Tamil books

Wednesday 20 April 2011

தமிழ் வாசிப்பு திருக்குறள்

 ஈரோடு தமிழன்பன்

திருவள்ளுவர் காலம், முதன்மையான ஆவணங்கள்
வழியல்லாமல்_ தமிழறிஞர்கள்கொண்ட தரவுகளின்
அடிப்படையிலான கருத்தின்படி கி.மு.31 என்று முடிவு
செய்யப்பட்டுத் தமிழக அரசாலும், மக்களாலும்
ஏற்கப்பட்டுவிட்டது. திருவள்ளுவர் தாம் இயற்றிய நூல் பற்றி
எவ்விதக் கருத்தும் வெளிப்படுத்தாத நிலையில் அதன் பெயர்
திருக்குறள்என நமக்குக் கிடைத்ததோடு, பால் பகுப்புகளும்
அதிகாரப் பெயர்களும் வைப்புமுறை-களும் கிடைத்தன.
திருக்குறள்ஆசிரியர் பெயர் வள்ளுவர் என்று தெரிந்தபோதும்
அது அந்நூலை இயற்றிய ஆசிரியரின் _மேற்கொண்டி-ருந்த
(அரசனின் உட்படு கருமத்-தலைவர் என்னும்) பதவிப்பெயர்
என்றும் அவருக்கு அவருடைய பெற்றோர்கள்இட்ட பெயராக
ஒரு பெயர் இருந்திருக்க வேண்டும் என்று அறிகிறோம்.
திருக்குறள், தமிழ்மறை, உலகப்பொதுமறை என்று
பேசப்பட்டபோதிலும் விவிலியம், குர்ஆன் போலவோ
இந்துமத வேத சாத்திரங்கள்போலவோ கடவுளை மையப்ப
டுத்திய சமயங்களைப் போதிப்பதோ பரப்புவதோ அதன்
நோக்கமாக இருக்கவில்லை. சமயம் என்னும் கட்டமைக்கப்பட்
ட நிறுவனத்தின் குரல் எங்கும் அவர் நூலுள்ஒலிக்க-
வில்லை. மானுட வாழ்வியலையே மையப்படுத்துகிறது
திருக்குறள். கடவுள்வாழ்த்து கூடப் பூசனைப் பாடலாக
இல்லாமல் _ வழிபாட்டு முறைகளின், அகப்புற பரிமாணங்கள்
இல்லாமல் வாழ்க்கையின் விழுமியத்தையே பேசுகிறது என்று
அதற்கு உரை காண்பவர்களால் சொல்ல முடிகிறபோது
கடவுள்மறுப்பாளர்களுக்கும் அது வாய்ப்பை வழங்குகிறது.
திருவள்ளுவர் காலத்தில் மக்களாட்சி இருந்திருக்க
வாய்ப்பில்லை. ஆயினும் அவர் அரசன் புகழ்பாடுவதை
நோக்கமாகக் கொள்ளாமல் அரசு என்கின்ற அமைப்பின்
பண்புகளையும், பயன்களையும் பேசுகிறார். மக்களைத் தழுவிய
ஆட்சியே அவர் கண்ட மன்னராட்சியாக இருப்பதனால்
‘மன்னன் முதற்றே உலகு’ என்னும் கருத்துக்கூடப்
பிரதிபலிக்கவில்லை. மக்களை வருத்தி வரி வாங்குகிற அரசன்
வழிப்பறி செய்ய ஆயுதங்களோடு புறப்படும்
கொள்ளைக்காரனுக்கு நிகரானவன் என்கிறார். அத்தகைய
அரசனால் அல்லற்படும் பொதுமக்களின் கண்ணீரே
அரசனையும் அவன் செல்வத்தையும், அழித்தொழிக்கும்
படையாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்கிறார்.
மக்களுக்குப் பயன்படாத அல்லது எதிரான திட்டங்களை
எண்ணி வகுத்து அரசின் மூலம் செயல்படுத்துகிற அமைச்சரை
விடப் பகைவர்கள்மேலானவர்கள்என்கிறார் திருவள்ளுவர்.
பகைமையை வெளிப்படக் காட்டிப் போர் தொடுக்கும்
அந்நியரால் வருகிற தீமையைத் தெரிந்து எதிர்கொள்ள முடியும்.
அரசு அமைப்பில் நம்பி உட்கார வைக்கப்பட்டவன்
மறைவாகவே மக்களுக்குக் கேடானவற்றை எண்ணிச்
செயல்படுவான் எனில் அவனை எளிதில் கண்டறிவதும்,
பதவியிலிருந்து அகற்றுவதும் எப்படி முடியும் என்று வள்ளுவர்
