Tamil books

Saturday, 10 August 2013

சால்வடார் ஆலெண்டேயின் மரணம்



சால்வடார்  ஆலெண்டேயின்  மரணம்

 - காப்ரியேல் கார்ஸியா  மார்க்குவேஸ்

2660 மைல் நீளம் 119 மைல் அகலம் ஒரு கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட குறுகலான சிலி நாட்டின் பிரஜையான சால்வடார் ஆலெண்டே மாணவப் பிராயத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டு அந்நாட்டின் பல்வேறு பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்து, உச்சமாக குடியரசுத் தலைவராகவும் சொற்ப ஆண்டுகள் இருந்து 1973ல் ஏற்பட்ட  இராணுவப் புரட்சியின் போது கொல்லப்பட்டவர். ஆலெண்டேயின் மரணம் குறித்து எழுதியுள்ள காப்ரியேல் கார்ஸியா மார்க்குவேஸ் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். இந்நூலை தமிழில் எஸ். பாலச்சந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார்.
   "அவர் வாழ்க்கையை நேசித்தார். அவர் மலர்களை நேசித்தார் அவர் நாய்களை நேசித்தார். நறுமணம் வீசும் தாள்களில் குறிப்புகளை எழுதி அனுப்புவதிலும்  இரகசியமான பரிமாற்றங்களை விரும்புவதிலும் அவர் பழங்காலத்து மனிதராக இருந்தார். அதே சமயத்தில் துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். சுரண்டும் வர்க்கத்தின் முன் இழிவான விதத்தில் மண்டியிட்ட பரிதாபத்துக்குரிய நாடாளுமன்றத்தையும் தங்களது ஆன்மாக்களை பாசிசத்துக்கு விற்றுவிட்ட எதிர்க்கட்சிகளின் சுதந்திரத்தையும் ஒரு தோட்டாவைக்கூட செலவழிக்காமல் அவர் அழிக்க விரும்பிய உளுத்துப் போன பழம் சமூக அமைப்பையும் ஆயுதமேந்திப் பாதுகாப்பதில் இறுதிவரை போராடி மரணமடையும் அபூர்வமான அவலமான வாய்ப்பை மட்டும்தான் விதி அவருக்கு வழங்கியது"
 இவ்வாறு இச்சிறு நூலின் இறுதி வரிகளை மார்க்குவேஸ் எழுதிச் செல்கிறார்.

வெளியீடு பாரதி புத்தகாலயம்
விலை:ரூ.20
044 24332924


No comments:

Post a Comment