Tamil books

Thursday 21 April 2011

சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள்

தாமஸ் ஆர். டிரவுட்மேன்
தமிழில்: அபிபா



தமிழ்நூல்கள் வெளியீட்டின் வரலாறு என்பது நம்முடைய மிகச்சிறந்த முயற்சியைக் கோரும் தலைப்பாகும். 19வது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தமிழ்மொழியிலும் அதன் இலக்கியங்களிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன; இதற்குக் காரணம், அரசர்களின் ஆதரவுக் குறைவு, கல்விக்கும் கலைக்குமான புதிய நிறுவனங்களின் தோற்றம், அச்சுமுறை அதனுடைய எல்லா வடிவங்களிலும் வருகை, சந்தை அடிப்படையிலான புத்தகங்கள் பரவல் ஆகியனவாகும் என்பதைப் புரிந்து கொள்வது இதற்கு அவசியமாகும். இந்த மாற்றங்கள், கடந்த கால இலக்கியத்திலும் எதிர்கால இலக்கியத்-திலும் தங்களுடைய விளைவுகளை ஏற்படுத்தின. இந்தப் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தமிழ் எழுத்தாளர்கள் புதிய ஆதரவு முறைகளையும், எழுதுவதில் புதிய வழிகளையும் புதிய வாசகர்களையும் தேட வேண்டியதாயிருந்தது. இதன்விளைவாக, தமிழ் அறிவாளர்களுக்கென புதிய வகையான பணிகளைத் தேட வேண்டிய-தாயிற்று. அதே சமயத்தில் கடந்த காலத்தின் இலக்கியமும் மறுபரிசீலனைக்கும் மறுமதிப்பீட்-டுக்கும் (ஸிமீமீஸ்ணீறீuணீtவீஷீஸீ) உள்ளாக்கப்பட்டிருந்தது. ஆ.இரா. வேங்கடாசலபதி ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அது என்னவெனில், 19_வது நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியக் கருவூலகம் (ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் சிணீஸீஷீஸீ) அந்நூற்றாண்டின் இறுதியில், முக்கியமாக சங்ககால செவ்விலக்கிய நூல்களின் மீட்பால் பெரும் மாற்றம் கண்டது.
இந்த நிகழ்வுப் போக்குகள் எப்படிச் செயல்-பட்டன என்பதை நாம் விரிவாகப் புரிந்து கொள்ள விரும்பினால் நமக்குத் தேவைப்படுவது எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்நூல்கள் வெளியீட்டு வரலாறு குறித்த கவனமான, விபரமான ஆய்வறிவேயாகும். எடுத்துக்காட்-டாக, இத்தகைய ஆய்வறிவை ஆங்கில வரலாற்-றாசிரியர்கள் மிகுந்த அளவில் கொண்டுள்ளனர். பல விஷயங்களுக்கிடையே சிறந்த நூல்களின் பட்டியல்களும் (ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீவீமீs) நமக்குத் தேவை. 18_வது நூற்றாண்டின் இறுதியிலும் 19_வது நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கொல்கத்தாவில் வெளியான நூல்கள் குறித்து கேத்தரின் டீல் ணிணீக்ஷீறீஹ் மிஸீபீவீணீஸீ மினீஜீக்ஷீவீஸீts (நியூயார்க், ஸ்கேயர்க்ரோ பதிப்பகம், 1964) என்ற புத்தகப் பட்டியலைத் தயாரித்தார்.
இந்தப் பட்டியலானது சென்னையின் புத்தக வெளியீட்டு வரலாற்றைத் தயாரிப்பதற்கான மிகச்சிறந்த முன்மாதிரியாகும். இத்தகைய தன்மையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் (சென்னைக் கல்விச் சங்கம்) வெளியீடுகளுக்கான புத்தகப் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கியிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஆனால் அந்த வெளியீடுகள், மாணவர்களின் பயன்பாட்டுக்காக மிகச்சிறிய அச்சுகளில் அச்சடிக்கப்பட்டு அளிக்கப்பட்டன; அவற்றில் பெரும்பாலான-வற்றைப் பார்க்-கவோ பரிசீலிக்-கவோ என்னால் இயலவில்லை. எனவே, இந்தக் கட்டுரையின் வாசகர்கள் எனது பணியை முன்னெடுத்துச் செல்-வார்கள் என்ற நம்பிக்கையில், இந்த வெளியீடுகளைப் பற்றி எனக்குத் தெரிந்த விவரங்களை இங்கே சுருக்கமாக எடுத்-துரைக்க முயல்கிறேன்.
