Tamil books

Friday 23 August 2013

அணு ஆற்றல்


 இந்தியாவில் இன்று மிக அதிகமாக விவாதிக்கப்படுகிற அணு ஆற்றல் தொடர்பாக மிகுந்த நிதானத்துடன் எழுதப்பட்டுள்ள நூல். மனித உடல் தொடங்கி, விமான நிலையங்களில், கடற்கரையில் இடிந்த கரையில், கூடங்குளத்தில் எல்லா இடங்களிலும் கதிர்வீச்சு இயற்கையாய் உள்ளது. அதன் சராசரி அளவு ஆண்டிற்கு 2400 மைக்ரோ சிவர்ட். ஆனால் அணுமின் நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்பு 1000 மைக்ரோ சிவர்ட்தான்; இந்தியாவிலும், உலகெங்கிலும் இயங்கும் அணுமின் நிலையங்களிற் பெரும்பாலானவை இந்த வரம்புகளைவிட மிக மிகக் குறைவான கதிர்வீச்சுடன்தான் இயங்குகின்றன என்கிறார் ராஜன். இந்திய அணு ஆற்றல் திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது என்ற உண்மையை வரைபடங்கள் புள்ளி விவரங்களையும்  விளக்குகிறார். சாதகம் பாதகம் என இரண்டு பக்க நியாயங்களையும் முன் வைத்து, மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் உலகமயமாக்கல் கொள்கையையும் இவற்றுடன் சேர்த்துப் பார்த்தால்தான் உண்மை தெளிவாகும் என நிறுவுகிறார். அமெரிக்க அரசின் தொங்குசதையாகிவிட்ட அரசும், எந்தவித தொலைநோக்குப் பார்வையுமில்லாத அணு ஆற்றல் ஒழுங்கமைப்பு வாரியமும் (கிணிஸிஙி) மக்களின் முன்பு பேச மறுக்கிற மறைக்கிற உண்மைகளை அம்பலப்படுத்துகிற நூல். அணு ஆற்றல் ஒழுங்கமைப்பு வாரிய முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன், இந்தியாவில் இப்போதைய அணு உலைகள் ஒவ்வொன்றிலும் 'பாதுகாப்பு லட்சணங்கள்' பற்றிய உண்மைகளைத் தந்திருக்கிறார். 'இதுதான் நிலை என்றால் இப்போதைய ஏஇஆர்பி சான்றிதழை நம்பி அணு உலையைத் துவக்க அனுமதிப்பது பெரும்பகுதி மக்களின் நலன் குறித்து எடுக்கவே கூடாத அபாயகரமான முடிவாகும் என்றும் அதே சமயம் மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டத்தை வகுத்துத் தந்த ஹோமிபாபாவின் அணுகு முறைப்படி புதிய திட்டங்களை தன்னாட்சி பெற்ற ஒழுங்குமுறை வாரியத்தின் கீழ்  வெளிப்படையான தன்மையுடன் நிறைவேற்றுமாறும் வலியுறுத்துகிறது ராஜனின் நூல்.

அணு ஆற்றல்
- ப.கு. ராஜன்
வெளியீடு. பாரதி புத்தகாலயம் ரூ.25

No comments:

Post a Comment