Tamil books

Wednesday 20 April 2011

தென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்கள்

 அமரந்த்தா

பத்தொன்பதாம் நூற்றாண்டு கடற்கொள்ளைக்கும்
அடிமை வியாபாரத்துக்கும் பேர் போன ஐரோப்பாவுக்கானதாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு மூன்றாமுலக
நாடுகளை நவகாலனிகளாக மாற்றிச் சுரண்டிய வட
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கானதாக இருந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டு சோசலிசத்தை நிறுவி உலகச்
சமன் குலைவை வெல்லப் போகும் லத்தீன் அமெரிக்கா-
வுக்கானது என்ற தெளிவான புரிதலின் அடிப்படையில்
இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைவுக்கான
ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் முனைந்து வருகிறார்
பொலிவாரிய மண்ணில் தோன்றிய ஹ§கோ சாவேஸ்.
அவரது தெளிவும் செயலும் வெறும் எண்ணை வளத்-
தினால் பெறும் செல்வத்தினால் விளைந்தது என்று
எளிதாகக் கூறி _ அலட்சியம் செய்துவிட முடியுமா,
அல்லது இதற்கு வேறு வரலாற்றுப்பூர்வமான தார்மீக
அடிப்படைகள்உண்டா? நிச்சயம் உண்டு என்று
உணர்த்துகிறது கியூப வானில் மின்னும் நட்சத்திரமொன்று;
கியூப விடுதலைப் போராட்டத் தந்தை ஹொஸே மார்த்தி
சிந்தனை அலுவலக இயக்குனர் அர்மாந்தோ ஹார்ட்
தவாலோஸ் 2003 ஜனவரியில் மார்த்தியின் 150வது பிறந்த
நாளையட்டி ஹவானாவில் கூட்டப்பட்ட உலக
சமநிலைக்-கான சர்வதேச மாநாட்டில் தனது உரையை
இவ்வாறு தொடங்குகிறார்:
ÔÔஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிந்தனைத்
துறையில் நேர்ந்த (1) சோசலிசத்தின் மறுபிறப்பு (2)
கார்ப்பென்தியரின் மாய யதார்த்தவாதம் (3) விடுதலை
இறையியல் ஆகிய மூன்று முக்கியமான அறிவியக்கங்களும்
லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்தது வெறும் தற்செயல்
அல்ல. அறிவியல் அறிவுக்கும் லட்சிய உலகுக்குமான
தேடலே இவற்றின் பொதுவான தன்மையாகும்.
உலக மக்களின் மீது கியூபாவுக்கு ஏன் இந்த அக்கறை?
ஹொஸே மார்த்தி தொடங்கி சே குவேரா ஈறான சர்வ
தேசியவாதியின் நோக்கம் மக்களிடம் நம்பிக்கையை
விதைத்து வளர்ப்பதாக இருந்தது. இன்று கியூபாவைப்
பின்பற்றி பொலிவேரிய வெனிசுவேலாவின் அரசு _
சாவேஸின் அரசு  பொலிவார் தன் வாழ்நாள்முழுவதும்
போராடிய நோக்கத்தினை _ லத்தீன் அமெரிக்க ஒருங்-
கிணைவை _ நிறைவேற்றும் முயற்சியில் உள்ளது. ஸ்பானிய
காலனிகளாக இயற்கை வளங்களும் மனித வளங்களும்
சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டு குற்றுயிராய்க் கிடந்த
நாடுகளில் விடுதலைக்கான போராட்டங்கள்தலைதூக்கிய
போதெல்லாம் அவை வட அமெரிக்காவின் கொடுங்-
கோன்மை-யினால் குரூரமாக ஒடுக்கப்பட்டு வந்தன. நாடுகள்
ராμவ சர்வாதிகாரிகளின் கீழ் பயங்கரவாதத்தில் மூழ்கடிக்-
கப்பட்டன. அல்லது மண்டியிட்டுப் பிச்சை கேட்கும்
பலவீனமான தலையாட்டி பொம்மைகளின்
கீழ்  உயிர்த்திருத்-தலின் அடையாளங்களை இழந்தன. சோவியத்
ஒன்றியத்தின் சிதைவு மீதமாக இருந்த சோசலிசத்-
திற்கான முனைப்பு-களைக் கெல்லி எறிந்தது. உலகம்
வட அமெரிக்க வல்லர-சின் தேவைக்கும் ஆசைக்கும்
பயன்படும் பண்டமாக மாற்றப்-பட்டது. மனிதனும்
பண்டமானான்.
இடையில் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஏழை
நாடொன்று மட்டும் உலகின் தனியரு சோசலிச நாடாக
உருவெடுத்தது. 1959ஆம் ஆண்டில் கியூபாவில் வட
அமெரிக்க வல்லரசின் கைக்கூலியான ஜனாதிபதி
பத்திஸ்தாவை ஓடச் செய்து புரட்சிகர சோசலிச அரசை
நிறுவியது ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான சில
நூறு இளைஞர்களைக்கொண்ட கெரில்லாப் படை. கியூபப்
புரட்சியின் இன்றியமையாத தன்மையையும், அதன் வெற்றி
வாய்ப்பையும் குறித்த தெளிவான அறிவுடன்
போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு
புரட்சியின் வெற்றிக்குப் பின்பு சிந்தனைத் தளத்தில்
மாபெரும் பங்களிப்பைச் செய்தவர் அர்ஹென்தினாவில்
பிறந்த மருத்துவர் சே குவேரா. கியூபாவின் தொழில் துறை
அமைச்சராகவும், தேசிய வங்கியின் இயக்குனராகவும் 6
ஆண்டுகள்மட்டுமே கியூபாவில் வாழ்ந்த சே குவேரா,
காரல்மார்க்சுக்கு அடுத்தபடியாக சிந்தனைத்தளத்தில்
மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். முதலாளித்துவம்
விட்டுச் சென்றிருக்கும் முனை மழுங்கிய கருவிகளைக்
கொண்டு சோசலிசத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்று
ஐயத்திற்கிடமின்றி அறிந்திருந்தார் சே. எனவேதான்
மூலதனத்தின் தவிர்க்கவியலாத் தன்மையை எதிர்த்து
முற்போக்கான, மிக உயர்ந்த புதிய மனுஷியையும் புதிய
மனிதனையும் கொண்ட புதியதோர் உலக சமுதாயத்தை
உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். கம்யூனிஸ்ட்
அறிக்கையின் இறுதி வடிவத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டபடி
ஒவ்வொருவரது சுதந்திரமான வளர்ச்சியும் எல்லோருடைய
சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக உள்ள
சமூகத்தை நிர்மாணிப்பதுÕÕ என்ற குறிக்கோளை
முழுமையாக உள்வாங்கிய சே, வாழ்க்கை பண்டமயமாக்
கப்படுதலை, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்
பணமும் விலையும் ஊடுருவுவதை எதிர்த்தார். எனவேதான்
உற்பத்தியை அதிகரிக்கும். நோக்கில் மனிதன் வழங்கும்
கூடுதல் உழைப்பு பணத்தினை எதிர்பார்க்காத தன்னார்வ
உழைப்பாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை
அவர் முன்வைத்தார்.
சே குவேராவின் சிந்தனைகள்தான் இன்று லத்தீன்
அமெரிக்க நாடுகளின் சோசலிச மாற்றத்திற்கான முயற்சிக்கு
வித்தாக இருக்கின்றன. சே வின் மறைவுக்குப் பின்பு எழுபது-
களில் கியூபாவில் செயல்படுத்தப்பட்ட அபாயகரமான
பிற்போக்கான திட்டங்களின் போக்கினைச் சரியான
தருணத்தில் தடுத்து நிறுத்தி சீரமைப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ள அவரது சிந்தனைகள்உதவின. எனவே தான்
சோவியத் வீழ்ச்சிக்கு நீண்டகாலம் முன்னதாகவே அதன்
அரசியல் பொருளாதார மாதிரி குறித்த சே குவேராவின்
விமர்சனப்பூர்வமான ஆய்வு எண்பதுகளில் மறுபரிசீல
னைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த அடிப்ப
டையில் சோவியத் தகர்வுக்கு முன்பே கியூபா அதுவரை
பின்பற்றிய பாதையிலிருந்து விலகியது. எனவே கியூபாவில்
இன்றளவும் சோசலிசம் தாக்குப் பிடித்திருக்க சே
குவேராவின் விமர்சனம் முதன்மையான காரணமாக இருந்-
துள்ளது. தன்னார்வ உழைப்பைக் கொண்டு கியூப மக்கள்
சாதித்தவை மலைப்பூட்டுபவை. சே குவேராவின் வழிகாட்டு-
தலில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கையின்
மூல-மாகப் பெற்ற தன்னம்பிக்கை, அதிகார வர்க்க
எதிர்ப்பைச் சந்திக்கும் வலுவை மக்களுக்கு அளித்தது.
மக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள்புரட்சியை முன்
நகர்த்தின. கியூப உழைப்பாளிகளின் அரசியல் விழிப்-
புணர்வும், துடிப்பு மிக்க தன்னார்வ உழைப்பும் புரட்சியின்
தாக்குப் பிடிக்கும் வலிமையாகப் பெருகின என்றால் அது
சாலப் பொருந்தும்.
சோவியத் தகர்வுக்குப் பின்பு 9 ஆண்டுகள்தாக்குப்
பிடித்து நின்று கியூபா தலைநிமிர்ந்த போதுதான் வெனி-
சுவேலாவில் சாவேஸ் குடியரசுத் தலைவர் பதவிக்கு வரு-
கிறார். புதிய தாராள மயத்திற்கு மாற்று இல்லை என்ற
காட்டுக் கூச்சலை மீறி சிறப்புக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்த
முறியடித்து கியூபா
அடைந்த வெற்றியா
னது, இருபதாம்
நூற்றாண்டு சோசலிசத்தின் இறுதி
அத்தியாயம் அல்ல
அது இருபத்தோ-
ராம் நூற்றாண்டுக்கான சோசலிசத்தின் முதல்அத்தியாயம் என்று வெனிசுவேலாவில்தங்கி அந்நாட்டின் சோசலிசக் கட்டுமானத்தில் பங்கேற்கும் கனடா நாட்டின் அறிவுஜீவி  மக்கல் லெபோவிட்ஸ் கூறுகிறார். இதனை மேலும் தெளிவாக்கும் வண்ணம் சாவேஸ் சோசலிசத்தை ஒரு ஆய்வு, ஒரு கட்டம், ஒரு பாதை என்றளவில் மீட்டடுக்க வேண்டும்; ஆனால்அது ஓர் புது வகை சோசலிசம் _ மனிதத்தன்மை மிக்கது. அதில்
அனைத்திற்கும் மேலாக முன்னுரிமை பெறுவது இயந்திரங்க
ளோ அரசோ அல்ல  மனிதர்களே என்று விளக்குகிறார்.
Ôகாட்டுமிராண்டித்தனமான ஏகாதிபத்தியத்-திற்கு மாற்று
உண்டுÕ என்பதே சாவேஸ் நமக்குத் தெரிவிக்கும் செய்தி.
வெனிசுவேலாவில் கறுப்பின சாவேஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொலிவியாவில் அய்மாரா இந்திய வம்சத்தின் ஈவோ மொரேல்ஸ் குடியரசுத் தலைவராகி-
யுள்ளார். கியூப  வெனிசுவேலா  பொலிவியா இணைவு
என்ற Ôலத்தீன் அமெரிக்க நம்பிக்கை முக்கோணம் வலுவடைந்து, இன்று நட்சத்திரங்களின் இணைவு நிகழக் காரணமாகியுள்ளது. ஆம். ஈக்வடாரில் ரஃபேல் கொர்ரியா, நிகராகுவாவில் டேனியல் ஆர்ட்டெகா, சிலெயில் மிச்சேல்
பச்சலே, அர்ஹென்தினாவில் கிறிச்னர் என நட்சத்திரங்களின்
இணைவு லத்தீன் அமெரிக்க வானில் வர்ணஜாலம்
புரிகின்றது. அதில் லத்தீன் அமெரிக்காவின் தாராள
சந்தைக் களம் (FTAA) மங்கி உதிர்ந்து விட்டது. ÔÔலத்தீன்
அமெரிக்காவிற்கான பொலிவாரிய மாற்று (ALBA) ஒளிவிளக்
காக நிலைபெற்றிருக்கிறது. பிரேசிலில் சமூக இயக்கங்களின்
ஒருங்கிணைவு முற்போக்குத் திசையில் பயணம்
தொடர்வதை உறுதிப்படுத்துகிறது.
பரஸ்பர பரிவர்த்தனைகளை நடத்திவரும் ஆல்பாÕவும்
லத்தீன் அமெரிக்க வங்கியும் லத்தீன் அமெரிக்க ஒருங்கிணைவைச் சாதிக்கும் முயற்சியில் வெற்றி கண்டு வருகின்றன.
வட அமெரிக்கா திணித்த அனைத்துவித நெருக்கடிகளையும், ஒடுக்குமுறைகளையும் படுகொலை, கொள்ளை,
நேரடித் தாக்குதல் இவையனைத்தையும் மீறி கியூபப் புரட்சி
50வது ஆண்டு வெற்றி விழாவைக் கொண்டாடப் போவது
சோசலிசம் தோற்பதில்லை என்ற உறுதியான நம்பிக்கையை நமக்கு மட்டுமல்ல  உலகின் அனைத்து வறிய,
ஒடுக்கப்பட்ட மக்கள்வாழும் நாடுகளுக்கும் கையளிக்கிறது.
காஸ்ட்ரோவைத் தொடர்ந்து இன்று வெனிசுவேலாவின்
சாவேஸ் தனது நாட்டின் செல்வத்தை லத்தீன் அமெரிக்க
ஒருங்கிணைவுக்கான ஆதாரமாக மாற்றிக் காட்டியுள்ளார்.

21ஆம் நூற்றாண்டில் சோசலிச மறுஉயிர்ப்பு லத்தீன்
அமெரிக்கக் கண்டத்தில் நிகழ்வதைக் கண்கூடாகக் காμம்
வாய்ப்பைப் பெற்ற நாம், அதன் வளர்ச்சித் தன்மைகளை,
நிலைபெறும் சாத்தியங்களை, செயல் முறைகளை
ஆராய்ந்து நமது மண்ணில் சோசலிசத்திற்கு விதை நடும்
பணியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கலாமே! பின்வரும்
புத்தகப் பட்டியல் அதற்கு உதவுமென்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment