Tamil books

Wednesday 20 April 2011

இளைஞர்களுக்கான சில புத்தகங்கள்

 எஸ்.ஜி. ரமேஷ்பாபு


இளைஞர்களுக்கான புத்தகங்களாக இவைகள்
தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..
பொதுத்தளத்தில் இளைஞர்களின் கைகளில் இப்புத்தகங்கள்
தவழ வேண்டும் என்ற ஆவலில் அது எழுதப்பட்டது
என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
இப்படி எழுதப்பட வேண்டிய புத்தகங்களில்
சிலதான் கீழே உள்ளவை, வேண்டுமானால் அந்த
அறிமுகத்தின் இறுதியில் தொடரும் என போடலாம்.;
யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்ற குறிப்புடன்.
இந்த நாவலின் வெற்றிக்குப் பல காரணங்கள்
இருந்தாலும் அடிப்படையில் அதன் எழுத்து நடை ஒரு
முக்கிய காரணம். அன்றைய ரோமாபுரியின் வீதிகளில்
நடந்தால் எந்த எந்தக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமோ
அதை நீங்களே பார்க்கும் உணர்வு ஏற்படும். அடிமை
முறையின் கொடூரம் தாங்காமல் தப்பி ஓடும் அடிமைகளை
வீதியின் ஓரத்தில் சிலுவைகளில் அறையப்பட்டு கழுகு-
களுக்கு இரையாக்கப்படும் காட்சிகளைப் படிக்கும்போது
ஒருவித துர்நாற்றம் உங்கள்நாசியைக் கடந்து செல்லும்.
அடிமைகளைத் திரட்டி ஒரு மகத்தான எதிர்
புரட்சிக்கு அவர்களை ஸ்பார்ட்டகஸ் தயார் செய்து,
அம்மக்களின் நம்பிக்கைகளை மீட்டெடுக்கும்
இக்காவியத்தில் காதல், மனிதநேயம் போன்ற உணர்வுகள்
அடிநாதமாய்இழையோடி வரும். வரினியா, படைத்தளபதி
கிராஸஸ் ஆகியோர் மறக்க முடியாத பாத்திரங்கள். மிகச்
சிறப்பான மொழியாக்கத்துடன், வெளியீடு: சவுத்விஷன்,
விலை: 100, முதல் பதிப்பு: 1997
சிதைவுகள்: 1930_ல் நைஜீரியாவில் பிறந்த சினுவா
ஆச்சிபி, இவர் தன் 28 வயதில் எழுதிய முதல் நாவல்
இது. அமெரிக்காவில் மட்டும் 20 இலட்சம் பிரதிகள்
விற்றுள்ளது. ஐம்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்
டுள்ளது. 1999 வரை உலக அளவில் 1 கோடிப் பிரதிகள்
விற்பனையான புத்தகம்.
ÔÔசிதைவுகள்ÕÕ ஓக்கொங்லோ என்ற கதாபாத்திரத்தின்
கதையை விவரிப்பதாகும். அவரும் அவருடைய இனத்தைச்
சேர்ந்த மக்களும் தொன்மையான மரபு கொண்ட
வாழ்க்கையின் சொந்தக்காரர்கள். அந்த மரபிலிருந்து
உருவான சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள்
ஆகியவற்றைத் தழுவி நிற்கிறது அவர்களுடைய வாழ்க்கை.
ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் ஆணிவேரை
மேற்கிந்திய மதிப்பீடுகள்அசைக்கத் தொடங்குகின்றன.
புதிய கடவுளைத் தாங்கி புதிய சமயமாக, அந்தச் சமயத்திற்-
குரிய அந்நிய வாழ்க்கை நெறிகளாக அவை ஊடுருவத்
தொடங்குகின்றன. தம் நம்பிக்கைகள்சார்ந்த மதிப்பீடுகள்
சிதைய, இழுபறிக்கு ஆட்படுகின்றனர் ஓக்கொங்லோவும்
அவரது மக்களும்.
இன்று மலைவாழ் மக்களிடம் கல்வி புகட்டி
அவர்களுக்கு நாகரிகம் போதிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.
வகையறாக்கள்அனைவருடன் பொருத்திப் பாருங்கள்.
முதற் பதிப்பு 1998, காலம் வெளியீடு, விலை 75 ரூபாய்.
