Tamil books

Thursday 21 April 2011

வ.உ.சி.யின் பதிப்புப்பணி

ஆ. சிவசுப்பிரமணியன்


இந்திய விடுதலை இயக்க வீரரான வ.உ.சி தமிழ் அறிஞராகவும் விளங்கியுள்ளார். அவரது முன்னோர்கள் ‘கவிராயர்’ என்ற பட்டம் கொண்டவர்கள் என்பதை அவர் எழுதிய நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இதன் அடிப்படையிலோ என்னவோ, செய்யுள் இயற்றும் ஆற்றலும் தமிழ் இலக்கண இலக்கி யங்களில் ஆழ்ந்த பயிற்சியும் அவருக்கு இருந் தது. இப்பயிற்சியின் வெளிப்பாடாக அவர் மூன்று நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவற்றுள்  முதலாவது நூல் திருக்குறள்.
ஷ.ஹ்.ஊ.கின் குஙு‚°க்ஷிஙின்
திருக்குறள் மீது வ.உ.சி. அழுத்தமான பற்றுக் கொண்டிருந்தார்.  இதை
“தமிழர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுத்துறந்த  முனிவரே யாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பது மில்லை. (வேங்கடாசலபதி, ஆ. இரா., 1994:113) என்ற அவரது கூற்றின் வாயிலாக உணரலாம்.
திருக்குறளுக்கு மரபுவழியிலான  உரைகள் பல உண்டு. இவ்வுரைகளில் மணக் குடவர் எழுதிய உரையை அறத்துப் பாலுக்கு மட்டும் 1917ஆம் ஆண்டில் அவர் பதிப்பித்து வெளியிட்டார். முதன்முறையாக மணக்குட வரின் திருக்குறள் உரையை அச்சிட்ட பெருமை வ.உ.சி.க்கு உரியது. அவர் உயிரோடிருக்கும் போது அவர் எழுதிய அறத்துப்பால் உரை மட்டும் 1935ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இப்பதிப்பிலும் கூட அவரது சுதேசி இயக்கச் சார்பு  “இந்நூலின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம்” என்ற குறிப்பின் வாயிலாக வெளிப்படுகிறது.
எஞ்சிய பொருட்பால், காமத்துப்பால் ஆகியன நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டில் தான் முழுமையாக வெளியாகி யுள்ளன.
தேசியவாதியாக மட்டுமின்றி சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய வ.உ.சி. தம் சமூக சீர்திருத்த உணர்வுகளை இப்பதிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். சான்றாக
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்     தன்மகனைச்
 சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்ற குறளுக்கு அவர் எழுதிய உரையைக் குறிப்பிடலாம். இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘கேட்டதாய்’ என்பதற்கு விளக்க வுரை எழுதியுள்ளார். ஆனால்
“பெண்ணின் இயல்பு தானாக அறியாமை என்பது அறிவிலார் கூற்றென அவ்வுரையை மறுக்க’ என்று வ.உ.சி. மறுத்ததுடன் தனது மகனை (க்கல்வி அறிவு ஒழுக்கங்களால்) நிறைந்தோன் என (ப்பிறர் சொல்ல)க் கேட்ட தாய், ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - (அவனைப்) பெற்ற காலையில் அடைந்த களிப்பினும் பெரிது களிப்பள்’’ என்று விளக்கமளித்துள்ளார்.
“குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
  உடம்போ டுயிரிடை நட்பு”
என்ற குறளுக்கு அவர் எழுதியுள்ள உரையில் குடம்பை என்ற சொல்லுக்கு ‘முட்டை’ என்று பொருள் கொள்ளும் பரிமேலழகர் உரையை மறுத்து ‘கூடு’ என்று பொருள் கொள்கிறார். இதற்கு அவர் தரும் விளக்கமும், காட்டும் மேற்கோளும் அவரது ஆழமான இலக்கண இலக்கியப் பயிற்சியை வெளிப்படுத்துகின்றன.
ந்வுட்™ஸீட்ஞ்ழபுஞ் ðகுஞ்¹
தொல்காப்பியத்திற்கு எளிமையான முறையில் உரை எழுதியவர் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் முழுவதை யும் இளம்பூரணர் உரையுடன் 1928இல் பதிப்பித்து  வெளியிட்ட  வ.உ.சி.,  பொருளதி காரத்தின் முதல் இரண்டு இயல்களான அகத் திணை இயல், புறத் திணை இயல் என்ற இரண்டு இயல்களையும் பதிப்பித்து ஒரே நூலாக வெளியிட்டார்.
பின்னர் எஞ்சிய ஏழு இயல்களையும் பதிப்பிக் கும்படி வையாபுரிப்பிள் ளையிடம் கூறினார். வ.உ.சி.யின் பதிப்பும், வையாபுரிப்பிள்ளையின் பதிப்பும் இணைக்கப் பட்டு ஒரே நூலாக இவ்விருவர் பெயரால் வெளிவந்தது.
வ.உ.சி. தமது பதிப்பில் பகரக் குறிக்குள் சில சொற்களைக் குறிப்பிட்டிருந்தார். இளம் பூரணர் உரையில் இடம்பெறாது, தம்மால் சேர்க்கப்பட்டவை என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்திருந்தார். ஆனால் இளம் பூரணர் உரையை, பின்னர் அச்சிட்ட சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழகம், பகரக்குறிகளை நீக்கியதுடன், வ.உ.சி.யின் பெயரையும் குறிப்பிடாது விட்டு விட்டது.
ஊஷஹீட்றூ ம்ðட்வுஞ் ðகுஞ்¹
சைவர்களின் சித்தாந்த நூல்களில் சிவஞான போதம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வ.உ.சி. இந்நூலுக்கு உரை எழுதி வெளியிட் டுள்ளார். தேசியவாதியான ஒருவர் சமயம் சார்ந்த நூலுக்கு உரை எழுதிப் பதிப்பிக்கும் போது அவரது தேசிய உணர்வுகள் மறைந்து போய்விடுவது இயல்பு.  பகவத்கீதைக்கு திலகர் எழுதிய உரை இதற்குச் சிறந்த எடுத்துக்காட் டாகும். ஆனால் வ.உ.சி. இத்தகைய தவறைச் செய்யவில்லை.
“இவ்வுலகத்தின் கண் தோன்றி நிலவுகின்ற சமயங்கள் பல, அவற் றுள் கடவுள் இல்லை என்று சொல்லும் சமயம் ஒன்று. அதனை நாஸ்திக சமயம் என்பர் ஆன் றோர். மற்றைய சமயங் கள் எல்லாம் கடவுள் உண்டென்று சொல் பவைகளே. அவற்றை ஆஸ்திக சமயம் என்பர் ஆன்றோர். நாஸ்திக சமயத்தினர் அண்டங் களின் அமைப்பும், அண் டங்கள் ஒன்றையொன்று ஒழுங்காகச் சுற்றி வருதலும், ஒவ்வோர் அண்டத்திலும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஒழுங்காக நிகழ்ந்து வருதலும் இயற்கையின் சக்தியால் என்று சொல்கின்றனர். ஆஸ்திக சமயத்தினர்களோ அவைகளெல்லாம் ஒழுங் காக நிகழ்ந்து வருதல் கடவுள் சக்தியால் என்று சொல்கின்றனர். நாஸ்திகரது இயற்கையைத்தான் ஆஸ்திகர்கள் கடவுள் என்று கூறுகின்றன ரென்று நாஸ்திகரும், ஆஸ்திகரது கடவுளைத் தான் நாஸ்திகர் இயற்கையென்று கூறுகின்றனர் என்று ஆஸ்திகரும் கொள்வரேல், இவ்விரு சமயங்களுள்ளும் வேற்றுமையில்லை”. என்று முன்னுரையில் அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்க்ணு¬யூ
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் பெயர் களைக் கூறும் வெண்பா ஒன்றுண்டு. இவ்வெண் பாவில் “இன்னிலை” என்ற சொல் இடம் பெறுகிறது. உண்மையில் இன்னிலை என்பது ஒரு நூலின் பெயர் அல்ல. ஆனால் பழைய ஏட்டுச் சுவடிகளின் மீது வ.உ.சி., கொண்டிருந்த ஆர்வத்தை அறிந்த ஒருவர் இன்னிலை என்ற பெயரில் இருந்த சுவடி ஒன்றை வ.உ.சி.க்கு வழங்கினார். அதை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று என்று நம்பிய வ.உ.சி. தம் உரையுடன் அதைப்  பதிப்பித்துள்ளார்.  ஆனால் இதை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகக் கருதினால் மொத்தம் 19 நூல்கள் வருகின்றன. ஆய்வாளர்கள் கருத்துப்படி இன்னிலை பதிணென் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகக் கருதமுடியாது.
ðகுஞ்¹ஸீழ் ஸீட்ஙீ´ன் ஹ்ங¬வூ
வ.உ.சி. பதிப்பித்த நூல்களை ஒரு சேர இணைத்துப் பார்க்கும் போது சில உண்மை களை நாம் கண்டறிய முடியும்.
தமிழர்களின் அடையாளமாக அவர் திருக்குறளைக் கருதியமையால்  எளிமையான உரையான மணக்குடவர் உரையைப் பதிப்பித் துள்ளார். பரிமேலழகரின் உரை நுட்பம் வாய்ந்ததென்றாலும் வடமொழிச் சார்பானது என்பதால் ஆங்காங்கே அவரது உரையை மறுத் துள்ளார். தமது சமூக சீர்திருத்தக் கொள்கை களுக்கேற்ப குறளுக்கு விளக்கம் தரவும் முயன்றுள்ளார். இதன் அடிப்படை யிலேயே அதிகாரத் தலைப்புகளைத் தம் விருப்பம் போல் மாற்றியுள்ளார். சில அதிகாரங்களைத் திருவள்ளுவர் எழுதவில்லை என்றும் மறுத்துள் ளார் இவையெல்லாம் பதிப்பு நெறிக்கு முரணானவை.
தொல்காப்பிய உரைகளில் இளம்பூரணர் உரையை அவர் தேர்ந்தெடுத்தமைக்கு அவ்வுரையின் எளிமைத் தன்மைதான் காரணம் என்று கூறலாம். எழுத்ததிகாரப் பதிப்பை 1928இல் வெளியிட்ட வ.உ.சி. அவர்கள், அடுத்து சொல்லதிகாரத்தை வெளியிடவேயில்லை. ஆனால், பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயல்களை 1921இல் வெளியிட்டு பின்னர் எஞ்சிய ஏழு இயல்களைப் பதிப்பிக்கும்படி வையாபுரிப்பிள்ளையை வலியுறுத்தியுள்ளார். இப்பதிப்புகள் வ.உ.சி.யின் பெயராலேயே 1933லும் (களவியல், கற்பியல், பொருளியல்), 1935லும் (பின்னான்கு இயல்கள்) பின்னர் வெளிவந்தன.
இதில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை முழுமையாக வெளியிட அந்நூல் இலக்கண நூலாக மட்டுமின்றி, தமிழர் தம் நாகரிக மற்றும் பண்பாட்டு வரலாற்றை வெளிப்படுத்தி நிற்கிறது  என்று அவர் கருதியமையே இதற்குக் காரணம் என்று கூறுவதற்கு இடமுள்ளது.
பிற சமயத்தவரையும், ஏன் நாத்திகர்களையும் மதிக்கும் அவரது பண்பாட்டை  சிவஞான போத உரை வெளிப்படுத்துகிறது.
“இவ்வுரையில் ஏனைய உரைகளிற் காணப் படும் பல மதக் கோட்பாடுகளும், அவற்றின் கண்டனங்களும் காணப்படா. அவை காணப் படாமைக்குக் காரணம் மக்கள் பல்வேறு பெயர்களோடும், வடிவுகளோடும் காணப் படினும் அவர்களெல்லாம் மக்கட் சாதியினரே யாவது போல, மதங்கள் பல்வேறு பெயர்க ளோடும் கொள்கையோடும் காணப்படினும் அவைகளையெல்லாம் ஒப்புயர்வற்ற இறை வனைப் பற்றியே பேசுகின்றன என்று யான் கருதுகின்றமையே. அன்றியும், மத வேற்று மையைக் காண்பவர்களும், பேசுபவர்களும் “யான்”, “எனது” என்னும் மதவெறி பிடித்த மக்களேயென்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில் மத வேற்றுமைகளையோ, சாதி வேற்றுமை களையோ, வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும், பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களேயென்றும் யான் கருதுகின் றேன். அதனாலும் இவ்வுரையில் யான் பல மதக் கோட்பாடுகளையும், அவற்றின் பொய்யான உயர்வு தாழ்வுகளையும் பற்றி ஒன்றும் பேசவில்லை”. மொத்தத்தில் வ.உ.சி.யின் பதிப்புகளில் அவரது தேசிய உணர்வு, தமிழ் உணர்வு, சீர்திருத்த உணர்வு, பிற சமய வெறுப்பு இன்மை ஆகியன அழுத்தமாகப் பதிவாகியுள் ளன.

No comments:

Post a Comment