Tamil books

Saturday, 31 August 2013

கெட்ட புத்தகம்

சா.கந்தசாமி


மனிதர்களில் சிலர் தங்களின் உச்ச பட்சமான அறிவால் சமூக, அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தத்துவம் பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். வேறு சிலர் கவிஞர்கள். என்ன எழுதுகிறோம் என்பது பற்றி அதிகமாக விளக்கிச் சொல்லாமல் எதைச் சொன்னார்களோ அதைப் பூரண அழகோடும் அமைதியோடும் எழுதி வைத்து இருக்கிறார்கள். பின்னது படைப்பு இலக்கியம். அது ஞானத்தால் எழுதப்பட்டது. முன்னது முழுக்க முழுக்க அறிவால் ஆராய்ந்து எழுதப்பட்டது. அதிகமாகப் பலன் சார்ந்தது. இன்னது செய்யத் தக்கது என்று சொல்வது, பிரச்சினைகளையும் அதன் காரண காரியங்களையும் ஆராய்ந்து தீர்வும் சொல்வதாகும்.
புத்தகங்கள் படிப்பதற்காகவே எழுதப்படுகின்றன. அதுமட்டும் அதன் பயன்பாடு கிடையாது. புத்தகம் சமூக மாற்றத்திற்கும் மனிதர்களின் மன மாற்றத்திற்கும் காரணமாக உள்ளன. சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பான்மையான காரியங்களுக்கு புத்தகங்கள் காரணமாக இருக்கின்றன. அதற்கு நாடு, இனம் மொழி என்பது கிடையாது. ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் அதற்குள்ளாகவே ஜீவிப்பது இல்லை. ஏனெனில் மனிதன் கருத்துக்களை எந்தமொழியிலும் அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்று இருக்கிறான்.
மனிதனை நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று பிரித்து வைத்திருப்பதுபோல - மனிதனால் எழுதப்பட்ட புத்தகங்களையும் நல்ல, புத்தகம் கெட்ட புத்தகம் என்று பட்டியல் இட்டு பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் அரசுகளின் பங்களிப்பு, நிறுவனங்களின் தலையீடு, தனிமனிதர்களின் கொள்கைகள் எல்லாம் உண்டு. எவையெல்லாம் அரசாலும் சமூகத்தாலும் அங்கீகாரம் பெற்று நடைமுறையில் உள்ளதோ அதனை மறுக்கின்ற அம்சங்கள் கொண்ட புத்தகங்கள் கெட்ட புத்தகங்களாகி விடுகின்றன. ஆனால் அவைதான் அசலான புத்தகங்கள் வாழ்கின்ற புத்தகங்கள் என்று குறிப்பிட வேண்டும்.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் கெட்ட புத்தகங்கள் என்று இருக்கும் பட்டியலில் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் சேர்த்து இருக்கிறார்கள். நூறு புத்தகங்கள் கெட்ட காரியங்கள் செய்ய  செய்யத் தூண்டுகின்றன என்கிறார்கள்.
கெட்ட புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற புத்தகங்கள் மகத்தான புத்தகங்களாகவும் உலகத்தின் சிந்தனையை மாற்றி அமைத்தவைகளாகவும் இருப்பது ஆச்சரியம். கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை, காரல் மார்க்ஸ் மூலதனம், மா-சே-துங் எழுத்துக்கள், டார்வின் பரிணாம வளர்ச்சி, சிக்மன் பிராயிடு கனவுகளின் மறு பக்கம், ஆகியவற்றோடு ரோசன் லூயிஸ் கார்ஸன் எழுதிய அமைதியான வசந்தம் இடம் பெற்று இருக்கின்றன.
1962-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அமைதியான வசந்தம் வெளிவந்தது. கட்டுரை புத்தகம் விலை ஐந்து டாலர். எழுதியவர் ரோச்சர் லூயீஸ் கார்ஸன் என்ற பெண்மணி. 1907ஆம் ஆண்டில் பிறந்தார். இலக்கியம் படிக்க விரும்பினார். ஆனால் கடல் சார்ந்த மெரீன் படிப்புப் படித்தார். அரசு சார்ந்த கடல், கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வுநிறுவனத்தில் பணியாற்றினார். இளம்பருவத்தில் இருந்தே இயற்கை மீது, தாவரங்கள், பறவைகள், நீர் வாழ், உயிரினங்கள் மீது அக்கறை கொண்டு இருந்தார். அவை தன் கண்களுக்கு முன்னால் மறைந்து வருவதின் காரண காரியங்கள் பற்றி ஆராய ஆரம்பித்தார்.
சூரியன் காய்கிறது. வெய்யில் அடிக்கிறது. மழை பொழிகிறது. செடி கொடிகள் பூக்கின்றன. பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன. மனிதர்கள் குழந்தைகள் பெற்றெடுக்கிறார்கள். ஈக்கள், கொசுக்களால் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. அதில் முக்கியமானது மலேரியா. ஆப்பிரிக்காவிலும், ஆசிய நாடுகளிலும் ஏராளமான மக்கள் மலேரியாவால் செத்துக் கொண்டிருந்தார்கள். மலேரியாவை ஒழிக்க வேண்டுமானால் முதலில் கொசுக்களைக் கொல்ல வேண்டும். அதற்குப் பல விஞ்ஞானிகள் உழைத்தார்கள். அவர்களில் ஒருவர் பால்ஹெர்மன் முல்லர். ஜெர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்திற்குப் புலம் பெயர்ந்தவர். அடிப்படையில் கெமீஸ்ட். அவர் 1939-ஆம் ஆண்டில் உயிர் உள்ளவற்றை கொல்லக்கூடிய நச்சுதன்மை கொண்ட திரவத்தைக் கண்டு பிடித்தார். Dichloro -Dipheny- Trichlo­rothane
என்று பெயர். சுருக்கமாக டிடிடி என்றழைத்தார்கள். அதற்கு காப்புரிமை பெற்றார். இரண்டாவது உலக யுத்தத்தில் போர் வீரர்கள் கூடாரங்களில் தூங்க முடியாமல் கொசுக்களால் அவதிப்பட்டார்கள். அங்கு டிடிடி அடிக்கப்பட்டது. கொசுக்கள் ஒழிந்தன.
எனவே ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் பெருமளவில் டிடிடி பயன்படுத்தப்பட்டது. மேலும் அது நவீன கண்டு பிடிப்புக்களில் உச்சமென்றும் உயிர் காக்கக்கூடியது என்றும் சொல்லப்பட்டது. 1948ஆம் ஆண்டில் பால் ஹெர்மன் முல்லர்க்கு மருத்துவத் துறையில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. அதனால் அவரும், அவர் கண்டுபிடிப்பும் பிரபல மாகியது.
டிடிடி-யை வேளாண்மைத் துறையில், பயிர் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகள் மீது தெளிக்க ஆரம்பித்தார்கள். அதனால் பூச்சிகள் மடிந்தன. மகசூல் கூடியது. எனவே கோதுமை வயல்கள், ஆப்பிள் தோட்டங்கள், திராட்சை தோட்டங்கள், வனங்கள், நீர் நிலைகள், அலுவலகங்கள் வீடுகள் என்று ஒவ்வொரு இடத்திலும் பூச்சிக்கொல்லியை அடிக்க ஆரம்பித்தார்கள். அதனால் பல்வேறு நிறுவனங்கள் வீரியம் மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்தைத் தயாரித்து விற்பனைக்கு விட்டன. வேளாண்மையின் நவீன உரத்தோடு பூச்சிக் கொல்லி மருந்தான டிடிடி-யும் சேர்ந்து கொண்டு விட்டது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மலேரியாவை ஒழித்துக் கட்ட டிடிடி-யை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். அதனால் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டது. அதோடு வனங்களிலும் நகரங்களிலும் இருந்த பலவகையான பூச்சிகள் இறந்தன. மருந்தடித்த மனிதர்கள் நோயுற்று மெல்ல மெல்ல இறந்தார்கள். ஆனால் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. பசுமைப் புரட்சியின் மகத்துவம் பற்றி, மகசூல் பெருகியது பற்றி அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது.
இருபத்தைந்து ஆண்டுகளில் அமெரிக்க விளை நிலங்களிலும், நீர் நிலைகளிலும், வனங்களிலும் அதிகமான அளவிற்கு டிடிடி- அடிக்கப்பட்டதால் , கொசு ஆகியவற்றோடு வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மண் புழுக்கள், தவளைகள், மீன்கள் உட்பட பலவிதமான நீர்வாழ் உயிரினங்கள் அமெரிக்க தேசிய சின்னமாகிய கழுகு உட்பட பலவிதமான பறவைகள் அழிந்துகொண்டே வந்தன.
கார்ஸன் தன் ஆய்வாலும், இயற்கை மீதும் சுற்றுப்புற சூழல் மீதும் கொண்ட அக்கறையாலும், மனிதர்கள் தங்களின் கண்டுபிடிப்பு மூலமாகவே வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள்; அது தொடருமானால் மனிதர்கள் கடினமான பிரச்சனைகளிலும் மீள முடியாமல் சிக்கிக் கொண்டு விடுவார்கள் என்ற தொனியில்தான் அமைதியான வசந்தம் எழுதினார். அதில் என் வீட்டுத் தோட்டத்தில் வந்து பாடும் ராபீனுக்கு விஷம் வைத்துக் கொல்ல யார்க்கும் உரிமை இல்லை என்றார். அது இயற்கை ஆர்வலர்கள் ஈடுபாட்டை போராட்டமாக்கியது. நச்சுப் பொருளைப் பயன்படுத்தி காரியங்கள் செய்து பணம் பண்ணுவது வாழ்க்கை இல்லையென பேரணிகள் நடத்தினார்கள்.
டிடிடி- உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் அமைதியான வசந்தம் கெட்ட புத்தகம். அதை எழுதிய ரோஸன் லூயிஸ் கார்ஸன் மனநோயாளி. விஞ்ஞான வளர்ச்சியின் விரோதி. லட்சக்கணக்கான மக்கள் மலேரியாவில் செத்துமடிவதைப் பற்றிக் கவலைப்படாமல் மண்புழு, பறவைகள், மீன்கள் பற்றி எழுதும் மக்கள் விரோதி என்று பேசியும் எழுதியும் இயக்கம் நடத் தினார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப். கென்னடி அமைதியான வசந்தம் படித்தார். அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள வல்லுநர்கள் கொண்ட விசாரணைக் கமிஷனை அமைத்தார். அதன் முன்னே கார்ஸன் ஆஜராகி, தான் மக்கள் விரோதி இல்லையென்றும், தீவிரமான நச்சுத்தன்மை கொண்ட திரவத்தை தெளித்து நன்மை புரியும் புழு பூச்சிகளையும் பறவைகளையும் அழிக்கக் கூடாது. எதற்கும் வரம்பு உண்டு என்றார்.
ஜனாதிபதி அமைத்த கமிஷன் டிடிடி- மீது கட்டுப்பாடுகள் விதித்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டது. ஆனால் வளரும் நாடுகளிலும், ஏழ்மையான நாடுகளிலும் மலேரியாவை கட்டுப்படுத்தவும் அதிகமான மகசூல் வேண்டியும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டிடிடி தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்று தடை விதிக்கப் பட்டது.
அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பதை முன்னெடுத்து சென்றவர்கள்போல இயற்கை பாதுகாப்பு, பல்லுயிர் வாழ்வதற்கு பூமி உரியது என்ற சித்தாந்தத்தைத் தன் எழுத்துக்கள் மூலமாக நிலைநாட்டி வந்த ரோசன் லூயீஸ் கார்ஸன் திருமணம் செய்துகொள்ளவில்லை. படிப்பதும், இயற்கையைப் பற்றி எழுதுவதுமாக வாழ்ந்து 1964ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் கண்டு காலமானார்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கான ஜனாதிபதி விருது மரணத்திற்குப் பிறகு கார்ஸனுக்கு வழங்கப்பட்டது. அமைதியான வசந்தம் எழுதப்பட்ட காலத்தைவிட நிகழ்காலத்திற்கு அவசியமான புத்தகம். அது பூமியின் பாதுகாப்பு பற்றி ஒவ்வொருவரையும் கவனம் கொள்ள வைத்துக்கொண்டு இருக்கிறது. அதனால் அது அதிகமான கவனம் பெறுகிறது. ஐம்பதாண்டுகளாக தொடர்ந்து படிக்கப்படும் வாழும் புத்தகங்களில் ஒன்றாக அமைதியான வசந்தம் இருக்கிறது. அதனை கெட்ட புத்தகம் என்று ஒதுக்கிவிட முடியாது. நல்ல, மிக நல்ல புத்தகம். எனவே உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.