நினைவுகள்அழிவதில்லை: தமிழகத்தில்
முற்போக்கு இயக்கத்தினை அறிந்து கொண்ட
இளைஞர்களுக்கு முதல் அறிமுகமாக அநேகமாக இந்த
நாவல்தான் இருந்திருக்கும். இதுவரை எட்டு பதிப்புகள்
வந்துள்ள நிரஞ்சனாவின் இந்நாவல் மிகச்சிறந்த வரலாற்று
ஆவண நாவல் ஆகும். இந்த வடிவத்திலான நாவல்கள்
தமிழக இலக்கியச் சூழலில் மிகக் குறைவே. 1940
இந்தியாவில் விவசாயிகள்நிலப்-பிரபுத்துவத்திற்கும்,
ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அணி திரளத் துவங்கிய
காலம். கேரளாவில் வடக்கு மலபாரிலுள்ள கையூர் என்ற
கிராமத்தில் (தற்போதைய கண்ணனூர் மாவட்டம்)
விவசாயிகள்சங்கம் அமைத்தது. விவசாயிகள்மாநாட்டுப்
பிரச்சார ஊர்வலத்தில் அத்துமீறி தலையிட்டுத் தொல்லை
கொடுத்த ஒரு போலிஸ்-காரனுக்கும் மக்களுக்கும் இடையே
மோதல் ஏற்பட்டது. மக்களிடமிருந்து தப்பிக்க ஆற்றில்
குதித்த போலிஸ்காரன் உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து
கையூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் நடைபெற்ற
மனித வேட்டையும் அடக்குமுறையும் வரலாற்றில் மறக்க
முடியாத இரத்த சாட்சிகளாகும். இதையட்டி
தொடரப்பட்ட வழக்கில் சிறுகண்டன், அப்பு, அபுபக்கர்,
குஞ்ஞம்பு ஆகியோர் 1943_ஆம் ஆண்டு மார்ச் மாதம்
29_ஆம் தேதி தூக்கிலிடப்-பட்டனர். இத்துடன் கையூர்
சம்பவம் இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த ஓர்
அத்தியாயமாக ஆகிவிட்டது. வெளியீடு: சவுத்விஷன்.
விலை: 40 ரூபாய்
விடுதலைப் பாதையில் பகத்சிங்: இந்திய வரலாற்றில்
மகாத்மா காந்திக்கு இணையான ஆளுமை நிறைந்த,
மக்களால் மறக்க முடியாத ஒரு இளைஞனாய்உயர்ந்து
நிற்கும் மாவீரன் பகத்சிங் குறித்த முழுமையான ஆவணம்.
தமிழில் முதன் முறையாகப் பகத்சிங் குறித்து வெளிவராத
தகவல்களுடன் வந்துள்ள புத்தகம் இது. பகத்சிங் வாழ்க்கை
வரலாறு, நான் ஏன் நாத்திகன் ஆனேன், அவர் எழுதிய
கடிதங்கள், சிறைக் குறிப்புகள், அவரது அறிக்கைகள்,
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மியின்
அறிக்கைகள்என்று மிக விரிந்த தளத்தில் பகத்சிங் குறித்து
அறிந்து கொள்ள உதவும் புத்தகம் இது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நெருக்கடியான
கால கட்டங்களில் ஆயுதங்களை மட்டும் நம்பி, மனித
உயிர்களைப் பறித்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு
சாகசங்களை செய்யத் துணிந்த இளைஞர்களாக, பகத்-
சிங்கையும் அவர்களது சகாக்களையும் காட்சிப்படுத்த சிலர்
தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் இந்த
இளைஞர்-கள்மிகுந்த தத்துவ அறிவுடன், தாங்கள்செய்யும்
காரியங்களுக்கு என்ன எதிர் விளைவு என்று தெரிந்தே
செய்தனர். இல்லையெனில் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு
வீசியவர்கள்அங்கு நிலவிய குழப்பங்களைப் பயன்படுத்தி
தப்பித்து இருக்க முடியும். ஆனால் அவர்கள்கைது
செய்யப்-பட்டு நீதிமன்றத்தை ஒரு விடுதலை கேட்கும்
மக்கள்மன்றமாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டனர்,
அதனையே செய்தும் முடித்தனர்.
