Tamil books

Thursday 21 April 2011

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)

ஆர்.இ. ஆஷெர்  தமிழில்: ஆர். பெரியசாமி

நவீனகாலத்தில் தென்னிந்தியாவுடன் ஐரோப்பிய மொழிகளின் தொடர்புகள் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கண நூல்களின் எண்ணிக்கை 1-00ஐ மிஞ்சியிருக்கலாம்.1 இங்கே சம்பந்தப்பட்ட ஐரோப்பிய மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்த்துக்கீசு, ரஷிய, லத்தீன் ஆகியனவாகும். இதில் லத்தீன் இருப்பதற்குக் காரணம் அம்மொழியானது மத்திய காலத்திலும், மறுமலர்ச்சிக் காலத்திலும் இருந்ததைப் போலவே நவீன காலத்தின் தொடக்கத்திலும் ஐரோப்பிய அறிவாண்மையின் குறிப்பாக கிறிஸ்துவ மத குருக்களிடையே சர்வதேச மொழியாக பல மொழிகளுக்கிடையே ஒரு பொது மொழியாக (லிவீஸீரீuணீ திக்ஷீணீஸீநீணீ)  இருந்திருக்கிறது என்பதுதான்.
தமிழின் இலக்கண வரலாற்றில் ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கணங்-கள் ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்தைக் குறிக்-கின்றன. ஏனென்றால், ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கணங்கள் எழுதப்படத் தொடங்கும் காலத்திற்கு முன், தமிழ் மொழியில் மட்டுமே அம்மொழி இலக்கணங்கள் எழுதப்பட்டன. உதாரணமாக, சமஸ்கிருத மொழியிலோ அல்லது பிராகிருதிகளின் எந்தவொரு மொழியிலோ ஆரம்பகாலத்தில் தமிழுக்கு இலக்கண நூல் எழுதப்படவில்லை. ஐரோப்பிய மொழிகளின் இலக்கணங்களும் தமிழ் மொழி இலக்கண வகை குறித்து வரலாற்-றாளர்கள் (பிவீstஷீக்ஷீவீணீஸீs) தெரிந்து கொள்வதற்-கான ஒரு ஆர்வத்தை அவர்களுக்குக் கொடுத்-துள்ளன. அந்த வகையில் மேற்கத்திய அறிவா-ளர்கள் சிலர், இதற்கு முன்பு பயன்படுத்தப்-பட்டிராத இந்த வகைகளுக்கான முன்மாதிரி-களைப் (விஷீபீமீறீs) பயன்படுத்தினர். அதாவது, அவர்கள் இந்த முன்மாதிரிகளை ஐரோப்பிய மொழிகள் குறித்த, குறிப்பாக கிரேக்க மொழி மற்றும் லத்தீன் மொழி குறித்த விளக்கங்களில் பரிச்சயமாக இருந்த தமிழ் இலக்கண மரபுகள் மற்றும் பிரிவுகள் குறித்த விளக்கப்பட்டியலுக்கு மாற்றினர். ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கணம் இயற்றிய  இலக்கண வல்லுநர்கள் ஏராளமானவர்கள் தமிழ் இலக்கண மரபுகளுக்குப் பரிச்சயமானவர்களாக இருந்தார்கள் என்பது உண்மை. அவர்களைப் பொறுத்த வரையில், ஒரு விஷயம் பொதுவானதாக இருந்தது. அது என்னவெனில் ஒரு துவக்க அத்தியாயத்தில் உதாரணமாக, தமிழ் இலக்கண மரபுகளில் அகஸ்தியர், தொல்-காப்பியர், பவணந்தி போன்ற சில முக்கிய-மானவர்களையும் இவர்களில் கடைசியில் குறிப்பிடப்பட்டவரின் முக்கியத்-துவத்தையும் குறிப்பிடுவது என்பது நன்கு அறிந்ததாகும். இந்த விஷயத்தில் இதற்குச் சமமான முறையில் இன்னொரு விஷயம் உள்ளது. அது என்ன-வெனில், இந்த முக்கியத்துவம், உரிய காலத்தில் எதிர்த்திசையில் செயல்பட்டது என்பதும், இந்தச் செயல்பாடு ஐரோப்பிய மொழிகளுக்கு முன்மாதிரிகளின் முக்கியத்துவத்தைக் காட்டு-கின்றன; தமிழ் குறித்த விளக்கங்-கள் உரிய காலத்தில் உள்நாட்டு உரையாளர்களால் எடுத்துரைக்-கப்படுகின்ற வகையில் இருந்தன என்பதுமாகும்.
நான் திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட காலத்திய (1550_1950) ஐரோப்பிய தமிழ் இலக்கண வல்லுநர்கள், இந்நாட்டு பாரம்பரியம் குறித்த தங்களுடைய அறிவு ஞானங்களுக்காக அவற்றைக் கற்றுக்-கொடுத்தவர்களுக்குக் கடமைப்பட்டவர்க-ளானார்கள். இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இத்தகைய குருக்கள் சிலர் அறியப்பட்டுள்ளனர்; உதாரணமாக ராமானுஜ கவிராயர்; இவரை, இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐரோப்பியத் தமிழ் அறிவாளர்கள், தங்களுடைய ஆசிரியராகக் கொண்டிருக்கும் நல்ல அதிருஷ்டத்தைக் கொண்டிருந்தனர்; அவர்களில் ஜி.யு.போப் (1820_1908) சி.டி.இ. ரெனியஸ் (சி.ஜி.ணி ஸிலீமீஸீவீus) ஆகி-யோரும் இருந்தனர். ஏனைய அறிவாளர்களில் ஒருவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மிஷனரிமார் மிரோன் வின்ஸ்லோவ் (விவீக்ஷீஷீஸீ கீவீஸீsறீஷீஷ்) (1789_1864) என்பவராவார்; இவர் இலக்கண அல்லது நிகண்டு மரபுகள் குறித்த (லிமீஜ்வீநீஷீரீக்ஷீணீஜீலீவீநீணீறீ) ஆய்வுப் பணியில் ராமானுஜ கவிராயரிடமிருந்து பெற்ற உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் டபிள்யு.-ஹெய்ச். ட்ரூ (கீ.பி. ஞிக்ஷீமீஷ்) என்ற பாதிரியார் திருக்குறளை ஆங்கில மொழியாக்கம் செய்வதில் ராமானுஜ கவிராயரால் உதவி செய்யப்பட்டார்.  ராமானுஜ கவிராயர், நன்னூல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; அந்நூல் மீது கற்றறிந்த கருத்துரையன்றை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
எனது இந்த ஆய்வுக்கட்டுரை தெற்காசியா-வின் காலனியாட்சியின் போது  எழுதப்பட்ட இலக்கணங்கள் குறித்ததாகும். இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து நூலாசிரியர்-களின் அணுகுமுறையில் ஒருமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அவர்களின் வாழ்க்கைக்கான தொழில் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 40 ஆண்டுகளில் ஆசியமொழி-களின் இலக்கண ஆசிரியர்கள் ஒரு முழு நேர பல்கலைக்கழக ஆசிரியர்களாக இருப்பதையும் காணமுடிகிறது.
ஒருவர் முக்கியத்துவப்-படுத்திக் காட்டுவதற்கு விரும்பும் 1950ஆம் ஆண்டுக்கு முந்தைய நூல்களில் ஒரு குறிப்பிட்ட அளவு விகிதம், மட்டுமே ஒரு குறிப்பிட்ட பெருநகரத்தில் கிடைக்கும். ஒரு முக்கிய பங்களிப்பானதாக அறியப்பட்டுள்ள ஒரு நூல் உடனடியாகப் பெறக்கூடியதாக இல்லாதபோது அதுபற்றி மேலோட்டமான தகவல் மட்டுமே கொடுக்க முடியும். உதாரணமாக ஜெர்மானிய மிஷனரிமாரும் அறிவாளருமான கார்ல்கிரால் (1814 _ 1864) என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்-பட்ட தமிழ் இலக்கண நூலின் ஒரே படி (நீஷீஜீஹ்) ஜெர்மானிய தேசிய நூலகத்தில் இருக்கலாம்.
வெளியிடப்பட்ட தமிழ் இலக்கணநூல்கள் முக்கியமாக இரண்டு வகைகளாகும். முதலாவது வகையில் பிரதானமாக மொழி குறித்துப் பயில்பவருக்கான பயிற்சிப் புத்தகமாகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்களாகும். இரண்டாவது வகையில், பெரிதும் நோக்கு இலக்கண நூல்க-ளாகப் (ஸிமீயீமீக்ஷீமீஸீநீமீ நிக்ஷீணீனீனீணீக்ஷீs) பயன்படுத்தப்படு-வதை நோக்கமாகக் கொண்ட நூல்களாகும். இந்த வகை நூல்கள் ஒருவர், ஒரு மொழித்-திறனைப் பெறும் பொருட்டு முறையாக பயிலப்-படுபவையாகும். இந்தக் கட்டுரையில் இந்த இரு-வகை இலக்கண நூல்களும் விவாதிக்கப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் தமிழ் பயின்ற வெளிநாட்டவர்களில் பெரும் பகுதியினர் கிறிஸ்துவ மதப்பரப்பாளர்-களாகவோ, ஆங்கில நிர்வாகிகளாகவோ இருந்தனர்; இந்த நிர்வாகிகள் ஏதோ ஒரு ஏகாதிபத்திய ரீதியான ஐரோப்பிய ஆட்சியின்-கீழ் பணியாளர்களாக இருந்தனர். மேலும் தமிழ்மொழியைப் பயின்ற நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்களிலோ அல்லது உள்ளூர் அரசு அலுவலகங்களிலோ பணி புரிந்தவர்கள் மட்டுமன்றி நீதிபதிகளும் நீதித்துறை நிர்வாகத்-திற்குப் பொறுப்பானவர்களும் உள்ளடங்குவர். டாக்டர்களுக்குக் கூட, கீழே குறிப்பிடப்பட்ட ஒரு புத்தகம் காட்டுவது போல, தமிழில் பேசவும் தமிழைப் புரிந்து கொள்ளவும் தேவை இருந்தது. இவை எல்லாவற்றிற்குமே தமிழ்மொழியைப் பயில்வது என்பது நடைமுறைத்தேவையாக இருந்தது. எனினும் அவர்களில் பெரும்பகுதி-யினர் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகிய-வற்றின் உணர்ச்சிபூர்வ நேசிப்பாளர்களானார்கள்.  எனவே, மற்றவர்கள் பயன்பெறத்தக்க வகையில் இலக்கணநூல்கள் எழுதுவது என்பது நேசத்திற்-குரிய பணியானது.
ஐரோப்பிய மொழிகளில் முதலாவதாக வெளியிடப்பட்ட தமிழ் இலக்கண நூல் நிக்ஷீணீனீனீணீtவீநீணீ ஞிணீனீuறீவீநீணீ (1716) என்ற நூலாகும். இந்நூல் டேனிஷ் மிஷனின் ஜெர்மன் உறுப்பின-ராக இருந்த பேத்தோலோமேயஸ் சீகன்பால்க் (ஙிணீtலீஷீறீஷீனீணீமீus ஞீவீமீரீமீஸீதீணீறீரீ) (1682_1718) என்பவ-ரால் எழுதப்பட்டது. இந்நூல் சேக்ஸோனி (நவீன ஜெர்மனி)யில் ஹாலே (பிணீறீறீமீ)யில் வெளியிடப்பட்டது.
தமிழ் எழுத்து அச்சு உருவங்கள் (tஹ்ஜீமீ யீஷீஸீts) ஐரோப்பாவில் 300 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்கின்றன என்பதற்கு ஒரு தெளிவான அடையாளமாகும். மேலும், தமிழ் வரிவடிவம் (ஷிநீக்ஷீவீஜீt) அச்சில் பயன்படுத்தப்பட்டது இது முதல் தடவையல்ல. ஏனெனில், இது 1577ஆம் ஆண்டே நிகழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. சீகன்பால்க், தமிழ்மொழியின் கட்டமைப்புக் குறித்த தனது கருத்துகளை தமிழ் எழுத்துகள், அவற்றின் உச்சரிப்பு, பெயர்ச்சொல் (இவற்றிற்காக 4 வேற்றுமைப்பாகுபாடுகளை (ஞிமீநீறீமீஸீsவீஷீஸீ) முன் வைக்கிறார். பண்படை (கிபீழீமீநீtவீஸ்மீs), வினைச்-சொற்கள் (க்ஷிமீக்ஷீதீs), மொழியின் சொற்றொட-ரியல் (ஷிஹ்ஸீtணீஜ்) ஆகியவை குறித்து விளக்குகிறார். மேலும் பல்வேறு தொடர்வரிசை அத்தியாயங்-களில் மிகச் சாராம்சமான அத்தியாயம் சொற்-றொடரியலூடான வினைச்சொற்கள் பற்றிய ஒரு அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை வெறும் 11 பக்கத்தில் மட்டுமே எழுதியுள்ளார். இதற்கு அவரால் பின்பற்றப்பட்ட முன்மாதிரி, கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளுக்கான ஐரோப்பிய இலக்கண நூல்களா-கும். இதில் அன்றைய எழுத்து மொழியினை விளக்க வேண்டும் என்னும் அவரது விருப்பம் தெளிவாக இருந்தது; எனினும் குறிப்பிட்ட வடிவங்களில் சில பேச்சு வழக்கு மொழிக்கு (சிஷீறீறீஷீஹீuவீணீறீ லிணீஸீரீuணீரீமீ) உரியதாகும். உதாரணம் ஒண்ணு, மண்ணு, அஞ்சு, வேணும் ஆகியனவாகும். இப்பேச்-சு வழக்கு வடிவம், எப்போதாவது ஒரு மாற்றாகக் கொடுக்-கப்படுகிறது. உதாரணம்: படித்தென், படிச்சென். இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும்; அது என்னவெனில், அக்காலக்கட்டத்தின் எழுதும் முறையானது, நெடில் மற்றும் குறில் எகரத்தையும், நெடில் மற்றும் குறில் ஒகரத்தை-யும் வித்தியாசப்படுத்தியதில்லை. இவை எழுதும்-முறையில் முதலில் இத்தாலிய சேசு சபை பிரச்சாரகர் கேஸ்டன்ஸோ குய்ஸ்செப் பெஸ்கி (சிணீstணீஸீக்ஷ்ஷீ நிuவீsமீஜீஜீமீ ஙிமீsநீலீவீ) (1680 _ 1747) என்பவரால் வித்தியாசப்படுத்தப்பட்டது. பெஸ்கி, இலத்தீன் மொழியில் எழுதிய பல நூல்களில் அவருடைய கான்ஸ்டேன்டினுஸ் ஜோஸஃபஸ் பெஸ்கியஸ் (சிஷீஸீstணீஸீtவீஸீus யிஷீsமீஜீலீus ஙிமீsநீலீவீus) என்ற பெயரில் இலத்தீன் மொழிமயமாக்கப்-பட்ட  வடிவத்தைப் பயன்படுத்தினார். பின்னர் வந்த இலக்கண வல்லுநர்களைப் போலல்லாமல் சீகன்பால்க் “செந்’’தமிழுக்கும் “கொடுந்’’தமிழுக்கு-மிடையேயான வித்தியாசத்தை எழுத்திலும் பேச்சிலும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் அவரது ஈடுபாடு (ஜிணீstமீ) அதிகமான முறைசாரா வகைப்பாடு(க்ஷிணீக்ஷீவீமீtஹ்)களுக்கானதாக இருந்தது. இது இவருடைய (சீகன்பால்கினுடைய) பைபிள் மொழியாக்கம், கண்ணியக் குறைவாக உள்ளது என்ற பெஸ்கியின் விமர்சனத்திற்கு இட்டுச் சென்றது (1714) என்பதில் ஐயமில்லை. இந்த இருவரின் மிக வித்தியாசமான அணுகுமுறைகள், அதாவது  கத்தோலிக்கர்கள், மற்றும் பிராட்-டெஸ்டன்ட்களிடையே ஒரு கேள்வியை எழுப்-பியது;  அது என்னவெனில் (பைபிளின்) புனித-மான முக்கியப்பகுதிகளை (ஜிமீஜ்t) மொழியாக்கம் செய்வதற்குப் பொருத்தமான தமிழ் வகை எது என்பதேயாகும். இதில், குறிப்பிட்ட முக்கியமான இறைமையியல் (ஜிலீமீஷீறீஷீரீஹ்) குறித்த சொற்களை மொழியாக்கம் செய்வதற்கு எந்த மொழி-வகைப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கடுமையான பிரச்சனையையும் இது உள்ளடக்-கியது. இந்தப் பிரச்சனை சர்ச்சைக்குரிய திருவிவிலியம்(1995) வெளியீட்டின்வழி இப்போதும் நம்முடன் உள்ளது. லூத்தெரன் மதப் பரப்பாளர்கள், தென்னிந்தியாவில், கத்தோலிக்கர்களால் முந்தப்பட்டிருந்தார்கள்; அவர்கள் ஒரு தனி ப்ராட்டெஸ்டன்ட் அடையாளத்தை நிலை நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இது, மொழி குறித்த அவர்களுடைய அணுகு-முறை மீது ஒரு தாக்கத்தைக் கொண்டிருந்தது. எனினும், இந்தப் பிரச்சனை பொருத்தமான-தென்றாலும் நம்முடைய மைய ஆய்வுப் பொருளிலிருந்து வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடும்.
சீகன்பால்க் (ஞீவீமீரீமீஸீதீணீறீரீ) எழுதிய இந்த முன்னோடி இலக்கண நூல், முதலில் வெளியிடப்பட்டிருந்தபோதிலும், ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட முதல் தமிழ் இலக்கண நூலாக இல்லை. லிஸ்பனில் உள்ள போர்த்துக்கீசிய தேசிய நூலகத்தில் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதி “கிக்ஷீtமீ பீணீ லிவீஸீரீuணீ விணீறீணீதீணீக்ஷீ” என்ற தலைப்பில் உள்ளது. உண்மையில் அது தமிழைப் பற்றிய-தாகும்; இந்நூலின் ஆசிரியர் அநேகமாகச் சேசுசபைப் (யிமீsuவீt) பாதிரியார் என்ரிக்யு ஹென்ரிக்யுஸ் (ணிஸீக்ஷீவீஹீuமீ பிமீஸீக்ஷீவீஹீuமீs) (1520_1600) என்பவராவார். “மலபார் அகரவரிசையின் எழுத்துக்கள்’’ (ஜிலீமீ லிமீttமீக்ஷீs ஷீயீ tலீமீ விணீறீணீதீணீக்ஷீ ணீறீஜீலீணீதீமீt) மட்டுமின்றி, தமிழ் உதாரணங்கள் அனைத்தும் ரோமானிய எழுத்துப் பெயர்ப்பில் (ஜிக்ஷீணீஸீsநீக்ஷீவீஜீtவீஷீஸீ) கொடுக்கப்பட்டுள்ளன. இது திட்டமுறையானது என்பதைக் காட்டிலும் பாவியல் கலைத் திறம் கொண்டதாக (மினீஜீக்ஷீமீssவீஷீஸீவீstவீநீ) உள்ளது. பெயர்ச்சொல் வேற்றுமைப் பாகுபாடுகள், பண்படைகள், பதியம் பெயர்ச்-சொல், வினைச்சொல், மூலச்சொற்கள் (ஒன்பது), வினையெச்சங்கள் (மிஸீயீவீஸீவீtவீஸ்மீs) ஆகியவை குறித்துத் தொடர் பிரிவுகள் உள்ளன. அதாவது இந்த நூல் பகுதியாகவும் முழுமை பெறாமலும் உள்ளது.
மேலும் அக்காலத்தில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் இலக்கண நூல்கள் குறைந்தபட்சம் இரண்டு இருந்தன; அவை சேசுசபை பாதிரியார்-களால் எழுதப்பட்டவை. அந்நூல்கள், கையெழுத்துச் சுவடிகள், வடிவத்தில் (விணீஸீusநீக்ஷீவீஜீt யீஷீக்ஷீனீ) மீட்கப்பட்டன. அவற்றில் முதல் நூல் பாண்டிச்சேரியில் பாதிரியார் ஒருவரான டிலேஹெய்ன் என்பவரால் எழுதப்பட்டது; இது 1782 இல் எழுதி முடிக்கப்பட்டது. அதன் 92 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப்பிரதி பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டதாகும். பாதிரியார் காரோலஸ் ப்ரிஸிக்ரில் (1718 _ 1875) என்பவரால் எழுதப்பட்ட துண்டுதுண்டான தமிழ் இலக்கண நூலின் கையெழுத்துப் பிரதிகள் செக் குடியரசின் தேசிய நூலகத்தில் உள்ளன.
ஹென்ரிக்குயுஸ் (பிமீஸீக்ஷீவீஹீuமீs), சீகன்பால்க் ஆகிய இருவரின் நூல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ் இலக்கணம் குறித்து வெளியிடப்-பட்ட குறிப்பானது, மலபார், கோரமண்டல் கடற்கரைகள் ஆகியவை பற்றிய  பெருமளவி-லான பயணக்குறிப்பு நூலில் காணப்பட்டது; இந்தப் பயணக் குறிப்பு நூலை யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ஒல்லாந்து நாட்டு மிஷனரியான பிலிப்பேல்டே (1632_1671) என்பவர் வெளியிட்-டார். (அவர் இந்நூலை இலத்தீன் மயமாக்கப்-பட்ட தனது பெயரான பிலிப்பஸ் பேல்டேயஸ் என்ற பெயரில் வெளியிட்டார்.)
