Tamil books

Wednesday 20 April 2011

பெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்

 அனுராதா

எந்தவொரு இலக்கியப் படைப்பும் அது படைக்-
கப்படும் கால கட்டத்தின் சமூக, பொருளாதார, பண்-
பாட்டு, அரசியல் பின்புலத்தைப் பிரதிபலிக்கும் நமது
பல்வேறு இலக்கிய வடிவங்களில் கட்டமைக்கப்பட்டுள்ள
பெண் பாத்திரப் படைப்புகள்நமது சமூகத்தில் பெண்
குறித்து நிலவும் முன் முடிவுகளை, பிம்பங்களை,
ஆக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.
இந்து சமூக அமைப்பின் அடிநாதமான மனுநீதியும்
ரிக் வேதமும் பெண் குறித்தும், பெண்ணின் பாலியல்
குறித்தும் பல்வேறு இடங்களில் பேசுகின்றன. பதிவிரதை
தத்துவத்தை முன்நிறுத்தி ரிக் வேதம் Ôகற்புÕ என்கிற
கோட்பாட்டை உருவாக்கியது. Ôகற்புÕ எனும் பெண்ணின்
பாலியல் ஒடுக்குமுறையை நிறுவனமாக்க ஒருதார மண
முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தச்
சட்டங்களுக்குள்பெண்ணை சிக்க வைக்க அவள்
அதிகாரமற்றவளாக்கப்படுகிறாள். உற்பத்தி, உற்பத்திக் கருவி
அவளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு
அவளது ஆளுமை சிதைக்கப்படுகிறது. இன்றுவரை கூட,
பெண் சுயசார்பற்றவளாக, சுய சிந்தனையற்றவளாக வாழ்-
கிறாள்; இலக்கியங்களிலும் அப்படித்தான் சித்திரிக்கப்ப
டுகிறாள்.
மேற்சொன்னவற்றினான புரிதலுக்கு மனுநீதி மற்றும்
ÔÔவேதங்களின் தமிழாக்கமும், ஏங்கல்சின் குடும்பம்,
தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் ஆகிய இரு
நூல்களும் மிகவும் உதவியாக இருக்கும்.
மேலை நாடுகளிலும், சோசலிச நாடுகளிலும்
ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கங்களைத் தமிழ் இலக்கிய
உலகிலும் காணலாம். ஒரு நாட்டின் அரசியல்தான்
அந்நாட்டு மக்களுடைய வாழ்க்கையின் பல்வேறு
கூறுகளைத் தீர்மானிக்கின்றன. அரசியல் மக்களின்
வாழ்வியலை, பண்பாட்டை, சமூகப் பார்வையை, பெண்
குறித்த பிம்பத்தை மாற்றி அமைத்த வண்ணமே இருக்கிறது.
சுதந்திர காலத்திற்கு முன் 1879_ல் எழுதப்பட்ட
வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திர’மும்
1898_ல் எழுதப்பட்ட மாதவையாவின் பத்மாவதி
சரித்திரமும் பெண்கல்வி, விதவை மறுமணம் குறித்துப்
பேசுகின்றன.
கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் வெளிவந்த
வை.மு. கோதைநாயகி அம்மாளின் எழுத்துகளும், மூவலூர்
இராமாமிர்தத்தம்மாளின் Ôதாசிகளின் மோசவலையும்Õ
பெண்ணை ஆளுமை மிக்க பாத்திரங்களாக உருவாக்க
முயலுகின்றன.
(இந்தியப் பண்பாட்டுச் சூழலில் கற்பு நெறியும்
ஒருதார மணமும் பெண்μக்கு மட்டுமே
வரையறுக்கப்பட்டது என்பதையும் ஆணை அக்கோட்பாடு
எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதையும் நாம்
நினைவில் கொள்ள வேண்டும்.)
