷீமீss)
ஜான் பன்யான்.
ஜான் பன்யான் பாதிரி ஆக விரும்பினார். கருப்புத் தந்தைக்குப் பிறந்திருக்கலாம் என்பதால் வாட்டிகன் அனுமதி மறுத்த அதை மீறி பிரச்சாரம் செய்ததற்காக சிறையில் தள்ளியது. இன்று இந்த அற்புத நூலை வாசிக்காமல் யாருமே பாதிரியாக ஆக முடியாது. இயேசு கிறிஸ்து ஒரே ஆள் அல்ல என்பது உட்பட பல கருத்துக்கள். கிரிஸ்டியானா எனும் பதத்திலிருந்தே கிறிஸ்துவம் வந்திருக்கும் என்பதைக் காட்டும் கிரிஸ்டியானாவின் பயணங்கள் அலுப்பூட்டாத அதிர்ச்சி  வைத்தியமாய் மிளிர்பவை.

டைம் மெஷின் ஹெச்.ஜி.வெல்ஸ்
ஹெச்.ஜி.வெல்ஸ் அறிவியல் புனைகதை உலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். டைம் மெஷின் அவரது படைப்புகளிலேயே அற்புதமானது. காலத்தை தாண்டியோ, பின் நோக்கியோ போக முடிந்த கருவி ஒன்றில் நாயகன் கி.பி. 802701 எனும் ஆண்டிற்கு சென்று விடுகிறான். முதலாளியம் அப்படியே விடப்பட்டால் உலகின் கொடுங்கோண்மை எதில்போய் முடியும் என்பது குறித்த வெல்ஸின் விமர்சனம் சாட்டையாய் சொடுக்கப்படுகிறது. உழைப்பவர், அதை நம்பி வாழும் எப்பயனுமற்றவர் எனும்  இரண்டே இனம். அது மட்டுமே நாவல் அல்ல, முன்னும் பின்னும் செல்லும் காலத்தின் ஊடாக நாம் பயணிக்கும் அவரது உலகம் பல கேள்விகளை எழுப்புகிறது.

யுத்தமும் அமைதியும் லியோ டால்ஸ்டாய்.
உலகின் பிரமாண்ட நாவலான  இதை எழுதி முடிக்க முழு நேர எழுத்தாளரான டால்ஸ்டாய்க்கு ஏழாண்டுகள் ஆனது. 1812ல் ரஷ்யாவிற்குள் நெப்போலியனின் படைகள் ஊடுறுவுவதை வைத்து இது அமைக்கப்பட்டது. சாதாரண விவசாயக் கூலிகள், போர் வீரர்கள், போர்ப் படைத் தளபதிகள் அவர்கள் தம் யுவதிகள் அப்பாவி மக்கள் ஆகிய இப்பெரும் ஜனத் திரளின் ஒவ்வொரு அங்கத்தையும் யுத்தம் எப்படி பாதித்து ரத்தக்காடாக்குகிறது என்பதை தனது வரலாற்று யதார்த்தவாத பாணியில் ஆழமாய் உழுது செல்கிறார். இதை வாசிப்பவர்கள் இலக்கிய மகத்துவ மனதை கண்டிப்பாகப் பெறுவார்கள்

கரமாசோவ் சகோதரர்கள்
பியோதர் தாஸ்தோவஸ்கி.
உலகில் இதுவரை எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்தது என இதை கார்சியா மார்க்வெஸ் வர்ணிக்கிறார். தனது குற்றமும் தண்டனையும் போன்ற நாவல்கள் மூலம் ஏற்கெனவே அறியப்பட்டவரான ரஷ்ய இலக்கிய மேதை பியோதர் தாஸ்தோவஸ்கியின் எழுத்து கரமாசோவ் சகோதரர்கள் மூலம் உச்சம் பெறுகிறது. ஒரு கொலை. கொலையுண்டவருக்கு நான்கு மகன்கள். ஒவ்வொருவருக்கும் அவரைக் கொலை செய்யக் காரணங்கள் பல. யார் கொலையாளி? வழக்குமன்றம், வாழ்க்கை  குற்ற உணர்வு, அலுப்பு, எரிச்சல், ஆத்திரம் கடவுள் பற்றிய தேடல் என நாவல் பயணிக்காத திக்கில்லை. இது தான்  தாஸ்தொவஸ்கியின் கடைசி நாவல்.

இரட்டைத் திருகு சுழல்
(ஜிலீமீ ஞிஷீuதீறீமீ பிமீறீவீஜ்)
ஜேம்ஸ் டி.வாட்சன் (1968)
மனித உடலின் குரோமோசோம் களுக்குள் சத்தமின்றி சந்தடி இன்றி டி.என்.ஏ. எனும் உலகம் உள்ளது. இது தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வைக் கட்டளைகளாக பதிந்து வைத்துள்ளது. இதன் அமைப்பு குறித்த  ஆய்வு மிக நீண்ட வரலாறு கொண்டது. அதன் அமைப்பு இரட்டைத் திருகு சுழல் அமைப்பு என்பதிலிருந்து பல்வேறு விஷயங்களைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த நூல். நோபல் பரிசை வாட்சனுக்கு பெற்றுத் தந்தது.

கேன்டிட் (சிணீஸீபீவீபீமீ) வால்டேர் (பிரெஞ்சு)
1759ல் வெளிவந்த இந்தக் குறுநாவல் வால்டேர் எனும் மாமேதையை உலகிற்கு அறிமுகம் செய்தது. ஆங்கிலத்தில் Ôதி ஆப்டி மிஸ்ட்Õ என 1969ல் இது வெளிவந்தது. 1750களின் ஏழாண்டு யுத்தம் லிஸ்பன் பூமியதிர்ச்சி ஆகியவற்றை வைத்து எது நடந்தாலும் நன்மைக்கே எனும் லீப்னிஸியத்தை கடுமையாக சாடி வால்டேர் உருவாக்கிய சித்திரம் இது. எல்லாவற்றையும் கடவுளே பார்த்துக் கொள்வார் என முழு ஊர் கழிந்த பிறகும் இறுதி வாக்கியமாய் நாயகன் உதிர்க்கும் இடத்தில் வாசிக்கும் யாரும் கடவுளை உதிர்ப்பது திண்ணம்.

ராபின்சன் க்ரூசோ (ஸிஷீதீவீஸீsஷீஸீ நிusஷீமீ) (1719)
டேனியல் டெஃபோ
கப்பல் கவிழ்ந்து தனியாளாய் தப்பும் க்ரூசோ ஒரு தீவில் யாருமே இல்லாமல் தனித்துவாழும் வாழ்வை உயிரோட்டமாய்ப் பதிவு செய்யும் டேனியல் டெஃபோ, புயல் வீசும் கடலையும், அனல் கக்கும் பீரங்கிகள் வைத்திருக்கும் கடற்கொள்ளையர்களையும் அறிமுகம் செய்கிறார். உலகின் மனித வெற்றி என்பது அவனது சொந்த மக்களைத் தேடி அவர்களோடு கைகோர்க்கும் மகா உந்துதலில் உள்ளதை அடிக்கோடிடும் இந்த மகத்தான  எழுத்து பல நூற்றாண்டு கடந்தும் உயிர்ப்போடு உள்ளது.

