Tamil books

Thursday 21 April 2011

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும்

பேரா. வீ. அரசு


வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் மனிதர்கள் வாழும் சூழலில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது உருவாகி வளர்ந்து வருவது இயல்பு. இயற்கை நிகழ்வுகளை எதிர்கொண்ட மனிதர்கள் அதன் மூலம், புதிய புதிய வளங்களை உருவாக்கிக் கொள்ளவும் கற்றுக் கொண்-டார்கள். பிரபஞ்சத்தின் அடிப்படைகளான வான், காற்று, நீர், நிலம், நெருப்பு ஆகிய பிற மூலங்களைக் கொண்டு தங்களது இடைவிடாத உழைப்பால் புதியன உருவாக்குதலை வழக்க-மாகக் கொண்டுள்ளனர். இவ்வகையில் உருவாக்-கப்பட்ட புதிய புதிய கருவிகள் மனிதர்கள் பல்வேறு வகைகளில் செயல்படுவதற்கான அடிப்-படைகளை உருவாக்கித் தந்தன. இடம்பெயர்-தலிலிருந்து ஓரிடத்தில் தங்குதல் நிகழ்ந்தபோது, ஒரு குழுவிற்கும் இன்னொரு குழுவிற்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுதல் என்பது ஏற்பட்டது. இவ்வகையான தன்மைகள் மனித சமூகத்தை உருவாக்கியது. இந்த நீண்ட நெடிய வரலாற்றில் மனிதர்கள் தங்களுக்குள் உறவு கொள்ளுதல் அல்லது தொடர்பு கொள்ளுதல் என்னும் செயல்பாடு மிக முக்கியமானது. இதற்கென உடல் மொழிகள், ஒலிகள், புள்ளி/கோடு சார்ந்த குறியீடுகள், இதன் தொடர்ச்சியாக உருவான எழுத்து வடிவங்கள் ஆகியன உருப்பெற்றன. பிரபஞ்சத்தின் முதன்மையான பகுதியாக நம்மால் அறியப்படும் பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு வகை இனக்குழுக்களும் ஒவ்வொரு வகையான ஒலியையும் எழுத்து வடிவங்களையும் கொண்டிருந்தன என்பது மனிதத் தொடர்பில் (பிuனீணீஸீ சிஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீ) முதல் கட்டமாகும்.  இத்தொடர்பை அவர்கள் வளர்த்தெடுத்த  வரலாறு மிக நீண்டது. இதில் தமது எழுத்துக் குறியீடுகளைப் பல்வேறு பொருள்களில் பதிவு செய்த செயல் முக்கிய-மானது. அப்படியான பதிவுகளில் ஒன்றாகவே அச்சுக்கருவி மனித சமூகத்திற்கு கிடைத்தது. உலகின் பல்வேறு தேசிய இனக்குழுக்கள் இக்கருவியை எப்படியெல்லாம் பயன்படுத்தி, குறிப்பிட்ட தேசிய இனத்தின் தொடர்புத் தன்மைகளை வளர்த்துக் கொண்டமை குறித்த வரலாற்றைப் பதிவு செய்வது, இன்றைய சூழலில் மிக முக்கியமானதாகும். ஏனெனில் சுமார் ஐநூறு ஆண்டுகள் செயல்பட்ட அக்கருவி இருபத்தோராம் நூற்றாண்டில் புதிய மின்மயக் கருவிகளால் தனது தன்மையை இழக்கத் தொடங்கியுள்ளது. இத்தருணத்தில் கடந்த ஐநூறு ஆண்டுகளில் அக்கருவி ஒவ்வொரு தேசிய இனச் சமூகத்திலும் செயல்பட்ட வரலாறு மற்றும் அதன் விளைவுகளை நாம் அச்சுப் பண்பாடு என்ற சொல்லில் குறிக்கலாம். இப்-பின்புலத்தில் தமிழ் ‘அச்சுப் பண்பாட்டு’ வரலாற்-றைப் பதிவு செய்யும் கடமை நமக்கு உண்டு. ஆனால் தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றின் விரிவான பதிவுகளை இக்கட்டுரையில் மேற்-கொள்வது இயலாது. பல்வேறு போக்குகளை நாம் கோடிட்டு இனம் காட்டலாம்.
உலகின் மிகச்சிறந்த ஆவணக் கூடமாக அமைந்திருக்-கும் இலண்டன் பிரித்தானிய அருங்காட்சியக நூலகம், நூலடைவு ஒன்றை வெளியிட்-டுள்ளது. கிரகாம் ஷா (நிக்ஷீணீலீணீனீ ஷிலீணீஷ்) அவர்களால் தொகுக்-கப்பட்டு வெளிவந்துள்ள ஜிலீமீ ஷிஷீutலீ கிsவீணீ ணீஸீபீ ஙிuக்ஷீனீணீ: ஸிமீtக்ஷீஷீsஜீமீநீtவீஸ்மீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் (1987) என்ற ஆவணம் தென்னாசிய மற்றும் பர்மாவில் (மியான்மர்) அச்சில் வெளிவந்தவைகளைக் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. மூன்று நிலைகளில் அப்-பதிவைச் செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார். அவை, 1556_1800 ஒருநிலை, 1801_1867 இரண்டாம் நிலை, 1868_1900 மூன்றாம் நிலை. ஆனால் நமக்கு இப்பொழுது கிடைப்பது முதல் நிலையிலுள்ள பதிவு மட்டுமே. இப்பதிவையும் இதனைப் போன்ற வேறுபல பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டும் தமிழ் அச்சுப் பண்பாட்டை கோடிட்டுக் காட்ட முயலலாம். பேராசிரியர் கிரகாம் ஷா பாகுபடுத்திய ஆண்டு ஒழுங்கில் தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றைக் கட்ட-மைக்க இயலும். ஏனெனில் அவர் 1987வரை வெளிவந்த அனைத்து ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டே இத்தொகுப்பை உருவாக்கியுள்ளார். அவரது மூன்று நிலையில் அமைந்த தொகுதிகளும் வெளிவந்திருக்கு-மேயானால் நமது அச்சுப் பண்பாட்டை மேலும் துல்லியமாக வரையறுத்துக் கொள்ளமுடியும். அவரால் உருவாக்கப்பட்டுள்ள  முதல் தொகுதி (1556_1800) மட்டுமே வெளிவந்துள்ளது. அந்த ஆவணத்தைக் கொண்டு, அந்தக் காலத்தின் தமிழ் அச்சுப் பண்பாட்டை நாம் வரையறை செய்ய முடியும். கிரகாம்ஷா குறிப்பிடும் இரண்டாம் நிலையில் உள்ள காலம் குறித்து, வெளிவந்துள்ள வேறுபல ஆவணங்களைக் கொண்டு 1801_1867 வரையிலான அச்சுப் பண்பாட்டையும் மற்றும் 1868_1900 வரையிலான அச்சுப் பண்பாட்டையும் கட்டமைக்க முடியும். இம்மூன்று நிலைப்பட்ட தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் முதன்மையாக செயல்பட்ட அச்சுச் செயல்பாடுகள் பின்வருவன.
_    பதினாறாவது நூற்றாண்டு தொடக்கம் அன்றைய இந்திய நிலப்பகுதிகளைத் தம் அதிகாரத்தில் கொண்டுவந்த பிரித்தானிய வணிகக் குழுக்கள், பின்னர் ஆளும் அதிகார மையங்களாக உருப்பெற்றனர். இத்தருணத்-தில், அவர்கள் தம்முடைய ஆட்சி அதிகாரச் செயல்பாடு-களுக்கான தொடர்பு ஊடக-மாக அச்சுக் கருவியைப் பயன்படுத்தினார்கள்.  பல்வேறு அறிக்கைகள், கெசட்டியர் எனப்படும் அறிவிப்புகள், அவ்வப்போது அவர்கள் உருவாக்கும் சட்ட வரை-யறைகள், விதிமுறைகள் ஆகிய பிறவற்றை அச்சிட்டு வெளிப்-படுத்தினார்கள். இம்முறையில்-தான் அச்சுக்கருவி அந்த காலத்தில் செயல்பட்டது. அதில் அவர்கள் முதன்மை-யாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைப் பயன்படுத்தினார்கள். வட்டார மொழிகளை இவ்வகையான செயல்பாடு-களுக்கு பின்னர்  பயன்படுத்தினார்கள்.
