Tamil books

Thursday 21 April 2011

திறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன?

முத்து‍ மதன்*

அறிவியலும் அதன் நுட்பங்களும் வெற்றிடங்களில் இருந்தோ அல்லது புனைவுகளில் இருந்தோ  உருவானவை அல்ல. Ôநான் சற்று அதிக தூரம்  பார்க்க முடிந்தது என்றால், நான் எனக்கு முந்தைய  மேதைகளின் தோள்களின் மேல் நின்று கொண்டிருந்ததாலேயே அது சாத்தியமாயிற்றுÕ என்று எளிமையாக சமர்ப்பணம் செய்கிறார் நியூட்டன்.
அறிவியல் என்பது, ஒரு புதிய கருத்து; அது சார்ந்த முன்னர் அறியப்பட்ட கருத்துகளின் மேல் அமர்வதால் உருவாவதே.  ஒரு புதிய கருத்து உருவாவதற்கு எங்கெங்கிருந்தோ உருவான கருத்துகள் மூல ஆதாரமாக அமைகின்றன. அறிவியல் ஆராய்ச்சி களின் வெற்றிகளை அவை தொடர்பாக முன்பு சொல்லப்பட்ட அடிப்படைத் தகவல்களின் இருப்பும் அணுக்கமுமே தீர்மானிக்கின்றன. மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி என்பது ஒரு உலகளாவிய இயக்கம். ஒரு ஆராய்ச்சி வெற்றி அடையும்போது அதன் பயன் உலகளாவிய தாக்கம் கொண்டதாகிறது. முதல் உலகப்போர் சமயத்தில், முப்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட  உயிரிழப்பு, போர் முனை எதிரிகளால் ஏற்பட்டது அல்ல. போர்க் களங்களில்  நிலவிய சுகாதாரக் கேட்டினால் விளைந்த  நுண் கிருமி (ஙிணீநீtமீக்ஷீவீணீ) தாக்குதல்களே அத்தனை உயிர்களையும் கொன்றன. இந்த அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்ட அலெக்ஸாண்டர் பிளெமிங் கடுமையான ஆராய்ச்சிக்குப் பின்  பெனிசிலின் என்ற நோய் எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தார்.  அவர் தனது கண்டுபிடிப்பை யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ ணிஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீtணீறீ றிணீtலீஷீறீஷீரீஹ் என்ற அறிவியல் சஞ்சிகையில் 1928 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  அம்மருந்து,  இரண்டாம் உலகப்போர் உட்பட இன்றுவரை பல உயிர்களைக் காக்கும் அருமருந்தாகச் செயல்படுகிறது.     
அறிவியல் மாநாடுகளில்  அறிவியல் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டு விவாதிக்கப் படுகின்றன.இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி முடிவுகள்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சஞ்சிகைகளில் முதன்மையாக வெளியிடப்படுவதன் மூலமே உலகிலுள்ள மற்ற விஞ்ஞானிகளைச் சென்றடை கின்றன. ஒரு ஆராய்ச்சி முடிவடைந்தவுடன் அதன் முடிவுகள் கட்டுரைகளாக்கப்பட்டு அவை சிறப்பு மிக்க அறிவியல் சஞ்சிகைகளுக்கு  வெளியிடக் கோரி  அனுப்பப்படுகின்றன. சஞ்சிகை தொகுப்பாளர்கள் அக்கட்டுரைகளைத் தன்னார்வத் திறனாய்வாளர்களுக்கு (அவர்கள் அத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சக விஞ்ஞானிகளே) அனுப்பி அவர்களின் (ஆராய்ச்சியின் உண்மைத்தன்மை, சாத்தியங்கள், கட்டுரையின் அறிவியல் மதிப்பு, நடைமுறைப்
பயன் குறித்த)கருத்துகளைக் கேட்கிறார்கள். அக்கருத்துகளின் அடிப்படையில், அவை சாதகமாக இருக்கும் பட்சத்தில், அக்கட்டுரை சஞ்சிகையில்வெளியிடப்படுகிறது.  இக்கட்டு ரையைப் படிக்கும் மற்ற விஞ்ஞானிகள், அதில் விவாதிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் செய்முறையை உபயோகித்துத் தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் ஆராய்ச்சியை மெருகு ஏற்றிக் கொள்கிறார்கள் அல்லது மாற்று சுலபவழியைக் கண்டுபிடிப்பதில் ஈடுபடுகிறார்கள். இப்படித்தான் அறிவியல் இயங்குகிறது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வெளிவரு கின்றன. ஆகையால் அறிவியல் சஞ்சிகைகளே ஒரு விஞ்ஞானிக்கும் மற்ற விஞ்ஞானிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தி,  கருத்துப்  பரிமாற்றம் உருவாக்க வழிவகுக்கும் முதன்மை ஊடகமாகச் செயல்பட்டு வருகின்றன. முதல்  இரண்டு அறிவியல் சஞ்சிகைகள்  1665_ஆம் வருடம்  வெளிவந்தன. பிரான்சில் இருந்து யிஷீuக்ஷீஸீணீறீ ஞிமீs ஷிநீணீஸ்ணீஸீs என்ற அறிவியல் சஞ்சிகை டென்னிஸ் தே சோலா (ஞிமீஸீஸீவீs ஞிமீ ஷிஷீறீறீணீ ) என்பவரால் நிறுவப் பட்டது, அதைத் தொடர்ந்து Ôபிலோசொபிகல் ட்ரான்சாக்ஷன்ஸ் ஆப் ராயல் சொசைடிÕ என்ற அறிவியல் சஞ்சிகை ஸிஷீஹ்ணீறீ ஷிஷீநீவீமீtஹ் யால் இங்கிலாந்தில் இருந்து  அதே வருடத்தில்  வெளியிடப்பட்டது.  அதிலிருந்து கடந்த முன்னூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங் களாக சஞ்சிகை அமைப்பு நன்கு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.    இடைப்பட்ட காலங்களில் வெளியான அறிவியல் முடிவுகள் அனைத்தும் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன.  இவைகளின் அணுக்கமே நிகழ்கால விஞ்ஞான சாத்தியக்கூறு களைத் தீர்மானிக்கும் சக்தியாகும்.