மார்க்கோ போலோ பிரயாணங்கள்
(ஜிலீமீ  ஜிக்ஷீணீஸ்மீறீs ஷீயீ விணீக்ஷீநீஷீஜீஷீறீஷீ) மார்க்கோ போலோ
இருபத்தி நாலு வருடங்கள் கடல் வழியே பிரயாணித்து ஐரோப்பாவிலிருந்து  ஆசியாவிற்கு வந்து சேர்ந்த மார்க்கோ போலோ... பின் நாடு திரும்பி தனது அனுபவங்களை எழுத்தில் வடித்தார். மங்கோலியா, இந்தியா, சீனா என படையெடுத்த பிரெஞ்சு, போர்ச்சுக்கீசியர் முதல் ஆங்கிலேயர் வரை யாவரும் கையில் வைத்திருந்த கைடு இது. அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதை நாம் வாசித்து அறியலாம். மிக சுவாரசியமான புத்தகம்

கலிவரின் பயணங்கள் (நிuறீறீவீஸ்மீக்ஷீs ஜிக்ஷீணீஸ்மீறீs)
ஜொனாதன் ஷிப்ட்
கப்பல் மாலுமி கலிவரின் சாகசப் பயணங்கள் உலக இலக்கியத்தின் ஒப்பற்ற வரிசையில் வைத்துப் போற்றப்படுவதற்கு அதன் நம்பத்தகுந்த நடையும், நம்பத்தகாத  அதிர்ச்சி தரும் சம்பவங்களும் தான்.  ரொம்ப குட்டியான ரொம்பவும்  பெருத்த அல்லது எல்லாருக்கும் வால் முளைத்த எவ்வகை மனித சமூகத்திலும் அன்றாட வாழ்வுக்கான போராட்டமும் உழைப்பிற்கான இடமும் ஒன்றே என்பதுதான் இந்த நூலின் ஒட்டு மொத்த செய்தி.

அனைவருக்குமான உடல் இயங்கியல்
பா.பி.ஷெர்கெயேவ்
சோவியத் அறிவியல் மருத்துவ நூல் வரிசையில் தன்னிகரற்ற இடம் இந்த நூலுக்கு உண்டு. தமிழில் மருத்துவ நூல்களே இல்லாத 70களில் மீர் பதிப்பகத்தின் மூலம் தமிழகத்தில் சொற்ப விலைக்கு விற்கப்பட்ட பெரிய களஞ்சியம் இந்த நூல். இதன் எழுத்து முறை, இதில் உள்ள படங்கள்... விவரிப்புகள்... கண்டிப்பாக இதன் எளிமையை நமது கல்லூரிப் பேராசிரியர்கள் வாசிக்க வேண்டும்

காலத்தின் சுருக்கமான வரலாறு
(கி ஙிக்ஷீவீமீயீ பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ ஜிவீனீமீ)
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
சக்கர நாற்காலி விஞ்ஞானி என வர்ணிக்கப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் வாய் பேசவும், உடல் அங்கம் எதையும் அசைக்கவும் முடியாத மனிதர். இந்த புத்தகத்தை தன் கணினி நரம்பியல் வாய்ஸ்மேக்கர் மூலம் எழுதியுள்ளார். பிரபஞ்சம் தொடங்கியதிலிருந்து இன்று வரையிலான அறிவியலின் சுருக்கமான வரலாறு. கருங்குழிகள், பெருவெடிக் கோட்பாடு, சார்பியல் என அனைத்தைப் பற்றியும் மிகையற்ற நகைப்புணர்வுடன் பதிவுசெய்து அறிவியல் வரலாற்றியலின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார்.

தி நேக்கட் ஏப்
(ஜிலீமீ ழிணீளீமீபீ கிஜீமீ)
டெஸ்மண்ட் மாரீஸ்
மனிதக் குரங்கு இனத்தின் 193 வகைப்பாட்டில் மனிதனுக்கு மட்டுமே உரோமங்கள் உடலில் போர்த்தவில்லை. எனவே நேக்கட் ஏப் மனிதன் தான்! டெஸ்மண்ட் மாரிஸ் 1960ல் எழுதிய  புத்தகமாக இருந்தும் மனிதனின் தோற்றம் முதல்  அவனது நடத்தை பண்பாடு  கலாச்சாரத் தோற்றம், நாகரிகங்களின் அறிவியல் அவற்றோடு மிருகக் காட்சி சாலையின் விலங்குகளது நடத்தையை ஒத்திருப்பதை விலாவாரியாகக் காட்டும் நூல். மனிதக் குரங்குகளின் மீது இந்தப் பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தூண்டிய இந்த நூல் அழிந்து வரும் உயிரிகள் பற்றியும் பட்டியலிட்டது தான் சிறப்பே!

ஒற்றை வைக்கோல் புரட்சி
(ளிஸீமீ ஷிtக்ஷீணீஷ் ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீ)
மசனோபு ஃபுக்குயோகா
விவசாயம் இன்று முற்றிலும் நசுக்கப்பட்டு விட்டது. அல்லது நச்சாக்கப்பட்டு விட்டது.  வேதி உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் மண்ணை மரணிக்க வைத்துவிட்ட சூழலில் ஃபுக்குயோகாவின் இந்தப் புத்தகம், இயற்கை வேளாண்மையை முன்மொழிகிறது. 1975ல் வெளிவந்த இந்தப் பொக்கிஷம், ஏர் உழாமல், எந்த உரமும் போடாமல், தண்ணீர் கூட  தேங்க வைக்க மெனக்கெடாத போதும் இவை எல்லாம் செய்யப்பட்ட விவசாய நிலத்தின் அளவுக்கு தன் வயலிலும் விளைச்சல் இருந்ததைப் பதிவுசெய்து உலகை அதிரவைத்த புத்தகம்.

ஆபரேஷன் டார்க் ஹார்ட்!
(ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீ ஞிணீக்ஷீளீ பிமீணீக்ஷீt)
லெப்டினன்ட் கர்னல் அர்டோனி ஜாஃபர்

அமெரிக்க ராணுவ கண்காணிப்பு அரசியலின் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ரத்தக் கிளறியின் உள் ரகசியங்களை வெளியிட்ட புத்தகம். வெளிவந்ததும் அமெரிக்க அரசு எல்லாப் பிரதிகளையும் வாங்கி எரித்தது. வீக்கிலீக் முழுமையாய் அதைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டது. நியூயார்க் டைம்சும் அதனை வெளியிட்டு உள்ளது. நவீனக் கொடுங்கோண்மையின் உண்மையான அரசியல் பின்னணியில் அமெரிக்க ஏதாதிபத்தியத்தை தோலுரிக்கும் முயற்சி இது.

