Tamil books

Wednesday 20 April 2011

சுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்

 பெ. விஜய குமார்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனிட-
மிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு சுதந்திரம் பெற்றதும், தங்களின்
மட்டற்ற மகிழ்ச்சியை அமெரிக்கர்கள்பல வழிகளிலும் வெளிப்ப
டுத்தினர். தங்கள்நாட்டின் அருமை பெருமைகளை உலகுக்குத்
தெரியப்படுத்த விரும்பினர். ஐரோப்பியக் கலாசாரம் தங்களின்
பாரம்பரியக் கலாசாரம் என்பதை அவர்கள்மறுக்கவோ
மறக்கவோ இல்லை. இருப்பினும், தங்களுக்கென்று தனியரு
வரலாறு, கலாசாரம் படைத்திட வேண்டும் என்று ஆசைப்பட்
டனர். அமெரிக்காவில் மிகச் சமீபத்தில் குடியேறியவர்கள்
என்பதால், தங்களுக்கு ஐரோப்பியர்களுக்கு இருப்பது போல்
நீண்ட வரலாறு, பாரம்பரியம் இல்லையே என்று ஏங்கினர்.
வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அமெரிக்க
மக்களின் வரலாற்று உணர்வைத் தன்னுடைய படைப்புகளில்
பிரதிபலித்தவர் வாஷிங்டன் இர்விங்.
அன்று அமெரிக்க இலக்கிய வழக்கிலிருந்த மிகையியல்
கற்பனாவாதம் அவருக்குக் கை கொடுத்தது. கற்பனை, உண்மை
இவையிரண்டையும் கலந்து வித்தியாசமான வரலாறு
படைத்தார். முதலில் தான் வாழ்ந்த நியூயார்க் நகரத்தின்
வரலாற்றை நையாண்டி, நகைச்சுவை, கற்பனை ஆகியன கலந்து
Ôநிக்கர் பாக்கர்Õ என்ற புனைபெயரில் எழுதினார். இதனைத்
தொடர்ந்து பலரும் இப்பாணியைப் பின்பற்ற, இவர்கள்Ôநிக்கர்
பாக்கர் குழுவினர்Õ என்றழைக்கப்பட்டனர்.
வாஷிங்டன் இர்விங், ஹட்சன் நதிக்கரையில் ஒரு வணிகக்
குடும்பத்தில் பிறந்தவர். எழுத்துலகம் கவர்ந்திழுக்கத் தன்
குடும்பத் தொழிலான வாணிபத்தை விட்டுவிட்டு எழுதத்
தொடங்கினார். உரைநடைச் சித்திரம் தீட்டுவதில் வல்லமை
பெற்றார். ÔÔஸ்கெட்ச் புக் ஆஃப் கிரயான்ÕÕ (ஷிளீமீtநீலீ ஙிஷீஷீளீ ஷீயீ
சிக்ஷீணீஹ்ஷீஸீ) இவரின் மிகச்சிறந்த எழுத்தோவியமாகும். கற்பனை
வளமும், உண்மை நிகழ்வுகளும் ஒருங்கேற வரையப்பட்ட சொற்
சித்திரங்கள்படிப்பவரின் மனதைக் கவர்ந்தன. இத் தொகுப்பில்
உள்ள Ôரிப் வேன் விங்கிள்Õ மற்றும் Ôதி லெஜென்ட் ஆஃப்
ஸ்லீப்பி ஹாலோ (ஜிலீமீ லிமீரீமீஸீபீ ஷீயீ ஷிறீமீமீஜீஹ் பிஷீறீறீஷீஷ்) ஆகிய
இரு சிறுகதை-களும் வாஷிங்டன் இர்விங்_ன் மிகச் சிறந்த
படைப்புகளாகும்.
Ôரிப் வேன் விங்கிள்Õ சிறுகதை அமெரிக்கர்களுக்கு
வரலாற்றின் மீதிருந்த தாகத்தை வெளிப்படுத்துகிறது. தான்
வாழும் மண்ணின் பெருமையைப் பேசுவதில் மனிதன்
எப்போதும் மகிழ்ச்சி அடைகிறான். வாஷிங்டன் இர்விங் தான்
வாழ்ந்த ஹட்சன் நதிக்கரையை, கேட்ஸ் ஹில் மலையடி-
வாரத்தை மிகவும் நேசித்தார். இப்பகுதியில் முதலில் குடியேறியவ
ர்கள்டச்சுக்காரர்கள். ஐரோப்பியர்கள்பரந்து விரிந்த
அமெரிக்காக் கண்டம் முழுவதும் பயணித்து வெற்றி கொண்-
டனர். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய அவர்களின் பயணம்,
இயற்கை வளம் கொழிக்கும் அமெரிக்கக் கண்டம் முழுவதையும்
வென்றிட வாய்ப்பளித்தது.
Ôரிப் வேன் விங்கிள்Õ கற்பனை கலந்த வரலாற்றைச் சொல்லும்
கதை. வாஷிங்டன் இர்விங் படைத்த இக் கதாபாத்திரம் என்-
றென்றும் அமெரிக்கர்களின் மனதில் குடியேறிய வரலாற்றுப்
பொக்கிஷமாகத் திகழ்கிறான். ஜெர்மானிய மொழியில் கிரிம்
சகோதரர்கள்(நிக்ஷீவீனீ ஙிக்ஷீஷீtலீமீக்ஷீs) எழுதிய தேவதைக் கதைகளை
(திணீவீக்ஷீஹ் ஜிணீறீமீs) ப் பின்பற்றி எழுதப்பட்டதுÕ ரிப் வேன் விங்கிள்.Õ
ரிப் வேன் விங்கிள்ஓர் அப்பாவி, சோம்பேறி மனிதன்.
தன் மனைவிக்கு மிகவும் பயந்தவன். அவனை ஆட்டிப்
படைக்கும் அவளிடமிருந்து ஒருநாள்தற்செயலாகத்
தப்பிக்கிறான். ஆனால் அதுவே நிரந்தரமான விடுதலையாகும்
என்று அவன் நினைக்கவில்லை. வீட்டிலிருக்க மனமின்றி கால்
போன போக்கில் மலைப்பாதையில் நடக்கிறான். வழியில் சற்று
வித்தியாசமான மனிதர்கள்சிலர் பந்து விளையாடிக்
கொண்டிருப்பதைப் பார்த்துத் தன்னை மறந்து நிற்கிறான்.
அவர்கள்ஹட்சனுடன் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க
வந்தவர்களின் ஆவி என்பது அவனுக்குத் தெரியவில்லை.
அவர்களுடன் பேசிப் பழகி மகிழ்கிறான். அவர்கள்கொடுத்த
பானத்தைக் குடித்து போதை தலைக்கேறி நீள்உறக்கத்தில்
சாய்கிறான். இருபது ஆண்டுகள்கழித்து விழித்தெழுந்து
மலையடிவாரத்தில் உள்ள தன் ஊருக்குத் திரும்புகிறான்.
அவனுக்குப் பல அதிசயங்கள்காத்திருக்கின்றன. காலச்
சக்கரத்தின் சுழற்சியில் எண்ணற்ற மாற்றங்கள்ஏற்படுகின்றன.
அவன் மனைவி உயிருடன் இல்லை என்பதறிந்து சற்றே
நிம்மதியடைகிறான். பல நண்பர்களும் புலம் பெயர்ந்து சென்று
விட்டது குறித்து ஆச்சரியப்படுகிறான்.
இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அரசியல்
மாற்றம் அவனுக்குத் தெரியாமல் போகிறது. நிலைமை
தெரியாமல் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் புகழ்
பாடுகிறான். எல்லோரும் அவனை வெறுப்புடன் பார்க்கின்றனர்.
கூட்டத்தில் இருக்கும் ஒரு பெரியவர் அவனை அடையாளம்
காண்கிறார். ரிப் வேன் விங்கிள்தன்னுடைய மகன், மகள்
இருவரையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். மனைவிக்குப்
பயந்து வாழும் அவ்வூரைச் சேர்ந்த ஆண்கள்தங்களுக்கும்
ரிப் வேன் விங்கிளுக்குக் கிடைத்த வாய்ப்பு வராதா என்று
எண்ணி ஏங்குவதாகக் கதையை முடிக்கிறார் வாஷிங்டன்
இர்விங்.
பொருளைத் தேடி அலையும் அமெரிக்கர்கள்மத்தியில் ரிப்
வேன் விங்கிள்ஒரு வித்தியாசமான மனிதன். பொருத்தமற்றவ
ர்கள்கணவன் _ மனைவியாகச் சேரும்போது குடும்ப
வாழ்வு அர்த்தமற்றுப் போவதை இர்விங் படம் பிடித்துக்
காட்டுகிறார். மனித வாழ்வில் இத்தகு பொருத்தமற்ற தாம்பத்-
யமே நிறைந்து காணப்படுகிறது. ஆக மொத்தம் ரிப் வேன்
விங்கிள்வரலாறு, புனைகதை என இரண்டும் கலந்த ஒரு
சிறந்த சிறுகதையாகும்.

No comments:

Post a Comment