தோராயமாக, 24,000 திறனாய்வு உள்ளடங்கிய அறிவியல் சஞ்சிகைகள்  வெளிவரு கின்றன. இவை வருடந்தோறும் தோராயமாக 24 லட்சம் அறிவியல் கட்டுரைகளை வெளியிடு கின்றன. இவைகளில் பெரும் பாலானவை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவருகின்றன.  இவற்றின் வருடாந்திர சந்தாத் தொகை மிகவும் அதிகமானது.  தனி மனிதர்கள் சந்தாதாரர் ஆவதென்பது கனவிலும் இயலாத காரியம்.  உதாரணத்திற்கு,  யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ கிஜீஜீறீவீமீபீ றிஷீறீஹ்னீமீக்ஷீ ஷிநீவீமீஸீநீமீ என்ற சஞ்சிகையின் விலை 24,000 அமெரிக்க டாலர் (ஒரு வருட சந்தா). உலகில் பெரும் கல்வி நிறுவனங்களின் நூலகங்கள் மட்டுமே சந்தா செலுத்தி அந்நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் படிப்பதற்கு வழி செய்கின்றன.  ஒவ்வொரு கல்வி நிறுவன நூலகமும் அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு உதவ வருடம்தோறும் கோடிகள் செலவழித்துப் பல சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தி வரவழைக் கின்றன அல்லது இணையத்தில் அணுக உரிமை பெறுகின்றன. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பெங்களூருவில் உள்ள  மிஸீபீவீணீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ ஷிநீவீமீஸீநீமீ ரூபாய் ஒன்பது கோடியை ஒவ்வொரு வருடமும் சில நூறு சஞ்சிகைகளின் சந்தாவுக்காகச்  செலவழிக்கிறது. இந்தியாவில் சமீப காலங்களில்,  பல நூலகக் கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உள்ள விஞ்ஞானிகளும்/ஆராய்ச்சியாளர்களும் சில நூறு முக்கிய
சஞ்சிகைகளை இணையத்தில் அணுகும் வசதியை ஏற்படுத்திக்  கொடுத்திருக்கின்றன.  இதற்காகப் பெரும் பொருட்செலவு இந்திய அரசாங்கத்தால் செய்யப்படுகிறது.   
இவ்வெளிநாட்டு சஞ்சிகைகளின் சந்தாத் தொகை தற்போது  பெருமளவு  உயர்ந்து விட்டது. இதற்கு  வெளிநாட்டு முன்னணி பதிப்பாளர்களின் ஏகாதிபத்திய அணுகுமுறையே காரணமாகச் சொல்லப்படுகிறது. பதிப்புத் தாள்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி  சந்தாத் தொகையை உயர்த்திய இந்நிறுவனங்கள், இச்சஞ்சிகைகள் இணையமயமாக்கப்பட்ட பின்னும் இணையத்தில்  பராமரிப்புச் செலவைக் காட்டி இணையத்தில் அணுகும் உரிமைக்கான தொகையைத் தொடர்ந்து உயர்த்திவிடுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில்  இச்சஞ்சிகைகளின் விலை ஏறத்தாழ 300 சதம் உயர்ந்துவிட்டதாக அமெரிக்காவில்  உள்ள ஆராய்ச்சி நூலகங்களின் கூட்டமைப்பு (கிssஷீநீவீணீtவீஷீஸீ ஷீயீ ஸிமீsமீணீக்ஷீநீலீ லிவீதீக்ஷீணீக்ஷீவீமீs, ஹிஷிகி) ஒரு தகவலை ஒரு சில ஆண்டுகளுக்கு  முன்பு தெரிவித்தது. அமெரிக்காவின் பணவீக்க விகிதத்தை விட இது அதிகமானதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த கீமீறீநீஷீனீமீ ஜிக்ஷீust என்ற  நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதன்படி ஐரோப்பாவில்  அறிவியல் சஞ்சிகை பதிப்புத் துறை ஐரோப்பிய தொலைத் தொடர்புத்துறையை விட அதிக வருவாய் ஈட்டுவதாகத் தகவல் வெளியிட்டது.  ஒரு சமீபத்திய புள்ளிவிவரப்படி, நெதர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட  எல்செவியர் (ணிறீsமீஸ்வீமீக்ஷீ) என்ற ஒரு அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ சஞ்சிகைகளை வெளியிடும் ஒரு பதிப்பகம், ஒவ்வொரு நிமிடமும் 1,500 அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது! இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த  முன்னணி கல்வி நிறுவனங்களே அறிவியல் சஞ்சிகைகளுக்கான சந்தா செலவை ஈடுகட்ட முடியாமல், பல
சஞ்சிகைகளை சந்தா நீக்கம் செய்துள்ளன.    
ஏனோ அறிவியல் சஞ்சிகை பதிப்புத்  துறையில் இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு ஈடாகச் செயல்பட முடியவில்லை. இந்திய அறிவியல் சஞ்சிகைகள், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் இந்திய நூலகங்களால் மட்டுமே வாங்கப்படுகின்றன.  இதனால் இவற்றில் வெளியிடப்படும் கட்டுரைகளால் வெளிநாட்டில் வாழும் விஞ்ஞானிகளின் பார்வைக்குச் செல்வதில்லை. இதனால் அதில் வெளியிடப்படும் கட்டுரைகள் அதற்குரிய தாக்கத்தை உலக அரங்கில் ஏற்படுத்த முடியாமல் போய்விடுகின்றன. இதனால் பெரும்பாலான இந்திய விஞ்ஞானிகள் தங்கள் அறிவியல் கட்டுரைகளை வெளியிட, அவற்றின் வீச்சு காரணமாக, வெளிநாட்டு அறிவியல் சஞ்சிகைகளையே நாடுகின்றனர். 
இதில் ஒரு வெளிப்படை வினோதம் பொதிந்துள்ளது.  இந்திய அரசின் நிதி உதவியில் (இந்தியப் பொது மக்களின் வரிப்பணத்தில்), இந்திய நிறுவனங்களில், இந்தியர்களால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் முடிவுகள் வெளிநாட்டுப் பதிப்பகத்தார்களின் காப்புரிமையின் (சிஷீஜீஹ்க்ஷீவீரீலீt )  கீழ்  சென்று விடுகின்றன.  ஒரு சக இந்தியன் அக்கட்டுரையைப் படிக்க வேண்டுமானால் அவ்விந்தியன் பணிபுரியும் நிறுவன நூலகம் பெரும் தொகையைச் சந்தாவாகச் செலுத்தி வரவழைக்க வேண்டும் அல்லது இணையத்தில் அணுகும் உரிமையைப் பெற வேண்டும். இந்திய அரசு ஆராய்ச்சிக்கும் பெரும் தொகையைச் செலவழித்து, அவ்வாராய்ச்சியின் முடிவுகளை அணுகவும் பெரும் தொகையை வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தும் வினோதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
இதிலும் பெரும் வினோதம் இக்கட்டுரைகளை எழுதிய விஞ்ஞானிகளுக்கோ அல்லது திறனாய்வு உதவி செய்யும் விஞ்ஞானிகளுக்கோ ஒரு ரூபாயைக் கூட இவ்வெளிநாட்டுப் பதிப்பகத்தார்கள் வழங்குவதில்லை.
விஞ்ஞானிகள் தங்கள் கட்டுரைகளை இச்சஞ்சிகைகளில் வெளியிடுவதன் நோக்கம், உலகில் இருக்கும் மற்ற விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர் களும் அவற்றைப்  பயன்படுத்தி ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே. உலகம் முழுவதுமே ஒரு விஞ்ஞானியின்/ஆராய்ச்சியாளனின் பதவி உயர்வோ அல்லது ஆராய்ச்சி உதவித்தொகைக்கான அனுமதியோ  அவர் எழுதி இருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அவை ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தின் பொருட்டே தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு ஆராய்ச்சியாளனும் தான் எழுதும் கட்டுரைகள் பலரைச் (பல நாடுகளில் இருக்கும் சக ஆராய்ச்சியாளர்களை) சென்றடைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஆனால், இக்கட்டுரைகளைச் சுமந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் வசதி படைத்த நூலகங்களை மட்டுமே  சென்றடைகின்றன. மூன்றாம் உலக நாடுகளில், ஏன் சில வளரும் நாடுகளில்
உள்ள மிகச் சாதாரணக் கல்லூரிகளில்
மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இவை எட்டாக்கனியே.     
உலகைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் பிரமாண்டமானவை.  மனிதன் உருவாக்கிய எல்லைகளை மதிக்காத இயற்கைப்  பேரழிவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்திய சுனாமி, பறவைக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்றவை இதற்குச் சரியான உதாரணங்கள். எங்கோ உருவாகி எங்கெங்கோ தாக்கத்தையும், பீதியையும் ஏற்படுத்தியவை இந்நிகழ்வுகள். இவ்வியற்கை இடர்களிலிருந்து எதிர்காலம் தப்பித்து வாழ  அறிவியல் ரீதியான தீர்வுகளை விரைவில் எட்டுவது அவசியமாகிறது.  இவற்றிற்குத் தனி மனித மற்றும் தனி நிறுவன முயற்சிகளை விட கூட்டு முயற்சியே நல்ல பலன் அளிக்கும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. இவ்வியற்கை இடர்ப்பாடுகள் குறித்த ஆராய்ச்சித் தகவல்கள் பொதுத் தளத்தில் (றிuதீறீவீநீ ஞிஷீனீணீவீஸீ) அனைவரும் அணுகும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டியது மிக அவசியம். நவீன தகவல் தொழில் நுட்பமும் மற்றும் இணைய தொழில் நுட்பமும் அளித்திருக்கும் வாய்ப்புகளை அனைவரும் மிகவும் கெட்டிக்காரத்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி விஞ்ஞான மற்றும் அறிவுசார் தகவல்களைப் பொதுத் தளத்தில் கொண்டு வந்து எதிர்கால ஆராய்ச் சியாளர்களுக்குப் பயன் அளிக்கச் செய்வதோடு,  இந்த மனித குலம் தழைக்க வழி செய்யும் ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் தகவல்களை ஏகாதிபத்திய நிறுவனங்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
இப்பிரச்சனைகளைக்  கருத்தில் கொண்டு 2001 ஆம் ஆண்டு புதாபெஸ்ட் திறந்த அணுக்க முனைப்பு (ஙிuபீணீஜீமீst ளிஜீமீஸீ கிநீநீமீss மிஸீவீtவீணீtவீஸ்மீ) முறையாக  உருவானது.  இந்தச் சந்திப்பில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்புடைய தகவல்களைப் பொதுத் தளத்திற்குக் கொண்டு வந்து சுலபமான உலகளாவிய பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யும் கூறுகள் பல அறிஞர்களால் விவாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2003_ ஆம் ஆண்டில் பெதேஸ்டா அறிக்கையும் (ஙிமீtலீமீsபீணீ ஷிtணீtமீனீமீஸீt), பெர்லின் பிரகடனமும் (ஙிமீக்ஷீறீவீஸீ ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ) இக்கருத்தை முன்னெடுத்துச் சென்றன.  பெர்லின் பிரகடனத்தின் போது ளிஜீமீஸீ கிக்ஷீநீலீவீஸ்மீs மிஸீவீtவீணீtவீஸ்மீ - றிக்ஷீஷீtஷீநீஷீறீ யீஷீக்ஷீ விமீtணீபீணீtணீ பிணீக்ஷீஸ்மீstவீஸீரீ (ளிகிமி-றிவிபி) என்ற பரிமாற்ற வரைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு முக்கிய நிகழ்வு.  இதன் பின்னர் தான்  ஏகாதிபத்திய பதிப்பகத்தார்களின் தீச்சுவருக்குள் இருக்கும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் தகவல்களைப் (கட்டுரைகளை) பொதுத்தளத்திற்குள் கொண்டு வரும் முயற்சி துரிதமடைந்தது.  
ஸ்டீவன் ஹார்நாடு (லீttஜீ://ஷீஜீமீஸீணீநீநீமீss.மீஜீக்ஷீவீஸீts.ஷீக்ஷீரீ/) மற்றும் பீட்டர் வபர் (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.மீணீக்ஷீறீலீணீனீ.மீபீu/~ஜீமீtமீக்ஷீs/லீஷீனீமீtஷீநீ.லீtனீ) ஆகியோரின் இணையதள விவாதங்கள், அல்மா சுவான் (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ளீமீஹ்ஜீமீக்ஷீsஜீமீநீtவீஸ்மீs.நீஷீ.uளீ/ணீதீஷீutus/ணீsஷ்ணீஸீ.லீtனீறீ) போன்றவர்களின்  நடைமுறை சாத்தியக்கூறு குறித்த ஆராய்ச்சிகள்,  இந்தத் திறந்த அணுக்கச் (ளிஜீமீஸீ கிநீநீமீss) சிந்தனையை  பல தளங்களுக்குக் கொண்டு சென்றன.  விவாதங்களின் முடிவில் இரு வழிமுறைகளை உலகில் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர். 
ஒன்று, திறந்த அணுக்கச் சஞ்சிகைகளை (ஷீஜீமீஸீ ணீநீநீமீss ழீஷீuக்ஷீஸீணீறீs) ஊக்குவிப்பது.  இரண்டு, திறந்த அணுக்கக் களஞ்சியங்களை (ளிஜீமீஸீ கிநீநீமீss மிஸீstவீtutவீஷீஸீணீறீ ஸிமீஜீஷீsவீtஷீக்ஷீஹ்) உலகம் முழுவதிலும் உள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நிறுவி, அதில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள்  மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம்  அவர்கள் உருவாக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சஞ்சிகைகள் பதிப்பிக்க ஏற்றுக்கொண்டதும்,  உடனடியாக அதன் பிரதியை அக்களஞ்சியங்களில் பதிவேற்றம் செய்யக் கோருவது.  அதன் மூலம், அக்கட்டுரைகளின் உபயோகிப்பாளர்கள் உலகில்  எங்கிருந்தாலும் எளிதில் தரவிறக்கம் செய்து கொள்ள வழி செய்வது.
தங்களின் கட்டுரைகளைத் தங்கள் சொந்த இணைய தளத்திலோ அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்  திறந்த அணுக்கக் களஞ்சியங்களிலோ பதிவேற்றம் செய்து கொள்ளும் தார்மீக உரிமையைப் பெரும்பாலான பன்னாட்டு சஞ்சிகை பதிப்பாளர்கள் கட்டுரை ஆசிரியர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். பதிப்பாளர்கள் கட்டுரையாசிரியர்களுக்கு வழங்கும் உரிமைகள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டு இணையத்தில்  நல்ல தேடும் வசதியுடன் கிடைக்கிறது.லீttஜீ: / / ஷ்ஷ்ஷ். sலீமீக்ஷீஜீணீ.ணீநீ.uளீ /க்ஷீஷீனீமீஷீ/).
உலகம் முழுவதிலும் இருந்து 4,800_க்கும் மேற்பட்ட திறந்த அணுக்க அறிவியல் திறனாய்வு சஞ்சிகைகள் வெளி வருகின்றன.  இவை ளிஜீமீஸீ ஷிஷீநீவீமீtஹ் மிஸீstவீtutமீ _ இன் நிதி உதவியால் லிuஸீபீ ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் நூலகத்தின் ஒரு செயல் திட்டத்தால் தொகுக்கப்பட்டு பட்டியல் படுத்தப்பட்டு இருக்கின்றன.  கனடா நாட்டின் வான்கூவர் நகரத்தில், தற்போது ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் (ஷிtணீஸீயீஷீக்ஷீபீ ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ்) பணிபுரியும் கல்வித்துறை பேராசிரியர் ஜான் விலின்ஸ்கி  தலைமையிலான றிuதீறீவீநீ ரிஸீஷீஷ்றீமீபீரீமீ றிஷீக்ஷீழீமீநீt  என்ற அமைப்பு, சஞ்சிகைகளை இணயத்தில் பதிப்பிக்க உதவும் ளிஜீமீஸீ யிஷீuக்ஷீஸீணீறீ ஷிஹ்stமீனீ  (லீttஜீ://ஜீளீஜீ.sயீu.நீணீ/?ஹீ=ஷீழீs) என்ற மென்பொருளைத் திறந்த மூலவடிவில் வெளியிட்டுள்ளது.    இது வெளியான உடனே மிகப் பிரபலமாகி, இன்று உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் இம்மென் பொருளை உபயோகித்துத் தங்கள்
சஞ்சிகைகளை இணையத்தில் பதிப்பிக்கின்றன.  
இந்தியாவில் பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்ட  ஒரு தனியார் நிறுவனம் (மிஸீயீஷீக்ஷீனீணீtவீநீs மிஸீபீவீணீ) இவ்வகை சஞ்சிகைகளைத் தொகுத்து,  தேடும் வசதியுடன் ஒரு இடைமுகம் உருவாக்கி இருக்கிறது.  மேலும் விமீபீளீஸீஷீஷ்
றிuதீறீவீநீணீtவீஷீஸீs என்ற இந்தியாவைச் சேர்ந்த, மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட  தனியார் நிறுவனம்,  நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ அறிவியல் சஞ்சிகைகளைத் திறந்த அணுக்க முறையில் வெளியிடுகின்றது.  இதன் இயக்குனர் ஞிக்ஷீ. ஞி.ரி. ஷிணீலீu,  இவ்விதழ்கள் திறந்த அணுக்க முறையில் வெளியிடப்படுவதால், இவற்றின் சந்தா வருமானம் சற்றும் குறையவில்லை என்றும் சஞ்சிகைகளின் மதிப்பு உலகளவில்  பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும் புள்ளி விவரங்களுடன் பல இடங்களில் உரையாற்றி இருக்கிறார், கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.  மத்திய அரசைச் சேர்ந்த மைய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால்  (சிஷீuஸீநீவீறீ ஷீயீ ஷிநீவீமீஸீtவீயீவீநீ ணீஸீபீ மிஸீபீustக்ஷீவீணீறீ ஸிமீsமீணீக்ஷீநீலீ - சிஷிமிஸி) வெளிடப்படும் 17 சஞ்சிகைகள் இன்று  திறந்த அணுக்க முறையில் நமக்குக் கிடைக்கின்றன.  மிஸீபீவீணீஸீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீs (மிகிஷி) ஙிமீஸீரீணீறீuக்ஷீu, மற்றும்  மிஸீபீவீணீஸீ ழிணீtவீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ
ஷிநீவீமீஸீநீமீs (மிழிஷிகி) ,ழிமீஷ் ஞிமீறீலீவீ,  வெளியிடும் அனைத்து சஞ்சிகைகளும் கடந்த சில வருடங்களாகத் திறந்த அணுக்க முறையில் அனைவருக்கும் கிடைக்கின்றன. 
இரண்டாவது வகை திறந்த அணுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் திறந்த அணுக்க நிறுவனக் களஞ்சிய மென்பொருள்  (ளிஜீமீஸீ கிநீநீமீss மிஸீstவீtutவீஷீஸீணீறீ ஸிமீஜீஷீsவீtஷீக்ஷீஹ் ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ) ணிஜீக்ஷீவீஸீts (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.மீஜீக்ஷீவீஸீts.ஷீக்ஷீரீ) என்ற பெயரில், திறந்த மூல வடிவில், (ளிஜீமீஸீ ஷிஷீuக்ஷீநீமீ)  சவுத் ஆம்ப்டன் பல்கலைக் கழகத்தால் (ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் ஷீயீ ஷிஷீutலீணீனீஜீtஷீஸீ) வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாச்சசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விணீssணீநீலீusமீtts மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீக்ஷீஹ் - விமிஜி) நிறுவனம் ஹீவ்லெட்-பக்கர்ட் (பிமீஷ்றீமீt - றிணீநீணீக்ஷீபீ)  உதவியுடன் ஞிsஜீணீநீமீ (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.பீsஜீணீநீமீ.ஷீக்ஷீரீ) என்ற மென்பொருளைக் திறந்த மூல நிரல் வடிவில் வெளியிட்டது.  இவ்விரு மென்பொருட் களும் உலகின் பல பல்கலைக்கழகங்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு,  நிறுவனக்
களஞ்சியங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.  அவற்றில் பல விஞ்ஞானிகளும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும்  திறனாய்வு செய்யப்பட்டு சஞ்சிகைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்களின் அறிவியல் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். இவற்றை உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் முற்றிலும் இலவசமாக இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷிநீவீமீஸீtவீயீவீநீ சிஷீனீனீஷீஸீs (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.sநீவீமீஸீtவீயீவீநீ நீஷீனீனீஷீஸீs.ஷீக்ஷீரீ/) போன்ற இணைய சேவை நிறுவனங்கள் இவ்வகைக் களஞ்சியங்களில் உள்ள தகவல்களை அவ்வப்போது அறுவடை செய்து, தொகுத்து,  தேடு முகமும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். உலகில் உள்ள நிறுவனக் களஞ்சியங்களின் பட்டியலையும்  அதில் பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை வளர்ச்சியைக் கண்காணிக்கும் ஒரு இணைய பதிவகத்தை  சவுத் ஆம்ப்டன் பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ளது (லீttஜீ:// க்ஷீஷீணீக்ஷீ.மீஜீக்ஷீவீஸீts.ஷீக்ஷீரீ/).
இந்தியாவைப் பொறுத்தவரை,  ஏறக்குறைய ஐம்பது  உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இன்று திறந்த அணுக்கக் களஞ்சியங்களை நிறுவி அதில் அந்நிறுவன ஆராய்ச்சியாளர்கள்,  அவ்வப்போது உருவாக்கும் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை,  உடனடியாகத் தாங்களே பதிவேற்றம் செய்ய வழிவகை செய்து இருக்கின்றன. பெங்களூருவைச் சேர்ந்த மிஸீபீவீணீஸீ மிஸீsவீttutமீ ஷீயீ  ஷிநீவீமீஸீநீமீ  இக்களஞ்சியத்தை நிறுவுவதில் முன்னோடியாகச் செயல்பட்டு, இன்று  இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன திறந்த அணுக்கக் களஞ்சியமாகச் செயல்பட்டு வருகிறது (லீttஜீ://மீஜீக்ஷீவீஸீts.வீவீsநீ.மீக்ஷீஸீமீt.வீஸீ/).  இக்களஞ்சியத்தில் உள்ள 20,000_க்கும் மேற்பட்ட  அந்நிறுவன விஞ்ஞானிகளால் எழுதப்பட்டுத் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிவியல் கட்டுரைகளை, திறந்த அணுக்க முறையில் எவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியுடன்,  சில கட்டுரைகளை மின்னஞ்சலில் வேண்டிப் பெறும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.  இந்திய விவசாய ஆராய்ச்சி மன்றத்தின் (மிஸீபீவீணீஸீ சிஷீuஸீநீவீறீ ஷீயீ கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ ஸிமீsமீணீக்ஷீநீலீ) வழி நிதி உதவிபெறும் இரு நிறுவனங்கள் - இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் (மிஸீபீவீணீஸீ கிரீக்ஷீவீவீநீuறீtuக்ஷீணீறீ ஸிமீsமீணீக்ஷீநீலீ மிஸீstவீtutமீ - ழிமீஷ் ஞிமீறீலீவீ) (லீttஜீ://மீஜீக்ஷீவீஸீts.வீணீக்ஷீவீ.க்ஷீமீs.வீஸீ), மத்திய கடல்சார் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம் (சிமீஸீtக்ஷீணீறீ விணீக்ஷீவீஸீமீ திவீsலீமீக்ஷீவீமீs ஸிமீsமீணீக்ஷீநீலீ மிஸீstவீtutமீ- சிஷீநீலீவீஸீ) (லீttஜீ://மீஜீக்ஷீவீஸீts.நீனீயீக்ஷீவீ.ஷீக்ஷீரீ.வீஸீ) -இத்தகைய திறந்த அணுக்கக் களஞ்சியங்களை ஏற்படுத்தி அந்நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. மைய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஷீuஸீநீவீறீ ஷீயீ ஷிநீவீமீஸீtவீயீவீநீ ணீஸீபீ மிஸீபீustக்ஷீவீணீறீ
ஸிமீsமீணீக்ஷீநீலீ - சிஷிமிஸி) கீழே இயங்கும் ஐந்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் இத்தகைய களஞ்சியங்களை உருவாக்கியிருக் கின்றன. ரூர்கேலாவில் இருக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (ழிணீtவீஷீஸீணீறீ மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ், ஸிஷீuக்ஷீளீமீறீணீ),  இவ்வகை களஞ்சியத்தை உருவாக்கி, அதில் அங்கு பணிபுரியும் ஆராய்ச்சி யாளர்கள் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்வதைக் கட்டாயமாக்கியும் (விணீஸீபீணீtமீ) இருக்கிறது (லீttஜீ://பீsஜீணீநீமீ.ஸீவீtக்ஷீளீறீ.ணீநீ.வீஸீ/பீsஜீணீநீமீ , லீttஜீ://மீtலீமீsவீs.ஸீவீtக்ஷீளீறீ.ணீநீ.வீஸீ ) 
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் (விணீபீக்ஷீணீs ஞிவீணீதீமீtவீநீ ஸிமீsமீணீக்ஷீநீலீ திஷீuஸீபீணீtவீஷீஸீ) ஒரு களஞ்சியம் உருவாக்கி (லீttஜீ://னீபீக்ஷீயீ-மீஜீக்ஷீவீஸீts.வீஸீ),  அந்நிறுவன விஞ்ஞானிகள் சஞ்சிகைகளில் வெளியிடும் அனைத்து நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொண்டு நிரப்பி,  உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சியாளர்கள் எளிதில் அணுக வழி செய்து இருக்கிறது. திறந்த அணுக்கக் களஞ்சியங்களைக் கல்வி நிறுவனங்களில் உருவாக்குவது மிகச் சுலபம்.
இக்களஞ்சியங்களைக் கட்டமைக்க உதவும் கணினி மென்பொருட்கள் திறந்த மூல வடிவில் இலவசமாகக் கிடைப்பதால், அதிகப் பொருட்செலவின்றி இவற்றை நிறுவிவிடலாம்.   ஒரு தகவலின் அணுக்கமே அத்தகவலின் தாக்கத்தைப் பெருமளவு தீர்மானிப்பதால், திறந்த அணுக்கக் களஞ்சியங்களில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவற்றின் தகுதிக்குரிய தாக்கத்தை உலகம் முழுவதுமாக ஏற்படுத்துகின்றன.  இக்களஞ்சியங்கள் குறித்த  பலவகை ஆராய்ச்சிகள் இக்குறிப்பை உறுதிப்படுத்தவும் செய்கின்றன. 
உலகில் வெளியிடப்படும்  மொத்த ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதுவரை இருபது  சதவீதக் கட்டுரைகள் இத்திறந்த அணுக்க  நிறுவனக் களஞ்சியங்களின் வழியாக அனைவருக்கும் கிடைக்கின்றன.  இந்நிலைமை மேம்பட நூறு சத அறிவியல் கட்டுரைகளும் இணையம் வழி அனைவருக்கும் எளிதில் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் பலர் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஹரால்ட் வார்மூஸ் (லீttஜீ://ஜீஷீஹ்ஸீபீமீக்ஷீ.தீறீஷீக்ஷீரீsஜீஷீt.நீஷீனீ/2006/06/வீஸீtமீக்ஷீஸ்வீமீஷ்-ஷ்வீtலீ-லீணீக்ஷீஷீறீபீ-ஸ்ணீக்ஷீனீus.லீtனீறீ) உட்பட பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இவ்வியக்கத்துக்கு  ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் பொது ஊடகங்களில் பெரிதும் அடிபடும், உலகின் மாபெரும் இயற்பியல் பரிசோதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்,  நிறுவனமான ணிuக்ஷீஷீஜீமீணீஸீ
ளிக்ஷீரீணீஸீவீsணீtவீஷீஸீ யீஷீக்ஷீ ழிuநீறீமீணீக்ஷீ ஸிமீsமீணீக்ஷீநீலீ (சிணிஸிழி) திறந்த அணுக்க அறிவியல் தகவல் முயற்சிக்குத் தனது ஆதரவை அளித்துள்ளது.  
இந்தியாவில், பெங்களூருவில்,  இணையம் மற்றும் சமூக நிறுவனம் (சிமீஸீtக்ஷீமீ யீஷீக்ஷீ மிஸீtமீக்ஷீஸீமீt ணீஸீபீ ஷிஷீநீவீமீtஹ்) என்ற தன்னார்வ நிறுவனம் சமூகத்தில் இணையத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளை  மேற்கொண்டுள்ளது.  இந்நிறுவனம் இணையம் வழி சமூக மாற்றம்  மற்றும் இணையம் குறித்த  அரசு கொள்கை முடிவுகள்  பற்றி விவாதிக்கும் ஒரு சிந்தனையாளர் குழு (ஜிலீவீஸீளீ ஜிணீஸீளீ). இது திறந்த மூல வடிவு கணினி மென்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம், திறந்த அணுக்கக்  களஞ்சியங்களை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்க இயன்ற உதவிகளைச் செய்ய முன்வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் சுப்பையா அருணாசலம் அவர்கள்தான் இந்தியாவில் இவ்வியக்கத்துக்கு முன்னோடி எனலாம். அவர் இந்தியாவில் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அறிவூக்கத் தகவல்களைப் பொதுத்தளத்தில் கொண்டு வருவதனால் ஏற்படும் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்புடன் இன்றும் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக் கிறார். இந்தியாவில் திறந்த அணுக்கம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த பல மாநாடுகள் மற்றும் பட்டறைகளைச்  சென்னை உட்பட பல இடங்களில் நடத்தியிருக்கிறார்.  திறந்த அணுக்கத்தில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தகவல்களைக் கொண்டு வருவதால் வளரும் நாடுகளுக்கான பலன்கள் குறித்துப் பல
சஞ்சிகைகளிலும், இணையத்திலும்  கட்டுரைகள் எழுதி உள்ளார். பல இடங்களில் உரையாற்றியும் இருக்கிறார். இவரின் சொந்த வலைப்பூவில் இவை படிக்கக் கிடைக்கின்றன (லீttஜீ://ணீக்ஷீuஸீஷீணீ.ஷ்ஷீக்ஷீபீஜீக்ஷீமீss.நீஷீனீ/).  
