Tamil books

Wednesday 20 April 2011

நம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்

 எஸ். கண்ணன்

சிறு உளி பெருமலையை உடைக்கும் ஆற்றல்
வாய்ந்தது. அதுபோல் பகத்சிங் எழுதிய ‘நான் ஏன்
நாத்திகன்?’ பெட்ரண்ட் ரஸல் எழுதிய ‘நான் ஏன்
கிறிஸ்துவனல்ல’ இராபர்ட் ஜி.இங்கர்சால் எழுதிய ‘நான்
நாத்திகவாதி ஆவதேன்-’ ஆகிய மூன்று சிறு பிரசுரங்களும்
கடவுள்நம்பிக்கை என்ற பெயரில் பல ஆயிரம் ஆண்டு-
களாக உருவாக்கி வைத்துள்ள அபத்தத்தை, அறியா-
மையை, சுரண்டலை, விஞ்ஞான மறுப்பைத் தகர்க்கும்
பெரும் பணியைச் செய்கின்றன. கடவுள்நம்பிக்கையும்,
மத நம்பிக்கைகளும் மனித உயிர் கருக்கொள்ளும் காலம்
முதல் துவங்குகிறது. தலைமுறை தலைமுறையாகக்
குடும்பத்துடன் பின்னிப் பிணைத்து வார்க்கப்பட்ட
இப்பெரும் மலைகளைத் தகர்ப்பது எளிதல்ல. கருத்து
முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற விவாதங்கள்
துவங்கிய காலம் தொட்டு கடவுள்நம்பிக்கை மற்றும்
மறுப்பு விவாதங்கள்நடைபெற்றுள்ளன. இந்திய
மண்ணில் பௌத்தம், சமணம் ஆகியவற்றின் துவக்கமே,
கடவுளின் பெயரிலான ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள
முடியாது என்ற எதிர்ப்பை அடையாளமாகக் கொண்டது.
ஆனால் ஆளும் வர்க்கம், இந்தியாவில் வளர்ந்த வைதிக
பெரும் மதத்தின் வளர்ச்சி மற்றும் பௌத்தம், சமணம்
ஆகியவற்றைத் தழுவிய உயர் வர்க்கம் ஆகிய சக்திகள்
ஒருங்கிணைந்து பௌத்தரையும், சமணரையும் வழிபாட்டுக்-
குரிய-வர்களாக மாற்றி விட்டனர். அதேபோல் ரோமானிய
சாம்ராஜ்ஜியத்தில் அடிமைமுறை நீடித்து வந்தபோது
அதற்கு எதிரான எழுச்சியாகத்தான் கிறித்துவ மதம்
தோன்றி-யது. ஆனால் காலப்போக்கில் அதுவே உலகப்
பெருமதமாக வளர்க்கப்பட்டது.
எப்பொழுதெல்லாம், பேரரசுகள்சிதையத்
துவங்குகிறதோ எப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டோரும்,
ஒடுக்குவோரும் ஏதோ உலகமே அஸ்தமித்து விட்டது
போன்ற ஓர் உணர்ச்சிக்கு அல்லது விரக்திக்குத் தூண்டப்ப
டுகிறார்களோ, அப்பொழுதெல்லாம் பகுத்தறிவை
மறுக்கும் நம்பிக்கைகளும், சமய வெறி பிடித்த குழுக்களும்
எழுச்சி கொள்கின்றன என்று ஜார்ஜ் தாம்ஸன் என்ற
தத்துவவாதி குறிப்பிடுகிறார். இதையே வின்டியூரெஸ்ட்
என்ற தத்துவவாதி, ‘உலக மதங்கள்ஒரு பார்வை’ என்ற
நூலாக வெளியிட்டுள்ளார். உழைக்கும் மக்களுக்கான தீர்வை
தெளிவாக வரையறை செய்த கார்ல் மார்க்ஸ், ‘மதம் என்பது
ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு, இதயமற்ற
உலகின் இதயம், ஆன்மா அற்ற நிலையில் உள்ள ஆன்மா,
மதம் மக்களை மயக்கும் அபினி’ என்று குறிப்பிட்டார்.
இத்தகைய அறிஞர்களின் தத்துவார்த்தப் பின்புலத்தில்
இருந்து பகத்சிங்கும், பெட்ரண்ட் ரஸலும், இராபர்ட்
ஜி.இங்கர்-சாலும் தங்கள்காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்கின்றனர். பகத் சிங் நாத்திகத்தை முன்வைப்பதற்கான
காரணங்களை ஒன்றன்பின் ஒன்றாக விளக்க முற்படுவதும்,
ரஸல், கிறித்-துவ மதத்தையும், நம்பிக்கைகளையும் கேள்-
விக்கு உட்-படுத்துவதும், இங்கர்சால் பகுத்தறிவு கேள்வி-களில்
இருந்து விளக்குவதும் சிறப்புத்தன்மை கொண்டவை ஆகும்’.
பகத்சிங்:
24 பக்கம் கொண்ட சிறு புத்தகமான ‘நான் நாத்திகன்
ஏன்? என்பதை ஆழமான கருத்துகளாகக் கொண்டு நிரப்பி
இருக்கிறார். தன்னிலை விளக்கத்திலிருந்து துவக்க
வேண்டிய நிர்ப்பந்தத்தை , அன்றைய சமூகம் அந்த இளைஞனுக்கு
ஏற்படுத்தி இருக்கிறது. இயக்க வாழ்க்கையின்
முன்வைக்கிற ஆணித்தரமான கருத்துக்களை ‘அகம்பாவம்’
என்ற வார்த்தை கொண்டு சிலர் தாக்குவதை எதிர்-
கொள்வதில் இருந்து துவக்குகிறன். தனது கொள்கையை
விளக்க 23 வயது என்கிற அனுபவக்குறைவை சிரமத்துடன்
உணர்கிறான். அறிவு சார்ந்து சிரமப்படவில்லை.
குழந்தைப்பருவத்தில் கடவுள்நம்பிக்கை கொண்டிருந்த
பகத்சிங், விடுதலைப்போரில் தீவிரம் கொண்ட பிறகு மாற்று
சமூகம் குறித்துச் சிந்திக்கிறான். ‘நாங்கள்காரியத்தில்
காட்டித் தீர வேண்டிய குறிப்பான திட்டமெதுவும்
அப்போது எங்களுக்கு இல்லாதிருந்த காரணத்தால்
உலகப்புரட்சி சம்பந்தமான பல தரப்பட்ட லட்சியங்களை
ஆற அமரச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குப் பொதுவான
சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் அராஜகத்-தலைவரா
ன பக்குனின் என்பவரின் தத்துவங்களைக் கற்றேன்.’
பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின்
நூல்களில் சிலவற்றை கற்றுணர்ந்தேன். ஆதிக்க இருள்
நிறைந்த தங்கள்நாட்டில் புரட்சியை நடத்திக் காட்டிய
லெனின், ட்ராட்ஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட
நூல்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி
செய்தேன். இவர்கள்அனைவரும் நாத்திகர்களே, பின்னர்
நிர்லம்பசாமி எழுதிய பொதுப்புத்தி (பகுத்தறிவு, சிஷீனீனீஷீஸீ
sமீஸீsமீ) என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் நாத்திக
வாதம் தெளிவுபடும்படியில்லாமல் கூறப்பட்டுள்ளது’
என்று விவரிக்கிறார். கடவுள்நம்பிக்கை கொள்ள குடும்ப
பழக்கவழக்கம் போதுமானது. ஆனால் மறுக்க நிறைய
படிக்க வேண்டியிருக்கிறது. இளைமைத்துடிப்பு
காரணமாகவோ, அகம்பாவம் காரணமாகவோ, தற்புகழ்ச்சி
காரணமாகவோ ஒருவன் செய்துவிட முடியாது என்பதைத்
தெளிவு படுத்துகிறார்.