பார்வை இழப்பு
(ஙிறீவீஸீபீஸீமீss)
ஜோஸ் சரமாகோ
தனது ரிச்சர்டுரீஸ் இறந்த ஆண்டு மற்றும் ‘இடை இடையே மரணம்Õ ஆகிய நாவல்களைவிட ‘பார்வை இழப்பு’ நாவலுக்காகவே சரமாகோ அதிகம் பேசப்படுவார். 2010ல் காலமாக சரமாகோ போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு  நேர ஊழியராய், பத்திரிகையாளராய் வாழ்நாள் முழுதும் இருந்தார். 1995ல் வெளியான Ôபிளைண்டு னெஸ் நாவல் ஒரு நகரில் ஒவ்வொருவருக்காய் பரவும் பார்வை இன்மை நோய் பற்றியும் அதனால் ஏற்படும் (நகரே பார்வையற்றுப் போகும்) பெருங்களேபரம் குறித்தும் விவரிக்கும்  மாஜிகல் ரியலிச நாவல். மூட நம்பிக்கை, பணம்தேடும் வெறிÕ பதவி வேட்கை என பார்வை இழப்பு பலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

சமூக  ஒப்பந்தம் (ஷிஷீநீவீணீறீ சிஷீஸீtக்ஷீணீநீt)
ஜீன் ஜாக்குவஸ் ரூஸோ. (பிரெஞ்சு)
1762ல் ரூஸோ எழுதிய அவரது அபாரப் பதிவான இந்த நூல் பிரெஞ்சுப் புரட்சியின் பைபிள் என  வர்ணிக்கப்படுகிறது. சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் எனும் முழக்கத்தை முதலில் முன் வைத்த நூல். மனித உரிமைகள் குறித்த பிரதான  தத்துவத்தின் வரலாற்றிலேயே சாதாரண மக்களால் மனப்பாடமாக ஒப்பிக்கப்பட்ட எழுத்துப் பிரவாகம் இது.

உருமாற்றம் (விமீtணீனீஷீக்ஷீஜீலீஷீsவீs) காஃப்கா
1915ல் காஃப்கா படைத்த அற்புத நாவல் இது. விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் ஒரு இளைஞன் மனித அளவு கரப்பான் பூச்சியாக உருமாற்றம் அடைவதற்கு பின் விளைவுகள் வாழ்வின் அனைத்து நாடகத் தன்மைகள் மீதும் இரக்கமற்ற தாக்குதலை பின் நவீனத்துவ வழிநின்று சாட்டையாக சொடுக்குகிறது. 20ம் நூற்றாண்டின் குறுநாவல் வடிவத்தை ஸ்தாபித்த இது, இன்றும் தலைச்சிறந்த வாழ் விமர்சன எழுத்தோவியமாய் மிளிர்கிறது.

காலமும் இருப்பும் (ஙிமீவீஸீரீ ணீஸீபீ tவீனீமீ)
மார்டின் ஹைடெக்கர்
ஏற்கனவே இருப்பவை மீதான தொடர்ச் சியாய் வாழ்வதன் அவலத்தைச் சுட்டும் இருத்தலியலின் அடிப்படைப் பாடநூலாக இதை  முன்மொழியலாம். ஹிட்லரை ஆதரித்ததால் வாழ்நாள் முழுவதும் உலகால் புறக்கணிக்கப்பட்ட ஹைடொக்கர் மார்க்ஸ் முதல் கீகேகார்ட் வரை யாவரின் தத்துவக் கேள்விகளின் மீதும் தனது சாரத்தை எடுத்துச் செல்கிறார். இருத்தலியலைப் புரிந்து கொள்ள உதவும் ‘காலமும் இருப்பும்Õ நூல் தத்துவம் யாவற்றையும் துய்த்துணர முயன்று இந்த 2000 ஆண்டுகளில் தன்னைத் துய்த்துணர மறந்ததை சுட்டும் மயக்க எழுத்தாய் விரிகிறது.

அணுவின் உரு மாற்றம் (ஜிலீமீ ஜிக்ஷீணீஸீsனீutணீtவீஷீஸீ ஷீயீ tலீமீ கிtஷீனீ) (1933) எர்னஸ்ட் ரூத்தர்ஃபோர்டு
எர்னஸ்ட் ரூத்தர்ஃபோர்டு அணுவிற்கான அமைப்பை வழங்கியவர். அணுக்களின் தொகுதியை ஆழமாக ஆய்வு செய்து அவர் படைத்த அழகான புத்தகம் இது. இயற்பியலாளரான ரூத்தர்ஃபோர்டுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதன் வேடிக்கையான உருமாற்றம் இந்த அரிய காலப் பொக்கிஷத்தால் ஏற்பட்டதுதான். பிரித்தானிய வானொலியில் அவர் ஆற்றிய  அறிவியல் உரைகளின் தொகுதி இது என்றால் நம்புவது கஷ்டம்

தி ஜங்கிள் புக்
ருட் யார்டு கிப்ளிஸ்
ஷெர்கான் புலியும், ரிக்கி டிக்கி டவி - முயலும், மனித பெற்றோரை பிரிந்து வளரும் மோஹ்லி சிறுவனை ‘வளர்க்கும்‘ ஓநாய்களும் கரடி மாமாவும் உறவுகளின் அர்த்தங்கள் அனர்த்தங்களை ஆபத்தாய் பகிரும் நேர்த்தியாக காட்டின் நெகிழ்ச்சி கதை இது. இந்த புத்தகத்திற்காக கிப்ளிங் நோபல் பரிசு வாங்கவில்லை. பரிசு ‘கிம்‘ எனும்  நாவலை முன்வைத்து தரப்பட்டது என்றாலும் அவரது எழுத்துக்களிலேயே இதுதான் சிறந்தது. இந்தியக் காடுகள் பற்றிய ஆங்கிலேயரின் கதை இது எனும் பிரக்ஞை வாசிக்கும்போது ஏற்பட்டு பல இடங்களில் அதிசயிக்க வைக்கிறது.

இருப்பும் வெறுமையும்
(ஙிமீவீஸீரீ ணீஸீபீ ழிஷீtலீவீஸீரீஸீமீss) ஜீன் பால் சார்த்தர்
மனிதனின் முன்நோக்கிய திட்டம் கடவுளா வதுதான் என்று அறிவிக்கிறார் சார்த்தர். உலக மகாயுத்தம் உயிரின் அர்த்தங்களை அழித்து சொற்ப்பமாக்கிய அவலத்தின் பின்னணியில் சார்த்தரின் தத்துவச் சாரங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. ஒரு முழு  நுகர்வோர் அமைப்பின் அபத்த பொழுதுகளின் மீது Ôவாங்கு பயன்படுத்து தூக்கியெறிÕ என்பது மனிதனுக்கும் பொருத்தப் பாடாகும். இரக்கமற்ற மரத்த சமூகம் சந்தைப் பொருளாகும் என அன்றே பதிவு செய்திருப்பதை வாசித்துப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

காண்டர்பரி டேல்ஸ் (சிஷீஸீtமீக்ஷீதீuக்ஷீஹ் ஜிணீறீமீs)
சாவ்ஸர்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் நீள் கவிதை. அதுவரை யாவருமே லத்தீனில் தான் எழுதினார்கள். காண்டர்பரி நோக்கி செல்லும் புனித யாத்ரிகர் தங்கள் வாழ்வின் துக்கம் முதல் துரோகம், பகை, கொள்ளை.... என எப்போதும் உழன்று கடவுள் சிந்தனையைக் கோட்டை விடும் அவலத்தை சித்தரிக்கும் மிக அற்புதமான நடை சாவ்ஸருடையது. கவிதை படித்து சிரிக்க முடியுமா? முடியும் என்பதற்கான சாட்சி இது.