மரண தண்டனை நாட்கள்அருகில் வரும்போது
சாதாரண மனிதனின் எவ்விதத் தன்மையும் இல்லாமல்
ஒரு அசாதாரண ஆளுமையாய்பகத்சிங் வாழ்ந்தது படிக்கப்
படிக்க நம்மை எழுச்சி கொள்ளச் செய்யும். 2007_ல் முதல்
பதிப்பு. வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: 200
பெரியார் வாழ்வும் பணியும்: ÔÔதிரு காந்தி என்றைக்கு
மக்களுக்குள்வருணம் நான்கு உண்டு. அதுவும் அவை
பிறவியில் ஏற்படுகிறது என்று சொன்னாரோ அப்போதே
அவரை மகாத்மா என்று அழைப்பதை நிறுத்தி விட்டேன்ÕÕ
காந்தியை இந்தியாவே கொண்டாடிய அந்தக் காலத்தில்
இப்படி கலகக் குரல் கொடுத்தவர்தான் பெரியார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடியவர்
பெரியார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழு-
வதிலும் தனித்தன்மை கொண்ட தலைவராகத் திகழ்ந்தவர்.
அரசியலைப் பொறுத்தவரை ஒருவருக்கு அவருடன் கருத்து
வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவர் வைதிகத்தின்
காழ்ப்பையும், வெறுப்பையும் தீரத்துடன் எதிர்த்து நின்றார்.
மக்களை ஒடுக்கி கேவல நிலையில் வைத்திருந்த சாதிக்
கொடுமை, மூடநம்பிக்கை ஆகியவற்றையும் மக்களை
நிரந்தரமாக அடிமைத்தளையில் வைத்திருந்த, மக்களிடம்
ஊட்டப்பட்ட கடவுள்நம்பிக்கையையும் எதிர்த்து சமூக
நீதிக்காகப் பல ஆண்டு காலம் போராடினார்.
பெண் விடுதலைக்காக அவர் பெண்களிடத்தில்
பிரசாரம் செய்யவில்லை; ஆண்களிடத்தில் பேசினார். அதே
போல சாதியப் பிரச்னையில் அவர் ஒடுக்கப்பட்ட
மக்களிடம் அவர்கள்நிலையைச் சொல்லி புலம்பவில்லை;
ஒடுக்கும் சாதிகளைப் பார்த்துக் குரல் எழுப்பினார். கடவுள்
நம்பிக்கை மிக்க ஒரு தேசத்தில் அந்தச் சிலைகளை ரோட்-
டில் போட்டு உடைப்பது, செருப்பால் அடிப்பது என்று
அதிர்வலைகளை எழுப்பியவர் அவர். அவர் குறித்துப்
படிப்பதற்கு என இன்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள்
வந்துள்ளன. இந்தப் புத்தகம் என். ராமகிருஷ்ணனால்
மிகச் சுருக்கமாக 49 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
பெரியாரை மிக எளிமையாக அறிந்து கொள்ள
இப்புத்தகம் மிகவும் உதவும். 1997_ல் முதல் பதிப்பு.
வெளியீடு: சவுத்விஷன். விலை: 55 ரூபாய்
சோளகர் தொட்டி: ÔÔஅழாதே! உன் சப்தம் வெளியே
வந்தால் இன்னிக்கே சுட்டு காட்டிலே வீசிடுவோம்.ÕÕ என்று
பற்களைக் கடித்தான். அழுதவள்வாயை மூடிக்-
கொண்டாள்.
அடுத்தவன், ÔÔதங்க முத்து, பெரிய தண்டா. தமிழ்-
நாடுÕÕ என்றான்.
ÔÔகாலைல வந்தவனா, வீரப்பனோட ஆளா?ÕÕ என்று
கால்களால் அவன் பிடரியில் உதைத்தான். அதைக் கண்டு
பக்கத்தில் இருந்த பெண் ÔÔவேண்டாம்ÕÕ எனக் கத்தினாள்.
உடனே இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து
நீட்டி, அவளின் முடியைப் பிடித்து ஆட்டி,
ÔÔதேவடியா! உன்னையும் உன்னோட அம்மாவையும்
கொண்டு வந்து மூனு நாட்களுக்குப் பிறகுதான் ஒளிந்-
திருந்த உன் புருஷன் இன்று காலையில வெளியே வந்திருக்-
கான். ஆனா, நீ வெளியே போயிட முடியும்னு நினைச்சுக்-
காதேÕÕ என்றான்.
ÔÔநான் தான் வந்துட்டேனே. என் பொண்டாட்டி-
யையும் மாமியாரையும் விட்டு விடுங்கÕÕ என்று அந்த
போலிஸ்காரன் கால்களைக் கட்டிக் கொண்டான். அங்கு
தாடியுடன் வந்த மற்றொரு போலிஸ்காரன் தடியால் அவன்
முதுகில் ஒரு அடி கொடுத்தான். போலிஸ்காரனின் காலை
விட்டு விலகிக் கொண்டான். தடியால் அடித்துப் பெயர்
எழுதிக் கொண்டிருந்த போலிஸைப் பார்த்து,
ÔÔவீரப்பனின் வப்பாட்டிதானே இவன், பொண்-
டாட்டிÕÕ என்று அழுது கொண்டிருந்தவளைக் காட்டி
சொன்னான்.
எளிய மக்கள்வாழ்க்கையில் வீசிய அந்த வலி
மிகுந்த புயல் இனியும் வரும் என நினைத்தாலே பலர்
மாண்டு போவார்கள், அத்தகைய கொடூரம் நிகழ்ந்த
வாழ்க்கை அவர்களது. அரசு என்ற அதிகாரம் இயற்கையை
நேசித்த அல்லது அந்த இயற்கையைப் பாதுகாத்த மக்களை
சட்டம் என்ற பெயரில் எப்படி வேட்டையாடியது என்று
இதயம் அதிரும் வகையில் எழுதப்பட்ட புத்தம் இது.
அம்மக்களுடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பரிமாற்றம்
நடத்திய, அவர்களுக்காகப் பல்வேறு சட்டப் போராட்-
டங்கள்நடத்திய ச. பாலமுருகன் எழுதிய புத்தகம் இது.
ÔÔநான் சுமந்த அம்மக்களின் கதைகள்பாறையை
விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை.
நெருப்பினை விட வெப்பமானவை. பல சமயங்கள்நான்
உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய்இருப்பதை
உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள்சிலவற்றையாவது
பதியாமல் விட்டு விட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு
காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்
கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின்
மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்ÕÕ என்று
ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது கொஞ்சம் அதீதமாய்
தெரிந்தால் கூட புத்தகத்தைப் படித்து முடித்த பின்பு
அவர் இந்த உணர்வுகளை இன்னும் சரியான வார்த்தைகளி
ல், இன்னும் அழுத்தமாக முன்னுரையில் சொல்லியி
ருக்க வேμம் என தோன்றும். அப்படி நடுக்கத்திற்குள்ளாக்கும்
புத்தகம் இது. ஆகஸ்ட் 2004_ல் முதல் பதிப்பு.
வெளியீடு: வனம். விலை: 100 ரூபாய்.
அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்:
ÔÔநாங்கள்கனவு காண உறங்குபவர்கள்அல்ல; ஆனால்
உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்ÕÕ - கூகி வா தியாங்கோ.
1977 டிசம்பர் 30_ல் கென்ய அரசால் கைது செய்யப்-படும்-
போது அவர் நைரேபியப் பல்கலைக்கழக இலக்கியத்
துறையின் தலைவராகவும், இணைப் பேராசிரியராகவும்
பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மாணவர்களிடம்
கைதாவதற்கு முன்பு ஆற்றிய உரையில் அம்மாணவர்களை
உலகப் புத்தக தின சிறப்பு மலர் 2008 67
இரண்டு புத்தகங்களைப் படிக்கச் சொல்கிறார். ஒன்று
ப்ராண்டஸ் ஃபனானின் ‘மகிழ்ச்சியற்ற உலகம்’, அடுத்தது
லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளியத்தின்
உச்சக்கட்டம்’. இவர் எழுதிய சிலுவையில் தொங்கும்
சாத்தான் நாவல்தான் கிகூயு மொழியில் எழுதப்பட்ட
முதல் மிகப்பெரிய நாவல்.
அடையாள மீட்பு புத்தகத்தில் ஆப்பிரிக்க இலக்கிய
மொழி, ஆப்பிரிக்க அரங்க மொழி, ஆப்பிரிக்க புனைகதை
மொழி, பொருத்தப்பாட்டிற்கான தேடல் ஆகிய
தலைப்புகளில் ஏகாதிபத்தியம் கட்டமைக்க நினைக்கின்ற
ஒற்றைக் கலாசாரத்தை எதிர்த்து மொழி என்ற
பண்பாட்டுத் தளத்தில் நின்று எதிர் வினையாற்றுகிறார்.
எப்படி ஆப்பிரிக்க மக்கள்பன்முகத்தன்மை கொண்ட
கலாசாரத்தை ஏகாதிபத்தியம் மக்கள், அறிவுஜீவிகள்பொது
ஒப்புதலுடன் அழிக்க வினையாற்றுகிறது என்று பதிய
வைப்பது, நமது இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருந்திப்
போவது தற்செயலான ஒன்றல்ல. அவரின் கீழ்க்காμம்
பதிவு ஒரு சிறு உதாரணம்.
ÔÔநவகாலனியம் மக்களது உயிரூற்றுகளை அடைப்பவற்
றோடு உறவு கொள்ள வைக்கிறது. போராட்டங்களின்
ஒழுக்க மதிப்பீடு பற்றிய ஐயங்களைக் கிளப்ப வைக்கிறது.
வெற்றி அல்லது சாதனைகளுக்கான சாத்தியங்களைக்
கைக்கெட்டாத, நகைச்சுவைக்கு இடமளிக்கும் கனவு-களாகக்
காண வைக்கிறது. இதன்விளைவு நம்பிக்கை-யின்மை, கையறு-
நிலை, கூட்ட மரண விழைவு ஆகியவை. ஏகாதிபத்தியம்
உருவாக்கிய இந்தக் களர் நிலத்தின் மத்தியில் அது தன்னைத்-
தானே அருமருந்தாகக் காட்டிக் கொள்கிறது. தம்மை
அண்டி-யுள்ளவர்களைத் தம் புகழ் பாட வைக்கிறது. களவு
புனித-மானது என்று போற்றிப் பாட வைக்கிறது.ÕÕ 1997_-
98ஆம் ஆண்டுகளில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தியாங்-
கோவிடம் மாணவியாக இருந்த அ.மங்கை இப்புத்தகத்தைச்
சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். 2004 முதல் பதிப்பு.
வெளியீடு: வல்லினம். விலை 75 ரூபாய்.
டாக்டர் நார்மன் பெத்யூன்: கனடாவின்
குடிமகனாய்ப் பிறந்து உலக உழைப்பாளி மக்களுக்குச்
சொந்தமான ஒரு சர்வதேசப் போராளியை நீங்கள்தெரிந்து
கொள்ள, அவசியம் இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
கனடாவின் கார் நகரமான டெட்ராய்டில்
தொழிலாளர்கள்குடியிருப்புப் பகுதியில் தனது மருத்துவப்
பயிற்சியைத் துவங்குகிறார். நோய்முற்றிப்போன சூழலில்
வரும் மக்களைப் பார்த்து கோபப்படுகிறார். ஆனால் அவர்-
களுக்காகக் கவலை கொள்கிறார். அந்த நிலைக்கான
காரணங்-களைக் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அந்த
சமயம் காசநோயால் பாதிக்கப்படுகிறார். இனி பிழைக்க
மாட்டார் என்று கருதி அவரை சானடோரியத்தில் சேர்க்-
கின்றனர். அவர் அங்கு மருத்துவப் புத்தகங்களைப் படிக்-
கிறார். அதுவரை உலகத்தில் காச நோய்க்கான அறுவை
சிகிச்சை நடந்தது கிடையாது. அவர் மருத்துவ சஞ்சிகைக
ளைப் படித்து தன் மீது அறுவை சிகிச்சை பரிசோதனை
நடத்தச் சொல்கிறார். அவர் பிழைத்து விடுகிறார். அதன்
பின் அவர் உலகில் தலைசிறந்த நெஞ்சக அறுவை சிகிச்சை
நிபுணராக உருவெடுக்கிறார். பல அறுவை சிகிச்சைக்
கருவிகள்கண்டுபிடிக்கிறார். (இன்றுவரை அறுவை சிகிச்சை-
யில் பெத்யூன் கருவிகள்பயன்படுத்தப்படுகிறது)
அந்த நேரத்தில் அவர் சோவியத் யூனியன் பயணம்
போகிறார். அங்கு சோஷலிச அமைப்பு ஒருமுகப்-படுத்தப்பட்
ட நோய்த் தடுப்புப் பணிகளை எப்படி மக்களுக்குச்
செய்கிறது என்று பார்க்கிறார். மக்களுக்கான மருத்துவம்
என்பதன் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்.
இத்தகைய ஒரு மகத்தான பணி சோஷலிச சமுதாயத்தால்
மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து, கனடா
திரும்பியதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார். அந்தச்
சமயம் உலகப் புகழ்பெற்ற மருத்துவரான அவரைக் கட்சி
ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தில் மக்களுக்குச் சேவை
செய்ய அழைக்கிறது. அவர் அங்கு சென்று போரில் காயம்-
பட்டவர்களுக்குச் சேவை புரிகிறார். உலகின் முதல்
நடமாடும் இரத்த வங்கியை உருவாக்குகிறார். பின்பு
அம்மக்களுக்கு மருத்துவ உதவிகளை சேகரிப்பதற்காக
அமெரிக்கா செல்கிறார். அங்கு அவரின் சேவை சீனப்
புரட்சிக்குத் தேவை என அமெரிக்க _ சீன நட்புறவுக்
கழகம் கேட்டதற்கு இணங்க அந்தப் போராட்டக் களத்-
திற்குச் செல்கிறார். அங்கு மா -_ வோவைச் சந்தித்து
விவாதிக்கிறார். 7ஆம் படைப்பிரிவுக்குத் தலைமை மருத்து-
வராகிறார். மருத்துவக் கல்விப் பல்கலைக்கழகம் துவக்கு-
கிறார். போராட்டக் களத்தில் அதிகம் உயிர்ச் சேதம்
ஏற்படுவதைத் தடுக்க உலகின் முதல் நடமாடும் அறுவை
சிகிச்சை யூனிட்டைத் துவக்குகிறார். போர்க்களத்தின்
உக்கிரத்தில் தொடர்ந்து ஒரே நாளில் 80 அறுவை
சிகிச்சைகள்செய்கிறார். ஒருநாள்அறுவை சிகிச்சை செய்து
கொண்டிருக்கும் போது கத்தி கையை வெட்டிவிட நோய்
தொற்றுகிறது. சுற்றிலும் எதிரிகள்முற்றுகையிட்டுள்ள
சூழலில் போதிய மருந்துகள்இல்லாமல் நோய்முற்றி
மரணமடைகிறார். அப்போது அவருக்கு வயது 48.
அந்த சர்வதேசப் போராளியின் பெயரால் இன்றும்
சீனாவில் சர்வதேச மருத்துவப் பல்கலைக்கழகம் நடக்கிறது.
பிரபாகர் மொழியாக்கத்தில் 2007_ல் முதல் பதிப்பு வந்த
இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது: சவுத்விஷன். விலை
100.
கஸ்தூரிபாய்: மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப்
பலவிதங்களில், பல எழுத்தாளர்களின் கைவண்ணத்தில்,
பல கோணங்களில் படித்தவர்களுக்கு அவரின் மகாத்மா
பட்டத்தைத் தாங்கி நிற்க அடிப்படையான அஸ்திவாரமா
ன கஸ்தூரிபாய்காந்தி நினைவில் தைக்காமல் போயிருப்ப
து இந்த சமூக யதார்த்தத்தின் பிரதிபலிப்புதான். அவரு-
டன் பல ஆண்டுகாலம் வாழ்ந்த, அவரைத் தாங்கி நின்ற ஒரு
மகத்தான பெண்ணின் வாழ்க்கை குறித்த புத்தகம் இது.
ஒருவிதத்தில் சொல்லப்போனால் காந்தியின்
சத்தியசோதனையின் அடித்தளம் எங்கு சோதிக்கப்பட்டது
என்றால் 13 வயதில் அவருடன் வாழ்வைத் துவங்கி 65
ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்த கஸ்தூரிபா என்று தயக்கம்
இல்லாமல் இப்புத்தகத்தினைப் படித்து முடித்ததும் ஒப்புக்
கொள்ளுவீர்கள். பயந்த சிறுமியாய்த் துவங்கிய அவரது
வாழ்க்கை.. சிறையில் மரணமடைந்தது உலகம் அறியாத
எழுச்சி கொண்ட காவியம்.
வெளியீடு : பாரதி புத்தகாலயம். விலை: :ரூ, 20,
ஆசிரியர்: மைதிலி சிவராமன்.

No comments:

Post a Comment