அதுமட்டுமல்ல, ‘எல்லாம் தெரிந்த கடவுள்ஏன், ஏழை,
பணக்காரனைப் படைக்க வேண்டும்- சாஸ்திரங்கள்
சொல்வது போல் முன்ஜென்மக் கடனைத் தீர்க்க
என்றாலோ அல்லது கடவுள்ஏழைகளின் துயரத்தைக்
கண்டு ரசிக்கிறான் என்றாலோ என்ன அர்த்தம்?’
இப்படிப்பட்ட கொடுமைகளை ரசிப்பவன் எப்படி
கடவுளாக இருக்க முடியும்? அப்படியானால் கடவுளுக்கும்,
ரோமாபுரியை ஆண்ட நீரோவுக்கும் (நாடு தீப் பிடித்து
எரிகிறபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னன்)
என்ன வித்தியாசம்? என்ற பகத்சிங்கின் கேள்விகள்
பதிலளிக்க இயலாதவை. மமதையும், பேராசையும் உச்சி
முதல் உள்ளங்கால் வரை கொண்டு குதிக்கும் பிராமணர்-
களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்-
கப்-பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்குப்
பொறுப்பாளி யார்? ஏன் சாதிய பாகுபாடுகள்? இதை ஏன்
கடவுளால் தடுக்க இயலவில்லை? என்று கேள்விகள்காரண-
-மாகவே, கடவுள்இல்லை என்று மறுக்கிறான். கேள்விகளும்,
விளக்கங்களும் தத்துவார்த்தம், ஆழம், செறிவு நிறைந்தவை.
பெட்ரண்ட் ரஸல்:
நான் ஏன் கிறிஸ்தவனல்ல? என்ற தலைப்பில் ரஸல்
இங்கிலாந்து நாட்டு மக்கள்விவாதத்தில் ஆற்றிய
உரைதான் பிரசுரம். முப்பது பக்கங்களைக் கொண்டது.
ஆனால் முக்காலத்திற்கும் பொருந்துகிற கருத்தாற்றல்
நிறைந்தது. நூலின் துவக்கத்திலேயே அறிவுச்சாட்டை
வேகம் பிடித்து சுழல்கிறது. “சிலர் ‘கிறிஸ்தவ’னென்றால்
நல்வாழ்க்கை வாழ முயற்சிப்பவன் என்கிறார்கள். இந்த
அர்த்தப்படி பார்த்தால் எல்லா மதங்களிலும், எல்லா
வகுப்புகளிலும் ‘கிறிஸ்தவர்கள்’ இருக்க வேண்டும். எனவே
இந்த அர்த்தம் எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. “நீ
கிறிஸ்தவன் என்றால், கிறிஸ்துவானவர், கடவுளே அல்ல
என்றாலும் மக்கள்எல்லாரிலும் நிரம்ப நல்லவர் என்றும்,
எல்லாரிலும் அறிவாளி என்றுமாவது குறைந்த பட்சம் நீ
நம்பியாக வேண்டும்’’ எனவே நம்பிக்கையில் இருந்து தான்
கிறிஸ்துவ மதம் இருக்க முடிகிறது.
முதலாவது, நான் கடவுளிலும், ஜீவனின் அறியாத்-
தன்மை-யிலும் ஏன் நம்பிக்கை வைக்கவில்லை? என்பதைச்
சொல்ல வேண்டும். இரண்டாவது கிறிஸ்து என்பவர்
நல்லொழுக்கத்தில் மிகச் சிறந்தவர் என்பதை நான் ஏன்
ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும் சொல்ல-வேண்டும்
என்று இரண்டு காரணங்களில் இருந்து விளக்குகிறார்.
இவைகளைத் தெளிவுபடுத்துகிறபோது கடவுளே முழு
முதற்காரணம், அனைத்திற்கும் காரணம் என்ற கோட்-
பாட்டை “என்னை யார் உண்டாக்கினது என்பதைச் சொல்ல
முடியாது. ஏனெனில் அதற்கு பதில் சொன்னால், பிறகு
கடவுளை யார் உண்டாக்கினார் என்ற கேள்வி தானாகப்
பிறந்து விடுகிறது’’ எனவே கடவுள்இல்லை என்பதே
தெளிவான உண்மை என்கிறார். இயற்கை விதி என்ற
பெயரில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டம், திட்டம்
எனும் வாதங்களையும், தக்க ஆதாரங்-களுடன் மறுக்கிறார்.
இவ்வுலகில் ‘சரி’ என்பதும் ‘தப்பு’-என்பதும் எப்படித்
தோன்றியது. கடவுளின் சிருஷ்டி என்றால், ‘தப்பு’ என்பதை
ஏன் உருவாக்கினார்? நியாயத்தை நிலைநாட்டவே கடவுள்
இருக்கிறார் என்றால் நல்லவர்கள்கஷ்டப்படு-வதும்,
கெட்டவர்கள்சுகமனுபவிப்பதும் ஏன் நடை-பெறு-கிறது?
என்ற கேள்வி பதிலில்லை என்பதற்கானதாகும்.
கிறிஸ்துவை கேள்விக்கு உள்ளாக்குகிறபோது, “கிறிஸ்து-
வின் ஒழுக்கத்தில் மிகப்பெரிய குறைபாடு இருக்கிறது.
ஏனென்றால் அவர் நரகம் என்பதில் நம்பிக்கை வைத்தி-
ருந்தார். உண்மையில் ஜீவகாருண்யம் உடைய எவனும்
நிரந்தரமான தண்டனை என்ற நரகத்தை நம்புவானா?
என்பது என்னால் நினைத்துப் பார்க்கவே முடிய-வில்லை?
“ஏ சர்ப்பங்களே! விரியன் பாம்புக் குட்டி-களே! நீங்கள்
நரக வேதனையில் இருந்து எப்படித் தப்பப் போகிறீர்கள்?,
என்று கிறிஸ்துவானவர் சுவிசேங்களில் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள். இவ்விதம் சொல்லி-யிருப்பது, கிறிஸ்து-
வின் போதனைகளில் நம்பிக்கை கொள்ளாத-வர்களிடத்தில்
தான். எனவே பயம் கொள்ளச் செய்து நம்பிக்கைக்கு
ஆட்-படுத்துவது என்ற குணம் இருந்திருக்கிறது. எனவே
என்னால் கிறிஸ்துவை மகன் என்று ஏற்றுக் கொள்ள
முடியாது’’ என குறிப்பிடுகிறார். பெரும்பாலும் கட்டுக்-
கதைகள்மீதே ஒழுக்கம் நிறுவப்-பட்டிருக்கிறது என்பதைச்
சான்றுகளுடன் விவரிக்கிறார்.
இங்கர்சால்:
‘நான் நாத்திகவாதி ஆனதேன்?’ என்ற 34 பக்கங்களைக்
கொண்ட சிறு பிரசுரம். ஏராளமான விளக்கங்களைத் தருகிறது.
காட்டுக்குள்வாழ்ந்த மனிதன் இயற்கையின் பல்வேறு
குணாதிசயங்களைக் கண்டு வியப்பதும், மிரள்-வதும்
சாதாரணமாக நடைபெறுகிறது. வணங்கினால், படைய-
லிட்-டால், இயற்கை மனிதனை மன்னிக்கும் என்கிற தப்ப-
பிப்ராயம் கொள்கிறான், வணங்குகிறான். இன்றைய
விஞ்ஞான உலகில் இதுபோன்ற தப்பபிப்பிராயம் ஏன் தொடர
வேண்டும். இயற்கை ஏற்படுத்திய மிரட்சியை மதங்கள்மனிதன்
மீது திணிப்பது ஏன்? என்ற கேள்விகளை எழுப்புகிறார்.
“பகுத்தறிவுக் கொள்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு.
அதுதான் இவ்வுலகத்திற்குத் தக்க புனிதமான இயல்பாகும்.
மனோவளர்ச்சிக்கும், அறிவுப் பொருளின் சேமிப்பிற்கும்,
மூடநம்பிக்கையின் பாற்பட்ட பயணத்தினின்றும் மனிதன்
தன்னை விடுவித்துக் கொள்வதற்கும், இயற்கை சக்தியின்
அனுகூலங்களை மனிதன் அடைவதற்கும், அவைகளின்
மூலமாக உலகை அலங்கரித்துப் பாதுகாக்கவும் பகுத்தறிவுக்
கொள்கையே பொருத்தமுடையதாகும்’’ என்று தான்
முடிவுக்கான காரணத்தைக் கூறுகிறார்.
“உலகத்தில் தோன்றிய மதங்களிலெல்லாம் மக்களுக்கு
நம்பிக்கை உருவாக்கப்பட்டதன் காரணமாகவே வந்திருக்-
கிறது. எல்லா அற்புதங்களும் எண்ணற்ற மூளைகளுக்கு
விசுவாசத்தையே கொடுத்து வந்திருக்கின்றன. இல்லா-
விட்டால் அவைகள்நீடித்து இருக்க முடியாமல் போயி-
ருக்கக் கூடும். எல்லா மதங்களும் நான் அறிந்த வரையில்,
அற்புத முறையில் ஸ்தாபிக்கப்பட்டதாயும், காப்பாற்றப்பட்
ட-தாயும், பிரசாரம் செய்யப்பட்டதாயும் சொல்லப்படு-
கின்றன. எல்லா மதங்களைச் சார்ந்த குருமார்களும்
கடவுளிடமிருந்து வாக்குகளைக் கேட்டதாகவே சொல்லிக்
கொள்கிறார்கள். அவர்கள்தங்களுக்கென்று அதிகாரம்
கேட்கிறார்கள். கடவுளுடைய வாக்குகளை மெய்ப்பிக்கவும்,
தங்களுடைய விசேஷ அதிகாரத்தை சாஸ்வதமாகவும்
கையாளப்படுத்துகின்றனர்.’’ இதெல்லாம் மனிதனின்
அறியாமையைப் பயன்படுத்துவதற்கான ஆயுதமாகும்.
மக்களின் அறிவெல்லை விஸ்தீரணமாகும்போது
இதுபோன்ற தெய்வக் குரல்களும், பிரவேசங்களும்
காணாமல் போய்விடுகின்றன என்பதை உணரச் செய்கிற
வகையில் பிரசுரம் அமைந்துள்ளது.
மொத்தத்தில் மூன்று ஆளுமைகளும் படைத்துள்ள
நூல்கள், வேறுவேறுவிதமான சமூகச் சூழலில் வாழ்ந்திருந்-
தாலும், மக்கள்அறியாமையில் மூழ்கடிக்கப்படுவதும்,
சுரண்டப்படுவதும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை காரணமாக
எளிதாகி இருக்கிறது. கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக
இந்திய அரசியலில் வகுப்புவாதம் மேலோங்க பிரதான
காரண-மாக இருப்பது, ‘நம்பிக்கை’ எனும் அஸ்திரமே ஆகும்.
பாபர்மசூதி இடிக்கப்பட்ட போதும், சேதுகால்வாய்பணி
இடிக்கப்படாமல் இருக்க தடை உத்தரவு பெறுவதற்கும்
நம்பிக்கையே உதவி செய்திருக்கிறது. இயற்கை நிகழ்வு-
களைக் கேள்விகளோடு அμகிய காரணத்தால்தான்
அறிவியல் பிறந்தது. அது சமூக நிகழ்வுகளின் மீதும்
தொகுக்கப்பட்டால்தான் சமூக அறிவியல் வளர முடியும்.

No comments:

Post a Comment