Tamil books

Wednesday 20 April 2011

தலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த ஜாக் லண்டனின் உயிராசை

அத்தகைய தருணங்களில் புத்தகத்தைத் தொட
யாருக்கு மனசு வரும்!
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் படுத்த படுக்கையில்
இருக்கும் லெனினைப் பார்ப்பதற்காகப் பரந்து விரிந்த
சோவியத் ரஷ்யாவின் தூர தொலைவில் இருந்தெல்லாம்
வரும் விவசாயக் குடிமக்களிடம் உரையாடி விட்டு _
ஓய்வு கொள்ளும் போதெல்லாம் புத்தக வாசிப்பு அவரை
வருடிக் கொடுக்கிறது. வாசிக்க இயலாத நிலையில்
அவருக்கு வாசித்துக் காட்டுகிறார் ஒரு தோழர்.
அந்த இறுதி நாட்களில் அவர் வாசிக்கச் சொல்லிக்
கேட்ட கதை ஜாக் லண்டனின் உயிராசை.
ÔÔசொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு
முன்பே சொல்லி முடித்து விட்டதாக மமதை
கொண்டிருக்கும் _ அரிசி உணவை உட்கொள்ளும்
பிராணிகள்_ தேச யாத்திரை செல்வதற்காக இந்த மனோரத
த்தை வழங்கி’’ யிருப்பதாகச் சொல்கிறார் புதுமைப்பித்தன்.
ஜாக் லண்டன் அதாவது ஜான் கிரிப்பித் லண்டன்
(1876_1916) ஜனனம் ஸான் பிரான்ஸிஸ்கோ. நாடோடியாக
ஜோஸ்யம் பார்த்துத் திரிந்த வில்லியம் ஹென்றி சானி
என்பவரின் மகன். அவருக்கு ஜெர்மன் சித்தாந்திகள்
நீட்ஷேவிடமும் காரல் மார்க்ஸிடமும் அபார பக்தி. 1907-ல்
எழுதிய கதை.
சுந்தரராமசாமி ஒரு தடவை பேசிக் கொண்டிருக்கும்-
போது, Ôஆங்கிலத்தை விட புதுமைப்பித்தனின் தமிழ்
மொழிபெயர்ப்பில் இன்னும் உயிரோட்டத்துடன்
இருக்கிறது "உயிராசை" என்று குறிப்பிட்டார்.
இரண்டே இரண்டு பேர் மட்டும் தான் கதையின்
கதாபாத்திரங்கள். அதிலும் ஒருவனை பத்தடி தூரத்துக்குள்
இன்னொருவன் தவற விட்டு விடுகிறான். அப்புறம்
இவனுக்கும் இயற்கைக்கும் மட்டுமான போர். பனியும்
பசியும் இவனை அழிக்க முனைகின்றன. தோளை
அழுத்தும் பொதி அல்லது மூட்டை _ ஒரு துப்பாக்கி _
இன்னும் பத்திரமாக இருப்பதாக நம்பும் தோட்டாக்கள்
அறுபத்தியேழு தீக்குச்சிகள்_ தங்க வேட்டையாடிக்
கொண்டு வந்திருக்கும் தங்கக் கட்டிகள்மற்றும் தங்கத்தூள்
பொட்டலங்கள். அடிக்கடி பார்த்து, தவறாமல் சாவி
கொடுத்து ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரம்.
வடதிசையிலிருந்து விரட்டி வரும் உறை பனிக்காலம்.
ஜலத்தில் மிதந்து சுழித்து ஓடும் பனிக்கட்டிகள். மஞ்சும்
பனியும் மூடிய மங்கலான சூரியன். ரெண்டு நாளாக
அன்ன ஆகாரமில்லை.

குளிர் மலைகளைத் தாண்டி எங்கோ கிரேட் பேர்
ஏரி. அந்தத் திசையில் தான் ஆர்க்டிக் வட்டம் கனடா
பனிப் பாலைவனத்தை ஊடுருவுகிறது. பசி ஆற்றாத
காட்டுக்காயைக் கடித்துத் தின்கிறான். பசி குடலைப்
பின்னி முறுக்குகிறது. காட்டுக்காய்ஏற்படுத்திய நமைச்சல்
நாக்கில். நடக்கத் திராணியற்று புழுப் போல் ஊர்கிறான்.
வழி நெடுக ரத்தக்கசிவு இழுத்துச் செல்லும் ரத்தக் கோலம்.
கோரைக் கிழங்குகளையும் பிடுங்கித் தின்னுகிறான்.
தவளையோ, நிலப்புழுவோ கிடைத்தால் தேவலை என்று
நோண்டிப் பார்க்கிறான். நாலா திசையிலும் விலங்கிடும்
அத்து வானம். விம்மி விம்மி அழுகிறான்.
வாள்போல் வாடைக்காற்று வெட்டுகிறது.
இலை தழைகளைக் கூட தின்னத் துவங்கி விட்டான்.
பசி வேட்கையில் பிறந்த இச்சை அல்ல பிழைத்துக் கிடக்க
வேண்டும் என்ற உயிரிச்சை _ உயிராசை. ஓநாய்களின்
ஊளை காதைக் கிழிக்கிறது. பொதி அழுத்துகிறது.
மூட்டையை அவிழ்த்து தங்கப் பொடி கட்டிகளை
இரண்டாகப் பிரித்து ஒன்றைப் பாறை இடுக்கில்
வைக்கிறான். துப்பாக்கியை விட்டெறியவில்லை. தகரக்
குவளையில் மீன்களைப் பிடித்து பச்சையாகத் தின்கிறான்.
முட்டையிலிருந்து வெளிவந்த நான்கு _ குஞ்சுகளைப்
பிடித்து நற நறவென்று மென்று விழுங்குகிறான்.
முட்டைத் தோடு நொறுங்குவது போல. தாய்க்குருவி சுற்றிச்
சுற்றி வருகிறது. கண் பஞ்சடைகிறது. ஊர்ந்து செல்கிறான்.
மீதித் தங்கத்தைத் தூக்கி எறிகிறான் _ தங்க வேட்டையாடி
தங்கம் கொண்டு வந்தவன். தகரபோணி, கிழிந்த போர்வை.
துப்பாக்கி தவிர வேறு இல்லை.
நடக்க முடியாமல் நடந்தான். முடியாதபோது
ஊர்ந்தான்
புதிய பயம் பற்றிக் கொள்கிறது பட்டினியால் மடிந்து
விடுவோம் என்று அல்ல. 'உயிரிச்சை' இழுத்துச் செல்லும்
இடத்தை அடையுமுன்னே 'பட்டினி' அவனைக் கொன்று
விடக் கூடாதே என்ற பயம்.
மனிதன் என்ற நிலையில் இல்லை. சாக மறுத்த உயிர்
தான் அவனை உந்திச் சென்றது. உயிரும் உடம்பும்
பக்கத்தில் பக்கத்தில் ஊர்ந்தோ நடந்தோ சென்றன.
சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியும்
அறைந்தது. காலம் செத்தொழிந்தது.
அவனடியில் நதி ஓடியது. தூரத்தில் நங்கூரம்
பாய்ச்சியக் கப்பல்.
அவன் இப்பொழுது வெறும் மனிதக் கறி.
அவ்வளவுதான். நடந்தான். ஊர்ந்தான். ரத்தக் கசிவின்
கோடுகளை ஓநாய்நக்கிச் சென்றது.
மடிந்து கொண்டிருந்தான். சாகச் சம்மதிக்கவில்லை.
இவ்வளவு பட்ட பின் சாவது தப்பு. நினைவு தப்பியது.
இப்பொழுது கடற்கரை நெருங்கியிருந்தது. ஓநாயின்
பற்கள்அழுத்தமாகப் பதிகிறது அவன் உடம்பில்.
எங்கிருந்தோ வந்த சக்தி ஓநாயின் வாயை இறுக்கிப்
பற்றுகிறது. ஓநாயால் திமிற முடியாத பிடி. ஓநாயின்
கதை முடிகிறது.
நதி இவன் காலடியில் ஓடுகிறது. கடல் நெருங்கி
விட்டது.
திமிங்கல வேட்டைக் கப்பல் வெட் போர்ட். அலையில்
ஆடுகிறது. சில விஞ்ஞானப் பண்டிதர்கள்இவனைக்
கவனிக்கிறார்கள். உயிருக்குப் போராடும் புழுப் போல்
நெளிந்து கொண்டிருக்கிறான்.
மூன்று வாரங்கள்கழித்து வெட் போர்ட் கப்பலில்
படுத்துக் கிடக்கும் மனிதன்.
உணவே தெய்வமாயிற்று அவனுக்கு. தின்றான். உணவை
ஒளித்து வைத்தான். ஷர்ட்டுக்கடியில் எல்லையில்லாமல்
பெருத்தான். உணவைக் குறைத்தார்கள். திருடினான். அவன்
அறையெங்கும் உணவுப் பண்டங்கள்.
'தெளிந்து விடும்' என்று நம்பினார்கள்.
கப்பல் ஸான் பிரான்ஸிஸ்கோ போகும் முன்
அவனுக்குப் புத்தி தெளிந்தது.
காலமும் வெளியும் உயிரோடு ஒரு ஓவியம் போல்
இயங்குவதே நல்ல இலக்கியம் என்பார் தொ.பரமசிவம்.
காலம் என்பது கால நிலையும் சேர்த்து. ஓவியத்தில் "னீஷீஷீபீ'
என்பார்களே. நிகழ்காலத்தின் மையத்தில் முன்னும்
பின்னும் நகர வேண்டும் காலம். பாத்திரங்கள்
அதிகமில்லை, பெயரில்லை. ஆனால் எல்லாம் சேர்ந்து
ஒரு பெரிய விஸ்தாரமான வெளியும் காலமும் குண
ரூபங்களோடு இரவில் கேட்கும் பாடல் போல
நம்பிக்கையைத் தட்டி விட்டுச் செல்கிறது வாசகன்
மனத்தில்.
அதனால்தான் சரியாக 101 வருஷம் ஆன பின்னும்
இன்னும் புதிதாக இருக்கிறது - ஜாக் லண்டனின்
உயிராசை.

No comments:

Post a Comment