Tamil books

Wednesday 31 July 2013

அறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்





சு. பொ. அகத்தியலிங்கம்

மனித அறிவுத் தேடலின் முழுக்கதைஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
ஆசிரியர் : பில் பிரைசன், தமிழில் : ப்ரவாஹன்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,421, அண்ணா சாலை, தேனாம் பேட்டை,சென்னை - 600 018. 044 24332424
பக் :640,  விலை : ரூ. 400.

தமிழுக்கு புதிதாக வந்துள்ள காத்திரமான வரவு இந்நூல். A Short History of Nearly Everything என்கிற ஆங்கில நூலின் தமிழாக்கம்.“கிட்டத் தட்ட அனைத்தின் சுருக்கமான வரலாறு”என்பதே ஆங்கில நூலின் தலைப்பு. புரிதலுக்காகவும் - தமிழ் வாசகர் பரப்பைச் சென்ற டைவதற்காகவும் - “அனைத்தையும் குறித்த சுருக்க மான வரலாறு;மனித அறிவுத் தேட லின் முழுக்கதை” என விரிந்த தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் . நன்று. ஆறு பாகங்கள் , 30 அத்தியாயங்கள் , 640 பக்கங்களில் பிரபஞ்சம் குறித்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த உயிரினம் குறித்த - மனிதன் குறித்த - சரியான அறிவியல் உண்மைகளைச் சென்றடைய உலகம் நடத் திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல். அது மட்டுமா? இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2400கி.மீ குறுக்காக விசும்பில் நாம் இப்போது இருக் கிற இடத்தில் திரண்டு ஒருங்கிணைந்து புவியான செய்திமுதல் ; 440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியி லிருந்து பிய்ந்து நிலா உருவான கதை என “பிரபஞ் சத்தில் தொலைந்து போனது” என்கிற முதல் பாகம் மீவெடிப்பு குறித்து பேசுகிறது .

சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படிக் கண்டடைந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடி யது .மண்ணியலும் வேதியலும் எப்போது அறிவிய லின் முன்னணிக்கு வந்தது; டைனசார் கண்டு பிடிக்க நடந்த பெரும் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது; தோல்விகளும் ஏமாற்றங்களும் பலிகளும்பழி வாங் கல்களும் அறிவியல் வரலாற்றிலும் ஊடாடி இருக்கி றது ; இவற்றை எல்லாம் “புவியின் அளவு” என்கிற இரண்டாவது பாகம் நயம்பட உரைக் கிறது. ஆங்கி லம் தெரியா மல் ஸ்வீடன் மொழியில் எழுதியதால் ஷீலேவுக்கு அவர் ஆக்ஸிசனைக் கண்டுபிடித்த புகழ் கிடைக்க வில்லை. குளோரினை ஷீலேவே கண்டு பிடித்திருந்தாலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு பிடித்த ஹம்ப்ரி டேவிக்கே அந்த பெருமை சேர்ந்தது என்கிற உண்மை நம்மைச் சுடுகிறது .அறிவியல் மேதை நியூட்டன் உட்பட பல அறிவி யல் மேதைகளின் மறுபக்கம் இந்நூல் நெடுக நம்மி டம் சொல்லும் செய்திகள் பல . அறிவுத் தேடலும் மூடநம்பிக்கைகளும் சேர்ந்தே பயணித்திருக்கின்றன .தனிப்பட்ட பலவீனங்களை மீறி அறிவியல் உண்மை கள் வெளிச்சக் கீற்றுகளை பாய்ச்சியுள்ளன.அணு, குவார்க் , புவிநகர்வு என இயற்பியல் கூறுகள் பலவற்றில் அறிவியல் வரலாற்றை ஐன்ஸ்டீனில் தொடங்கிய அந்த புதிய சகாப்தத்தை மூன்றாம் பாகம் படம்பிடிக்கிறது. டால்டனின் அணுக் கொள்கை எவ்வாறு பிந்தைய கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது என்பது அறிவியல் கருத்து களும் ஒன்றையொன்று மோதி புதிய தடத்தில் முன் னேறுவதின் சாட்சியாகும்.“ஒரு நூற்றாண்டுக்கும் சற்றேகுறைந்தகாலம் வரை யிலும் புவியின் உள்ளே இருப்பது பற்றி, நன்கு விவரம் தெரிந்த வர்களுக்கும் கூட ஒரு நிலக் கரிச் சுரங்கப் பணியாளருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்திருக்க வில்லை”. என்று கூறுகிற நூலாசிரியர் எரிமலை உட் பட பல உட்கூறுகளை வியப்பூட்டும் விதத்தில் நமக்கு நான்காம் அத்தியாயம் நெடுக விளக்குகிறார். அறி வியல் வளர்ச்சி எல்லா துறை களிலும் ஏககாலத்தில் நடப் பதே. ஆனால் அளவீட்டில் கூடுதல் குறைவு இருக் கலாம். ஒவ்வொரு பாகமும் ஒருமையச் செய்தியைச் சொன்னாலும் பிற செய்திகளும் விரவியே இருக்கிறது.புவியில் 130 கோடி கன கி. மீ தண்ணீர் உள்ளது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதனை எட்டிவிட் டது. 1872 வரை கடல்கள் குறித்த முறையானமுதல் ஆய்வு உண்மையில் நிகழவில்லை . 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு 3 ஆண்டுகள் கடல் ஆய்வில் ஈடுபட்டது. எழு பதினாயிரம் கடல்மைல்கள் பயணம் செய்து; 4700 கடல் உயிரிகளைச் சேகரித்தனர். 19 ஆண்டுகள் உழைத்து 50 தொகுதிகளாக அறிக்கைகள் தொகுத்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டோரில் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகி நான் கில் ஒருவர் கடலில் குதித்தனர். இப் படி உயிர் கொடுத்து கண்டுபிடிக் கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வரலாறு ஐந்தாம் அத்தியாயத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறது .

உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர், நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்? உங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல“அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் நவீன தலை நிமிர்ந்த உடல் கொண்ட பிராணி ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறி பரவத் தொடங்கியது . 60000 ஆண்டுகளுக்கு முன்மனிதர்களிடையே மொழியே தோன்றியிருக்கவில்லை. நமது வரலாற்றை நாமறி வோமா?“திகைத்து நிற்கின்ற ஒரு குறுகிய காலத்தில் சிறந்த இந்நிலைமைக்கு வந்திருக்கிறோம் . நடத் தை யைக் கொண்டு நவீன மனிதர்களாகக் கருதப்படு வோர் , புவியின் வரலாற்றில் சுமார் 0.0001 சதவீதத் திற்கும் அதிக காலமாக இருக்கவில்லை” என்கிறார் நூலாசிரியர். ஆனால் இந்த சொற்ப காலத்தில் அறிவி யல் பயணித்திருக்கும் தூரமும் காலமும் பரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்நூல் அத னை நமக்குச் சொல்கிறது. பகுத்தறிவின் மீதான பற்று தலை நம்பிக்கையை பிரகடனம் செய்கிறது. மொழிபெயர்ப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். அது குறித்து தீர்ப்புச் சொல்ல நான் தேர்ந்த புலமையாளன் அல்லன். ஆனால் வாசகன் என்ற முறையில் மொழி பெயர்ப்பு எனக்குக் கடினமாகவேபடுகிறது . வழக்க மாக வேகமாக வாசிக்கும் பழக்கம் உடையவன் நான். என்னால் இந்நூலை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் திருப்பிப் படிக்கும் தேவை ஏற்பட்டது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த அரியகொடையை அனைத்து வாசகர்களும் அட்டியின்றி பருக மொழியாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என் பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருப் பினும் சமூகமாற்றத்திற்காக உழைக்க உறுதி பூண் டோர் அனைவரும் இந்நூலை ஒரு முறைக்கு இரு முறை - தேவைப்படின் இன்னொரு முறை என வாசித்து உள்வாங்கல் மிக அவசியம்.

நன்றி:தீக்கதிர்

1 comment: