Tamil books

Thursday 21 April 2011

தொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்

தமிழ்நூல்களின் தொகையாக்க முயற்சி-களும் காலங்களும் பெற்ற முக்கியத்துவத்தை விடவும் அந்நூல்கள் அச்சுவடிவம் பெற்ற காலம் தமிழ்ச் சமூக வரலாற்றிலும் வாசிப்பு முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இத்தகைய பதிப்பு முயற்சிகள் வீரியம் பெறு-கின்றன. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியி-லேயே தமிழில் அச்சு முயற்சிகள் தொடங்கி-னாலும், அச்சிடும் உரிமை உள்நாட்டினருக்கு வழங்கப்படவில்லை. தொடக்கத்தில் வெளியான தமிழ்நூல்கள் பெரும்பாலும் கிறித்துவச் சமயம் சார்ந்ததாகவே இருந்தன. 1835 ஆம் ஆண்டில் உள்நாட்டு மக்கள் அச்சிடும் உரிமை பெற்ற பிறகே, தேசிய விடுதலை, சமூக நீதி, பாடநூல்கள் உருவாக்கம், பழந்தமிழ் நூல்கள் பதிப்பு எனப் பல தளங்களில் அச்சு ஊடகம் பயன்படுத்தப்-பட்டது.
இதே காலகட்டத்தில் தான் பிரித்தானிய வணிகக் குழுக்கள் ஆசிய நாடுகளில் தங்க-ளுடைய மேலாண்மையை நிலையாக்கிக் கொண்டனர். இந்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்த ‘ஆசிய நாடுகளில் இருக்கக்கூடிய மக்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் தெரிந்து கொள்-வது அவர்களின் அடிப்படைத் தேவையாக இருந்தது. இதற்காக கிதீஷீக்ஷீரீவீஸீ றிக்ஷீஷீtமீநீtவீஷீஸீ ஷிஷீநீவீமீtஹ், ணிtலீஸீஷீறீஷீரீவீநீணீறீ ஷிஷீநீவீமீtஹ் ஷீயீ லிஷீஸீபீஷீஸீ, ஸிஷீஹ்ணீறீ கிஸீtலீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ் முதலான பல நிறுவனங்-களை உருவாக்கினர். மேலும் மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் (றிலீவீறீஷீறீஷீரீஹ்) கவனம் செலுத்தினர். (வீ. அரசு, மாற்றுவெளி நவ. 2008; பக்.51)
தவிரவும், கிழக்கிந்தியக் கம்பெனியார், ஆங்கிலேய அலுவலர்கள் அவர்கள் ஆட்சி செய்யும் உள்நாட்டு மொழிகளை அறிந்திருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றினர். வட்டார மொழியைப் பயின்று தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே ஊதியம் உயர்த்தப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கிலேய அலுவலர்களுக்குத் தமிழ் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் தென்னிந்திய மொழிகள் படிப்பதற்காகவும் அவர்களைச் சோதிப்பதற்காகவும் 1812இல் சென்னைக் கல்விச் சங்கத்தையும் (திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ சிஷீறீறீமீரீமீ) சென்னை இலக்கியக் கழகத்தையும், (விணீபீக்ஷீணீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஷிஷீநீவீமீtஹ்) எல்லீஸ் (1778_1819) நிறுவுகிறார். ‘இந்த இரண்டும் கல்கத்தா கிsவீணீtவீநீ ஷிஷீநீவீமீtஹ் யின் இன்னொரு வடிவமாகச் செயல்பட்டன. சென்னைக் கல்விச்சங்கம் பாடநூல் தேவைக்காக சில தமிழ்நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்-தியது. மேலும் எல்லீஸ், தென்னிந்தியாவில் பேசப்படுகின்ற தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலான ஆறு மொழிகளுக்கும் சமஸ்கிருதத்-திற்கும் அடிப்படையில் தொடர்பிருக்க வாய்ப்பில்லை எனவும் நிறுவுகிறார். திராவிட மொழிக் குடும்பம் குறித்த இவருடைய பதிவுகள் அச்சாகி வெளிவரவில்லை. 1856இல் கால்டு-வெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்-கணம்’ வெளிவந்தது. இவர் மொழிகளுக்கான உறவையும் தூய்மையையும் அம்மொழி பேசும் மக்களுக்கும் பொருத்தினார். இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மொழி பற்றியும் இனம் பற்றியுமான கருத்தாடலைக் கொண்டிருந்தது.
பழந்தமிழ் நூல்களின் முக்கியத்துவம்
தற்போது இந்தியா என்றழைக்கப்படும் பிரதேசங்கள் முழுவதும் பிரித்தானிய ஆளுகையின் கீழ் வந்ததும், இந்தியா முழுவதற்-குமான பண்பாட்டு, வரலாற்று ஒருமை குறித்த உரையாடல் தொடங்கியது. இதில் வட இந்தியாவும் சமஸ்கிருதமும் முதன்மைப்-படுத்தப்பட்டன. புறக்கணிக்கப்பட்ட தென்-னிந்தியாவிற்கு _ குறிப்பாக சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தாத பிராமணரல்லாதாருக்குத் _ திராவிட மொழிக் குடும்பம் குறித்த பதிவுகளும் தென்னிந்தியப் பண்பாட்டு ஒருமையும் உற்சாகம் அளித்தன. இப்பின்புலத்-தில் சமஸ்கிருத மரபோடு எவ்விதத் தொடர்புமற்ற பழந்தமிழ் இலக்கியங்-களை அச்சில் கொண்டு வருவதானது தமிழரின் தனித்த மரபை அடை-யாளப்படுத்தியது. இதனை பேரா. வீ. அரசு அவர்கள் ‘நமது பாரம்பரியமான மரபுகளை நவீனமாக உருப்-பெற்றவற்றில் கொடுப்ப-தற்கும் அதன்மூலமாக வட்டாரத்தன்மை பெற்-றிருந்த நமது வளம்/மரபு என்பது வட்டாரத் தன்மை மீறி உலக அளவில் சென்றடைவதற்-கான வாய்ப்பும் (மேலது, ப.52) கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
இத்தகைய பின்புலத்தில்தான் பழந்தமிழ்ப் பதிப்புகளில் ஆர்வம் கொண்ட சி.வை.தா. முக்கியத்துவம் பெறுகிறார். சி.வை.தா. பதிப்பு முயற்சியில் ஈடுபடும் சூழலை வையாபுரிபிள்ளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
‘ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்கையர் தொல்காப்பியம் எழுத்ததி-காரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து, வேறு சில நூல்களையும் வெளி-யிட்டு அத்துடன் நின்றுவிட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்-றார்கள். திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபு-லிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராச-கோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமா-யணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்-பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாதஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவக-சிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். (1959; ப. 233)
சி.வை.தா. - பழந்தமிழ் நூல்கள்
தமிழ்ப் பதிப்புலகம் பாடநூல், நீதிநூல், சமயநூல், நிகண்டு மற்றும் சிற்றிலக்கியங்களை வெளியிடுவதில் முனைப்புக் காட்டிய காலத்தில் சி.வை.தா. மட்டும் தொல்காப்பியம், எட்டுத்-தொகை முதலான பழந்தமிழ் நூல்களின் மீது ஆர்வம் செலுத்தி-னார். சங்க இலக்கியங்-களையும் காப்பியங்களையும் பதிப்பித்த உ.வே.சா.வும் முப்பத்து நான்கு பிரபந்தங்களையும் பதினான்கு தலபுராணங்-களையும் மூன்று பிரபந்தத் திரட்டுகளையும் பதிப்பித்துள்ளார். ‘என் சரித்திரம் இரண்டாம் பதிப்பின் பின்னிணைப்-பாகத் தரப்பட்டுள்ள ஐயரவர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது தரப்பட்ட 100 நூல்களிலும் கி.பி. 600க்கு முந்தியாகவுள்ளவை பதினொரு நூல்களே என்பதும் கி.பி. 600 _ 1200 காலப் பிரிவுக்கு உரியனவாக ஏழே உண்டு என்பதும் மிகுதி பெரும்பாலும் 13_18ஆம் நூற்றாண்டுக் காலப்பிரிவுக்குரியன எனக் கொள்ளப்படத்-தக்கனவாகவுள்ளன என்பதுவும் சுவாரசியமான ஒரு தரவாகும்’’ (2007; ப.40) என பேரா. சிவத்தம்பியும் குறிப்பிடுகிறார்.
இங்குதான் சி.வை.தா. பிரபந்தங்களையும் பாடநூல்களையும் தவிர்த்துவிட்டு, பழந்தமிழ் நூல்களைப் பெருமுயற்சியெடுத்து பதிப்பிப்-பதற்கான காரணத்தைத் தேட வேண்டியுள்ளது. இவரது பதிப்புரையில் சங்க இலக்கியம், தொல்-காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ்ச் சுவடிகள் அழிகிறதே என ஏங்கும் வார்த்தை-களை வெற்றுப் புலம்பல்களாக மட்டுமே ஒதுக்கிவிட முடியுமா எனும் கேள்வியும் எழுகிறது.   
சி.வை.தா. பதிப்பித்த நூல்களின் பட்டியலைப்1 பார்க்கும்போது, இவர் பதிப்பித்த நூல்களுள் நீதிநெறி விளக்கம், தணிகைப் புராணம், இலக்கண விளக்கம் ஆகியனவே பிற்காலத்துக்கு உரியனவாக உள்ளன. சி.வை.தா. நீதிநெறி விளக்கத்தை 1854ஆம் ஆண்டு இலங்கை கோப்பாய் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது பதிப்பித்தார். ஆயினும் தொடர்ந்து இவர் பதிப்புப் பணிகளில் ஈடுபடவில்லை. இக்காலக்-கட்டத்தில் ஆறுமுக நாவலருடன் இருந்து அவரது பதிப்புப் பணிகளுக்கு உதவிபுரிந்து வருகிறார். பதினான்கு ஆண்டுகள் கழித்து 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை ஆறுமுக நாவலரைப் பார்வையிடச் செய்து பதிப்பிக்கிறார். ஆங்கி-லேயக் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளி-னூடான நவீன தன்மைகளைப் பெற்ற சி.வை.தா., ஆறுமுக நாவலரின் இறப்பு (1879) மற்றும் தனது ஓய்வுக்குப் (1881) பிறகே தொடர்ச்சியான பதிப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்.
உ.வே.சா.வைப் போன்று குரு_சிஷ்ய முறையிலான கல்வியைப் பெறாத சி.வை.தா. சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பிக்கும் நுட்பங்-களை ஆறுமுக நாவலரிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார். அதே சமயம் பதிப்புப் பணிகளில் இறங்குவதற்கு நாவலருக்கு சைவப் பற்றும் சி.வை.தா.வுக்குத் தமிழ்ப்பற்றும் காரணமாக இருந்தன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஏனெனில் நாவலர் 1851ஆம் ஆண்டில் பத்துப்-பாட்டின் முதல் பாடலான திருமுருகாற்றுப்-படையை நச்சினார்க்கினியர் உரையைத் தழுவிப் பதிப்பிக்கிறார். தனது திருக்குறள் பதிப்பில் ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்’ எனத் தொடங்கும் குறளுக்கு உரையெழுதும்போது அடிக்குறிப்பில் ‘குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்’2 எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலைக் -குறிப்பிடுகிறார். இவ்வாறு சங்க இலக்கியங்களை அறிந்திருந்தும் அதனைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
பயில்வுப் பாரம்பரியம்
இவ்விடத்தில், ‘சங்க இலக்கியங்கள் எந்த பயில்வுப் பாரம்பரியத்தினூடே நமக்கு கையளிக்கப்பட்டன’ என்று பேரா. சிவத்தம்பி எழுப்பும் ஐயம் முக்கியமானது. ஏனெனில் சங்க இலக்கியத் தொகையாக்கங்களில் _ குறிப்பாக புறநானூறு, பத்துப்பாட்டு, கலித்தொகை, பரிபாடல் தொகுப்புகளில் _ வைதீகக் கூறுகள் முதன்மை பெறுகின்றன. அதைப் போல சங்க இலக்கியங்களுக்கு உரையெழுதிய நச்சினார்க்-கினியர், பரிமேலழகர் முதலானோர் வைதீக சமயம் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அதே-சமயம் நமக்குக் கிடைத்திருக்கும் பெயரறியப்-படாத உரைகளை வைதீக சமயம் சார்ந்ததாக அடையாளப்படுத்திவிட  முடியாது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இவ்விலக்கியங்கள் பதிப்பிக்-கப்படும்போதும் கணிசமான -சுவடிகள், வைதீக மடங்களிலிருந்தே பெறப்பட்டன. மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் வைதீகம் சார்ந்தவை எனக் கூறிவிட முடியாது. ஏனெனில் சைவமடங்கள், சமணரான பவணந்தியாரின் நன்னூலையே இலக்கணப் பாடநூலாகக் கொண்டிருந்தன. எவ்வாறாயினும் வைதீக மடங்கள் சங்க இலக்கியங்களைப் பேணி வந்தன என்பதையும் பயில்வுப் பாரம்பரியத்தின் இடையீட்டிற்கும் அம்மடங்களே காரணம் என்பதையும் மயிலை சீனி. வேங்கடசாமி3 (2003; ப.90) குறிப்பிடுகிறார்.
பயில்வுப் பாரம்பரியத் தொடர்ச்சியற்ற பழந்தமிழ் நூல்களையே சி.வை.தா. பதிப்பிக்க எண்ணுகிறார். தான் பதிப்புப் பணியில் ஈடுபடு-வதற்கான காரணத்தை ‘நமது தமிழ்நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்து சகிக்கமாட்டாமையன்றே என்னை இத்தொழிலில் ஈடுபடுத்தியது’ (2004; ப.60) என கலித்தொகைப் பதிப்புரையில் -குறிப்பிடுகிறார்.
சி.வை.தா. பழந்தமிழ் இலக்கணமான தொல்-காப்பியச் சொல்லதிகாரத்தை சேனாவரையர் உரையுடனும், தொல்காப்பியம் முழுமையையும் நச்சினார்க்கினியர் உரையுடனும் பதிப்பித்தார். இவருக்கு முன்பு மழைவை மகாலிங்கையர், நச்சினார்க்கினியர் உரையுடன் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தைப் (1847) பதிப்பித்துள்ளார். பின்னர் சாமுவேல் பிள்ளை, மூலம் முழுவது-முள்ள ‘தொல்காப்பிய நன்னூல்’ ஒப்பீட்டுப் பதிப்பை 1858இல் வெளியிடுகிறார். இதுவரை-யிலான பதிப்புகள் நூற்பாவுக்கும் உரைக்குமான வேறுபாடின்றிப் பதிப்பிக்கப்பட்டிருந்தன. சி.வை.தா.வின் தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ சேனாவரையம் பதிப்பில்தான் (1868) நூற்பா பெரிய எழுத்திலும் உரை சிறிய எழுத்திலும் வேறுபாடு தெரியுமாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ‘1886 ஆம் ஆண்டு வெளிவந்த இதன் மறுபதிப்பில் நூற்பாக்கள் பாடல்முறையிலும் உரை பொருண்மை கருதி பத்தி பத்தியாகப் பிரிக்கப்-பட்டும் பதிப்பிக்கப்பட்டன-’ (ப.27; 1990) என்று கோ. கிருட்டிணமூர்த்தி குறிப்பிடுகிறார்.