விடுதலை கால கட்டங்களில் வாழ்ந்த பாரதி, பெண்
விடுதலையைப் பிரகடனம் செய்தவன். Ôசட்டங்கள்
செய்யவும் பட்டங்கள்ஆளவும் என பெண்களின் அரசியல்
அதிகாரப் பகிர்வு குறித்து பேசுகிறான்.
* Ôகற்பு நெறி என்று சொல்ல வந்தால் அதை இரு
கட்சிக்கும் பொதுவில் வைப்போம்Õ எனக் கூறி மனுநீதியின்
நியதிகளைப் பாரதி புரட்டிப் போடுகிறான். பாரதியின்
பாடல் வரிகளுக்குள்ஓடும் தீவிர அதிர்வுகள்பெண் மீது
அவள்கொண்டிருந்த உயரிய மதிப்பையும், பெண்
விடுதலைக்கான அவளது பிரகடனத்தையும் உறுதி
செய்கின்றன. பாரதியின் எழுத்து, அவன் பின் வந்த
எழுத்தாளர்கள்முதல் இன்று எழுதத் துவங்கும்
எழுத்தாளர்கள்வரை அனைவரையும் ஆளுமை செய்கிறது
என்பது கண்கூடு.
பாரதியின் தாக்கத்தைப் புதுமைப்பித்தனின்
Ôபொன்னகரத்தில்Õ காணலாம். புதுமைப்பித்தனின்
எழுத்துகள்பெண் குறித்து வழிவழி வந்த நியதிகளைப்
புரட்டிப் போடுகின்றன. மிகக் கூர்மையாக தெளிவாக
பெண்ணின் போர்த்திய பிம்பத்தைக் கிழித்தெறிந்து, உள்ளே
நாறிக் கிடக்கும் யதார்த்தங்களைக் கடைபரப்புகின்றன.
பெரியாரின் பெண் விடுதலை குறித்தான கருத்துகள்
தமிழக சிந்தனைப் போக்கில் பெரும் மாறுதல்களை
ஏற்படுத்தின (உதாரணம்: பெண் ஏன் அடிமையானாள்)
பெண் விடுதலையையும் சமூக விடுதலையையும்
இணை கோடுகளாய்க் காμம் பார்வை தொ.மு.சி, ராஜம்
கிருஷ்ணன், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி,
மேலாண்மை பொன்னுச்சாமி, டி.செல்வராஜ் சின்னப்ப
பாரதி ஆகியோரது எழுத்துகளில் காணலாம்.
பெண்ணியத் திறனாய்வு இதுகாறும் இயல்பானதாக
ஏற்கப்பட்டு வந்த அனைத்தையும் மறுபரிசீலனைக்கு
உட்படுத்துகிறது.
இராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்,
அம்பை ஆகியோரது எழுத்துகள்பெண் பிம்பத்தை மறு
உருவாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
இராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகளிலும்,
ஜெயகாந்தனின் சுந்தர காண்டத்திலும் ஆளுமை மிக்க
பெண் பாத்திரங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. Ôகற்புÕ குறித்த
பூதாகரமான கட்டமைப்புகள்உடைத்தெறியப்படுகின்றன.
அம்பையின் புனர், புதுமைப்பித்தனின் பொன்னகரம், சாப
விமோசனம், கவுந்தனும் காமனும் போன்றவை சிறந்த
உதாரணங்கள்(புதுமைப்பித்தன் சிறுகதைகள்)
ஜெயகாந்தனின் Ôசில நேரங்களில் சில மனிதர்கள்Õ
வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு படைப்பு.
சமூகத்தில் நிலவும் முரண்பட்ட சிக்கல்களை ஜெயகாந்தன்
எழுத்தில் காணலாம்.
ÔÔசமுதாய முரண்பாடுகளைச் சுட்டிக்
காட்டும்போது, சமுதாயச் சீர்திருத்தம், நாட்டு முன்னேற்றம்
என்ற பின்னணியில் வைத்தே அவற்றைக் காட்ட வேண்டும்.
