Tamil books

Thursday 21 April 2011

தலித் பிரசுரங்களும் நூல்களும்(1910-1990)

ஸ்டாலின் ராஜாங்கம்


“நிற்க, இவ்வியாசத்தைக் கண்ணுறும் கல்வியிற் சிறந்த விசாரணைப் புருஷர்கள் யாவரேனும் இப்பஞ்சமரென்னும் பறை-யர்கள் இந்து மதத்திற்குரித்தான இந்துக்க-ளென்றே புராதன சாஸ்திரத்தைக் கொண்-டும், நீதிநூல் அநுபவங்கொண்டும் தக்க ஆதாரத்துடன் மெமதப்பிராயத்தைத் தாக்கி, நிருப வாயிலாக பத்திரிகைகளிற் வெளி-யாக்கி வெற்றிபெறுவார்களாயின் அவர்க-ளுக்கு எம்மால் இயன்ற ரூபாய் பதினைந்து (15) இனாமளித்து பஞ்சமரின் படாடம்பக் கருத்தை மேற்கொள்ள பாத்திரனாவேன்’’.
சென்னை புதுப்பேட்டை ஷி.சி. ஆதிகேசவன் என்பவர் வெளியிட்ட நீண்ட பிரசுரத்தின் இறுதிப்பகுதி தான் இப்படி முடிகிறது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கிய தாழ்த்தப்பட்ட சமூக அறிவுக்குழுவினரின் பணிகளுக்கு இதுவொரு சான்று. ‘இந்துமதமும் பஞ்சமர் கூட்டமும்’ என்று தலைப்பிட்ட இப்பிரசுரத்தின் கீழே “இதினந்தார்த்தங்களை சென்னையில் பிரசுரமாகும் தமிழன் பத்திரிகையினால் முற்றுணரலாம்’’ என்று குறித்துள்ளதன் மூலம் அயோத்திதாசரின் கருத்தியலோடு தொடர்புடைய செயற்பாடு என்பதையும் உணர முடிகிறது. பிரசுரத்தின் இறுதியில் குறிக்கப்பட்டிருக்கும் 25_09_1912, 1500 நீஷீஜீவீமீs போன்றவற்றின் மூலம் அவை சென்றடைந்திருப்போரின் எண்ணிக்கையையும் அறிய முடிகிறது.
1835 முதல் கணக்கில் கொண்டால் தமிழ்ப் பதிப்புலகம் மற்றும் பத்திரிகையுலகம் இரண்டு நூற்றாண்டுகளை எட்டவிருக்கிறது. எனினும் 1800களின் தொடக்கத்திலேயே தமிழ் ஏடுகளை ஐரோப்பிய ஆதரவுடன் சிலர் பதிப்பித்துள்ளனர். இவ்வாறு தொடக்ககாலத்தில் அச்சுக்குக் கொணரப்பட்டவை நீதிநூற்களும், பிறகதை தழுவிய ஏடுகளும்தான். நீதிநெறிப் பாடல்கள், சித்தர் பாடல்கள், மருத்துவக் குறிப்புகள், போன்றவற்றைத் தாங்கியிருந்த ஏடுகளைத் தாழ்த்தப்பட்டோர் பாதுகாத்து வந்த விதம் பற்றி அயோத்திதாசர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சமூகப் பெரியவர்கள் இவ்வேடு-களைப் படித்துவந்த விதம் பற்றிய பல்வேறு சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இத்தகைய ஏடுகளுள் சில இவர்களாலேயே பதிப்பிக்கப்-பட்டுள்ளன. பல பிறரைக் கொண்டு அச்சிடப்-பட்டுள்ளன. தமிழ் இதழியல் வரலாற்றிலும் இவர்களின் பங்களிப்புகள் உண்டு. “மற்றும் இக்குலத்தோருள் அனந்த பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளியிட்டிருக்கின்றார்கள்’’ என்கிறார் அயோத்திதாசர்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலான பங்களிப்புகளைத் தலித்துகள் மேற்கொண்டிருந்-தனர். அவைகளுள் பலவற்றை முதன்முறையாகக் கையாண்டவர்களாகவும், பேசியவர்களாகவும் இச்சமூகத்தினராகவே இருப்-பதைப் பார்க்க முடிகிறது. தலித்-துகள் கையாண்ட கருத்துகளும், அமைப்புகளும் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஊடாகவே பின்னர் உருவான இயக்கங்க-ளாலும், கருத்துகளாலும் ஏற்றம்-பெற்றன. தலித்துகளின் இம்-முயற்சி குறித்த ஆதாரங்கள் போதுமான அளவில் ஆய்வுல-கினரால் கண்டுகொள்ளப்-படாமலிருக்கின்றன. இவ்விடத்-தில் அன்பு பொன்னோவியம், டி.பி. கமலநாதன் ஆகிய தலித் சமூகஅறிஞர்களைக் குறிப்பிடுவது அவசியம். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைகொண்டிருந்த இவர்கள் தலித்துகளின் கடந்தகால இயக்கங்களோடும், போராட்டங்-களோடும் தொடர்பு கொண்டிருந்ததால் ஒரு நூற்றாண்டு பரப்பிலான ஆவணங்களைச் சேகரித்தும், படித்தும், பாதுகாத்தும் வந்தனர். இன்றைக்குப் பேசப்படும் தலித் வரலாற்றியல் துறைக்கு அதிக ஆதாரங்களைத் தந்து சென்றுள்-ளவர்கள் இவர்களே. அயோத்திதாசரின் ஏழாண்டு ‘தமிழன்’ இதழ்கள், தலித் முன்னோடி-களின் நூல்கள் பதிப்பு, தாமே எழுதிய நூல்கள் போன்றவை அன்பு பொன்னோவியத்-துடையவை. அயோத்திதாசரின் நூல்கள், தாழ்த்-தப்பட்டோரின் 50 ஆண்டுகால பிரசுரங்கள், விக்ஷீ. ரி. க்ஷிமீமீக்ஷீணீனீணீஸீவீ வி.கி.ஙி.லி., வீs ஸிமீயீusமீபீ ணீஸீபீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ யீணீநீts ணீதீஷீut tலீமீ sநீலீமீபீuறீமீபீ நீணீsts stக்ஷீuரீரீறீமீ யீஷீக்ஷீ ணினீணீஸீவீநீவீஜீணீtவீஷீஸீ வீஸீ ஷிஷீutலீ மிஸீபீவீணீ (1985) என்று ஆங்கிலத்தில் எழுதிய நூல் ஆகியவை டி.பி. கமலநாதனுடையவை. தீவிரமான ஆய்வு நெறிமுறையோடு தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டவை இவர்களின் எழுத்துகளாகும். இவ்வாறு தாழ்த்தப்பட்டோரின் அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியிலான ஆவணங்களைப் படித்து பாதுகாத்து இவர்கள் தாழ்த்தப்பட்டோரின் அரசியல், பண்பாட்டுச் செயற்பாடுகள் வளமானவை என்பதோடு அவை பிராமண எதிர்ப்பு, அரசியல் வரலாற்றினால் இருட்டடிப்பு செய்யப்பட்டதாகக் கருதினர். அவர்களின் இக்கருத்து அவர்கள் எழுதிய நூல்களுக்கே நேர்ந்துள்ளது என்ற வகையில் நிரூபணமாகி-யிருக்கிறது. எனவே இப்போது தாழ்த்தப்பட்-டோர் கொண்டிருந்த புலமை, சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்கள், அவற்றினூடாக அவர்கள் முன்வைக்க விரும்பிய தலித் வரலாறு போன்றவற்றின் வழியாகவே தலித் பதிப்புகளைப் பற்றிப் பேசமுடியும்.
அயோத்திதாசரோடு செயற்பட்ட ஏ.பி. பெரியசாமிப் புலவர் பங்கெடுத்த அவரின் சக செயற்பாட்டாளர்கள் ஈடுபட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் அவரின் மகன் டி.பி. கமலநாதனால் பாதுகாக்-கப்-பட்டு தற்போது சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் சில நூல்கள் முதல் 200 பிரசுரங்கள் வரை பார்க்க முடிந்தது. அதோடு 1950களுக்குப் பிறகு வட ஆற்காடு வட்டாரத்தில் நடைபெற்ற செயற்பாடுகள் குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரசுரங்கள் போன்றவற்றைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது. இங்கு கையாளப்படும் ஆவணங்கள் அனைத்தும் வட மாவட்டங்-களைச் சார்ந்தவை. குறிப்பாக கோலார் தங்கவயல், சென்னை, திருப்பத்தூர், மைசூர், ரங்கூன், குடியாத்தம், ஆம்பூர், பள்ளிகொண்டான் போன்ற ஊர்களோடு தொடர்பு பெற்றவை-யாகும். மேலும் வேலூர் பகுதியில் பெறப்பட்ட ஆவணங்கள், கமலநாதன் பாதுகாத்தவை அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் துவக்க மற்றும் இடைக்கால அரசியல் பண்பாட்டுச் சூழலைக் கூறும் ஆவணங்கள். இந்த ஆவணங்கள் அனைத்தும் தலித்துகளின் கடந்தகால வரலாற்று அங்கம் மட்டுமல்ல. நிகழ்காலத்தின் அங்கமாகவும் தொடர்கிறது. அதோடு இவற்றை மொத்தமாக வாசிக்கும்போது அன்றைக்கு தலித்துகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் பல இன்றைக்கும் தொடர்வதை உணர முடிந்தது. அப்பிரசுரங்களை நம் வசதிக்காக இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.