1672ஆம் ஆண்டு தொடக்கத்தில் டச்சு மொழியில் அந்நூலை எழுதினார்; அதே ஆண்டில் அந்நூல் ஜெர்மனில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது; 1704இல் ஆங்கிலத்-திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. முறை-யான இலக்கணமானது பெயர்ச்சொல் உருத்-திரிபுகள் ஆறையும் (sவீஜ் நீணீsமீs) இவற்றில் நான்கு பகுதி ஐந்தாம் வேற்றுமைகளையும் (கிதீறீணீtவீஸ்மீ) கொண்டுள்ளது. வினைத் திரிபுக்கான (க்ஷிமீக்ஷீதீணீறீ நீஷீஸீழீuரீணீtவீஷீஸீ) ஒரே வகைப்பட்ட எழுத்துமுறை வடிவங்களின் ஓரினக்கூட்டுகளை கொண்டிருந்-தது. மேலும் அது (ஷிவீனீவீறீணீக்ஷீ sமீts ஷீயீ யீஷீக்ஷீனீs) காட்டுகின்ற ஒரு “முதல் வேற்றுமை பாகுபாட்டு’’ பெயர்ச்சொல் (“திவீக்ஷீst ஞிமீநீறீமீஸீstவீஷீஸீ” ஸீஷீuஸீ) குறித்த மேற்கோள் வாய்ப்பாடு (றிணீக்ஷீணீபீவீரீனீ) ஒன்றையும் கொண்டுள்ளது. ஒரு மொழியின் இந்த வகை மாதிரிகளைத் (ஷிஜீமீநீவீனீமீஸீs) தொடர்ந்து கடவுளின் வழிபாடு, திருமறைக்கோட்பாடு (சிக்ஷீமீமீபீ) ஆகியவற்றின் வாசகமும் வருகின்றது. இங்கே அனைத்துத் தமிழ் எடுத்துக்காட்டுகளும் பாவியல் கலைத்திறம் கொண்ட (மினீஜீக்ஷீமீssவீஷீஸீவீstவீநீ) ரோமன் எழுத்துப் பெயர்ப்பில் (ஜிக்ஷீணீஸீsநீக்ஷீவீஜீtவீஷீஸீ) உள்ளன; இந்தப் படியை வியாக்கியானம் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதானல்ல. இது, தமிழ் எழுத்துக்களை அளிக்கும் மிகச்சிறப்பு வாய்ந்த 2 பக்க விரிவும் (ஷிஜீக்ஷீமீணீபீ) 2 வரிகளுக்-கிடையே இலத்தீன் மொழி வாசகத்துடன் கடவு-ளின் வழிபாடு, திருமறைக்கோட்பாடு ஆகியவற்-றின் வாசகங்களின் மற்றொரு 2 பக்க விரிவும் இலக்கண நூலுக்கு முன்னதாகவே வெளிவந்தன என்பதைக் கவனத்தில் கொண்டால் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாகும்.
புத்தகத்தின் இந்தப் பகுதிக்கான முன்னுரை-யில், பேல்டேயஸ், ஒரு முழுமையான இலக்கண நூலைப் பின்னர் வெளியிடுவதற்கான அவரது திட்டத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் 1671இல் நிகழ்ந்த அவரது மரணம் காரணமாக அவரது திட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் போகிறது; அவர் வெளியிட விருப்பப்பட்டிருந்த நூலுக்கான கையெழுத்துப் பிரதி காணாமல் போனதாகத் தெரிகிறது.
இதுவரை விவாதிக்கப்பட்ட இலக்கண நூலிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகி இருக்கும்; அது என்னவெனில், “மலபார்’’ என்ற பெயர் தமிழுக்கான அறிமுகமாகப் பயன்படுத்தப்படுவது முற்றிலும் பொதுவானதாக இருந்தது என்பதுதான். எனினும் இந்த வார்த்தை குறித்து, ராபர்ட் டுரும்மோன்ட் என்பவரின் நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ tலீமீ விணீறீணீதீணீக்ஷீ லிணீஸீரீuணீரீமீ (1799) குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்நூல் மலையாளம் பற்றியதாகும். தமிழ்மொழியைக் குறிப்பிடுவதற்கு “மலபார்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் இலக்கண நூல் ஒன்று சென்னை-யில் இருந்த ஆங்கிலேய மதப்பிரச்சாரர்களால் 1778இல் வெளியிடப்பட்டது.
விஷயம் என்னவோ தெளிவாக இல்லாவிட்-டா-லும் இந்தச் சிறு நூல் (பக்கங்கள் 63). ஆனால் மிகச்சிறந்த ஆற்றலுடன் தயாரிக்கப்பட்ட இலக்கண நூல் டேனிஷ் மதப் பிரச்சாரக் குழுவின் உறுப்பினர்களான ஜோஹான் ஃபிலிப் ஃபேப்ரிசியஸ் (1711_1791), ஜோஹான் கிறிஸ்டியன் ப்ரெய்தாப்ட் (மரணம் 1783) ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நூலின் ஆசிரியர்கள் அவர்கள் தாம் என்ற கருத்துக்கு ஆதாரமான விவாதங்கள் ஒரு உண்மை விவரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்; அது என்னவெனில், விணீறீணீதீணீக்ஷீ ணீஸீபீ ணிஸீரீறீவீsலீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ் என்ற நூல் பேப்ரிசியஸ், ப்ரெய்தாப்ட் ஆகிய இருவரால் எழுதப்பட்டது என்று இப்போது அறியப்பட்டுள்ளது. ஆனால் அந்நூலின் முதலாவது (1779), இரண்டாவது (1786) பதிப்புக்களில் அந்நூலை அவர்கள்தாம் எழுதினார்கள் என்று கூறப்படவில்லை;   மூன்றாவது பதிப்பில்தான் அவர்கள் எழுதியமை ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், விவாதத்தில் உள்ள இலக்கணநூல் போன்றே, இந்த அகராதி (ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) சென்னை வேப்பேரி-யில் அச்சடிக்கப்-பட்டது. அவர்கள் இருவரும் அந்த இருநூல்-களின் எழுத்தாண்மையில் பொதுவான பங்கு கொண்டவர்கள் என்று நம்பச் செய்வதாக உள்ளது; எனினும், இது அப்படித்தான் என்பதற்கு எந்த நிரூபணமும் இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
சீகன்பாலின் இலக்கணநூல், ஒரு சிறு எண்ணிக்கையிலான சொல் வடிவங்களை (கீஷீக்ஷீபீ யீஷீக்ஷீனீ) உள்ளடக்கியுள்ளது. இந்தச் சொல் வடிவங்கள் பேச்சு வழக்கானவை என்ற போதி-லும் அவர் (சீகன்பால்க்) பேச்சு வழக்கு மொழி குறித்து விளக்கமளிப்பதாக எந்த வகையிலும் குறிப்பிட்டுக் கூறியதில்லை. எனினும் அநேகமாகப் பேச்சுத் தமிழ் அல்லது பேச்சு வழக்குத் தமிழாக உரிமைகோரும் ஏராளமான நூல்கள் கடந்த 200 ஆண்டுகளில் தோன்றி-யுள்ளன. இந்நூல்களின் வாசகங்களை படித்துப் பரிசீலித்ததில் தெரியவருவது என்னவெனில், அநேகமாக, அந்நூல்கள் வழங்கும் தமிழ் வகை-யானது ஏகமாக  நவீன எழுத்துத் தமிழ் வகை-தான் என்பதாகும். உதாரணமாக, மதப்பரப்பாள-ரான ஏ.ஹெய்ச். ஆர்டென் என்பவ-ரால் 1891இல் எழுதப்பட்ட கி றிக்ஷீஷீரீக்ஷீமீssவீஸ்மீ நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ சிஷீனீனீஷீஸீ ஜிணீனீவீறீ என்ற நூலின் 4வது பதிப்பைத் திருத்திய பொறுப்பாளர் ஏ.சி.கிலேய்டன் (பிறப்பு 1869) முன்னதாக கிஸீ மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ sஜீஷீளீமீஸீ ஜிணீனீவீறீ (1926) என்ற நூலை எழுதினார். அந்த நூல் முற்றிலும் நவீன எழுத்துமொழி குறித்து விவாதிக்கிறது. இதுதான் ஏராளமான புத்தகங்-களின் உண்மை நிலைமை; இந்தப் புத்தகங்க-ளெல்லாம் தமிழ் பேசும் பகுதியில் தங்களுடன் பணிபுரியும் தமிழர்க-ளுடன் அன்றாடப் பணிகள் குறித்துப் பேசுவ-தற்கு உதவும் வகையில் எழுதப்பட்டன. இந்த வகையில்தான் சி. அப்பாஸ்வாமி பிள்ளை என்பவர் கிஸீரீறீஷீ - ஜிணீனீவீறீ விணீஸீuணீறீ ணீஸீபீ றிலீக்ஷீணீsமீ ஙிஷீஷீளீ என்ற நூலை எழுதினார்; அந்நூல், “அன்றாட வாழ்க்கை குறித்த தொடர் உரையாடல்களை’’க் கொண்ட-தாகும், அவைகளில் ஒன்றுகூட வழக்கமான உரையாடலில் கேட்கப்படுவதாக இல்லை.
