Tamil books

Saturday 16 April 2011

உலக புத்தக தின வாழ்த்துக்கள்


உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதால் ஏப்ரல் 23 (ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட சில உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளின் பிறந்தநாள், நினைவு நாள்) யுனெஸ்கோ வேண்டுகோளின்படி உலக புத்தக தினமாககொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச்செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
உண்மை வாசிப்பில் உலகை அறிய முடியும். அத்தகைய புத்தக வாசிப்புப் பண்பாடு மேலோங்கிட உலக புத்தக நாள் கொண்டாட்டத்தையொட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

1 comment:

  1. வணக்கம் !
    தங்களின் மின் அஞ்சல் கண்டேன் ! எனது புத்தக தின வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் . தங்களின் இணையத்தளம் மூலம் தமிழ் நூல்களின் விவரம் மற்றும் பதிப்பக விவரம் அறிய முடிந்தது மிகவும் பயன் உள்ளது . தங்களின் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறி , நன்றி கூறி விடை பெறுகிறேன் .
    இப்படிக்கு ,
    வீரபாண்டியன் .
    +97433167802

    ReplyDelete