வீ)    அரசியல் ரீதியானவை.  
வீவீ)    பௌத்தம் தொடர்புடையவை.
வீவீவீ)    தாழ்த்தப்பட்டோரின் புலமையோடு தொடர்புடைய பொது மற்றும் தனிப்பட்ட பிரசுரங்கள்.
வீ) அரசியல் ரீதியானவை
தாழ்த்தப்பட்டோரின் அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகள், மாநாடுகள் குறித்த நிகழ்ச்சி நிரல் பிரசுரங்கள், அறிக்கைகள், மாநாட்டுத் தலைவ-ரின் உரைகள், தீர்மானங்கள், விண்ணப்பங்கள் போன்றவை அடங்குகின்றன. மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், மாநாட்டு உரைகளையும் சிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்துள்ளனர். இவ்வகையான பிரசுரங்கள் 1 முதல் 6 வரையிலான பக்கங்களில் அமைந்துள்ளன. பிரசுரத்தின் கீழே அமைப்பின் பெயர், மாநாடாக இருந்தால் காரியதரிசியின் பெயர் இடம்பெற்று தேதியும், இடமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இறுதியாக அச்சிட்ட அச்சகத்தின் பெயரும் இடம்பெற்-றிருக்கிறது. தீர்மான நகல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளன. சில தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருக்கின்-றன. அரசின் கவனத்திற்குத் தங்களின் கோரிக்-கையைக் கொண்டு செல்ல இம்முறையைப் பின்பற்றியிருக்க வேண்டும்.
மாநாட்டுத் தீர்மானங்கள் தாழ்த்தப்பட்-டோரின் கல்வி, நிலம், நிர்வாகத்தில் பங்கு கோரியதாகவே அமைந்திருக்கின்றன. மாநாட்டில் அன்றைய தலித் தலைவர்களும் தலித் அல்லாத தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்து கொண்ட இப்பிரதிநிதிகளுக்குப் பாராட்டுப் பத்திரங்களும், வந்தனோ உபசார பத்திரங்களும் வாசிக்கப்பட்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு வழங்கப்பட்டன. வந்தனோ உபசாரப் பத்திரங்கள் விருத்தங்களால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை ஏ.பி. பெரியசாமிப் புலவர் இயற்றியுள்ளார். பூஞ்சோலை முத்துவீர உபாத்தியாயர், ஜி. அப்பாதுரையார். எம்.ஒய். முருகேசர், திருமயிலை சி.ஆர். முருகேஸ மூர்த்தி போன்றோர் இயற்றியவையும் உண்டு.
தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு தொடர்பான அரசியல் மாநாடுகளை நடத்தியவர்களே பௌத்தம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர். பல வேளைகளிலும் பௌத்தம் தொடர்பான கூட்டங்களில் ஆதிதிராவிடரின் அரசியல் பிரச்சனைகள் பேசப்பட்டன. தமிழகத்தில் அரசியலும், பண்பாடும் இணைந்த செயற்பாடுகளே இருந்து வந்துள்ளன. அயோத்திதாசருக்குப் பின்னும் செயற்பட்ட பெரியசாமிப் புலவரும், அப்பாதுரையாரும் 1950 வரை செயற்பட்டு வந்தனர். வடஆற்காடு வட்டாரங்களில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் பெரியசாமிப் புலவர் இடம்பெற்றார். மிகவும் குறைவாகவே பௌத்த சங்கங்களோடு தொடர்பில்லாத தலித் தலைவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தியதை இப்பிரசுரங்கள் வழி அறிய முடிகிறது. அவற்றுள் பூனா ஒப்பந்தம் குறித்து அதில் பங்கேற்றுத் திரும்பிய இரட்டைமலை சீனிவாசனின் விளக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரம் முக்கியமானது. மொத்தத்தில் தலித்து-களின் தனித்துவமான பயணங்களை இப்பிர-சுரங்கள் காட்டினாலும், சில தருணங்களில் நீதிக்கட்சியுடனான உறவு பற்றியும் காலனிய அரசின் நடவடிக்கைகள் பற்றியும் நேர்மறையான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மாறாக சாதி மீதான சாடல், காங்கிரஸின் முரண்பாடான செயல்பாடுகள் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.
சான்றுகள்
1) ‘அழைப்புத்தாள்’ என்ற தலைப்பிட்ட பிரசுரம் ஒன்று நாட்டாண்மை லட்சுமணன், முனியன் பெயரில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் ‘குடியாத்தம் காங்குப்பம் ஆதிதிராவிடர்கள் மேல்சாதியின் பணிகளைச் செய்யாமல் நிறுத்தி உள்ளனர். ஆனால் மேலமாயல் ஆதிதிராவிடர்-கள் அதைச் செய்கிறார்கள். நிறுத்த வேண்டியும் மேலமாயல் ஆதிதிராவிடர் நிறுத்தவில்லை. அது தொடர்பான முடிவு செய்ய காங்குப்பத்தில் 8_3_1936 ஞாயிறு காலை 8மணிக்கு அப்பாத்-துரையார் தலைமையில் கூட்டம் நடைபெறும். பெரியசாமிப்புலவரும் 50 கிராம ஆதிதிராவிடர்-களும் வருவார்கள். அனைவரும் வருக. சாப்பாடு வசதி உண்டு’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இழிதொழிலுக்கு எதிரான தலித்துகளின் முடிவு, அவற்றில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண் போன்றவற்றை இப்பிரசுரம் சொல்கிறது.
வீவீ) பௌத்தம் தொடர்புடையவை
கிடைத்துள்ள பிரசுரங்களில் பெரும்பாலா-னவை பௌத்தம் தொடர்புடையதாகவே இருக்கின்றன. அயோத்திதாசர் காலம் முதல் 1980களின் இந்திய குடியரசுக்கட்சி வரையிலான பௌத்த நிகழ்ச்சிகளுக்கான பிரசுரங்கள் கிடைத்துள்ளன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் சமயம் என்று சொல்லுவதற்கான பொருளை அடையும் வகையில் கட்டப்பட்ட பௌத்தம் பின்னர் அரசியலாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டதை அறிய முடிகிறது. இவ்வாறு மாறிய காலம் திராவிட இயக்கம் செல்வாக்கு பெற்ற காலம் மட்டுமல்ல, அவற்றிலிருந்து தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் மறைந்தும், தனிமைப்பட்டும் வந்த காலமாகும்.
பௌத்தம் தொடர்புடைய பிரசுரங்களில் பௌத்த சபைகளின் தொடக்க விழா, கட்டடம் அடிக்கல் நாட்டுவிழா, பௌத்தர்கள் நடத்தும் பள்ளிகள் தொடக்கவிழா, பௌத்த சொற்-பொழிவு அறிவிப்பு, விவாதக் கூட்டங்கள், பௌத்தப் பண்டிகைகள், பௌத்த நெறிப்படி நடத்தப்பட்ட திருமணம் மற்றும் இறப்புசடங்கு பத்திரிகைகள், சங்கங்களின் வருடாந்திர கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சான்றுகள்:
1) விஷேஷ விளம்பரம் என்னும் தலைப்பிலான பிரசுரம்: அன்பு மிகுந்த சோதிரர்களனைவருக்கும் அறிவிப்பது யாதெனில்: நிகழும் ஜுலை 3 சனிவாரம் இரவு 7 மணிக்கு மேல் கோலார் மாரிக்-குப்பம் சாக்கையபௌத்த சங்கத்தோர் ஆச்சிரமத்தில் “தமிழன்’’ பத்திராதிபர்
க. அயோத்திதாஸ பண்டிதரால் “பூர்வ பௌத்தர்களையே பறையர்களென்று தாழ்த்திய விவரங்களைப் பற்றி’’ பிரசங்கிங்-கப்படும். யாவரும் வரக்கோருகிறோம்.
இங்ஙனம்
மாரிகுப்பம், சாக்கையபௌத்த சங்கத்தார்.