சிந்திக்கிறார். மக்களாட்சிக் கோட்பாடு உருவாகாத காலத்தில்
மக்களாட்சி முகம் கொண்ட ஓர் அரசமைப்பை அவர் கருதிப்
பார்த்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது.
மானுட முயற்சிகளே உலக வாழ்வை உயர்த்த முடியும்
என்று நம்பிய அவர், இயற்கை என்றும் சூழ்நிலை என்றும்
வினைப்பயன் என்றும் இப்படி பல்வேறு கோணங்களில்
அர்த்தப்படுத்தப்படும் மனித ஆற்றலுக்கு மேலான ஊழ்
என்பதை வள்ளுவர் மறக்கவோ மறுக்கவோ இல்லை. எனினும்
அதற்கு மாற்றாக அல்லது அதை வெல்லும் வழியாகப் பல
கருத்துக்களை எடுத்து வைக்கிறார். ஊழ்வினையை உழைப்பால்
வென்றுவிட முடியும் என்று மக்களுக்கு நம்பிக்கை
ஊட்டுகிறார்.அன்பையும், அறத்தையும் இரு இன்றியமையாக்
களங்களாகக் கொண்டு செயல்படும் வள்ளுவச் சிந்தனைகள்
அவற்றுக்குப் பருமை வடிவங்களைப் படைக்க முற்படாமல்
பண்பு நிலைகளில் உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இல்லறம்
பற்றிய பன்முக வெளிப்பாடுகள்திருக்குறளில் இடம்
பெற்றிருப்பதோடு அவ்வில்லறத்துக்கு அடிப்படையான காதல்,
கற்பனையும் காவியத்தன்மையும் உள்ள காமத்துப்பாலில்
போற்றப்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது. துறவறவியலுக்கு
இத்தகைய அடிப்படையான கற்பனைக் காவியப்
பரிமாணமுள்ள ஒரு கருத்துத்தளத்தைக் கருதிக்கூடப்
பார்க்காமல் விட்டிருப்பது தனித்தமிழ்ச் சிந்தனை வளத்தை
அல்லது தமிழர் வாழ்வின் தனிப்பெரும் அடையாளத்தைக்
காட்டுவதாகும்.
வள்ளுவர், உழவையே சமுதாயத்தின் அடிப்படையான
தொழிலாக வியந்து பேசுகிறார். இல்லறத்தில் குடும்பம்
நடத்துபவருக்கு மட்டுமில்லை; விருப்பங்களை எல்லாம்
வெளியேற்றி விட்டவர்களாகக் கருதப்படுகிற துறவிகளுக்கும்,
உழவனின் உதவி தேவை என்கிறார் வள்ளுவர்; ‘சுழன்றும்
ஏர்பின்னது உலகு’ என்று உழவின் மேன்மையைப்
போற்றுகிறார்.
வாணிகத்தின் சமூகத் தேவையை அவர் தெரிந்திருந்த
காரணத்தால், அதன் இன்றியமையாப் பண்பாகச்
சான்றோர்க்குரிய நடுவுநிலைமையை வற்புறுத்துகிறார்.
பிறப்பினால் மக்கள்அனைவரும் ஒரு நிகரானவர் என்று
தெளிவுபடக் கூறியுள்ள அவர் _செய்கிற தொழிலை அது
எதுவாயினும் அதனைச் செய்யும் தன்மைக்கேற்ப பெருமையோ
சிறுமையோ அமையலாம் என்கிறார். தொழில் காரணமாகப்
பெருமையோ சிறுமையோ இல்லை என்பதை மிகச் சிறந்த
மானுட நேய அடிப்படையிலிருந்து பேசுகிறார்.
முடிவாகக் கூறுமிடத்துத் திருக்குறள்கடவுளையோ,
மதத்தையோ இம்மை மறுமைக் கோட்பாடுகளையோ அரசு
அதிகாரப் பதவி மேன்மைகளையோ முதன்மைப்படுத்தாமல்,
உலகியல் வாழ்வின் பொது அறங்களையும் பண்பாட்டின்
நெறிமுறைகளையும் முன்மொழிவதையே முழு நோக்கமாகக்
கொண்டு மானுடத்தைக் கொண்டாடும் ஒரு மகத்தான நூலாக
உள்ளது என்று சொல்லலாம்.

No comments:

Post a Comment