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த ஐரோப்பியர் குழு ஒன்று, தேயிலைத் தோட்டங்-களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு வாய்வழி மூலமாகத் தமிழில் தகவல்களைத் தெரிவிக்க வேண்டி நூல்களை எழுத முயற்சித்-தனர். அவர்களுக்காகவே, அவசர அவசரமாகப் பல நூல்கள் எழுதப்பட்டன. உதாரணம் பாதிரியார் வில்லியம் கிளார்க்கினுடைய கி பிணீஸீபீ ஙிஷீஷீளீ ஷீயீ ஜிணீனீவீறீ usமீ ஷீயீ நீஷீயீயீமீமீ ஜீறீணீஸீtமீக்ஷீs (1872),        ஏ. ஜோசப்பினுடைய ஜிலீமீ ஜீறீணீஸீtமீக்ஷீs நீஷீறீறீஷீஹீuவீணீறீ ஜிணீனீவீறீ நிuவீபீமீ (1872) ஆகியனவாகும். இந்த ஜோசப் ஒரு தமிழர். கிராம முனிசீப்பாகப் பணிபுரிந்தவர். அவர் கையெழுத்துப் பிரதியிலும் ரோமானிய மொழி-மயமாக்கப்பட்ட வடிவத்திலும் எழுத்து மொழியை வழங்கினார். அவர், தமது நூலின் இரண்டாவது பகுதியான “தமிழில் பேச்சு வழக்குக் கலை’’ என்பதில், வெளிநாட்டவர்கள் மற்றும் கூலிகளின் கொச்சையான பேச்சுகள் மற்றும் சொற்றொடர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார். இதேபோக்கு, ஐரோப்பாவில் விற்பனைக்காக வெளியிடப்பட்ட நூல்களிலும் காணப்பட்டது. அத்தகைய நூல்கள், எம்.டிஸில்வா விக்ரமசிங்கேயின் ஜிணீனீவீறீ ஷிமீறீயீ  ஜிணீuரீலீt (1906), ஜிணீனீவீறீ நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷிமீறீயீ-ஜிணீuரீலீt (1906) போன்றவையாகும். விக்ரமசிங்கே (1865 _ 1937) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு விரிவுரையாளராகப் பணி-புரிந்தவர். அவர் இந்த 2 நூல்களில் முதல் நூலை, இலக்கணத்தை முழுமையாகக் கற்றறிவதற்கு நேரமில்லாதவர்களுக்காகவும் அல்லது அதற்கு உடன்படாதவர்களுக்காகவும் தொழில் ரீதியாகவோ அல்லது மகிழ்ச்சிக்-காகவோ பேச்சுத் தமிழ் தேவைப்பட்டவர்களுக்-காகவும் எழுதினார். அவரது இரண்டாவது புத்தகமானது, “தமிழ்ப் பிரதியிலும் அதனை அப்படியே ரோமன் எழுத்திலும் அவர், மிகக்குறுகிய காலத்தில் பேச்சு வழக்குத் தமிழின் இலக்கண அறிவு ஞானத்தைப் பெறுவதற்கு விரும்புவர்களுக்குத்’’ தேவையான எடுத்துக்காட்-டுகளை அளிக்கிறது. பேச்சுத்தமிழை விளக்கு-வதாகவோ அல்லது கற்றுக் கொடுப்பதாகவோ கூறிக்கொள்ளும் இந்த வகைப்பட்ட நூல்களில் மிகவும் விதிவிலக்கானது, கீ.ணி.ஙி. வெல்ஸ் என்பவரின் சிஷீஷீறீஹ் ஜிணீனீவீறீ என்ற நூலாகும்; இந்நூல் கொழும்பில் 1915இல் வெளியிடப்-பட்டது. தமிழில் எழுதும் முறையைப் பயன்-படுத்தாத இந்த நூலிலிருந்து கொடுக்கப்படும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் உரையாடலுக்கான தமிழை அளிப்பதற்கு மேற்கொள்ளும் ஒரு உண்மையான முயற்சியைக் காட்டும்:
லிமீணீயீ - எலெ
கீஷீனீணீஸீ - பும்பளெ
திஷீக்ஷீ னீணீstமீக்ஷீ - தொரெய்க்கி
னீust sமீஸீபீ - அனுப்பொனும்
ஒரு இலக்கண நூலில் தமிழ்க் கையெழுத்துப் படிவத்தைப் பயன்படுத்துவதற்கு முதல் கடும் முயற்சியை மேற்கொண்டவர் இந்திய சிவில் பணி அதிகாரியான பெர்சி மாக்குயீன் (றிமீக்ஷீநீஹ் விணீநீஹீuமீமீஸீ) (1943) என்பராவார்; பேச்சு வழக்கு மொழியைக் கற்பதற்கு உதவுவதற்கான திட்டத்-துடன் இந்த முயற்சியை அவர் மேற்கொண்-டார். அவர், தனது முன்னுரையில் கீழ்க்கண்ட-வாறு விளக்குகிறார்.
“அனைத்து வர்க்கங்களையும் சேர்ந்த தமிழர்களும் தங்களிடையே பேசும்மொழி கொச்சைத் தமிழாகும். சென்னை மாகாணத்தின் வேறுபட்ட பகுதிகளில் பேச்சுத் தமிழில் அந்தந்தப் பகுதி மக்களின் பேச்சு வழக்குகள்  எனக் கூறப்படுபவை இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் வெவ்வேறு சாதிகளாலும் பேசப்-படும் பேச்சுமுறைகளுக்கிடையே குறிப்பிட்ட அளவில் வேறுபாடுகள் இருப்பது போன்றதாகும். இந்தச் சாதிகள் அந்தந்தப் பகுதியின் பேச்சு-மொழிகளிலும் உச்சரிப்புகளிலும் ஒன்றிலிருந்து ஒன்று சிறிதளவு வேறுபடுகின்றன. ஆனால், அவை பரஸ்பரம் புரிந்து கொள்வதில் ஒரே தன்மையானதாக உள்ளன; மேலும் அவை, கல்வி அறிவு இல்லாத மனிதனுக்குப் பெருமளவில் புரிந்து கொள்ள முடியாததாக உள்ள உரைநடைத் தமிழ் விஷயத்தில் ஒன்றையன்று பெருமளவில் ஒத்த தன்மை கொண்டுள்ளன. என்னுடைய எடுத்துக்காட்டுகள் மதுரை மாவட்டத் தமிழிலிருந்து எடுக்கப்பட்டவை-யாகும்.’’
“என்னுடைய சொந்த முன்னேற்றத்தைப் பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளிய தடைகளில் குறைந்தபட்சம் சிலவற்றையேனும் கற்பவரின் பாதையிலிருந்து (இந்தப் புத்தகம்) நீக்கும் என நான் நம்புகிறேன்.’’
மாக்குயீன் தனது கையெழுத்துப் பிரதியில் பயன்படுத்தியவைக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:
நான் ஏன் வந்தேன்னு அவென் கேட்டான்
அவென் போகலெ
நான் போகணும்
சில குறிப்பிட்ட சிறப்பு நூல்கள் எடுத்துக்-காட்டுவதன்படி பார்த்தால் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகையதொரு அணுகு-முறையானது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும். பால் கவுஸியென், டாக்டர்-களுக்காக பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்தி-லும் எழுதிய உரையாடல் பயிற்சி நூல் (1904) எழுத்து மொழியிலிருந்து மட்டும் எடுத்துக்காட்-டுகளை அளிக்கிறது. அதாவது பெண்கள் அவர்களுடைய “பேச்சு வழக்குத் தமிழ்’’ (1859) அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவும் நோக்கத்தைப் பாதிரியார் எலிஜா ஹ¨லே (ணிறீவீழீணீலீ பிஷீஷீறீமீ) வின் புத்தகம் கொண்டிருந்ததைப் போல கவுஸியெனின் உரையாடல் பயிற்சிநூலும் எடுத்துக்காட்டுகளை அளிக்கின்றன.
அதே ஆண்டில் ஹ¨லெ (பிஷீஷீறீமீ)யின் நூலைப் போன்ற நூல் ஒன்று வெளிவந்தது; அது வெளிநாட்டவர் பயன்பாட்டுக்கானதாகும்; அது ஒரு இலக்கண நூல் இல்லைதான்; எனினும் அந்நூல் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த நூல்களில் குறிப்பாக றி. சிங்காரபாலவேந்தரம் பிள்ளையின் ஜிணீனீவீறீ ஸ்மீபீமீ - னீணீநீநீuனீ (1859)   நூலில் குறிப்பிடப்பட்டிருந்த தமிழின் வகைப்பாடுகள் பற்றிய பிரச்சினை சம்பந்தப்பட்டதாகும். இந்-நூலாசிரியரின் அறிமுகக் கருத்துகளில், வெளி-நாட்டவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட தமிழ் வகைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விமர்சனக் குறிப்பு ஒன்று உள்ளது.
ஒரு உண்மை விவரம் நன்கு தெரிந்ததாகும். அது என்னவெனில், மிகச்சில ஐரோப்பியர்கள் தமிழ் இலக்கியத்துடன் நெருக்கமானவர்களாக இருக்கலாம். உள்நாட்டு மக்களால் பேசப்படும் மொழியை ஒருவருக்கொருவருடனான பரிச்சயமான உரையாடலில் முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாகவோ அல்லது உள்நாட்டு மக்கள் தங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளச் செய்பவர்களாகவோ இருப்பார்கள் என்பதுதான். இந்த நடைமுறைக்கு ஐரோப்பிய மதப் பிரச்சாரகர்கள் கூட விதிவிலக்காக இல்லை என்று சொல்ல முடியும். இந்த விஷயத்தில் குற்றம் எதுவும் ஐரோப்பியர்கள் மீது சுமத்தப்பட முடியாது. ஏனெனில் நாம் மறைமுகமாகச் சுட்டிக்-காட்டுகிற வார்த்தைகளும் சொற்றொடர்-களும் அவர்களின் நூல்களில் காணப்படு-வதற்கில்லை; முன்ஷிகளும் கற்றறிந்த உள்நாட்ட-வர்களும் தங்களுடைய எழுத்து நடைகளில் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை; குச்சித்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற தவிர்க்கமுடியாத அறியாமை தான் தமிழ்மொழி சம்பந்தமாக ஐரோப்பியர்-களைக் கிழக்கு இந்தியர்கள் மற்றும் உள்நாட்டு மக்களுக்குத் தகுதி குறைந்தவர்களாக ஆக்குகிறது.
இவ்வாறு இந்த அறியாமையைச் சிங்கார பாலவேந்திரம்பிள்ளை கண்டித்தபோதிலும் அவர் தன்னுடைய புத்தகத்தின் ஆதாரப்பொருளான “கொச்சையான’’ உபயோகத்திற்கும் “சரியான’’ உபயோகத்திற்குமிடையே வித்தியாசப்படுத்து-வதில் கவனமாக இருந்தார்.
நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் காலம் (1550 _ 1950) முழுவதிலும் ஒன்றிரண்டு எடுத்துக்-காட்டு-களைத் தவிர்த்து, ஆதாரமான தமிழ் இலக்கண நூல்களோ அல்லது வழக்கமான அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தப்படும் பேச்சுவழக்குத் தமிழை தனது அடிப்படையாக எடுத்துள்ள தமிழ்ப் பயிற்சி நூல்களோ மிகக்குறைவாக இருந்தன; இந்த உண்மை விவரம், ஆர்வத்தை கிளப்பும் எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது. அக்கேள்விகளுக்-கு நம்மிடம் பதில் இல்லை; மேற்கொண்டு ஆராய்ச்சி இன்மைதான் இதற்குக் காரணம். இக்கேள்விகளில் ஒன்று, என்னவெனில், பேச்சுத் தமிழை அளிப்பதாக இலக்கண நூல்கள் கூறிக்கொள்கின்றன; ஆனால் உண்மையில் அவை வழக்கமான சமகாலத்திய உரைநடைத் தமிழ் பற்றியவைதாம்; இந்நூல்கள் பேச்சு வழக்குகளில் உள்ள வித்தியா-சங்களைக் காட்டுகின்றனவா என்பதுதான். அவை அவ்வாறு செய்தால், அந்த வித்தியா-சங்கள், வட்டாரப் பேச்சு வழக்குகளைத் தேர்வு செய்வதில் பிரதானமாக இருக்கும் என்ற யூகத்-தைத் துணிந்து மேற்கொள்ளலாம். மற்றொரு கேள்வி என்னவெனில், எழுத்து நடையானது ஏன் “பேச்சு’’ நடையாகப் பிரிக்கப்படுகிறது என்ப-தாகும். தெளிவாகச் சொல்வதானால், உண்மை-யான பேச்சு வழக்குத் தமிழானது, திருச்சபையில் உயரமான மேடையிலிருந்து பாதிரியாரால் பேசப்படும் பேச்சுத் தமிழுக்குப் பொருத்த-மானதாக இருந்திருக்காது; இதைச் சுட்டிக்-காட்டுவதற்குத் தமிழ்ப் பிரதிகளில் யதார்த்த-மான பேச்சு வழக்கிலான பேச்சை பிரதிநிதித்-துவப்படுத்துவற்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட முறை எதுவும் இல்லை; எனவே, “பேச்சுத்தமிழ்’’ குறித்த புத்தகங்களில் சாதாரணத் தமிழில் பேசுவதற்கே மதகுருக்கள் விரும்புவார்கள் என்பதைச் சுட்டிக்-காட்டுவதற்கு பொதுவாக விடப்பட்டுவிட்டதா அல்லது உண்மையான பேச்சு வழக்குத் தமிழை வெளிநாட்டவர்களுக்குக் கற்றுத் தருவதற்கு அது மிகவும் மோசமான வடிவத்தில் இருந்ததாகச் சிங்காரபெலவேந்திரம் பிள்ளை சாடைமாடை-யாகக் குறிப்பிட்டிருந்த ஒரு கருத்து இருந்ததா?
முந்தைய நாட்களில் ஐரோப்பிய மொழி-களில் தமிழ் இலக்கண நூல்களை வெளியிடு-வதில் தமிழ்மொழியின் பல்வேறுபட்ட வகை-களுக்கிடையே ஏற்பட்ட பிரதான வித்தியாச-மானது, பேச்சு வழக்கிற்கும் தரமான எழுத்து மொழிக்குமிடையேயானதல்ல. மாறாக இரண்டு பிரதான எழுத்துவடிவங்களுக்கிடையே-யானதாகும். ஹ¨லே, தன்னுடைய எளிமையான புத்தகத்தில் “ஏராளமான இலக்கண நூல்களின்’’ ஆசிரியர்களைக் குறிப்பிடுகிறார். அவர்கள் இத்தாலிய மொழியில் சி.ஜெ. பெஸ்கி, ஆங்கிலிகன் மிஷனின் ஜெர்மானிய உறுப்பினர் சி.டி.இ. ரீய்னியஸ், ஆங்கிலேயர்களான ராபர்ட் ஆண்டர்சன், ஜி.யு. போப், ஜெர்மானிய கார்ல்கிரால் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெய்ச்.ஆர். ஹோர்சிங்டன் ஆகியோராவர்.
இந்த மிக உயர்ந்த அறிவாளர்களில் திறமை-யுடையராக இருந்தவர் சேசுசபை பாதிரியார் பெஸ்கி ஆவார்; இவருடைய நூல்களுக்கான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜார்ஜ் வில்லியம் மாஹோனின் கருத்தின்படி, “பெஸ்கி, ஹ¦ப்ரு, கிரேக்கம், போர்த்துக்கீசியம், இலத்தீன், ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் இந்திய மொழி-களான சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி, பெர்சியன் ஆகியவற்றையும் தெளிவாகக் கற்றறிந்தார். கடைசி இரண்டு மொழிகளை மிகக்குறுகிய காலத்தில் அதாவது 3 மாதங்களில் கற்றார்’’. பெஸ்கி தமிழில் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அவை-களில் பாதிரியார் ஜோசப்பின் வாழ்க்கை குறித்த காவியக் கவிதையும் ஒன்றாகும்; அவர், லத்தீன் மொழியில், “நளினமான’’ “உயர்ந்தநடையிலான’’ செம்மையான வட்டாரப் பேச்சுமுறை குறித்தும் பொதுவான பேச்சுமுறை குறித்தும் தனித்தனிப் புத்தகங்கள் எழுதினார். பாதிரியார் ஜோசப் குறித்த புத்தகத்தை பெஸ்கி, 1730இல் எழுதி முடித்தார். ஆனால் அந்தப் புத்தகம், அவரது மரணத்திற்குப் பிறகு நீண்டகாலம் வரையிலும் அச்சில் வெளிவரவில்லை. அது, ஆங்கிலத்தில் பி.ஜி. பேபிங்டன் (1794 _ 1866) என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு 1822இல் வெளி-யிடப்-பட்டது; இந்த ஆங்கில மொழியாக்க நூல், பெஸ்கி இலத்தீன் மொழியில் எழுதிய மூல-நூலுடன் (இதனைப் பாதிரியார் எல்.பெஸ்ஸெ என்பவர் தொகுத்துச் சரிபார்த்தார்) 1917இல்  மறுபதிப்பு செய்யப்பட்டது. அதே சமயத்தில் பெஸ்கியின் கையால் எழுதப்பட்டிருந்த கையெழுத்துப் பிரதியிலிருந்து இலத்தீன் மூல உரை பாதிரியார் இஹ்ஃபெல்டு என்பவரால் சரிபார்க்கப்பட்டு அது வேறுபட்ட வடிவத்தில் 1876இல் எ. பர்னெல் (1840_1882) என்பவரால் வெளியிடப்பட்டது. இந்த நூலின் வரலாறு பற்றி ஆராய்ச்சியானது தேவை; ஏனெனில் இந்த இரண்டு வேறுபட்ட அச்சடிக்கப்பட்ட நூல்கள் தவிர்த்து பெஸ்கியின் ஏனைய கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்திலும் பாரிஸில் உள்ள பிரெஞ்சு தேசிய நூலகத்திலும்  வைக்கப்பட்டுள்ளன.  இந்த இரு இலக்கண நூல்களின் தலைப்புகளிலும் பெஸ்கி, வாசகர்களுக்குக் கொடுந்தமிழ், செந்தமிழ் என்ற வார்த்தைகளை அறிமுகம் செய்தார்; மேலும் அவர், இந்த வித்தியாசத்தை (கொடுந்தமிழுக்கும் செந்தமிழுக்குமிடையேயான வித்தியாசத்தை) நூல்களின் அர்ப்பணிப்புக் குறிப்புகளிலும் மூல உரைகளிலும் அழுத்தமாக கூறியுள்ளார். செம்மையான பேச்சு முறை (செந்தமிழ்) குறித்த நூலானது, ஒரு தனியான “தமிழ் (செவ்விலக்கிய) கவிதைகளுக்கு ஒரு அறிமுகம்’’ என்பதும் உள்ளடங்கியதாகும். தாழ்ந்தபேச்சு முறை (கொடுந்தமிழ்) குறித்த தாமதமான பதிப்பு பெஸ்கியின் வாழ்க்கைக் காலத்திலேயே வெளிவந்தது. அதில் ஜெர்மானிய லூத்தரென் மதப் பிரச்சாரகர் கிறிஸ்டோப் தியோடஸியஸ்-வால்தெர் (1699 _ 1949) என்பவரால் எழுதப்பட்ட “இலக்கண ரீதியான நோக்குகள்’’ என்ற ஒரு தொகுப்பு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்-டிருந்தது. இந்தப் பிற்சேர்க்கையானது தனித்-தலைப்புப் பக்கத்தை கொண்டிருந்தது; மேலும் தனிப்பக்க வரிசை எண்களும் குறிக்கப்பட்டிருந்-தன. இதற்கு, பெஸ்கியின் அனுமதி பெறப்பட-வில்லை என்று கூறப்படுகிறது. 
கொடுந்தமிழ் குறித்த பெஸ்கியின் நூலானது, தமிழ்க் கடிதங்கள், பெயர்ச்சொல், பதிலிப்பெயர்ச்-சொல், வினைச்சொல், சொற்றொடரியல் ஆகியவை குறித்த தொடர் அத்தியாயங்களை கொண்டுள்ளது. ஐந்தாவது அத்தியாயமானது பல்வேறு தலைப்புகளைக் (எண்கள் சார்ந்தவை உட்பட) கொண்டதாகும். இந்த நூலின் முதல்பகுதி செந்தமிழ் குறித்ததாகும். இந்த முதல் பகுதியானது நூலின் முதல் மூன்று அத்தியாயங்-களின் அதே நல்ல முன் மாதிரியைப் பின்பற்று-கிறது. அடுத்துவரும் இரண்டாவது பகுதி, தமிழ்க் கவிதைகளுக்-கானது. பெயர்ச்சொற்கள் குறித்த அத்தியாயத்தில் பெஸ்கி, ஐரோப்பிய மொழி சம்பந்தமாக நன்னூலின் கோட்பாடு-களைத் தாம் பின்பற்றி-யுள்ளதாக அவரே மிக விளக்கமாகக் கூறுகிறார்.
இதற்குப் பிந்தைய காலத் தமிழ் இலக்கண வல்லுநர்கள் பலரும் கொடுந்தமிழுக்கும் செந்தமிழுக்கு-மிடையேயான வித்தியாசத்தின் முக்கியக்கூறுகளை குறிப்பிட்டுள்ளனர். அதே சமயத்தில் அவர்கள் பொதுவாகக் கொடுந்தமிழ் பற்றி எழுதினர். மெட்ராஸ் சிவில் பணியாள-ரும், தனது உடல் நலமின்மை காரணமாக அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு இங்கிலாந்தில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனி-யின் கீழை நாடுகளுக்கான கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான ராபர்ட் ஆண்டர்சன், இரண்டு “பேச்சு முறைகள் குறித்த தனது மதிப்பீடுகளை (கிநீநீஷீuஸீts) ஒரேயரு புத்தகத்தில் (1821) இணைத்துத் தந்துள்ளார். இதில் மிகுந்த முன் மாதிரியாக விளங்கியவர் ஆங்கிலிகன் திருச்சபை மதப்பரப்பாளர் அமைப்-பின் ஜெர்மானிய உறுப்பினரான ரெய்னியஸ் ஆவார்; இவர், இலக்கணங்களை எழுதுவதைப் பொறுத்த வரையில், “கொச்சையான’’ பேச்சுவகை குறித்து மிகுந்த கவனம் செலுத்தியவருமாவார். இவர் பிந்தையகால இலக்கண நூல்கள் எழுத்து இலக்கணம் (ளிக்ஷீtலீஷீரீக்ஷீணீஜீலீஹ்), சொற்களின் தோற்றம் பற்றிய ஆய்வு (ணிtஹ்னீஷீறீஷீரீஹ்) (இதனை இப்போது நாம் சொல்வடிவியல் (விஷீக்ஷீஜீலீஷீறீஷீரீஹ்) என்று அழைக்க வேண்டும்) சொல்தொடர்வியல் (ஷிஹ்ஸீtணீஜ்) ஆகியவை குறித்துத் தனித்தனி அத்தியாயங்களைக் கொண்டிருப்பதற்கான முன்மாதிரிகளை ஏற்படுத்தினார். ஆரம்பகால இலக்கண நூல்கள் சிலவற்றுடன் அவர் முரண்-பட்டதால், தனது நூலின் முதல் அத்தியாயத்தில் தமிழ் எழுத்துப் பிரதிகளுக்காக இயல்பாகவே திட்டமிட்ட முறையில் ரோமன் எழுத்துப் பெயர்ப்பை (க்ஷீஷீனீணீஸீ tக்ஷீணீஸீsறீவீtமீக்ஷீணீtவீஷீஸீ) பயன்படுத்-தினார். அவர் மேலும் அதனை உபயோகிப்பவர்-களும் தமிழ் எழுதும் முறையைப் பயன்படுத்து-வார்கள் என்ற யூகத்தையும் ஏற்படுத்தினார்; கடைசி அத்தியாயங்களில் அவர், அந்த முறையை மட்டுமே தமிழ் வார்த்தைகள் அல்லது வாக்கியங்களுக்கான உதாரணங்களுக்காகப் பயன்படுத்தினார். அந்த நூலின் பிந்தைய பதிப்புகள் ஜெர்மனியில் வெளியிடப்பட்டுச் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.
