Tamil books

Thursday, 21 April 2011

நூற்றொகை பதிப்புகள்

து. குமரேசன்


தொகுப்புக்கலை என்பது தொல் தமிழர் காலம் முதலே தமிழில் அறியப்பட்ட வழக்கத்-தில் இருந்த ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்-தொகை, பதிணென்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்-காப்பியம், ஐஞ்சிறுங்காப்பியம், பன்னிரு திருமுறை, நாலாயிரத்திவ்யபிரபந்தம், பதினான்கு சைவ சித்தாந்த சாத்திரங்கள், பதினான்கு பண்டார சாத்திரங்கள், தொண்ணூற்றாறு பிரபந்தங்கள் போன்ற தொகை, வழக்கங்கள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன. இத்தொகை வழக்கங்களின் உதவிகொண்டே சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்றோர் ஓலைச்சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களைத் தேடி எடுத்து நூல்களாகப் பதிப்பித்துள்ளனர்.
ஓலைச்சுவடித் தொகுப்பு நூற்றொகைகள்
தமிழில் அச்சு நூல்கள் உருவாகும் முன்னர் வழக்கில் இருந்த ஓலைச்சுவடிகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்திய வரலாறும் உண்டு. பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில், காலின் மெக்கன்ஸி (சிஷீறீவீஸீ விணீநீளீமீஸீக்ஷ்வீமீ) என்பவர் இந்திய நில அளவையாளராக (ஷிuக்ஷீஸ்மீஹ்ஷீக்ஷீ நிமீஸீமீக்ஷீணீறீ ஷீயீ மிஸீபீவீணீ) இந்தியாவில் பணிபுரிந்துள்ளார். இவர் தென் இந்திய மொழிகளில் உள்ள பல இலக்கிய ஓலைச்சுவடிகள், கல்வெட்டுப் படிகள், ஆவணங்களை சேகரித்துள்ளார். இவரது சேகரிப்புகள் தமிழகத்தின் வரலாற்றையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் கூறும் தன்மை-யுடையவை. இவரது சேகரிப்புகள் பற்றிய ஒரு தொகுப்பு அட்டவணையை விணீநீளீமீஸீக்ஷ்வீமீ சிஷீறீறீமீநீtவீஷீஸீ (கி ஞிமீsநீக்ஷீவீஜீtவீஸ்மீ சிணீtணீறீஷீரீuமீ ஷீயீ tலீமீ ளிக்ஷீவீமீஸீtணீறீ விணீஸீusநீக்ஷீவீஜீts ணீஸீபீ மிறீறீustக்ஷீணீtவீஸ்மீ ஷீயீ tலீமீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ, பிவீstஷீக்ஷீஹ், ஷிtணீtவீநீs ணீஸீபீ கிஸீtவீஹீuவீtவீமீs ஷீயீ tலீமீ ஷிஷீutலீ ஷீயீ மிஸீபீவீணீ; சிஷீறீறீமீநீtமீபீ தீஹ் tலீமீ றீணீtமீ லிவீமீut,-சிஷீறீ சிஷீறீவீஸீ விணீநீளீமீஸீக்ஷ்வீமீ, ஷிuக்ஷீஸ்மீஹ்ஷீக்ஷீ நிமீஸீமீக்ஷீணீறீ ஷீயீ மிஸீபீவீணீ) என்ற பெயரில் எச். எச். வில்சன் (பிஷீக்ஷீணீநீமீ பிணீஹ்னீணீஸீ கீவீறீsஷீஸீ) 1828இல் தொகுத்து நூல் வடிவில் தந்துள்ளார். தமிழ் ஓலைச்சுவடிகளைப் பற்றிய முதல் தொகுப்பாக இதனைக் கொள்ளலாம். இரண்டாவதாக 1835இல் தமிழ்ச் சுவடிகளின் தொகுப்பை ளிக்ஷீவீமீஸீtணீறீ லீவீstஷீக்ஷீவீநீணீறீ னீணீஸீusநீக்ஷீவீஜீts, வீஸீ tலீமீ ஜிணீனீவீறீ றீணீஸீரீuணீரீமீ tக்ஷீணீஸீsறீணீtமீபீ; ஷ்வீtலீ ணீஸீஸீஷீtணீtவீஷீஸீs என்ற பெயரில் வில்லியன் டெய்லர் தந்துள்ளார். பின்னர் இவற்றுடன் சேர்த்துக் கிழக்கிந்திய இல்லத்தில் (ணிணீst மிஸீபீவீணீ பிஷீusமீ சிஷீறீறீமீநீtவீஷீஸீs) இருந்தவை, பிரவுன் என்பவர் சேகரிப்பில் இருந்த ஓலைச்சுவடிகள் பற்றிய விவரங்களையும் சேர்த்து மூன்று தொகுதிகளாக கி சிணீtணீறீஷீரீuமீ க்ஷீணீவீsஷீஸீஸீமீ ஷீயீ ளிக்ஷீவீமீஸீtணீறீ விணீஸீusநீக்ஷீவீஜீts வீஸீ tலீமீ லிவீதீக்ஷீணீக்ஷீஹ் ஷீயீ tலீமீ லிணீtமீ சிஷீறீறீமீரீமீ ஷீயீ திஷீக்ஷீt ஷிணீவீஸீt நிமீஷீக்ஷீரீமீ என்ற பெயரில் மூன்று தொகுதி நூல்களாக 1857, 1860, 1862 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்-டுள்ளார்.
இவற்றுடன் எல். உலகநாதப்பிள்ளை என்பவரால் 1925இல் தொகுக்கப்பட்ட தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத் தமிழ்ச் சுவடிகள் அட்டவணை, 1956 மற்றும் 1961இல் திருவான்மியூர் உ.வே. சாமிநாதையர் நூலகம் வெளியிட்ட நூல் நிலையச் சுவடிகளின் விளக்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அரசினர் கீழ்த்-திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை (3 பகுதிகள்), உலகத் தமிழராய்ச்சி நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை (4 பகுதிகள்) ஆகியன சுவடிகளில் உள்ள தமிழ் இலக்கிய வளங்-களின் தொகுப்புத் தகவல்கள் அடங்கிய நூற்றொகைகளாகும்.
அச்சில் வெளிவந்த நூல்களுக்கான நூற்றொகைகள்
கால ஓட்டத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கும் முறை அகன்று, அச்சு இயந்திரத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட நூல்கள் தோன்ற ஆரம்பித்தன. நூல்களைத் தொகுக்கும் கலையான ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீவீநீ சிஷீறீறீமீநீtவீஷீஸீ அறிமுகம் ஆனது. தமிழ் நூற்றொகைகளும் உருவாகத் தொடங்கின.
ஒரு நூலின் பதிப்புத் தகவல்களான நூலின் தலைப்பு, எழுதியவரின் பெயர், வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர், அச்சிட்ட அச்சகத்தின் பெயர், விலை, தாளின் அளவு, தரம், பக்கங்களின் எண்ணிக்கை, கட்டுமானம், நூல் சேகரிப்பு போன்ற விவரங்களை ஒரே இடத்தில் எளிமை-யாகவும், துரிதமாகவும், சுருக்கமாகவும் தருகின்ற தொகுக்கப்பட்ட பட்டியலானது நூற்றொகை ஆகும். இது கால வரிசையிலோ, பொருள் வரிசையிலோ, எழுதியவரின் பெயர் அகர வரிசையிலோ தனித்தனியாகவும் அல்லது மூன்று விடயங்களும் ஒருங்கே சேர்ந்ததாகவும் இருக்கும்.
இந்நூற்றொகைகள் ஒரு மொழியில் காலந்தோறும் வெளிவரும் இலக்கியம், கலை, அறிவியல், ஆன்மிக, பண்பாட்டு மற்றும் பிறவகை நூல்களைத் தெரிவிக்கும் கருவிகளா-கும். நாட்டின் வரலாறு, மக்களின் பண்பாடு, நாகரிக வளர்ச்சி, கல்வி மேம்பாடு முதலியவற்றை அடுத்து வரும் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தவும், மொழியின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் பயன்படுகின்றன.