1891ஆம் ஆண்டு மழைவை மகாலிங்கையரின் தொல்காப்பியம் பதிப்பை சி.வை.தா. மறுபதிப்பு செய்கிறார். ‘ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்-வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று’ (2004; ப.134) என்று குறிப்பிட்டுள்ளதைப் போல பிறர் பதிப்பித்த வேறு எந்த நூலையும் இவர் பதிப்பிக்க-வில்லை. நச்சினார்க்கினியர் உரையுடன் பொரு-ளதிகாரத்தை இதற்கு முன்பும் (1885) சொல்-லதிகாரத்தை இதற்குப் பின்பும் (1892) பதிப்பித்-துள்ளார். சி.வை.தா. தொல்காப்பியம் பொரு-ளதிகாரம் முழுமையுமே நச்சினார்க்கினியர் உரையென்றெண்ணி பதிப்பிக்கிறார். ரா.இராக-வையங்கார் இதனை மறுத்து பின்னான்கு இயல்களும் பேராசிரியருடையன என 1902ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதுகிறார். சி.வை.தா. அப்பொழுது உயிருடனில்லை. 1887ஆம் ஆண்டு கலித்தொகையையும் 1889ஆம் ஆண்டு சூளாமணியையும் பதிப்பித்துள்ளார்.
சி.வை.தா. எட்டுத்தொகையில் கலித்தொகை மட்டுமல்லாமல் மற்ற ஏழு நூல்களைப் பதிப்பித்தலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கலித்தொகைப் பதிப்புரையில் ‘கலித்தொகைப் பிரதிகள் விற்பனையாகும் பணத்தைக் கொண்டு பின்னர் குறிக்கப்படும் எட்டுத்தொகையில் இரண்டொரு நூலை அவர்கள் (அ. சேஷைய சாஸ்திரி) பெயரால் அச்சிடுவிக்க உத்தேசித்-திருக்கிறேன்’ (2004; ப. 88) எனக் குறிப்பிடுகிறார். மேலும் தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பதிப்புரையில் ‘எட்டுத்தொகை பரிசோதனையி-லிருக்கின்றது. இதில் புறநானூற்றுரை ஈற்றில் 140 செய்யுளும் பரிபாடல் பூரணபிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் கடைசிப் பத்தும் இன்னும் அகப்படவில்லை’ (மேலது ப.134) எனவும் குறிப்பிடுகிறார்.
சி.வை.தா.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டி.ஏ. இராஜரத்தினம் பிள்ளை ‘அவர், சென்னையில் 1897ஆம் ஆண்டு அகநானூற்றைத் தமிழ்ப் பண்டிதர் இருவரைக் கொண்டு பரிசோதித்துக்கொண்டு வரும்பொழுது 1894ஆம் ஆண்டு புறநானூற்றை, உ.வே.சாமிநாதையர் பதிப்பித்-துவிட்டார். அதனால் அதனை அறவே விடுத்து, அகநானூற்றை மணிமிடைப் பவளம் வரை பரிசோதித்தார். அப்பொழுது பிள்ளை-யவர்களுக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்-பட்டதாலும் வசன சூளாமணியை அச்சிடும் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்தமையாலும் அகநானூற்றை முழுதும் பரிசோதித்துப் பார்த்-திலர்’ (1934, பக். 82 _ 84) என்று குறிப்பிடுகிறார்.
மேலும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் ‘தக்க வித்வாம்சர்களைக் கொண்டு வெளியிட வேண்டு-மென’ சீமான்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தமது கலித்தொகைப் பதிப்பைக் குறைகூற எண்ணுவோர் இன்னும் அச்சிலேறாத நற்றிணை, பரிபாடல், அகம், புறம் முதலானவற்றைப் பதிப்-பித்து அதன்மேற் குறைகூறிக் கொள்ளும்படி தமிழ்த் தண்டனை தருகிறார். இதனால்தான் பழந்தமிழ் நூல்களை எப்படியாவது யார் மூலமாவது அச்சிலேற்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் மன அவஸ்தை உடையவராகவே சி.வை.தா.வைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இவர் பதிப்பித்த ‘இறையனாரகப் பொருளும் இலக்கண விளக்கமும் பிற்காலத்தனவாயினும் பண்டைத் தமிழோடு தொடர்புடையன; தொல்காப்பியப் பயிற்சிக்கு உதவக்கூடியன. இறையனாரகப்பொருள் பொருளதிகாரத்தின் திறவுகோல் எனக் கருதப்படுவது. இலக்கண விளக்கம் குட்டித் தொல்காப்பியம் என்று போற்றப்படுவது. எனவே, தொல்காப்பியப் பதிப்பாசிரியர் இறையனாரகப் பொருளையும் இலக்கண விளக்கத்தையும் பதிப்பித்தார்’. (1970 பக்122_123) என பொ. பூலோகசிங்கம் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
பதிப்புரைகள்
சி.வை.தா. 1881ஆம் ஆண்டு வீரசோழியத்தைப் பதிப்பிக்கும்பொழுது விரிவான பதிப்புரை-யன்றைத் தருகிறார். இதற்கு முன்னர் எவரும் இவ்வாறான பதிப்புரையினைத் தந்ததில்லை. சி.வை.தா.வின் பதிப்புரைகள்4 தான் நூலைப் பதிப்பிப்-பதற்கான காரணம், நூலின் காலம், அதனைப் புலமையாளர்கள் எதிர்கொண்டவிதம், பயில்வு மரபு, சுவடிகள் எங்கிருந்து பெறப்-பட்டன, பாடபேதங்களைப் பற்றிய தரவுகள் முதலான செய்திகளைத் தருவதோடு வரலாற்று உணர்வுள்ளதாகவும் விளங்குகிறது.