_ ஐரோப்பாவிலிருந்து கிறித்தவச் சமயப் பரப்பலுக்கான சபைகளும் (விவீssவீஷீஸீs) இங்கு வரத் தொடங்கின; தனிப்பட்ட பயணிகளும் வந்தனர். இவர்கள் அச்சு ஊடகத்தை சிறப்பாகப் பயன்படுத்தியவர்கள் என்று சொல்ல முடியும். தொடக்கத்தில் பைபிள் தொடர்பான மொழிபெயர்ப்புகளையும் கிறித்தவ சமயப் பரப்பலுக்கான இசை வழிப்-பட்ட பாடல்கள் சார்ந்த பரப்புரைகளையும் அச்சிட்டார்கள். இவர்களே பின்னர் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய தருணத்தில், மிக அதிகமான பாடநூல்களை அச்சிட்டவர்கள். மேலும் தாங்கள், குறிப்பிட்ட வட்டார மொழியைக் கற்றுக் கொள்வதற்கான பல்வேறு வகைப்பட்ட கையேடுகளையும் அச்சிட்டுக் கொண்டார்கள்.
_    1835 வரை மேற்குறித்த அடிப்படையிலேயே தமிழ் அச்சுப் பண்பாடு உருவாகி வளர்ந்து வந்தது. 1835_1867, 1868_1900 ஆகிய காலச்-சூழல்களில் உருவான அச்சுப் பண்பாடு மிக முக்கியமானது. உண்மையில் இக்காலங்களில் தான் தமிழில் அச்சுப்பண்பாடு என்பது உருப்பெற்று வளர்ந்து வந்தது என்று சொல்ல முடியும்.
_    மேற்குறித்த மூன்று வேறுபட்ட சூழலில் உருவான இதழ்கள், குறுவெளியீடுகள், குறு-அறிக்கைகள், கையறிக்கைகள் (றிலீணீனீஜீறீமீt), விளம்பரங்கள் ஆகிய பல பதிவுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யவேண்டிய தேவை-யுண்டு. இக்கட்டுரையில் அம்முயற்சி மேற்-கொள்ளப்படவில்லை.
_    மேலும் 1843 இல் சென்னையில் முதன்முதல் பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டது. 1857இல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இவ்வகையில் உருவான கல்வி நிறுவனங்கள் சார்ந்து உருப்பெற்ற பாடநூல்கள் (ஜிமீஜ்t ஙிஷீஷீளீ), கையேடுகள் (பிணீஸீபீ ஙிஷீஷீளீ) ஆகிய பிற குறித்து விரிவாக பதிவு செய்ய வேண்டும். அம்முயற்சியும் இக்கட்டுரையில் மேற்கொள்-ளப்-படவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புத்தக உருவாக்கம் சார்ந்த அச்சுப் பண்பாடு கவனத்தில் கொள்ளப்படுகிறது. புத்தக உருவாக்கம் என்பது குறிப்பிட்ட தேசிய இனத்தின் புலமைச் செயல்-பாடாகும். நாம் குறிப்பிடும் இக்காலத்தில் உருவான புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் புலமைச் செயல்-பாட்டை மதிப்பீடு செய்ய முடியும். தமிழ்ப் புலமை மரபின் வரலாறு என்பதற்கும் தமிழ்ப் புத்தக உருவாக்கத்திற்கும் மிக நெருக்கமான உறவுண்டு. 1800_1835 காலத்தில் உருவான தமிழ்ப் புத்தக உருவாக்கம் குறித்த உரையாடலைப் பின்-காணும் புள்ளிகளில் நாம் குறித்துக் காட்டலாம்.
பிரித்தானியர்கள் அன்றைய இந்திய நிலப்பரப்பைத் தங்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்த சூழலில் பல்வகையான புலமைச் செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். கி.பி. 1600இல் புரூனோ உலகம் சுற்றுகிறது என்று சொன்ன கூற்றிற்காகக் கொலை செய்யப்பட்டார். வெறிபிடித்த கிறித்தவ மடாலயங்கள் ஐரோப்பாவை அதன் நவீன வளர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லாமல் பாரம்பரிய மதக்கருத்துகளில் இருத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. அதற்கு எதிரான புத்தொளி அமைப்புகள் ஐரோப்பாவில் பல வடிவங்களில் உருவாயின.
தங்களது எதிர்ப்பை ஓவியங்களாக உருவாக்-கிய கலைஞர்கள் பலர். தாங்கள் கண்டுபிடித்த புதிய புதிய கருவிகளின் மூலமாக கிறித்தவ மடாலயத்தை அதிர்ச்சிக் குள்ளாக்கியவர்கள் பலர். இவ்வகையான புத்தொளிச் செயல்பாடு-களில் மனித உரிமை குறித்த செய்திகள் புதிய பரிமாணங்களில் எழுச்சியோடு பேசப்பட்டன. பிரெஞ்சுப் புரட்சி, தொழிற்புரட்சி, அக்டோபர் புரட்சி என இப்படியான வரலாறுகள் நாம் அறிந்ததே. ஐரோப்பாவில் உருவான இவ்வகை-யான செயல்பாடுகள் இலண்டன் மாநகரத்தை இருப்பிடமாகச் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் உருப்பெற பின்புலமாக அமைந்தன. மொழி (றிலீவீறீஷீறீஷீரீஹ்) குறித்தும் மனித சமூக வரலாறு (கிஸீtலீக்ஷீஷீஜீறீஷீரீஹ்) குறித்தும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்கள் (ஸிணீநீமீ -வீபீமீஸீtவீயீஹ்) குறித்தும் புலமைப் பாரம்பரியம் சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. புரூனோ, காரல்மார்க்ஸ், டார்வின் ஆகிய பிற மனிதர்கள் உலகத்தில் இதுவரை பேசப்பட்ட நியதிகளை தலைக்குப்புற மாற்றிப் பேசத் தொடங்கினர். இந்தப் பின்புலத்தில் இலண்டன் மாநகரில் கிதீஷீக்ஷீரீவீஸீ  ஜீக்ஷீஷீtமீநீtவீஷீஸீ sஷீநீவீமீtஹ், ணிtலீஸீஷீறீஷீரீவீநீணீறீ ஷிஷீநீவீமீtஹ் ஷீயீ லிஷீஸீபீஷீஸீ, ஸிஷீஹ்ணீறீ கிஸீtலீக்ஷீஷீஜீஷீறீஷீரீவீநீணீறீ ஷிஷீநீவீமீtஹ் முதலான அமைப்புகள் உருவாயின.
இலண்டனில் உருவான இவ்வமைப்புகளின் நீட்சியாக கல்கத்தா நகரில் 1784 இல் ஆசியவியல் ஆய்வுக்கழகம் (ஜிலீமீ கிsவீணீtவீநீ ஷிஷீநீவீமீtஹ்)  உருவாக்கப்-பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்கத்தா நகரில் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஆட்சி செய்ய வரும் அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்வி நிறுவனமும் உருவாக்கப்பட்டது. (விரிவுக்கு பார்க்க பேரா. தாமஸ் ஆர்.டிரவுட்மன் _ --லிணீஸீரீuணீரீமீs ணீஸீபீ ழிணீtவீஷீஸீs; ஜிலீமீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ றிக்ஷீஷீஷீயீ வீஸீ சிஷீறீஷீஸீவீணீறீ விணீபீக்ஷீணீs). வில்லியம் ஜோன்ஸ் (கீவீறீறீவீணீனீ யிஷீஸீமீs) உள்ளிட்ட பலர் ஆசியவியல் ஆய்வுக்-கழகத்தின் மூலமாக இந்திய மொழிகள், இந்தியப் பண்பாடு ஆகியன குறித்து உரையாடல்களை மேற்கொண்டனர். காசுகள், தொல்லியல், அகழ்-வாய்வுகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மொழி ஆய்வுகள் ஆகிய பல துறைகளில் கவனம் செலுத்தினர். கல்கத்தாவில் நிகழ்ந்த இச்செயல்பாட்டை ஒட்டி சென்னையில் இரு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவை சென்னைக் கல்விச் சங்கம் (1812) புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி. இந்நிறுவனங்கள் தமிழ்ப் புத்தக உருவாக்கப் பண்பாட்டைத் தொடங்கி வைத்தன என்று கூறலாம்.
சென்னைக் கல்விச் சங்கம் உருவாக்கிய புத்தகப் பண்பாடு என்பது சென்னை கீழ்த்திசைப் பள்ளி (விணீபீக்ஷீணீs ஷிநீலீஷீஷீறீ ஷீயீ ளிக்ஷீவீமீஸீtணீறீவீsனீ) என்னும் கருத்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது. சென்னைக் கல்விச் சங்கத்தை உருவாக்கிய எஃப்.டபுள்யூ. எல்லீஸ் (1777_1819) தமிழில் உருவாக்கிய புத்தகங்கள் மூலம் சென்னை கீழ்த்திசையியல் பள்ளிக்கான கால்கோளிட்டார் என்று கூறமுடியும். சென்னைக் கல்விச் சங்கத்தின் நூல் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இதனை விவாதிக்க வேண்டும். பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் கொடுத்துள்ள தகவல்களைத் தமிழ்ச் சூழலின் வரலாற்றோடு இணைப்பதன் மூலம் அதனைச் சாத்தியப்படுத்-தலாம். சென்னைக் கல்விச் சங்கத்தில் திருச்-சிற்றம்பல தேசிகர், தாண்டவராய முதலியார், வேங்கடாசல முதலியார் ஆகிய பிறர் செயல்-பட்ட பின்புலங்களை விரிவான உரையாடலுக்கு உட்படுத்துவதன் மூலம் இதனைச் சாத்தியப்-படுத்தலாம். சென்னைக் கல்விச் சங்கம் மட்டுமே இவ்வகைச் செயல்களில் ஈடுபட முடிந்-திருக்கிறது. ஏனெனில் பிரித்தானியர் வைத்திருந்த அச்சுத் தடைச் சட்டம் இதற்குக் காரணமாகும். இலக்கணப்படிப்பு, தமிழ் உரைநடை உருவாக்கம், தமிழில் மொழிபெயர்ப்பு இன்னபிற செயல்-பாடுகள் எவ்வகையில் ‘சென்னைக் கீழ்த்திசைப் பள்ளி’ என்னும் கருத்தாக்கத்தை வலுப்படுத்-தியது என்பது குறித்தும் அக்காலத்திய தமிழ்ப்-புத்தக உருவாக்கப்பண்பாட்டின் அடையாளமாக அத்தன்மை அமைந்தது குறித்தும் நாம் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும்.
திருச்சிற்றம்பல தேசிகர் எழுதிய இலக்கணச் சுருக்கம் (1813) மற்றும் இராமாயண உத்தர-காண்டம் (1815) ஆகிய நூல்களும் தாண்டவராய முதலியார் தொகுத்த கதாமஞ்சரி (1826) மொழி பெயர்த்த பஞ்சதந்திரக்கதை (1826) மற்றும் இலக்கண வினாவிடை (1828) ஆகியநூல்களும் குறிப்பிடத்தக்கவை. ஹென்றி ஆர்ட்னெஸ் என்பவருடன் இணைந்து வேங்கடாசல முதலியார் உருவாக்கிய பிரித்தானியர்களுக்கான தமிழ் ஹரிச்சுவடி (1827) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. சென்னைக் கீழ்த்திசைப் பள்ளி என்ற கருத்தாக்கத்தைக் கட்டமைக்க சென்னைக் கல்விச் சங்கச் செயல்பாடுகள் -_ குறிப்பாக அவை வெளியிட்ட புத்தகங்கள் _ குறித்த விரிவான உரையாடலை நாம் இனிமேல்தான் மேற்-கொள்ள வேண்டும். அதற்கான அடிப்படையை பேராசிரியர் தாமஸ் ட்ரவுட்மன் உருவாக்கித் தந்துள்ளார்.
