Tamil books

Wednesday, 27 March 2013

உலக புத்தக தினம் தயாரிப்புக்கூட்டம்


உலக புத்தக தினம் தயாரிப்புக்கூட்டம்

ஏப்ரல் 23 உலக புத்தக தின கொண்டாட்டங்களைக் குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தை (20.03.2013) பாரதி புத்தகாலய முன் முயற்சியில் படைப்பாளிகள் நடத்தினர்பங்கேற்றோர்: சா கந்தசாமி, பேரா ச மாடசாமி,சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேரா.வீ.அரசு. முன்னாள் நூலகத்துறை இயக்குநர் ஆவுடையப்பன், சுப்பையா அருணாசலம். சைவ சித்தாந்த நூற்பதிப்புப்கழக தலைவர் முத்துக்குமாரசாமி, யூமா வாசுகி, இரா.தெ.முத்து, அ குமரேசன், கீரனூர் ஜாகீர் ராஜா, காந்தி கண்ணதாசன், கவிதா பதிப்பக உரிமையாளர் சேது சொக்கலிங்கம், கற்பகம் புத்தகாலயம் ஆர்.நல்லதம்பி , ப கு ராஜன், சூரியசந்திரன், எஸ் வி வி உள்ளிட்டோர். நாகராஜன் வைத்த முன்மொழிவுகளை அடுத்து பல கருத்துக்கள் வந்தன...இறுதியில் வந்த கருத்துக்களைத் தொகுத்து சில முடிவுகளை அறிவித்தார்.


100 புத்தகங்கள் குறித்த போஸ்டர்கள் தயாராகிறது
உலக அளவில், இந்திய அளவில், தமிழில் முக்கிய நூல்கள் குறித்து நூறு போஸ்டர்கள்,
ரூ.300 விலையில் அதை ஏப்ரல் 23 அன்று மாநிலத்தில் ஆயிரம் இடங்களில் வைக்க வேண்டும் என்பது அவரது முன்மொழிவு. பெரிய அலுவலக வளாகங்களில் மக்கள் கூடும் முக்கிய மையங்களில், பூங்காக்களில் ஏப்ரல் 23 அன்று வைப்பது. முன்னதாக அவற்றை நீதியரசர் கே சந்துரு அவர்களை வைத்து வெளியிடலாம் என்பது ஆலோசனை. இந்த நூறு எழுத்தாளர் வரிசையில், பெண் படைப்பாளிகள், குழந்தை இலக்கியம் படைப்போர் கவனத்துடன் சேர்ப்பு.

நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒரு குழு. அதன் அமைப்பாளர் மூத்த படைப்பாளி சா கந்தசாமி. இன்றைய கூட்டத்தில் பங்கேற்றோருடன் விருப்பம் உள்ள மற்ற சிலரும் சேர்த்துக் கொள்ளப்படலாம்.

பதிப்பகங்களுக்கு வேண்டுகோள், அன்றைய தினம் நூல் வாங்குவோருக்கு 15% கழிவு வழங்க வேண்டும். புத்தக விற்பனை மையங்களில் இது சாத்தியமாக வேண்டும். இதற்காக பதிப்பக உரிமையாளர்களுடன் சிறப்பு சந்திப்பு. காந்தி கண்ணதாசன், நாகராஜன் கூட்ட ஒருங்கிணைப்பை ஏற்பாடு செய்வது.. கவிதா பதிப்பகம் உதவி

அனைத்து ஊடக அன்பர்களிடம் பேசி அன்றைய தினம் குறித்து முன்னதாகவே செய்திகள் வெளியிட்டு வாசிப்பை ஊக்கப் படுத்த உதவ வேண்டுமாய் முயற்சி எடுப்பது. . இரா தெ முத்து பொறுப்பு இதற்கு
இது மட்டுமின்றி, பத்திரிகை எழுத்தாளர்களைத் தனியே அழைத்துப் பேசி, புத்தக தினம் தொடர்பான கட்டுரைகள் சிறப்பு கவன ஈர்ப்பு செய்திகளை வெளியிடச் சொல்லிக் கேட்கலாம்...

ஒவ்வோர் ஆண்டும் ஒரு மறைந்த எழுத்தாளர் மற்றும் வாழும் எழுத்தாளர் இவர்களை மையப்படுத்தி கவுரவிப்பது..
இந்த ஆண்டு, கு அழகிரிசாமி மற்றும் ராஜம் கிருஷ்ணன்

நூலகங்களை மாவட்ட மைய அளவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துமாறு அரசின் மூலம் சொல்ல வைக்க முயற்சி.

சென்னை பல்கலையில் அன்றைய தினம் பதிப்புத் துறை குறித்த ஒரு கருத்தரங்கம்

ஒரு லட்சம் நோட்டீஸ் மாநிலம் முழுக்க பள்ளி கல்லூரி வளாகங்களும் இலக்கு

ஊடக வரிசையில் பண்பலை வானொலி மூலம் மக்களைச் சென்றடைய, சாதாரண மக்களிடம் செய்தி சேர்க்க சிறப்பு முயற்சி

படைப்பாளிகளை அந்தந்த ஊர் மக்கள் கொண்டாட கோரிக்கை....

கடந்த ஆண்டு புத்தக பகிர்வு நல்ல முயற்சியாக வந்தது..அதாவது, கூட்டம் நடைபெறும் இடத்திலோ, பொதுவான சந்திப்பிலோ ஏற்கெனவே வாசித்த புத்தகங்களோடு எல்லோரும் வருவது....பரஸ்பரம் தமது நூல்களுக்குப் பதிலாக வேறு ஏதாவது நூலைப் பெற்றுக் கொள்வது. அதை இன்னும் விரிவாக்கலாம்.

எஸ் வி வி

Monday, 4 March 2013

2013 உலக புத்தகதின தயாரிப்பு


உலக புத்தக தினம்
ரூ.500 செலுத்தி பதிவு செய்யுங்கள், உங்களுக்கு கண்காட்சி நடத்த உலகின் சிறந்த புத்தகங்கள் குறித்து 100 போஸ்டர்களை அனுப்பி வைக்கிறோம். ஏப்ரல் 23 அன்று உங்கள் பகுதியில் நண்பர்களுடன் இணைந்து கண்காட்சியை நடத்துங்கள். புத்தகங்கள் விற்பனைக்கு தேவை எனில் தொடர்பு கொள்ளுங்கள் 9444960935