அப்போது இலக்கியம், இலக்கிய ஆக்கம் பொறுப்புள்ள
சமுதாயப் பணியாகி விடுகிறது. இலக்கியம் மூலம்
அத்தகைய சமூகப் பணியைச் செய்வதற்கு சமுதாய
வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்ட இலக்கிய நோக்கு
ஜெயகாந்தனிடம் உண்டுÕÕ என கார்த்திகேசு சிவத்தம்பி
குறிப்பிடுகிறார். Ôஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்Õ
கல்யாணி சுய சிந்தனை மிக்க பெண்ணாகவும் ‘சுந்தர
காண்டம்’ சீதா ஆளுமைமிக்க பெண்ணாகவும்
உருவாக்கப்படுகிறார்கள்.
இராஜம்கிருஷ்ணன் சமூகப் பிரச்சனையைக்
கையிலெடுக்கும் தன்மை கொண்டவர். ‘அலைவாய்க்
கரையில்’, ‘கூட்டுக் குஞ்சுகள்’, ‘கரிப்பு மணிகள்’, ‘சேற்றில்
மனிதர்கள்’ ஆகியவை உழைக்கும் வர்க்கப் பெண்களின்,
குறிப்பாக ஒருங்கிணைக்கப்படாத உழைக்கும் மகளிரின்
வாழ்வியல் போராட்டங்களையும், வாழ்க்கைக்
கூறுகளையும் பேசுகின்றன. கதைக் களத்திற்கே சென்று,
அப்பகுதி மக்களோடு வாழ்ந்து உள்வாங்கும்
அனுபவங்களின் வெளிப்பாடாய்எழுவது இராஜம்
கிருஷ்ணனின் தனித்தன்மையாகும்.
இயல்பான பல வாழ்க்கை நிகழ்வுகளில் கண்கட்டி
வித்தை போல் பெண்ணின் ஆளுமை சிதைக்கப்படுவதைச்
சுட்டிக்காட்டும் நுண்ணிய பார்வையோடு அம்பையின்
எழுத்துகள்வெளிப்படும். இது அவரது தனித்தன்மை.
பழகிப் போன புனைவுகளை நையாண்டித்தனத்தோடு
கேள்விக்குள்ளாக்கும் தன்மையையும் இவரிடம் காணலாம்.
Ôவீட்டின் மூலையில் ஒரு சமையலறைÕயில்
பெண்ணின் ஆற்றல் முடக்கப்படும் விதத்தையும் இந்த
சமூக அமைப்பிற்குள்ஒரு பெண்ணின் சுயம்
அழிக்கப்படுவதை: Ôசிறகுகள்முறியும்Õலும் சித்திரிக்கிறார்.
Ôகாட்டில் ஒரு மான்Õ சிறுகதைத் தொகுப்பும் ஆழ்ந்து
படிக்கப் பட வேண்டிய நூல்களில் ஒன்று.
பெரும்பாலாகப் பெண்கள்தனது வலிமிக்க
அனுபவங்களை வெளிப்படுத்தும் போதுதான் பெண்மொழி
பிரசவிக்கப்படுகிறது. சுகந்தி சுப்பிரமணியத்தின்
கூர்மையான, வலிமிகுந்த கவிதை வரிகளும், சல்மாவின்
அனுபவக் கசிவுகளில் தோய்த்தெடுத்த உணர்வுகளும்,
பாமாவின் எழுத்துகளும், குறிப்பாக அழகிய நாயகி
அம்மாளின் Ôகவலையும்Õ இதைப் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சூழலில் பெண்களின் தன் வரலாறு
எழுதியலின் முதல் வருகையாக நாட்டார்
வழக்காற்றியலான அழகிய நாயகி அம்மாளின் ÔகவலைÕ
இடம் பெறுகிறது. ஆசிரியர் தன்னிச்சையாக வாழ்வியல்
கூறுகளை நுμக்கமாகப் பேசி தனது வலியைப் பதிவு
செய்கிறார். மொழி ஆள்பவர்களின் அரசியல் தத்துவார்த்த
ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகும். நாம் பழக்கத்தில் இருக்கும்
மொழியை அப்படியே ஏற்க முடியாது. அச்சொற்களின்
அர்த்தங்களை மாற்றிய பின்னரே நாம் கையிலெடுக்க
வேண்டும்ÕÕ என ரௌபாத்தம் கூறுகிறார்.