18-00_1835க்கு இடைப்பட்ட காலமென்பது தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் சென்னை கீழ்த்திசைப் பள்ளி என்னும் கருத்தாக்கத்தை உருவாக்கியதைக் தொடர்ந்து 1835இல் கொண்டு வரப்பட்ட அச்சுத் தடைச்சட்ட நீக்கம் சுதேசிகள் அச்சுத் துறையில் செயல்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தது. சார்லஸ் மெட்காஃப் (சிலீணீக்ஷீறீமீs விமீtநீணீறீயீமீ) என்பவரால் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் வட்டார மொழிகளில் புத்தக உருவாக்கம் வேகமாகச் செயல்பட வழி கண்டது. 1867 இல் தமிழ் நூல் பதிவு முறைமை (ஙிஷீஷீளீ ஸிமீரீவீstக்ஷீணீtவீஷீஸீ-ஜ்ஜ்ஸ்-ணீநீt) அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது.  இவ்விடைப்பட்ட காலங்களில் வந்த நூல்கள் பற்றிய பதிவுகள் நமக்குக் கிடைக்-கின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் உருவான புலமைப் பாரம்பரியத்திற்கும் அச்சுநூல் உருவாக்கத்திற்குமான உறவை ஊகித்தறியலாம். (இக்காலங்களில் மிகுதியாக அச்சிடப்பட்ட பாடநூல்கள் மற்றும் சமய உரை-யாடல்கள் குறித்த அறிக்கைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.) 1822 இல் பிறந்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் அதன் அடுத்த ஆண்டில் பிறந்த சி. இராமலிங்கமும் (1823_1874) தமிழ்ச் சமூகப் பண்பாட்டு உருவாக்கத்தில் இடையீடுகளைச் செய்தவர்கள். ‘தமிழ் அச்சுப் புத்தக உருவாக்கப் பண்பாடு’ என்ற இக்காலத்திய கருத்தாக்கத்திற்கு ஆறுமுகநாவலரை (1822_1879) ஓர் அடையாளமாகக் கொள்ளமுடியும். ஐரோப்-பிய பாதிரிமார்களோடும் அரசு நிர்வாகிக-ளோடும் நெருக்கமாக உறவு கொண்டிருந்தவர் இவர். யாழ்ப்பாணச் சமூகம் என்பது ஐரோப்பிய கல்வி முறையை தென் ஆசியப் பகுதியிலேயே முதன்முதல் உள்வாங்கிய சமூகமாகும். இந்தப் பின்புலத்தோடு உருவான நாவலர் கிறித்தவ சமயப் பரப்புரைகளுக்கு மாற்றாகத் தமிழ் சைவம் தொடர்பான நூல்களை அச்சிடுவதற்காக அச்சகத்தை உருவாக்கியவர். 1835_1867க்கு இடைப்பட்ட காலங்களில் வெளியான நூல்கள் குறித்த நூல் பட்டியல்கள் தரும் தரவுகள் மற்றும் தற்போது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள நூல்கள் மற்றும் நுண்படச் சுருள்கள் ஆகிய தரவுகளைக் கொண்டும் தமிழ் அச்சு நூல் உருவாக்கத்தைப் பின்வருமாறு நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.