“பொதுவான பேச்சு முறை’’ பற்றி எழுதிய-வர்கள், இந்த நூலைக் குறிப்பிடுவது தேவைப்-பட்டதால் அவர்கள் “செம்மையான பேச்சு-முறை’’யின் (பிவீரீலீ பீவீணீறீமீநீt) முக்கியத்துவம் குறித்-துத் தங்களுடைய புரிதலைக் காட்டுகிறார்கள். முழுமையான மரியாதையுடன் அதைப்பற்றிப் பேசுகிறார்கள். எனினும் இந்தப் போக்கிற்குக் குறிப்பிடத்தக்க விதிவிலக்கான நூல் ஒன்று இருந்தது; அந்நூல் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் மதப்பரப்பாளர்கள் (1789) எழுதியதாக நம்பப்படும் நூலாகும். ஆனால் அந்நூலை ஃபேப்ரிசியஸ், ப்ரெய்தாப்ட் ஆகியோர் எழுதியதற்கான சாத்தியமும் உள்ளது. 
இந்நூலின் ஆசிரியர்கள்  யாராக இருப்பினும் சுருக்கமாகக் கூறுவதானால் அவர்கள், தங்க-ளுடைய நூலைப் பயனுள்ளதாகப் பயன்படுத்த-வில்லை. அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள்: “செம்மையான, கவித்துவமான தமிழ்மொழி, சாதாரண மற்றும் பொதுவான தமிழிலிருந்து அதாவது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்-பட்ட தமிழிலிருந்து முற்றிலும் வேறுபட்ட-தாகும்; அதைக் கொண்டு நாம் செய்வதற்கு எதுவும் இல்லை. அதனை விரும்புபவர்களுக்கே விட்டு விடுவோம்’’.
ஜி.யு.போப், பெஸ்கி, பிஷப் ராபர்ட் கால்டுவெல் (1812_1891) போன்றவருமாவார்; கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (சிஷீனீஜீணீக்ஷீணீtவீஸ்மீ நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ tலீமீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ லிணீஸீரீuணீரீமீs) என்ற நூலின் ஆசிரிய-ராவார்; ஜி.யு.போப் தமிழுக்கு ஆற்றிய பணிக்காக அவருடைய மரணத்திற்கு நீண்ட காலத்திற்குப் பிறகு சென்னை கடற்கரையில் அவருடைய சிலையன்று நிறுவப்பட்டுக் கௌரவிக்கப்-பட்டவர்; அவருடைய இலக்கணம் சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் நவீன எழுத்துமொழி குறித்து எழுதப்பட்டவையாகும்; எனினும் அவருடைய (பிணீஸீபீ ஙிஷீஷீளீ) பிந்தைய பதிப்பு பல தனித்தனிப் பகுதிகளாக விஸ்தரிக்கப்பட்டது; அப்பிரிவுகளில் ஒன்று, குறள் குறித்து ஆய்வு பற்றிய குறிப்புகள் என்பதாகும். இந்த பிணீஸீபீ தீஷீஷீளீ, 1855இல் முதல் தடவையாக பிரசுரிக்கப்-பட்டது. இந்நூல், “பொதுவான பேச்சுமுறைக்கு ஒரு முழுமையான அறிமுகம்’’ என்ற நோக்குடன் எழுதப்பட்டதாகும். ஒரு தொடக்க அத்தியா-யத்தில் அவர், தனக்கு முந்தைய இலக்கண வல்லுநர்களின் பலத்தையும் பலவீனத்தையும் குறிப்பிடுகிறார். அதன்படி ஆண்டர்ஸனின் நூல், “ஒரு திறனுள்ள நூலாகும், ஆனால், அது, உள்நாட்டு இலக்கண நூல்களை அப்படியே பார்த்து எழுதப்பட்டிருப்பதால் அதனுடைய பயன்பாட்டுத் தன்மை குறைந்துவிட்டது.’’ ரெய்னியஸ் நூலைப் பற்றிக் கூறுகையில், அது “விஞ்ஞான ரீதியான இலக்கண நூல் இல்லை-யென்றாலும் அது தெளிவானதாகவும் பயனுள்ள நூலாகவும் உள்ளது. சொற்றொடரியல் போதாத-தாக உள்ளது. எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் இலக்கணத்திற்காகச் செய்யப்பட்டவை; தரமான நூலாசிரியர்களிடமிருந்து எடுக்கப்படவில்லை’’ கிராலின் நூலைப் பற்றி, “அது புதிதாக எதனையும் கொண்டிருக்கவில்லை, அதே சமயத்தில் அது நளினமான அறிவாண்மையாளர் போன்று ஆழமாக ஆய்வு செய்யும் நூலாகும்’’ பெஸ்கியின் நூலைப் பற்றி, “இந்நூல் பிந்தைய கால வெளியீடுகளால் ஒதுக்கப்பட்டு இருந்திருக்கிறது. எனினும் தமிழ் மாணவர்கள் இந்நூலை ஆழ்ந்து ஆராய்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
போப்பினுடைய நூலின் அடிப்படையான பகுதி இந்நூல்கள் அனைத்திலிருந்தும் (மேலே குறிப்பிடப்பட்ட நூலாசிரியர்களின் நூல்கள்) கணிசமாக மாறுபடுகிறது; ஏனெனில் இந்நூல் (போப்பின்நூல்) 101 தரமான பாடங்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பாடமும் பேச்சுவழக்கு, இலக்கணக் குறிப்புகள் மற்றும் பயிற்சிகளையும் கொண்டுள்ளது. இந்நூல் புரிந்து கொள்ளக்கூடியதாகவும், இதனுடைய திட்டமிட்ட இயல்பான அமைப்பின் காரணமாக இந்நூல் சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதற்கான இலக்கணமாகவும் கூட செயல்பட முடியும் என்று கருத முடிகிறது. அனைத்து வர்க்க மக்களாலும் பேசப்படுவதால் சாதாரண மக்களை அடைவதுதான், இந்நூலின் அறிவிக்கப்பட்ட நோக்கமாகும்’’ என்றாலும், இந்நூல் நவீன எழுத்து மொழியுடன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. இந்நூலின் ஒரு பாடம் (படிச்சேன் என்றும் போச்சு என்றும் தாழ்நிலை-மையில் உள்ள ஒருவர், ஒரு உயர்நிலைமையில் உள்ள ஒருவரிடம் சில சமயங்களில் இல்லை’ என்பதற்குப் பதிலாக “இல்லீங்க’’ என்றும் கூறுவது போன்ற “மோசமான வடிவங்களை’’க் குறிப்பிடுகிறது.) ஆனால், இந்த வடிவங்கள் கற்றுக் கொள்ளப்பட வேண்டுமா அல்லது பயன்படுத்தப்பட வேண்டுமா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனினும் இது அவைகளை அங்கீகரிப்பதற்குப் போதுமானதாக உள்ளது. தமிழ்மொழி குறித்து போப்பின் ஆய்வுகளுக்கிடையே ஒரு சிணீtமீநீலீவீsனீ ஷீயீ ஜிணீனீவீறீ நிக்ஷீணீனீனீணீக்ஷீ அதாவது, தமிழில் இலக்கணம் குறித்து 117 கேள்விகளைக் கொண்ட பட்டியலும் (விடைகளுடன்) உள்ளது; இது பிரதானமாகத் தமிழ் மாணவர்களின் சொந்த மொழி குறித்துப் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்காகப் போப்பால் தயாரிக்கப்பட்டதாகும்; இது தமிழ் கற்கும் வெளிநாட்டவர்களுக்குக் கூட பயனுள்ள-தாகும். இந்த நூல், பல தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டது.
அடுத்து, தமிழ் குறித்த ஆய்வுக்கு பிரதானமாக பிரிட்டிஷ் பங்களிப்பு அநேகமாக ஏ.ஜே. ஆர்டெனின் கி றிக்ஷீஷீரீக்ஷீமீssவீஸ்மீ நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ சிஷீனீனீஷீஸீ ஜிணீனீவீறீ. இதுபற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலின் தலைப்பு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது போல தமிழ் கற்கும் வெளிநாட்டவர்களை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இதனுடைய தெளிவாக, முறைப்படுத்தப்பட்ட தோற்றத்தில் இருப்பதுபோல இதனுடைய வளர்ச்சிகரமான இயல்பானது எளிமையானதிலிருந்து கூடுதலான சிரமத்தை நோக்கிச் செல்வதில் இல்லை. இந்த சிறப்பு அம்சத்தின் மற்றொரு பகுதி, முன்னதாக இந்த நூலின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்ட ஒன்றாகும். அது என்னவெனில் “அத்தியாவசிய-மான வடிவங்களையும் கட்டுமானங்களையும்’’ தருகின்ற “உள்ளடக்கச் சுருக்கமான இலக்கண நூல்’’ என்னும் பகுதியாகும்.
பிரிட்டிஷ் மதப்பரப்பாளர்களாலும் நிர்வாகிகளாலும் எழுதப்பட்ட புத்தகங்களைத் தவிர்த்து, பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டுகள் தமிழர்களால் தமிழ்மொழி குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஏராளமான இலக்கண நூல்களைக் கண்டு இவைகளில் குறிப்பிடத்தக்கவை, ஜான் லாஸரஸ், (யிஷீலீஸீ லிணீக்ஷ்ணீக்ஷீus) வி.எம்.ஆப்ரஹாம் ஆகியோரால் எழுதப்பட்டவையாகும். லாஸரஸ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரி; பின்னர் அவர், மதப் பிரச்சாரம் செய்யும் டேனிஷ் அமைப்பு ஒன்றில் சேர்ந்து ஆர்க்காடு லூத்தரென் ஆலயத்தில் முதல் இந்தியப் பாஸ்டர் ஆனார். ஆப்ரஹாம், கொடைக்கானலில் மதப் பிரச்சார-கர்களுக்கான மொழிப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர்கள் இருவரும் வேறுபட்ட ஆதரவாளர்களை கவனத்தில் கொண்டு எழுதினர். லாஸரஸ், “தமிழ் இலக்கணம் குறித்த அடிப்படையான கொள்கை-களை’’ அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பயின்ற 5வது மற்றும் 6வது மாணவர்களுக்கு அளிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் தனது நூல்களைப் பவணந்தியின் நன்னூலை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். ஆனால் அவர் “தற்காலத்-திய மாணவர்களுக்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் கருதப்படக்கூடிய மற்ற தகவல்கள் ஏராளமானவற்றை’’த் தனது நூல்களில் சேர்த்தார். ஆப்ரஹாம் தனது சிந்தனையில் மேற்கத்திய நாட்டவர்களின் தேவைகளைக் கொண்டிருந்தார்; அவர்களுக்காக, அவர் “எளிமையான, சுருக்கமான, எனினும் முழுமையான தமிழ் இலக்கண நூலை-’’ எழுதுவதற்கு விரும்பினார்.
அந்த நூலுக்கான ஏற்பாடுகளிலிருந்து தெளிவாகத் தெரிவதுபோல, ஆப்ரஹாமும் நன்னூலைப் பயன்படுத்தினார்; ஆனால், அவர் போப், ரெய்னியஸ், கிரால், பெஸ்கி போன்ற நவீன அறிவாண்மையாளர்களுக்கு தன்னுடைய நன்றிக் கடனை வெளிப்படுத்தவும் செய்தார்.
ஒரு ஜெர்மானியரான கிரால் தமிழ் இலக்கணத்தை ஆங்கிலத்தில் எழுதினார் என்ற உண்மை விபரம் ஒரு விஷயத்தை எடுத்துரைக்-கிறது; அது என்னவெனில், அறிவார்ந்த மொழி-களிடையே பொதுமொழி என்ற அந்தஸ்தில் இருந்த இலத்தீன் மொழியின் இடத்தை ஆங்கிலமொழி 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிடித்துக் கொண்டது என்பதுதான். தமிழ் இலக்கணம் குறித்த ஆய்வுக்கு அவர் அளித்த பங்களிப்புகளில் தமிழ் வினைச்சொற்களை 9 வினைத்திரிபுகளாக (சிஷீஸீழீuரீணீtவீஷீஸீ) வகைப்படுத்த-லும் உள்ளது; இந்த வினைத்திரிபு-கள் வல்வினை, இடைவினை, மெல்வினை என மூவகைப்பட்ட நிலைகளை அடைகிறது. இது பேப்ரிசியஸ், பிரெய்தாப்ட் மற்றும் தமிழ் நிகண்டுகளைச் சேகரித்தவர்கள் உட்பட, பிந்தைய கால அறிவாண்மையாளர்கள் பலரால் சில சமயம் மிகச் சிறிய வேறுபாடுகளுடன் கையாளப்-பட்ட ஒருவகைப் பிரிப்பாகும். வல்வினை, மெல்வினை என்பன கடந்தகால (றிணீst tமீஸீsமீ) வினைச்சொல் வடிவங்களை உருவாக்குவது சம்பந்தமாக ஜெர்மானிய மொழிகளில் இருந்த ஐரோப்பிய மொழிப் பயன்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட-வையாகும். இந்த வார்த்தைகளைத் தமிழ் வினைச்சொற்களில் காலம் குறித்த குறியீடு-களுக்கு (விணீக்ஷீளீமீக்ஷீs ஷீயீ ஜிமீஸீsமீ) கிரால் பயன்படுத்திய-போது, அந்த வார்த்தைகள் அவரால் கொஞ்சம் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டன.
பிரெஞ்சு மொழி அறிவாண்மையாளர்கள், ஆங்கில மொழியைப் பயன்படுத்துவற்கு இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றவில்லை. ஆனால் எந்தவித ஆச்சரியத்திற்கும் இடமின்றி பிரெஞ்சு மொழியைப் பின்பற்றினார்கள். இதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னதாக சேசுசபையைச் சேர்ந்த லூயிஸ் டுபியஸ், (லிஷீuவீs ஞிuஜீuவீs) பெஸ்கியின் இலக்கணநூலை வெளியிட்டார்; அவர், 1863இல் தன்னுடைய இலக்கண நூலை அது யாரால் எழுதப்பட்டது என்பதைத் தெரிவிக்-காமலே அனாமதேயமான நூலாக வெளியிட்டார். அதில் அவர் எழுதிய முன்னுரை-யில், ஒரு விஷயத்தை விளக்குகிறார்; அது என்னவெனில் இந்தியாவில் பிரெஞ்சு நாட்டின் காலனிப்பகுதியைச் சேர்ந்த பிரெஞ்சு நாட்டவர்-களுக்கு அவர்கள் கிறிஸ்துவ மதப்பரப்பாளர்-களாயினும் சரி அல்லது அரசாங்க நிர்வாகிக-ளாக நியமிக்கப்பட்டவர்களாயினும் சரி அல்லது வர்த்தகத்திலும் வாணிபத்திலும் ஈடுபட்டுள்ளவர்களாயினும் சரி, தமிழ் மொழி பற்றிய அறிவுஞானத்திற்கான தேவை அதிகரித்-துக் கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார் என்பதுதான். இத்தகைய மக்கள் பெரும்பாலா-னோர்க்கு அவர்களின் மொழியியலுக்கான போதனாமொழியாக இலத்தீன் மொழியைக் காட்டிலும் பிரெஞ்சு மொழியே ஏற்றதாக இருந்தது. -கூடுதலான அம்சமாக, உள்நாட்டுத் தமிழாசிரியர்கள் இலத்தீன் மொழியைக் காட்டி-லும் பிரெஞ்சு மொழியைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் ஏற்புடையவர்களாக இருந்தனர். 544 பக்கங்களில் அவருடைய (லூயிஸ் டுபியஸின்) புத்தகம் மிகவும் சாரமிக்கதாக இருக்கிறது. அவர், “நன்கு அறியப்பட்ட’’ ஒரு உண்மை விவரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டே (தனது நூலை) தொடங்குகிறார்; அந்த உண்மை விவரம் என்னவெனில் தமிழ் பேசும் பகுதியில் இரண்டு மொழிகள் இருக்கின்றன என்பதுவும் அவை கிட்டத்தட்ட வித்தியாசமானவை என்பதுவும் அவைகளில் ஒன்று, மட்டமான அல்லது வளர்க்கப்படாத கொடுந்தமிழ் ஆகும் என்பதுவும், இன்னொன்று மிகச் சரியான, எளிமையான செந்தமிழ் என்பதுவும் தான். இவை குறித்து பெஸ்கி, தனித்தனியாக இரண்டு புத்தகங்களை எழுதியிருந்தார் என்றால் இவர் (லூயிஸ் டுபியஸ்) இந்த இரண்டையும் (கொடுந்-தமிழ், செந்தமிழ்) குறித்த ஒரே புத்தகத்தில் எழுதவே முடிவு செய்கிறார்; ஏனெனில், இந்த இரண்டு வகைகளின் பிரதான விதிகள் கிட்டத்-தட்ட ஒரே வகைப்பட்டதும் இந்த இரண்டுக்கு-மிடையோன எல்லைப் பிரிவினைக் கோடு அடையாளம் காண முடியாத வகையில் தெளிவற்றதாக இருப்பதும் தான். ஆகவே, அவர், கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை ஒன்று செந்தமிழுக்கு உரியது என்ற அந்த உண்மை விவரத்தை முக்கியமான வாக்கியத்தின் கருத்தைச் சிதைக்காமல் இரண்டு காற்புள்ளிகளுக்குள் அல்லது சிறுகோடுகளுக்குள் இருக்கும் சொல் அல்லது சொற்றொடர் அல்லது வாக்கியத்தில் (மினீஜீணீக்ஷீமீஸீtலீமீsமீs) சுட்டிக்காட்டி திருப்தி அடைந்து கொள்கிறார். தமிழ்க் கையெழுத்துப் படிவம் குறித்த சுருக்கமான அத்தியாயத்தில், டுபிய்ஸ், பாவியல் கலைத்திறம் கொண்டதும் ஆனால் விஞ்ஞான ரீதியற்றதுமான ரோமன் எழுத்திலான நகலைப் பயன்படுத்துகிறார்; புத்தகத்தின் மீதிப்பகுதி காரணமாக மட்டுமே அந்நூலில் அளிக்கப்பட்ட எடுத்துக்காட்டு-களுக்குத் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்து-கிறார். முதல் முறையாக வெளியிடப்பட்ட தமிழுக்கான இலக்கண நூல் சொற்றொடரிய-லுக்கு 11 பக்கங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளது; ஆகவே, டுபிய்ஸ், தனது நூலின் ஐந்தில் நான்கு பங்குகளை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்புக்கும் தமிழ்ச் சொற்றொடரியல் குறித்த தனது விளக்கத்திற்கும் ஒதுக்குகிறார்; இந்த நூல் எழுதப்பட்டதிலிருந்து இப்போதும் மிகவும் சாரமிக்க ஒன்றாக இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்-குப் பிறகு ஆர்வம் ஊட்டக்கூடிய ஒரு நூல் வெளிவந்தது; அந்நூல் பி. பெர்ரெயாக்ஸ் (றிமீக்ஷீக்ஷீமீணீuஜ்) என்பவரால் எழுதப்பட்டது. அந்நூல், பிரெஞ்சு மொழியி-லும் தமிழிலும் மிக வேகமாகப் படிக்கும் அறிவுஞானத்தைப் பெறுவதற்கான “இந்தியவழி முறை’’யை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் காட்டும் நோக்கம் கொண்டதாகும். இதற்குக் கால் நூற்றாண்டிற்குப் பிறகு டுபிய்ஸ் போன்றே சேசுசபையின் மற்றொரு உறுப்பினரான      எம்.ஏ. லேப் என்பவர் டுபிய்ஸின் நூலினுடைய சுருக்கத்தை வெளியிட்டார். டுபிய்ஸ், லேப் ஆகிய இருவரும் வெளியிட்ட நூல்கள், ஆதாரக் குறிப்பு இலக்கண நூல்களாக இருந்தன; அதே சமயத்தில் 1895இல் வெளியான பாலெஸ் (ஙிணீuறீமீக்ஷ்) என்பவரின் நூல் மொழி அறிவை நேரடியாகப் பெறுவது பற்றியதாகும்; 2 நூல்கள் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் வெளிவந்தன. அவ்விரு நூல்களையும் எழுதியவர்கள் ஜுலியன் வின்சன் (யிuறீவீமீஸீ க்ஷிவீஸீsஷீஸீ) (1843 _ 1926) என்பவரும் பியெர்ரெ மெய்லெ (றிவீமீக்ஷீக்ஷீமீ னீமீவீறீமீ) (மரணம் 1964-) என்பவரும் ஆவர். வின்சனுடைய நூலின் முதல் பகுதி தமிழின் ஓலியியல் (றிலீஷீஸீமீtவீநீs) குறித்தும் பெயர்ச்சொல் வடிவங்கள், வினைச்சொல் வடிவங்கள், சொற்-றொடரியல் குறித்ததுமான அத்தியாயங்களைக் கொண்ட-தாகும். இரண்டாவது பகுதியானது, வாசிப்பதற்-கான வாசகர்களைக் கொண்டதாகும். மூன்றா-வது பகுதி, பேச்சு வழக்கிற்கு ஒதுக்கப்-பட்டுள்-ளது. மெய்லெயினுடைய நூலில் அவர் தமிழுக்கு அளித்துள்ள அறிமுகமானது ஒரு ஆசிரியரைக் கொண்டு பயில்வதை நோக்கமாக கொண்டதாகும். 
தமிழ் இலக்கணம் குறித்து இந்நூலில் 6 சிறு பாடங்கள், தமிழ் உரைநடையும் அதன் எழுத்துக்கும் எழுத்து அப்படியே ரோமன் எழுத்தில் மாற்றியிருப்பதையும் கொண்டுள்ளது; அதே சமயத்தில் எதிர்ப்பக்கங்களில் பிரெஞ்சு மொழியாக்கம் உள்ளது. இவற்றைத் தொடர்ந்து வாசிப்புப் பயிற்சிக்காகத் தமிழில் மட்டும் 18 வாசகங்கள் உள்ளன; அத்துடன் அவற்றினை எழுத்துக்கு எழுத்து அப்படியே எழுதுவதும் அவற்றின் மொழியாக்கமும் பிந்தைய பிரிவு ஒன்றில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு புத்தகங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூல்களைக் காட்டிலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய இலக்கண நூல்களுடன் அதிகமான பொதுத்தன்மை கொண்டுள்ளன. இந்நூல்களின் ஆசிரியர்கள், பிறப்பால் தெற்கு ஆசியாவைச் சார்ந்தவர்களல்ல, அவர்கள் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள்; அங்குதான் அவர்கள் பல்கலைக்-கழக வேலை வாய்ப்புப் பெற்றார்கள். மெய்லெ, பிராதானமாகத் தமிழ்மொழி குறித்த கற்பித்தலில் சம்பந்தப்பட்டிருந்தார்; வின்சன், பொதுவாக மொழியியல்வாதி; அவருடைய பிரதான பணி பாஸ்க்யு (ஙிணீsஹீuமீ) மொழி குறித்து ஆய்வு செய்வதாகும். 
ஜெர்மானிய மொழியிலும் ரஷியமொழியி-லும் வெளியான முதல் தமிழ் இலக்கண நூல்கள் 20ஆம் நூற்றாண்டின் முதல்பாதியில் வெளியாயின; எனினும் அந்நூல்கள், பிரெஞ்சு மொழியிலான இந்த இரு இலக்கண நூல்-களைப் போலவே, முன்பு வெளியாகி இருந்த நூல்களைக் காட்டிலும் அடுத்துப் பின்-தொடர்ந்து வரவிருந்த நூல்களுடன்தான் மிக ஒத்த தன்மை கொண்டதாக இருந்தன. அந்-நூல்கள் மார்வெர்ட்டினுடைய இலக்கண நூலும் (1929) ஹெய்ச்.பெய்த்தானுடைய இலக்கண நூலும் (1943) ஆகும். பெய்த்தான், தன்னுடைய இலக்கண நூலை எழுதுவதற்கு முன்பு, முந்தைய காலத்துடன் தொடர்பு வைத்-திருந்தார்; அந்த வகையில் அவர், லெய்ப்ஸிக் சேவைக்குழுவின் ஒரு உறுப்பினராகப் பணி-யாற்றியவர். மேலே கூறப்பட்ட விளக்கத்தி-லிருந்து ஒரு விஷயம் தெளிவாக உள்ளது; அது என்னவெனில் தெற்கு ஆசியாவில் ஏராளமான மதப்பிரச்சார அமைப்புகள் இருந்திருந்தபோதி-லும் இந்த பிராந்தியத்தில் ஜெர்மனியோ அல்லது ரஷியாவோ எந்தவிதக் காலனி ஆதிக்க நோக்கத்-தையும் கொண்டிருக்கவில்லை என்பதுதான். ஆகவே, போர்த்துக்கீசியர்கள் டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோர் கொண்டிருந்த தமிழ் இலக்கணத்திற்கான விரிவான தேவைகளை ஜெர்மனியர்களும் ரஷியர்களும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஜெர்மானிய மொழி அல்லது ரஷிய மொழியின் இலக்கண நூல்கள் பிரதானமாகப் பொதுவான மொழியிய-லில் அக்கறை கொள்ளவே தலைப்பட்டன. எனினும் பெய்தான் (1875 _ 1945) தன்னுடைய நூலை ஒரு “நடைமுறை ரீதியான’’ இலக்கண நூல் என்று அழைத்தார்; மேலும், “சமகாலத்திய தமிழ்மொழியை விரைவாகவும் எளிதாகவும் கற்பதற்காகவே’’ அந்நூல் தயாரிக்கப்பட்டது என்றும் அறிவித்தார். அந்நூல் நவீன எழுத்துத்தமிழ் பற்றியதாக இருந்தாலும் தமிழ் எழுத்து வடிவம் அந்நூலில் தமிழ் எழுத்து-களின் ஒரு அட்டவணையாக மட்டுமே காணப்-படுகிறது. மற்றப்படி, எழுத்துக்கு ரோமன் எழுத்துப் பெயர்ப்பு முறை பயன்படுத்தப்பட்-டுள்ளது. ஆகவே, அந்த நூல் எழுத்துத் தமிழைக் கற்பதற்கு எப்படி பயன்படுத்தப்பட முடியும் என்று நடைமுறையில் பார்ப்பது சிரமமானதாக உள்ளது. எனினும் அந்நூல், தமிழ்மொழியைப் பற்றி ஆற்றல்மிக்கதொரு விளக்கத்தை அளிக்கிறது. மார்வெர்ட்டினுடைய நூலின் தலைப்பானது சுட்டிக்காட்டுவது என்னவெனில், பேச்சுமொழி பற்றி அவர் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்பதாகும்.
எனினும், தமிழ்மொழியின் வகைகள், பெய்த்தானுடைய நூலில் உள்ள அதே வகைகள்தாம். மார்வெர்ட் தனது நூலில் தமிழ் எழுத்துக்களைக் காட்டும் பட்டியல் ஒன்றை அளிக்கவும் செய்கிறார்; ஆனால், மற்றபடி புத்தகம் முழுவதும் அவர், மொழியில் உள்ள எடுத்துக்காட்டுகளுக்குத் தமிழ் லெக்சிகனில் உள்ள எழுத்துப் பெயர்ப்பு முறையையே பயன்டுத்துகிறார்.
ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருப்பது போல, இருபதாவது நூற்றாண்டின் இரண்டாவது பகுதி, தமிழ் இலக்கணம் குறித்து வெளியிடப்-பட்ட ஆய்வுகளின் வளர்ச்சியில் சில மாற்றங்-களைக் கண்டிருக்கிறது. அவற்றில் முதலாவது, எழுத்தாளர் தன்மை (கிutலீஷீக்ஷீsலீவீஜீ) குறித்த விவகாரம் ஆகும். ஆரம்பகால இலக்கண நூல்கள் பெரும்பாலானவை இந்தியாவில் பணி கொண்டிருந்த அறிவாண்மையாளர்களால் அவர்கள் மதப் பரப்பாளர்களாகவோ நிர்வாகத்-தினராகவோ அல்லது தோட்ட அதிபர்க-ளாகவோ இருந்தவர்களால் எழுதப்பட்டன என்றால், இப்போது முழுநேரப் பல்கலைகழக ஆசிரியர்களாகப் பணியாற்றும் அறிவாண்மை-யாளர்களால் செய்யப்படுகின்றன. இந்த அறிவாண்மையாளர்கள், மொழி கற்போர்களை இலக்காகக்  கொண்ட நூல்களை எழுதியிருக்-கிறார்கள் என்றால் இந்த நூல்களினால் பயனடைபவர்கள், தமிழ் பேசப்படும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் கல்வி ரீதியான ஆராய்ச்சி-களை நடத்தத் திட்டமிடும் மாணவர்களாகவோ அல்லது தென்னிந்தியாவிலோ சுற்றுலாப் பயணிகளிடமோ குறுகிய காலத்தில் பணி செய்-யும் எதிர்பார்ப்புடன் ஏதோ ஒரு தொழிலைச் சார்ந்தவர்களாகவோ இருப்பவர்களாவர். இந்தப் போக்கின் ஒரு விளைவு என்னவெனில், புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாகும்; அவை, குறிப்புரை இலக்கண நூல்களாகவோ அல்லது மொழிப் பயிற்சி நூல்களாகவோ உள்ளன; இந்நூல்கள் உண்மையான பேச்சு மொழியைத் திறம்பட கற்பிக்கும் நோக்கம் கொண்டவையாகும்.
இந்த வகையான நூல்கள் உருவாக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னோடியாகும். இதே முயற்சிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்கலைக்கழகங்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன; கூடுதலாகச் சொல்வதெனில், பேச்சுவழக்கு மொழி குறித்த குறிப்புரைகள் இலக்கண நூல்களில் இப்போது வெளியிடப்-படுகின்றன; அவற்றில் அந்நூல்களின் ஆசிரியர்கள், தங்களுடைய சிந்தனையில் மொழி பயில்வாருள் கலை அல்லது அறிவியல் சார்ந்த மொழியியல்வாதிகளையும் கொண்டுள்ளனர். நவீன எழுத்துத்தமிழ் குறித்தும் செம்மொழித் தமிழ் குறித்தும் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும், ஜெர்மானிய மொழியிலும், ரஷிய மொழியிலும் இலக்கண நூல்கள் இருந்திருக்-கவும் செய்கின்றன. எனினும், இவையெல்லாம் வேறு ஒரு கதையாகும்; ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடுவது ஏற்றதாக இருக்கும்; அது என்னவெனில், தமிழ் பேசப்படும் நாடுகளுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகக் கல்விச் சமுதாயத்தில் தமிழின் மீதான ஆர்வம் மலர்ந்திருக்கிறது என்பதுதான்.
இறுதியாக, அவசியமானதாகத் தேர்ந்தெடுக்-கப்-பட்ட இந்த ஆய்வை (ஷிuக்ஷீஸ்மீஹ்) முடிப்பதற்கு-முன் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது பயனுள்-ளதாக இருக்கும்; அது என்னவெனில், ஐரோப்-பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்களின் வெளியீடு குறித்த 400 ஆண்டுக் கால வரலாறு, தமிழ் அச்சுமுறை குறித்த வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியாகும். தொடக்ககால இலக்கண நூல்களான, சீகன்பால்க், பெஸ்கி போன்றவர்களால் எழுதப்பட்டவை விவாதிக்-கப்பட்டன;  அந்நூல்கள் ஒருவகையான தமிழ் எழுத்து உருவங்களை (திஷீஸீts) பயன்படுத்தி-யுள்ளன. அவை இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துக்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை-யாகும். தொடக்ககால நூல்களில் புள்ளிப் பற்றாக்-குறை கூடத் தென்படுகிறது. அவற்றின் பக்கங்கள், எழுத்து வடிவச் சீர்திருத்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் கூட இன்று நம்மால் பயன்படுத்தப்படும் பக்கங்களிலிருந்து ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment