Tamil books

Friday, 22 April 2011

வாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட்டுவோம்

 எஸ்.வி.வேணுகோபாலன்
ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.


புத்தகங்கள், அவற்றை எழுதுபவரது  மனசாட்சி ஆக இருக்கலாம், ஆனால் அது வாசிப்பவரின் குரலில் கேட்கிற மாயாஜாலம் நிகழ்கிறது. கைகளால் விதைப்பாடு செய்வதைக் கண்களால் அறுவடை செய்கிறோம், அது என்ன என்று வழங்கும் குழந்தைகளுக்கான புதிர் சொல்வது போல நூதன அனுபவம் வாசிப்பு.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டிய சத்துணவு, வாசிப்பின் அருமை.  தங்களைப் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்கும் குழந்தைகள் செய்யத் துடிக்கும் முக்கிய வேலைகளில் இந்த வாசிப்பு இருப்பதை, 'தத்தக்கா புத்தக்கா' என குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். 

நூலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற (சீர்காழி) எஸ் ஆர் ரங்கநாதன் (1892 -1972) அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துப் போய் சாதாரண மக்களிடையே வாசிப்பின் இன்பத் திளைப்பை ஊட்டினாராம். தமது  புத்தகங்கள் மண்ணெண்ணையை விடவும், தீப்பெட்டிகளைவிடவும் மலிவான விலைக்கு மக்கள் கைக்குச் சென்று சேர வேண்டும் என்ற மகாகவி பாரதிக்கு, மக்களிடையே கனல் மூட்டும் நோக்கம் இருந்ததை இந்த வாக்கியம் விளக்குகிறது.  ஓர் அரிய அறிவுஜீவியோடு உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேள் என்கிறார் அறிஞர் எமர்சன்.  நம்பிக்கை உலகின் வாசல் திறப்பாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  இருளைப் போக்குவதாக மட்டுமல்ல, சோர்வின் உடைப்புக்கும், சோகத்தினின்று ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்..... நூல்கள் எத்தனை எத்தனை வல்லமையைத் தேக்கிக் கொண்டு அடக்கமான கையிருப்பாக இருக்கின்றன. 

ஆன்மீக அன்பர்கள் வாசிக்க இலகுவான சிறு சிறு வாழ்த்துச் செய்யுள்கள், பதிகங்களை அச்சிட்டு குடும்ப நிகழ்வுகளின் போது வழங்கும் மரபு உள்ள நமது சமூகத்தில், அண்மைக் காலமாக வாசிக்கத் தக்க பல சிறு நூல்களை முற்போக்கு எண்ணம் கொண்டோர் பலர் தமது இல்ல நிகழ்ச்சிகளின் போது தாம்பூலப் பையில் வைத்தோ, அதுவே தாம்பூலமாகவோ அளித்து வரும் பாராட்டுக்குரிய நிகழ்வுகள் பெருகி வருகின்றன.  மிக அரிய விவாதப் பொருள்களைக் கூட எளிய எழுத்துக்களாய் மலிவான விலையில் நூலாக்கம் செய்து வரும் பாரதி புத்தகாலயத்தின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய தூண்டுகோலாயிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.  திருவிழாக்களுக்குச் சென்று வருகிற உள்ளக் களிப்போடும், கம்பீரத்தோடும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடி வருவதும் களிப்புற வைக்கும் செய்திகளாகும்.  

உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினமான (நினைவு தினம் என்றும் கூறப்படுகிற) ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுவது வாசிப்பின் கொடியை தமது வீடுகளில் உயர்த்திக் கட்டியிருப்பவர்களுக்கு உவகை ஊட்டுவதாகும்.  எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்லப்படுகிற இந்த ஏப்ரல் 23 , ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாநிலத்தில் புனித ஜார்ஜ் தினம் என்று அழைக்கப்படுவதாகும்.  அன்றைய தினம் காதலுக்கான அடையாளமாக நூல்கள் ரசவாதம் புரியும் அற்புதம் ஆண்டுதோறும் நிகழ்கிறது.  காதலன் வழங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களுக்கு ஈடாக, பதிலுக்குக் காதலிகள் நூல்களைப் பரிசளித்துத் தங்களது இதயத்தை அதோடு சேர்ந்து ஒப்படைத்து விடுவார்களாம்.  வீதிகள் எங்கும் ஆங்காங்கு தற்காலிகக் கடைகள் போட்டு புத்தக விற்பனையும், ரோஜா விற்பனையும் அமோகமாக நடக்குமாம்.  நாளின் முடிவில், நாற்பது லட்சம் பூக்களும் எட்டு லட்சம் புத்தகங்களும் கை மாறி இருக்குமாம்.  கையில் ரோஜா ஏந்திச் செல்லாத பெண்ணையே பார்க்க முடியாத அந்த நாளில், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளிலேயே நடந்திருக்குமாம். 

எந்தப் புத்தக தினத்தின் போதும் என்னால் மறக்க இயலாத ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.  அந்த மனிதரின் கதை போல் என்னை வாசிப்பை நோக்கி எப்போதும் ஈர்க்கத் தக்க இன்னொரு செய்தி இதுவரை கிடைக்கவும் இல்லை. டாக்டர் டார்செம் என்கிற அந்த அற்புத எழுத்தாளர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருபத்து நான்கு புத்தகங்களுக்கு மேல் எழுதியும் தொகுத்தும் வழங்கியிருப்பவர்.  உலக பஞ்சாபி எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ அபார வெற்றி பெற்று இயங்கியவர்.  இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாவட்டப் பொருளாளர்.  சாகித்திய அகாதமி குழுவில் பணியாற்றியவர்.  ஆனால், கண் பார்வை அற்றவர்! 

பிறவியில் இருந்தே படிப்படியாகக் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருந்ததைச் சிகிச்சைகள் பல மேற்கொண்டும் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்று உணர்ந்த பதினான்காம் வயதில் அவர் படித்துக் கொண்டிருந்தது, ரஷ்ய புத்தகம் ஒன்று.  'வீரம் விளைந்தது' என்ற மகத்தான அந்தப் புதினத்தைப் படைத்த  நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி அவர்களும் பார்வையற்றவர்தான்.  வேக வேகமாக வாசித்து முடித்த அந்த நூலில் இருந்து கிடைத்த பெரும் உத்வேகமும், தன்னம்பிக்கையும், வாழ்வின் ஒளியும் டார்செம் அவர்களை அதற்குப் பின்னர் பஞ்சாபி, இந்தி, உருது மூன்று மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற வைத்தது.  மூன்று மொழிகளிலும் எழுத்தாக்கன்களைப் புனைய வைத்தது.  கடந்த ஆண்டு, அவரது தன் வரலாற்றை "திருதராஷ்டிரன்" என்ற பெயரில் நூலாகவும் ஆக்க வைத்திருப்பது, இந்த வாசிப்பின் விளைச்சல் தான்!  

அடுத்தடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் பெரும் பரிசை உணர்த்தும் இந்த உற்சாகச் செய்திகளோடு விடியட்டும், இந்த புத்தக தினமும்.  

நன்றி: புதிய ஆசிரியன்: ஏப்ரல் 2011

Thursday, 21 April 2011

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்

மு. வளர்மதி


ஒரு நாட்டின் முதல் அடையாளம் மொழி. மொழியைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்ப-தும் நாட்டின் இன்றியமையாத தேவையாகும். பாமரர் முதல் புலவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஆட்சியாளர்கள் வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொன்று தொட்டுப் பங்களிப்புச் செய்து வருவதால் இன்று தமிழ் ‘செம்மொழி’ என்ற பெருமைக்குரிய ஒன்றாக விளங்குகிறது.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள். இருபதாம் நூற்றாண்டில் விடுதலைக்-குப் பின் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தம் தாய்த்தமிழை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டு உலகத் தமிழ் மாநாடுகளையும், தமிழ் ஆய்வு நிறுவனங்களையும் தொடங்கினர். அவ்வாறு தொடங்கப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1968ஆம் ஆண்டு சனவரித் திங்களில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னை-யில் நடைபெற்றது. அம்மாநாட்டில் ‘தமிழிற்கு உயர் மைய ஆராய்ச்சி நிறுவனம்’ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்னும் கருத்தைத் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிஞர்கள் முன் எடுத்துரைத்தார். அதே வேளையில் பூனேயில் உள்ள ‘தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்தில்’ இயக்குநராக இருந்த டாக்டர் கத்ரே என்னும் அறிஞர் உலகத் தமிழாராய்ச்சி நி-றுவன அமைப்பிற்கு உரிய முன் வரைவுத்திட்டம் ஒன்றை அக்கருத்தரங்கில், ஆய்வுரையாக வழங்கினார். அத்திட்டத்தில், பரந்துபட்ட நிலையில், தமிழ்மொழி, இலக்கியப் பண்பாட்டு ஆராய்ச்சியை நடத்துவதற்குரிய நெறிமுறைகளை அவர் வகுத்தளித்தார்.
மாநாட்டின் நிறைவுவிழாவில், அத்திட்டத்-தினை அறிஞர் அண்ணா மகிழ்வுடன் வரவேற்றார். அவர் தம் உரையில்,
“பிரான்சு நாட்டிலுள்ள பிரெஞ்சு மொழிக் கலைக்கழகத்தைப் போன்ற நிலையில் நாம் அதனை உருவாக்க வேண்டும். அக்கலைக் கழகத்தின் அடிப்படைகளையும் நெறிமுறை-களையும் பின்பற்றி இங்குத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைப்போமானால் சிறப்புமிகு, ‘இந்தியக் கலைக்கழகத்தை’ அல்லது ‘தமிழகக் கலைக்கழகத்தை’ நாம் உருவாக்க இயலும். அப்பொழுதுதான், நமது தமிழ்மொழி ஆராய்ச்சிக் கழகம் உலகளாவிய நிலையில் வீறுடன் விளங்க இயலும்’’ என்று அவர் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில்தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவ வேண்டும்’ என்னும் எண்ணம் முதன்முதலாக எழுந்தது. இந்த எண்ணத்தின் விளைவாக இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோவின் உதவியை அறிஞர்கள் நாடினர். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாக் கொண்டா-டும் இத்தருணத்தில் இந்நிகழ்வை நினைவூட்டு-வது பொருத்தமானதாகும். அவருடைய இம்முயற்சிக்கு யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த மதிப்பிற்குரிய டாக்டர் மால்கம் ஆதிசேஷையா, மற்றும் அறிஞர் தனிநாயகம் அடிகள் ஆகியோரின் செயலூக்கம் மிக்க நடவடிக்கைகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கம் பெற்றது.
நிறுவனத்தின் நோக்கம்
தமிழ் வளர்ச்சிக்குரிய அனைத்துப் பணிகளை-யும் தக்க முறையில் செய்வதற்கான சூழ்நிலை-களை உருவாக்கி _ தமிழறிஞர்களின் வழியாக, ஆர்வலர்களின் வழியாக இயலும் வகைகளி-லெல்லாம் வாய்ப்புகளை உருவாக்கி _ உலகளா-விய நிலையில் தமிழின் சிறப்பை உணர்த்த வேண்டும் என்பது இதன் தலையாய நோக்க-மாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழாராய்ச்சியில் ஈடுபாடுடைய அறிஞர்களின் ஒத்துழைப்புடன், பல்வேறு அறிவுத்துறை-களுடன் இணைந்த ஆராய்ச்சியைப் போற்றி வளர்ப்பதும், பிற மொழியாளர்களுக்குத் தமிழ்-மொழியைக் கற்பிப்பதும் இதன் முதன்மையான நோக்கமாகும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்விப்பணி, ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, ஓலைச்-சுவடிப் பதிப்புப்பணி, கருத்தரங்கப் பணி, வெளி-யீட்டுப் பணி என்ற பல்வேறு தளங்களில் உலக-ளா-விய நிலையில் தமிழ் வளர்ச்சிக்குரிய பணி-களைச் செய்து வருகிறது.  இன்றுவரை 600க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. இவை பல்வகைப்பட்டன:
1. தமிழ் இலக்கியக் கொள்கைத் தொகுதிகள் 2. தொல்காப்பிய உரைவளம் 3. தமிழர் பண்பாடு 4. தமிழர் மரபுச் செல்வம் 5. சுவடிப் பதிப்புகள் 6. உலகத் தமிழ் எழுத்தாளர்கள் 7. ஊர்ப் பெயராய்வு 8. தமிழ் வளர்ச்சி _ ஆண்டு வாரியாக 9. தொகுப்பு நூல்கள் _ ஒரு பொருள் பற்றியன 10. வெளிநாட்டறிஞர்களின் சொற்பொழி-வுகள் 11. நிறுவன ஆய்வுகள் 12. அகராதிகள்
13. அறக்கட்டளைச் சொற்பொழிவு வெளியீடுகள் 14. ஆய்வுக் கோவைகள்
15. மொழிபெயர்ப்பு நூல்கள் என்பனவாக இவ்வெளியீடுகள் அமை-கின்றன.
தமிழ் இலக்கியக் கொள்கைத் தொகுதி எனும் வரிசையில் 9 நூல்கள் வெளியிடப்பட்-டுள்ளன. இத்தொகுதிகள் தொல்காப்பியம் முதல் புதுக்கவிதை ஈறாக இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் போக்குகளை வெளிப்படுத்து-கின்றன. தமிழின் முதல் நூலான தொல்காப்பி-யத்தின் உரைவளம் பற்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 28 நூல்களை வெளியிட்டுள்ளது. இவை தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல புதிய கருத்துகளையும் பார்வையையும் தந்துள்ளன.
தமிழர் பண்பாடு
தமிழக வரலாற்றையும், பண்பாட்டையும் வெளிக்கொணரும் நோக்கில் தமிழகக் கலைச் செல்வங்கள், தமிழர் அளவைகள், தமிழர் ஆடைகள், தமிழர் உணவு, தமிழர் எண்ணங்கள், தமிழர் கண்ட மனம், தமிழர் இசை, தமிழர் திருமணம், தமிழர் தோற்கருவிகள், தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், தமிழரின் தாயகம், தமிழும் தமிழரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, மலேசியத் தமிழரும் தமிழும், சங்கத் தமிழர் வாழ்வியல், சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், தமிழக நாட்டுப்புறக்கலைகள், தமிழர் காசு இயல், தமிழ்மொழியின் வரலாறு, தமிழர் கொடிகள், தமிழகத்தில் ஆசியர்கள், மெய்க்கீர்த்திகள் ஆகிய தலைப்புகளில் வெளி-வந்துள்ள நூல்கள் தமிழர்களின் சிறப்பையும், தமிழ்மொழியின் வளத்தையும் காட்டுவனவாகும்.
தமிழர் மரபுச்செல்வம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீ’ என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து ‘சிuறீtuக்ஷீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘லிணீஸீரீuணீரீமீs ணீஸீபீ நிக்ஷீணீனீனீணீtவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs கிக்ஷீt ணீஸீபீ கிக்ஷீநீலீவீtமீநீtuக்ஷீமீ’, ‘பிவீstஷீக்ஷீவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘றிலீவீறீஷீsஷீஜீலீவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs - ணிபீuநீணீtவீஷீஸீ ணீஸீபீ க்ஷிஷீநீணீtவீஷீஸீ’ என்ற தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுதிகள் பழந்தமிழகத்தின் மொழி, இலக்கணம், வரலாறு, பண்பாடு, அரசியல், கலை, சமூகம், தத்துவம், ஆகியன பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழுகின்றன.
இதைப்போன்றே ‘ஜிலீமீ சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீs ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs ஷீயீ மிஸீபீவீணீஸீ சிuறீtuக்ஷீமீ’ எனும் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவை ‘ஸிமீறீவீரீவீஷீஸீ ணீஸீபீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்’, ‘ஷிஷீநீவீஷீ - சிuறீtuக்ஷீணீறீ கிsஜீமீநீts’, ‘கிக்ஷீts ணீஸீபீ கிக்ஷீநீலீவீtமீநீtuக்ஷீமீ’, ‘லிணீஸீரீuக்ஷீணீரீமீ ணீஸீபீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ’ எனும் தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.
சுவடிப் பதிப்புகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடி-யியல் நூலகத்தில் உள்ள பழந்தமிழ்ச் சுவடிகள் பல பதிப்பிக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இலக்கியம், இலக்கணம், மருத்துவம், கதைப்பாடல்கள், புராணப் பாடல்கள், பிரபந்தங்கள் போன்ற நூல் வகைகள் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. கண்மருத்துவம், மனைநூல், கருவூரார் பல திரட்டு, சின்ன மகிபன் குளுவ நாடகம், வெள்ளைக்காரன் கதை, கும்மிப்பாடல்கள், ஊஞ்சல் இலக்கியம், பணவிடு தூது, திருக்குருகூர் திருவேங்கடநாதன் பிள்ளைத்தமிழ், திருமயிலை உலா, பிரபந்தத்திரட்டு, குணவாகடம், சித்தமருத்துவ மணிகள், சிவகிரி குமர சதகம், புதுவூர்ச் சக்கரவர்த்தி அம்மானை, குசலவர் சுவாமி கதை, தோட்டுக்காரி கதை, சின்னணைஞ்சான் கதை, முத்தாரம்மன் கதை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.
தமிழ்ச் சுவடிகள் அட்டவணை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதிகள், 1, 2, 3; உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடி விளக்க அட்-டவணை மூன்று தொகுப்பு நூல்கள், சுவடி-யியல், சுவடியியல் பயிற்சிக் கையேடு, சுவடிச்-சுடர் என்ற பல நூல்கள் வெளியிடப்பட்-டுள்ளன. தமிழின் தொன்மையைக் காட்டுவன-வாக இந்நூல்கள் அமைந்துள்ளன.
உலகத் தமிழ் எழுத்தாளர்கள்
‘உலகத் தமிழ் எழுத்தாளர்கள் யார்?’ என்ற பெயரில் வெளிவந்துள்ள நூலில் உலகமெங்கு-முள்ள 1443 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ‘உலகத் தமிழிலக்கிய வரலாறு’ எனும் தலைப்பில் 4 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை தமிழிலக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. ஆய்வுலகிற்குப் பெரும் பலன் நல்குவனவாகும்.
ஊர்ப் பெயராய்வு
தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற ஊர்ப் பெயர்கள், அவர்களின் வரலாறு, பண்பாடு, கலை, புராணம் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள், இலக்கியத்-தில் ஊர்ப்பெயர்கள் (2 தொகுதிகள்) செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள், தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு சென்னை என்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்-களின் வழியாகக் காலந்தோறும் ஊர்ப்பெயர்கள் பெற்றுள்ள மாற்றங்கள், அதன் உண்மை நிலை வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள மிகவும் தேவையான ஆய்வு நூல்களாகத் திகழ்கின்றன
தமிழ் வளர்ச்சி
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் தமிழாய்வு எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்ட எண்பதில் தமிழ், எண்பத்தொன்றில் தமிழ், எண்பத்திரண்டில் தமிழ், எண்பத்து மூன்றில் தமிழ், (பகுதி 1, 2, 3) எனும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து இவ்வாறு வெளிவர-வில்லை. சமூகவியல் தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் நாட்டுப்புறவியல், கலை, பண்பாடு _ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், தொல்லியல், வரலாறு, சமூகவியல் _ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், சமயம், தத்துவம் உளவியல்_ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், அறிவியல் தகவல் தொடர்பு  எனும் தலைப்புகளில் 4 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கருத்தரங்குக் கட்டுரைத் தொகுப்புகளான இந்நூல்கள் தமிழியல் ஆய்வு உலகில் குறிப்பிடத்தக்கப் பாராட்டைப் பெற்றுள்ளன.
தொகுப்பு நூல்கள்
இலக்கியங்களில் பரவிக் கிடக்கும் ஒரு பொருள் பற்றிய கருத்துகளை ஒன்றிணைத்து நூல்களை வெளியிடுவது, கருத்தரங்குக் கட்டுரை-களைத் தொகுத்து நூல்களை வெளியிடுவது என்ற நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1.தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ எச்சவியல். 2. தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ உரியியல் 3. தொல்காப்பியம் _ பொருளதிகாரம் _ கற்பியல், தமிழ் ஆய்வுக் களங்கள் சங்க இலக்கியம் கவிதையியல் சிந்தனைப் பின்புல மதிப்பீடு, இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடகங்கள், தொல்காப்பியப்பாவியல் கோட்பாடுகள், (திருப்புகழ் ஒளிநெறி (3 தொகுதிகள்) பெ.நா. அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் தொகுதி 1, 2, தமிழ் நாடகம் நேற்றும் இன்றும், பயிலரங்கக் கவிதைகள், இந்திய விடுதலைக்குப் பின் தமிழிலக்கியச் செல்நெறிகள், அயலகத் தமிழ்க் கலை இலக்கியச் சமகாலச் செல்நெறிகள், தமிழில் ஆவணங்கள், தமிழக மகளிரியல், நானும் என் கவிதையும், நானும் என் எழுத்தும், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், அருந்தமிழ் அறிஞர் அ.ச.ஞா., ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், தணிகை மணி வ.சு. செங்கல்வராய பிள்ளை, மூதறிஞர்
மு. இராகவையங்கார், சிவக்கவிமணி
சி.கே. சுப்பிரமணிய முதலியார், பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர், திருமணம் செல்வக் கேசவராய முதலியார், பண்டிதமணி
மு. கதிரேசன் செட்டியார், பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்கள் தொகுதி 1, 2, வேதாத்திரியத்தில் சமூகவியல் இறையியல் சிந்தனைகள் என ஏராளமான நூல்கள் பல்வேறு முறைகளில் வெளியிட்டு நிறுவனம் தனது தமிழ்ப் பணிகளைச் செய்து வருகிறது.
வெளிநாட்டுப் பேராசிரியர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் ‘ணிஜீவீரீக்ஷீணீஜீலீவீநீணீறீ மீஸ்வீபீமீஸீநீமீ யீஷீக்ஷீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs’, ‘ஜிலீவீக்ஷீu விuக்ஷீuரீணீஸீ’ எனும் பெயர்களில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. ரிணீக்ஷீணீவீளீணீறீ கினீனீணீவீஹ்ணீக்ஷீ, ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ - ஜிலீமீ பீணீஹ்றீவீரீலீt ஷீயீ tலீமீ ஜீsஹ்நீலீமீ, கி ஜிணீனீவீறீ ஸிமீணீபீமீக்ஷீ ஸ்ஷீறீ. மி ணீஸீபீ ஸ்ஷீறீ.மிமி, சிலீவீமீயீtணீவீஸீs ஷீயீ tலீமீ ஷிணீஸீரீணீனீ கிரீமீ, கி நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ சிஷீஸீtமீனீஜீஷீக்ஷீணீக்ஷீஹ் லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஜிணீனீவீறீ, லிணீஸீபீsநீணீஜீமீ ணீஸீபீ ஜீஷீமீtக்ஷீஹ், ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ ணீஸீபீ கிstணீபீலீஹ்ணீஹ்வீ, றிமீக்ஷீsஷீஸீணீ வீஸீ ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ, ஜிணீனீவீறீ மிஸீபீவீணீ, சிக்ஷீவீtவீநீணீறீ ஷிtuபீவீமீs வீஸீ ரிuக்ஷீணீறீ, ஷிtuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ றிக்ஷீஷீsஷீபீஹ் ணீஸீபீ றிஷீமீtவீநீs, லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் சிக்ஷீவீtவீநீவீsனீ வீஸீ ஜிணீனீவீறீ ணீஸீபீ ஷிணீஸீsளீக்ஷீவீt, ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ, மிஸீபீவீணீஸீ ணிஜீவீstமீனீஷீறீஷீரீஹ், ஷிஷீuஸீபீ சிஷீக்ஷீக்ஷீமீsஜீஷீஸீபீமீஸீநீமீ தீமீtஷ்மீமீஸீ ஜிணீனீவீறீ ணீஸீபீ யிணீஜீணீஸீமீsமீ, ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ ஜிலீமீஷீக்ஷீஹ் ணீஸீபீ கிஜீஜீறீவீநீணீtவீஷீஸீ ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஸீரீ ஜிவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ, ஷிஷீநீவீணீறீ றீவீயீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs, ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ ணீஸீபீ மிஸீபீவீணீஸீ ஜீலீவீறீஷீsஷீஜீலீஹ், கிஸீ மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ ஸிமீறீவீரீவீஷீஸீ ணீஸீபீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ் - ஜிமீஸ்ணீக்ஷீணீனீ ணீஸீபீ ஜிவீஸ்ஸ்வீஹ்ணீஜீஜீவீக்ஷீணீஜீணீஸீtணீனீ, கி ஙிuஸீநீலீ ஷீயீ ணிssணீஹ்s ஷீஸீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ, க்ஷிவீsஸீணீஸ்வீsணீனீ வீஸீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ தீமீtஷ்மீமீஸீ tலீமீ 7tலீ & 9tலீ சிமீஸீtuக்ஷீவீமீs, கிரீக்ஷீமீமீனீமீஸீtவீஷீஸீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ லிணீஸீரீuணீரீமீ, ஜிணீனீவீறீ றிஷீமீtக்ஷீஹ் ஜிஷீபீணீஹ், ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ  என இன்னும் பல தமிழியல் தொடர்பான ஆங்கில நூல்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழி அறியாத பிற மொழியாளர்கள், பிற நாட்டார் தமிழ் மொழியை, இலக்கியங்களை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்து வருகிறது. தமிழைப் பிற மொழியாளர்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக கீஷீக்ஷீளீ ஙிஷீஷீளீ ஷிஜீஷீளீமீஸீ ஜிணீனீவீறீ  என்ற நூலும், அது தொடர்பான குறுந்தகடுகளும் வெளியிடப்பட்-டுள்ளன.
மொழிபெயர்ப்பு நூல்கள்
நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று மொழிபெயர்ப்புப் பணியாகும். பழமை-யான இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதன் மூலம் தமிழின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்குடன் பல நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பிலும், மறு பதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ - றிலீஷீஸீஷீறீஷீரீஹ் ணீஸீபீ விஷீக்ஷீஜீலீஷீறீஷீரீஹ் ஜிணீனீவீறீ ஸ்மீக்ஷீsமீ வீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ, ரிuக்ஷீuஸீtஷீளீணீவீ, ரிuக்ஷீவீஸீநீவீஜீணீணீttu, விuttஷீறீறீணீஹ்வீக்ஷீணீனீ ஷிவீஜ் றீஷீஸீரீ ஜீஷீமீனீs யீக்ஷீஷீனீ sணீஸீரீணீனீ ஜிணீனீவீறீ, ஜிணீனீவீறீ பிமீக்ஷீஷீவீநீ ஜீஷீமீனீs, ழிணீறீணீஸ்மீஸீதீணீ, ஜிமீனீஜீறீமீ நீலீவீனீமீs, ஞிமீபீவீநீணீtவீஷீஸீ, ஜிணீஸீவீஜீணீணீளீuக்ஷீணீttஷீளீணீவீ, சிலீவீறீணீஜீஜீணீtவீளீணீக்ஷீணீனீ, ஷிமீறீமீநீtமீபீ றிஷீமீனீs ஷீயீ ஙிலீணீக்ஷீணீtலீவீபீணீsணீஸீ (ணிஸீரீறீவீsலீ, விணீறீணீஹ்ணீறீணீனீ, ரிணீஸீஸீணீபீணீனீ,ஜிமீறீuரீu) ஜிணீனீவீறீ றிஷீமீtக்ஷீஹ் ஜிஷீபீணீஹ் ழிணீtக்ஷீவீஸீணீவீ திஷீuக்ஷீ பிuஸீபீக்ஷீமீபீ, விணீஸீவீனீமீளீணீறீணீவீ எனப் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பழமொழி நானூறு தெலுங்கு மொழி-பெயர்ப்பு, சர்வக்ஞர் உரைப்பா, நாச்சியார் திருமொழி தெலுங்கு மொழிபெயர்ப்பு, தெசிணி-யின் தமிழாக்கப் பாடல் திரட்டு, மிருச்சகடிகம், முத்ரா ரா-க்ஷஸம், நாலடியார் மூலமும் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்புடன், திருக்குறள் பூரணலிங்கம்பிள்ளை ஆங்கில மொழியெர்ப்-புடன், பாணினியின் அஷ்டாத்தியாயி தமிழாக்கம் 3 பகுதிகள், கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நன்னெறி ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஆகிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அகராதிகள்
தமிழ்மொழியின் அடிப்படைத் தேவையான அகராதிகள் வெளியீட்டுப் பணிகளையும் உலகத் தமிழாராயச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தமிழ்_ஆங்கிலம் அகராதி பகுதி 1, 2, 3, 4, செந்தமிழ் அகராதி, சொற்பிறப்பு _ ஒப்பியல் தமிழ் அகராதி என்ற அகராதிகள் வெளியிடப்-பட்டுள்ளன.
ஆய்வுக் கோவைகள்
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகள் அம்மன்றத்தால் வெளியிடப்-படாதவை மட்டும் ஆண்டு வாரியாக வெளி-யிடப்பட்டுள்ளன. இ.ப.த.ம. ஆய்வுக்கோவை தொகுதி 1, 2, 3, (1970) ஆய்வுக் கோவை தொகுதி 1, 2 (1969) என்பவை அவை. இந்நூல்கள் பல்பொருள் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று வரை 31 அறக்கட்டளைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறக்கட்டளைச் சார்பிலும் ஆண்டு-தோறும் ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுத்து, சொற்பொழிவு ஆற்றச் செய்து, சொற்பொழிவு நிகழ்த்தும் நாளன்றே நூலை வெளியிடுவது வழக்கமாகும். இந்த அறக்கட்டளைகள் அறிஞர்களாலும், கொடையாளர்களாலும், பல்வேறு அமைப்புகளாலும் நிறுவப்பட்டு பல சிறந்த நூல்கள் வெளிவருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. அறக்கட்டளைச் சொற்-பொழிவு நூல்களாக இந்நாள் வரை 142 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை படைப்பிலக்கியம், இதழ்கள், இலக்கியக் கோட்பாடுகள், இசுலாமியத் தமிழ், கிறித்துவமும் தமிழும், சைவத்தமிழ், தமிழ் நூல் பதிப்புகள், வ.உ.சியும் தமிழும், பாவாணர் ஆய்வுகள், மொழியியல், கலை பண்பாடு, இதழியல், பதிப்பியல், மொழிபெயர்ப்பியல், இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு, தொ.பொ.மீ. இலக்கியப்பணி, தொழில் கல்வி, அறிவியல், தொழில் நுட்பவியல், தமிழர் கண்ட தாவரவியல், ம.பொ.சி.யும் தமிழும் தமிழரும், தமிழகத்தில் தேசியமும் காந்தியமும் மற்றும் நாமக்கல் கவிஞரின் படைப்புகள், சமூகவியல், தனித்தமிழ் இயக்கம், காசு இயலும் பிற துறைகளும், தனிநாயக அடிகள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தமிழில் ஆவணங்கள், பெண்ணியம், திருமுறைகள், தமிழ்ப்பண்பாடு, மற்றும் பெயரியல், அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக்கம், கவிதையியல், ஆகிய பொருண்-மைகள் அடிப்படையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல்கள் யாவும் வெளியிடப்-பட்டுள்ளன. இப்பொருண்மை குறித்து வெளியிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழுக்கும் தமிழருக்கும் வளம் சேர்ப்பன. சான்றுக்கு ஒரு சில சுட்டிக்காட்டலாம். பிராகிருதமும் தமிழும், தமிழும் குறியியலும், தமிழும் தெலுங்கும், தமிழில் பிறதுறைக் கோட்பாட்டாய்வுகள், வரலாறும் மதிப்பீடும், தமிழும் கிறித்தவமும், சைவத்தமிழ், திருமறையும் தீந்தமிழும், இசுலாம் வளர்த்த தமிழ், உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகள், தமிழ் தந்த வ.உ.சி., தமிழெழுத்து வரி வடிவ வரலாறு, பாவாணர் ஆய்வு நெறி, இதழாளர் பெரியார், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, சங்க இலக்கிய ஆய்வு, தெ.பொ.மீ.யும் மேலை அறிஞரும், தமிழர் கட்டிடக்கலை, தமிழரின் தாயகம், தமிழில் விடுதலை இலக்கியம், மலையாளக் கவிதைகள், தொல்காப்பிய இசைக்குறிப்புகள், சங்ககாலக் காசு இயல், உலக அரங்கில் தமிழ், பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி, தொல்லியல் நோக்கில் சங்க காலம், பெரியாரியப் பெண்ணியம், மௌனத்தின் அதிர்வுகளும் மொழியும் _ பெண், பண்பாட்டு நோக்கில் திருமுறைகள், கவிதையியல் என்று இன்னும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
நிறுவன இதழ் வெளியீடு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழியல் (யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs) 1969ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் இருமொழி பருவ இதழாக வெளிவருகின்றது. இவ்விதழ் தமிழ் ஆய்வு உலகில் உள்ள தமிழ் ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு எடுத்துரைக்கும் வகை-யில் ஒரு பரந்துபட்ட களமாக விளங்குகிறது.
தமிழர் தம் பல்துறை அறிவையும், ஆய்வுத் திறனையும், உயர்ந்த சிந்தனைகளையும் உலகை உணரச் செய்து தமிழையும் தமிழரையும் வளர்ச்சியடையச் செய்வதே இவ்விதழின் நோக்கமாகும்.
உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்யும் தமிழ் அறிஞர்கள் இவ்விதழுக்குக் கட்டுரைகள் வழங்கி வருகின்ற-னர். தனித்தன்மை மிக்க இக்கட்டுரைகள் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரிதும் பயன் அளிக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவ்வாறு இயன்ற வகையில் சிறப்புடன் நூல் வெளியீட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.

பதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்


வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங்
1
பதிப்பு-காப்பு உரிமை குறித்து‍ வாசகர்களுக்கு இயல்பாக ஏற்படுகின்ற சந்தேகங்களின் பேரில் எழும் கேள்விகளுக்கு வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங் பதிலளிக்கிறார். . இதனை அசோகன் முத்துசாமி அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்.
லாரன்ஸ் லியாங் சட்டம் சம்பந்தமான ஆராய்ச்சியாளர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த சட்டரீதியான இயக்கங்களை நடத்தி வருபவர். மாற்றுச் சட்ட அமைப்பை(Alternative Law Forum)
அமைத்தவர்களில் ஒருவர். ‘‘அறிவு சார்ந்த சொத்துரிமை’’ சம்பந்தமான அரசியல் கோட்பாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்.
இவர் சட்டம், பொதுக்கலாச்சாரம் அறிவு சார்ந்த சொத்துக்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் அவர், மென்பொருட்களில் திறந்த வெளி அணுகுமுறை இயக்கத்தின் (Open Source Movement) முக்கிய ஆதரவாளர்.
இவர் ‘‘Sex Laws and Video tape: The public is watching, Guide to open content licenses’’  ஆகிய நூல்ககளை எழுதியுள்ளார். தற்போது ‘‘Law, Justice and Cinema’’  என்னும் நூலை எழுதி வருகிறார்.

2
என்னுடைய படைப்பின் மீதான எனது காப்புரிமையை நான் முறைப்படி பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றதா?
என்னுடைய கையெழுத்துப் பிரதியை (அல்லது தட்டச்சுப் பிரதியை) எங்கே நான் பதிவு செய்ய வேண்டும்?
இல்லை. காப்புரிமை தானாகவே வந்துவிடுகின்றது. சம்பிரதாயங்கள் எதுவும் தேவையில்லை. என்றபோதும், ஒரு படைப்பு யாருக்குச் சொந்தம் என்பதில் ஏதேனும் தகராறு வந்தால், காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்பதற்கான சட்டப்படி செல்லத்தக்க முதல்கட்ட சாட்சியமாக காப்புரிமைப் பதிவுச் சான்றிதழ் பயன்படுகின்றது.
காப்புரிமைச் சட்டத்தின் 48வது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது:
காப்புரிமைப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதில் பதியப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றிற்கு காப்புரிமைப் பதிவேடே முதல் கட்ட சாட்சியமாக விளங்கும். அல்லது காப்புரிமைப் பதிவாளரால் உண்மைப் பிரதி என்று சான்றளிக்கப்பட்ட, காப்புரிமை அலுவலகத்தின் முத்திரை பதிக்கப்பட்ட அந்த ஆவணங்களின் சாராம்சங்கள் முதல்கட்ட சாட்சியமாக விளங்கும் கூடுதல் அத்தாட்சியோ அல்லது மூலப்பிரதியைக் காட்ட வேண்டிய தேவையோ இன்றி அனைத்து நீதிமன்றங்களிலும் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். 
என்றாலும், காப்புரிமையைப் பதிவு செய்யாமலிருப்பது உங்களது படைப்புகள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட காப்புரிமைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையைப் பயன்படுத்துவதிலிருந்தும் உங்களை விலக்கி வைப்பதில்லை. இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இந்த நிலையை உறுதி செய்துள்ளன.
காவல்துறையினர் உள்ளிட்ட இச்சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பலர் பெரும்பாலும் இச்சட்டம் பற்றி நன்கு அறியாதவர்களாக இருக்கிறார்கள். பதிவுச் சான்றிதழ் இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆதலால் காப்புரிமையைப் பதிவு செய்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உங்களது காப்புரிமையை இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ள வகை செய்திருப்பதன் மூலம் அமைச்சரகம் அந்த வேலையை மேலும் சுலபமாக்கியிருக்கின்றது.
http://copyright.gov.in/UserRegistration/frmLoginPage.aspx என்கின்ற இணைய முகவரியில்  இந்தச் செயல்முறை பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம்.

3
1957_ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு படைப்பைப் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை என்ன?
ஒரு படைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே காப்புரிமை அமலுக்கு வந்து விடுகின்றது. காப்புரிமையைப் பெறுவதற்காக எந்தச் சம்பிரதாயமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. எனினும், கல்வித்துறையின் காப்புரிமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும் காப்புரிமைப் பதிவேட்டில் ஒரு படைப்பைப் பதிவு செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் செய்யப்பட்டுள்ள பதிவுகள் நீதிமன்றங்களில் முதல்கட்ட சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்துவிதமான படைப்புகளையும் பதிவு செய்து கொள்வதற்காகக் காப்புரிமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. காப்புரிமைப் பதிவாளர் அதன் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
அதன் முகவரி
 B.2/W.3, C.R.Barracks,
Kasturba Gandhi Marg,
 New Delhi -110003.
Tel. 338 4387.
4
 ஒரு நூலுக்குக் காப்புரிமை எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்?
ஒரு இலக்கியப் படைப்பின் ஆசிரியரின் இறப்புக்குப் பின் அறுபதாண்டுகள் வரை காப்புரிமை நீடிக்கும். காப்புரிமைச் சட்டத்தின் 22 வது பிரிவு கால அளவை அளிக்கின்றது.