இந்தியாவில் அரசுப் பணிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்திலிருந்து வந்தவர்-களுக்கு தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தருவதற்காகவே, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி 1812ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1852ஆம் ஆண்டில் இக்கல்லூரி மூடப்பட்டது. இந்தக் கல்லூரி மிகச் சிறியதுதான்; எனினும் மூன்று வெவ்வேறு விதங்களில் தமிழ்ப் பதிப்புலக வரலாற்றின் மீது இது மிகப்பெரும் தாக்கம் செலுத்தியது. முதலாவதாக, ஆசிரியரியல் குறித்த நூல்களையும் கல்வி நூல்களையும் வெளியிடும் ஒரு அச்சகத்தை இந்தக் கல்லூரி கொண்டிருந்-தது. இரண்டாவதாக தமிழ், தெலுங்கு ஆகியவற்றின் செவ்விலக்கியங்களின் மூலப்பிரதி-களைச் சேகரித்தது. இந்த மூலப் பிரதிகள், சில முக்கிய-மான நூல்கள் முதல் தடவையாக அச்சடிக்கப்-பட்ட நூல்களாக வெளிவருவதற்கு அடிப்-படையாக அமைந்தன. மூன்றாவதாக, இந்தக் கல்லூரியின் துறைத்தலைவர்கள் _ இவர்கள் அக்காலத்திய முன்னணி அறிஞர்கள் _ கல்லூரி அச்சகத்திலும் வெளியிலும் இத்தகைய நூல்களை அச்சிட்டு வெளியிட்-டனர்; இந்த வெளியீடுகள், தமிழ் மற்றும் தெலுங்கு இலக்கி-யங்களில் முதல் தடவையாக அச்சிட்டு வெளியிடப்பட்டவையாகும்.
இவ்வாறு, இந்தக் கல்லூரி, தமிழ் மற்றும் தெலுங்கு இலக்கியத்திற்குப் பெரும் முக்கியத்-துவம் வாய்ந்ததாக இருந்தது;  ஏனென்றால் இந்தப் பணியானது, பிரிட்டனிலிருந்து வந்த அரசுப் பணியாளர்களுக்கு மொழிகள் கற்றுக் கொடுக்கும் நடைமுறை நோக்கத்தை விட விரிவானதாக இருந்தது. இதற்கான காரணம் என்னவெனில், மெட்ராஸ் மாகாண அரசாங்கத்-திற்காக இந்தக் கல்லூரிக்கான திட்டத்தைத் தயாரித்த மெட்ராஸ் கலெக்டர் எஃப். டபிள்யூ. எல்லிஸ் என்பவர் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் நேசித்தார். அவர், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வழியில் இந்தக் கல்லூரிக்கான திட்டத்தை வகுத்தார்; அதாவது, இந்தத் திட்டமானது கல்கத்தாவில் அமைக்கப்பட்ட வில்லியம் கோட்டைக் கல்லூரி-யுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த செலவில் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியைக் கட்டுவதற்கான நடைமுறை நோக்கத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது. காலனி-யாதிக்க அரசுக்காகப் பயனுள்ள முறையில் செயல்படுவது என்ற கடமையைக் கறாராக நிறைவேற்றுகின்ற அதே நேரத்தில், தென்னிந்தி-யாவில் ஆய்வு முயற்சிகளுக்குப் புத்துயிரூட்டும் இடமாகவும்  இக்கல்லூரி திகழ வேண்டும் என்று எல்லிஸ் விரும்பினார். இந்தக் கல்லூரி-யானது, அதனுடைய நடைமுறைச் செயல்பாட்டு நோக்கம், ஆய்வு நோக்கம் ஆகிய இரு நோக்கங்களிலும் சிறந்து விளங்குவதற்குத் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழித்துறைத் தலைவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இந்தத் துறைத் தலைவர்கள் முதல் தரமான அறிஞர்களாக இருந்தனர்; அவர்களுக்கு, கல்லூரிகளில் திருப்திகரமான பணியை ஆற்றுவதற்கு நல்ல ஊதியம் அளிக்கப்பட்டது. இந்தத் துறைத் தலைவர்கள், அரசுப் பணியாளர்-களுக்கு, மொழியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்-களாகுவதற்கு விரும்பிய இந்திய மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிப்பவர்களாக இருந்தனர். வழக்கறிஞர்களாகவும் நீதிமன்ற வல்லுநர்க-ளாகவும் ஆகுவதற்கு விரும்பிய மாணவர்களுக்கு இந்தச் சட்டத்திற்கான வகுப்புகளை நடத்தினர்; இந்த வகையில் இந்தக் கல்லூரி, தென்னிந்தி-யாவில் முதல் நவீன சட்டக்கல்லூரியாக இருந்தது. இந்தப் பணியைச் சிறப்பாக ஆற்றிய காலத்தில், துறைத் தலைவர்கள், மொழி, இலக்கியம், சட்டம் ஆகியவை குறித்த ஆய்வு நூல்களை வெளியிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்-டார்கள்.