குவாண்டப் பாய்ச்சல்
(ஜிணீளீவீஸீரீ ஜிலீமீ னிuணீஸீtuனீ லிமீணீஜீ)
பிரட் ஆலன் உல்ஃப்
குவாண்டம் இயந்திரவியல் சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. மாக்ஸ் பிளாங்க்,  ஹைய்சன்பர்க்கர் முதல் ரிச்சர்டு பைன்மென் வரை தொடரும் துகள் இயற்பியலாளர்களும் நேனோ தொழில்நுட்ப வாதிகளும் கைகுலுக்கிய அந்த உயிரோட்டமுள்ள கதையை தனக்கே உரிய புள்ளி விவர பிரமிப்புகளுடன் ஆலன் உல்ஃப் முன் வைக்கிறார்.


இயற்கை மற்றும் சில கட்டுரைகள்
(ழிணீtuக்ஷீமீ ணீஸீபீ ஷிமீறீமீநீtமீபீ ணிssணீஹ்s)
எமர்சன் 1842
 இயற்கையை பாதுகாப்பதன் அவசியத் தோடு கடவுள் குறித்த தேடல் என்பது ஒருவருக்கு உள்ளே நிகழ வேண்டும் எனும் முழக்கத்துடன் எமர்சன் தொடங்குகிறார். இயற்கையிடமிருந்து மனிதனைத் தனியே பிரித்து அவனுக்கு ஒரு புனிதத்துவம் தந்த  மத அணுகுமுறையைக் கடுமையாய் விமர்சிக்கும் புத்தகம்.

என் வாழ்க்கை கதை
(ஜிலீமீ  ஷிtஷீக்ஷீஹ் ஷீயீ விஹ் லிவீயீமீ) ஹெலன் கெல்லர்
வாய்பேச வராது, காது கேளாது, கண் பார்வையும் கிடையாது எனும் ஊனங்களுடன் தவித்த ஹெலன் கெல்லர், பின் பிற புலன்கள் கொண்டு தான் சாதித்தது எப்படி, கற்று உலக அறிவு ஜீவிகளில் ஒருவராகி மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்காக அயராது குரல் கொடுத்து பெரும் போராட்டங்கள்  நடத்தி அறுபதிற்கும் மேற்பட்ட புத்தகங்கள் படைத்தது உட்பட தன் வாழ்வின் போராட்டங்களை அடுக்கிச் செல்கிறார். தனது ஆசிரியை அன்ன¤ சுல்லிவான் பற்றி எழுதும் அத்தியாயத்திற்காகவே இதை எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

எத்திக்ஸ் (ணிtலீவீநீs) பாருச் ஸ்பினோசா.
மார்க்ஸ் ஹெகலை மேற்கோள் காட்டுகிறார். ஹெகல் போற்றிய ஒரே தத்துவ ஆசான் ஸ்பினோசாதான். தெக்கார்த்தே மனம் உடல் இரட்டைத் தன்மையை உடைக்கும் ஸ்பினோசா தனது எத்திக்ஸ் நூலில் மனித நடத்தைகளின் ஒரே காரணி அவனது வளரும் சூழல் என்பதை நிறுவினார். ஸ்பினோசாவின் 44 புத்தகங்களையும் இன்றுவரை போப் தடை செய்தே வைத்திருக்கிறார். ‘முடிவெடுப்பவன் (ஞிமீtமீக்ஷீனீவீஸீவீst) என மனிதனை நிறுத்தும் ஸ்பினோசாவின்  தத்துவம் அனைத்து மக்களையும் வேற்றுமை இன்றி ஒன்றாக பாவித்த 17ம் நூற்றாண்டின் ஒரே தத்துவம் ஆகும்.

சட்ட மறுப்பு
(சிவீஸ்வீறீ ஞிவீs ஷீதீமீபீவீமீஸீமீ)
ஹென்றி தோரோ
சட்ட மறுப்பு என்பதை ஒரு போராட்டமாக முன் வைத்த இந்த நூல், ஒரு தனி மனிதனின் அரசுடனான உறவு குறித்த விவரணைகளைக் கொண்டது. காந்தியடிகள் தனது போராட்ட யுக்திகளை ஹென்றி தோரோவின் இந்தப் புத்தகத்தை வாசித்துப் பெற்றதாக அறிவிக்கிறார். தனது ஒத்துழையாமை இயக்கமும் வரிகொடா இயக்கமும் தோரோவிடமிருந்து பிறந்ததாய் எழுதினார் காந்தி.

தி டிவைன் காமெடி
(ஜிலீமீ ஞிவீஸ்வீஸீமீ சிஷீனீமீபீஹ்)
டாண்ட்டே அலிகிரி
(இத்தாலிய மொழி) (1321)
தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் டாண்ட்டே எழுதிய மாகாவியம். நரகம் நோக்கி தான் பயணிப்பது போலவும் வழியில் வரும் ஊர்கள் அங்கே சந்திக்கும் நிகழ்வுகள் மனிதர்கள் என சமகால அரசியல், சமூக வாழ்வைக் கிழிக்கும் சூப்பர் கதை. அப்போதே சாமியார்கள் பற்றி சகட்டுமேனிக்கு அவர்களை பஃபூன்களாக  சித்தரித்து சாத்துகிறார் டாண்ட்டே.

கனவுகளின் பகுப்பாய்வு
(ஜிலீமீ வீஸீtமீக்ஷீஜீக்ஷீமீtணீtவீஷீஸீ ஷீயீ ஞிக்ஷீமீணீனீs)
சிக்மண்ட் பிராய்டு
உள்ளப்பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் பிராய்டு ஏற்கனவே தனது ஆழ்மன விளக்கங்களால் பிரசித்தி பெற்றிருந்தவர். 1892ல் ஃபிராய்டு, மனிதனின் கனவுகள் குறித்த முக்கிய ஆய்வு ஒன்றை ஏழாண்டுகளுக்குத் தொடர்ந்து நிகழ்த்தி, 1899ல் Ôகனவுகள் மற்¢றும் அவற்றுக்கான பகுப்பாய்வுÕ எனும் நூலாக எழுதினார். கடவுளின் தலையீடே மனிதனுக்கு கனவு எனும் மாயையை இந்த நூல் உடைத்தெரிகிறது.

மேனோடாலஜி (விணீஸீணீபீஷீறீஷீரீஹ்)
வில்ஹெம் லீப்னிஸ்
ஜெர்மனியில் பிறந்து சிறுவயதிலேயே அறிவு ஜீவியாய் பிரகாசித்த லீப்னிஸ், நியூட்டன் கால்குலஸ்ஸை கண்டடைந்த அதே நாளில் தானும் கண்டு அதற்கு பெயரிட்டு அந்த கால கட்டத்தின் கணித ஜாம்பவான்களில் ஒருவராய் திகழ்ந்தவர். மேனோடாலஜி அவரது அரிய படைப்பு. கணிதம், தத்துவம், அறிவியல், வாழ்க்கை என்பனவற்றின் மீதான 17ம் நூற்றாண்டு மனிதர் மனநிலை இயங்கியவை பற்றி நாம் இதில் தரிசிக்கலாம்.

தி பிரின்ஸ் (ஜிலீமீ றிக்ஷீவீஸீநீமீ) மச்சியவெலி
தனது தலைவிதியை மனிதன் தானே  தீர்மானித்துக் கொள்ள முடியும் என்பதை ஏதோ ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு போல எழுதிச் செல்வார் மச்சியவெலி. அரசியலை வழி வழி வந்த பரம்பரை பதவிகளாய் அணுகாது உள்ளதை உள்ளபடி மக்கள் சக்தியை அரசியலின் அங்கமாக்கியவர் இவர். பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த Ôதி பிரின்ஸ் ஜெனிவா ஒப்பந்தம்Õ வரை கூட ஒரு மேற்கோள் நூலாக இடம் பெறுகிறது

அலிவர் ட்விஸ்ட் (ளிறீவீஸ்மீக்ஷீ ஜிஷ்வீst)
-சார்லஸ் டிக்கின்ஸ் சிலீணீக்ஷீறீமீs ஞிவீளீளீவீஸீs
ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கின்ஸ் படைத்த நாவல்களில் மிகச்சிறந்தது. சர்ச் பாதிரிகளின் அனாதை இல்லத்தில் அதுவரை வெளியில் கேட்காத அலறல்கள்... லண்டனின் அதுவரை வெளியில் தெரியாத குற்ற நிழல் உலகம், உலகின் அதுவரை வெளியே தெரியாத வறுமையின் கோரத்தாண்டவம், இன்னும் மனிதநேயம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை என எதையும் மிச்சம் வைக்காத பிரதி

பென்ஸீஸ் (றிமீஸீsமீமீs) பிளெய்ஸ் பாஸ்கல்
உலகின் முதல் கணக்கீட்டு இயந்திரத் தைக்(கால்குலேட்டர்) கண்டடைந்த போது பாஸ்கலுக்கு 14 வயது! தனது கணித அறிவியலை அன்றையகால தத்துவ வெளியோடு இணைத்து, விஞ்ஞான சாரம் ஒன்றை எழுதி அதற்கு பென்ஸீஸ் என பெயரிட்டார் பாஸ்கல். இதில் அதிகாரம் பற்றிய பாஸ்கலின் இடையீடு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது

தி கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்
(ஜிலீமீ  ரீக்ஷீணீஜீமீs ஷீயீ கீக்ஷீணீtலீ)
ஜான் ஸ்டெயின்பெக்
1930களில் ஐரோப்பா அனுபவித்த பொருளாதாரப் பின்னடைவை, மகா பாதக பஞ்சத்தை அமெரிக்க ஓக்லஹாமா ஊர்ப்புரம் வசிக்கும் ஒரு விவசாயக் குடும்பத்தின் அவலமாய் பதிவு செய்த அற்புதம் இந்த நூல். கலிஃபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து அங்கே தெருவில் கூலிகளாக வாழ சபிக்கப்படும் நமது விவசாயிகளின் அவலமும் தான். நம்பிக்கை இன்மை என்பதே வாழ்வானால், நகரத்தின் வீதி முனையில் படுத்து... எச்சத்தை உண்ணும் கொடிய எதார்த்தம் நாகரீகத்தின் நியான் விளக்குகளுக்கு தெரிவதில்லை.  புத்தகமே படித்திராத பலரை வாசிக்க வைத்த வறுமை குறித்த யதார்த்தப் பதிவான இந்தக் கதையைப் படமாக எடுக்க பலர் முயன்று தோற்றது தான் செய்தி.

உட்டோப்பியா
(ஹிtஷீஜீவீணீ) (1515)
சர் தாமஸ் மோர் (sவீக்ஷீ ஜிலீஷீனீணீs னீஷீக்ஷீமீ)
ஆங்கிலேய சட்ட வல்லுனரான தாமஸ் மோர் மிகப் பிரபலமான நீதிபதி. மன்னர் எட்டாம் ஹென்றியின் மணமுறிவு வழக்கைத் தள்ளுபடி செய்து சிறை சென்று அங்கே உட்டோப்பியாவை எழுதினார். அது ஒரு நாடு... பல நூறாண்டுகளுக்குப் பின் தோன்றும் அறிவியல் புனைகதைகளுக்கான ஆரம்பம் இது. ஆங்கிலேய அரசியலைக் கிழித்த அங்கதம்.. கற்பனாவாதத்தின் மறுபெயராகவே உட்டோப்பியா என்ற சொல் நிலைத்துவிட்டது.

உயிரிகளின் தோற்றம்
(ஜிலீமீ  ளிக்ஷீவீரீவீஸீ ஷீயீ ஷிஜீமீநீவீமீs)
சர் சார்லஸ் டார்வின்
1831ல் தொடங்கிய டார்வினின் ஹெச்.எம்.எஸ். பீகிள் கடல் பயணம் முடிந்தும் முப்பதாண்டுகளுக்கு தனது கருத்து எதையும் டார்வின் வெளியிடவில்லை. இந்த புத்தகம் ஒரு வழியாக 1859ல் வெளிவந்தபோது உலகிலேயே  அதிகம் சர்ச்சைக்கு உருவாகி விவாதிக்கப்பட்டது இயற்கை தனது சுயத் தேர்வு மூலம் இந்தப் புவி உட்பட உலகைக் கட்டமைத்தது. கடவுள் உலகைப் படைத்திருப்பதற்கான ஆதாரம் இல்லை எனப் பேசும் இந்த நூல் இன்றும் விற்பனையில் சாதனை கண்டு வருகிறது.

அடிமைமுறையிலிருந்து...
(ஹிஜீ யீக்ஷீஷீனீ ஷிறீணீஸ்மீக்ஷீஹ்) புக்கர்.டி.வாஷிங்டன்
கல்வி அறிவு மறுக்கப்பட்ட கருப்பு அடிமையாகப் பிறந்து சிறுவயதில் வயலிலும், கரிசுரங்கத்திலும் உப்பளங் களிலும் கொத்தடிமை வாழ்வை அனுபவித்த புக்கர், பிடிவாதமாய் சட்டத்திற்கு எதிராகக் கற்று, அமெரிக்க அடிமை முறையிலிருந்து போராடி விடுவித்துக்கொண்டு பின் நாட்களில் ஒரு பல்கலைகழகத் தலைமை ஏற்கிறார். தன்னைப் போல துயர் கொண்ட அடிமைகளை விடுவிக்கிறார். லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வியளிக்கும் பெரும்பணி ஏற்று கருப்பு அடிமைகளுக்கான கல்வி நிலையங்களைத் திறக்கிறார். அற்புதமான சுயசரிதை. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சுயமுன்னேற்ற பைபிளாக போற்றப்படும் புத்தகம்.

ஜூலைஸ் மக்கள் (யிuறீஹ்s றிமீஷீஜீறீமீ)
நாடின் கார்டிமர்
தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் எழுச்சிப் போராட்டத்தைப் பதிவு செய்த நாவல். நாடின் காடிமர் நோபல் பரிசு பெற்றார்.  இனப்படுகொலைகள் தொடர்ந்த அந்தக் கொடிய ஒடுக்குமுறை நாட்களில் மண்டேலாவின் சிறை நோக்கிய ஒரு இயக்கம் ஜூலை.. மக்கள் அதன் பின்னணியில் இயங்கும் இந்த ஒரு புத்தகம் அந்தப் போராட்ட வரலாறை முழுமையாய் தாங்கி நிற்கிறது.

மனித உடல் கட்டமைப்பு
(ஜிலீமீ திணீதீக்ஷீவீநீ ஷீயீ பிuனீணீஸீ ஙிஷீபீஹ்) (1543)
ஆண்டரியஸ் வெஸாலியஸ்.
இந்த ஒரு புத்தகம் பல நூறு மனித மூட நம்பிக்கைகளை ஒழித்தது. ரத்த ஓட்டம், எலும்பு முதல் ஜீரணம் வரை உடலின் மண்டலங்களை விவரிக்கும் இந்தநூல் மருத்துவஇயலில் ஏற்படுத்திய புரட்சி காரணமாக ஒரே நூற்றாண்டில் மனித ஆயுள் சராசரி 36லிருந்து 63க்கு உயர்ந்தது. ஆரம்பத்தில் இது வாட்டிகான் போப்பாண்டவரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது

இயற்கையின் இயக்கவியல்
பெடரிக் ஏங்கெல்ஸ்
மார்க்ஸின் தோழராக இருந்து மார்க்ஸியப் பேராசானாகவும் விளங்கிய ஏங்கெல்ஸின் முக்கியக் கட்டுரைத் தொகுதி. மனிதக் குரங்கிலிருந்து மனிதனானவன் உருவெடுத்த இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் உட்பட வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயக்கவியல் போன்ற அறிவியல் சிந்தனைப் போக்கின் வழியே இயற்கையை ஆய்வுக்கு உட்படுத்திய அரிய பொக்கிஷம் இந்த நூல். சார்லஸ் டார்வினையும், கார்ல் மார்க்ஸையும் தத்துவார்த்தமாய் கைகுலுக்க வைத்து உலகப் புரிதலின் மீது புதிய திசைகளைத் திறந்துவிட்ட கலங்கரை விளக்கு இது.

தி கால் ஆஃப்தி வைல்ட்
(ஜிலீமீ  சிணீறீறீ ஷீயீ tலீமீ கீவீறீபீ)
ஜாக் லண்டன்
1903ல் ஜாக் லண்டன் எழுதி வெளிவந்த புதினம். மனிதனின் ஆரம்பகாலத் தோழனான நாயின் நேசக்கதை. லண்டன் மாநகரின் அழுக்குக் குடிசைப் பகுதிகளின் வழியே தொடங்கும் ஜாக் லண்டனின் பயணம், ஆர்க்டிக் சமுத்திரவெளி வழியே அலாஸ்காவின் காடுகளுக்குள் நுழையும் போது தோழமை உச்சம் பெறுகிறது. பனிச்சறுக்கு வண்டிகளை இழுக்கும் பக் (ஙிஹிசிரி) இன் ஜீவமரணப் போராட்டம்... தொழிலாளர் வர்க்கம் முதலாளிய சுரண்டலை ஒடுக்கு முறையை மீறி வீறுகொண்டு வாழ்வாதாரத்தை தக்க வைக்கும் போராட்டமாய் மாறி அற்புதங்களை விதைக்கிறது.

நான் ஏன் என் தந்தையைப் போல இருக்கிறேன்
(கீலீஹ் மி ணீனீ றீவீளீமீ னீஹ் திணீtலீமீக்ஷீ?) என். லூச்னிக்
மீர் பதிப்பகம் (மாஸ்கோ) வெளியிட்ட மரபியல் தொடர்பான ஆரம்பப் பாடநூல். இந்தப் புத்தகம் அறிவியலை ஏதோ நம்வீட்டு சமையலறைக் கலந்துரையாடல் போல அவ்வளவு எளிமையாக சித்தரிப்பது பேரதிசயம். ஜீன் எனப்படும் மரபணுக்கள் எப்படி மனிதனின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை லூச்னிக் சுவைபட விவாதித்துச் செல்கிறார்


தி ஃபுஜிட்டிவ்
(ஜிலீமீ திuரீவீtவீஸ்மீ)
பிரமேடியா அனன்டா டோர்.
அனன்டா டோர் எழுதி இந்த நாவல் வெளிவந்த உடனேயே அமெரிக்கா உட்பட 17 நாடுகள் இதைத் தடை செய்தன. மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை வைத்து கட்டப்பட்ட நாவல் இது. லெனினின் யுத்தத்திற்கு ஆயத்தமாவது குறித்த ஆவணங்களின் தாக்கங்கள் பதிவாகின்றன. 1950ல் வெளி வந்திருந்தாலும் இந்தோனேசிய எழுத்தாளரின் மார்க்சிய அரசியல் பதிவான இந்த நாவல் இன்றும் இலக்கியச் சிறப்போடு விளங்குகிறது.

தி லார்டு ஆஃப் தி பிளைஸ்
(ஜிலீமீ லிஷீக்ஷீபீ ஷீயீ tலீமீ திறீவீமீs)
வில்லியம் கோல்டிங்
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மனியின் ஹிட்லர் படைகளால் பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவராய் பின் உயிரோடு மிஞ்சியவர் கோல்டிங். இந்த நாவலில் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு போகும் வழியில் யுத்தத்தில் சிக்கும் சிறுவர்கள் வழியே தன் வாழ்வின் அனுபவங்களை ரத்தமும் சதையுமாய் விவரிக்கிறார் கோல்டிங். கொலை பாதக செயல்களை எல்லாம் யுத்த சாகசங்களாக மனிதன் மாற்றுவதை இத்தனை யதார்த்தமாய் வரலாறு பதிவு செய்தது இல்லை.

பிராங் கைன்ஸ்டீன் மேரி ஷெல்லி
வெறும் 18 வயதில் ஷெல்லி அம்மையார் எழுதி மூன்றாண்டு கழித்து வெளிவந்த பிராங் கைன்ஸ்டீன் உலகின் முதல் நவீன அறிவியல் புனைகதையாக அறியப்படுகிறது. பல்வேறு  மனிதப் பிரேதங்களிலிருந்து பாகங்களை வெட்டி எடுத்து தைத்து அதற்கு உயிரளிக்கும் மோசமான விஞ்ஞானி பிராங்கைன்ஸ் டீன்... அந்தப் புதுவித உயிரி தன்னையே கொலை செய்ய தப்பி ஓடுகிறபோது செய்வதறியாது தவிப்பதை மிகுந்த சுவாரசியமாய் சித்தரிக்கிறார் ஷெல்லி. பிற்கால அறிவியல் புனை கதைகளுகான முதல் படி இது.

மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்?
எம். இலின், யா.ஷெக்கால்
காடுகளில் ஏனைய சகாக்களைவிட பலவீனமான மனிதன் அதை வெற்றிகொண்டு பேராற்றல் மிக்கவனான கதையை மனிதப் பண்பாட்டியல் வழி நின்று விளக்கும் முக்கிய அறிவியல் பெட்டகம் இந்த நூல். மீர் பதிப்பகம் (மாஸ்கோ) கொண்டு வந்த மக்கள் (அறிவியல்) பதிப்புகளில் ஒன்று. மார்க்சிய இயங்கியலின் வழி நின்று அறிவியலை அணுகும் நூலாசிரியர்கள் ஆழமான விவாதங்களைக் கிளப்புகிறார்கள்.

மொழியும் மனித மனமும்
(ஜிலீமீ லிணீஸீரீuணீரீமீ ணீஸீபீ tலீமீ விவீஸீபீ)
நோம் சாம்ஸ்கி
அமெரிக்காவின் அரசியல் குறித்த முழுப் புரிதலோடு இயங்கும் மாற்றுச் சிந்தனையாளர் எனப் போற்றப்படும் நோம் சாம்ஸ்கி ஒரு மொழியியல் வல்லுனர். ஏற்கெனவே ஸ்கினருக்கு மறுப்பு மூலம் தனது மார்க்சிய சிந்தனை மரபை முன் வைத்த சோம்ஸ்கி, இந்த நூலில் கட¢டமைப்பு வாதம், பின் நவீனத்துவம், மார்க்சியம் இவற்றின் பார்வையில் மொழியின் அரசியல் மனித மனங்களின் ஊடாக செயல்படும் வாதத்தை ஆழமான  கட்டுரைகள் வழியே விவரித்துச் செல்கிறார்

பிலவ்டு
(ஙிமீறீஷீஸ்மீபீ)
டோனி மாரிசன்.
ஓஹியோ (அமெரிக்கா) மாகாணத்தின் கருப்பு அடிமை முறை நிகழ்த்திய  கோர தாண்டவத்தை தனது மாந்திரீக யதார்த்த வாதத்திற்கு உட்படுத்தும் டோனி மாரிசன்... ஒரு தாய் அடிமையால் விற்க அழைத்துச் செல்லப்படும் தனது சொந்த மகளை அடித்தே கொல்வதை எழுதி உலகையே அதிர்ச்சியுறச் செய்தார். வரலாறு, பேய் உரையாடல், நாட்டுப்புறப் பாடல் என எல்லாமே ஒரே புத்தகத்தில் வந்து கலந்து வீசி நம்மை வீழ்த்துகின்றன. அடிமை முறையிலிருந்து விடுதலை நோக்கி தப்பும் சேத் கருப்பினப் பெண்களின் சித்திரவதைகளுக்கு வரலாற்றுச் சான்றாய் இருக்கிறாள்.

கடல்கள் மற்றும் கண்டங்களின் தோற்றம்
(ஜிலீமீ ளிக்ஷீவீரீவீஸீs ஷீயீ சிஷீஸீtவீஸீமீஸீts ணீஸீபீ ளிநீமீணீஸீs)
 ஆல்பிரட் வெக்னர்.
புவியின் தோற்றம், நிலைகளின் உருவாக்கம் குறித்து ஆல்பிரட் வெக்னர் 35 ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை விவரித்த அறிவியல் புதையல் இது. இமயமலை நீருக்குள்ளிருந்து எழுந்து வெளியேறியதை வர்ணிக்கும் அந்த ஏழாம் அத்தியாயம் பல நூற்றாண்டுக் கதையை ஒரு சில வார்த்தைகளில் பதிவுசெய்து அதிர வைக்கிறது.

நான் கிருஸ்த்துவன் அல்ல ஏன்?
(கீலீஹ் மி ணீனீ ஸீஷீt ணீ சிலீக்ஷீவீstவீணீஸீ)
பெண்ட்ரண்ட் ரஸ்ஸல்
 பெண்ட்ரண்ட் ரஸல் ஒரு தேர்ந்த நாத்திகர். வறட்டுக்கூச்சலும் அறிவியலற்ற வாதங்களும் புரியாமல் அமைதியாக  ஆழமாக சிந்தித்து வாழ்நாளில் 64 புத்தகங்கள் எழுதியவர். அறிவியல் மற்றும் கணித ஆன்மாவாக தனது எழுத்துக்களின் வழியே கிருத்துவ மதம் அதன் அதிகார துஷ்பிரயோகங்களைப் பட்டியலிடுகிறார் ரஸ்ஸல். இது அந்த மதத்தைப் பற்றியது மட்டுமே அல்ல என்பதை இதை  வாசிப்பவர்கள் உணர்வார்கள்.

ஹக்கில்பரி ஃபின்
மார்க் ட்வென்
 அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் கரை ஓரத்துக் கருப்பின அடிமை வாழ்வை உலகின் முன் வைத்தவர்தான் மார்க்ட்வென். ‘நிகர்’ எனும் நீக்ரோ அவமதிப்பு சொல்லை அன்றாட வாழ்வாக்கிக் கொண்ட ஒரு சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதி.  ஹக்கில் பரிஃபின் பாத்திரம், உலக இலக்கியத்தில் என்றும் மறக்க முடியாத இடம் பிடித்தவன். உலகிற்கே வட்டாரமொழி இலக்கியப் பாதை அமைத்துக் கொடுத்த பிரதி இது.


லெஸ் மிஸரபில்ஸ்
(லிமீs விவீsமீக்ஷீணீதீறீமீs) விக்டர் ஹ§கோ
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரான்ஸின் அவலங்களைத் தனது ரத்த எழுத்தில் வடித்துள்ளார் ஹ§கோ. ஜீன் வெழின் எனும் முன்னாள் கைதியின் 17 வருட வாழ்வு சந்திக்கும் பல்வேறு அற்புத பாத்திரங்கள் சமூக நீதி, மத துவேசம், வறுமை பலிகள்... பட்டினியால் செய்ய நேரும் குற்றங்கள் என ஏழைபாழைகளுக்கான வாதங்கள் முன் வைக்கும் இந்தப் புத்தகம் இன்றுவரை உலக இலக்கியங்களில் ஒப்பற்ற ஒன்றாய் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.


அங்கிள் டாமின் வாழிடம்
(uஸீநீறீமீ ஜிஷீனீs சிணீதீவீஸீ)
ஹாரியட் பிரீச்சர் ஸ்டவ்
1852ல் இந்த நாவல் வெளிவந்தபோது தான் அமெரிக்க கருப்பு அடிமை முறை குறித்த விஷயத்தையே
உலகம் அறிந்தது. வெள்ளையராய் இருப்பினும் பிரீச்சர்ஸ்டவ் அம்மையார் டாமின் கதையைக் கண்ணீர் மல்க சித்தரித்துள்ளார். அடிமை டாம் மற்றும் நான்கு வயது சிறுவன் ஹாரி இருவரும் கருப்பு அடிமை சந்தையில் விற்கப்படும் இடத்தில் தொடங்கும் இது ஹாரியின் தாய் எலிசாவும் டாமும் அடிமை முறையிலிருந்து தப்பிட முயன்று தோற்று டாம் உயிர்விடும் இடத்தில் முடிந்து ஒரு பெரிய போராட்டத்தை தொடங்கி வைத்தது.

டான் குயிக்ஸாட்
(ஞிஷீஸீ னிuவீஜ்ஷீtமீ)
செர்வான்டஸ்
நானூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்பானிய மொழியில் செர்வான்டஸ் எழுதிய முதல் சாகச நூல். செர்வாண்டஸ் கடன் அதிகமாகி சிறை
சென்றபோது ஒரு போலி போர்த் தளபதி டான் குயிக் ஸாட்டின் சாகசங்களை எழுதிப் பெரும் செல்வந்தர் ஆனார். இந்த நூல் தான் உலகின் முதல் நவீன நாவல். சாதாரண மனிதன் குறித்த சராசரி வாசகன் வாசிக்க முடிந்த  எளிய நடை தான் வரலாற்றில் நாவல் எனும் வடிவத்தைக் கண்டடைந்தது  என்பதற்கு இப்புத்தகம் ஒற்றை சாட்சி


சார்பியல் தத்துவம் என்றால் என்ன?
லே. லந்தாவூ, யு. ரூமர்
மைக்கெல்சன், மார்லே ஆய்வின் தோல்வியோடு தொடங்கிய ஐன்ஸ்டீன் 1905 என்ற ஒரே ஆண்டில் இயற்பியலின் முகத்தையே மாற்றினார். உலகில் புரியாத புதிராய் உணரப்பட்ட சார்புத் தத்துவத்தை எளிய மொழியில் சோவியத் விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். இவர்களின் இந்த நூல் மீர் பதிப்பக வெளியீடாக வந்த  இரண்டாண்டுகளுக்குப் பிறகு யு.ரூமர் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார். உலகிலேயே இவ்வளவு சவாலான ஒரு அறிவியல் கோட்பாட்டை இவ்வளவு எளிமையாக முன் வைத்த புத்தகம் இதுவாகத்தான் இருக்கமுடியும்

தி பிளேக் (ஜிலீமீ  றிறீணீரீuமீ)
ஆல்பிரட் காம்யு.
அல்ஜீரியாவின் ஓரான் எனும் துறைமுக நகரத்திற்குள் நுழைகிறது பிளேக் கொள்ளைநோய். அதன் ஆபத்துகளை நகர மக்கள் மெதுவாகவே உணரத் துவங்குகிறார்கள். முழுதாய் அதன்  கொடிய குணங்களை அறிந்த பின் அதை எப்படி எதிர்த்து வெளியேற்றுவது? அதனிடமிருந்து எப்படித் தப்புவது? என்பதை நகரம் முடிவு செய்யவேண்டும். 1947ல் வெளிவந்த இந்த நாவல் பிளேக் பற்றியதே அல்ல.. பிரான்ஸ் மீதான ஹிட்லரின் படையெடுப்பு பற்றியது என்பதை நாம் உணரும்போது போரின் கொடிய யதார்த்தம் காம்யுவின் மயக்க மொழியில் நம் ரத்தத்தை சூடேற்றும்.


நீலக் கிரகம்
(ஜிலீமீ ஙிறீuமீ றிறீணீஸீமீt)
லூயிஸ். பி. யங்
லூயிஸ் யங்கின் நீலக் கிரகம் புவியில் உருவான வரலாறை முன் வைக்கிறது. பிரபஞ்சம் புள்ளியிலிருந்து விரிவடைந்து நட்சத்திரக் கூட்டங்கள் கோள்கள்  உருவானதும் நமது புவியின் ஆதாரமான பெருங் கடல்கள் உருவானதும் மட்டுமல்ல. இந்த நூலின் சிறப்பு, இதுதான் முதன்முதலில் டைனோசர்கள் வாழ்ந்ததை ஜூராசிக் கட்டம் என அறிவித்து அறிமுகம் செய்தது என்பதாகும்

காட் டெலுஷன்
(நிஷீபீs ஞிமீறீusவீஷீஸீ)
ரிச்சர்டு டாக்கின்ஸ்
கடவுள் என்பது மாயை. மதம் ஒரு அபின் என மார்க்ஸ் அறிவித்தார். ரிச்சர்டு டாக்கின்ஸ் ஒரு படி மேலேபோய் இந்த பொய்த்தரவு ஏற்படுத்தும் அதிகார மையம், இதன் மனிதஇன ஆளுமை, ஒரு நிறுவனமாய் அதன் அதிகார கோரமுகம் என உள் அமிழ்ந்து உலகிற்கு மதம் தேவையில்லை என அறிவியல் பூர்வமாக இந்த நூலில் நிரூபிக்கிறார். டார்வின் வாதியான டாக்கின்ஸ், உலகின் உயிரிகளின் தோற்றம், பரிணாம இயல்,  இயற்வானியல், வேதிப் பொறியியல், நேனோ என அனைத்து அறிவியல் சாட்சிகளையும் துணைக்கழைப்பது தான் இந்த நூலின் சிறப்பு.


...என்றார் தலைவர் மாவோ
(ஜிலீமீ  னிuஷீtணீtவீஷீஸீs ஷீயீ சிலீணீவீக்ஷீனீணீஸீ விணீஷீ)
மா செ துங் (1966)
உலகிலேயே அதிகப் பிரதிகள் விற்பனையான புத்தகம் இது தான் என கின்னஸ் சாதனைத் தொகுதி அறிவித்துள்ளது. சீன கலாச்சார புரட்சியின் தந்தை தோழர் மாவோவின் உரைகள், கட்டுரைகள், நூல்கள், கவிதைகள் யாவற்றிலிருந்தும் தலைப்பு வாரியாக அவரது எண்ணங்களைத் தொகுத்துள்ளார்கள். 1966ல் வெளிவந்தது. ‘மக்களிடம் கற்று மக்களுக்கு’ எனும் மாவோவின் மார்க்ஸியம் மில்லியன் கதைக்கான புரட்சியாளர்களால் உலகெங்கும் போற்றிப் பின்பற்றப்படுகிறது.

அற்புத உலகில் ஆலிஸ்
(கிறீவீநீமீ வீஸீ tலீமீ கீஷீஸீபீமீக்ஷீறீணீஸீபீ)
லூயிஸ் கரோல்.
கணிதம், வரலாறு, அறிவியல், அரசியல், சமூக விமர்சனம் என எதையும் மிச்சம் வைக்காமல் ஆலீஸ் எனும் சிறுமி வழியே  ஃபேன்டசியாக அற்புத உலகை லுயிஸ் கரோல் கட்டமைக்கிறார். வெள்ளை முயல், பைத்திய குல்லாகாரன், நாடகமாடும் ஆமை, இளிக்கும் பூனை என பல பாத்திரங்களை குழந்தைகள் இன்றும் விரும்பி வாசிக்கிறார்கள்.