Tamil books

Wednesday, 20 April 2011

உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 கலை இலக்கிய படைப்பாளி-களுக்கும், வாசகர்களுக்கும் மிகவும் நெருக்கமானதொரு நாள் ஆகும்.
உலகமறிந்த நாடகமேதை, நாடக இலக்கியத்தை கவித்துவமாக உயிரூட்டம் செய்த ஷேக்ஸ்பியர் பிறந்த நாளும், நினைவு நாளும் இதுதான் 1564 ஏப்ரல் 23 இல் பிறந்தார். 1616 ஏப்ரல் 23ல் இறந்தார்.

புனைவு இலக்கியத்தில் கொடிக்கட்டிப் பறந்த உலக இலக்கியவாதிகளுக்கு ஆதர்ஷமாகவும், ஊற்றுக்கண்ணாகவும் திகழும் ‘டான் குயிக்சாட்’ நாவலைப் படைத்த செர்வாண்டைஸ் 1616 ஏப்ரல் 23இல் காலமானார்.

ஆங்கிலக்கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் 1770ஏப்ரல் 23இல் உயிர் நீத்தார்.1915 ஏப்ரல் 23ல் கவிஞர் ரூபர்ட் ப்ரூக் காலமானார்.1957ல் ராய்ஸ்டன் காம்ப்பெல் மறைந்தார். 1992 ஏப்ரல் 23இல் திரை இயக்குநர் சத்யஜித்ரேயின் உயிர் பிரிந்தது. இப்படிப் படைப்புலகத்தோடு நெருக்கமாகிவிட்ட
ஏப்ரல்23 நாளை உலகப்புத்தக நாளாகப் கடைப்பிடிப்பது என்று 1995 இல் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு
(யுனெஸ்கோ) அமைப்பு அறிவித்தது.
இப்படி இந்த நாளை உலகப்புத்தகநாளாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமநிலை ஏற்பட
அறிவுத்தகவல்களைப் பரவலாக்கும் சமநிலை அடைய
வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதுதான். இதன்
அடையாளமாக 1972ஆம் ஆண்டு அனைத்து நாடுகளின்
புத்தக ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக 1971, அக்டோபர் 22 அன்று பிரசெல்ஸ்
நகரில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள்,
நூலகர்கள், ஆவணத்தொகுப்பாளர்கள், பதிப்பாளர்கள்.
புத்தக விற்பனையாளர்கள்மாநாடு நடைபெற்றது. இதில்
அறிவியக்கத் தகவல் பரவல் நோக்கில் 10 கட்டளைகள்
உருவாக்கப்பட்டன. அனைத்து நாடுகள்மட்டத்திலான
வாசிப்பு இயக்கத்துக்கான தொடங்குதலாக
இந்தக்கட்டளைகள்அமைந்தது.
�� அனைவருக்கும் வாசிக்கும் உரிமை
�� புத்தகங்களின் இருத்தல் அவசியம்
�� படைப்பாளியை உருவாக்கும் சமூகச்சூழல்
�� பதிப்புத்தொழில் வளர்ச்சி
�� நூலகங்களின் வசதிகள்
�� நூலகங்கள் நாட்டின் கருவூலம்
�� பதிப்பாளர்_வாசகர் இணைப்பு
�� புத்தகங்களைப் பராமரித்தல், பாதுகாத்தல்
        மற்றும் ஆவணப்படுத்துதல்
�� அனைத்து நாடுகள்/மொழிகளின் புத்தகங்களின்
        பரிமாற்றம்
�� வாசிப்பு மூலம் உலக உறவு

இந்த 10 கட்டளைகள்அடிப்படையில் தொடர்ந்த
விவாதத்தின் விளைவாக 1996 ஏப்ரல் 23இல்
உலகப்புத்தகநாள்அனைத்து நாடுகளிலும் முதல்
முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
உலகப்புத்தக நாள்அறிவிக்கப்பட்டது தான்; உடனே
மேலைய நாடுகள்அதை கவ்விக்கொண்டன. குறிப்பாக,
குழந்தைகள்மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச்
செய்ய உலக புத்தக நாளை அமெரிக்கா, இங்கிலாந்து,
பிரான்சு நாட்டு பதிப்பகங்கள்பயன்படுத்தத்தொடங்கின.
சிறப்புக்கழிவு, பரிசுகள், பிரபல எழுத்தாளர்களின்
கையெழுத்துடன் புத்தக விநியோகம் என்று
உலகப்புத்தகநாள்விமரிசையாகக்
கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் ....?
குறிப்பாக, தமிழ்நாட்டில்....?

No comments:

Post a Comment