இந்தக் கல்லூரி அமைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த விரிந்த நோக்கமானது, தமிழ்மொழி, ஏனைய இந்திய மொழிகளுடனான இதனுடைய உறவு ஆகியவற்றைப் பற்றிய ஒரு கோட்பாட்டைச் சார்ந்திருந்தது. எல்லிஸ், திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அவருடைய கருத்தில் செந்தமிழ் (பிவீரீலீ ஜிணீனீவீறீ) என்பது ஆதி மொழியாகும் (ளிக்ஷீவீரீவீஸீணீறீ லிணீஸீரீuணீரீமீ). மேலும் அதிலிருந்து கொடுந்தமிழ் (லிஷீஷ் ஜிணீனீவீறீ), தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் சிறுசிறு மொழிகள் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பிரிந்து சென்றன என்றும் கருதினார்.
ஆகவே, அவர் (எல்லிஸ்) அரசுப் பணியா-ளர்கள், இலக்கியத்தமிழைக் கற்பது, மிகச்சிறந்த தொடக்கமாக இருக்கும் என்றும் அதன்பின் அவர்கள், தமிழின் திரிந்தமொழி வடிவங்களை ஏனைய மொழிகளை எளிதாகக் கற்க முடியும் என்றும் நினைத்தார். தென்னிந்திய மொழிகள் ஒரு பொதுவான வேர்த் தொகுதியினைக் கொண்டவையாகும் என்றும் அவற்றிலிருந்து இந்த மொழிகளுக்குச் சொந்தமான வார்த்தைகள் உருவாக்கப்பட்டன என்றும், சமஸ்கிருத மொழியின் வேர்கள் முற்றிலும் வேறுபட்டவை இது, தென்னிந்திய மொழிகள் ஒரு வேறுபட்ட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்பதை நிரூபிக்கக் கூடியது என்றும் கருதினார். இந்தக் கருத்துகள் அனைத்தும் சேர்ந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் திட்ட நோக்கையும் எல்லிஸ் ஆட்சிக் காலத்தின்-போதான (அவர், அக்கல்லூரி 1812இல் துவங்கிய-திலிருந்து 1819இல் நிகழ்ந்த அவரது அகால மரணம் வரையிலும் கல்லூரியின் மேற்பார்வைக் குழுவின் தலைவராக இருந்தார்) கற்றலுக்கான பாடத் திட்டத்தையும் உருவாக்கியது. கல்லூரி அச்சகத்தின் பெரும்பாலான தயாரிப்புகளில் ஒன்று நான் “திராவிடச் சான்று’’ என்று அழைக்கின்ற நூலாகும். மேலே கூறப்பட்ட கருத்துகளைச் சான்றுகளுடன் விளக்கமாகக் கூறும் அந்நூல் 1816இல் வெளியிடப்பட்டதாகும். அது ஆய்வு நுட்பத்தில் மிகச்சிறந்து விளங்கு-கின்ற ஒரு நூலாகும்; ஏனெனில் அந்நூலானது, நான் எனது திராவிடச் சான்று என்ற நூலில் விவரிக்க முயற்சித்திருப்பதைப் போன்று மொழி ஆய்வு குறித்த ஐரோப்பிய மற்றும் இந்தியப் பாரம்பரியங்களின் மிகச் சிறந்த சிந்தனையாளர்-களில் சிலரையேனும் இந்தக் கல்லூரி ஒன்றிணைத்தது.
