Tamil books

Wednesday 20 April 2011

மதங்களை தெரிவோம் - பகவத் கீதை

ந. முத்துமோகன்


வேதங்களும் உபநிடதங்களும் வைதீக மரபின்
மிகப் பழமையான நூல்கள். வேத உபநிடதங்களுக்குப்
பிறகு தோன்றிய இராமாயண மகாபாரத நூல்கள்
பண்டைய இந்தியாவில் சத்திரிய குலங்களின் எழுச்சியையும்
அரச உருவாக்கங்களையும் எடுத்துரைக்கின்றன.
இக்காலத்தில் வைதீக பிராமணியத்தின் புனித அதிகாரத்-
திற்கும் சத்திரியர்களின் அரச அதிகாரத்திற்கும் இடையில்
மோதல்கள்ஏற்பட்டன. மகாபாரத நூலின் இறுதிப் பகுதியி
ல் இடம்பெறும் பகவத்கீதை பிராமணருக்கும் சத்திரிய
ருக்கும், சமய அதிகாரத்திற்கும் அரச அதிகாரத்திற்கும்
இடையிலான மாபெரும் வரலாற்றுச் சமரசத்தைக் குறித்து
நிற்கிறது. பிராமண/சத்திரியக் கூட்டணி இந்திய
வரலாற்றின் அடுத்து வந்த காலங்களிலும் தொடர்ந்து
முக்கிய இடத்தை வகித்ததால் பகவத்கீதை ஒரு முக்கிய
நூலாக கருதப்படுகிறது.
பகவத்கீதையில் பிராமண சத்திரிய ஒற்றுமை
மட்டுமின்றி, பண்டைய இந்தியாவின் பல்வேறு சமயப்
போக்குகளுக்கிடையிலும் சமரசம் கற்பிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தம் கூறும் ஞானம், மக்கள்வழக்கில் அதிகம்
புழங்கிய பக்தி, வைதீக மரபின் யாகச் சடங்குகள், சத்திரியர்
முன்வைத்த கர்ம மார்க்கம், முனிவர்கள்பாராட்டிய
யோகநெறி போன்ற பலவகைப் போக்குகளுக்கிடையில்
பகவத்-கீதை சமரசம் ஏற்படுத்த முனைந்துள்ளது.
இம்முயற்சியில் அது முழு வெற்றி பெறவில்லை எனினும்
இத்தனை வித்தியாசமான செல்நெறிகளை ஒன்றுபடுத்த
முயற்சித்தமையால் பிற்காலத்தில் இந்து மதத்தின்
பொதுநூல் என்ற அங்கீகாரத்தைக் கீதை பெற முடிந்தது.
பகவத்கீதை ஒரே நேரத்தில் ஒரு தத்துவ நூலாகவும்
ஒரு சமய நூலாகவும் அமைகிறது. வேதாந்தம், சாங்கியம்,
யோகம் ஆகிய தத்துவங்களை ஒருபுறமும், வைணவ
சமயத்தை இன்னொருபுறமும் பகவத் கீதை இணைத்து
நிற்கிறது. வேதாந்தத் தத்துவத்தில் அதுவரை இடம்பெறாத
இறைக் கோட்பாட்டை பகவத்கீதை அதனோடு சேர்த்துக்
கட்டகிறது. வேதாந்தம் கூறும் பிரம்மமும், சமயங்கள்
கூறும் இறைவனும் ஒன்றே என பகவத்கீதை அறிவிக்கிறது.
வடஇந்தியச் சூழல்களில் அன்று அதிகம் செல்வாக்கு
பெற்றிருந்த வைணவ சமய நம்பிக்கைகளுக்கு கீதை தத்துவ
விளக்கங்களை வழங்குகிறது.
அரச உருவாக்கத்தின் அனுபவத்திலிருந்து
பகவத்கீதை ஒரே இறைவன் என்ற கருத்தினைப் பெற்-
றிருக்கலாம். பகவத்கீதை விஷ்μவையே ஒரே இறைவன்
என முன்வைக்கிறது. ஆயின் விஷ்μ வழிபாடல்லாத
இன்னும் பல இறை வழிபாடுகள்அன்று மக்கள்மத்தியில்
பல்கிப் பெருகியிருந்தன. கிருஷ்ணன், நாராயணன்,
வாசுதேவன், மன்மதன் எனப் பல கடவுளரும், விலங்கு
வடிவிலான பல வழிபாடுகளும்கூட அன்று வழக்கிலி
ருந்தன. பகவத்கீதை ஒரே கடவுள்எனப்படும் விஷ்μ-
விற்கும் பரவிக் கிடந்த பல தெய்வ வழிபாடுகளுக்கும்
இடையில் பாலம் அமைக்க அவதாரக் கொள்கையை
உருவாக்கியத. விஷ்μ எனும் ஒரே கடவுளே பல
அவதாரங்களை எடுத்தார் என அது கூறுகிறது. வைணவம்
ஒரு பெருமதமாக உருவாவதற்கு அவதாரக் கொள்கை
ஏராளமாக உதவியிருக்கிறது.
பகவத் கீதையின் காலத்தில் வருண சமூக அமைப்பு
வழக்கிற்கு வந்துவிட்டது. எனவே பகவத்கீதையின்
இறைவன் வருண அமைப்பை உருவாக்கியது தானே என
அறிவிக்கிறார். நால்வகை வருணங்களையும், ஒவ்வொரு
வருணத்திற்குரிய (சு)யதர்மங்களையும் நிர்ணயித்தது தானே
என கீதையில் விஷ்μ (கிருஷ்ணன்) தெரிவிக்கிறார். வருண
நியதியைக் கொண்டே, குருஷேத்திர யுத்தத்தில் அர்ச்சுனன்
ஏன் போரிட வேண்டும். என்பதற்கும் கிருஷ்ணன் நியாயம்
கற்பிக்கிறான். குரு«க்ஷத்திர யுத்தத்தின் அவசியத்தையும்
அர்ச்சுனன் எனும் சத்திரியனின் சுதர்மத்தையும்
இறைவனாகிய தானே முன்நிர்ணயம் செய்திருப்பதால்,
அவற்றைக் கேள்வி கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை
என கிருஷ்ணன் கூறுகிறான்.
பகவத் கீதையின் தொடக்கப் பகுதியில் அர்ச்சுனன்
எழுப்பும் கேள்விகள்பௌத்த சமயப்பின்புலம் கொண்-
டவை என ஆய்வாளர்கள்பலர் கருதுகின்றனர். ரத்த
உறவு கொண்டோரை போரில் அழித்தொழிக்கலாமா?
உயிர்க்கொலை புரிவது பாவமல்லவா? வருண அமைப்பின்
நியாயம் என்ன? நான் (சத்திரியன்) ஏன் போர் புரிய
வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளை அர்ச்சுனன்
எழுப்புகிறான். இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் பௌத்த
அறம் உள்ளதாக ஆய்வாளர்கள்கருதுகின்றனர். சமூக,
தனிமனித அறம் தொடர்பான இக்கேள்விகளுக்கு
பகவத்கீதை இறைநியதி, வருண சுதர்மம் ஆகியவற்றின்
வழிநின்று பதில் சொல்லுகிறது.

No comments:

Post a Comment