மதுரைக்  காமராசர் பல்கலைக்கழகம்  தவிர்த்து,   தமிழகத்தில் கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ இதுவரை திறந்த அணுக்கக் களஞ்சியங்கள் ஏற்படுத்தப்படவே  இல்லை. இப்பல்கலைக்கழகங்களில்/கல்லூரிகளில் நடக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் அவற்றுக் குரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால்,  இப்பல்கலைக்கழங்களின் அறிவியல் செயல்பாடுகள்  இந்திய அளவில் மற்றும்  உலக அளவில் பேசப்பட  வேண்டுமானால், உடனடி யாகத் திறந்த அணுக்கக் களஞ்சியங்கள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.  அதில் அப்பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்படும் ஆராய்ச்சிகளின் முடிவுகளால்,  அதன் ஆராய்ச்சியாளர்களால் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சஞ்சிகைகளில் வெளியிடப் படும் கட்டுரைகளால்  நிரப்பப்பட வேண்டும். இக்களஞ்சியங்களில் உள்ள தகவல்கள் பிரசித்தமான தேடு பொறிகளால் (ரீஷீஷீரீறீமீ போன்ற) அறுவடை செய்யப்பட்டு உலகளாவிய பார்வைக்கு உட்படுத்தப்படும். 
இக்களஞ்சியங்கள் அது கொண்டிருக்கும் தகவல்களை  அதன் உபயோகிப்பாளர்களின் பார்வைக்கு எளிதில் கொண்டு செல்லும்.  எளிதான அணுக்கம் விரைவான தாக்கத்துக்கு வழிவகுக்கும். திறந்த அணுக்கக் களஞ்சியங்களை உடனடியாக நிறுவும்படி தன் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டால்,  இத்துணைக் கண்டத்தின்,  ஏன் இவ்வுலகின்  முன்மாதிரி மாநிலமாக விளங்கும். 
மேலும் பொது  திறந்த அணுக்கக் களஞ்சியங்களை உருவாக்கி, தமிழின் சிறந்த காப்பிய, இலக்கண, இலக்கிய, இதிகாச மற்றும் அறிவியல் புத்தகங்களை மின்னணுவாக்கம் செய்வதற்கு (ஞிவீரீவீtவீக்ஷ்மீ) செய்து அவைகளை அக்களஞ்சியங்களில் நிரப்பிப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.  தமிழகத்தில் உள்ள நூலகங்களில் உள்ள பதிப்புரிமை காலாவதியான  மற்றும் பல ஆண்டுகளாக மறுபதிப்புக்கு வராத புத்தகங்கள் பட்டியலிடப்பட்டு அவற்றை  மின்னணுவாக்கம் செய்து பொதுத்தளப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து,  உலகம் முழுவதும் விரவி இருக்கும் தமிழர்கள் எளிதில் அணுகிப் படிக்க வழி வகை செய்யப்பட வேண்டும். 
ஏற்கெனவே தமிழ் நாட்டில் இவ்வகை முயற்சிகள் நடந்து கொண்டிருந்தால் அவை அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.  பாரம்பரிய தமிழிசை வடிவங்களையும் மற்றும்  பாடல்களையும் ஒலி வடிவத்தில்  மின்னணுவாக்கம் செய்து  பொதுத்தளங்களில் பாதுகாக்கப்பட வேண்டும்.  இது அவ்விசை மற்றும் பாடல்கள் குறித்த ஆராய்ச்சிக்குப் பெருமளவு உதவி செய்யும். மிஸீtமீக்ஷீஸீமீt கிக்ஷீநீலீவீஸ்மீ (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ணீக்ஷீநீலீவீஸ்மீ.ஷீக்ஷீரீ/) என்ற இயக்கம் மேற்குறிப்பிட்ட வகை முயற்சியில்  ப்ரேவ்ஸ்டர்  காலே என்பவரின் தலைமையில்  உலகளாவிய வகையில் இயங்கி வருகிறது. இதை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.  "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றார் கணியன் பூங்குன்றனார். வருகின்ற அக்டோபர் மாதம் 18 முதல் 24 வரை உலகத் திறந்த அணுக்க வாரம் கொண்டாடப் படுகிறது. அதற்கு முன்னர் இவ்வகை  லட்சியங்களில் ஒரு பகுதியையாவது தமிழகத்தில் நாம் அடைந்தாக வேண்டும்.  தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்புகள் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட வேண்டும்.  
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இவை பிரகடனமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் நல்லது.   இதுவே தமிழின் செம்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் சிறந்த வழியாகும். ஸீ


(இக்கட்டுரையை  வடிவமைக்க  உதவிய
திரு. சுப்பையா அருணாசலம்,  திரு. கென் மற்றும் திரு. சிட்டி பாபு அவர்களுக்கு நன்றி.)

* கட்டுரையாளர் தமிழகத்தை சேர்ந்தவர்,  தற்போது ரூர்கேலாவில், தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் (National Institute  of Technolorgy  Rourkela ) உதவி நூலகராக பணிபுரிகிறார். இவர் ஒரிய மொழியின் சிறந்த புத்தகங்களை  டிஜிடைஸ் செய்து ஒரு களஞ்சியமும்  அமைக்க உதவி  இருக்கிறார் (http://oaob.nitrkl.ac.in).. இவர் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள  Centre for Internet and Society இன் சார்பாக பல நிறுவனங்களுக்கு திறந்த அணுக்கக் களஞ்சியங்கள் அமைப்பதில் உதவி புரிகிறார். (mu.madhan@ gmail.com). 

No comments:

Post a Comment