சி.வை.தா. வீரசோழியம் குறித்துப் பேசும்-போது தமிழிலக்கிய வரலாற்றை அபோத காலம், அக்ஷர காலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதர காலம், சமண காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என எட்டுவகையாகப் பகுக்கிறார். இதற்குமுன் கால்டுவெல்லும் கூட இவ்வாறான காலப் பகுப்பைச் செய்துள்ளார். இருவருமே நூல் தோன்றுகின்ற காலகட்டத்தை முதன்மைப்படுத்தாமல், குறி-ப்-பிட்ட காலத்தில் தோன்றும் நூலுற்பத்தி முறைமையினை முதன்மைப்படுத்துகின்றனர். கால்டுவெல்லைப் போலவே இவரும் சமணர்களின் இலக்கியப் பங்களிப்பினை முக்கியப்படுத்துகிறார். அதே-சமயம் சி.வை.தா.வுக்கு சங்க இலக்கியம், தொல்-காப்பியம் பற்றியான பிரக்ஞை இருந்தது என்பது முக்கியம்.
தவிரவும், கால்டுவெல் திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறான மொழிக் குடும்பம் எனக் கூறுவதைப் போலவே சி.வை.தா.வும் தமிழுக்கும் வடமொழிக்கும் அடிப்படையிலேயே சம்பந்தம் இல்லையென்றும், வடமொழி தமிழின் தோற்றத்துக்கு மூலமில்லை-யென்றும் கூறுகிறார். மேலும் ஆரியரின் வருகைக்குப் பின்னர் வட இந்தியாவில் வசித்த தமிழர்கள் பற்பல இடங்களிலும் சிதறி வாழ்ந்-தனர் என்றும், அவர்களில் தென்னாட்டிற்கு வந்தவர்களே சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஏற்படுத்தினரென்றும் கூறுகிறார். ‘மதுரைச் சங்கத்தில் வளர்ந்து விருத்தியடைந்து சிறப்புற்ற தமிழோடு அவ்வாறு சிறப்புறாதனவாய்க் கால-வேற்றுமை சிறிதடைந்து வழங்குந் தென்மேற்கிற் புக்கு உறைந்த மலையாளரதும், மேற்கிற் புக்கு உறைந்த குடகரதும் உதகமண்டலத்துப் புக்கு உறைந்த தோடரதும் வடக்கிற் புக்கு உறைந்த இமயமலைச்சாரலில் ஒருவகை வேடரதும் பாஷைகளுக்குள்ள ஒற்றுமையான் விளங்கும்’ (2004; ப.114) என திராவிட மொழிக்குடும்பம் குறித்துப் பதிவு செய்கிறார்.
கால்டுவெல் தமிழைப் பெண்மைத் தன்மை வாய்ந்ததாகச் சித்திரிப்பது போலவே சி.வை.தா.-வும் குறிப்பிடுகிறார். இவ்வாறான ஒப்புமைகளால் சி.வை.தா. கால்டுவெல்லைப் படித்திருக்கலாம் என அவதானிக்க முடிகிறது; அதே போல சி.வை.தா. திராவிட மொழிக் குடும்பம் குறித்த பிரக்ஞையோடு பதிப்புப் பணிகளில் ஈடுபட்-டுள்ளார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
சி.வை.தா. ஜ் உ.வே.சா.
உ.வே.சா.வின் மாணவரான கி.வா.ஜ. தொடங்கி வெ.சா., அவரது பரம்பரையினர் என உ.வே.சா.வுக்கு ஒளிவட்டம் கட்டி சி.வை.தா.வை மௌனப்படுத்தப் பார்த்தனர்; பார்க்கின்றனர். இதற்கான எதிர்வினைகளும் தொடர்ச்சியாக வந்தன; வருகின்றன. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளிக் கொணர்ந்ததும் தமிழ்ச் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் அவை பெறும் முக்கியத்துவம் காரணமாகவுமே சி.வை.தா.வும் உ.வே.சா.வும் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியத்-துவம் பெறுகின்றனர். இத்தகைய வரலாற்றுப் பிரக்ஞையுடன் செயல்பட்டவராக சி.வை.தா.-வையே நாம் அடையாளப்படுத்த முடியும். இவர் திராவிட மொழிகள்_குறிப்பாகத் தமிழின் தனித்தன்மை _ குறித்த பிரக்ஞையோடு பழந்-தமிழ் நூல்கள் அழிகிறதே எனும் உணர்வுடனும் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தை உள்வாங்கிக் கொண்டால் அவரது பதிப்புரைகள் வெற்றுப் புலம்பல்களல்ல என்பது உணரப்படும். உ.வே.சா. பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, சொற்பொருள் அகராதி என ஆய்வாளர்-களுக்குத் தேவையான தரவுகளைத் தொகுத்தார். ஆனால் வரலாற்றுணர்வுடன் செயல்பட்டாரா எனும் ஐயம் எழுகிறது. அவரது என் சரித்திரத்-திலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை.
தவிரவும் சி.வை.தா.வுக்கு முன்னர் ஆறுமுக நாவலர் இருந்தாலும் பாடநூல்கள் எழுதுதல், சமயநூல்கள் முதலானவற்றோடு தம் பதிப்புப் பணியை நிறுத்திக் கொண்டார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் சி.வை.தா. தானாகவே முயன்றார். உ.வே.சா. பதிப்புப் பணியில் ஈடுபடு-வதற்கு முன்னரே தொல்காப்பியம் _ சொல்-லதிகாரம் _ சேனாவரையர் உரை (1868), வீரசோழி-யம் _ பெருந்தேவனார் உரை (1881), இறைய-னாரகப் பொருள் (1883), கலித்தொகை _ நச்சினார்க்கினியர் உரை (1887) ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து பழந்-தமிழ்ப் பதிப்புப் பணிக்கு வழிகாட்டினார். மேலும் சி.வை.தா. பிற தமிழறிஞர்களின் பதிப்புகளில் உதவியாயிருந்-ததையும் ‘வேறுசிலர்’ அவ்வாறு பதிப்பிக்க முயன்றவர்களை சபித்ததையும் வையாபுரிப்-பிள்ளை ‘தமிழ்ச்-சுடர்மணிகள்’ நூலில் கூறுவதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
பாடவியல் ஆய்வு
மூலபாடத் திறனாய்வு முறை வளர்ந்திராத காலத்திலேயே சி.வை.தா.வின் பதிப்புகளில் தொடர்ச்சியான வளர்ச்சி இருப்பதனை அவரது பதிப்புகள், பதிப்புரைகள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும். வீரசோழிய பதிப்புரையிலே கம்பன் சேரனாட்டுக்குச் சென்று இருபது முப்பது வருடங்கள் கழித்து வரும்பொழுது, தான் எழுதிய இராமாயணத்தையே யாரோ ஒருவர் எழுதியது என எண்ணிக் கேட்கு-மளவுக்குப் பாட வேறுபாடுகள் பெருகுவதைக் கதைவழி சொல்கிறார். ஒரே நாட்டில் வழங்கும் பிரதிகளும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறுபடும் என்றும் அவற்றில் சேர்த்தல், நீக்கல், மாற்றுதல் நடைபெறும் என்றும் குறிப்பிடுகிறார். பிரதி எத்துணைப் பழமையானதோ அத்துணை மாறுபாடுகள் குறைவாயிருக்கும் என்றும் கூறுகிறார். திருவாவடுதுறை ஆதீனப் பிரதியைப் பாடமாகக் கொண்டு பிற பிரதிகளை அதனுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்து பதிப்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.
பின்னர் கலித்தொகைப் பதிப்புரையிலே, சுவடிகளில் முறையே முதற்குறிப்பு, கிளவி, பாட்டும் உரையும் இடையிடையே வருதலை மாற்றி பாட்டு, கிளவி, உரையென அச்சிட்டிருப்-பதைக் கூறுகிறார். மூலநூலைப் பதிப்பிப்போர் ஓர் எழுத்தை மாற்றுவது கூடப் பெருந்தவறு என்று குறிப்பிடுகிறார். ஆனாலும் கலித்தொகை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடநூலாக5 இடம்பெற வேண்டும் என்பதற்காக இந்நூல் முழுதும் பதினோரு இடங்களில் வரும் ‘குஃறொடர்ந்த அன்மொழிகளை’ நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு உறுப்புகளின் பெயரை இட்டு நிரப்பியிருக்கிறார். இதனைப் பதிப்புரையில் குறிப்பிடுவதோடு அதற்கான பட்டியலையும் தருகிறார். மேலும் ‘இயன்றளவும் பூர்வ ரூபம் பெறச் செய்வதும் இயலாதவிடத்து இருந்தபடி உலகிற் கொப்பிப்பதுமே யான் தலையிட்ட தொழிலென்பதை உலகத்தார் முன் விண்ணப்பஞ் செய்து கொள்கிறேன்’ (மேலது. ப.80) எனக் குறிப்பிடுகிறார்.
சூளாமணிப் பதிப்புரையிலே ஆசிரியரின் மூலபாடம் என எதுவும் இன்று நமக்குக் கிடைப்பதில்லை என்பதனைச் சொல்லியிருக்-கிறார். ‘இதுகாறும் அச்சிட்ட பழைய நூல்களில் ஒரு பிரதியின் ஆதாரமாவது இல்லாது பாடபேதத்தைத் திருத்துதல் ஒழிந்த யான், இப்பொழுது பிரதிகள் அனைத்தும் பிழை-யென்றும் பிரதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய்மொழியாய் இருக்கமாட்டா-தென்றும் எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியனின்றும் வேறுபட்ட பிழைபாடமென்றும் நிச்சயிக்க ஏதுவும் உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்-தையாவது மொழியையாவது சந்தர்ப்பத்திற்கும் பொருளுக்கும் இயையுமாறு திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதுமின்றிச் சில பாடங்கள் ஒரு பயனும் தராமலுஞ் சில முன் பின்னோடும் பிற நூல்களோடும் விரோதப்பட்டும் நிற்குமாத-லிற்றிருத்தம் அத்தியாவசியமாயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்-பென்று உணர்ந்து இங்ஙனம் தெரிவிக்கலா-யினேன்’ (மேலது, ப. 122_123) எனத் தான் செய்த மாற்றத்தையும் அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்துகிறார்.
உ.வே.சா.வை விட சி.வை.தா. விடமே மூலபாட ஆய்வுத் திறம் அதிகமாகக் காணப்படு-வதாக க.கைலாசபதியும் (2001; பக்.31_32) குறிப்-பிட்டுள்ளார். 
கண்டனங்கள் - விளைவுகள்
சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்பையும் பதிப்புரைகளையும் கண்டனஞ் செய்தவர்களுள் முதன்மையானவர் சபாபதி நாவலர். ‘சி.வை.தா.வின் வரலாற்று மெய்ம்மை நாட்டம் ‘வரம்பழித்த லென்பதாக’ வசை பாடப்பட்டது. சி.வை.தா. காலத்தில் யாழ்ப்பாணத்துக் கோப்பாய் சபாபதி நாவலர் அவரது ஆராய்ச்சி முறைகளை-யும் முடிவுகளையும் காலமுற், பிற்பாடு கணிப்புகளையும் வேதவழக்கொடு மாறுபடுஞ் செயல் எனவே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். இதனையே முதனோக்காகக் கொண்டு தாமோதரக் கண்டனமாகவே ‘திராவிடப் பிரகாசிகை-’யினை முன்வைத்தார். (பொதிய-வெற்பன், 2005; ப.25) சபாபதி நாவலர் சமஸ்-கிருதத்தை முதன்மைப்படுத்தும் திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்து செயல்பட்டவர்; பாஸ்கர சேது-பதியின் ஆதரவுள்ளவர் என்பது குறிப்பிடத்-தக்கது.
ஆறுமுக நாவலர் திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்த சுப்பிரமணிய தேசிகரது இலக்கணக் கொத்தையும் சிவஞான முனிவரது தொல்-காப்பியச் சூத்திரவிருத்தி மற்றும் இலக்கண விளக்கச் சூறாவளியையும் பதிப்பித்தார். ஆனால் பிற்காலங்களில் திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்து செயல்படும் சபாபதி நாவலருக்கும் ஆறுமுக நாவலரது வட்டத்தினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரண-மாகவே, சி.வை.தா. இலக்கண விளக்கத்தைப் பதிப்பிக்கிறார்; மேலும் ‘இலக்கண விளக்கச் சூறாவளியை’ அநியாயக் கண்டனம் என்று கூறி சிவஞான முனிவரது கூற்றிலிருந்து ஐந்து மறுப்பு-களை எடுத்துக்கொண்டு அதனை மறுத்து எழுதுகிறார். மடாலயத் தொடர்பு காரண-மாகவே சி.வை.தா.வுக்கும் சபாபதி நாவலருக்கும் பிரச்சனை எழுகிறது.
திருவாவடுதுறை ஆதீனத் தொடர்பாலும், சபாபதி நாவலர் பாஸ்கர சேதுபதியின் ஆதரவு பெற்றவர் என்பதாலும் ‘செந்தமிழ்’ இதழும் சி.வை.தா.வைக் கண்டிக்கிறதோ எனும் ஐயம் எழுகிறது. 1906இல் அ. கோபாலையன் ‘சேனாவரையர் ஆராய்ச்சி’ எனும் கட்டுரையில் சி.வை.தா.வின் பதிப்பை இராசகோபால பிள்ளை-யின் பதிப்புடன் ஒப்பிட்டு இராசகோபால பிள்ளையின் பதிப்பையே6 பாராட்டுகிறார்.
இது தவிர வைணவத்தைக் குறை கூறியதாக சுதேசமித்திரனும் ஆறுமுக நாவலரின் மீதான கோபத்தினால் கோமளபுரம் இராசகோபால பிள்ளை, தொழுவூர் வேலாயுத முதலியார், வீராசாமி முதலியார் உள்ளிட்ட அருட்பா குழுவினரும் சி.வை.தா.வுக்குக் கண்டனங்கள் எழுதியுள்ளனர். இவற்றுள் சபாபதி நாவலருக்-கும் சுதேசமித்திரனுக்கும் மட்டுமே கலித்-தொகைப் பதிப்புரையில் சி.வை.தா. மறுப்பு எழுதுகிறார். மற்றபடி இதற்கான மறுப்பு நூல்-களையோ, கண்டனங்களையோ எழுதியதாகத் தெரியவில்லை. இது குறித்து விரிவாக ஆராய வேண்டிய தேவையுள்ளது.
கண்டனம் - நேர்மை
சி.வை.தா. கலித்தொகை பதிப்புரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தன் முடிவை வெளியிடுகிறார். சி.வை.தா. கருத்தை கொ.ஸ்ரீநிவாசராகவாசாரியார் தனது நாலடியார் நூல் வரலாற்றில் மறுத்து எழுகிறார். தனது கருத்தைத் தவறு என ஒப்புக் கொள்வதோடு தனக்குப் பின்னாளில் கிடைத்த சுவடிகளும் ‘மகாமகா ஸ்ரீ கொ.ஸ்ரீநிவாசராகவாசாரியாரின்’ கருத்தை உறுதிப்படுத்துவதாகப் பதிப்புரையில் சி.வை.தா. குறிப்பிடுகிறார்.
சி.வை.தா. தனது பதிப்பில் ஏற்படும் பிழை-களை யாராவது கண்டுபிடித்துச் சொன்னால், அப்பிழையை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வதோடு அவரது பெயரையும் வெளிப்-படுத்துவேன் என்றும் கூறுகிறார். தி.த.கனக-சுந்தரம் அவர்கள் இறையனார் அகப்பொருளில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். 1899 இல் வெளியிடப்பெற்ற இறையனார் அகப்-பொருள் இரண்டாம் பதிப்பில் அவரது பெயரை மிகுந்த மரியாதையோடு குறிப்பிட்டு அவருக்கு நன்றியும் தெரிவிக்கிறார். உ.வே.சா. மறுபதிப்பில் பிறர் கண்டனங்களால் திருத்தங்களைச் செய்துகொண்டாலும் அவர்களின் பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை என வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவதோடு இதனை இணைத்துப் பார்க்க வேண்டும்.
மதிப்பீடு
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழக வரலாற்றை மீள்கட்டுமானம் செய்வதி-னூடாக அரசியல், சமூக, இலக்கிய வெளிகளில் எழுச்சி ஏற்பட்டது. அவ்வகையான மீள்கட்டு-மானத்திற்கு உதவிய பழந்தமிழ்ப் பிரதிகளை சி.வை.தா.வும் உ.வே.சா.வும் பெருமளவில் பதிப்பித்தனர். உ.வே.சா.விற்கு நூலகம், சிலை, வெண்கல உருவச்சிலை எனப் பருண்மையான அங்கீகாரமும் தமிழறிஞர் முதற்கொண்டு வெகுசனங்கள் வரையிலும் பதிப்பு முன்னோடி, தமிழ்த் தாத்தா என மன அளவிலான அங்கீகார-மும் தரப்பட்டுள்ளது. அதேசமயம் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதன் மூலம் தமிழின் தனித்தன்மையை நிலைநிறுத்த முடியும் எனும் வரலாற்றுப் பிரக்ஞையுடன் செயல்பட்ட சி.வை.தா.விற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட-வில்லை.  உ.வே.சா.வின் மாணவரான கி.வா.ஜ. நாற்பதுகளில் ‘கலைமகள்’ இதழ் மூலம் உ.வே.சா.-வுக்கு ஒளிவட்டம் கட்டத் தொடங்கினார். பின்னர் வெங்கட்சாமிநாதனும் அவரது பரம்பரையினரும் இன்றுவரை உ.வே.சா.வைக் கொண்டாடிக் குதூகலித்துவிட்டனர். உ.வே.சா.வுக்கு முன்பே பதிப்பு நுட்பங்களுடனும் தமிழ்ப் பிரக்ஞையுடனும் செயல்பட்ட சி.வை.தா.-வின் பெயரைக் கூட சுட்டாமல் பதிப்பு வரலாறு குறித்த தனது ‘நடுநிலை விமர்சனத்தை’ முன்வைக்கின்றனர். பதிப்பு வரலாற்றின் பின்புலம் தெரியாமல் இருவரும் பதிப்பித்த நூல்களின் எடையளவைக் கொண்டு முக்கியத்துவம் தரவேண்டும் எனவும் வாதிடுகின்றனர் என்பதை ஆய்வுலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேசமயம் உ.வே.சா.வுக்கு மாற்றான ‘திருவுரு’வாக சி.வை.தா.வைக் கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை. தொல்காப்பிய பொருளதிகாரத்தின் பின்னான்கு இயல்களையும் நச்சினார்க்கினியர் உரையாகவே பதிப்பித்தது, ‘புத்த’மித்திரனார் இயற்றிய வீரசோழியத்தை சமண நூலாக அடையாளப்படுத்தியது முதலான குறைகள் இவரிடம் இருக்கின்றன என்பதையும் மனதில்கொண்டே பதிப்பு வரலாற்றில் இவர் பெறும் முக்கியத்துவத்தை மதிப்பிட வேண்டும். இம்மதிப்பீடு இவர் தன் வாழ்நாளின் பிற்பகுதியி-லேயே (49 வயதிற்குப் பிறகே) பழந்தமிழ்ப் பதிப்புகளில் ஈடுபட்டார் என்பதையும் மறு-பதிப்பு செய்வதற்கான காலஅவகாசம் இவருக்குக் கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
துணை நூற்பட்டியல்
1.    இராஜரத்தினம் பிள்ளை, டி.ஏ., _ தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம், ஆனந்த போதினி அச்சகம், சென்னை. 1934.
2.    கிருட்டிணமூர்த்தி, கோ., _ தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 1990.
3.    கைலாசபதி, க., ஈழத்து இலக்கிய முன்னோடிகள், குமரன் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு : 2001.
4.    சிவத்தம்பி, கார்த்திகேசு., தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாட விமர்சனவியல் நோக்கு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு _ சென்னை. முதற்பதிப்பு : 2007

No comments:

Post a Comment