கல்லூரி அச்சகம்
கல்லூரி அச்சகமானது, கல்லூரி அமைப்பதற்-கான ஆரம்பத்திட்டத்தின் மிக முக்கியப் பகுதியாக இருந்தது; மேலும், எல்லிஸால் மிகவும் நேசிக்கப்பட்டதாகவும் இருந்தது. எல்லிஸ், சில காரணங்களுக்காக ஒரு சிறு அச்சியந்திரத்தையும், அதற்கான தமிழ் எழுத்து அச்சுக்களையும் வாங்கினார்; அவற்றையெல்லாம் கல்லூரியிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்தக் கல்லூரியானது தெலுங்கு எழுத்து அச்சுக்களைத் தயாரிப்பதற்-கான அரசாங்க அனுமதியைப் பெற முயன்றது. அந்தக் கல்லூரி அச்சகமானது ஒரு சிறிய செயல்பாட்டிற்குரிய களமாக இருந்தது; அதில் ஒரேயரு அச்சுயந்திரம் இருந்தது; அது கல்லூரியின் முற்றத்தில் ஒரு சில தொழிலாளர்-களால் இயக்குவிக்கப்பட்டது. அச்சு எழுத்துகள், ஒரு முழுப் புத்தகத்தை அச்சடிப்பதற்குப் போது-மானவையாக இருக்கவில்லை. ஆகையினால், புத்தகத்தின் பக்கங்கள் அளவாக தயார் செய்யப்-பட்டு பகுதிபகுதியாக அச்சடிக்கப்பட்டன. அச்சு எழுத்துக்களுக்கு பழைய உலோகச் சந்தையில் குறிப்பிடத்தக்க கிராக்கி இருந்தது; அதனால், அச்சு எழுத்துக்கள் சிறு சிறு அளவில் திருட்டுப் போகாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அச்சு எழுத்துகள் எடை போட்டுப் பார்க்கப்பட வேண்டியிருந்தது. அதே சமயத்தில் அச்சடிக்கப்-பட்ட நூல்கள், புரிந்து கொள்வதற்குக் கஷ்ட-மானதாகவும் பல மொழிகளிலும் இருந்தன.
ஒரு சிறந்த நூல் பட்டியலுக்கான ஒரு தொடக்க நிலையாக நாங்கள் இரண்டு ஆவணங்களைக் கொண்டுள்ளோம்; அவைகளில் ஒன்று 1815_இல் வெளியிடப்பட்ட “லிவீst ஷீயீ தீஷீஷீளீs ஜீக்ஷீவீஸீtமீபீ, ஜீக்ஷீவீஸீtவீஸீரீ, ஷீக்ஷீ ஜீக்ஷீமீஜீணீக்ஷீவீஸீரீ யீஷீக்ஷீ ஜீக்ஷீமீss” என்பதாகும்; இரண்டாவது ஆவணம் 1819ஆம் ஆண்டு அறிக்கையாகும். எல்லிஸின் மரணத்-திற்கு பிறகு வெளியான இந்த அறிக்கையானது, அன்று வரையிலும் பதிவு செய்யப்பட்டிருந்த நான்கு புத்தகங்கள், அப்போதும் அச்சில் இருந்த புத்தகங்கள் ஆகியவற்றின் பட்டியலைக் கொண்டதாகும். அவைகள் இங்கு சுருக்கமாக அளிக்கப்படுகின்றன. (விவரங்கள் என்னுடைய புத்தகத்தில்)
1815ஆம் ஆண்டுப்பட்டியல்
தமிழ்நூல்கள்
1. ஜே.சி. பெஸ்கி, இலத்தீனில் கொடுந்தமிழ் இலக்கணம் _ அச்சிடப்பட்டது.
2. ஜே.சி. பெஸ்கி, இலத்தீனில் செந்தமிழ் இலக்கணம் _ அச்சிடுவதற்கான தயாரிப்பில்
3. ஜே.சி. பெஸ்கி, இலத்தீனில் கொடுந்தமிழில் தமிழ்_லத்தீன் அகராதி _ அச்சில்.
4. ஜே.சி. பெஸ்கி, “சதுரகராதி’’ என்று அழைக்கப்படும் தமிழ்_இலத்தீன் அகராதி, செந்தமிழுக்கானது, அச்சில்.