நூற்றொகை தயாரிப்பு என்பது நூலகர்-களின் சேவையில் முக்கியக் கூறாக இருந்துள்-ளது. ஒரு மிகச் சிறந்த நூலகர் பல வகைப்-பாடான நூற்றொகைகளைத் தயாரித்து வெளி-யிட்டு வந்துள்ளதை நாம் காணலாம். இங்கு தரப்பட்டுள்ள நூற்றொகைகள் பெரும்பான்மை-யானவை நூலக உணர்வு மிக்கவர்களினாலேயே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஜான் மர்டாக் நூற்றொகை
தமிழின் முதல் நூற்றொகை, அதாவது அச்சில் வெளியான நூல்களைப் பற்றிய தொகுப்பு 1865 இல் ஜான் மர்டாக் தொகுத்து வெளியிட்ட சிறீணீssவீயீவீமீபீ நீணீtணீறீஷீரீuமீ ஷீயீ ஜிணீனீவீறீ ஜீக்ஷீவீஸீtமீபீ தீஷீஷீளீs ஷ்வீtலீ வீஸீபீtக்ஷீஷீபீuநீtஷீக்ஷீஹ் ஸீஷீtவீநீமீs ஆகும்.
பிரித்தானிய தொல்பொருள் காட்சி அரங்க நூற்றொகை
இரண்டாவதாக பிரித்தானிய தொல்-பொருள் காட்சி அரங்க நூலகத்தில் உள்ள தமிழ் நூல்களுக்கான நூற்றொகை கி நீணீtணீறீஷீரீuமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீ தீஷீஷீளீs வீஸீ tலீமீ றீவீதீக்ஷீணீக்ஷீஹ் ஷீயீ tலீமீ ஙிக்ஷீவீtவீsலீ விusமீuனீ ஆகும். இத்தொகுப்புப் பணி ஜி.யு.போப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அதே தொல்பொருள் காட்சி அரங்கத்தில் கீழ்த்திசைச் சுவடிகளுக்குப் பொறுப்பாளராகப் பணிபுரிந்த எல்.டி. பெர்னெட் (ஞிக்ஷீ. லி.ஞி. ஙிணீக்ஷீஸீமீtt) அவர்களால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு 1909இல் வெளியிடப்பட்டது. இதில் விடுபட்ட தரவுகளை 1931இல் எல்.டி. பெர்னெட் தனியாக ஷிuஜீஜீறீமீனீமீஸீtணீக்ஷீஹ் சிணீtணீறீஷீரீuமீ ஷீயீ ஜிணீனீவீறீ ஙிஷீஷீளீs வீஸீ tலீமீ ஙிக்ஷீவீtவீsலீ விusமீuனீ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நூற்றொகை முயற்சிகள்
முதல் இரு நூற்றொகைகளுமே பிரித்தானி-யர்களால் தொகுக்கப்பட்டவை. 1900_களின் பின்னர்தான் தமிழ்நாட்டில் நூற்றொகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை தனிநபர் நூலகம் சார்ந்த நூலகப் பட்டியல்களே. 1912இல் எம்.ரங்காச்சாரி அவர்களால் தொகுக்கப்-பட்ட அரசினர் நூலகத்தில் உள்ள கையெழுத்து நூல்களின் விவர அட்டவணை, 1950இல் வெளியிடப்பட்ட அம்மையப்பன் பஞ்சாயத்து போர்டு - காந்தியடிகள் நூல் நிலைய புத்தகப் பட்டியல், 1958 மற்றும் 1961இல் வெளியிடப்பட்ட மன்னார்குடி - கோட்டூர் இரங்கசாமி முதலியார் இலவச நூல் நிலைய புத்தகப் பட்டியல் போன்றவற்றைக் கூறலாம்.
தமிழ்நாட்டு நூற்றொகை
1948 இல் நிறைவேற்றப்பட்ட சென்னைப் பொதுநூலகச் சட்ட விதிமுறைகளின் அடிப்-படை-யில், 1951இல் தமிழக கல்வித்துறை ஜிணீனீவீறீ ழிணீபீu ஷிtணீtமீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் என்னும் பெயரில் 1951ற்கு முன்னர் வெளியான தமிழ் நூல்களைப் பற்றிய திரட்டாக ஒரு நூற்றொகையினை வெளி-யிட்டுள்ளது. இதில் 1349 தமிழ் நூல்களைப் பற்றிய தரவுகள் உள்ளன. இது பின்னர் தொடரப்படவில்லை.
1963இல் கன்னிமாரா நூலகத்தில் நூலகராகப் பணிபுரிந்த வே.தில்லைநாயகம் அவர்கள், 1954 ஆண்டுக்கான நூற்றொகையை ‘சென்னை மாநில நூற்றொகுப்பு’ என்ற பெயரில் வெளி-யிட்ட முயற்சியின் தொடர்ச்சியாக 1980வரை தமிழ்நாட்டு நூற்றொகைகள் வெளிவந்துள்ளன. வே. தில்லைநாயகம், அ.மு. சுந்தரராஜன் போன்றோர் நூலகர்களாக இருந்த காலங்களில் மட்டுமே நூற்றொகைகள் வெளிவந்துள்ளதை அட்டவணை 1இல் தெளிவாகக் காண முடிகிறது.
வ.   தலைப்பு    நூல்கள்    #ஆண்டு       தொகுத்தவர்    *ஆண்டு
எண்
01    ஜிணீனீவீறீ ழிணீபீu ஷிtணீtமீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ்    1349    -- _    தமிழகக் கல்வித்துறை    1951
02    சென்னை மாநில நூற்றொகுப்பு    240    1954    வே. தில்லைநாயகம்    1963
03    தமிழ் நாட்டு நூற்றொகை    551    1964    வே. தில்லைநாயகம்    1971
04    தமிழ் நாட்டு நூற்றொகை    637    1965    வே. தில்லைநாயகம்    1972
05    தமிழ் நாட்டு நூற்றொகை    541    1966    வே. தில்லைநாயகம்    1969
06    தமிழ் நாட்டு நூற்றொகை    620    1967    வே. தில்லைநாயகம்    1976
07    தமிழ் நாட்டு நூற்றொகை    839    1968    வே. தில்லைநாயகம்    1976
08    தமிழ் நாட்டு நூற்றொகை    484    1969    வே. தில்லைநாயகம்    1977
09    தமிழ் நாட்டு நூற்றொகை    868    1970    வே. தில்லைநாயகம்    1979
10    தமிழ் நாட்டு நூற்றொகை    615    1971    வே. தில்லைநாயகம்    1977
11    தமிழ் நாட்டு நூற்றொகை    587    1972    அ.மு. சுந்தரராஜன்    1983
12    தமிழ் நாட்டு நூற்றொகை    939    1975    அ.மு. சுந்தரராஜன்    1980
13    தமிழ் நாட்டு நூற்றொகை    1057    1976    அ.மு. சுந்தரராஜன்    1983
14    தமிழ் நாட்டு நூற்றொகை    1733    1977    அ.மு. சுந்தரராஜன்    1984
15    தமிழ் நாட்டு நூற்றொகை    1564    1979    அ.மு. சுந்தரராஜன்    1987
16    தமிழ் நாட்டு நூற்றொகை    1121    1980    அ.மு. சுந்தரராஜன்    1997
#    ஆண்டு - நூல்கள் வெளியான ஆண்டு
*    ஆண்டு -_ நூற்றொகை வெளியிடப்பட்ட ஆண்டு_02_16
    கன்னிமாராப் பொது நூலகம் வெளியிட்ட நூற்றொகைகள்
    அட்டவணை 01 தமிழ்நாட்டு நூற்றொகைகள்
1963 _- 1968 ஆகிய 6 ஆண்டுகள் கன்னிமாரா நூலகத்தின் மூலம், வே.தில்லைநாயகம் அவர்க-ளுடைய தொகுப்பில் தனியாக வெளியிடப்-பட்டு வந்த தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை 1968இல் தமிழ்நாட்டு நூற்றொகையுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் வெளியான தமிழ்நாட்டு நூற்றொகையில் குழந்தைகளுக்-கான நூல்கள் ஒரு நட்சத்திரக் குறி மூலம் சுட்டப்படுகிறது.
1997இல் வெளியிடப்பட்ட 1980 ஆம் ஆண்டுக்குரிய தமிழ்நாட்டு நூற்றொகைக்குப் பின்னர் கன்னிமாராப் பொதுநூலகம் நூற்றொகைகளை வெளியிடவில்லை.
தமிழ் நூல் விவர அட்டவணை
தமிழ்நாடு அரசினர் _ தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் 1956ஆம் ஆண்டு அறிமுகப்-படுத்திய ஆட்சிமொழிச் சட்டத்தின் (விணீபீக்ஷீணீs ளியீயீவீநீவீணீறீ லிணீஸீரீuணீரீமீ கிநீt 1956) துணைகொண்டு 1867 _- 1957க்கு இடைப்பட்ட காலத்தில் வெளி-யான தமிழ் நூல்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிடும் திட்டத்தை 1960 செப்டம்பரில் தொடங்கியது. தமிழியல் ஆய்வு-களுக்கும், தமிழில் கற்பித்தலுக்கும் துணை-செய்யும் தொலைநோக்குடன் அ.ச.ஞான-சம்பந்தன், புலவர் மு.சண்முகம்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களால் தமிழ்நூல் விவர அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்-றுள்ளதை அவர்களுடைய பதிப்புரைகளின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
‘இத்தொகுதியில் குறித்த நூல்களுள் சில தமிழகத்திலும், பாரத நாட்டின் பிற பகுதிகளிலும், இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய மேனாடுகளிலும், பர்மா, மலேயா முதலிய கீழை நாடுகளிலும், இலங்கை யாழ்ப்பாணத்திலும் உள்ள பழைய நூல் நிலையங்களில் காணுதல் கூடும். ஏட்டுச் சுவடிகளைச் சேகரிப்பதுபோல் இந்நூல்களையும் தேடிப் பெற்று, ஆராய்ச்சிப் பொது நூலகத்தில் வைத்துப் போற்ற வேண்டுவது மிக அவசியமாகும். பெரும்பாலான பழைய நூல்கள் இந்நிலையத்தில் இருப்பதால், எஞ்சிய நூல்களையும் இத்துடன் சேர்த்து வைத்தால், ஆராய்ச்சி அறிஞர்களுக்கு ஓர் இடத்தில், அச்சில் வந்த பழைய தமிழ் நூல்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டும்’
- 1964இல் பதிப்புரையில் அ.ச.ஞானசம்பந்தன்#
தமிழ்நூல் விவர அட்டவணை முயற்சியில், முதல் தொகுதி 1867_-1900 காலப்பகுதியில் வெளி-யான தமிழ் நூல்களைப் பற்றிய நூற்றொகை. இது ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டது. முதல் இரண்டு பகுதியிலும் சென்னை ஆவணக் களரி நூலகத்தில் (விணீபீக்ஷீணீs ஸிமீநீஷீக்ஷீபீ ளியீயீவீநீமீ லிவீதீக்ஷீணீக்ஷீஹ் ஷிமீநீtவீஷீஸீ) சேமிக்கப்பட்டிருந்த நூல்களை நேரடியாகப் பார்வையிட்டு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் முதல் இரு பகுதிகளில் குறிப்பிடப்படும் ஆசிரியர்கள் அகரவரிசைப் பட்டியலும், நான்காம் மற்றும் ஐந்தாம் பகுதிகள் 1867_1900 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட, ஆனால் ஆவணக் களரியில் இல்லாதுபோன நூல்கள் பற்றிய அட்டவணை-களாகும். ஆவணக் களரியில் நூல்கள் இல்லாது போயிருந்தாலும் நூல் உரிமையாளர்கள் உரிமைகளை, அரசாங்கத்தில் பதிவு செய்யும் சட்டத்தின்படி (ஙிஷீஷீளீ ஸிமீரீவீstக்ஷீணீtவீஷீஸீ கிநீt 1867) உரிமை பதிவு செய்யப்பட்டிருந்த குறிப்பு, அரசு இதழில் காணப்பட்ட பதிவுத் தரவுகளின் துணைகொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தொகுதி 1900_1910 என்ற பத்தாண்டு காலப் பகுதியில் வெளியான நூல்-களைப் பற்றிய பகுதிகளைக் கொண்டது. முதல் இரு பகுதிகளும் ஆவணக் களரி நூலகத்தில் கிடைக்கப்பெற்ற நூல்களைப் பற்றியும், மூன்றாம் பகுதியில் கிடைக்கப்பெறாத நூல்களைப் பற்றிய அட்டவணையாகவும் தரப்பட்டுள்ளது.
மூன்றாம் (1911_1915), நான்காம் (1916_1920), ஐந்தாம் (1921_1925), ஆறாம் (1926_1930), ஏழாம் (1931_1935) தொகுதிகள் ஐந்தாண்டு காலப்-பகுதியில் வெளியான நூல்களுக்கான நூற்-றொகைகளாகும். இத்தொகுதிகளில் வழமை-போல முதல் இரு பகுதிகள் கிடைக்கப்பெற்ற நூல்களுக்கும் மூன்றாம் பகுதி கிடைக்கப்பெறாத நூல்களைப் பற்றிய அட்டவணையாகவும் உள்ளது.
வ.    பெரும்பகுதி    உட்பிரிவு    நூல்கள்    பொதுப்பதிப்பாசிரியர்    * ஆண்டு
எண்
01    தொகுதி 1    பகுதி 1    1774-    கண்ணையன். வெ    1961
02    ,,    பகுதி 2    1944    கண்ணையன். வெ    1962
03    ,,    பகுதி 3    ஆசிரியர்    மு. சண்முகம்    1963
            அகரவரிசை
04    அனுபந்தம்    பகுதி 4#    2035    அ.ச. ஞானசம்பந்தன்    1964
05    அனுபந்தம்    பகுதி 5    2025    அ.ச. ஞானசம்பந்தன்    1964
06    தொகுதி 2    பகுதி 1    1124    அ.ச. ஞானசம்பந்தன்    1965
07    ,,    பகுதி 2    1135    வே. கார்த்திகேயன்    1966
08    ,,    பகுதி 3    1559    கே.எஸ். மகாதேவன்    1972
09    தொகுதி 3    பகுதி 1    1262    கொண்டல் சு.மகாதேவன்    1974
10    ,,    பகுதி 2    2261    கொண்டல் சு.மகாதேவன்    1978
11    ,,    பகுதி 3    2110    கொண்டல் சு.மகாதேவன்    1977
12    தொகுதி 4    பகுதி 1    1280    கொண்டல் சு.மகாதேவன்    1975
13    ,,    பகுதி 2    1213    கொண்டல் சு.மகாதேவன்    1977
14    ,,    பகுதி 3    2234    கொண்டல் சு.மகாதேவன்    1978
15    தொகுதி 5    பகுதி 1    2082    சு. செல்லப்பன்    1986
16    ,,    பகுதி 2    1983    சு. செல்லப்பன்    1987
17    ,,    பகுதி 3    2576    கொண்டல் சு.மகாதேவன்    1977
18    தொகுதி 6    பகுதி 1    2154    கொண்டல் சு.மகாதேவன்    1978
19    ,,    பகுதி 2    1731    சு. செல்லப்பன்    1987
20    ,,    பகுதி 3    2916    மா. நன்னன்    1980
21    தொகுதி 7    பகுதி 1    2144    மா. நன்னன்    1981
22    ,,    பகுதி 2    1552    சு. செல்லப்பன்    1978
23    ,,    பகுதி 3    2580    கொண்டல் சு.மகாதேவன்   
* வெளியிடப்பட்ட ஆண்டு
அட்டவணை 02 தமிழ் நூல் விவர அட்டவணை
1960இல் தமிழ் நூல் விவர அட்டவணை தொகுப்புத் திட்டம் தொடங்கப்பட்டபோது 1957 வரைக்குமான அட்டவணை தயாரிப்பதாக இருந்தபோதிலும் 1987இல் இறுதியாக, 1935 வரையான அட்டவணை மட்டுமே முற்றுப் பெற்-றுள்ளது. அதன் பின்னர் இம்முயற்சி தொடரப்-படாமைக்கான காரணங்கள் பொதுவில் இல்லை.
இந்திய தேசிய நூல் விவரப்பட்டியல் (தமிழ்ப்பகுதி)
கொல்கத்தாவிலுள்ள மத்திய அரசின் _ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான சிமீஸீtக்ஷீணீறீ ஸிமீயீமீக்ஷீமீஸீநீமீ லிவீதீக்ஷீணீக்ஷீஹ் ஆனது 1958 முதல் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகும் நூல்-களைப் பற்றிய நூற்றொகையை மூன்று மாதங்-களுக்கு ஒரு முறை (ஸிஷீனீணீஸீ ஷிநீக்ஷீவீஜீt) ஆங்கில வரிவடிவில் வெளியிடுகிறது. ஞிமீறீவீஸ்மீக்ஷீஹ் ஷீயீ ஙிஷீஷீளீs கிநீt அடிப்படையில் கொல்கத்தா நூல் நிலையத்திற்குக் கிடைக்கப்பெறும் நூல்களைக் கொண்டே இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறே தமிழில் இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல் - தயாரிக்கப்படுகிறது. அவ்வாறே தமிழில் இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல்_-தமிழ்ப் பகுதி (மிஸீபீவீணீஸீ ழிணீtவீஷீஸீணீறீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் - ஜிணீனீவீறீ திணீsநீவீநீuறீமீ) வெளியிடப்படுகிறது. இது ஆரம்ப நாட்களில் ஒவ்வோர் ஆண்டும் வெளி-யிடப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளுக்குச் சேர்த்து ஒன்றாக வெளியிடப்பட்டது. இறுதியாக 1989_1991 ஆகிய 3 ஆண்டுகளுக்குரிய தொகுப்பு நூற்றொகையை 1993ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்கள். இதன் பின்னர் 16 வருடங்களாக இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல் _ தமிழ்ப் பகுதி வெளியிடப்பட-
வில்லை.
நூல்கள்     ஆண்டு    தொகுப்பாளர்               ஆண்டு
671    1958    பி.எஸ். கேசவன்        1960
515    1959    பி.எஸ். கேசவன்        1960
##    1960    பி.எஸ். கேசவன்        1961
621    1961    பி.எஸ். கேசவன்        1962
##    1962    ##        1963
##    1963    ##        1964
3012    1963- _ 1967    பி.ந. வெங்கடாச்சாரி         1978
##    1968- _ 1974    ##        1984
1974- _ 1984 இடைப்பட்ட காலத்தில் தமிழில் வெளியிடப்படவில்லை
1149    1984    பி.ந. வெங்கடாச்சாரி + து.சுப்ரமணியன்        1987
1539    1985    து. சுப்ரமணியன்        1988
1473    1986    து. சுப்ரமணியன்        1989
2580    1987- _ 1988       து. சுப்ரமணியன்        1991
3580    1989- _ 1991       து. சுப்ரமணியன்        1993
?    1992 _ 2000    ?        ?
?    2001 -_ 2008    ?        ?
## தரவுகள் சேகரிக்கப்படல் வேண்டும்.
அட்டவணை 03  இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல் (தமிழ்ப் பகுதி)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளி-யிட்ட உலகத் தமிழ் எழுத்தாளர் _ - யார்? எவர்? (சுப்பிரமணியன் ச.வே. 1980), 80இல் தமிழ், 83இல் தமிழ் (டாக்டர் அன்னி தாமசு 1985), தமிழ் நாவல்கள் (1985 _ சீதாலட்சுமி .வே) போன்ற முயற்சிகளும் தரவுகளைத் தர வல்லவை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1983இல் முதற்பதிப்பாக வெளியிட்ட ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீs மொழிபெயர்ப்பு நூற்றொகை 2008இல் அப்படியே மறுஅச்சு செய்யப்பட்-டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புகள் பற்றிய பதிவுகள் இற்றைப்படுத்தப்படவில்லை. இந்நிறுவனத்-தினால் ஹி.நி.சி.இன் ரூ. 2,77,560.00 நிதி உதவியுடன் 2003இல் ஆரம்பிக்கப்பட்ட சிலீவீறீபீக்ஷீமீஸீs லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ ணீஸீ கிஸீஸீஷீtணீtமீபீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் முயற்சியும் இன்னமும் அச்சில் வெளியிடப்பட-வில்லை. இது அச்சில் வெளியிடப்படும்போது தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தரவுகளைத் தர வல்லதாகவும், தமிழில் எதிர்காலத்தில் சிறுவர் இலக்கியம் எவ்வாறு படைக்கப்படல் வேண்டும் என்பதை வழிகாட்டுவதாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அனைத்து நூற்றொகைகளும் முற்றும் முழுதாக விஞ்ஞான முறைப்படி (ஷிநீவீமீஸீtவீயீவீநீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் திஷீக்ஷீனீணீt) தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறமுடியாவிடினும், அடிப்படையில் அதன் தன்மைகளின் பெரும்பாலான கூறுகளைக் கொண்டிருந்தவைகளையே நாம் எடுத்துக் கொண்டுள்ளோம்.
இவை தவிர பின்வரும் நூல்களிலும் பல்வேறு நூற்றொகைத் தரவுகள் உள்ளடக்-கப்பட்டுள்ளன.
·    தமிழ்நூல் தொகுப்புக் கலை (1972 _ பாரி நிலையம், சுந்தர சண்முகனார்)
·    தமிழும் தமிழரும் (1896 _ திருமணம் செல்வ கேசவராய முதலியார்)
·    எண்பத்து மூன்றில் தமிழ் (பகுதி _ 1,2) (1995 உ.த.நி., டாக்டர் அன்னி தாமசு)
·    எண்பதில் தமிழ் (1982 _ ச.வே. சுப்பிரமணியன் + விஜயலட்சுமி)
·    ஈழமும் தமிழும் (1956 _ கலைமகள் வெளியீடு, மட்டக்களப்பு கத்தோலிக்க அனாத அச்சகம் எப்.எக்ஸ்.சி. நடராஜ்)
·    பாரதிதாசன் ஆய்வடங்கல் (1983 _ தந்தை பெரியார் அரூர், தருமபுரி மாவட்டம் _ தே.வே. சந்தானம்)
·    தமிழியல் நோக்கு நூல் அடைவு (கி ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீயீ  ஸிமீயீமீக்ஷீமீஸீநீமீ கீஷீக்ஷீளீs வீஸீ ஜிணீனீவீறீ - 1978 - பெ. மாதையன், சகுந்தலை வெளியீடு)
·    சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை (1973 _ டாக்டர் ந. சஞ்சீவி, சென்னைப் பல்கலைக்கழகம்)
·    அகிலன் ஆய்வடங்கல் (1974 _ சு. வேங்கடராமன், மதுரைப் பல்கலைக்கழகம்)
·    மு.வ. கலைக்களஞ்சியம் (1974 _ இரா.மோகன், சர்வோதய இலக்கியப் பண்ணை)
·    திருக்குறள் நூலடைவு 1974 (704 நூல்களின் பட்டியல் க.த. திருநாவுக்கரசு, சென்னைப் பல்கலைக்கழகம்)
·    தமிழ்ப்புலவர் வரிசை (கழகம்)
·    மு.வ. ஆய்வடங்கல் (1974 _ சு. வேங்கடராமன், மதுரைப்பல்கலைக்கழகம்
·    இலக்கண ஆய்வடங்கல் _ இரு தொகுதிகள் (1992 _ டாக்டர் துரை பட்டாபிராமன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
·    தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் (2004 _                        ந. முருகேசபாண்டியன், தி பார்க்கர்)
·    செ.கணேசலிங்கனின் படைப்புலகம் (2008 _ குமரன் புத்தக இல்லம்)
தமிழ் இலக்கியத்தின் தொன்மை சிறப்பா-னது. ஆனால் பல இடங்களில் மயக்கத்தினைத் தருவது. திருவள்ளுவர் திருக்குறளை எந்த ஒரு மதத்தின் பக்கமும் நின்று படைக்கவில்லை. திருக்குறள் மத எல்லைகளுக்குள் அடங்கும் ஒன்றல்ல. ஆயினும் திருவள்ளுவரை ஒரு சமணர் என்று திரு.வி.க., வையாபுரிப் பிள்ளை, மயிலை. சீனி. வேங்கடசாமி போன்ற பலர் கருதும் அதே வேளையில், அதே திருவள்ளுவரை ஒரு இந்துவாக எஸ்.எம். டயஸ் பார்க்கிறார். மறைமலை அடிகளார், வச்சிரவேலு முதலியார் போன்றோர் அவரை ஒரு சைவர் என்று மதிப்பிடுகின்றனர். அயோத்திதாசரோ பௌத்தர் என்கிறார், வைணவர் என்று புருஷோத்தம நாயுடு நம்புகிறார்.
இதேபோன்று ஒளவையார் என்று அறியப்படுபவர் ஒருவரா இல்லை ஒளவையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனரா என்ற குழப்பமும், தொல்காப்பியத்தை உலகிற்குத் தந்த தொல்காப்பியர் வாழ்ந்த காலம் பற்றிய கருத்து மோதல்களும் தமிழறிஞர்கள் மத்தியில் உலவுவதைப் பலரும் அறிவர்.
இவை யாவற்றிற்கும் அடிப்படை என்பது தொல் தமிழர், தம் வரலாற்றை, தம் இலக்கிய வரலாற்றை, தம் வாழ்வியல் சிந்தனைகளை உரிய முறையில் பதிவு செய்து அடுத்து வந்த தலைமுறைகளிடம் ஒப்படைக்காமையே என்ற ஒரு தவறான புரிதலேயாகும்.
நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத தொல்தமிழர் காலத்தில் தங்கள் வரலாற்றைப் பதிவு செய்வதற்குப் பல இடர்ப்பாடுகள் இருந்திருக்கின்றன. ஒரு ஓலைச்சுவடியில் உள்ள எழுத்துகளைப் பிரதி செய்வது என்பது மீண்டும் அதனை இன்னொரு ஓலையில் எழுதுவதே. இன்று ஒரு சாதாரண கி4 அளவு தாளில் ஒரு பக்கத்தில் பதிவு செய்யப்படும் ஒரு விடயத்தை அன்று பதிவு செய்வதற்கு எத்தனை ஓலைகள் தேவைப்பட்-டிருக்கும். அத்தனை ஓலைகளையும் பதப்படுத்தி வைக்கும் நிகழ்வில் எத்தனை ஓலைகள் பழுதடைந்திருக்கும். இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான காரணங்களால் தொல் தமிழர் எது முக்கியமான பகுதியோ அதை மட்டும் பதிவு செய்து தந்துள்-ளனர். திருக்குறள் மட்டும் முக்கியமானது. அது இருந்தால் போதும். அதை உலகிற்குத் தந்த திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது இரண்டாம் பட்சமானதே என்று அவர்கள் அன்று கருதியிருக்கலாம். தவிர மன்னர்களிடையேயான போர்கள், இயற்கைப் பேரிடர்கள், மதங்களுக்கிடையேயான சண்டைகள், காட்டு விலங்குகளின் தொல்லை போன்று பல இடர்கள் தொல் தமிழர் சேகரங்களை, பதிவுகளை இல்லாமல் செய்திருக்கலாம்.
இன்று நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பல நவீன அறிவியல் முன்னேற்றங்களை நாம் வாழ்வில் தினமும் பயன்படுத்துகின்றோம். ஒரு நிமிடத்தில் 50 பிரதிகள் எடுத்துத் தர வல்ல இயந்திரங்கள் தெரு முனைகளில் இலகுவில் கிடைக்கின்றன. இன்று சென்னையில் இருந்து இணையத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவை அடுத்த நிமிடமே உலகின் எந்த முனையில் இருந்தும் படிக்கக்-கூடிய வலைப்பூக்கள் என்று சொல்லப்படுகிற ஙிறீஷீரீs பரவலாக அறிமுகம் பெற்றுள்ளன.
இன்றும் நாம் இன்றைய பதிவுகளை உரிய முறையில் பதிவு செய்து வைக்காவிடின் அது நம் தவறாகவே எதிர்காலத் தலைமுறையினரால் கவனிக்கப்படும். அது உண்மையும் கூட.
‘வெனிஸ் வர்த்தகன்’ எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் வேறு, ‘அதே இரவு அதே வரிகள்’ எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் வேறு. இரண்டு வெவ்வேறான நபர்கள், வாழ்ந்த காலப்பகுதி வேறு என்பதை உரிய முறையில் பதிவு செய்யவில்லை என்றால் 200 வருடங்-களின் பின்னர், இப்பொழுது உள்ளதைப் போன்றே இரண்டுநாள் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டு பல மணிநேர மனித மணித்துளிகள் வீணடிக்கப்படும் நிலைக்கு நாம் வழி அமைத்துக் கொடுத்தவர்களாவோம்.
இன்று ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்-களுக்கும் மாணவர்களுக்கும் அடிப்படைத் தரவுகளைத் தர வல்ல கருவி நூல்கள் மிகக் குறைந்த அளவில்தான் கிடைக்கின்றன. தேடலிலேயே அதிக கால விரயம் ஏற்படுகிறது. இதனால் ஆய்வாளர்கள் தளர்வடைய நேரிடுகிறது.
எடுத்துக்காட்டாக, தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக்காலப் பின்னணியில் இன்றுள்ள ஒரு எழுத்தாளர் ஒரு நாவலை எழுத விரும்பினால், தஞ்சை மராட்டியர் ஆட்சி பற்றிய அனைத்துப் பதிவுகளையும், வெளியான நூல்களையும் முதலில் அவரே தேடி எடுத்துப் பட்டியலிட வேண்டிய அவலநிலை உள்ளது. இதற்கே குறைந்தது இரண்டு வருடங்கள் செலவா-கின்றது. இது உண்மையில் எழுத்தாளனின் வேலை அல்ல. நூலகர்களின் வேலை; அரசாங்-கத்தின் வேலை. தஞ்சை மராட்டியர் ஆட்சிக்-காலப் பதிவுகள் என்ற ஒரு இற்றைப்படுத்தப்-பட்ட நூற்றொகை இருக்குமாயின் எழுத்தாளர் அந் நூற்றொகையின் உதவியுடன் வேண்டிய நூல்களை அடையாளங்கண்டு, நேரடியாக நாவல் எழுதும் முயற்சியில் இறங்கலாம். காலவிரயமும் தவிர்க்கப்படும், ஆக்கமும் சிறப்பான நிலையில் கிடைக்கும்.
ஒரு குறிப்பிட்ட தலைப்பில், வகைப்பாட்டில் இதுவரை எத்தனை எழுத்துப் பதிவுகள் வந்துள்ளன என்பதைக் கூறும் நூற்பட்டியல்கள் இல்லை. இருக்கின்ற பட்டியல்களும் தனி மனித உழைப்பினால் ஏற்பட்டவையே. அப்-பட்டியல்கள் பற்றிய செய்திகளும் வெளியில் பரவலாக இல்லை. குறிப்பிட்ட பிரிவில் ஆர்வமுடையோரும், ஆய்வாளர்களுமே வாய்வழிச் செய்தியாக அறிந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் செய்யப்பட்ட, நின்றுபோன நூற்றொகை முயற்சிகள் மீண்டும் தொடர்ச்சி-யாகச் செய்யப்படல் வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு மூலமான சான்றாதாரங்களைத் தேடுவதற்கும் உதவி செய்வது இந்நூற்றொகைகளே.
இன்றைய கணினி யுகத்தில் இவ்வாறான நூற்றொகை உருவாக்கம் 70, 80களைப் போன்று கடினமான ஒன்று அல்ல. நூற்றொகைகள் ஒவ்வொரு ஆண்டும் உடனுக்குடன் வெளியிடப்-பட்டால், புதிய ஆய்வாளர்களுக்குப் புதிய தடங்களில், அதாவது இன்றைய இலக்கியப் போக்குகளை உடனடியாக ஆய்வு செய்வதற்கு உதவுவனவாக அமையும். தமிழியல் ஆய்வுகளும், தமிழ் மொழிக் கல்வி முயற்சிகளும் மேம்படு-வதற்கு நூற்றொகைகள் அவசியமான ஒன்றாகும். தமிழ் நூற்றொகையினை எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கம் செய்து அடுத்த தலைமுறையினருக்குத் தருவதுதான் இத்தலைமுறையினரின் கடமையாகும்.
