Tamil books

Wednesday 20 April 2011

உலகை குலுக்கிய புத்தகம் - வால்டேர் எழுத்து

ஒரு நாடு சிந்திக்கத் தொடங்கி விட்டால் அந்த
நாட்டை எந்தச் சக்தியாலும் நிறுத்தி வைக்க முடியாது என்றார் பிரெஞ்சு நாட்டுத் தத்துவ அறிஞரான வால்டேர்.
ஆலயத்தின் நிழலில் அநீதிமன்றம் நடத்தாதே!
மூடக்கொள்கைகளை நம்பாதே! என்று முழக்கமிட்டார்.
மனிதன் என்பவன் சுதந்திரமாகப் படைக்கப்பட்டவன்.
அவன் தன்னைத் தானே ஆள வேண்டும். மனிதர்களுக்கு
மேலே கொடுங்கோலர்கள்இருந்தால் அவர்களை ஆட்சி
பீடத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்! என்று சொல்லி
‘‘பொதுமக்களே விழித்தெழுங்கள்! கைவிலங்குகளை
உடைத்தெறியுங்கள்!’’ என்ற அறைகூவல் பிரெஞ்சு
மக்களின் நெஞ்சங்களிலே அனலை மூட்டியது! அவர்
வழங்கிய மூன்று மூல முழக்கங்களான சுதந்திரம், சகோ-
தரத்துவம், சமத்துவம்
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. உலக வரலாற்றில்
பெரும் மாற்றத்தையே
நிலைப்படுத்தியது.
1791_ஆம் ஆண்டு
பிரெஞ்சுப் புரட்சியின்
எரிமலை பொங்கி எழுந்தபோது, பதிமூன்று ஆண்டு-களுக்கு
முன் புதைக்கப்பட்டிருந்த வால்டேரின் உடலைப்
புதைகுழி-யிலிருந்து வெளியில் தூக்கிக்கொண்டு வந்த
பல்லாயிரக்-கணக்கான புரட்சிப் படையினர் ஊர்வலமாகச்
சென்று கொடுங்கோன்மையின் மகுடமாக விளங்கிய
பாஸ்டில் சிறைக் கோட்டத்தைத் தரைமட்டமாக்கினார்கள். அந்த அழிவுக்குவியல் மீது வால்டேர் உடலை
ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து அடுத்த நாள்எடுத்துச்
சென்று கல்லறை கட்டி, அதில் வைத்தார்கள். அங்கே
இவர் மனித மனத்திற்குச் சிறகுகளைத் தந்தார், மாபெரும்
உணர்ச்சிக் கனல் மூட்டினார். உரிமை வாழ்விற்கு
எங்களைத் தயாரித்தார் என்று சொல்லி யாவரும் நன்றி
உணர்வோடு அந்த நினைவிடத்தைப் போற்றி வருகின்றனர்.
வால்டேர் 1694_இல் பாரிஸ் நகரில் பிறந்தார். அவரது
இயற்பெயர் பிரான்சிஸ்மரேஅருவே. அவரது தந்தை
சராசரியான சட்ட வல்லுநர். வெகு நோஞ்சான் குழந்தையாக இவரைப் பெற்ற தாய்அவரைக் கவனித்துக் கொள்ள
வாய்ப்பு இன்றி ஏழு ஆண்டுகளிலேயே உயிர் நீத்தார்.
ஆதலினால் நோயாளியாகவே வளர்ந்தார்; வாழ்ந்தார்.
உடல் பலவீனம் மன எழுச்சிக்குத் தடையாக இல்லை.
இளம் வயதிலேயே சமூகத்தின் அவலங்களைக் கண்டு
மனம் பதறி சீற்றம் கொண்டு
எழுதத் தொடங்கினார். அவரது
அனல் பறக்கும் எழுத்துகளைப்
படித்த பிரெஞ்சு இளைஞர்கள்ஆவேசம் கொண்டு
எழுந்தனர். ஆட்சி பீடம் ஆத்திரம் கொண்டு அருவே’யை
பாஸ்டில் சிறைச்சாலையில் அடைத்தது. அந்த இருண்ட
சிறைச்சாலைக்குள்ளேயிருந்து பிரெஞ்சுப் புரட்சியின்
தீச்சுடர்கள்எழுத்துகளாக வெளிவந்தன. அப்போது
வால்டேர் என்ற பெயரிலேயே எழுதினார். அந்தப் பெயரே
வரலாற்றில் நிலைத்து விட்டது. பிறகு ஆட்சியாளர்-
களிடையே அச்சம் தோன்றி வால்டேரை நாடு கடத்தி
விட்டார்கள். அங்கிருந்து
கொண்டே நாட்டையும்,
சமுதாயத்தையும், அரசியலை-
யும் தம் எழுத்துகளால்
சீர்திருத்தினார்.
அவர் சொன்னார்
இந்தியர்கள் எல்லாம்
அதிசாதுவான மனிதர்களாக இருந்து வருகின்றார்கள்.
அவர்களுடைய மதமும் சீதோஷ்ண நிலையும் அவர்களை
அமைதியுள்ள சாதிப்பிராணிகளாக வளர்த்திருக்கின்றன.
நம்முடைய ஆட்டுத் தொழுவங்களிலும் புறாக்கூடுகளிலும்
வெட்டியழிப்பதற்காகப் பிராணிகளை வளர்க்கிறோமே
அதுபோலவே தான் இந்தியர்கள்உள்ளார்கள்என்றும் _
அங்கே அந்தணர்கள்வெகுகாலமாக மன்னர்களாக
இருந்து வந்திருக்கின்றனர், தெய்வீக ஆதிக்கம் அந்தப் பரந்த
தேசத்தில் நிலையூன்றியது போல இந்த உலகில் வேறு
எந்த தேசத்திலும் இல்லை என்று.
மனிதனின் சிந்தனைச் சுதந்திரத்திற்காகவும், மனித
உரிமைகளுக்காகவும் போராடிய அப்பெருமகன் தமது
83ஆம் வயதில் 30.05.1778 _ அன்று என் எதிரிகள்மீது
எவ்வித வெறுப்புகளின்றி மூட நம்பிக்கைகளை எதிர்த்துக்
கொண்டே சாகிறேன்  வால்டேர் என்று எழுதி
கையப்பமிட்டு விட்டு முடிவெய்தினார்.நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மறுக்கிறேன்;
ஆனால் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காகச்
சாகும் வரை போராடுவேன் என்று சொன்ன உரிமை
வேட்கையின் சின்னம் மாமனிதர் வால்டேர்.

- தஞ்சை. இரா. இரத்தினகிரி

No comments:

Post a Comment