5. சிதம்பர வாத்தியார், இராமாயண உத்தர-காண்டம் (தமிழ் மொழியாக்கம்), அச்சிடப்-பட்டது. கோட்டைக் கல்லூரியின் இளம் அரசுப்பணியாளர்களுக்கான பாடப்புத்தகம்.
6. சிதம்பர வாத்தியார், தமிழ் சுருக்க விளக்கம் _ அச்சில். கல்லூரியின் இந்திய மாணவர்-களுக்கானது. இலக்கணச் சூத்திரங்களுக்கு அதாவது தொல்காப்பியத்திற்கு ஓர் உரைநடை விளக்கம்.
7. பேரூர் வாத்தியார், சிதம்பர வாத்தியார் ஆகியோரால் இணைந்து செய்யப்பட்ட, விஞ்ஞானேஸ்வரா, மற்றும் வியாவஹாரகந்தாவி-னுடைய மிதாக்ஷராவின் தமிழாக்கம்.
சிதம்பரம் வாத்தியார், கோட்டைக் கல்லூரி-யின் தமிழ்த் துறைத்தலைவர், பேரூர்வாத்தியார் அவருடைய சகோதரர் _ இவர் தமிழாக்கம் முடிவதற்குள் மரணமடைந்தார்.
தெலுங்கு நூல்கள்
8. ஏ.டி. கேம்ப்பெல், தெலுங்கு மொழி இலக்கணம் _ அச்சிடுவதற்காக தயாரிக்கப்பட்-டது. இந்நூலில் எல்லிஸ் ‘திராவிடச் சான்று’ குறித்து எழுதிய ஒரு முன்னுரைக் குறிப்பும் உள்ளது.
9. மாமாடி வெங்கய்யா _ ஆந்திரா தீபிகா தெலுங்கு அகராதி_அச்சிடுவதற்காகத் தயாரிக்கப்பட்டது.
10. ஜே.எம். மெக்கெர்ரெல் _ ஒரு வழக்குச் சொற்களஞ்சியம் _ ஆங்கிலம் மற்றும் தெலுங்கு_அச்சிடுவதற்காகத் தயாரிக்கப்பட்டது.
கன்னட நூல்கள்
11. ஜே.எம். மெக்கெர்ரெல், கர்நாடக மொழி இலக்கணம், அச்சிடுவதற்கான தயாரிப்பில் 
12. ஜே.எம். மெக்கர்ரெல், ஆங்கில மற்றும் கன்னட வழக்குச் சொற் களஞ்சியம் _ அச்சிடுவதற்கான தயாரிப்பில்.
ஆங்கில நூல்கள்
13. ஜே. வாரன், ஞிவீssமீக்ஷீtணீtவீஷீஸீs ஷீஸீ tலீமீ sமீஸ்மீக்ஷீணீறீ னீஷீபீமீs ஷீயீ நீஷீனீஜீutவீஸீரீ tவீனீமீ ஷீதீsமீக்ஷீஸ்மீபீ தீஹ் tலீமீ வீஸீலீணீதீவீtணீஸீts ஷீயீ tலீமீ மிஸீபீவீணீஸீ றிமீஸீவீஸீsuறீணீ வெளிடுவதற்கான தயாரிப்பில்
1819ஆம் ஆண்டுப் பட்டியல்
1812ஆம் ஆண்டிலிருந்து 4 புத்தகங்கள் மட்டுமே அச்சிடப்பட்டன. அவை வருமாறு.
1. ஜே.சி. பெஸ்கி, கொடுந்தமிழின் இலக்கணம் (மேலே குறிப்பிடப்பட்ட எண்.1)
2. சிதம்பர வாத்தியார், ராமாயண உத்தரகாண்டம் (மேலே குறிப்பிடப்பட்ட எண்.5)
3. ஏ.டி. கேம்ப்பெல், தெலுங்கு இலக்கணம் (மேலே குறிப்பிடப்பட்ட எண்.8)
4. தெலுங்குக் கதைகளைக் கொண்ட புத்தகம் (இது மேலே குறிப்பிடப்பட்ட எண் 10ஆக இருக்கக்கூடும்)
இன்னும் அச்சகத்தில் இருப்பவை
5. ஜே.சி. பெஸ்கி, தமிழ் அகராதி, சதுரகராதி (மேலே, எண்.4)
6. சிதம்பர வாத்தியாரின் தமிழ் இலக்கணம் (மேலே எண்.6) பாதி மட்டுமே அச்சிடப்பட்டது.
7. எஃப். டபிள்யூ, எல்லிஸ் _ திருவள்ளுவரின் திருக்குறளின் ஆங்கில மொழியாக்கம் _ இது 1818-_இல் தொடங்கியது _ மூன்றில் 2 பங்கு அச்சிடப்பட்டது.
8. பெஸ்கியின் செந்தமிழ் இலக்கணத்தின் மொழியாக்கம் (மேலே எண்.2) _ பேபிங்டன் செய்தது _ அப்போதுதான் தொடங்கப்பட்டது.
9. ஏ.டி. கேம்ப்பெல் _ தெலுங்கு இலக்கணம் (மேலே எண்.8) இரண்டாவது பதிப்பு. நான்கில் ஒரு பகுதி அச்சிடப்பட்டது.
10. ஏ.டி.கேம்ப்பெல் _ தெலுங்கு அகராதி _ அப்போதுதான் தொடங்கப்பட்டது.
11. அரபுமொழித் துறைத்தலைவர் _ அரபுமொழி இலக்கணம் _ 1817இல் துவங்கப்-பட்டது. மூன்றில் இரண்டு பங்கு அச்சிடப்-பட்டது.
1815ஆம் ஆண்டின் விளம்பரத்தில் ஆர்வ மிகுதியால் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவானது. 1819ஆம் ஆண்டுப் பட்டியல், சில மாற்றங்களை-யும் சேர்த்தலையும் கொண்டுள்ளது என்பதும் தெளிவானது. இந்த இரண்டு பட்டியல்களிலும் கூறப்பட்டுள்ள வெளியீடுகளில் சிலவற்றை மட்டுமே நான் பார்த்துள்ளேன். 1815ஆம் ஆண்டுப் பட்டியலிலிருந்து பார்த்தவை கேம்ப்-பெல்லின் தெலுங்கு இலக்கணம், காலக்கணக்கீடு குறித்த (கால சங்கலிதா என்னும் தலைப்பிலான) வாரனின் புத்தகம் ஆகியனவாகும். 1819ஆம் ஆண்டுப் பட்டியலிலிருந்து நான் பார்த்தவை, காம்ப்பெல்லின் இலக்கணம் (2வது பதிப்பு) மற்றும் அவருடைய தெலுங்கு அகராதி, எல்லிஸ் செய்த பகுதியளவிலான திருக்குறள் மொழியாக்கம், பெஸ்கியின் செந்தமிழ் இலக்கணத்தின் பேபிங்டனது மொழியாக்கம் ஆகியனவாகும். நான் ஒன்றை உறுதியாகக் கூற முடியும்; அது என்னவெனில் மற்றப் புத்தகங்களில் சிலவற்றின் படிகள் (சிஷீஜீவீமீs) நீண்டகாலமாக இருக்கின்றன என்பதுதான்; வெ. ராஜேஷ் அளிக்கும் தகவல் ஒன்றில், கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்-தில் இந்தக் கல்லூரி வெளியீடுகளில் சிலவற்றைத் தாம் பார்த்ததாகக் கூறுகிறார். இந்தப் புத்தகங்-களில் ஏனையவற்றையும் மற்றவர்களும் பார்க்க முடியும், ஆவணப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
அநேகமாக, அப்புத்தகங்களில் மிக முக்கியமானது (ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ றிக்ஷீஷீஷீயீ என்ற நூலுக்கு அடுத்தபடியானது) எல்லிஸால் செய்யப்பட்ட திருக்குறளின் ஆங்கில மொழியாக்கமாகும்; ஏனென்றால், இந்த மொழியாக்கம், தமிழ் செவ்விலக்கியங்களில் விரிவான வாசிப்பைக் காட்டும் உரையை உள்ளடக்கியதாகும். எல்லிஸிற்கும் அவருடைய சக அறிஞர்களுக்கும்  தெரிந்த மூல நூற்பிரதிகளின் பதிவு என்ற முறையில் ஒரு முழுமையான ஆய்வுக்கு உள்ளாகும் தகுதி வாய்ந்ததாகும்.