நூற்றொகை பதிப்புகள்
சிறீணீssவீயீவீமீபீ சிணீtணீறீஷீரீuமீ ஷீயீ ஜிணீனீவீறீ றிக்ஷீவீஸீtமீபீ ஙிஷீஷீளீs ஷ்வீtலீ மிஸீtக்ஷீஷீபீuநீtஷீக்ஷீஹ் ழிஷீtவீநீமீs
1865,1968
அச¢சில¢ வெளிவந¢த தமிழ்¢ நூல¢கள¢ பற்றி வெளியான முதல¢ நூற¢றொகை இதுவாகும¢. 1865இல¢ ஜான¢ மர¢டாக¢ என¢பவர¢ தொகுத¢துத் தர, சென¢னை கிறித¢துவ இலக¢கியச¢ சங¢கம¢ (ஜிலீமீ சிலீக்ஷீவீstவீணீஸீ க்ஷிமீக்ஷீஸீணீநீuறீணீக்ஷீ ணிபீuநீணீtவீஷீஸீ ஷிஷீநீவீமீtஹ்) இதனை வெளியிட¢டுள¢ளது. கிரௌவுன¢ அளவு தாளில¢ 387 பக¢கங¢களுடன¢ இந¢நூற¢றொகை அமைந¢துள¢ளது. 1865_க்கு முன¢னர¢ வெளியான, தமக¢குக¢ கிடைத¢த தமிழ்¢ நூல¢கள¢ பற்றிய தரவுகளைப் பொருள¢வாரியாக வகைப¢படுத¢தி நூல¢களுக¢கான விளக¢கங¢களுடன¢ தந¢துள¢ளார¢ ஜான¢ மர¢டாக¢. இந¢நூற¢றொகைக¢கு இவர¢ 101 பக¢கங¢களில¢ எழுதியுள¢ள முன¢னுரை-யானது தமிழின¢ இலக்கிய வரலாற¢றையும¢ சிறப¢பையும¢ கூறுவதாக உள¢ளது.
எதிர¢காலத¢ தமிழ்¢ ஆய¢வாளர¢களுக¢கும¢ மாணவர¢களுக¢கும¢, இந¢நூற¢றொகையின¢ தேவையை உணர¢ந¢த அ.ச. ஞானசம¢பந¢தன¢, புலவர¢ மு. சண¢முகம¢ பிள¢ளை போன¢ற கல¢வியாளர¢கள¢ 1968இல¢ தமிழ்¢ வளர¢ச்சி, ஆராய¢ச்சி மன¢றத்தின¢ மூலமாக மறுபதிப¢புச¢ செய¢துள¢ளனர¢. இவ¢ இரண்டாம¢ பதிப்பில¢ மேலதிக பின்  இணைப¢-பாக, 1865_இற¢குப¢ பின¢னர¢ செய¢யப¢பட¢ட நூற¢றொகை முயற¢சிகள¢ தொடர¢பான பல செய¢திகளையும¢, தரவுகளையும¢ இணைத¢துள¢ள-னர¢. இரண¢டாம¢ பதிப¢பு டெமி அளவு தாளில¢ 662 பக¢கங¢களுடன¢ வெளிவந¢துள¢ளது.
பாராட¢டுவிழா நூல¢பட¢டி - 1961
1920இல¢ வ. திருவரங¢கம¢பிள¢ளை அவர¢களால¢ தோற¢றுவிக¢கப¢பட¢ட தென¢னிந¢திய சைவ சித¢தாந¢த நூற¢பதிப¢புக¢ கழகம¢ எனும¢ தமிழ்ப்¢ பதிப¢புலக முன¢னோடி நிறுவனம¢ வெளியிட¢-டுள¢ள நாற¢பதாண்டு கால நிறுவன வரலாற¢றைக¢ கூறும¢ பதிப¢பாளர¢ நூற¢றொகையாகும¢.
இதனை இந¢திய நூலகவியலின¢ தந¢தை ச¦.ரா. ரங¢கநாதன¢, சென¢னை மறைமலையடிகள¢ நூலகத¢தின¢ நூலகராகவிருந¢த இராசகோபால¢, முத¢துக¢குமாரசாமி ஆகியோர¢ தொகுத¢துத் தந¢துள¢ளனர¢.
இது அச¢சில¢ (விற¢பனையில¢) உள¢ள நூல¢களை மட¢டும¢ பற்றிய பட¢டியல¢ அன¢று, முன¢னர¢ வெளியான நூல¢களைப¢ பற்றியும¢ தன¢னுள¢ தரவுகளைக¢ கொண¢ட பட¢டியலாகும¢. கழகம¢ இதுவரையில¢ வெளியிட¢ட 1008 நூல¢களும¢ இதில¢ சேர¢க¢கப¢பட¢டுள¢ளன.
எந¢த இந¢திய மொழிக¢கும¢¢ முதன்முதல¢ வெளியாகும¢ பதிப¢பாளர¢ நூற¢றொகையாகவும¢ இது அமைந¢துள¢ளது.
கடந¢த இரண¢டாண¢டு காலமாக வெளிவந¢துள¢ள தமிழ்நூல¢களின¢
விவரத¢ தொகுப¢பு_1968
தென¢மொழிகள¢ புத¢தக டிரஸ¢ட¢ நிறுவனம¢ தமிழ்¢ப¢ பதிப¢பாளர¢களின¢ ஒத¢துழைப¢போடு சென¢னை ஹிக்கின்பாதம¢ஸ¢ புத¢தகக¢ கடையில¢ நடத்திய புத¢தகக¢ காட்சியரங¢கில¢ இடம¢பெற¢ற நூல¢களின¢ விவரங¢கள¢ அடங¢கிய நூற¢றொகை- பல¢வேறு பதிப¢பாளர¢கள¢ 1965_1968 இடைப¢பட¢ட காலத¢தில¢ வெளியிட¢ட 837 புத¢தகங¢களை மட¢டுமே இக¢காட்சியரங¢கில¢ வைத¢து விற¢பனை செய¢துள¢ளார¢கள¢. கண¢காட்சிக¢கு வரும¢ வாசகர¢கள¢ எளிதில¢ புத¢தகங¢களைத¢ தேடி எடுப¢பதற¢காக நாவல¢கள¢, சிறுகதைகள¢, நாடகங¢கள¢, கட¢டுரைகள¢, சமூக இயல¢, தத¢துவம¢, வாழ¢க¢கை வரலாறு, பயணம¢, அறிவியல¢, ஆராய¢ச்சி, சிறுவர¢ நூல¢, குறிப¢பு நூல¢ என¢று வகைப¢படுத்தி வைத¢திருந¢தார¢கள¢.
ஒரு கண¢காட¢சிக்கு வரும¢ வாசகர¢ தான¢ வாங¢க விரும¢பும¢ புத¢தகங¢களை இலகுவாகத¢ தேடி எடுப¢ப-தற¢கு இவ¢வகை விற¢பனை-யாளர¢ நூற¢றொகை உதவும¢. 1968இல¢ அறிமுகப¢படுத¢-தப¢பட¢ட இப¢புதுமையான வடிவம¢ இன¢று ஒரு சாதாரண புத¢தகக¢ கடையில¢ கூட காணமுடியாத ஒன¢றாகிவிட¢டது.
தமிழ்¢ மலேசியானா ஜிணீனீவீறீ விணீறீணீஹ்sவீணீஸீணீ-1969
மலேயப¢ பல¢கலைக¢கழ-கத¢தில¢ இந்தியவியல் துறையில் பணியாற்றிய டாக்டர் இராம. சுப்பையா அவர்களால் தொகுக்கப்-பட்டு மலாயாப் பல்கலைக்-கழக நூலகத்தினால் 1969இல் வெளியிடப்பட்ட தமிழ் மலேசியானா (ஜிணீனீவீறீ விணீறீணீஹ்sவீணீஸீணீ) என்ற தமிழ் நூற்றொகை, 1969_இற்கு முன்னர் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 445 நூல்கள் பற்றியும், அங்கு தமிழில் வெளிவந்த 277 இதழ் வெளியீடுகள் (றிமீக்ஷீவீஷீபீவீநீணீறீs) பற்றியுமான பதிப்புத் தரவுகள் அடங்கிய நூற்றொகையாக வெளிவந்துள்ளது.