இதேபோல 1911ஆம் ஆண்டு சிரமனானந்த-வறிக்கை என்னும் பெயரில் அயோத்திதாசர் தந்த பிரசுரத்தில் மே 21இல் ராயப்பேட்டை சாக்கைய பௌத்த ஆசிரமத்தில் பாண்டிச்சேரியில் வாழ்ந்த ரெனோ என்ற பிரெஞ்சு நாட்டவர் 5 சமண முனிவர்கள் முன் சிரமண பட்டம் பெறப் போகும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2) கவர்னர் ஜெனரலுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆங்கிலத்திலேயே நோட்டீஸாக அச்சடித்துப் பரவலாக்குவது. அதில் இரட்டைமலை சீனிவாசன், என். சிவராஜ், இ.கண்ணன், பி.வி. ராஜகோபால்பிள்ளை, ஆர். கந்தசாமி, பி.கே. புஷ்பராஜ், ஆர். பாலகிருஷ்ணன், வி. தர்மலிங்கம் பிள்ளை, ஏ.எஸ். சகஜானந்தர், வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, எச்.எம். ஜெகநாதன், ஆர். கிருஷ்ணன் போன்ற 12 தலித் தலைவர்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
3) மே 23, 1920_ல் திருப்பத்தூரில் நடந்த திராவிட மகாநாடு சபையில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் அடங்கிய ஆங்கிலத்திலும், தமிழிலும் அமைந்த பிரசுரம், மாநாட்டுத் தலைமை பெரியசாமிப் புலவர். நிறைவேற்றப்-பட்ட தீர்மானங்களுள் சில: திருப்பத்தூரில் பெரிய பறைச்சேரி எனப்படும் பகுதியின் பெயரை மாற்றுவது, பஞ்சமர்களை திராவிடர் என்றே அழைப்பது, பஞ்சமர்களுக்கு உயர்நிலைப்பள்ளி, அரசால் தேர்ந்தெடுக்கப்படும் மாஜிஸ்ரேட்டு-களில் இருவர் பஞ்சமராய் இருக்க வேண்டும் என்பன போன்றவை.
4) கோவையில் இயங்கி வந்த தென்னிந்திய ஆதிதிராவிட நலவுரிமைச் சங்கத்தின் சார்பாக நவம்பர் 1, 1934இல் அதன் காரியதரிசி ட்டி.ஏ. சுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கை. இந்திய சட்டசபையில் தாழ்ந்த மக்களின் பிரதிநிதியாக வீரய்யனை நியமிக்க அரசை வலியுறுத்த வேண்டு-மென ஆதிதிராவிடர் சங்கங்கள், பிரமுகர்கள், மக்கள் சார்பாகத் தந்திகள் அனுப்பப்பட வேண்டுமென கூறும் பிரசுரம்.
5) ஏப்ரல் 6, 7, 8 _ 1928 தேதிகளில் பி. லட்சுமிநரசு தலைமையில் சென்னை நேப்பியர் பார்க் உயர்தர கலாசாலையில் கூடிய தென்னிந்-திய பௌத்தர்களின் மாநாட்டு 22 தீர்மானங்கள் இரு மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டின் சபைத்தலைவராக லட்சுமி-நரசுவும், வரவேற்புத் தலைவராக அப்பாதுரை-யாரும், காரியதரிசியாக வி.பி.எஸ். மணியரும் இருந்தனர். இம்மாநாட்டின் 17வது தீர்மானம் இந்தியாவிற்கு வருகை தரும் சைமன் கமிஷனைச் சந்தித்து பௌத்தர்களின் தேவைகளை வற்புறுத்-துவது. அதற்காக லட்சுமிநரசு, அப்பாதுரையார், ட்டி. சித்தார்த்த சித்திரை, பெரியசாமிப் புலவர், வி.பி.எஸ். மணி ஆகிய ஐவரைப் பிரதிநிதியாக அனுப்புவது.
இந்த ஆவணங்கள் வழி தாழ்த்தப்பட்டோர் உருவாக்கிக்கொள்ள விரும்பிய அரசியலையும், அதனடிப்படையில் அவர்கள் பலருடனும் கொண்டிருந்த உறவையும் கண்டுணர முடிகிறது. இவற்றைக் கொண்டு தலித்துகளின் கடந்தகாலம் குறித்துக் கட்டப்படும் கருத்துகளை எதிர்-கொள்ள முடியும். இவை வெறுமனே வரலாற்றுத் தரவு மட்டுமல்ல. மாறாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தலித்துகளின் போராட்டமாக இருப்பதை உணர முடிகிறது. காலனிய ஆட்சி மீதான தாழ்த்தப்-பட்டோரின் அணுகுமுறையானது சார்பானதாக இருந்தது என்றாலும் அதனை அப்படி மட்டுமே சுருக்கிவிட முடியாது. காலனியத்தின் தேசிய உருவாக்கத்தின் போதே தீண்டாமையை தேசியப் பிரச்சனையாகப் பார்க்க தலித் முன்னோடிகளின் போராட்டம் காரணமாகியிருக்கிறது. அன்றைய ஆட்சியாளர்களை நோக்கி எழுதப்பட்டவை-களாக மட்டுமில்லாமல் மக்களை நோக்கிய கருத்துப் பரவலாகவும் அப்பிரசுரங்கள் இருந்தன.
2) பிரசங்கங்கள்

No comments:

Post a Comment