கையெழுத்துச் சுவடிகள் சேகரிப்பு
சென்னைக் கல்விச் சங்கம், கையெழுத்துச் சுவடிகளைச் (விணீஸீusநீக்ஷீவீஜீts) சேகரிப்பதற்கு இரண்டு அறிவாளிகளை அனுப்பியது. அவர்களில் ஒருவர் வடக்கேயும் (தெலுங்குக்காக) மற்றொருவர் தெற்கேயும் (தமிழுக்காக) அனுப்பப்-பட்டனர். முத்துச்சாமி பிள்ளை, ஒரு தமிழ் கிறிஸ்தவர், புதுச்சேரியைச் சேர்ந்தவர், அந்தக் கல்லூரியின் நூலகருமாவார். அவர்தான் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்தவர் என்று நான் நம்புகிறேன். கல்லூரி கையெழுத்துப் பிரதி சேகரிப்பின் உள்ளடக்கமும், வரலாறும் புரிந்து கொள்வதற்கே சிரமமானவையாகும். ஆனால் இவை கடந்தகால செவ்விலக்கியக்கியங்களின் முதல் அச்சுப்பதிப்புகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
இந்த சேகரிப்பின் வரலாறு, நான் இதுகுறித்து புரிந்து கொள்வதைப் போலவே, எப்படி இருந்த-தென்றால், கல்லூரி மூடப்பட்ட பிறகு இந்த சேகரிப்பில் கவனம் செலுத்துவதற்காக அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் (ஜி.ஓ.எம்.எல்) திறக்கப்படும் வரையிலும் பல்லாண்டு காலமாக கிட்டங்கியன்றில் நடத்தப்பட்டது. எனினும் கல்லூரி மூடப்படுவதற்கு கொஞ்சக்காலத்திற்கு முன்பு இந்திய மொழிகளில் மெக்கென்ஸி கையெழுத்துப் பிரதிகள் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட மூலப்பிரதிகள் வில்லியம் டெய்லரால் பட்டியலிடப்பட்டன. ஆனால் அது மோசமாகவும் படிப்பதற்கு கஷ்டமானதாகவும் செய்யப்பட்டிருந்தது. டெய்லரின் பட்டியலும் ஜி.ஓ.எம்.எல். பட்டியல்-களும் மெக்கென்ஸி கையெழுத்துப் பிரதிகளைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால், அந்த மூலப் பிரதிகளில் எவை எவை உண்மையான கல்லூரிச் சேகரிப்புகள் என்பது குறித்து அந்தப் பட்டியல்-களில் எதுவும் குறிப்பிடவில்லை. ஜி.ஓ.எம்.எல்.-இன் கையெழுத்துப் பிரதிகளி-லிருந்து கல்லூரி-யின் மூலப்பிரதிகள் சேகரிப்பை மறுகட்-டமைப்புச் செய்ய வேண்டும்; சேகரிப்பை-யும் தமிழில் (தெலுங்கில் கூட) பதிப்புலக வர-லாற்றை வெளியிடுவதில் அதன் பங்களிப்பையும் மதிப்பிடக்கூடிய வகையில், இந்த சேகரிப்பை யாராவது மாற்றியமைக்க முடியுமானால் அது ஒரு மகத்தான பணியாக இருக்கும்.
துறைத்தலைவர்களின் வெளியீடுகள்
சென்னைக் கல்விச் சங்கக் கல்லூரி குறித்த என்னுடைய ஆராய்ச்சியானது எல்லிஸ் இருந்த ஆண்டுகளைக் குறித்ததாகும். தமிழ்த்துறைத் தலைவர்கள் மற்றும் எல்லிஸின் மறைவுக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்களின் பணிகள் குறித்த பட்டியலுக்காக நான், ஸ்வெலபில் அவர்களைச் சார்ந்திருந்தேன். அவர் கோட்டைக் கல்லூரியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழ் மறுமலர்ச்சி என்று அவரால் குறிப்பிடப்பட்ட ஒரு போக்கைத் துரிதப்படுத்துவதில் தமிழ்த் துறைத்தலைவர்களின் முக்கியத்துவம் குறித்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆ.இரா. வேங்கடாசலபதி, தமிழ்த் துறைத்தலைவர்கள் குறித்து மேலும் ஓர் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். சென்னை கீழ்த்திசைப் பள்ளி என்று நான் அழைக்கின்ற ஐரோப்பிய மற்றும் இந்திய அறிஞர்கள் குறித்த ஒரு நூலில் வெளியிடப்-படுவதற்கு வேங்கடா-சலபதி அவ்வாய்வுக் கட்டுரையை  எழுதினார். அதாவது, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியிலும், மெக்கன்ஸி சேகரிப்பிலும் பங்கு வகித்த ஐரோப்பிய மற்றும் இந்திய அறிஞர்-களைப் பற்றிய ஆய்வு அது. இவை சம்பந்தமான விபரங்களை இந்த வெளியீடுகளில் வாசகர்கள் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் அவற்றை இங்கு நான் தருவதற்கில்லை.
ஒரு விஷயத்தை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்; அது என்ன-வெனில் செயின்ட் ஜார்ஜ்கோட்டைக் கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவர்கள் _ சிதம்பரவாத்தியார், தாண்டவராய முதலியார், கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், முகவை ராமானுஜ கவிராயர் மற்றும் நூலகர் முத்துச்சாமி பிள்ளை போன்றவர்கள் _ பல முக்கிய நூல்களின் ஆசிரியர்களாகவும், தொகுப்பாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்-களாகவும் பணியாற்றிய-வர்கள் என்பதாகும். அந்நூல்களில் சில, கல்லூரி அச்சகத்தால் வெளியிடப்பட்டன; மற்றவை வெளிப்பதிப்-பாளர்-களால் அச்சிடப்பட்டன; ஆசிரியரியல் குறித்த நூல்கள், சொற்களின் மரபுத் தொடர்புகள் குறித்த ஆய்வுநூல் (லிமீஜ்வீநீஷீறீஷீரீஹ்) மற்றும் சட்டம் _ இவை குறித்த நூல்களை-யெல்லாம் துரிதமாக வெளிக்கொணர்-வதில் கோட்டைக் கல்லூரி அர்ப்பணிப்புடன் செயல்-பட்டது. எல்லிஸிடம் ஒரு ரகசிய நம்பிக்கை இருந்தது; அது என்னவெனில், இந்தக் கோட்டைக் கல்லூரி, தென்னிந்தியாவில் கல்வி பயில்வதைப் புத்துயிரூட்டி நிலைநாட்டுவதற்-கான மையமாக இருக்கும் என்பதுதான். அந்த நம்பிக்கை கணிசமான அளவுக்கு நிறைவேறியது.
தேவைப்படும் ஆராய்ச்சி
கல்லூரி அச்சகம், கையெழுத்துப் பிரதிகள் சேகரிப்பு, தமிழ்த் துறைத் தலைவர்களின் எழுத்துகள் ஆகிய ஒவ்வொரு தலைப்பின்கீழும் மூல ஆதாரங்களை நேரடியாக ஆய்வு செய்து நூல் வெளியீடுகள் பற்றிய, வரலாற்றுப்பூர்வமான துல்லியமான அறிவை நாம் பெற வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இவை அனைத்தும்-தான் தற்போது போதாமல் இருக்கின்றன. சென்னைக் கோட்டைக் கல்லூரி அச்சகத்தின் வெளியீடுகள், நான் ஏற்கெனவே குறிப்பிட்-டதைப்-போல, சிறு அளவில் வெளியிடப்பட்டன; அவைகளில் சில புத்தகங்களின் படிகள் (சிஷீஜீவீமீs) இல்லாமலிருக்கலாம்; ஆனால் விடாப்பிடி-யான தேடுதல் ஓரளவு வெற்றியை அளிக்கக்-கூடும். இந்தக் கல்லூரியின் கையெழுத்துப் பிரதி சேகரிப்பை மீண்டும் மறுகட்டமைப்பு செய்வது நிச்சயமாக சாத்தியமாக்கப்பட வேண்டும்; ஏனெனில் கையெழுத்துப் பிரதிகள் ஒரு இடத்தில்தான் அதாவது அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில்தான் குவிந்திருக்கின்றன.  இத்தகைய அடிப்படையான வேலைக்கு அப்பா-லும் நமக்கு குறிப்பாக 19வது நூற்றாண்டின் தமிழ் அறிஞர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் தேவைப்படுகின்றன; அவர்களுடைய பணிகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் இலக்கியத்தின் மீது தாக்கம் செலுத்திய, மாறிவந்த நிலைமைகளுக்கு அவர்களுடைய பணிகளும் வாழ்வும் எவ்வாறு எதிர்வினை புரிந்தன என்பதையும், தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும் வாசகர்களைச் சென்றடையவும் புதிய வழிமுறைகளை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

No comments:

Post a Comment