பாமாவின் Ôகருக்கு, சங்கதிÕ இரண்டுமே சாதிய
அடக்குமுறைகளையும், அதற்குள்ளான தலித் பெண்களின்
அடக்குமுறையையும் அவள்மீது சாதி, பெண் ஆகிய
இரு அடையாளங்களும் ஒருங்கே செயல்படுவதையும்
வெளிப்படுத்துகின்றன. அழகிய பெரியவனின் Ôதீட்டுÕ தலித்
பெண்ணின் வாழ்க்கை அவலத்தை ஆரவாரமில்லாமல்
பேசுகிறது. பொருளாதார சார்பற்ற நிலையில், ஒரு பெண்
எப்படி உமிழப்பட்ட எச்சிலைப் போல தனது வாழ்க்கை
சுழற்சியிலிருந்து சட்டென்று விசிறியடிக்கப்பட்டு பாலியல்
தொழிலுக்குள்விழுகிறாள்என்பதைச் சொல்லுகிறது.
சிவகாமியின் Ôபழையன கழிதலும்Õ நாவலும் அவரது
சிறுகதைகளும் பெண்ணிய பிரச்சனைகளை நுμக்கமாகப்
பேசுகின்றன. திலகவதியின் Ôகல்மரம்Õ கட்டடத்
தொழிலிலுள்ள பெண்களின் வாழ்க்கையோடு நம்மை
இழுத்துச் செல்கிறது.
மறைந்த எழுத்தாளர் அறந்தை நாராயணனின்
Ôஜக்காÕ சினிமா உலகில் பெண் மீதான வன்முறை,
ஒடுக்குமுறையை நம் கண் முன் விவரிப்பது.
என்.டி.ராஜ்குமார் சிறு தெய்வ கட்டமைப்புகள்
மூலம் பெண்ணியக் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்
கொண்ட கவிஞர். வெண்ணிலாவின் கவிதைகள்பெண்
வெளியில் முளைத்த சுதந்திரச் சிறகுகள்.
தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணியத் தாக்கம்
நாளும் அதிர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் கூட சமூக
விடுதலையை முன்னிறுத்தும் கார்க்கியின் ÔÔதாய்ÕÕ போல
ஒரு ஆளுமை மிக்க பாத்திரப் படைப்பு இன்னும்
உருவாக்கப்படவில்லை என்பது யதார்த்தம். கார்க்கியின்
ÔÔதாயும்ÕÕ, அதற்கு முன்னராக தாய்வழிச் சமூகம் குறித்த
புரிதலுக்கான இராகுல சாங்கிருதித்யாயனின் Ôவால்கா
முதல் கங்கை வரைÕயும் அனைவரின் புத்தக அறையிலும்
இருக்க வேண்டிய புத்தகங்கள்.
மேலும், பெண்ணியம் குறித்த புரிதலுக்கு
ரோஸலிண்ட் மைல்ஸின் ‘உலக வரலாற்றில் பெண்கள்’
மைதிலி சிவராமனின் ‘பெண்μரிமை _ - சில பார்வைகள்’
ராஜம் கிருஷ்ணனின் ‘புதியதோர் உலகு செய்வோம்’,
‘காலந்தோறும் பெண்’, அ.மங்கையின் ‘பெண்ணிய அரசியல்’,
அம்பையின் ‘ஜிலீமீ யீணீநீமீ தீமீலீவீஸீபீ tலீமீ னீணீsளீ', பெரியாரின்
‘மதமும் மங்கையரும்’, அரங்க மல்லிகாவின் Ôதமிழ்
இலக்கியமும் பெண்ணியமும்’ போன்ற நூல்கள்உதவியாக
இருக்கும்.

No comments:

Post a Comment