5
ஒரு பத்திரிகையிலோ அல்லது செய்தித்தாளிலோ வெளிவரும் ஒரு படைப்பின் காப்புரிமைக்கு உரியவர் யார், பதிப்பாளரா அல்லது படைப்பின் ஆசிரியரா?
ஒரு ஆசிரியரின் இலக்கியப் படைப்பு விஷயத்தில் காப்புரிமைச் சட்டத்தின் 17 _வது பிரிவு பின்வருமாறு உரிமை அளிக்கின்றது
அ. செய்தித்தாள், பத்திரிகை அல்லது அது போன்ற வார, மாத இதழின் உரிமையாளரிடம் செய்து கொண்ட பணி ஒப்பந்தம் அல்லது பயிற்சி ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றும்போது.
ஆ. செய்தித்தாளிலோ, பத்திரிகையிலோ அல்லது அது போன்ற வார, மாத இதழ்களில் பிரசுரிக்கப்படுவதற்கென எழுதப்பட்டிருக்கும் போது.
அதற்கு மாறாக ஒப்பந்தம் எதுவும் போடப்படாத நிலையில், பதிப்பாளரே அந்தப் படைப்பினுடைய காப்புரிமையின் உடைமையாளராவார். ஆனால், இது செய்தித்தாள், பத்திரிகை அல்லது வார, மாத இதழ்களில் வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் மற்ற விஷயங்களில் படைப்பின் முதல் உரிமையாளராக, படைப்பாளியே இருப்பார்.
கீ

6
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் மீது தனக்குக் காப்புரிமை இருக்கிறது என்று ஒருவர் கூறினால் எப்படி? ஆசிரியரும், பதிப்பாளரும் இப்போது இல்லை. யாரேனும் அதை மறுபடியும் பதிப்பிக்கலாமா?
ஒரு நூல் 20_ம் "நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதிப்பிக்கப்பட்டது என்பதனாலேயே அதற்குத் தானாகவே இனியும் காப்புரிமை இல்லாமல் போய்விடாது. அந்த ஆசிரியர் எப்பொழுது மறைந்து போனார் என்பதைப் பொறுத்தது அது. எடுத்துக்காட்டாக, ஒரு நூல் 1910_ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு, அதன் ஆசிரியர் 1980_ம் ஆண்டுதான் இறந்து போனார் என்றால், காப்புரிமை 2040_ம் ஆண்டு வரை நீடிக்கும்.   
கீ  
7
காப்புரிமையை மற்றொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மாற்றுவதற்கான நடைமுறை என்ன?
உங்களது காப்புரிமையை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ பிறருக்கு எழுதி வைக்கலாம். அதற்கான நடைமுறைகள் சட்டத்தின் 18, 19 ஆகிய பிரிவுகளில் விதிக்கப் பட்டுள்ளன. அல்லது ஒரு குறிப்பிட்ட உரிமத்தை வழங்கலாம்.

8
பொதுத் தளத்தில்(public domain)  இலவசமாகச் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதால் திரைப்படச் சுவரொட்டிகள், நாட்காட்டி கலைப்படங்கள், தீப்பெட்டி முத்திரைச் சீட்டுகள் ஆகியவை காப்புரிமை உள்ள பொருட்களா?
ஒரு படைப்பு பொது அரங்கில் கிடைப்பதா லேயே அது காப்புரிமைப் பாதுகாப்பை  இழந்து விடுவதில்லை. ஒரு படைப்பில் காப்புரிமை இல்லாத நிலையிலோ அல்லது காப்புரிமை காலாவதியாகிவிட்ட நிலையிலோ தான் அது பொது அரங்கிற்கே வருகின்றது.
கீ
9
நு£லகங்களும், ஆவணக் காப்பகங்களும் காப்புரிமை உள்ள ஒரு படைப்பைப் பாதுகாப்பதற்காக நகலெடுக்க முடியுமா?
ஆம். ஒரு நூல் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை எனில், ஒரு பொது நு£லகப் பொறுப்பாளரின் உத்தரவின் பேரில் அதிகபட்சமாக அந்த நூலை மூன்றுக்கு மிகாமல் பிரதியெடுத்துக் கொள்வதற்கு (பிரசுரம், இசைத்தகடு, அட்டவணை, வரைபடம் அல்லது திட்டப்படம் உள்பட) காப்புரிமைச் சட்டத்தின் 52 (0) பிரிவு அனுமதி அளிக்கின்றது.
10
திறந்தவெளி அணுகுமுறை (Open axis) என்றால் என்ன? ( ஒரு படைப்பை ) திறந்தவெளி மூலமாக வெளியிடுவதனால் பிரச்சனைகள் உண்டா?
திறந்தவெளி அணுகுமுறை அல்லது இலவச மென்பொருள் என்பது அதை மறு உற்பத்தி செய்வதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது அதைத் தழுவி மற்றொன்றை உருவாக்குவதற்கோ தடைகள் எதுவும் விதிக்காத மென்பொருளைக் குறிக்கின்றது. நூல் வெளியீட்டாளர்களுக்குக்  கூடுதல் பொருத்தமான சொல் 'திறந்த உள்ளடக்கம்' என்பதுதான். இலக்கிய மற்றும் கலாசார படைப்புகளுக்குத் திறந்த உள்ளடக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, பொதுப் படைப்பாக்க உரிமங்கள் என்பவற்றிற்கு ஒரு உதாரணம், திறந்த உள்ளடக்க உரிமங்களாகும்.
'பொதுப் படைப்பாளிகள்' என்பது லாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். சட்டம் அளிக்கக்கூடிய அறிவுசார் உடைமை உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்த விரும்பாதவர்
களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 'சில உரிமைகள் காப்புரிமைக்கு உட்பட்டவை' என்றோ அல்லது 'இப்படைப்பில் எதுவும் காப்புரிமைக்கு உட்பட்டவையல்ல' என்று உலகிற்கு அறிவிப்பதற்கான எளிய, ஆனால் நம்பகமான வழிக்கான இன்னும் தீர்க்கப்படாத கோரிக்கை இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். முழுமையான காப்புரிமை தாங்கள் விரும்பும் வகையில் தங்களது படைப்பு வெளிச்சம் பெறுவதற்கும், பரவலாக விநியோகிக்கப்படுவதற்கும் உதவுவதில்லை என்கின்ற முடிவிற்குப் பலர் வெகு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார்கள். தொழில்முனைவோர் பலரும், கலைஞர்கள் பலரும் தங்களது படைப்பாக்க முதலீட்டிலிருந்து லாபம் பெறுவதற்கு இப்போது நூதனமான வழிமுறைகளையே தேர்வு செய்வார்கள். இன்னும் பலர் அறிவுசார் பொதுமைக்குப் பங்களிப்பதன் மூலமும்,
அதில் பங்கேற்பதன் மூலமும் மனநிறைவு அடைகிறார்கள். காரணங்கள் எதுவாயினும், இணைய குடிமக்கள் பலர் தங்களது படைப்புகளை மறுபயன்பாட்டிற்கும், மாற்றங்களுக்கு உட்படுத்தவும், பெருந்தன்மையான வகையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்பது தெளிவு. தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகின்றவர்களுக்காகப் பொதுப் படைப்பாளிகள் அமைப்பு தன்னுடைய இணையதளத்தில் கட்டணம் எதுவுமின்றி உலகிற்கு வழங்குகின்றது.

11
வர்த்தகம் சாராத உரிமத்தை நான் தேர்வு செய்தால், அப்போதும் என்னுடைய உரிமம் பெற்ற படைப்புகளின் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
நிச்சயமாக. வர்த்தக நோக்கமின்றிப் பயன்படுத்துதல் என்கின்ற நிபந்தனை உங்களது படைப்புகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். காப்புரிமை பெற்றுள்ள உங்களுக்கு அல்ல. உங்களது படைப்புகளை மற்றவர்கள் லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அல்லது நகலெடுத்தாலோ, பொருள் ஈட்டுவதற்காகவோ அல்லது பொருளாதார ஆதாயத்திற்காகவோ உங்களது அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. படைப்பாளிகள் தங்களது படைப்புகளை மேல்நிலைக்கு உயர்த்தவும், விற்பனை செய்யவும் புதிய வழிகளைப் பரிசோதித்துப் பார்க்குமாறு படைப்பாளிகளை ஊக்குவிப்பதுதான் எங்களது முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. உண்மையில், படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் வர்த்தக அம்சங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே, அதன் விநியோகத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும் கருவியாகவே வர்த்தக சார்பற்ற ஒரு உரிம முறையை நாங்கள் வடிவமைத்தோம்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்களது புகைப்படம் ஒன்றை வர்த்தகச் சார்பற்ற உரிம முறையில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அதை உங்களது இணையதளத்தில் வலையேற்றம் செய்கிறீர்கள். 'ஸ்பெக்டக்கில்' என்கின்ற ஒரு லாப நோக்கில் நடைபெறும் பத்திரிகையின் ஆசிரியர் உங்களது புகைப்படத்தைப் பார்க்கின்றார். அதைத் தன்னுடைய அடுத்த இதழின் அட்டைப் படமாகப் பயன்படுத்த விரும்புகிறார். வர்த்தகச் சார்பற்ற வகையின் கீழ் அவர் அந்தப் புகைப்படத்தைத் தன்னுடைய நண்பர்களுக்கும், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் காட்டலாம். ஆனால், அவர் அதைத் தன்னுடைய பத்திரிகைக்காகப் பயன்படுத்த வேண்டும் எனில், அவர் உங்களிடம் ஒரு ஒப்பந்தம் (நீங்கள் புத்திசாலியாக இருந்தால், பணம் பெற்றுக்கொண்டு) போட்டுக் கொள்ள வேண்டும்.

12
காப்புரிமை பதிவு செய்யப்பட்ட
ஒரு படைப்பின் எத்தனை பக்கங்கள்
ஒரு நூலகத்தில் பயன்படுத்துபவருக்குக் கொடுக்கப்படலாம்? அதே நபர் வேறு நாட்களில் எஞ்சியுள்ள பக்கங்களையும் கேட்டால் என்ன செய்வது?

சட்டத்தில் எண்ணிக்கையின் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் விவரிக்கப் படவில்லை. இலக்கிய, நாடக, இசை அல்லது கலைப்படைப்பை, ஆய்வு உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளும்போது 'நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்' என்கின்ற வார்த்தைகளை மட்டுமே சட்டம் பயன்படுத்து கின்றது. அது ஒவ்வொரு விவகாரத்தையும் (அல்லது வழக்கையும்) சார்ந்தது.

13
நான் வாசிப்பதற்காக ஒரு நூலை முழுமையாக நகலெடுக்க முடியுமா? என்னுடைய நண்பருக்கு அதை நான் பரிசளிக்கலாமா?
தனிப்பட்ட ஆய்விற்காக ஒரு படைப்பை நியாயமாகப் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் இல்லை. வழக்குச் சட்டத்திற்கான விளக்கப்படி, ஒரு படைப்பின் எவ்வளவு பகுதி நகலெடுக்கப்படுகின்றது என்கின்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்திருக்கின்ற போதும், ஆனால் நீங்கள் அதை மற்றவர்களுக்கு இரவல் அளித்தால் அது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு புறம்பானதாகக் கருதப்படக் கூடும்.
கீ
14
சில படைப்புகள் பொதுப் பணத்தின் மூலம் பதிப்பிக்கப்படுகின்றன. அவையும் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
ஆம். ஆனால், 52_ வது பிரிவில் அரசின்  படைப்புகளுக்குப் பிரத்யேகமான விதி விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

15
அறிவுத்திருட்டு (றிறீணீரீவீணீக்ஷீவீsனீ) என்றால் என்ன?
மற்றவருடைய படைப்பை அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, குறிப்பாகக் கல்விச் சூழலில் அப்படிச் செய்வது அறிவுத் திருட்டு எனப்படும். 
கீ
16
ஒரு ஆசிரியரின் காப்புரிமை அவரது சட்டப்படியான வாரிசுக்குத் தானாகவே மரபு வழிச் சொத்தாக ஆகிவிடுமா?
அதற்கு மாறாக உயில் எதுவும் இல்லாத வரையில், சட்டப்படியான வாரிசுகள் காப்புரிமையின் உடைமையாளர்களாக ஆகின்றார்.

17
கிராமபோன் தட்டுகளிலிருந்து இசையைக் குறுந்தகட்டில் பிரதியெடுத்து விற்பனை செய்யலாமா?
கூடாது. அது காப்புரிமை பெற்றவரின் ஒலிப்பதிவு உரிமையை மீறுவதாகும்.
கீ
18
பொது நிகழ்ச்சிகளுக்கு செய்தித்தாள்கள் அழைக்கப்படுகின்றன. அந்த செய்தித்தாள்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்குக் காப்புரிமை கோரப்படுகின்றது. செய்தித்தாளை அழைத்த நிறுவனத்தால் அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்த முடியுமா? புகைப்படங்கள் விளைபலனாக இருக்கலாம் ஆனால், அந்த நிறுவனம்தானே அதன் உள்ளடக்கம்?
இது அந்த நிகழ்ச்சியின் தன்மையைப் பொறுத்தது. அது ஒரு நிகழ்த்துக் கலையாக இருந்தால் முன்கூட்டியே நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை பொதுக்கூட்ட உரைகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் பற்றி செய்தி கூறுவதாக இருந்தால் காப்புரிமைச் சட்டத்தில் அவற்றுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

19
 காப்புரிமையை மீறுவதற்கு தண்டனை என்ன?
சட்ட மீறலுக்கு சிவில் மற்றும் கிரிமினல் பரிகாரங்கள் இருக்கின்றன .சிவில் பரிகாரங்களில் தடையுத்தரவு மற்றும் நட்டஈடு போன்றவை அடங்கும். சிறைத் தண்டனையும், அபராதமும் கிரிமினல் தண்டனைகளில் அடங்கும்.
கீ
20
 காப்புரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் எவை? அது மாநில அல்லது மத்திய அரசாங்கத்தின் தனியுரிமையா?
அது மத்தியப் பட்டியலில் 49_ஆவதாக வருகின்றது. 
கீ
21
 ஆண்டறிக்கைகள், நினைவு மலர்கள் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
ஆம், அவை அசலான படைப்புகள் என்கின்ற தகுதியைப் பூர்த்தி செய்தால்.

22
 உரிமையாளரற்ற படைப்புகள் என்றால் எவை? உரிமையாளரற்ற படைப்புகளைப் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
காப்புரிமை உள்ளவர் தன்னுடைய படைப்பு என்று உரிமை கோராமலிருந்தாலோ அல்லது பதிப்பாளர் அந்தப் படைப்பைப் பதிப்பிக்காமல் இருந்தாலோ அது உரிமையாளரற்ற படைப்பு ஆகும். அத்தகைய படைப்புகளை மறுபதிப்பு செய்வதற்கான நடைமுறைகளை ஒத்துக்கொண்ட பின்னர், காப்புரிமைப் பதிவாளருக்கு விண்ணப்பித்த பின்பு அவற்றுக்குக் கட்டாய உரிமம் வழங்குவதற்கு இந்தியச் சட்டம் அனுமதிக்கின்றது.
கீ
23
 காப்புரிமை அளிக்கப்பட்ட படைப்புகளின் விவரங்கள் அடங்கிய தேசியப் பதிவேடு இருக்கின்றதா? இம்மண்ணின் சட்டத்தைப் பின்பற்ற நாம் இதை எப்படி அறிந்து கொள்வது? ஏற்கனவே பொது வெளிக்கு வந்துவிட்ட ஆனால், அரிதாகிவிட்ட படைப்புகளைச் பதிப்பிப்பதற்கு எந்த முகமையேனும் தடையில்லாச் சான்று வழங்க முடியுமா?
காப்புரிமைப் பதிவாளரால் அது பராமரிக்கப்படுகின்றது. காப்புரிமை உள்ள ஒரு படைப்பைக் கட்டாய உரிமத்தின் மூலம் மறுபடியும் பதிப்பிப்பதற்கு நீங்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு

கல்பனா சேக்கிழார்

ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் என்னும் கொள்கைகளை வாழ்க்கை உயிர்நாடியாகக் கொண்ட, டாக்டர் இராஜா சர். அண்ணா-மலைச் செட்டியார் அவர்கள் நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்யவும், கல்லாத இனமெல்லாம் கற்க வைக்கவும், 1922ஆம் ஆண்டில்  சிதம்பரத்தில் மீனாட்சிக்கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி தொடங்கினார். பின்பு மீனாட்சி தமிழ்க் கல்லூரி, மீனாட்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, இசைக் கல்லூரி முதலிய பல கல்லூரி-களாக வளர்ச்சி பெற்றது. இக்கல்லூரிகள் அனைத்தும் 1929இல் இணைக்கப்பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக மலர்ந்து மணம் பரப்பத் தொடங்கியது. இப் பல்கலைக்கழகம் 1955ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கண்டபொழுது, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், அண்ணா-மலை அரசரின் கல்விக்கொடையைப் போற்றி,
வயலும் ஏரும் மழையும் எருவும்
இருந்தும் என்ன செய்வேன் என்னுமோர்
ஏழைக்கு விதைநெல் ஈந்தான் போல
அரசன்அண் ணாமலை திருநாட் டுக்கும்
பண்டைப் பெருமையும் பதியும் நிதியும்
இருந்து வருத்தும் நிலைமை எண்ணி
அறிவின் ஊற்றுத் திறந்தான்
எனப் பாடினார்.
அப் பெருமை மிகு பல்கலைக்கழகம் 2004 இல் பவளவிழா கண்டு, 79 ஆண்டு கால வளர்ச்சியில் எத்தனையோ பெருமைகளைத் தேடிக்கொண்டது.
தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாகக் கொண்டு தோற்றுவிக்கப்பெற்ற இப் பல்கலைக்கழகம் தமிழுக்கெனப் பல்வேறு துறைகளைக் கண்டது.ஆரம்பம் முதலே ஒவ்வொரு துறையிலும் சிறந்த மேதைகள், இருந்து  பெருமை சேர்த்துள்ளார்கள். அது-போலவே இப் பல்கலைக்கழகத்தின் பதிப்பகமும் பல்வேறு அரிய நூல்களை வெளியிட்டு தமிழுலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பல்கலைக்கழகம் உருவாகிய நாளில் இருந்தே பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது. இப்-பதிப்பகம்   பழைமையான புகழ்பெற்ற பதிப்பகங்-களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இப் பதிப்பகத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் தமிழ்தான் முழங்க வேண்டும் என்ற கொள்கையைப் பேச்சளவில் இல்லாமல் செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 1931ஆம் ஆண்டு ரா.இராகவையங்கார் அவர்களுடைய ‘பாரிகாதை’ என்னும் நூல்தான் முதன் முதலில் பதிப்பிக்கப் பெற்றது. அதன்பிறகு பல்வேறு துறைசார்ந்த ஏறத்தாழ 625 நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் பெரும்பான்மை-யான நூல்கள் தமிழ் நூல்களாகும்.
கம்பராமாயணம் முழுமையும், செம்பதிப்பாக ,திருவருட்பா மூலமும் உரையும், திருமந்திரம், திருவாசகம், தொல்காப்பியம், சைவசித்தாந்தப் பொழிவுகள், பிற்கால சோழர் வரலாறு, திருமந்திரமாலை 300, ஞானாமிருதம், யாப்-பருங்கலக்காரிகை, சிவஞானபோதம், சிலப்பதிகாரம் போன்ற பல்வேறு நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. ,அர்த்தசாஸ்திரம், கௌடில்யம், பொருள்நூல் போன்ற நூல்கள் மொழிபெயர்த்தது போல, பிற மொழிகளில் இருந்து தமிழில் பல நூல்கள் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. டாக்டர் எஸ்.இராதா-கிருஷ்ணன் அவர்களின் ‘கீழை மேலை நாடு-களில் மெய்ப்பொருளியல் வரலாறு’ குறிப்பிடத் தகுந்த நூலாகும். தமிழரின் பண்பாட்டுச் சிறப்பினை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழர் பண்பாட்டு வரலாறு என்னும் நூல்  நான்கு தொகுதிகளாக வெளியிடப் பெற்றுள்-ளது. இந்நூல் தமிழக அரசுப் பரிசினையும் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ்மேடைகளில் தமிழிசை பாடப்பட வேண்டும் என்னும் அவாவின் காரணமாக, பிற மொழிகளில் இயற்றப்பட்ட பாடல்களைச் சிறந்த இசை அறிஞர்களைக் கொண்டு மொழிபெயர்த்து சுமார் 25 நூல்கள் பதிப்பித்துள்ளனர். திருப்பாம்புரம் டி.என்.சாமி-நாதபிள்ளை, வி.எஸ்.கோமதிசங்கர ஐயர், சிரோமணி என்.எஸ்.தேசிகன், க.வெள்ளை-வாரணனார் கே.பி. சிவானந்தம் பிள்ளை, ப.வைத்தியலிங்கம் பிள்ளை போன்றோரைத் துணையாகக் கொண்டு இசைத் தொடர்பான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
கலைப்புலம் சார்ந்த இதழ்கள், அறிவியல் இதழ்கள், பொறியியல் இதழ்கள்,இந்திய மொழிப்புல இதழ்கள், கல்வியியல் இதழ்கள், உளவியல் இதழ்கள் போன்ற இதழ்களும் ஆண்டுதோறும் பதிப்பிக்கப் பெறுகின்றன.
பல¢கலைககழக வெள¤ய¦டுகள¢
தம¤ழுக¢காகத் தொடங¢கப¢ பெற¢ற அண¢ணா-மலைப¢ பல¢கலைகழகத¢த¤ல¢ தம¤ழ¢ சார¢ந¢த பல ஆய¢வு நூல¢கள¢, இந¢ ந¤றுவனப் பத¤ப¢பகத¢த¤ன¢ வாய¤லாக வெள¤வந¢துள¢ளன. 1937ஆம¢ ஆண¢டில¤ருந¢து தம¤ழ்த் தொடர¢பான நூல¢கள¢ பத¤ப¢ப¤க¢கப¢ பெற¢று வருக¤ன¢றன. 
இப்பதிப்பகத்தின்வழி வெளியான பல்வேறு துறைசார்ந்த அவ¢வளவு நூல¢களையும¢ தொகுக¢க முடியாத காரணத¢தால¢, இக¢ கட¢டுரைய¤ல¢ தம¤ழ¤யல¢ துறை சார¢ந¢து வெள¤வந¢துள¢ள நூல¢கள¢ மட¢டும¢ தொகுத¢துத¢ தரப¢ பெற¢றுள¢ளன.

சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை

வ. ஜெயதேவன்


இந்தியப் பல்கலைக்கழகங்களுள் மிகவும் தொன்மையானவை மூன்று பல்கலைக்-கழகங்கள் ஆகும். அவை கொல்கத்தா, மும்பை, சென்னைப் பல்கலைக்கழகங்கள். அவை 1857இல் தொடங்கப்பெற்றவை. 150 ஆண்டு-களைக் கடந்த அவற்றுள் சென்னைப் பல்கலைக்கழகம் தென்னகப் பல்கலைக்-கழகங்களுக்கெல்லாம் அன்னைப் பல்கலைக்-கழகம் மட்டுமன்றிச் சில பல்கலைக்-கழகங்-களுக்குப் பாட்டிப் பல்கலைக்கழக-மாகவும் விளங்கிவரும் பெருமைக்கும் உரியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பன்முகச் சிறப்புக்களுள் அதன் பதிப்புத்துறையின் பங்களிப்பும் சிறப்பாகக் குறிக்கத்தக்கது. அப்பதிப்புத்துறை எப்போது தொடங்கப் பெற்றது, அது தொடங்கப் பெற்ற பின்னணி யாது, அதன் முதல் வெளியீடு எது முதலான வரலாறுசார் வினாக்களுக்கு விடைகாண இயலவில்லை. எனினும் அது ஆற்றிய, ஆற்றி-வரும் பற்பல பணிகள் பயன் மிக்கவை; போற்றப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்துகள் இருக்க நியாயம் இல்லை. அத்துறையின் வெளியீட்டுப் பணிகள் குறித்துச் சுருக்கமாக இங்கு நோக்கலாம்.
பாடத்திட்டங்கள்
சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு இணைப்புக் கல்லூரிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கல்லூரிகளில் பயிற்று-விக்கப்படும் பல்வேறு படிப்புப் பிரிவுகளுக்கு உரிய பாடத்திட்டங்கள் உரிய பாடத்திட்டக் குழுவில் (ஙிஷீணீக்ஷீபீ ஷீயீ ஷிtuபீவீமீs) வடிவமைக்கப்-பட்டுக் கல்வி அவை  (கிநீணீபீமீனீவீநீ சிஷீuஸீநீவீறீ), பேரவை (ஷிமீஸீணீtமீ)  ஆகியவற்றில் ஏற்கப்பட்ட பின்னர் ஆசிரியர், மாணவர் நலன் கருதித் தனி நூல்களாக வெளியிடும் நடைமுறை வழக்கில் உள்ளது.
பாட நூல்கள்
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பட்டப்படிப்புக்களில் அடித்தளப் படிப்பில் (திஷீuஸீபீணீtவீஷீஸீ சிஷீuக்ஷீsமீ) மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இம்மொழிப் பாடங்-களுக்கு உரிய பாட நூல்களைப் பல்கலைக்-கழகம் வெளியிட்டுவருகிறது.
அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு அறக்கட்டளைகள் நிறுவப்பட்-டுள்ளன. அறக்கட்டளை நிறுவத் தனியார் அல்லது அரசு நல்கும் நிதி வங்கி நிலைவைப்-பில் இடப்பட்டு அதன் வாயிலாகக் கிட்டும் வட்டி வருவாயைக் கொண்டு ஆண்டுதோறும் அல்லது வரையறுத்த காலத்தில் சொற்பொழி-வுகள், கருத்தரங்குகள் நடத்துவது வழக்கில் உள்ள முறை. இந்நிகழ்ச்சிகளில் அறிஞர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துவர் அல்லது கட்டுரை வழங்குவர். இவ்வுரைகளுள் அல்லது கருத்-தரங்கத் தொகுப்புக்களுள் தெரிவுசெய்யப்பெற்ற சிலவற்றைப் பல்கலைக்கழகம் நூல் வடிவில் வெளியிட்டுவருகிறது.
ஆய்விதழ்கள்
ஆய்வே பல்கலைக்கழக ஆசிரியர்களின் முதன்மையான பணி ஆகும். ஆதலின் அவர்கள் தமது ஆய்வுவழி அறியலாகும் அரிய உண்மை-களை உலகின் கருத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வப்போது கட்டுரைகள் வெளியிடுவது வழக்கம். அவர்களின் அத்தகு வெளியீட்டுக்கு உதவும் களமாகப் பல்கலைக்-கழகம் ஆய்விதழ்கள் பலவற்றை வெளியிட்டு-வருகிறது. தமிழாய்வு, உயராய்வு ஆகிய இதழ்கள் தமிழ்ப் புலம் சார்ந்தும், கிஸீஸீணீறீs ஷீயீ ளிக்ஷீவீமீஸீtணீறீ ஸிமீsமீணீக்ஷீநீலீ கீழைக்கலையியல், மொழிப்புலம் சார்ந்தும்,  ஙிuறீறீமீtவீஸீ ஷீயீ tலீமீ மிஸீstவீtutமீ ஷீயீ ஜிக்ஷீணீபீவீtவீஷீஸீணீறீ சிuறீtuக்ஷீமீ  மரபுசார் பண்பாட்டுப் புலம் சார்ந்தும், மிஸீபீவீணீஸீ றிலீவீறீஷீsஷீஜீலீவீநீணீறீ கிஸீஸீuணீறீ மெய்ப்பொருளியல் புலம் சார்ந்தும் வெளியிடப்படுகின்றன. அன்றியும், யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ tலீமீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ்  என்னும் பெயரில் தனித்தனியே கலையியல் புலம் சார்ந்தும் அறிவியல் புலம் சார்ந்தும் இரண்டு இதழ்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் மிஸீபீவீணீஸீ சீமீணீக்ஷீ ஙிஷீஷீளீ ஷீயீ மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ கியீயீணீவீக்ஷீs என ஆண்டு நூல் ஒன்றும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு நூல்கள்
பல்கலைக்கழக ஆசிரியர்கள், இணைப்புக் கல்லூரி ஆசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல்கள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம், மொழியியல் சார் ஆய்வு நூல்கள், அரசியல், ஆட்சியியல், இசையியல், இதழியல், உளவியல், கல்வியியல், குற்றவியல், சட்டவியல், சமயவியல், சமுதாய-வியல், தொல்பொருளியல், நூலகவியல், பொது-வாழ்வியல், பொருளியல், மானிடவியல், மெய்ப் பொருளியல், வரலாற்றியல் சார் கலையியல் ஆய்வு நூல்கள், இயற்பியல், உயிரியல், கணிதவியல், மருத்துவவியல், மனையியல், வேதியியல் சார் அறிவியல் ஆய்வு நூல்கள் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் முனைவர் பட்டப்பேற்றுக்கு அடிப்படையாய் அமைந்த வெளியீடுகளுள் கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழி-களின் ஒப்பிலக்கணம், ரா. பி. சேதுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய சொற்களும்  அவற்றின் பொருண்மையும், தமிழ் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும், வே.வேங்கடராஜூலு ரெட்டியார் எழுதிய கபிலர், பரணர், மா. இராசமாணிக்கம் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி, ந. சஞ்சீவி தொகுத்த சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள், இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும், பல்கலைப் பழந்தமிழ், தெய்வத்தமிழ், பெருந்தமிழ், க.த. திருநாவுக்கரசு எழுதிய சாகித்திய அகாதெமியின் பரிசு பெற்ற திருக்குறள் நீதி இலக்கியம், பு. ரா. புருஷோத்-தம நாயுடு செய்த திருவாய்-மொழி_ஈட்டின் தமிழாக்கம் (10 தொகுதி-கள்), எஸ். கே. நாயர் செய்த கம்ப ராமா-யணத்தின் மலையாள மொழிபெயர்ப்பு, ஏ. சங்கர் கேதிலயா செய்த பெரிய புராணத்தின் கன்னட மொழி பெயர்ப்பு, கே. குஞ்சுன்னி ராஜா ஆங்கிலத்தில் எழுதிய சமசுகிருத இலக்கியத்திற்குக் கேரளாவின் பங்களிப்பு, ஏ. சங்கரன் ஆங்கிலத்தில் எழுதிய இரச, தொனிக்-கோட்பாடு, சங்கரராஜூ நாயுடுவின் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு,  சிலப்பதிகார இந்தி மொழிபெயர்ப்பு,  எஸ். என். கணேசனின் மணிமேகலை இந்தி- மொழிபெயர்ப்பு, இந்தி_தமிழ் உறழ்ச்சி இலக்கணம், கே. ஏ. நீலகண்ட சாத்திரி ஆங்கிலத்தில் எழுதிய சோழர்கள் முதலியவை குறிப்பிடத்தக்கவை.
பதிப்பு நூல்கள்
ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சிற் பதிப்பிக்-கும் பணியைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிவைத்தவர் பேராசிரியர் வையாபுரிப்-பிள்ளை ஆவார். தமிழ் அகராதி ஆதார நூற்-றொகுதி என்னும் வரிசையில் அரும்பொருள் விளக்க நிகண்டு, நாமதீப நிகண்டு, கயாதரம், சிற்றிலக்கியத் திரட்டு (2 தொகுதிகள்) முதலியவற்றை அவர் பதிப்பித்-தார். அச்சில் வாரா அருந்தமிழ் என்னும் வரிசையில் மு. சண்முகம் பிள்ளை, இ. சுந்தர-மூர்த்தி பதிப்பில் திவாகரம் இரு தொகுதி-களாக வெளிவந்தது. நாககுமார காவியம், பாரதி தீபம், இருபுராண விருத்தம், அல்லி கதை முதலிய பல நூல்கள் இவ்வரிசையில் வெளியாயின. வை. இரத்தினசபாபதி பதிப்பித்த மெய்கண்ட சாத்திரங்கள், நா. பாஸ்கரன் பதிப்பித்த திருவருட்பயன் ஆகியனவும் இங்குச் சுட்டத் தக்கன.
அகராதிகள்
சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகளுள் மிகவும் புகழ் பெற்றவை அகராதிகள் ஆகும். 1924_39 காலப்பகுதியில் பகுதிப் பகுதியாகவும் பின்னர்ப் பின்னிணைப்புத் தொகுதி உள்ளிட்ட ஏழு தொகுதிகளாகவும் வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதி (ஜிணீனீவீறீ லிமீஜ்வீநீஷீஸீ) தமிழ் அகராதியியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இவ்வகராதி 1, 24, 405 பதிவுகளைக் கொண்-டது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் இத்தகைய பேரகராதி வெளி-வந்தது என்பதும் இன்றளவும் அளவிலும் தரத்திலும் இதற்கிணையாகவோ இதனை விஞ்சும் வகையிலோ தமிழில் ஓர் அகராதி வெளிவரவில்லை என்பதும் எண்ணிப்பார்க்கத் தக்கவை. இதன் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் இவ்வகராதிச் சாதனைக்காக அன்றைய அரசு அவருக்கு இராவ்பகதூர் என்னும் சிறப்புப் பட்டம் நல்கிச் சிறப்பித்தது.
இத்தகு சிறப்புடைய அகராதியை வெளி-யிட்ட சிறப்பு சென்னைப் பல்கலைக்கழகத்-திற்கு உரியது. இவ்வகராதியைத் திருத்தியும் புதுக்கியும் பெருக்கியும் பதிப்பிக்கும் பணி இப்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது. இத்-திருத்தப்பணித் திட்டத்தின் துணைவிளைவு-களாகப் பதினாறு அகராதிகள் தொகுக்கப்பட்-டுள்ளன. அப்பதினாறுள் பத்து அகராதிகளைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சட்டச் சொல்லகராதி, அணிகலன் அகராதி, சித்திரக் கவிக் களஞ்சியம், பாட்டியல் களஞ்சியம் ஆகியனவும், உரிச்சொல் நிகண்டு, நாமதீப நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பிங்கல நிகண்டு, பாரதிதீப நிகண்டு முதலியவற்றின் அகராதியும் மூலமும் தனித்தனியே நூல்களாகவும் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை முதலியவர்களைப் பணிக்குழுவிலும் கொண்டும் ஆக்ஸ்போர்டு சுருக்க அகராதியை (சிஷீஸீநீவீsமீ ளிஜ்யீஷீக்ஷீபீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்)  அடிப்படையாகக் கொண்-டும் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வெளியிட்ட ஆங்கிலம்_தமிழ்ச் சொற்களஞ்-சியம் விற்பனையில் மகத்தான சாதனை புரிந்த அகராதி ஆகும். இன்றும் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பார்க்குப் பெருந்துணை-யாகத் திகழ்ந்துவருகிறது அது.
மாரியப்ப பட் அவர்களின் துணையோடு பல்கலைக்கழகம் வெளியிட்ட கிட்டலின் கன்னட_ஆங்கில அகராதி (ரிவீttமீறீ’s ரிணீஸீஸீணீபீணீ-ணிஸீரீறீவீsலீ பீவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) இன்றுங்கூடக் கன்னட மக்களிடையே செல்வாக்குடையதாக விளங்கி-வருகிறது. மரியப்ப பட், சங்கர் கேதிலயா இணைந்து தொகுத்துப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள துளு_ஆங்கில அகராதி அத்துறையில் முன்னோடிப் பணியாக இன்றும் போற்றப்பெறுகிறது.
150 நூல் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவின் நினைவை நிலையாகப் போற்றும் பொருட்டு 150 நூல்கள் வண்ணமிகு விழா ஒன்றில் வெளியிடப்பட்டன. அவ்விழா-வில் இந்திய நாட்டின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதுகாறும் கூறியவற்றால், சென்னைப் பல்கலைக்கழகம் பல மொழிகளில், பல துறைகளில், பல வகைகளில் அறிவூட்டமான, பயன்பாடு மிக்க, தரமான, அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது எனத் தெளியலாம்.

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்

ப. பெருமாள்

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நூலகங்களுள், சரஸ்வதி மகால் நூலகம் ஒன்றாகும். இந்நூலகம் கி.பி. 16ஆம் நூற்றண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்-தில் அரண்மனை நூலகமாக ஆரம்பிக்கப்பட்டு, பின் வந்த மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்-பட்டது. நாயக்க மன்னர்கள் தஞ்சையை கி.பி. 1535ஆம் ஆண்டு முதலாக ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களுள் முக்கியமானவர்கள் ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆவர். இவர்களது காலத்தில் இம்மன்னர்கள் இயற்றிய நூல்கள் மற்றும் அரண்மனைப் புலவர்கள் இயற்றிய நூல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நூலகம் சரஸ்வதி பண்டாரம் என அழைக்கப்பட்டது. கி.பி. 1676க்குப் பின் மராட்டிய மன்னர்கள் 1855 வரை ஆட்சி செய்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கி.பி. 1684 முதல் கி.பி. 1712 வரை ஆட்சி செய்த சகஜி மன்னரும், கி.பி. 1798 முதல் கி.பி. 1832 வரை அரியணையிலிருந்த இரண்டாம் சரபோஜியும் ஆவர். சகஜி மன்னர் அதிகமாகப் புலவர்களை ஆதரித்ததனால் பல நூல்கள் எழுதப்பட்டன. இவர் காலத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி, மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. சகஜி மன்னரும் நூல்கள் இயற்றி-யுள்ளார். அவர் திருவாரூர் தியாகராஜர் பேரில் பாடிய கீர்த்தனங்கள் மிகவும் குறிப்பிடத்-தக்கனவாகும்.
இரண்டாம் சரபோஜி மன்னர் இந்நூலகத்தை வளர்த்து உலகறியச் செய்தவர் ஆவார். இவருடைய கல்வி மற்றும் கலை ஆர்வத்தினால் அரிய சுவடிகள், ஓவியங்கள், உலக வரை-படங்கள் மேலை நாட்டு அச்சு நூல்கள் இந்நூல-கத்தில் சேர்க்கப்பட்டன. இவர் கி.பி. 1820இல் காசி யாத்திரை செல்லும்போது தன்னுடன் நூலகர்கள் மற்றும் எழுத்தர்களை அழைத்துச்-சென்று இந்நூலகத்தில் இல்லாத சுவடிகளைப் பிரதி செய்து சேர்த்துள்ளார்கள். மேலும் காசியில் உள்ள 64 படித்துறைகளின் ஓவியத்தை அரண்மனை ஓவியர்களால் வரையப்பெற்று இந்நூலகத்தில் சேர்த்துள்ளார். மராட்டிய மன்னர்களால் வட இந்தியாவிலிருந்து இராமேசுவரம் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சத்திரங்களிலும் தான் அமைத்த -ஒரத்தநாடு சத்திரத்திலும் பள்ளிகள் ஆரம்பித்து, தமிழ், மராத்தி, வடமொழி கற்பிக்கப்பட்டது. மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் வழங்கு-வதற்காக கி.பி. 1803இல் கல்லால் ஆன தேவநாகரி அச்சகத்தை தோற்றுவித்தார். அவ்வச்சகத்தின் பெயர் நவ வித்யா எந்திரசாலா என்பதனை அவ்வச்சகத்தில் அச்சிடப்பட்ட குமாரசம்பவ சம்பு, அன்னம்பட்டா, அமரகோசம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம். தென்னிந்தியாவில் முதன்முதலில் ஆரம்பித்த தேவநாகரி அச்சுக்கூடம் இது என இந்தியன் ஆன்டிக்கொரி என்ற நூலில் குறிப்பிடப்பட்-டுள்ளது.
சரபோஜி மன்னர் மருத்துவத்தில் மிகவும் ஆர்வம் மிக்கவர். இவ்வரண்மனையில் ‘தன்வந்திரி மகால்’ என்னும் மருத்துவமனையை ஆரம்பித்து மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்தார். இம்மருத்துவமனையில் சித்த, ஆயுர்வேத, அலோபதி மற்றும் யுனானி மருத்துவமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவமுறைகளைப் பிற்கால சந்ததியினர் அறியும் வகையில் அரண்மனைப் பண்டிதர்-களைக் கொண்டு ஓலைகளில் எழுதி வைக்கச் செய்துள்ளார். இது போன்று வானவியல், சோதிடம், தத்துவம் போன்ற பலதரப்பட்ட வல்லுநர்களைக் கொண்டு நூல் எழுதச் செய்து சேர்ப்பித்துள்ளார். இவருடைய காலத்தில் தஞ்சைக்கு வருகை புரிந்த ரெவரண்டு ஃபாதர் பிஷப்ஹீபர் மற்றும் வேலன்சியா போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து, இம்மன்னர் கல்வி மற்றும் கலைக்கு ஆற்றிய பணியினை அறிய முடிகிறது. இம்மன்னர் பதவிக்கு வந்தவுடன் இந்நூலகச் சுவடிகளுக்கு சரியான அட்டவணை இல்லை என்பதை அறிந்து, தகுந்த நபர்களை அமர்த்தி ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளுக்கு ஓலையிலும், காகிதச்சுவடிகளுக்குக் காகிதத்திலும் அகர-வரிசைப்படுத்தி அட்டவணை தயார் செய்-துள்ளார். இவ்வாறு இவர் இந்நூலகத்தை ஓர் அரிய கருவூலமாக மிளிரச் செய்தார். அவருடைய தொண்டினை உலகுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அவருடைய பெயரைச் சேர்த்து தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் என்று அழைக்கப்படுகிறது.
சுவடிகள், நூல்கள் தொகுப்பு
இந்நூலகம் கி.பி. 1918ஆம் ஆண்டு வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொதுநூலகமாகவும் மாற்றி-யமைக்கப்பட்டது. மேலும் இந்நூலகத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் உள்ள சுவடிகள் மன்னர்காலத்தில் தொகுக்கப்பட்டது மட்டுமின்றி, பல கல்வியாளர்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற சுவடிகளும் நூல்களும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 49,000 சுவடிகள் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் மராட்டிய மொழிகளில் பனை ஓலைகளிலும், காகிதத்திலும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலகச் சுவடிகள் வேதாந்தம், புராணம், இசை, நாடகம், மருத்துவம், சோதிடம் போன்ற 18 பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்நூலகத்தில் சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்மொழிச் சுவடிகள் உள்ளன. இச்சுவடிகள் பனைஓலைகளில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச்சுவடிகளை இலக்கியம் மற்றும் மருத்துவம் எனப் பல பிரிவு-களாகப் பிரித்து இருபத்தாறு தொகுதிகள் விவர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன. இச்-சுவடிகள் இலக்கியம், சிற்றிலக்கியம், புராணம், தலபுராணங்கள், பக்தி இலக்கியங்கள், ஜோதிடம், தத்துவம், இசை, நாடகம், சித்த மருத்துவம் போன்ற தலைப்புகளில் உள்ளன. சில தமிழ்ச்-சுவடிகள் வடமொழி வார்த்தை கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகளில் ஆண்டு, மாதம், நாள் மற்றும் கிழமை குறிப்பிட்டு இருப்பின் காலம் காணலாம். ஆனால் ஆண்டு, மாதம், நாள் மட்டும் குறிப்பிட்டிருப்பின் தமிழ் வருடங்களில் எந்தச் சுற்று எனக் காண்பது கடினம். தற்பொழுது சுவடிகளை நூல்களாகப் பதித்தல் போன்று முற்காலத்தில் மடாதிபதிகள் தங்கள் மாணாக்கர் மூலம் ஒரு சுவடிக்குப் பல பிரதிகள் தயாரித்து பலருக்குத் தானமாக கொடுத்துள்ளனர். இதனை கிரந்த தானம் என குறிப்பிடுவர். இதுபோன்ற செயல்பாட்டினாலும், பல அறிஞர்கள் தங்களுக்குத் தேவையான சுவடிகளை மற்றவர்களிடம் இருந்து பிரதி செய்தமையாலும் இன்று ஒரு தலைப்பில் பல சுவடிகள் கிடைக்கப் பெறுகின்றன.
அரிய சுவடிகள்
இந்நூலகச் சுவடிகள் சுமார் 400 ஆண்டு-களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். இந்நூலகத்தில் உள்ள பல தலைப்புகளில் உள்ள சுவடிகள் இங்கு மட்டுமே உள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் சில சுவடிகள் அரியனவாகவும் கருதப்படுகிறது. அவற்றுள் வடமொழிப் பிரிவில் உள்ள ‘சப்தார்த்த சிந்தாமணி’ என்னும் நூலில் வலது பக்கம் இருந்து படித்தால் இராமனின் கதை-யாகவும் இடது பக்கத்தில் இருந்து படித்தால் கிருஷ்ணன் கதையாகவும் கூறும் வண்ணம் வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நிரோஷ்ட்ய சீதா கல்யாணம்’ என்னும் தெலுங்கு நூல் சீதா கல்யாணத்தை இரு உதடுகளும் சேராமல் உச்சரிக்கும் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ‘மேகமாலா மஞ்சரி’ என்னும் நூல் மேகக்கூட்டங்கள், விண்மீன்கள் போன்ற-வைகளைக் குறிப்பிடுவதுடன் மழை பெறும் அளவு, வானிலை போன்ற பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதுபோன்று தமிழ்ச் சுவடிகளில் ‘கூப சாத்திரம்’ என்னும் சுவடி நிலத்தடி நீர் பற்றிய ஆய்வின் முக்கிய நூலாகும். ‘பூமி சல்லியம்’ என்னும் பிறிதொரு சுவடி நிலத்தடி மூலங்களைப் பற்றிக் கூறுவதாகும். பஞ்சபட்சி சாத்திரம் என்னும் மிகச் சிறிய அளவு சுவடி (5 ஜ் 3 செ.மீ.) இந்நூலகத்தில் உள்ளது. மேலும் சில சுவடிகள் தமிழ் மொழியில் வேறு எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ‘பாவப்பிரகாசிகா’ என்னும் கண்நோயைப் பற்றிய நூலும், வீரசிவாஜிக்கு அவரது குரு சமர்த்த ராம்தாஸ் செய்த ‘தால போதம்’ என்னும் வேதாந்த உபதேசங்கள் தமிழ் மொழியில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதுபோன்ற பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
அரிய நூல்கள்
இந்நூலகத்தில் சுவடிகளுடன் சுமார் 65,-000 அச்சுநூல்கள் உள்ளன. இந்நூல்கள் மேலை நாட்டில் அச்சான சரபோஜி மன்னரின் நூல் தொகுப்புடன் கி.பி.1918க்குப் பின் தனியார்-களிடமிருந்து பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள், மத்திய அரசின் மூலம் பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்ட நூல்களும் ஆகும். சரபோஜி மன்னர் தொகுப்பில் சுமார் 4500 நூல்கள் ஆங்கிலம், ஜெர்மன், டேனிஷ், டச்சு போன்ற மொழிகளில் உள்ளன. இத்தொகுப்பில் மிகவும் பழைய அச்சுநூல் கி.பி. 1694இல் வெளியிடப்-பட்ட பிரெஞ்சு மொழி உலக வரைபட நூலாகும். அது போன்று தமிழகத்தில் கி.பி. 1712இல் தரங்கம்பாடியில் சீகன்பால் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் அச்சுக் கூடத்தில் கி.பி. 1806இல் அச்சடிக்கப்பட்ட ‘சாலமோன் ராசாவின் வாக்கியங்கள்’ என்ற நூல், மேல் நாட்டினர் தமிழ் கற்பதற்காக கி.பி. 1779 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரி அச்சகத்தில் சுமார் 6000, தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தத்துடன் பாதர் பெப்ரீசியஸ் அவர்களால் தொகுத்து ‘தமிழும் இங்கிலீசுமாயிருக்கிற அகராதி’ (கி விணீறீணீதீணீக்ஷீ ணீஸீபீ ணிஸீரீறீவீsலீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) போன்ற பழமையான நூல்களும் நூலகத்தில் உள்ளன. இந்நூலகத்தில் சுவடிகள், அச்சுநூல், அரிய வரைபடங்கள் ஓவியங்களுடன் மராட்டிய மன்னர்கள் காலத்தில் 250 ஆண்டுகால மராட்டிய மொழியில் மோடி என்னும் சுருக்கு எழுத்தால் எழுதப்பட்ட ஆவணங்கள் 1200க்கு மேற்பட்ட கட்டுகளும் (சுமார் 3,00,000 தாளில்) உள்ளன. இவ்வாவணங்கள் கி.பி. 1750 இலிருந்து 1855 வரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகள், கடிதங்கள், கணக்குகள் மற்றும் நாட்குறிப்புகள் கொண்ட ஆவணங்கள் ஆகும்.
இந்நூலகம் கி.பி. 1918 வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொது நூலகமாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக உள்ளது. இந்நூலகத்தின் முக்கியப் பணிகள் சுவடிகளைத் தொகுத்தல், அட்ட-வணைப்-படுத்தல், பாதுகாத்தல், வெளிவராத சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடுதல் மற்றும் ஆய்வாளர்களுக்கு உதவுதல் ஆகும். பாதுகாப்புப் பணியாக இந்நூலகச் சுவடிகளைப் பிரதி செய்தல், மைக்ரோ ஃபிலிமில் பதிவு செய்தல், சுவடிகள், நூல்கள் அழியா வண்ணம் மரபு வழி மற்றும் நவீன முறை பாதுகாப்புப் பணிகள் செய்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
இந்நூலகத்தில் காகிதச்சுவடிகள், புத்தகங்-களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பூச்சிகள் விரும்பாத மணம் கொண்ட பொருட்-களான வசம்பு, கரும்சீரகம், இலவங்கப்பட்டை, மிளகு, கிராம்பு ஆகிய ஐந்து பொருட்களையும் நிழலில் காயவைத்துப் பொடிசெய்து ஒரு வெள்ளைத் துணியில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடி-யுடன் சிறு சூடக்கட்டியைச் சேர்த்துக் கட்டி பீரோக்களில் வைத்துப் பூச்சி-களின் பாதிப்-பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
நூலக அட்டவணைகள்
இந்நூலகத்தில் உள்ள சுவடிகளுக்கு 1801இல் சரபோஜி மன்னர் காலத்தில் ஓலைச் சுவடி-களுக்கு ஓலை-யிலும், காகிதச் சுவடிகளுக்குக் காகிதத்திலும் அட்டவணை தயாரிக்கப்பட்-டுள்ளது. அதன் பின் அவரது மகன் இரண்-டாம் சிவாஜி காலத்திலும், 1855இல் தஞ்சையின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹென்றி போர்ப் என்பவரது ஆணையின்படியும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.  1872இல் தஞ்சையில் செசன்சு நீதிபதியாக இருந்த டாக்டர் ஏ.சி. பர்னல் நான்கு ஆண்டுகள் இந்நூலகத்தி-லிருந்த வடமொழிச் சுவடிகளைப் பார்வையிட்டு அட்டவணைப்படுத்தி, 1880ஆம் ஆண்டு லண்டனில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். அதன்பின் 1918இல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட பின் இந்நூலகச் சுவடிகளைச் சரிபார்த்து முழுமையான விவர அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதுவரை 62 தொகுதி சுவடிகளுக்கான விவர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அட்டவணைப்படுத்தும் பணி முடிவுற்ற பின் நூல்கள் வெளியிடு-வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1938இல் கௌரவச் செயலராகப் பணியாற்றிய அட்வகேட் எஸ். கோபாலன் அவர்களால் நூலகத்திற்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வண்ணம் நூலகத்தில் உள்ள சிறிய சுவடிகளையும் மற்றும் சுவடிகள் பற்றிய தகவல்களை வெளியிட, வருடத்திற்கு மூன்று முறை வெளியிடும் வகையில் பருவஇதழ் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெளியிடப்-படுகிறது. பல சுவடிகளைப் பற்றிய தகவல், குறுஞ்சுவடிப் பதிப்புகள், பருவஇதழ் வாயிலாக வெளியிடப்படுகின்றன. 1948ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள இரண்டு சுவடிகள் நூலகங்-களான சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் சென்னையில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்களில் உள்ள முக்கியச் சுவடி-களை நூல்களாக வெளியிட்டு மக்கள் பயன்-பாட்டிற்கு ஏற்படுத்த தமிழக அரசால் டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்களைத் தலைவ-ராகக் கொண்ட வல்லுநர் குழு மக்களுக்குப் பயன்படும் மற்றும் அரிய, வெளிவராத சுவடிகளைத் தேர்வு செய்து தமிழக அரசின் நிதியுதவியில் பதிப்பித்து வெளியிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு மொழிச் சுவடிகளை அந்தந்த மொழி வல்லுநர்களைக் கொண்டு தேர்வு செய்து பதிப்பித்து நூல்களாக வெளி-யிடப்பட்டன. அவ்வாறு வெளியிடப்பட்ட இந்நூலகத்தின் முதல் நூல் 1948இல் சமஸ்கிருதச் சுவடியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் வி. இராகவன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘முத்ராக்சா நாடக கதா’ என்ற நூலாகும். அது போன்று தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட முதல் நூல் இந்நூலகப் பண்டிதர் கே. வாசுதேவ சாஸ்திரி மற்றும் டாக்டர் எஸ். வெங்கட்ராஜன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘சரபேந்திர வைத்திய முறைகள்: குன்மரோக சிகிச்சை’ என்ற நூலாகும். 1948 முதல் 2008 வரை சுமார் 515 நூல்கள் சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  அவற்றுள் சுமார் 250 நூல்கள் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. சில நூல்கள் மற்ற மொழியிலிருந்து மொழி-பெயர்ப்பு நூல்களாக வந்துள்ளன. மற்ற மொழி நூல்கள் தமிழ் மொழி சுருக்கங்களுடன் வெளி-யிடப்பட்டுள்ளன. இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி தஞ்சை மற்றும் பதிப்புப் பணியில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல்கள் தேர்வு செய்ய அவ்வப்பொழுது மொழி வல்லுநர் குழு ஒன்றையும் அமர்த்தி தேர்வு செய்யப்படுகிறது.
இந்நூலகத்தில் இலக்கியம், சிற்றிலக்கியம், நிகண்டு, இலக்கணம், தத்துவம், மருத்துவம், ஜோதிடம், இசை, நாடகம், சிற்பம், நீதிநூல், தலபுராண நூல்கள், சமய நூல்கள் போன்ற தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் இலக்கிய நூல்களாகப் பெருந்தேவனார் பாரதம், நாலடியார் உரைவளம், திருக்குறள் பழைய உரை, திருக்குறள் ஜைன உரை என்ற இலக்கிய நூல்களும், சிற்றிலக்கிய நூல்களான அரிச்சந்திரன் அம்மானை, அதிரியர் அம்மானை, சித்திர புத்திரன் அம்மானை, சீவகசிந்தாமணி அம்மானை, கஞ்சனம்மானை, மார்க்கண்டேயர் அம்மானை, ராமையன் அம்மானை, பார்கவநாதர் அம்மானை, திரௌபதி அம்மானை, சுந்தரி அம்மானை,  இராமர் அம்மானை, காஞ்சி மன்னன் அம்மானை நூல்களும், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், கமலாலய அம்மன் பிள்ளைத்-தமிழ், சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும் குடந்தையந்தாதி, அருணகிரியந்தாதி, பிள்ளையந்தாதி, மருதூர் அந்தாதி போன்ற அந்தாதி நூல்களும், நாராயண சதகம், வடிவேல் சதகம், குமரேச சதகம் போன்ற சதக நூல்களும் ஞானக் குறவஞ்சி, வெள்ளைப்-பிள்ளையார் குறவஞ்சி நூல்களும், மாலைத் தொகுப்பு நூல்களான ராஜகோபால மாலை, திருவாய் மொழி வாசக மாலை போன்ற மாலை நூல்களும் வண்ணத்திரட்டு நூல்களும் குசலவன் கதை, மரியாதை ராமன் கதை, ஆழம் நபி பாட்டு, இராயர் அப்பாஜி கதை நூல்களும், தாது வருட கருப்பி கும்மி போன்ற கும்மி நூல்களும் நம்மாழ்வார் திருத்தாலாட்டு போன்ற தாலாட்டு நூல்களும், புராண நூல்களான அருணாசல புராணம், ஆத்திசூடி புராணம், கும்பகோணம் புராணம், கூர்ம புராணம், சரப்புராணம், ததீசீ புராணம், திருசோற்றுத்துறை தலபுராணம், திருநல்லூர் புராணம், திருப்பெருந்துறை புராணம், திருவாப்பூர் புராணம், திருவையாற்றுப் புராணம் போன்ற புராண நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன. இலக்கண நூல்களான தொல்-காப்பியம் இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், சிதம்பரச் செய்யுட் கோவை, நிகண்டு நூல்களான ஆசிரியர் நிகண்டு, சோதிட நூல்களான காலப்பிரகாசிகா வராகர் ஓரசாத்திரம், ஜாதகலங்காரம், காலசக்கரம், ஜாதக சிந்தாமணி, பஞ்சபட்சி சாத்திரம், நட்சத்திர சிந்தாமணி, நீதி நூல்களான நீதி வெண்பா, நீதி சதகம், நீதி நூல் திரட்டு, தரும நெறி நீதிகள், சாணக்கிய நீதி சமுச்சியம், சித்த மருத்துவ நூல்களான சரபேந்திர வைத்திய முறை நூல்கள், அகத்தியர், ராமதேவர், போகர், தன்வந்திரி நூல்கள் வைத்தியர் ரத்னாவளி, சித்தமருத்துவச் சுடர், அனுபவ வைத்தியத் திரட்டு போன்ற வைத்திய நூல்கள் ராம நாடகக் கீர்த்தனைகள், சப்தம் என்னும் தாளச் சொற்கட்டு சிறு தொண்டர் நாயனார் இசை நாடகம், ஐந்து தமிழிசை நாட்டிய நாடகம், தமிழிசைப் பதிகங்கள் தாள சமுத்திரம் போன்ற இசை-நூல்கள், தனிப்பாடல் திரட்டு, மலையருவி போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களும், பண்டையகால கணக்குமுறைகளைக் கூறும் கணக்கதிகாரம் நூல்களும், திருமுரு-காற்றுப்படை, பக்தி இலக்கிய நூல்களும் சுவடி-களிலிருந்து வெளியிடப்படுகின்றன. சுவடிகள் இல்லாத ஆய்வு நூல்களாகத் தமிழக கோயிற்-கலை மரபு, தஞ்சை நாயக்கர் வரலாறு, தமிழகத்-தில் விஜயநகர ஆட்சி, மனோரா சரபோஜி மன்னர் ஆய்வுக் கோவை, கோவில் அரும்-பொருள் பாதுகாப்பு நூல், கொடுந்தமிழ், செந்தமிழ் என்னும் மதிப்பு நூல்களும் ஆனத கந்தம், ராஜமிருகாங்கம், பரதார்ணவம் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன.
இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி, அடிகளாசிரியர், தி.வே. கோபாலையர், தி.வே. கங்காதரன், டாக்டர் வி. இராகவன், கீ. கோதண்ட-பாணி, சி. கோவிந்தராஜனார், டாக்டர். வெங்கட்ராமன், டாக்டர். சௌரிராஜன், டாக்டர் ரங்கராஜன் போன்ற சுவடியியல் அறிந்த பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து, நுண்ணாய்வு செய்து நூல்கள் வெளியிடப்-படுகின்றன. இப்பணி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் பதிப்பித்த நூல்கள் வாசகர்களின் தேவைக்கேற்ப மறுபதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. இதுபோன்று இந்-நூலகம் தொடர்ந்து நூல்கள் வெளியிடுவ-துடன் மக்கள் பயன்படும் வகையில் சரபோஜி மன்னர் பிறந்தநாளையட்டி ஓரிரு மாதங்-களுக்கு ஒவ்வொரு வருடமும் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்கிறது. இவ்வாறாகப் பதிப்புப் பணியைச் செய்யும் நூலகத்தை நாம் பாதுகாத்துப் பயனடைய வேண்டும்.

நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை

 பா. தேவேந்திர பூபதி

பழமையும் இலக்கிய, இலக்கணச் சிறப்புமுடைய தமிழ்மொழி முச்சங்கங்களைக் கண்டது. முதல் சங்கத்தில் அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகராயர் போன்ற புலவர்களை-யும் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்ற நூல்களையும் கடைச்சங்கத்-தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார் போன்ற புலவர்கள் நெடுந்-தொகை நானூறு, ஐங்குறுநூறு நூல்களை இயற்றியிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுச் சான்றுக-ளாலும் அறிய முடிகிறது. பண்டைக் காலந்-தொட்டே தமிழர-சர்கள் தமிழை வளர்த்தனர் என்பதை சங்கப்-பாடல்கள் மூலம் அறியலாம். பின் தமிழ்-நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் பிற நாட்டவரின் மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்படலாயின. இக்காலத்தில் தமிழை ஆதரிக்கும் அரசர்களும் குறைந்ததினால் தமிழ்மொழியின் வளர்ச்சி சற்று தடைபடத் தொடங்குகையில் சேதுபதி மன்னர்களின் தமிழ்ப்பற்று அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இந்த வேந்தர்களது தமிழ்ப்பற்றின் அடையாளமென நான்காம் மதுரைத் தமிழ்ச்சங்கம் விளங்குகிறது.
ஒருமுறை பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் சில காலம் தங்க வேண்டி இருந்தது. அவரது வருகையின் அருமையறிந்த மதுரை அறிஞர்கள் பலர் அவரது பிரசங்கத்தைக் கேட்க ஆவலாயிருந்தனர். அவர்களது விருப்பத்தை-யறிந்த தேவரவர்கள் உபந்யாசங்கள் நடத்த நேர்ந்தபோது கம்பராமாயணம், திருக்குறள் நூல் பிரதிகள் அவருக்கு வேண்டியிருந்தன. சொல்லி அனுப்பிய நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் நேரத்திற்குக் கிடைக்கவில்லை. இந்த நிலைமை அறிந்ததும், ‘தமிழ் நிலை பெற்ற... மதுரை, கூடலினாய்ந்த ஒண் தீந்தமிழ்’ என்று முன்னோர் சிறப்பித்ததும் செந்தமிழின் பிறப்பகமான மதுரையிலே ‘தமிழுக்கு கதி’ என்ற கம்ப ராமாயணமும் திருக்குறளும் கிடைப்பது அருமையாகிவிட்டதே’ என்று அவர் வருந்தி-னார். இந்தச் சூழ்நிலையே மதுரையில் தமிழ்ச்சங்கம் தோன்றக் காரணமாக அமைந்தது.
மதுரை மாநகரில், சென்னை மாநில மாநாடு 1901-ஆம் வருடம் மே மாதம் 21, 22, 23, தேதி-களில் நடைபெற்றது. மாநாட்டுக்குப் பாண்டித்-துரைத் தேவர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். அந்த மாநாட்டில், தமிழின் சிறப்புகளை எடுத்துக்கூறி, தற்போது தமிழ் வளர்ச்சி தடைபட்டிருப்பது குறித்தும் உள்ள நிலையினை விளக்கி, சங்கம் நிறுவ தாம் கருதியிருக்கும் எண்ணத்தை வெளியிட்டார். மாநாடு நிறைவடைந்த மறுநாள் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நடக்கவிருக்கும் தமிழ்ச்சங்கப் பேரவைக்கு மாநாட்டு உறுப்பினர்-களும் மக்களும் ஆதரவு தரக் கோரினார். அதன்படி அனைவரும் வந்திருந்து சிறப்பித்தனர். பேரவையில் கூடியிருந்தவர்களுக்குத் தன் எண்ணத்தைத் தெளிவாகக் கூறி செய்ய வேண்டிய கடமையையும் விளக்கினார். அங்கிருந்த அனைவரும் தங்களால் இயன்ற அளவு உதவி புரிவதாகக் கூறினர். இவ்வாறு ‘பாண்டிய மன்னர்களுக்குப் பின் தமிழை வளர்க்க முடிவேந்தர் ஒருவரும் இல்லையே’ என்று புலவர்கள் வாடிய பொழுது சேதுபதி மன்னர்கள் இக்குறையைப் போக்க முயன்றனர்.
1901ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேதுபதி உயர்நிலைப்-பள்ளியில் தமிழ்ச்சங்கம் நிறுவப் பெற்றது. சங்கத் திறப்புவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அறிஞர்களும், புலவர்களும் சிறப்புரைகள் ஆற்றினர். தமிழ்ச்சங்கம் தொடங்கப் பெற்றதற்-கான காரணம், தம் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காகவல்ல. ஒருமுறை அவருக்கு மதுரையில் சொற்பொழிவுக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்காமல், தமிழ் வளர்த்த மதுரையில் தமிழின் நிலைகண்டு அதை காப்பாற்றுவதற்காகத் தொடங்கப்பட்டதாகும். தமிழ்ச்சங்கத்தில் ‘நூலாராய்ச்சி சாலை’ என்ற பிரிவிலிருந்த வித்வான்கள் ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டனர்.
பாண்டித்துரைத் தேவர் 1867ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள் பிறந்தார். இளமை முதலே அறிஞர்களிடம் இலக்கியம், இலக்கணம் கற்றுப் புலமை பெற்று விளங்கியதோடு சைவ சித்தாந்தத்திலும் புலமை பெற்றிருந்தார். முச்சங்கங்களை நிறுவி தமிழ் வளர்த்த பாண்டியர்கள் போல, நான்காம் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த பெருமைக்கு உரியவராவார். இவர் புலவர்களை மதிப்பதிலும் உதவும் மனப்பான்மையிலும் தம் முன்னோர்களைப் போலவே திகழ்ந்தார். நாராயண அய்யங்கார் என்பவர், சங்க கலாசாலையின் தலைமை-யாசிரியராகவும், ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரிய-ராகவும் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார். தமக்குப் பின்னர் தமிழ்ச்சங்கத்தைச் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பெற்ற-வருள் அவரும் ஒருவர்.
‘திரு நாராயணர் மேல் தேவர் கொண்ட பற்று மிகப் பெரியது. அவர் புலமைத்திறத்தை மதித்த பான்மை அதனினும் பெரிது. ஒருநாள் வெயிலில் நடந்துவந்த களைப்பால் தம் கட்டிலிலே நாராயணர் அயர்ந்து உறங்கினராக. அவரை எழுப்புவதற்காகச் சென்ற ஏவலனைத் தடுத்து கட்டிலின் பக்கம் ஒரு நாற்காலியிட்டு அமர்ந்து தாமே விசிறி கொண்டு விசிறி ‘கவரி வீசிய இரண்டாம் காவலராக’ விளங்கியவர் பாண்டித்துரை’ (இரா. இளங்குமரன் 1987 பக்.72) என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டித்துரைத் தேவர் பல நூல்களிலிருந்து சிறந்த கருத்துகள் அடங்கிய பாடல்களைத் தொகுத்து ‘பன்னூற்றிரட்டு’ என்று பெயரிட்டு ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் தமிழ்ச்சங்கத்தின் 5வது வெளியீடாகவும், ‘சைவ மஞ்சரி’ என்ற நூலைத் தொகுத்து சங்கத்து 2வது வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார். சிவஞான சுவாமிகள் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், முருகன் மீது காவடிச்சிந்து, சில தனிப்பாடல்களும் பாடியுள்ளார். உ. வே. சாமிநாதையர் வெளி-யிட்ட மணிமேகலை, புறப்பொருள் வெண்பா-மாலை முதலியன பாண்டித்துரைத்தேவர் செய்த பொருளுதவியால் வெளிவந்தனவாகும்.
தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியிடப்பட்ட நூல்கள் 17; அவை முறையே வெளியீட்டு எண் வரிசைப்படி.
1. ஞானாமிர்த மூலமும் உரையும்
2. சைவமஞ்சரி 3. யாப்பணியிலக்கணங்கள் (விசாக பெருமாளை-யர், பஞ்சலஷ்ண வினா விடையினின்று எடுத்தவை) 4. வைத்திய சாரசங்-கிரகம் 5. பன்னூற்றிரட்டு 6. மகாபாரதம் அரும்பதவுரையுடன் (வில்லிப்புத்தூராழ்வார் இயற்றியது) 7. தோத்திரத் திரட்டு 8. தமிழ்ச் சொல்லகராதி உயிர் வருக்கம் முடிய (1, 2, 3 பாகங்கள்) 9.  அபிதான சிந்தாமணி 10. தொல் காப்பிய செய்யுளியல்_நச்சினார்க்கினியருரை (உரையாசிரியருரையுடன்) 11. திருவருணைக் கலம்பகம் 12. அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ் 13. கலைசை சிலேடை வெண்பா 14. தொல்-காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி 15. திருவாரூர் நான்மணிமாலை 16. மதுரை நான்காம் தமிழ்ச்-சங்க வரலாறு 17. திருவாரூர் நான்மணிமாலை.
மிமி
மனிதன், என்று மொழியை உண்டாக்கி-னானோ அப்போதே அதற்கு வரிவடிவம் தரத் தொடங்கிவிட்டான். காலத்திற்கேற்றவாறு எழுதுபொருட்களின் மாற்றமும் ஏற்படத் தொடங்கலாயின. சுட்ட செங்கற்கள், மரப்பலகைகள், தோல்கள், மரப்பட்டைகள், பனையோலைகள், உலோகத் தகடுகள் என எழுத்துக்கள் கூரிய கற்கள், ஆணிகள் கொண்டு எழுதப்பட்டன. ஏடுகளில் எழுத அதிக நேரமும் உழைப்பும் செலவழிப்பதோடு சிக்கலான வேலையாகவுமிருந்தது. ஏடெழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் கூலிக்கு ஏடெழு-தினர். ஒரு நூலைக் கூலி கொடுத்து எழுதுவது செலவு அதிகம் பிடிப்பதனால் இது செல்வந்தர்-களுக்கு உரியதாகவுமிருந்தது. நூலை வைத்திருப்-பவர்களிடம் வாங்கிப் பிரதி எடுக்கும் பழக்கமும் இருந்தது. கூலிக்கு எழுதும்போதும் பிரதி செய்யும்போதும் தவறுகள் நேர்ந்தால் ஏட்டில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. மேலும், சுவடிகளைப் பாதுகாப்பது மிகக் கவன-மாகவும் அதேசமயம் கடினமாகவும் இருந்-துள்ளது. அச்சுச் சாதனங்கள் தோன்றியப்பின் புத்தகம் கிடைப்பதிலுள்ள சிரமங்கள் குறைந்-துள்ளன. சுவடிகள் நூலாக, ஒரு சில பிரதிகளே இருந்தமையால் யாரிடமும் புத்தகம் வாங்குவது கடினமான காரியமாகவே இருந்து வந்துள்ளது. அதிகப்படிகளுக்குச் செலவு அதிகம் பிடித்தது.
‘பெர்சிவல் ஐயர் 1835ஆம் ஆண்டுக்கு முன்னர் சதுரகராதி ஓலைப்பிரதியைப் பத்து பவுன் (நூற்றைம்பது ரூபாய்) விலை கொடுத்து வாங்கியதாகவும், அந்த அகராதி அச்சிற் பதிக்கப்பட்டப் பிறகு பிரதியை 2லு ஷில்லாங் (1 ரூபா 14 அணா) விலை கொடுத்து வாங்கிய-தாகவும் மர்டாக் என்பவர் எழுதியுள்ளார். இதிலிருந்து அச்சுப் புத்தகத்துக்கும் ஏட்டுச்-சுவடிக்கும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வு-களைத் தெரிந்து கொள்ளலாம்’ (மயிலை சீனி. வேங்கடசாமி 1962 பக். 113, 114)
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அ.முத்துசாமிப்-பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், தாண்டவராய முதலியார், மழைவை மகாலிங்கையர் போன்றோர் பதிப்புக்கலையில் முக்கியப் பங்கு ஆற்றியவர்களாகக் கொள்ள-லாம்.
தமிழ்நாட்டில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் 16ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்கள் முதன்முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தன. 1835-க்குப் பின்னர் உள்நாட்டவர் அச்சு இயந்திரங்களை வைத்துக்கொள்ளும் உரிமை-யைப் பெற்றபின் சுவடி வடிவிலிருந்த இலக்கி-யங்கள் புத்தகங்களாக வெளிவரத் துவங்கின.
நிறுவனமயப்பட்ட பதிப்புப்பணிகள் முழுமையாகத் தொடர முடியாத நிலையில் நான்காம் மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றி, தமிழிலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடு-வதை நோக்கமாகக் கொண்டது.
தமிழ்ச்சங்கப் பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணி தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. சங்கப் பதிப்பாசிரியர்களுள் ரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், உ.வே.சாமிநாதையர், சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர், ச.வையாபுரிப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாயிருந்தனர். தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நூலாராய்ச்சி சாலையும் உருவாக்கப்பட்டு, அங்கிருந்த வித்வான்கள் ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டனர். இதனால், பலரிடமிருந்து  சுவடிகள் ஆடிப்-பெருக்கிலும், போகியிலும் அழியக் காத்திருந்த நிலையில் காப்பாற்றப்பட்டு இலக்கியங்களாக வெளிவந்தன. இதனை வெளியிடும் களமாக ‘செந்தமிழ்’ இதழ் அமைந்தது. மதுரை தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகவும், ‘செந்தமிழ்’ இதழின் வெளியீடாகவும் பல நூல்கள் பதிப்பிக்கப்-பட்டன. இந்நூல்களை வேறுபடுத்திக்காட்ட தமிழ்ச்சங்க பிரசுரம், செந்தமிழ் பிரசுரம் என்று முகப்பில் குறிப்பிட்டிருந்தது. பதிப்பு வரலாற்றில் தமிழ்ச்சங்கப் பதிப்பானது, பதிப்பு நிறுவனங்-களுக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளது.
மு. இராகவையங்கார்
1879ஆம் ஆண்டு பாண்டிநாட்டு அரியக்குடி-யில் பிறந்தார். தமது 16வது வயதில் தந்தையை இழந்தபின் பாண்டித்துரைத் தேவரின் ஆதரவில் தமிழ் பயின்று, 1901இல் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியதும் முதலில் சேதுபதி செந்தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1902இல் தொடங்கப்பட்ட ‘செந்தமிழ்’ இதழின் துணை ஆசிரியரானார். இதழின் ஆசிரியராக இருந்தவர் இரா. இராகவையங்கார். இவருக்குப் பின் மு.இராகவையங்கார் இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கி ‘செந்-தமிழ்’ இதழில் பல கட்டுரைகளை வெளியிட்-டார். அவ்வாறு வெளியிட்ட ஆராய்ச்சி உரைகளுள் ஒன்று ‘வேளிர் வரலாறு’ ஆகும். இது கொழும்பு வி.ஜே. தம்பிப்பிள்ளை என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்-பட்டு ‘ராயல் ஏஸியாட்டிக் சொசைட்டி’ என்ற இதழில் வெளிவந்தது. சென்னைப் பல்கலைக்-கழக இண்டர்மீடியட் வகுப்பில் இது இருமுறை பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இவரது பலதரப்பட்ட பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் மூலம் ‘ராவ் சாஹிப்’ என்ற கௌரவ டாக்டர் பட்டத்தினை 1939ஆம் ஆண்டு வழங்கச் செய்தது. இவர் பல நூல்களை ஏட்டுச்சுவடியி-லிருந்தும் தாமே நூல்களை இயற்றிப் பதிப்பித்தும் சிறந்த பதிப்புப்பணி செய்தவர்.
இரா.இராகவையங்கார்
1870ஆம் ஆண்டு சிவகங்கைக்கு அருகிலுள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் பிறந்தார். தன் மாமா சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் தமிழ் கற்றார். படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டுத் தமிழை ஆதரிக்கும் வள்ளல்-களால் ஆதரிக்கப் பெற்று மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்-தினைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் 1902இல் தொடங்கிய ‘செந்தமிழ்’ இதழின் முதல் ஆசிரியராக இவரை நியமித்தார். அண்ணா-மலைப் பல்கலைக்கழகத்தில் 1935இல் தமிழாராய்ச்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது சொற்பொழிவைக் கேட்டவர்களுள் இராஜாஜி, டி.கே.சி., சத்தியமூர்த்தி, அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். உ.வே. சாமிநாதை-யரால் ‘மகா வித்துவான்’ பட்டம் அளிக்கப்-பட்டது. இவர் ‘செந்தமிழ்’ இதழ் வாயிலாகவும், தமிழ்ச்சங்கத்தின் வாயிலாகவும் ஏராளமான நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
உ.வே. சாமிநாதையர்
ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் இலக்கியங்-களைச் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்தவர். பதிப்பு நெறிமுறைகளில் ஒரு முன்னோடியாகத்  திகழ்ந்தவர். இவர் பல நூல்களைப் பதிப்பிக்காமல் இருந்திருந்தால் நாம் எத்தனையோ இலக்கியச் செல்வங்களை இழந்திருக்க வேண்டியிருக்கும். தமது காலத்தில் ஆராய்ச்சித் திறத்திலும் பதிப்புத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவராவார். வையாபுரிப்பிள்ளை தனது ‘தமிழ்ச் சுடர் மணிகள்’ என்ற நூலில் உ.வே.சா.வை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். 1880இல் கும்பகோணம் கல்லூரியில் இவர் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 61 ஆகும். செந்தமிழ் இதழில் கட்டுரைகள் பலவற்றினையும் எழுதியிருக்கிறார். சில நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.
சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர்
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றியபோது மகிழ்ச்சியுடன் பணி செய்ய முன்வந்த புலவர்களான அரசஞ்சண்முகனார், பரிதிமாற் கலைஞர், சே.ரா.கந்தசாமிக் கவிராயர் போன்றவர்களுள் இவரும் ஒருவர். இவர் தமிழ்ச்சங்கத்தின் நூலாராய்ச்சிப் பிரிவில் பணியாற்றியபோது பல சிற்றூர்களுக்குச் சென்று சுவடிகளைக் கண்டுபிடித்துத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாகவும் ‘செந்தமிழ்’ இதழின் மூலமாகவும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
சோமசுந்தர தேசிகர்
திருவாரூர் சாமிநாத தேசிகர் பரம்பரையில் தோன்றியவர். இவர் தமிழிலும், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் வானவியலிலும் புலமை பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி ஆசிரியர் குழுவில் உறுப்பின-ராக இருந்தவர். தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியான ‘செந்தமிழ்’ இதழில் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
சோமசுந்தர பாரதியார்
இவர் எட்டயபுரத்தில் பிறந்தார். சுப்பிர-மணிய பாரதியாரின் இளமைக்கால நண்பர். மறைமலையடிகளின் மாணவர். சிறந்த தமிழறி-ஞராகவும், பெரும் புலவராகவும் விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி-யவர். இவர் ‘செந்தமிழ்’ இதழில் பல நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார்.
நாராயண அய்யங்கார்
இவர் திருவில்லிப்புத்தூருக்கு அருகிலுள்ள எதிர்க்கோட்டையில் பிறந்தார். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று பாண்டித்துரைத் தேவர் அவையில் புலவராக இருந்தார். சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் தலைமையாசிரிய-ராக நியமிக்கப்பட்டார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரியராகவும் சங்கத்தின் மேலாளராகவும் நூற்பதிப்பு முதலான பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.
ச. வையாபுரிப்பிள்ளை
திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையி-லுள்ள நரசையன் கிராமத்தில் பிறந்தார். இவர் பி.ஏ. வகுப்பில் மாநிலத்திலேயே முதல்வராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றவர். இவருக்கு மறைமலையடிகள் தந்த பேராதரவு இலக்கிய முயற்சிகளுக்குப் புதிய ஆக்கத்தை அளித்தது. பல நூல்களைப் பதிப்பித்த இவர், ‘செந்தமிழ்’ இதழில் பதிப்பித்து வெளிட்ட ‘இராஜராஜ தேருலா’ சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் அரசு புரிந்து வந்த ஒரு சோழர் பெருமானைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றமைந்த புராதன நூல். தென்னிந்திய சரித்திர ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவது. 

எளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்

இரா. வெங்கடேசன்


சில நிகழ்வுகளை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. சில நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிப் பார்க்கவும் செய்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிப் பார்க்க வைக்கக்கூடியன. இருபதாம் நூற்றாண்டு புதிய மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கான வழியைப் பத்தொன்-பதாம் நூற்றாண்டின் நிகழ்வுகளே அமைத்துத் தந்துள்ளன. தொழிற்புரட்சியின் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்ற சிந்தனையின் விளைவு உலகம் முழுமைக்குமான, புதிய மாற்றத்திற்குத் தேவையான பல நிகழ்வுகள் அந்நூற்றாண்டில் நடந்துள்ளன. அதில் முக்கிய நிகழ்வாக அச்சு ஊடக வருகையைச் சொல்ல வேண்டி உள்ளது. குவிந்து கிடந்த சிந்தனைமரபு வெகுசன மக்களைச் சென்றடையும்படியான போக்குகள் அச்சு ஊடக வருகையினாலேயே நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக உலகம் முழுமைக்குமான பெரும் சிந்தனை மாற்றத்திற்கு அச்சு ஊடகம் காரணமாக இருந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அச்சு ஊடக வருகை குறித்தான பின்புலத்-தில் தமிழ்ச்சூழலிலும் புதிய மாற்றங்கள் உருவாகும்படியான பல நிகழ்வுகள் பத்தொன்-பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று பழந்தமிழ் இலக்கண இலக்கியப் பிரதிகள் அச்சில் பதிப்பிக்கப்பட்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் புதிய ஆராய்ச்சிப் போக்கிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் பெரும் துணை புரிந்துள்ளன. பழந்தமிழ்ப் பிரதிகளைப் பதிப்பித்ததன் வழி தமிழின் தனித்துவத்தைத் தேடிச் செல்லும்படியான ஆய்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டன. இதன்வழி தமிழின் அடையாளங்கள் மீளக் கண்டெடுக்-கக்-கூடிய ஆய்வுகளும் நடந்தன. இவ்வாறான பல புதிய ஆய்வுப்போக்கிற்குப் பெருந்துணையாக இருந்தது பதிப்புத்துறையாகும். இப்பதிப்புத்துறை தமிழ்ச்சூழலில் பலராலும் கண்டுகொள்ளப்-படாமல் உள்ளது. இது தமிழின் மிகப்பெரிய சோகம். இவ்வாறான தமிழ் அச்சுப் பதிப்புப் பின்புலத்தை அச்சு ஊடக வருகை குறித்தான பின்புலத்தோடு பதிவு செய்ய வேண்டிய தேவை-யுள்ளது. அதன் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் வகையில் தமிழ்ப்பதிப்பு வரலாற்றுப் போக்கில் தனித்த இடத்தைப் பெற்ற மர்ரே அண்ட் கம்பெனியின் பதிப்பு முயற்சியின் முக்கியத்-துவத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.
தமிழ்ப் பதிப்புப் போக்குகள்
மர்ரே நிறுவனத்தின் பதிப்பு முயற்சியைப் பார்க்கும் முன் தமிழ்ப் பதிப்புப் போக்கு, பார்க்க வேண்டிய ஒன்றாகும். தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் இருவகையான போக்குகளைக் காண முடியும். ஒன்று தனிநபர் சார்ந்த போக்கு, மற்றொன்று நிறுவனம் சார்ந்த போக்கு. தொடக்க காலத்தில் தனிநபர்களே பல அரிய நூல்களைப் பதிப்பித்-திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாகச் சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், புதுச்சேரி நயனப்ப முதலியார், முத்துசாமிப் பிள்ளை, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் முதலானோரைக் குறிப்பிடலாம். இவர்களின் பதிப்பு முயற்சியைத் தனிநபர் சார்ந்ததாக அடையாளப்படுத்தலாம். சென்னைக் கல்விச் சங்கம் (1820) பவானந்தர் கழகம் (1916) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1920) முதலானவற்றின் பதிப்பு முயற்சியை நிறுவனம் சார்ந்ததாக அடையாளப்படுத்தலாம். இந்த இருவகையான பதிப்புப்போக்கில் நிறுவனம் சார்ந்ததாக மர்ரே அண்ட் கம்பெனி-யின் பதிப்பு முயற்சியைப் பார்க்க வேண்டி-யுள்ளது.
மர்ரே சாக்கை ராஜம்
திருத்துறைப்பூண்டிக்கு ஆறு கல் தொலைவிலுள்ள துளசாபுரம் என வழங்கும் சாக்கை என்னும் ஊரில் கோபாலையங்கார்_ கோமளத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக 22_11_1904இல் பிறந்தவர் எஸ். ராஜம். இளமையிலிருந்தே நன்கு கற்றுத்தேறி வந்து நி.ஞி.கி. என்ற கணக்குத் தணிக்கைக்குரிய படிப்பில் ராஜம் வெற்றி பெற்றுள்ளார்1. இந்தப் படிப்பே பின்னாளில் அவரை மர்ரே நிறுவனத்-தில் பணிக்குச் சேரும்படியான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. மேலும் சட்டத்துறை-யிலும் நன்கு பயிற்சியுள்ளவராக ராஜம் விளங்கியுள்ளார்.
சென்னையில் ‘மர்ரே கம்பெனி’ (விuக்ஷீக்ஷீணீஹ் ணீஸீபீ சிஷீனீஜீணீஸீஹ்) என்னும் பெயரில் ஆங்கிலேய ஏல நிறுவனம் ஒன்று நன்கு செயல்பட்டு வந்துள்-ளது. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறியபோது மர்ரே நிறுவனத்தாரும் வெளியேறினர். அந்நிலையில் நிறுவனத்தில் உதவியாளர் பணியில் இருந்த எஸ். ராஜம்,
வி. சீனிவாசய்யங்கார் அறிவுரைப்படி மர்ரே நிறுவனத்தைத் தாமே ஏற்று தமையனார் வேதாந்தம் அய்யங்காருடன் ‘மர்ரே நிறுவனம்’ என்ற பெயரிலேயே அந்த ஏலத் தொழிலைச் சிறப்புற நடத்தி வந்துள்ளார்2. பின்னாளில் நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் ராஜமே ஏற்றுள்ளார். பின்னாளில் மர்ரே ராஜம் என்று அவர் ஏற்று நடத்திய நிறுவனத்தின் பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டார்.
முதுமையில் மர்ரே நிறுவனத்தைத் தம் தமையனாரின் மருமகனிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து பெற்றுவந்த பணத்தையும் பொதுநலன் கருதிச் சில அறக்கட்டளைகள் நிறுவி, அவ்வறங்கள் தொடர்ந்து பலன் அளித்தற்குச் செலவிட்டுள்ளார்3. கோயில்களுக்-கும் நன்கொடைகள் பல வழங்கி வந்துள்ளார். இவ்வாறு அறச்செயல்கள் செய்து வந்த ராஜத்திற்கு 1940களில் பெ.நா. அப்புசாமி அய்யர் மூலமாகப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்-பிள்ளையின் தொடர்பு கிடைத்துள்ளது. அப்பொழுது பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சந்திப்பே பின்னாளில் சந்தி பிரித்த பதிப்புகள் வெளி-வருவதற்குக் காரணமாக இருந்துள்ளது. கோவில்களுக்கு அறச்செயல்கள் செய்தல் போல எளியவர்களும் வாங்கிப் படிக்கும்படியான நூல்களை அச்சிட்டு வழங்குதலும் அறக்-கொடையே என வையாபுரிப்பிள்ளை, ராஜத்திடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தமிழார்வத்துடன் இருந்த ராஜம் உடனே இதற்கு இசைவுமளித்துள்ளார். நூல் பதிப்பிக்கும் பொறுப்பை வையாபுரிப்-பிள்ளை ஏற்றுக்கொண்-டுள்ளார். இதன் பின்னர் திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தை 1955இல் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளார். எஸ். வையாபுரிப்பிள்ளை இதற்குப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். இந்நூல் மர்ரே நிறுவனத்தின் முதல் வெளியீ-டாகும். வையாபுரிப்பிள்ளையின் தொடர்பா-லேயே நூல்கள் வெளியிடும் திட்டத்திற்குப் பொருளுதவி  செய்யும்படியான சிந்தனை ராஜத்திற்கு ஏற்பட்டுள்ளது. 1955_க்குப் பிறகு ‘தமிழிலக்கியச் செல்வம்’ என்னும் தொடரில் பல தமிழிலக்கியங்களை அவர் வெளியிட்-டுள்ளார். திவ்யப் பிரபந்த முதலாயிரத்தைத் தொடர்ந்து ஏனைய திவ்யப் பிரபந்தப் பாடல்களும் திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்-கணக்கு, வில்லிபாரதம் ஆகியன வெளியிடப்-பட்டுள்ளன.
பேரிலக்கியங்கள் மட்டுமின்றி சில சிற்றிலக்கியங்களையும் சாசன மாலை என்னும் கல்வெட்டு குறித்தான நூலொன்றையும் ‘சந்திக் குறியீட்டு விளக்கம்’ என்னும் அரிய கையேடு ஒன்றினையும் ராஜம் வெளியிட்டுள்ளார்-. வையாபுரிப்பிள்ளைக்குப் பிறகு ஒரு சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு இவ்வெளி-யீட்டுப் பணியை அவர் செய்துள்ளார்.
1960இல் இலக்கிய வெளியீட்டிற்காக ‘சாந்தி சாதனா-’ என்ற அறக்கட்டளையையும், ஏழை மக்கள் இறுதிக்கடனுக்கு உதவ வகைசெய்யும் வகையில் ‘கிரியா சாதனா’ என்ற அறக்கட்டளை-யையும் குழந்தைகள் படிப்பிற்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் ‘சேவா சாதனா’ என ஓர் அறக்கட்டளையையும் ராஜம் ஏற்படுத்தியுள்ளார். சில சிறு நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்ய நன்கு செயற்படும் நிலையிலிருந்தும் பணத்தட்டுப்பாடு காரணமாக நலிந்துவிடக் கூடாது என்று கருதி அவை-களுக்கு நன்கு செயற்படும்படி ஊக்கமளித்து உதவ ‘பெசந்து ராசன்’ (றி. & ஸி. ஜிக்ஷீust) என்ற அறக்கட்டளையையும் அவர் நிறுவியுள்ளார். மேலும் தினம் தம் இல்லத்தில் இறைமணம் கமழும் வகையில் திருமால் வழிபாடு தொடர்ந்து நடைபெற ஓர் அறக்கட்டளையையும் ராஜம் நிறுவியுள்ளார்4. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் அறச்செயல் செய்வதையே பெரும் தொண்டாகக் கருதி வாழ்ந்து வந்த சாக்கை ராஜம் 13.03.1986 இல் காலமானார்.
மர்ரே அண்ட் கம்பெனி வெளியீடுகள்
திவ்யப் பிரபந்தம் தென்னாட்டில் நமது வைணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்-படும் சிறந்த  பக்தி நூல். இதன் கவிதைச் சுவை-யும் அழகும் நுகர்ந்து நுகர்ந்து இன்புறத்தக்கன. தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடை-மையாக இது கொள்ளுதற்குரிய பெருந்தகுதி வாய்ந்தது. பக்திப் பாடல் என்ற நூல் வகையில் இதனைப் போன்ற பெருமையுடைய நூல்கள் இலக்கிய உலகில் மிக மிகச் சிலவற்றைத்தான் கருதுதல் கூடும். இங்ஙனமிருந்தும் நமது தமிழ்ப் பொதுமக்களில் பலர் இதனைக் கல்லாதிருப்பது பெருங்குறையாகும். வைணவர்கள் மட்டுமே-யன்றித் தமிழ்ப் பொதுமக்களும் இந்நூலைக் கற்றுணர்ந்து பயன்பெறுதல் வேண்டும். இதுவே இப்பதிப்பின் தலைமையான நோக்கம்5 என்ற கருத்தை முன்னிறுத்தியே ‘திவ்யப்பிரபந்தம் _ முதலாயிரம்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கமும் விருப்பமுமே பிற்பட்ட அனைத்துப் பதிப்பிற்கும் காரணமாக இருந்துள்ளது. எஸ்.ராஜம், நெ.5, தம்புச்செட்டித் தெரு, சென்னை _ 01 என்ற முகவரியிலிருந்து-தான் அனைத்து வெளியீடுகளும் வெளியிடப்-பட்டுள்ளன. சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக் கொண்டு, ஓரளவு கற்றவரும் எளிதில் பொருள்-புரிந்து கொள்ளுமாறு சொற்களைச் சந்தி பிரித்தும் நிறுத்தற்குறிகள் இட்டும் நூல்களைப் பதிப்பித்திருப்பது இந்நிறுவனப் பதிப்புகளின் சிறப்பம்சமாகும். சமகாலத்தில் மற்ற பதிப்பு நிறுவனங்கள் புராண, இதிகாச நூல்களையும் சங்கப்பாடல்களையும் ரூபாய் 50, 100 என்று விற்றுவந்த நேரத்தில் மிகக் குறைந்த (ஒரு ரூபாய்) விலையில் நூல்களை அச்சிட்டு வழங்கி, எளிய மக்களும் வாங்கி, படிக்கும்படியான ஒரு சூழலை மர்ரே நிறுவனம் உருவாக்கியது. முதலாயிரத்தைத் தொடர்ந்து பிரபந்தத்தின் ஏனைய பகுதிகளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம், சிற்றிலக்கி-யங்கள் என 1955இல் இருந்து 1960 வரை நாற்பது நூல்களை எளிய சந்தியமைப்பிலும் மலிவு விலையிலும் மர்ரே நிறுவனம் வெளியிட்டுள்-ளது. மேலும் நாற்பது நூல்கள் சந்தி பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளன. (இவைகளின் பட்டியல்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன)
தமிழில் சந்தி பிரிப்பு
மர்ரே நிறுவனத்தின் சந்தி பிரித்த பதிப்புகளைப் புரிந்துகொள்ள, தமிழில் நூல்களை அச்சிடுவதில் ஏற்பட்டு வந்துள்ள சிறுசிறு மாற்றங்களைப் பார்க்க வேண்டியுள்-ளது. பதிப்புக்கலை வளர வளர நூல்களை வெளியிடும் முறையிலும் மாற்றம் நேர்ந்தது. அவற்றுள் ஒன்று சந்தி பிரித்துப் பதிப்பித்தலாகும். பொருள் விளக்கத்திற்காகச் சொற்களைப் பிரித்துப் பதிப்பித்தனர்6. தொடக்க காலத்தில் நூல்கள் சுவடிகளில் உள்ளது போன்றே நிறுத்தற்குறி இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அடிகளைப் பிரித்தும், சீர்களைப் பிரித்தும், பதிப்பிக்கும்படியான படிநிலை மாற்றங்கள் தமிழ்ப்பதிப்பில் ஏற்பட்டுள்ளன. மேலைத்தேய சிந்தனைப் போக்கின் வெளிப்பாடுகளுள் ஒன்றான உரைநடை வளர்ச்சி, பரவலாக அனைத்து மக்களிடத்தும் இலக்கியங்கள் சென்றுசேர வேண்டும் என்ற கருத்தோட்டம் ஆகியன சந்தி பிரித்துப் பதிப்பிக்கும்படியான தேவையை உருவாக்கியுள்ளது. சந்தி பிரித்துப் பதிப்பிக்கும் சிந்தனை நெடுநாட்களாகவே தமிழ்ச்சூழலில் இருந்து வந்துள்ளது. சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவராக இருந்த வேங்கடாசல முதலியார் 1843இல் கம்பராமாயண அயோத்தி காண்டப் பதிப்புநூலின் விளம்பரத்தில்,
“இந்த ஸ்ரீமத் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் 60ஆம் பக்கம் தொடங்கி, பின் தொடர்ந்து வருகிற அந்தந்த திருவிருத்தத்திலும், அடிதோறும் உள்ள சொற்கள் எல்லாத்தையும், எழுத்துச் சந்தி பண்ணாமலும் விகாரப்படுத்தாமலும், அடி தொடை நோக்கியும், வேண்டும் இடம் அறிந்தும், சிலதுகளை மாத்திரம் எழுத்துச்-சந்தி பண்ணியும் விகாரப்படுத்தியும், மற்றது-களை எல்லாம் சந்தி பிரித்தும், அச்சிற் பதிப்பித்து இருக்கிறோம். அப்படி எதுக்-காக செய்யப்பட்டது என்றால், இதற்கு முன்னமே லோகோபகாரம் ஆக, எம்மால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கின்ற சில சுவடிகளைப் பார்வை இட்டவர்களில், இந்த பிராந்தியத்துப் பிரபுக்களும், வித்துவான்களும், புலவர்களும், கவிராயன்-மார்களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள், அந்த சுவடிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்-தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது லோகத்துக்கு உபகாரம் ஆக வேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம்; ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்படவேண்டும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள்’’ என்று சந்தி பிரித்தல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்கிறார். பெரும்பாலும் சந்தி பிரித்தல் குறித்தான சிந்தனை சமய இலக்கியப் பதிப்பாசிரியர்களிடத்து மிகுதியாக இருந்துள்-ளது எனலாம். சாதாரண மக்களிடத்தும் சமயக்கருத்துகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடாக அவற்றைக் கருதலாம். அதேவேளையில் ஆங்கில மொழியின் வருகை குறித்தான பின்புலத்திலும் சந்தி பிரிப்புத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 1895இல் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் பதிப்பித்த ‘சுவர்க்க நீக்கம்’ மொழிபெயர்ப்பு முகவுரையில்,
‘தமிழறிந்தோர் ஆங்கிலேய பாஷையில் பழகுமுன் எழுதப்பட்ட நமது வசனநூலில், ஒரு வசனத்தின் முடிவையும் அடுத்த வசனத்தின் துவக்கத்தையும் காட்ட வசனங்களுக்கிடையே முடிப்பிசைக்குறி(திuறீறீstஷீஜீ)யிட்டும் இடம்விட்டும் எழுதலாவது,  ஒரு வசனத்தினுள்ளேயே வாசிப்-போன் நிறுத்தி வாசிக்க வேண்டிய இடங்களில் உறுப்பிசைக்குறி (சிஷீனீனீணீ) முதலிய குறியிட்டு இடம் விடுதலாவது இல்லை. அந்தக் குறை இப்போது இங்கிலீஷ் பாஷையரின் வழக்கத்தை அநுசரித்து வேண்டுமிடத்து இடம் விடுதலாலும் பல குறியீட்டினாலும் நிரப்பப்பட்டு விட்டது’. அவ்வாறு செய்யுள் எழுதும் முறை சீர்திருத்தப்-படவில்லை. இப்போது அச்சிடப்பட்டுள்ள சில நூல்களில் செய்யுள் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்-பட்டிருக்கின்றன என்று கூறுவதன் வழி, ஆங்கிலமொழி பின்புலத்திலேயே முடிப்பிசைக்குறி, உறுப்பிசைக்குறி, சந்தி பிரிப்பு முதலான முறைகள் தமிழில் கைக்கொள்ளப்-பட்டுள்ளன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்விரு கருத்துகளும் சந்தி பிரித்து வெளியிடுதலின் தேவையை உணர்த்துகிறது. இத்தேவையின் ஒட்டுமொத்த வடிவமாக மர்ரே நிறுவனத்தாரின் பதிப்புகளைக் கொள்ளலாம். 1955இல் பதிப்புப் பணியைத் தொடங்கி 1960வரை நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளது. அவ்வாறு சந்தி பிரித்து அச்சிடும் முறைக்கு பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளையே வித்திட்-டுள்ளார். ராஜம் வெளியிட்ட முதல் நூலுக்குப் பதிப்பாசிரியராக இருந்து தொடங்கி வைத்த பணி பின்னாளில் பல நூல்கள் வெளிவரு-வதற்குக் காரணமாக இருந்துள்ளது. சந்தி பிரித்து அச்சிடும் முறை குறித்தான சிந்தனை தொடக்கம் முதலே வையாபுரிப்பிள்ளையிடத்து இருந்து வந்துள்ளது; 1944இல் தாம் பதிப்பித்து வெளியிட்ட ‘நான்மணிக்கடிகை’ முன்னுரையில் அவர் கீழ்வருமாறு குறிப்பிடுவதன் வழி அதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
‘இந்நூலினைப் பதிப்பிடுதலில் ஒரு சில நியமங்களைக் கையாண்டுள்ளேன். இவற்றைக் குறித்துச் சில ஆண்டுகளாக நாம் கருத்தூன்றி ஆலோசனை செய்ததுண்டு. புது நியமங்களுக்கு அவசியம் உண்டா? என்ற ஐயப்பாடும் இடையிடையே தோன்றியது. ஆங்கிலத்தில் ‘சாஸர்’ இயற்றிய கவிகளைத் தற்காலத்துள்ளார் பொருளுணர்ந்து கொள்வதற்கு அருமையா-யிருத்தல் பற்றி, சொல்லின் எழுத்தமைதியை (ஷிஜீமீறீறீவீஸீரீ) மாற்றி அச்சியற்றல் தகுமா? இது போன்றதுதானே செய்யுளில் சொற்களைப் பிரித்து அச்சிடுதல்? இங்ஙனம் பிரிப்பதால் செய்யுளின் ஓசை கெட்டு விடுமல்லவா? இவை போன்ற கேள்விகளுக்கு முற்றும் திருப்திகரமான விடையளிப்பது எளிதல்ல. ஆனால், பொருள் எளிதில் விளங்கும்படி அச்சியற்ற வேண்டும் என்ற நோக்கும் கைக்கொள்ள வேண்டுவதா-யுள்ளது. இருவகை மனப்பாங்கிற்கும் ஒரு சமரசம் ஏற்பட வேண்டியது அவசியம். இந்நெறியில் நான் சிறிது முயற்சி செய்திருக்கிறேன். அனுபவம் பெருகப் பெருக இந்நியமங்கள் திருந்தியமைய-லாம். செய்யுள் பயிலுவோரின் தொகை அதிகரித்துவரும் இந்நாளில் இந்நியமங்கள் தக்கபடி ஆராயப்பட்டு அனைவர்க்கும் உடன்பாடான சில நியமங்கள் ஏற்படக்கூடும். அக்காலம் விரைவில் வரின் நலமாகும். வையாபுரிப் பிள்ளையிடம் இருந்த இவ்வாறான சிந்தனையே மர்ரே ராஜத்திடம் சந்தி பிரித்து வெளியிடும்படியான திட்டத்தை முன்வைப்ப-தற்குக் காரணமாக இருந்தது எனலாம்’.
மர்ரே பதிப்புகளின் தன்மை
மூல பாடத்தை மட்டும் எளிய சந்தியமைப்-பில் அமைத்துத் தந்திருப்பது மர்ரே பதிப்புகளின் சிறப்புத் தன்மையாகும். ஒரு செம்மையான நெறிமுறைகளை வகுத்துக்கொண்டே சந்தியைப் பிரித்துள்ளனர். எதைப் பிரிப்பது, எதைப் பிரிக்கக் கூடாது என்ற தெளிவான வரைமுறை-களை அவர்கள் பின்பற்றியுள்ளனர். சந்தி பிரித்தல் குறித்த 140 பக்க அளவிலான ‘சந்தி குறியீட்டு விளக்கம்’ என்ற நூலை 1960 இல் மர்ரே நிறுவனம் வெளியிட்டுள்ளது. தம் நிறுவனம் வெளியிட்ட பதிப்புகளில் கையாளப்-பட்ட சந்தி பிரிப்பு விவரங்களைக்கொண்ட நூல் அது. அதில் ‘சந்தி பிரித்தலில் சில நியதிகள்’ என்ற பகுதியில் தம் நிறுவனப் பதிப்புகளில் பின்பற்றப்பட்ட 32 நியதிகளை அந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
உதாரணமாக, சந்தி பிரிக்காத இடங்களாக:
1.    மரபுவழிப்பட்ட அடைமொழிகள் _ கொடுங்குழை, வாண்முகம்
2.    ஒருசொல் நீர்மைத்தாக அமைந்த சொற்கள் _ வேளாண்மை, மேற்பட
3.    வேற்றுமையுருபுகள், சாரியை, சொல்லுருபுகள், சேர்ந்துவரும் பெயர்கள் _ படியை, மடியகத்து.
போன்ற சந்திவிதிகளை அந்நூல் வரையறுத்-துள்ளது. மேலும் பொருள் விளக்கத்திற்காக வேண்டிய இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, உணர்ச்சிக்குறி முதலான நிறுத்தற் குறியீடுகளை இப்பதிப்புகளில் கையாண்டுள்ளனர். எந்தப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு இப்பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன என்ற தகவலைச் சுட்டிக்காட்டுகின்ற பதிப்பு நேர்மை இந்நிறுவனப் பதிப்புகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, 1957இல் வெளியிடப்பட்ட சிலப்பதிகார முகவுரையில் ‘உ.வே.சாமிநாதையர் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு இப்பதிப்பை உருவாக்கு-கிறோம்’ என்ற செய்தியைப் பதிவு செய்கின்றனர். இன்றைய பதிப்பாசிரியர் பலரிடத்து இந்த நேர்மையைக் காண முடிவதில்லை.
ஒவ்வொரு பதிப்பும் முகவுரை, நூற்பகுதி, சிறப்புப்பெயர்கள், பாடற்முதற் குறிப்பகராதி என்ற அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாட ரூப பேதங்கள், அரும்பத விளக்கம், உரைவிளக்கம், முதற்குறிப்பு அகராதிகள் அமைத்தலும், ஒரு பிரதி குறித்தான பிற தகவல்களைத் தருதல் எனப் பல சிறந்த பதிப்பு நெறிமுறைகளை மர்ரே பதிப்புகளில் காண முடிகிறது. உதாரணமாகத் திவ்வியப் பிரபந்தப் பதிப்புகளில் அப்பிரதி குறித்தான கதைக் குறிப்புகளைத் தந்திருப்பதைச் சுட்டலாம்.
பதிப்புக்குழு
ஆங்கிலப் பதிப்புத்துறையில் பதிப்பாசிரியர் குழு ஒன்று இருப்பதைப் போல மர்ரே நிறுவனப் பதிப்புப் பணியிலும் ஒரு சிறந்த பதிப்புக்குழு இருந்துள்ளது. அன்றைய நிலையில் பெரும் தமிழறிஞர்களாக இருந்த பெரும்பாலானோர் மர்ரே பதிப்புக் குழுவில் இருந்துள்ளனர். எஸ். வையாபுரிப்பிள்ளை, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.-ஸ்ரீ. ஆச்சார்யா, பெ.நா. அப்புசாமி அய்யர், கி.வா. ஜகந்நாதன், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தன், ந. கந்தசாமிப்பிள்ளை, பு.ரா. புருஷோத்தமன், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, கம்பர் அடிப்பொடி சா. கணேசன், வே. வேங்கட-ராஜூலு ரெட்டியார், நீ. கந்தசாமிப்பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை முதலான தமிழறிஞர்கள் ராஜம் பதிப்பின் பதிப்பாசிரியர் குழுவில் இருந்தவர்-களாவர்.
பதிப்பு குறித்தான சமகால மதிப்பீடு
பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் பாடப்பகுதியாக இருந்த பாடல்களை மட்டும் அச்சிட்டுப் பொருளீட்டி வந்த அன்றைய பதிப்பாளர்களுக்கிடையே ராஜம் நிறுவனத்-தாரின் பதிப்புகள் அவ்வாறான எந்த தேவைசார் பின்புலமும் இல்லாது  வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் எளிய சந்தியமைப்பிலும், மலிவு விலையிலுமாக அமைந்திருந்த இப்பதிப்புகள் குறித்து எவ்விதமான கண்ணோட்டம் அதன் சமகாலத்தில் இருந்தது என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. மாற்று வடிவிலான பதிப்பை மக்கள் எவ்வாறு அணுகினர் என்பது அப்பதிப்பு குறித்தான மதிப்பீட்டை நமக்குப் புலப்படுத்தும்.
“தமிழ் இலக்கியங்கள் அவ்வளவுமே சாமான்ய மக்களிடத்துச் செல்ல வேண்டுமென்ற எனது புரட்சிகரமான கொள்கைக்கு மர்ரே அண்டு கம்பெனியார்தான் வெற்றி தந்தனர். மலிவுப்பதிப்பாக வெளிவந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெளியீட்டு விழாவிலேயே ஒவ்வொன்றிலும் ஆயிரம் பிரதிகள் விற்பனை-யானதாக அறிந்தேன். இந்தப் பதிப்புகள் இளங்கோ தந்த குரவைப் பாடல்களை இசை-யரங்குகளில் பாட உதவி புரிந்தன. அதற்கு முன்பு இந்தப் பாடல்களை இசையரங்குகளில் பாடும் வழக்கம் இருந்ததில்லை’’7 என்று மர்ரே பதிப்பு குறித்தான தனது மதிப்பீட்டை ம.பொ.சி. பதிவு செய்கிறார். மேலும்,
“மர்ரே அண்டு கம்பெனியார் சிலப்பதிகாரம் _ மணிமேகலைப் பதிப்புகளை வெளியிட்ட விழாவில் பேசிய பெரும் புலவர் ஒருவர் ‘இந்த மாதிரி சந்தி பிரித்து வெளியிடும் பதிப்புகளைப் பார்க்கவே என் மனம் சங்கடப்படுகிறது’ என்றார். அவரது கருத்தை மறுத்து நான் பேசியபோது, ‘இரண்டாயிரமாண்டுகளாக என் போன்ற சாமான்யர்களை சந்தியில் நிறுத்திச் சங்கடப்-படுத்தியது போதாதா? சந்தி பிரித்து வெளியிட்-டால்தானே சங்கதி புரிகிறது’ என்று கூறினேன். அவையில் பெருத்த கைதட்டல், ஆரவாரம் எழுந்தது. இதனால் சந்தி பிரித்து வெளியிடு-வதை மக்கள் வரவேற்கிறார்கள் என்பது மேடையிலிருந்த புலவர்களுக்குப் புரிந்தது’’8 என்ற ம.பொ.சி.யின் கருத்தின் மூலம் சந்தி பிரித்த பதிப்பை மக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.
ஆயினும் சில தமிழறிஞர்களுக்கு மர்ரே பதிப்பு குறித்த உடன்பாடற்ற கருத்துகள் இருந்துள்ளன. ம.பொ.சி. கூறும் செய்தியிலிருந்-தும் அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 1957இல் மர்ரே நிறுவனத்தாரின் சிலப்பதிகாரப் பதிப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு அடுத்த ஆண்டு வெளிவந்த (1958 இல்) ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேலை’ இரண்டு காப்பியங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பித்த ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்ற நூலின் முகவுரையில் வ. சுப. மாணிக்கம் “முற்றும் புணர்ச்சி பிரியாத வலிந்த பதிப்புகள் இன்று தமிழர்க்குக் கைத்துணையாகா. எல்லாப் புணர்ச்சிகளையும் அலக்கலக்காகப் பிரித்த மெலிந்த பதிப்புகள் தமிழியல்புக்கு எந்நாளும் பொருந்தா. இற்றைத் தமிழர் அறிவு பெறவும் நாளைத் தமிழ் ஆக்கம் பெறவும், ஊடலும் கூடலும் போல, செவ்வி நோக்கிப் பிரிதலும் புணர்தலும் பெற்ற அளவுப் பதிப்புகள்_நடுத்தரப்பதிப்புகள்_தமிழகத்திற்கு வேண்டுவன, இந்நோக்கத்தால் எழுந்த பதிப்பு இரட்டைக் காப்பியம்9 என்னும் கருத்தும் கருதத்தக்கது. ஆயினும் மர்ரே பதிப்புகள் மக்க-ளிடத்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்-துள்ளன’’.
இறுதியாக
மாற்றுச் சிந்தனையுடனான, அதே நேரத்தில் அறிவியல் அணுகுமுறையிலான ஆய்வுமுறையின் மூலமாகத் தமிழாய்வை மேற்கொண்டவர் பேரா. எஸ்.வையாபுரிப் பிள்ளை. பல்வேறு மரபுகளைத் தமிழில் உருவாக்கியவர். மர்ரே பதிப்புகளும் இவரின் சிந்தனையில் உருவானதேயாகும். 1955இல் முதலாயிரத்திற்குத் தாம் பதிப்பாசிரிய-ராக இருந்து தொடங்கிவைத்த மரபு 1960 வரை நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருவ-தற்குக் காரணமாக இருந்தது. வையாபுரிப்-பிள்ளைக்குப் பிறகு சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு ஆறு ஆண்டுகளில் நாற்பதிற்-கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு புதிய மரபை மர்ரே நிறுவனம் உருவாக்கியது. இந்நிறுவனம் ஆசிரியர் குழுவால் சந்தி பிரித்து உருவாக்கப்பட்டுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இன்னும் வெளியிடாமலும் உள்ளது. இவற்றை விரைவில் வெளியிடுவதாகக் கூறியுள்ளனர்.
1960 வரை நூல்களை வெளியிட்டுவந்த மர்ரே நிறுவனம் அறுபதிற்குப் பின்னர் எந்த ஒரு நூலையும் வெளியிடவில்லை. 1960இல் இலக்கிய வெளியீட்டிற்காக ராஜத்தால் ஏற்படுத்தப்பட்ட ‘சாந்தி சாதனா--’ என்ற அமைப்புதான் சில அகராதிகளை வெளியிட்-டுள்ளது. அறுபதிற்கு முன் வெளியிடப்பட்ட நூல்களுக்கு உருவாக்கிய அரும்பத விளக்கத்-தைத் தொகுத்து வரலாற்று முறைத் தமிழிலக்-கியப் பேரகராதியை 2001இல் ‘சாந்தி சாதனா’ வெளியிட்டுள்ளது. மர்ரே அண்டு நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்ட நூல்களின் விலை ஒரு ரூபாய் என்ற நிலையில் இருந்தது. ‘சாந்தி சாதனா’ என்ற அறக்கட்டளை மூலமாக வெளி-யிடப்பட்ட அகராதிகளின் விலை அதிகமாக உள்ளது. நிறுவனமாக இருந்த காலத்து மலிவு விலையில் நூல்களை வழங்கிய ராஜம் நிறுவனம், அறக்கட்டளையாக மாற்றப்பட்ட பின்னர் நூல்களின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்-டுள்ளது. ஏன் இந்த முரண்பாடென்று தெரிய-வில்லை. அதே நேரத்தில் 1960க்குப் பிறகு நூல் வெளியீட்டுப் பணியை நிறுத்திக் கொண்ட-தற்கான காரணமும் தெரியவில்லை. இவ்வாறான சில ஐயங்கள் இருந்தாலும் சங்க இலக்கிய மூல பாடப்பதிப்பு என்று சொன்னால் மர்ரே ராஜம் நூல்களையே குறிப்பிடும்படியான ஒரு தனித்துவம் இந்நிறுவனப் பதிப்புகளுக்கு என்றும் உண்டு.
அடிக்குறிப்புகள்
1.    வாழ்வியற் களஞ்சியம்_தொகுதி ஒன்று, தமிழ்ப்பல்கலைக்கழகம்_2002, ப.272.
2.    மேலது.
3.    மேலது.
4.    மேலது ப. 273.
5.    பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை(பதி.) திவ்யப்பிரபந்தம் _ முதலாயிரம் _ 1955 _ முன்னுரை, ப. 4.
6.    முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பதிப்பியல் சிந்தனைகள்_2005, ப.37.
7.    ம.பொ.சிவஞானம், சிலம்பில் ஈடுபட்டதெப்படி?_1994, ப.35.
8. மேலது, ப.36.
9.    வ.சுப. மாணிக்கம், இரட்டைக் காப்பியங்கள் _ 1958, முன்னுரை, ப.4.
பின்னிணைப்பு 1
கால நிரலில் மர்ரே நிறுவனப் பதிப்புகள்:
1955    ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் _ முதலாயிரம்
1956    ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் _ திருவாய் மொழி, இயற்பா, பெரிய திருமொழி
1957    நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு-நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு (முதல் தொகுதி), திருவாசகம், கல்லாடம், சிலப்பதிகாரம், மணிமேகலை,         கலிங்கத்துப்பரணி, அஷ்டபிரபந்தம்.
1958    அகநானூறு, புறநானூறு, பாட்டும் தொகையும், கம்பராமாயணம் _ பாலகாண்டம் (தொகுதி_1), அயோத்தி காண்டம் (தொகுதி_2), ஆரணிய காண்டம் (தொகுதி_3), கிட்கிந்தா காண்டம் (தொகுதி_4), சுந்தர காண்டம் (தொகுதி_5).
1959    பதினெண்கீழ்க்கணக்கு (தொகுதி_2), கம்பராமாயணம்_யுத்தகாண்டம் (நான்கு தொகுதிகள்), வில்லிபாரதம் (நான்கு தொகுதிகள்), அருங்கலச்செப்பு, அறநெறிச்சாரம், குலோத்துங்க சோழன் உலா, நந்திக்கலம்பகம், நீதிக்களஞ்சியம் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி), முக்கூடற்பள்ளு, நளவெண்பா.
1960    தொல்காப்பியம், குற்றாலக் குறவஞ்சி, சாசனவிளக்கம், சந்தி குறியீட்டு விளக்கம்.
பின்னிணைப்பு 2
ஆசிரியர் குழுவால் பரிசோதித்துச் சந்தி பிரித்து இன்றுவரை வெளியிடாமல் உள்ளவை:
இலக்கியம் : சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை, நீலகேசி, யசோதர காவியம், முத்தொள்ளாயிரம்.
சிற்றிலக்கியம் : பாண்டிக்கோவை, மூவருலா, தக்கயாகப்பரணி, திருநாரையூர் நம்பி மேகவிடு தூது, விறலிவிடு தூது, திருக்கலம்பகம், திருவருணைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம், அழகர்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம்.
பக்தி இலக்கியம் : திருக்கோவையார், திருவிசைப்பா, திருமந்திரம், பதினோராம் திருமுறை, கோயிற்புராணம், திருக்கடைக்காப்பு, தேசிகப்பிரபந்தம், ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் அவதாரப்ரகாரம், வார்த்தமாலை.
இலக்கணம் : நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், புறப்பொருள்வெண்பாமாலை, தண்டியலங்காரம், நேமிநாதம், வீரசோழியம், இறையனாரகப்-பொருள், பன்னிருபாட்டியல், வெண்பாப்-பாட்டியல், தமிழ்நெறிவிளக்கம்.
துணைநூற் பட்டியல்
1. சுந்தரமூர்த்தி. இ. முனைவர் _ பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், முதற்பதிப்பு_2005.
2. மாணிக்கம். வ. சுப. டாக்டர். (ப.ஆ) _ இரட்டைக்காப்பியம், செல்வி பதிப்பகம், முதற்பதிப்பு _ ஜனவரி. 1958.
3. விநாயகமூர்த்தி. அ. _ பதிப்புப் பார்வைகள், பாலமுருகன் பதிப்பகம், முதற்பதிப்பு_ஜூன் 1983.
4. வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி (முதல் தொகுதி), சாந்தி சாதனா, முதற்பதிப்பு_2001.
5. சிவஞானம், ம.பொ.டாக்டர். _ சிலம்பில் ஈடுபட்டதெப்படி?, பூங்கொடி பதிப்பகம், முதற்பதிப்பு, ஜூன் 1994.
6. ஆசிரியர் குழு _ சந்தி குறியீட்டு விளக்கம், மர்ரே அண்ட் கம்பெனி
7. பாலுசாமி. ந. முனைவர். (மு.ப.ஆ) _ வாழ்வியற் களஞ்சியம்_தொகுதி ஒன்று, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு_2002.