( தமிழில் இந்நூலின் சுருக்கப் பட்ட வடிவத்தை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)

Friday, 30 August 2013

குழந்தைகளைக் கொண்டாடுவோம்


அண்மையில் படித்த புத்தகம் குழந்தைகளைக் கொண்டாடுவோம்
சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் ஷ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியது, பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியரின் மனநிலை, பாடம் நடத்துவதற்காக அவர் தயாரித்த முன் தயாரிப்புகள் - மனதாலும், செய்கையாலும் போன்றவற்றை விவரிக்கும் நூல். ஷ.அமனஷ்வீலி கைவசம் இருந்த 800 பக்க நாட்குறிப்பின் அடிப்படையில் , பள்ளி திறந்த 1வது நாள், 20,84,122,170-வது நாட்களிம் நிகழ்ந்தவைகளை படம் பிடித்துக் காட்டும் நூல்.

26.12.2011 விஜய் டி.வி.யில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் (ஆசிரியர்கள் & மாணவர்கள்) ,ஒரு மாணவர் "ஆசிரியர்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வந்து எதையாவது பேசி வகுப்பைப் போரடிக்கவைத்து காலத்தைக் கடத்துகிறார்கள் "எனக்குறிப்பிட்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் புரிந்துகொள்வார்கள் -ஆசிரியர் தயாரிப்போடு வந்திருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் 6 வயதுக் குழந்தைகள் புரிந்துகொள்ள இயலுமா? புரிய இயலாத குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்போகும்போது எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், அப்படிச் சென்றால் வகுப்பில் எவ்வளவு வெற்றி பெற முடியும் , எவ்வளவு தூரம் அந்தப் பிள்ளைகள் மனதில் இடம்பிடிக்க முடியும், இந்தப் புத்தகத்தைப் படித்தால் உணரலாம்.குழந்தைகள் பற்றி அக்க்றை உள்ள யாரென்றாலும் அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்,பெற்றோர்களாக இருக்கலாம், கல்வியாளர்களாக இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

"குழந்தைகள் என் ஆசிரியர்கள் " என்றுதான் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன என்பதனை உணர்த்துகிறார். " நாங்கள் பிறந்ததிலிருந்து நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள் " எனக் குழந்தைகள் கூறுவார்கள் என பக்கம் 16-ல் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன நம்மைச் சுற்றி . நல்லவர்களாக வரும் குழந்தைகளை கெட்டவர்களாக ஆக்குவதற்காக.

"குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்கவேண்டும்.அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காணவேண்டும்,என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும் " பக்கம் 39

" இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும்.சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அசைவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும் " -பக்கம் 45
"உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை,இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர் " பக்கம் 24

இப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களை இப்புத்தகத்தில் காட்டலாம். ஒரு மணி நேரத்திற்குமேல் இப்புத்தகம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், பெற்றொர்கள் முன் பேசலாம் அந்தளவிற்கு நிறைய அனுபவங்களை சொல்லும் நூலாக உள்ளது இப்புத்தகம். தமிழில் மறுவரைவு செய்த முனைவர் அ.வள்ளி நாயகம்,வ.அம்பிகா,மொழி பெயர்த்த டாக்டர் இரா.பாஸ்கரனை இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் பாராட்டலாம். இப்புத்தகத்தை என்னிடம் அளித்த(விற்பனை செய்த) மதுரை புத்தகத்தூதன் பா.சடகோபன் (9443362300) அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் அதில் வரும் திருப்தி ......................படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

வா.நேரு 
 28.12.11
 — in Chennai.

நூலின் தலைப்பு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ரஷ்ய மூலம் : ஷ.அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
தமிழில் மறுவரைவு : முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா
முதல் வெளியீடு : டிசம்பர் 2007,புக்ஸ் பார் சில்ரன்
விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம்,சென்னை-18 -044-24332924
மொத்த பக்கங்கள் : 158
விலை : ரூ 80

Thursday, 29 August 2013

சோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்


சு.பொ.அகத்தியலிங்கம்

இடதுசாரிகளைப் பொறுத்தவரை , அரசியல் என்பது முடியாது என்பதை முடித்துக் காட்டும் கலையாக இருக்க வேண்டும் ..... காது கொடுத்துக் கேட்கக் கற்றுக் கொள்வதும் மக்களுடன் உரையாடலில் ஈடுபடுவதும் முக்கியம்.. ஒரு சமூக சக்தியைக் கட்டியமைக்காமல் நம்மால் ஒரு அரசியல் சக்தியைக் கட்டியமைக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது ; இப்படி நறுக்குத் தெறித்தார் போல் நம்மோடு உரையாடுகிறார் மார்த்தா ஹர்னேக்கர் .
இவர் நம் வாசகர்களுக்கு புதியவரல்ல . இடதுசாரிகளும் புதிய உலகமும்  (பாரதி புத்தகாலய வெளியீடு 2010 ல் பிரசுரமானது)  எனும் புத்தகம் மூலம் அறிமுகமான சிலி தேசத்து கம்யூனிஸ்ட் . பாரீஸில் அல்தூசரோடு பயி ன்றுவிட்டு சிலியில் அலண்டேக்கு தோள்கொடுக்க 1968 ல் தாய் நாடு திரும்பியவர்.  அலண்டே ஏகாதிபத்திய சதியால் படுகொலை செய்யப்பட்ட சூழலைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர் . கியூபாவில் குடியேறி எழுத்தாளராய்; பத்திரிகையாளராய் லத்தின் அமெரிக்க வரலாற்று பின்புலத்தில்  இன்றைய நவீன தாராளமயச் சூழலை இடதுசாரிகள் வெற்றி கரமாக எதிர்கொள்ள வழிகாட்டியவர். இவர் ஓர் உளவியல் வல்லுநர்.
இவரின் போராட்ட வழிமுறைகள் எனும் இந்நூல் 56 பக்கங்கள்தான் ஆனால் விவாதிக்க, விடைதேட, வழிகாட்ட பின்பற்ற ஏராளமான கருத்துப் பொறிகளை தன்னுள் அடக்கியுள்ளது .


 வீடுவீடாகச் சென்று கையெழுத்துப் பெறுவதற்கு மேற்கொண்ட பிரச்சாரம் ஊடகத்தின் இருட்டடிப்பு முயற்சியை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது என்கிறார் . மறியலைவிட மக்களிடம் கையெ ழுத்து பெறு வது எவ்வளவு சிரமமானது , வலிமையானது என்பதை மக்கள் ஊழி யர்கள் அனுபவத்தில் நன்கு அறிவர். நமது அனைத்துப் பேச்சுகளும் செய்திகளும் ஒரே துணியிலிருந்து வெட்டப் பட்ட துண்டுகளாக இருக்கிறபோது , ஒரே சொல்லால் , ஒரே விதத்தில் எடுத் துச் சொல்லப்படுகிறபோது , ஒரே ஒலி பெருக்கியில் ஒரே தொனியில் உச்சரிக் கப்படுகிற போது , மேலும் பல ஆண்டுகள் செல்லச் செல்ல சுவரொட்டிகளும் முழக்கங்களும் மாறாதபோது , நமது சொற்கள் தமது மதிப்பை இழக்கின்றன . அவை எந்த ஒருவரின் கற்பனையையும் இதற்கும் மேலும் வெல்ல முடியாது.   ஹர்னேக்கரின் இந்த வரிகள் நம் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகத் தோற்ற மளிக்கவில்லையா? எழுச்சிகளா , புரட்சிகளா ? அரசியல் கருவியின் பாத்திரம் என்கிற முதல் அத்தியாயம் தொடங்கி - விருப்பங்களை உண்மை நிலை யுடன் குழப்பிக் கொள்ளாதீர் என்கிற 12 வது அத்தியாயம் முடிய ஒவ்வொரு அத்தி யாயத்தின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புக் கங்காய் நம் இதயத்தில் விழுகிறது .

 நம்பிக்கை பெறச் செய்யுங்கள் ; திணிக்காதீர்கள் என்று அவர் சொல்லும் போதும் சரி ; சிறுபான்மை சரியாக இருக்கலாம் என நுட்பமாக பகுத்துக்கூறும் போதும் சரி ; அரசியலையும் அரசியல்வாதிகளையும் மக்கள் சந்தேகப் படுவதற்கான காரணங்களை அலசும் போதும் சரி ; கட்சி இடதுசாரிகளையும் சமூக இடதுசாரிகளையும் ஒன்றிணைப்பதின் தேவை குறித்து வாதாடும் போதும் சரி ; ஒவ்வொன்றிலும் அவரது எழுத்து வீரியத் தோடு நம்முடன் உரையாடுகிறது  நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது . லத்தின் அமெரிக்க அனுபவங்களூடேதான் அவரது கருத்துகள் முகிழ்த்தாலும் ; நமது அனுபவங்களோடு உரசிப்பார்க்கத் தக்கனவாகவே உள்ளன . அப்படியே பொருத்த இயலாமல் போயினும் கற்றுக்கொள்ள, சோதித்துப் பார்க்க நிறைய செய்திகள் உண்டு .

படிக்கவும் விவாதிக்கவும் தகுதியான நூல் என்பது மட்டு மல்ல ; செயல் ஊனத்தைக் களைந்து செயல்வேகத்தை தூண்டிவிடும் வல்ல மையும் இந்நூலுக்கு உண்டு . சோதித்து  - உரசி -  அலசிப் பாருங்களேன் !


போராடப் புதிய வழிகள் , ஆசிரியர் : மார்த்தா ஹர்னேக்கர் ,
தமிழில் : நிழல்வண்ணன் ,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 
, பக் : 56 . விலை : ரூ. 40 

மதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நிறுவனங்களும் அரங்கு எண்களும்பதிப்பகம்
Stall No
அடையாளம்
78
ஐந்தினை பதிப்பகம்
128
ஆனந்த நிலையம்
20
அன்னம்
29
ஆப்பிள் பப்ளிஷிங்
34-35
அறிவுக்கடல் பதிப்பகம்
87
அருள்மிகு அம்மன் பதிப்பகம்
89
அருளானந்தி சிவம் புக்ஸ்
66-67
அருணா பப்ளிகேஷன்
172
ஏஷியன் எஜிகேஷனல் சர்வீஸ்
37
பி.ரத்தினநாயகர் அன் சன்ஸ்
149
பாலகங்கை பப்ளிகேஷன்
15
பாலாஜி பதிப்பகம்
5
பாரதி பதிப்பகம்
215
பாரதி புத்தகாலயம்
18-19
பிளாக்வோல் மீடியா
158
புக்ஸ் பார் சில்ரன்
124
பிரைன் மேப்பிங் அகாதமி
93
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
105
சென்னை புக்ஸ்
218-219
சிலிக்குயில் புக் வென்சர்
12-13
க்ரியா
177
தினமலர்
54-A
தினமணி
58
டிவைன் பொயட்
102
டவ் மல்டி மீடியா
63-64
எதிர் வெளியீடு
202
யுரேகா புக்ஸ்
76
பார்வட் மார்கெடிங்
195
காந்தி இலக்கிய சங்கம்
57
கங்காராணி பதிப்பகம்
94
கிரிஷ் புக் வோல்ட்
119-120
கீதம் பப்ளிகேஷன்
47
கிரி டிரேடிங் ஏஜென்சி
23
கீதா பிரஸ்
106-107
குளோபல் புக் அவுஸ்
55
உறிக்கின் பாதம்ஸ்
161-162
எச்பிஎம்சி
59
ஐபிஎசு புக்ஸ்
38
இன்போ பெல்
61
இன்போ மேப்
81-82
இஸ்லாமிக் பவுண்டேஷன் ட்ரஸ்ட்
144
ஜெய்கோ பப்ளிஷர்
203-204
காவ்யா
32
காலச்சுவடு பதிப்பகம்
173-174
கலைஞர் கருவூலம்
200
கண்ணதாசன் பதிப்பகம்
112-113
கண்ணப்பன் பதிப்பகம்
147-148
கற்பகம் புத்தகாலயம்
164
கார்த்திக் பதிப்பகம்
79-80
கருத்துப்பட்டறை
101
கவிதா பப்ளிகேஷன்
126-127
கயல்கவின் புக்ஸ்
51
கீழைக்காற்று
30
கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன்
167
குமரன் பதிப்பகம்
179-180
குமுதம் பப்ளிகேஷன்
70-71
லியோ புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
96-97
லியோ புக் பப்ளிஷர்
140-141
எல்கேஎம் பப்ளிகேஷன்
160
மகாராஜா புக் அவுஸ்
31
மகேஸ்வரி புத்தக நிலையம்
216-217
மயிலவன் பதிப்பகம்
114
மணிவாசகர் பதிப்பகம்
168-169
மணியம் பதிப்பகம்
210
மதி நிலையம்
152-153
மீனாட்சி புக் ஷாப்
138-139
மீனாட்சி புத்தக நிலையம்
10-11
மினர்வா பப்ளிகேஷன்
98
மெர்குரி சன் பப்ளிகேஷன்
26
முல்லை பதிப்பகம்
9
முத்தமிழ் பதிப்பகம்
163
நக்கீரன் பப்ளிகேஷன்
193-194
நர்மதா பதிப்பகம்
188-189
நாதம் கீதம் பப்ளிகேஷன்
136-137
நேஷனல் புக் டிரஸ்ட்
49-50
நட்ராஜ் பப்ளிகேஷன்
72
நற்றினை பதிப்பகம்
95
நற்றினை புத்தக நிலையம்
14
நவ்நீத் பப்ளிகேஷன்
21
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
3-4
நியூ ஹாரிசான் மீடியா
121-122
நியூ ஸ்டுடண்ட் புக் ஹவுஸ்
17
நிம்பஸ் எண்டர் பிரைஸ்
62
நிவேதிதா பதிப்பகம்
165-166
நிவேதிதா புத்தக பூங்கா
39
ஓம் சக்தி புக் ஹவுஸ்
170-171
ஓங்காரம் பதிப்பகம்
104
பல்லவி பதிப்பகம்
1
பாவை பப்ளிகேஷன்
6-7
பெரியார் சுயமரியாதை புத்தக நிலையம்
206
பிஎச்ஐ லேர்னிங்
43-44
பழனியப்பா பிரதர்ஸ்
16
பிரேமா பிரசுரம்
125
ப்ராம்ட் பப்ளிகேஷன்
176
புஸ்தக் மகால்
150-151
புதிய தலைமுறை
52
ரஹமத் பதிப்பகம்
115-116
ராஜ்மோகன் பதிப்பகம்
88
ராம்கா புக்ஸ்
145-146
ரிதம் புக்ஸ்
134-135
எஸ்.சண்டு அன் கோ
198-199
சாகித் அகாதமி
2
சக்தி பப்ளிஷிங் ஹவுஸ்
73-74
சந்தியா பதிப்பகம்
68-69
சந்து சைன்டிபிக்
187
சஞ்சீவியார் பதிப்பகம்
212
சர்வோதயா இலக்கிய பண்ணை
99-100
ஸ்காலஸ்டிக் இந்தியா
83
ஸ்கூல் ரோம் மல்டி மீடியா
53-54
சைன்ஸ்பார்க்
190
சீசன் பப்ளிஷிங் ஹவுஸ்
213-214
சேகர் பதிப்பகம்
77
செல்வி புக் ஷாப்
33
சங்கர் பதிப்பகம்
142
சிவம் புக்ஸ்
24-25
ஸ்ரீஆஞ்சநேயா பதிப்பகம்
201
ஸ்ரீபாலாஜி புக்செல்லர்
117-118
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
45-46
ஸ்ரீசிவ் எண்டர்பிரைஸ்
103
சிவகுரு பதிப்பகம்
156-157
சிக்ஸ்த் சென்ஸ்
154-155
சாப்ட்வியூ
191
ஸ்பைடர் புக்ஸ்
108-109
ஸ்ரீஇந்து பதிப்பகம்
85-86
ஸ்ரீஐஸ்வர்யா பப்ளிகேஷன்
92
ஸ்ரீமாரியம்மன் ஸ்டோர்
110-111
ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ்
175
ஸ்ரீராமகிருஷ்ணா மடம்
27-28
ஸ்ரீசிவா புக்ஸ்
36
சுபத்ரா புக் ஹவுஸ்
123
சுரா புக்ஸ்
178
சுரா காலேஜ் காம்படேஷன்
90-91
தமிழ்தேசம் வெளியீடு
8
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
84
தமிழினி
132-133
தாமரை நூலகம்
48
தி அலையன்ஸ் கம்பெனி
143
டயட் புட் பப்ளிகேஷன்
211
தி இந்து
56
திருமகள் நிலையம்
207-208
டிக் ஷாப்ட்
65
டைகர் புக்ஸ்
185-186
டுடோரஸ்
60
யூனிவர்சல் பப்ளிஷர்
129-130
உயிர்மை பதிப்பகம்
181-182
வஉசி நூலகம்
196-197
வைகறை பதிப்பகம்
75
வள்ளலார் புக் ஹவுஸ்
22
வம்சி புக்ஸ்
205
வனிதா பதிப்பகம்
192
விடியல் பதிப்பகம்
42
விஜயபாரதம்
131
விகடன் மீடியா சர்விஸ்
40-41
விழிகள் பதிப்பகம்
209
ஏகம் பதிப்பகம்
183-184