கிறித்தவ சமய பரப்புதல் நடைபெற்ற சூழலில் தமிழில் பட்டினத்தார் (10ஆம் நூ.) திருமூலர் (10ஆம் நூ.) ஒளவையார், அருணகிரிநாதர் (15ஆம் நூ.) குமரகுருபரர் (17ஆம் நூ.) தாயுமானவர் (18ஆம் நூ.) ஆகியோரின் பாடல்கள் பலப்பல வடிவங்களில் வெகுசன நுகர்வோடு கூடிய தன்மையில் அச்சிடப்பட்டிருப்பதை அறியலாம். தமிழில் உருவான மூன்றாம் பக்தியுகம் (பார்க்க: பேரா. கா. சிவத்தம்பி; இரண்டாம் பக்தியுகம்) என்று சொல்லத்தக்க அளவுக்கு இக்காலத்தில் பக்தி நூல்கள் அச்சா-கின. (இதனை விளங்கிக்கொள்ள நாவலரது ‘பிரசித்த பத்திரிகை’  பின்னிணைப்பைப் பார்க்கவும்) நாவலர் சைவப் புலமைப் பாரம்பரியத்தை அச்சுவழி உருவாக்கியதன் விளைவுகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் காண முடியும். சைவப் புலமையாளர்கள் தமிழ்ச் சூழலில் மிகுதியாக செயல்பட்ட காலம் இது. 1850_1950 என்ற காலங்களில் தமிழ்ச் சூழலில் மிக விரிவான உரையாடலுக்கு உட்பட்டதும் மிக அதிகமாக அச்சுப் புத்தகங்கள், மற்றும் இதழ்களைக் கொண்டுவந்ததும் சைவப் புலமைப் பாரம்பரியம். நாவலர் கால அச்சுப் புத்தக உருவாக்கப் பண்பாட்டின் விளைவாக இதனைப் புரிந்து-கொள்ள வேண்டும். இக்காலங்களில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி என்று பல இடங்களிலும் கிறித்தவ சமயப் பரப்பலுக்கான வெளியீடுகளும் வெளிவந்தன என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். (இது குறித்த விவரங்களை அறிய ஜான் மர்டாக் நூற்பட்டி-யலைப் பார்க்கவும்.)
1800_1835 காலங்களில் ஐரோப்பிய சமூகத்தில் உருவான புத்தொளியை உள்வாங்கி இந்தியாவில் உருவான சென்னைக் கல்விச் சங்கம் போன்ற அமைப்புகள் தமிழ்ப் புத்தக உருவாக்கத்தில் புதிய புலமைப் பாரம்பரியத்தை உருவாக்கியதை நாம் அறிவோம். ஆனால் 1835_1867க்கு இடைப்பட்ட காலங்களில் சமய உரையாடல்கள் சார்ந்த புத்தக உருவாக்கமே முதன்மைப்பட்டிருப்பது, சென்னை-யில் உருவான கீழ்த்திசைப் பள்ளியின் தொடர்ச்-சியாக அமையவில்லை. மாறாக, சமயம் என்ற பழம்சரக்கு புதிய ஊடகத்தில் புற்றீசலென உருவான வரலாற்றைப் பார்க்கிறோம். பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை முதலான சைவ சமய நூல்களுக்கு உரை எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் ஆகியவற்றைச் செய்த நாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தாமல் போனது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி-யாகும். இதனை நாவலர் செய்த வரலாற்றுப் பிழை என்றே மதிப்பிடலாம். 1850களில் தம்மிட-மிருந்த சங்க இலக்கியச் சுவடிகளைத் தமிழ் சைவப் பாரம்பரியத்தில் உருவாகி வந்த நாவலர் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்திருப்பாரே-யானால், பின்னர் ‘தமிழ்த் தாத்தா’ உருவாக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. தமிழ்த் தாத்தாவிற்கு வாய்ப்பளித்து, ஆறுமுக நாவலர் கண்ணை மறைத்தது மதம். மதம் எல்லாக் காலங்களிலும் மதம் பிடித்தே செயல்படுவது என்பது வரலாற்றின் முடிவு.
மேற்குறித்த பின்புலத்தில் தமிழ்நூல் உருவாக்கப் புலமைப் பாரம்பரியத்தில் ஒரு வேறுபட்ட மனிதராக கால்டுவெல் (1814_1891) செயல்பட்டிருக்கிறார் என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
1800_1835, 1836_1867 ஆகிய காலங்களில் வெளிவந்த புத்தக வெளியீடு குறித்த விவரங்கள் முழுமையானவை என்று ஒப்பீட்டளவில் சொல்வதற்கில்லை. ஆனால் 1867இல் அரசாங்கத்-தால் உருவாக்கப்பட்ட நூல் பதிவுச் சட்டம், புத்தகங்கள் பற்றிய விவரங்களை நமக்கு வழங்கு-வதாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். ‘தமிழ் நூல் விவர அட்டவணை’ ஏழு தொகுதிகளில் 28 பகுதிகளாக (1867_1968) உள்ள தரவுகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதிகால தமிழ்நூல் உருவாக்-கப் பண்பாட்டை பற்றிப் பேசுவதற்கு அரிய ஆவணங்களாக உள்ளன. இத்தொகுதிகள் வழி தமிழ்நூல் உருவாக்கத்தை மதிப்பிட முயலும் நமக்கு, கீழ்க்காணும் தன்மைகள் முதன்மைப்-படுகின்றன.
_    தமிழகம் முழுவதும் பல்வேறு சங்கங்கள் உருப்பெற்று தமிழ்நூல் வெளியீட்டில் ஈடுபட்டதை அறிகிறோம். தொண்டை மண்டலக் கல்விச் சங்கம், சென்னைத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம் என்று பல எடுத்துக்காட்டுக்களைக் கூற முடிகிறது.
_    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எல்லீசைத் தொடர்ந்து கால்டுவெல் வளர்த்தெடுத்த திராவிடக் கருத்தியல், மதத்தை முதன்மைப்படுத்தாத மரபு  ஒன்றை உருவாக்கியது. அது தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் நூல்கள் மற்றும் இதழ்களைக் கொண்டுவந்ததை அறிகிறோம்.
_    மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826_1889) முன்னெடுத்த மதம் சார்ந்த மனிதநேய அடிப்படையில் புனைகதைகளும் நூல்களும் உருவாயின. இராமலிங்கரின் நண்பரான வேதநாயகர் அவர் பேசிய ‘சமரச சன்மார்க்கத்தை’ தன் ஆக்கங்களின் ஊடாகக் கொண்டு வந்தார். இக்காலத்-தில்தான்        சி. இராமலிங்கரின் ஆக்கங்கள் அனைத்தும் அச்சு வடிவம் பெற்றன. வேதநாயகர் மரபை செழுமைப்படுத்திய அ. மாதவையாவும் (1871_1925) பிற்காலத்-தில் செயல்பட்டார். இவ்வகையில் சமயம் என்ற ஒரே நோக்கத்தை முதன்மைப்படுத்-தாத மனித நேயமிக்க ஆக்கங்கள் இக்-காலங்களில்தான் அச்சு வடிவம் பெற்றன.
_    சைவப்புலமைப் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க புலமையாளரான மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை (1855_1897) உருவாக்கிய ‘நூற்றொகை’ போன்ற நூல்கள் தமிழ்ப் புத்தக உருவாக்கத்தின் பல்பரிமாணங்களைப் புரிந்து கொள்ள உதவும்.
_    சி.வை.தா., (1832_1901) உ.வே.சா., (1855-_1942) ஆகிய பெரும் புலமையாளர்கள் தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளத்தை கண்டெடுத்த புத்தக உருவாக்கச் சூழல் இக்காலத்தில் தான் நிகழ்ந்தது.
மேற்குறித்த பல்வேறு தன்மைகள் குறித்து அண்மைக் காலங்களில் விரிவாக பேசப்படுவதை நான் அறிவேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் செயல்படும்  ஆய்வா-ளர்கள் இத்துறையில் முனைப்பாக செயல்படு-கின்றனர். (இம்மலரில் உள்ள சில கட்டுரைகளே அதற்குச் சான்று.) எனவே அந்த உரையாட-லுக்குள் செல்லும் தேவை ஏற்படவில்லை.
தமிழ்ப் புத்தக உருவாக்க புலமைப் பாரம்பரி-யம் குறித்து நாம் விவாதித்த பரிமாணங்களில் இருந்து தமிழ் இதழ்கள் குறித்த பரிமாணங்கள் முற்றிலும் மாறுபட்டவை. தமிழ்ச் சமூகத்தின் இயங்கு தளத்தைத் தமிழ்ப்புத்தக உருவாக்கப் பண்பாட்டிலிருந்து கூறுவதைவிட தமிழ் இதழ்கள் உருவாக்கப் பண்பாட்டில் மிகத்

No comments:

Post a Comment