Tamil books

Wednesday 20 April 2011

உலகை குலுக்கிய புத்தகம் - உயிரினங்களின் தோற்றம்

அன்றுவரை அனைத்தும் அவன் செயல் என்றே மனித
குலம் பொதுவாகக் கருதி வந்தது. ஏனெனில் புதிர்களில் எல்லாம்
பெரிய புதிராய்எந்தத் தத்துவஞானிக்கும் கூடப்
பிடிபடாததொரு விடுகதையாய்அவிழ்க்கப்படாத முடிச்சாகவே
 படைப்பின் இரகசியம் இருந்து வந்தது. அதை அப்படியே
பத்திரமாகப் பாதுகாப்பதில் தேவாலயத்தின் தலைமை மிகுந்த
அக்கறை கொண்-டிருந்தது. ஏனெனில் சமூகத்தின் மீதான தனது
பிடி அறிவியல் சார்ந்த சிந்தனையால் ஆட்டங்கண்டு வருவதை
அதனால் சகித்திட இயலவில்லை. ஆம்! உலகம் உருண்டை
வடிவானது என்ற உண்மையை ஊருக்குச் சொல்ல அஞ்சிய _
அதே சமயம் அதை மூடி மறைக்கவும் விரும்பாத _
விஞ்ஞானிகள்தேவாலயத்தின் கையில் சிக்கிப் பட்ட பாட்டை
நாம் அவ்வளவு எளிதில் மறந்திட இயலுமோ?
அத்தகையதோரின் வரிசையில்  சடப்பொருட்களி-லிருந்து
உயிரினங்களின் தோற்றம், அந்த உயிரினங்களின் பரிணாம
வளர்ச்சியில் மனித இனத்தின் பிறப்பு எனும் சங்கிலித் தொடர்
போன்ற இயற்கையின் போக்கை தர்க்க-வாதக் கண்ணோட்டத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த விஞ்ஞானிகளில்
சார்லஸ் டார்வின் எனும் ஆங்கிலேய இயற்கை விஞ்ஞானிக்குத்
தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில் அவரின் ஒப்புயர்வற்ற நூலான
Ôஇயற்கைத் தேர்வு மூலம் உயிரினங்களின் தோற்றம் வெளிவந்த
24.11.1859 அன்றுதான் மனிதகுலம் தனது வேர் எது, விழுது
எது எனப் புரிந்து கொண்டது. மாறிக் கொண்டே இருக்கும்
சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நுட்பம்
தெரிந்த உயிரினங்களே இப்புவியில் தப்பிப் பிழைக்கும்;
மற்றவை அழிந்து போகும் எனும் உண்மையை அந்த நூல்
உரக்கப் பேசியது. அதனைப் படைத்த அவர் ஒன்றும் பழுத்த
நாத்திகர் அல்லர்; அவரும் நம்பிக்கையாளரே. அதே சமயம்
மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திளைத்த அல்லது அவற்றை
முதலாகக் கொண்டு பிழைப்பு நடத்திய மதபோதகரும் அல்லர்;
மாறாக அவர் ஓர் இயற்கை விஞ்ஞானி. தனது சொந்த
நம்பிக்கைகளுக்கும் புற உலகுக்கும் இடையிலான உறவைப்
புரிந்து கொள்ள அறிவியல் கண்ணோட்டத்தை மட்டுமே
ஆதாரமாகக் கொண்டவர். இறையியல் தத்துவ வாதிகள்
Ôபடைப்புÕ என்பது பரமனின் விளையாட்டு; மனிதன் உள்ளிட்ட
அனைத்து வகை உயிரினங்களும் அசலாக அப்படியே
இன்றுள்ள வடிவில் அவனால் படைக்கப்பட்டவையே; அதிலும்
அவன் மனிதனைத் தன் உருவிலேயே செய்து உயிரூட்டி இந்த
மண்ணில் உலவ விட்டுள்ளான் என்றெல்-லாம் கதைத்த போது
அக்கூற்றை அப்படியே வேதவாக்காக ஏற்றிடாமல் அதைச்
சந்தேகித்து, ஆய்ந்திடும் பெரும் முயற்சியில் இறங்கினார். பீகிள்
எனும் கப்பலில் இப்பூவுலகின் பல பகுதிகளிலும் சுற்றி நீர்,
நிலம் வாழ் உயிரினங்களை உற்று நோக்கி ஆய்ந்த பின்பு தனது
கருத்துகளை இந்த நூல் வடிவில் உலகுக்குத் தெரிவித்தார்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்-களாகப் படைப்புத் தத்துவ
(மத)வாதிகள் பீற்றிக் கொள்வர். ஆனால் ஆழ்ந்த ஞானமும்,
கடின உழைப்பும் செலுத்தித் தாங்கள்கண்டுபிடிக்கும் அரிய
உண்மைகளைக் கூட முற்றிலும் சரியானவை, இதற்கு-மேல்
ஆய்ந்தறிந்திட இவற்றில் ஏதுமில்லை _ என எந்த அறிவியல்
அறிஞரும் இதுகாறும் இறுமாப்பாய்ப் பகன்றதில்லை. இது
இயற்கையை, மனித சமூகத்தின் வரலாற்றை ஆய்வு செய்த
அத்தனை விஞ்ஞானிகளிடமும் நாம் காம் ஓர் அருங்குணம்.
அவர்களின் வரிசையில் உயர்ந்து நிற்கும் ஒருவரான டார்வின்
அவர்களும் திருச்சபையை _ அதன் மூலவர்களை _ உலுக்கி
எடுத்த உன்னதமான கண்டுபிடிப்பான பரிணாமக் கொள்கையை
மிகுந்த தன்னடக்கத்துடனும் _ அதே சமயம் தனது ஞானத்-
தின் மீது கொண்ட அசைக்க முடியாத தன்னம்பிக்-கை-யுடனும்
_ இந்த நூலின் முகவுரையில் பின்வருமாறு முன்மொழிகிறார்:
ÔÔஎவ்வளவோ இயற்கை இரகசியங்கள்மறை பொரு-ளாகவே
இன்றுவரை நீடித்தாலும் ஏன், இனியும் அவை நமக்கு
விளங்காமலேயே இருக்கும். எனினும் _ அண்மைக் காலம்
வரை நானும் இன்றும் கூடப் பெரும்பாலான இயற்கையியல்
விஞ்ஞானிகளும் _ கருதிக் கொண்டிருப்-பதைப் போன்று
ஒவ்வோர் உயிரினமும் தனித்தனியே ஏதோ ஒரு சக்தியால்
உருவாக்கப்பட்டது எனும் கருத்து சரியன்று என்ற நிலையை
ஆழ்ந்த ஆய்விற்குப் பிறகே மேற்கொண்டேன். அத்தகைய
முடிவிற்கு வருவதற்கான ஆற்றலும், தகுதியும் எனக்கு உண்டு
என நான் திடமாக நம்புகிறேன். உயிரினங்கள்உருமாற்றத்திற்கு
உட்பட்ட-வையே என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
நமக்கு நன்கு தெரிந்த ஓர் உயிரினத்தின் பலவகைகள்எப்படி
அவற்றின் வழி வந்தவையோ அதே போன்று பொதுவாக
அழிந்து போய்விட்ட இன்னபிற உயிரினங்களின் நேர்
வழித்தோன்றல்களே இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
உயிரினங்கள்என நாம் குறிப்பிடுபவை. மேலும் இந்த
உருமாற்றத்திற்கு இயற்கைத் தேர்வு ஒன்றுமட்டுமே
காரணமில்லை எனினும் அதுதான் எல்லாவற்றையும் விட மிக
முக்கியமான வழிமுறையாகும்.ÕÕ
மார்க்ஸின் மனம் கவர்ந்த டார்வினின் நூலாகிய இந்த
‘உயிரினங்களின் தோற்றம்Õ தமிழ் கூறும் நல்லுலகிற்கு இதுகாறும்
முழுமையான வடிவில் கிடைக்கப் பெறவில்லையே எனும் குறை
அதன் 150_ஆம் ஆண்டிலும் தொடரக் கூடாது எனும்
நல்லெண்ணத்தில் பாரதி புத்தகாலயம் அதனை முழுமையாக
மொழிமாற்றம் செய்திட விழைகிறது.
ஆம்! மிக விரைவில் இந்நூல் தமிழில் வெளிவருகிறது!
அதற்கு வாசக நண்பர்களின் வரவேற்பு நிச்சயம் கிட்டும் என
நம்புகிறோம்!

No comments:

Post a Comment