இந்நூல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ணிஸீரீறீவீsலீ 016.894811 ஸிகிவி என்ற எண்ணில் சேமிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் கம்பர்_1973
கம்பராமாயணம், கம்பர் தொடர்பில் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திலும், அதனைச் சார்ந்த துறை நூலகத்திலும் இருக்கும் நூல்களைக் கொண்டு இந்நூற்றொகை தயாரிக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முதற் பகுதியில் நூல்கள், நூற்பகுதிக் கட்டுரைகள், இதழ்களில் கம்பராமாயணம் தொடர்பான கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் நூற்பகுதிக் கட்டுரைகளும், சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வேடுகளும் மூன்றாம் பகுதியில் நூல் ஆசிரியர் அகரவரிசைப் பட்டியலும் தரப்பட்டுள்ளன.
இதனைத் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைப்பில் அமைந்துள்ள ஒரு நூலக நூற்றொகையாகக் கொள்ளலாம். இதே தலைப்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும், அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இது உடனடிப் பயன்பாடு தரும் அட்டவணையாகும்.
இதேபோன்று பின்வரும் தனித் தலைப்புகளில் நூற்றொகைகளைத் தயாரித்துள்ளனர்.
1.    சிறந்த தமிழியல் நூற்றொகை
2.    ஜிலீமீ சிஷீஸீநீமீஜீt ஷீயீ நிஷீபீ
3.    இடைக்காலத் தமிழின் இலக்கிய இலக்கண இயல்புகள்
4.    ஸிமீணீபீவீஸீரீ விணீtமீக்ஷீவீணீறீs ஷீஸீ கிபீuறீt ணிபீuநீணீtவீஷீஸீ
5.    ஷிலீணீளீமீsஜீமீணீக்ஷீமீ வீஸீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் லிவீதீக்ஷீணீக்ஷீஹ்
6.    கி ஷிமீறீமீநீt ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீஸீ றிsஹ்நீலீஷீணீஸீணீறீஹ்sவீs
7.    இந்திய விடுதலை வெள்ளிவிழாக் கருத்தரங்கு நூற்றொகை
8.    இடைக்கால தமிழின் இலக்கிய இலக்கண இயல்புகள் 2
9.    ஸிமீணீபீவீஸீரீ விணீtமீக்ஷீவீணீறீs ஷீஸீ tலீமீ சிஷீனீனீஷீஸீஸீமீss வீஸீ tலீமீ விமீtக்ஷீமீ ஷீயீ tலீமீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ லிணீஸீரீuணீரீமீs
10.    ஙிஷீஷீளீs ஷீஸீ ஞிக்ஷீணீஸ்வீபீஷீறீஷீரீஹ் ணீஸீபீ சிக்ஷீவீtவீநீவீsனீ கிஸ்ணீவீறீணீதீறீமீ வீஸீ tலீமீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் லிவீதீக்ஷீணீக்ஷீஹ்
11.    சிஷீனீனீவீttமீமீ / சிஷீனீனீவீssவீஷீஸீ ஸிமீஜீஷீக்ஷீts வீஸீ tலீமீ ஷிஷீநீவீணீறீ ஷிநீவீமீஸீநீமீ கிஸ்ணீவீறீணீதீறீமீ வீஸீ tலீமீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் லிவீதீக்ஷீணீக்ஷீஹ்
12.    ‘விவீறீtஷீஸீவீணீஸீணீ’ – மிஸீ tலீமீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் லிவீதீக்ஷீணீக்ஷீஹ்
13.    ஷிஷீனீமீக்ஷீsமீt விணீuரீலீணீனீ வீஸீ tலீமீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் லிவீதீக்ஷீணீக்ஷீஹ்
14.    சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் மு.வ.
15.    சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரட்டைக் காப்பியங்கள்
பல்கலைக்கழக நூலகர் பி.அ. மோகனராசன், சி.என். திலகவதி ஆகிய இருவர் இணைந்து இந்நூற்றொகைகளைத் தொகுத்து, மாணவர்-களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவியுள்ளனர்.
ஜெயகாந்தன் ஆய்வடங்கல்_1978, மே
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்-பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்களின் வழிகாட்டலில் ஆய்வாளர் ந.அறிவழகன் செய்த ஆய்வு, ‘ஜெயகாந்தன் ஆய்வடங்கல்’ என்னும் தலைப்பில் நூல் வடிவில் அமராவதி பதிப்பகத்-தினால் வெளியிடப்பட்-டுள்ளது. இதனை நாம் ஒரு எழுத்தாளர் நூற்றொகை எனக் கொள்ளலாம்.
1953 இல் முதலாவதாக எழுதிய ‘ஆணும் பெண்ணும்’ என்னும் கதைத் தொகுப்பு முதல் 1978 தை மாதம் வரையிலான காலப் பகுதியில் த.ஜெயகாந்தன் எழுதியுள்ள 147 சிறுகதைகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன் இச் சிறுகதைகளைப் பற்றிய ஆய்வும், எந்தெந்த இதழ்களில் இச்சிறுகதைகள் மறுபடியும் வெளியிடப்பட்டுள்ளன. சிறுகதைத் தொகுப்பு நூல்கள் எத்தனை முறை, எந்தெந்த வருடங்களில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்களையும் பதிவு செய்துள்ளார் ஆய்வாளர் ந.மதியழகன். அத்துடன் இந்-நூல்களில் காணப்படும் ஆசிரியர் முன்னுரை, மற்றையோர் வழங்கிய முன்னுரைகள் ஆகியனவும் தரப்பட்டுள்ளன. இவ்வாறே குறுநாவல்கள் (08), நாவல்கள் (11), கட்டுரை நூல்கள் (07), சில செய்திகள், பேட்டிகள், பிற மொழிகள், திறனுரைகள், செய்திப்பூக்கள் என்னும் தலைப்புகளில் த.ஜெயகாந்தனுடைய ஆக்கங்களை ஆய்வாளர் பட்டியலிட்டுள்ளார்.
ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ மொழிபெயர்ப்பு நூற்றொகை
1983, 2008
1983_இற்கு முன்னர், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிறமொழிகட்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் பற்றிய நூற்றொகையாகும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ச.வே.சுப்பிரமணியன், அவர்களின் பணிப்பின்பேரில் ச.சிவகாமி அவர்கள் இந்நூற்றொகையினைத் தொகுத்துள்ளார்.
முதற் பகுதியில் 45 பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்த நூல்கள்- அரசியல், அறிவியல், இலக்கணம், மொழியியல், உளவியல், கட்டுரை, கடிதம், கல்வி, கலைகள், கூட்டுறவு, சட்டம், சமயம், சமூகவியல், சிறுகதை, செய்யுள் இலக்கியம், சொற்பொழிவு, சோதிடம், தத்துவம், தர்க்கம், தொகுப்பு, தொழில், நாடகம், பயண இலக்கியம், புதினம், புவியியல், பொது இலக்கியம், பொருளியல், மருத்துவம், யோகம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, விவசாயம், விளையாட்டு ஆகிய 32 பிரிவுகளின் கீழ், 4234 நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் பகுதியில் தமிழில் இருந்து கிssணீனீமீsமீ, ஙிமீஸீரீணீறீவீ, ஙிuக்ஷீனீமீsமீ, சிலீவீஸீமீsமீ, சிக்ஷ்மீநீலீஷீsறீஷீஸ்ணீளீவீணீ, ஞிutநீலீ, ணிஸீரீறீவீsலீ, திவீழீவீ, திவீஸீவீsலீ, திக்ஷீமீஸீநீலீ, நிமீக்ஷீனீணீஸீ, நிuழீணீக்ஷீணீtவீ, பிவீஸீபீவீ, ரிணீஸீஸீணீபீணீ, லிணீtவீஸீ, விணீறீணீஹ், விணீறீணீஹ்ணீறீணீனீ, விணீக்ஷீணீtவீ, ளிக்ஷீவீஹ்ணீ, றிஷீறீவீsலீ, றிuஸீழீணீதீவீ, ஸிussவீணீஸீ, ஷிணீஸீsளீக்ஷீவீt, ஷிணீuக்ஷீணீsலீtக்ஷீணீ, ஷிவீஸீபீவீ, ஷிவீஸீலீணீறீமீsமீ, ஷிஷ்மீபீவீsலீ, ஜிமீறீuரீu, ஹிக்ஷீuபீu ஆகிய பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட 730 நூல்களைப் பற்றிய தரவுகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
இறுதிப் பகுதியில் சுமார் 2000 மொழி பெயர்ப்பாளர்களின் பெயர்கள் அகரவரிசை-யிலும், மூல நூலாசிரியர்களின் பெயர்கள் அகரவரிசையிலும் தரப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 1983இல் வெளியிடப்பட்ட இம் மொழிபெயர்ப்பு நூற்றொகை 2008இல் மறுஅச்சு செய்யப்-பட்டுள்ளது.
