Tamil books

Wednesday 20 April 2011

தமிழ் வாசிப்பு சிலப்பதிகாரம்

 ப. சரவணன்


சிலப்பதிகாரம் பாரதம் முழுவதற்குமான பொதுச்-
சொத்து’ என்றான் பாரதி. சிலம்பு தேசிய இலக்கியமோ
இல்லையோ, ஆனால் ‘தனித்தமிழ் பண்பாட்டைப் படம்
பிடிக்கும் வரலாற்று நூல்’ என்று பேரறிஞர் அண்ணா
அன்று முன்மொழிந்ததையே நாம் என்றும் வழி
மொழியலாம்.
மதுரையை எரியூட்டிய பின் தன் காதல் கொழுநன்
கோவலனோடு கண்ணகி விண்μலகம் சென்ற காட்சி-
யைக் கண்ட குன்றக்குறவர்கள், மலைவளம் காண வந்த
சேரன் செங்குட்டுவனிடம் அதனைக் கூறினர்.
அப்பொழுது அவனுடனிருந்த தண்டமிழாசான் சாத்தனார்,
கோவலன் வாழ்வில் சிலம்பு காரணமாக நடந்த துயரச்-
செய்திகளை எல்லாம் கூற, இளங்கோ அதனைக் கேட்டுக்
கொண்டிருந்தார். ‘மனித வாழ்க்கையை இயக்கும் முப்பெரும்
உண்மைகளைக் கொண்ட ஒப்பற்ற கதை இது’ என உளம்
மகிழ்ந்து, ‘சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும்
யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’(பதிகம்) என்றார். இதனூடா
கச் சிதறிக் கிடந்த தமிழகத்தையும் அவர் சேர்த்து
வைத்தார். ஆம். தமிழ்நாட்டு மூவேந்தரைப் பற்றியும், அவர்-
களது ஆட்சியின் கீழிருந்த நாடு நகரங்களைப் பற்றியும்
தமிழ்க்காப்பியம் எதுவும் போற்றவில்லை. சிலம்பு மட்டுமே
அப்பணியைச் செய்தது. புகார், மதுரை, வஞ்சி எனத் தலைநகரங்களின்
பெயரையே காண்டங்களின் பெயராக அது
அமைத்தது. அந்த மூன்று காண்டங்களை 30 காதைகளா
கப் பகுத்து வகை தொகைப்படுத்தி 5001 அடிகளில்
(பதிகம், வெண்பாக்கள், உரைபெறுகட்டுரை முதலியன
நீங்கலாக) உரையிலிடப்பட்ட பாட்டுடைச் செய்யுளாக
கிபி 2ஆம் நூற்றாண்டிலேயே யாத்துத் தந்திருக்கிறார்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனும் சேரன்
செங்குட்டுவனின் தம்பியுமாகிய இளங்கோ.
ஞாயிறு, திங்கள், மழை என இயற்கை வருணனையோடு
மங்கல வாழ்த்துப் பாடி, கண்ணகியோடு மனையறம்பட்டு
பின் மாதவியால் மனையிழந்த கோவலன் கானல் வரிக்குப்
பின் மீண்டும் கண்ணகியைக் கைப்பிடித்து கவுந்தியடி-
களோடு புகாரை விட்டு வெளியேறுவதை 10 காதைகளில்
இன்பியல் சுவையோடு பேசுகிறது புகார் காண்டம்.
உறையூரிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டு வேட்டுவவரி
கண்டு, மாதரி என்னும் இடைக்குலப் பெண்ணிடம்
அடைக்கலமடைந்து, ஊழ்வினையால் கொலைக்களப்-படு-
கிறான் கோவலன். குரவைக்கூத்தின் இறுதியில் செய்தியறிந்
த கண்ணகி பாண்டியரிடம் வழக்குரைத்து
மதுரையை எரியூட்டியதை 13 காதைகளில் அவலச்சுவை-
யோடு பேசுகிறது மதுரைக்காண்டம்.
பத்தினித்தெய்வத்திற்குப் படிவம் சமைப்பதற்கு
இமயத்திலிருந்து கல் கொணரச் சேரன் செங்குட்டுவன்
புறப்பட்டதும் கங்கைக்கரையில் ‘குயிலாலுவம்’
என்னுமிடத்தில் கனகவிசயர் என்னும் ஆரிய மன்னனைப்
புறங்கண்டதும், பின் வஞ்சிமா நகர்க்குப் பெயர்ந்ததும்,
படிவம் நிறுவியதும், பத்தினித் தெய்வம் வரம் அருளியதும்
ஆகிய செய்திகளை 7 காதைகளில் பெருமிதச்சுவையுடன்
பேசுகிறது வஞ்சிக்காண்டம்.
மூன்று காண்டங்களிலும் மதுரைக்காண்டமே சிலம்பின்
உயிர்ப்பகுதியாக உள்ளது. அதில் மண்டிக் கிடக்கும்
அவலச்சுவையே சிலம்பை உயிரோட்டமுள்ளதாக
வைத்துள்ளது. முதன்முதலில் கதாநாயகன் கொலையுண்ட
நிகழ்ச்சியைக் கதையமைப்பில் கொண்ட காப்பியம்
சிலம்புதான். இத்துடன் இலக்கிய இன்பம் அனைத்தையும்
தன்னுள்கொண்டுள்ள சிலம்பு தனது கதையை வேறு
நாட்டிலிருந்தோ வேறு மொழியிலிருந்தோ கடன்
பெறவில்லை. அது தமிழனுக்கே உரிய தனித்த அடையா
ளம். அதனால்தான் முடிமக்கள்காப்பியமாக இல்லாமல்
குடிமக்கள்காப்பியமாகவே அது இன்றும் மிளிர்கிறது.
தமிழனின் தனிப்பெரும் சொத்தான இச்சிலப்பதிகா
ரத்தை முதன்முதலில் அச்சுவாகனம் ஏற்றிய பெருமை
தி.ஈ.ஸ்ரீநிவாசராகவாச்சாரியார், அவர்களையேச் சாரும்.
1872_ல் சிலம்பின் முதல் எட்டு காதைகளை அவர் வெளியிட்-
டார். (வேறு சில காதைகளுடன் இதன் இரண்டாம்
பதிப்பு 1876_இல் வெளிவந்தது). அடுத்து 1880_இல் கானல்
வரிக்குத் தானே உரை எழுதி அடியார்க்கு நல்லார்
உரையுடன் புகார்க்காண்டத்தை மட்டும் வெளியிட்டார்.
தி.க. சுப்பராய செட்டியார். அதன் பின்பே உ.வே.சா.
அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை இரண்டையும்
சேர்த்து அதிசிரத்தையுடன் 1892_இல் ஒரு பதிப்பை
வெளியிட்டார். இவர்களைத் தொடர்ந்து ந.மு.வே.
நாட்டார் (1942), வ.சுப.மாணிக்கம் (1958), பெருமழைப்புலவர்
(1968) எனப் பலர் சிலம்பிற்குப் பதிப்பும் உரையும் கண்டனர்.
சிலம்பிற்கான இலக்கியப் பணி ஒருபுறமிருக்க அதை
இயக்கத்திற்காகக் கையில் எடுத்தவர்களும் உண்டு. அதில்
குறிப்பிடத்தக்கவர் ம.பொ.சி அவர்கள். 1946_இல்
தொடங்கிய தமிழரசு கட்சியினூடே அவர் இதைச்
செய்தார். ‘இன உணர்வை வளர்த்து தமிழ் வழங்கும்
நிலப்பகுதியை உண்மையான தமிழ்நாடாக மாற்றுவதற்கும்
சிலப்பதிகாரம் ஒன்றே சிறந்த கருவி’ என மொழி வழி
மாநிலத்தின் போது அவர் இதை முன்மொழிந்தார்.
சிலம்பிற்காக அவர் தொடங்கிய வேள்வி தொடராமல்
போனதுதான் சோகம்.

No comments:

Post a Comment