மகாவித்துவான் தி.ஙீ.சி. நடராசா _-ஆக்கங்கள் தேர்ந்த நூல் விவரப்பட்டியல்
1991
இந்நூற்றொகையை எழுத்தாளர் நூற்றொகையாகக் கூறலாம். இலங்கையைச் சேர்ந்த முதுபெருந் தமிழறிஞர் தி.ஙீ.சி. நடராசா அவர்களின் நூல்கள், கட்டுரைகள், பேச்சுகள், அணிந்துரைகள், ஆசியுரைகள், நூல் - மதிப்புரைகள், பாராட்டுரைகள், மகாவித்து-வானின் ஆசிரியர்கள், படித்த பாடசாலைகள், படிப்பித்த பாடசாலைகள் என்று ஒரு எழுத்தாளர் தொடர்பில் அனைத்து விவரங்-களும் இந்நூற்றொகையில் தரப்பட்டுள்ளன. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நூலகராவுள்ள சாம்பசிவம் தவமணிதேவி இந்நூற்றொகையினைத் தொகுத்துள்ளார். 1991இல் வெளியிடப்பட்ட இந்நூற்றொகை, ஈழத்து எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்துவரும் நூலகம் (ஷ்ஷ்ஷ்.ஸீஷீஷீறீணீலீணீனீ.ஸீமீt - நூலக எண் : 217) இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றது.
தி.ஙீ.சி. நடராசா அவர்கள் தன் வீட்டில் பெருந்தொகையான அரிய நூல்களை சேகரித்து வைத்திருந்தவர். தான் வைத்திருந்த நூல்களை ஆழமாகக் கற்றறிந்தவர். பல ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய தனிப்பட்ட நூலகத்தைத் தங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர். 1956இல் வெளிவந்த இவருடைய ‘ஈழமும் தமிழும்’ என்னும் நூல் இலங்கையில் பலகாலத்தும் வெளிவந்த தமிழ் நூல்களுக்கு ஒரு நல்ல அறிமுகத்தைத் தந்துள்ளதாகவும், அதில் செய்யுள் நூல் தொடங்கிப் பத்திரிகையாசிரியர் வரை நூல்களும், நூலாசிரியரும், நூல் வெளியீட்-டாளரும், ஆண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ள-தாகவும், தமிழ்நாட்டில் தமிழ்நூல் விவர அட்டவணை உருவாக்கிய புலவர் மு. சண்முகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் அறிவியல் நூல்கள் _ (2002)
(1851 - 1950)
இந்நூலினை நேரடி-யாக ஒரு நூற்றொகை என்று கூறுவது சரியல்ல. ஆய்வாளர் சு.லதா, அறிவியல் என்ற ஒரு குறிப்பிட்ட துறையில், 1851-_1950 என்ற ஒரு குறிப்பிட்ட காலப்-பகுதியில் வெளிவந்த, அறிவியல் வளர்ச்சியைக் கூறும் 246 நூல்களைப் பற்றிச் செய்த ஆய்வேடு ஒரு விரிவாக்கப்பட்ட நூற்றொகையின் தன்மையில் (கிஸீஸீஷீtணீtமீபீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ்) அமைந்துள்ளது என்றே கூறலாம். ஆவணக் காப்பகங்களிலும், நூலகங்களிலும் தேடுவாரற்றுக் கிடந்த பல பழைய நூல்கள் தமிழில் தொடக்கக்கால அறிவியல் நிலை குறித்த செய்திகளைத் தருகின்றன. மேல்நாட்டு அறிவியல் எண்ணங்கள் இங்கு இறக்குமதியாவதற்கு முன்னரே நம் தமிழ்நாட்டில் அறிவியல் எண்ணங்கள் இருந்துள்ளதை இந்நூல்கள் கூறுகின்றன. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று துறை வாரியாகப் பிரித்து அத்துறைகளின் தோற்றம், வளர்ச்சி பயன்பாடு பற்றி விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.
மலேசிய சிங்கப்பூர் நூல் தேட்டம் (தொகுதி 1) 2007
மலேசிய - சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டதும், அங்கு வெளியிடப்பட்டதுமான நூல்களைப் பற்றிய நூற்றொகை என்று இதனைக் கூறலாம். ‘இலண்டன் நகரில் அயோத்தி நூலக சேவைகள்’ என்ற பெயரில் இயங்கி வரும் ஈழத்தைச் சேர்ந்த நூலகர் என்.செல்வராஜா அவர்களால் இது தொகுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகளாக இந்நூற்றொகை தரப்பட்டுள்ளது. முதற்பிரிவில் தொகுப்பாள-ரினால் பார்வையிடப்பட்டு பதியப்பட்ட முழுமையான பதிப்புத் தகவல்கள் அடங்கிய 578 நூல்களும், இரண்டாம் பிரிவில் உள்ள தகவல்கள் பல்வேறு நூல்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும், இதழ்களில் வெளிவந்த நூல் அறிமுகங்களிலிருந்தும் பெறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட 1503 நூல்களும் இடம்பெற்றுள்ளன.
என். செல்வராஜா அவர்கள் நூல் தேட்டம் வரிசையில் ஈழத்துத் தமிழ்நூல்களைத் தொகுத்து இதுவரையில் 5 தொகுதிகளை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களைப் பற்றிய பதிப்புத் தகவல்களையும், அந்நூல்கள் பற்றிய ஒரு அறிமுகத்தையும் தருகிறார். இலங்கை அரசு தமிழர்களின் இலக்கியங்களையும், கல்விச் செல்வங்களையும் நிராகரித்து, அழித்து வரும் வேளையில் தனிநபராக ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவு செய்து நூற்றொகை வெளியிடும் பணி பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
லீ கொங் சியன் நூலகத்தின் சீரியதமிழ்த் தொகுப்பு 2008
சுந்தரி பாலசுப்பிர-மணியம், யசோதாதேவி நடராஜன் ஆகிய இருவர் இணைந்து இந்த நூற்றொகையினை உருவாக்கியுள்ளனர். சிங்கப்பூர் _- லீ கொங் சியன் நூலகத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்களில் இருந்து, தமிழ் தொடர்பில் பல்வேறு தலையங்கங்களில் ஒரு புதிய தமிழ் வாசகருக்குத் தமிழின் அனைத்துப் பரப்புகளையும் அறிமுகம் செய்யும் நூற்றொகையாக இது உள்ளது.
சங்க காலம் முதல் இன்றைய நவீன கணினி யுகம் வரையான தமிழ் இலக்கியப் பரப்பில் வெளியான சீரிய நூல்கள் சமயம், மொழி, கலைகள், ஆய்வு நூல்கள், சஞ்சிகைகள் என்ற உப தலைப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
‘சிங்கப்பூர் இலக்கியத் தொகுப்பு’ என்ற தலைப்பில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள் பலருடைய அறிமுகங்களும் அவர்களுடைய நூல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் இலக்கியம் என்ற தலைப்பில் சிறார்களுக்கான நூல்கள் பலவும் தரப்பட்டுள்ளன.
லீ கொங் சியன் நூலகம் தன்னுடைய வாசகர்களுக்கு, சிறப்பான நூல்களைப் பற்றி எளிய அறிமுகத்தைத் தரக்கூடிய நூற்றொகையாக இதனை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment