Tamil books

Wednesday 20 April 2011

உலகை குலுக்கிய புத்தகம் - சேக்ஸ்பியர்

 சா. தேவதாஸ்

சிறந்த சிநேகிதனே, ஏசுவின் பொருட்டுப் பொறுத்துக் கொள்,
இங்கே மூடியுள்ள தூசினைத் தோண்டுவதற்கு.
இக்கற்களை விட்டு வைப்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்,
என் எலும்புகளை அசைத்துப் பார்ப்பவன் சபிக்கப்பட்டவன்
 சேக்ஸ்பியரின் கல்லறை வாசகம்.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன
நாடக மேதை சேக்ஸ்பியரின் நாடகங்கள், இன்றளவும்
நடிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்-
லாது மற்ற மொழிகளிலும் கல்வி வளாக ஆய்வுகள்
மட்டுமல்லாமல், பரந்துபட்ட வாசக / பார்வையாளர்
கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ள சேக்ஸ்பியர்,
மில்டன் போன்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்.
நடிகனாயிருந்து, நாடகக் கம்பெனி நடத்தி, 37
நாடகங்களையும் 154 Ôசானெட்Õகளையும் பிற
கவிதைகளையும் எழுதியுள்ள சேக்ஸ்பியர் (1564_1616),
மன்னர்களின் கொந்தளிப்பான அரசியல், சரிவு மற்றும்
கொலையினைத் துன்பியல் நாடகங்களாக எழுதினார்;
அமரத்துவம் வாய்ந்த ரோமியோ ஜூலியட் போன்ற
காதல்களைச் சித்திரித்தார்; வேடிக்கை, அங்கதம்,
குதூகலம் சார்ந்த இன்பியல் நாடகங்களை வழங்-
கினார். இந்நாடகங்களில் வாழ்க்கை குறித்த
அடிப்படைக் கேள்விகளை எழுப்பிப் பரிசீலித்தார்;
விதியின் இடம் குறித்தும், தனி மனித முயற்சி/சாத்-
தியப்பாடு குறித்தும் அலசி ஆராய்ந்தார். வீழ்ச்சியி-
னையும் அவலத்தையும் ஒருவன் எதிர்கொள்வதற்கு,
அவன் மட்டுமே காரணமா? அல்லது பிற காரணங்கள்
உள்ளனவா என்று துருவிப் பார்த்தார்.
ஆதாயத்திற்காக-  அதிகாரத்திற்காக நடத்தப்படும்
அரசியல் சூதுகளில் நேர் எதிரிகள்கொல்லப்படு-
கின்றனர்; அதிகாரத்திற்கு வர வாய்ப்புள்ளவர்கள்
சித்திரவதைக் குள்ளாக்கப்படுகின்றனர் அல்லது நாடு
கடத்தப்படு-கின்றனர். Ôநாடு நீங்கிய வாழ்விலிருந்து
திரும்புவோர் அதிகாரத்தை அடைய வேண்டுமானால்
கொலை, வன்முறை, துரோகத்தில் இறங்க வேண்டும்.
அவனுக்கு முந்தையவர்கள்எதிரிகளை வீழ்த்தினால்,
இவன் சகாக்-களையே வீழ்த்துவான். சேக்ஸ்பியரைப்
பொறுத்தவரை, அதிகாரத்திற்குப் பெயர்களும்,
கண்களும், வாயும் கையும் உண்டு.
தரைமீது அமர்வோம் ஆண்டவனுக்காக,
மன்னர்களின் மரணம் பற்றி கதைகள்சொல்வோம்:
எவ்விதம் சிலர் அகற்றப்பட்டுள்ளனர், சிலர்
போரில் கொல்லப்பட்டுள்ளனர் என்று;
அகற்றப்பட்டுள்ளவர்களில் சிலர் பிசாசுகளால்
ஆட்டுவிக்கப் பட்டிருந்தனர்;
சிலரோ மனைவியரால் நஞ்சூட்டப்பட்டனர்;
வேறு சிலரோ தூங்கும்போது கொல்லப்பட்டனர்;
அனைவரும் கொலை செய்யப்பட்டனர்.ÕÕ
என்கிறது இரண்டாம் ரிச்சர்ட் நாடகம். தன்
ஆயுளின் இறுதியில் ரிச்சர்ட் அறிவு விளக்கம்
பெறுகிறான்:
காலத்தை வீணாக்கி விட்டேன் நான்,
இப்போது என்னை வீணாக்குகிறது காலம்.ÕÕ
Ôமனிதர்கள்விசித்திரமானவற்றை வாசித்து அறிந்து
கொள்ளக்கூடிய புத்தகமாக உன் முகம் உள்ளதுÕ
என்று மேக்பெத் சீமாட்டி கூறினால், Ôபொய்யான
இருதயத்திற்குத் தெரிந்திருப்பதை, பொய்யான முகம்
மறைத்துக் கொள்ள வேண்டும்Õ என்கிறான் மேக்பெத்.
முகங்களினால் வசீகரிக்கப்படும் சேக்ஸ்பியர், 500_க்கும்
மேற்பட்ட இடங்களில் அவற்றைக் குறிப்பிடுகிறார். 2
"Measure for Measure" நாடகத்தைச் சமீபத்தில்
வாசித்தபோது, அது தற்போதைய பிரிட்டனின்
தொழிற்கட்சி அரசாங்கம் குறித்த சஞ்சலப்படுத்தும்
விமர்சனமாய்_ உண்மையில், அது ஆரம்ப கட்ட
இருபத்-தோராம் நூற்றாண்டின் விமர்சனமாகவே _
இருந்தது’’ என்கிறார் பால் ஜான்ஸன்3. சமத்துவம்,
பாலியல், இனங்களின் இணக்கம், மனித உரிமைகள்
மற்றும் கண்ணியம் குறித்த நம் ஆசார ஆட்சியா
ளர்களின் உயர் இலட்சியங்களை, ஊழல், குரூரம்,
படுகொலை, வெறுப்பு, அவநம்பிக்கை என்னும் நிஜத்-
துடன் அது வேறுபடுத்திப் பார்க்க வைக்கிறது என்பது
பால் ஜான்ஸனின் பார்வை.
ஓர் அரசியல் கொலை மற்றும் அதன் விளைவுகள்,
அதீதமான அரசியல் கொந்தளிப்புகள், துரோகம்,
யுத்தம், ஓர் ஆμக்கும் பெண்μக்கும் இடையிலான
உறவு நிலை மற்றும் அது கொள்கின்ற மாற்றம்,
நன்மையினைத் தீமை வெல்வது, அப்புறம் தீமையினை
நன்மை வெல்வது என்பன பற்றி எல்லாம் மேக்பெத்
பேசும். மேக்பெத் எழுதப்படும் முன்பும் இவை எல்லாம்
இருந்தன. நமக்கும் பரிச்சயமாயிருந்தன. மேக்பெத்
போன்ற மாபெரும் இலக்கியம் நமக்களிப்பது,
இப்போது என்ன நிகழ்-கின்றது என்பது குறித்த உள்ளுணர்வு  நம் கால கட்டத்தைச் சற்று மேலாகவே
புரிந்து கொள்ள உதவக்கூடும். இத்தகைய இலக்-
கியத்தை வாசித்ததும் நாம் உணர்வது திகைப்பும்
அதிர்ச்சியும் வியப்புமாகும். மானுடத்தின் மாபெரும்
சாத்தியப்பாடுகளில் சிலவற்றை நமக்கு வெளிப்படுத்தக்
கூடும்.
மேயரின் மகனாகப் பிறந்து, ஆறாம் எட்வர்ட்
மன்னரின் இலக்கணப் பள்ளியில் பயின்று, பதினெட்டாம் வயதில் ஆன் ஹதாவே என்னும் இருபத்தாறு
வயதுப் பெண்ணை மணந்து, மூன்று குழந்தைகளைப்
பெற்று, 52வது வயதில் தான் பிறந்த அதே ஏப்ரல்
23இல் இறந்து போனார் சேக்ஸ்பியர் என்பது அவரது
வாழ்க்கை வரலாற்றின் வெளிவரிக் கோட்டு சித்திரம்.
அசலானதும் அறுதியானதும் ஆன வாழ்க்கை
வரலாற்றுக்குத் தேவையான விவரங்களும் சான்றுகளும்
இல்லை. அவரது உருவத்தை உறுதிப்படுத்தவே
ஒருமித்து ஏற்பதான உருவப்படம் இல்லை. அந்த
வகையிலும் ஆறு சித்திரங்கள்இருக்கின்றன.
இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை
குறித்தும், அவரது படைப்புகள்குறித்தும் தொடர்ந்து
ஆய்வுகள்நிகழ்த்தப்பட்டு வருகின்றன  கணினி ஆய்வு
உட்பட. உண்மையில் சேக்ஸ்பியரின் படைப்புகளை
உருவாக்கியவர் சேக்ஸ்பியர் தானா? என்னும்
அளவுக்கு விசாரணை சென்றுள்ளது. Ôகிறிஸ்டோபர்
மாரிலோ தான் நிஜமாகவே சேக்ஸ்பியர் நாடகங்களை
எழுதியவர்.இல்லை, பைரன்.இல்லவே இல்லை,
பேகன்தான். பர்ன்ஸ், டான், டையர், ஆக்ஸ்போர்ட்
பிரபு, எலிசபெத் அரசி என இப்பட்டியலில் இடம்-
பெறும் மற்றவர்கள்58 பேர். இதற்கிடையே, ஹென்றி
க்ஷிமிமிமி உள்ளிட்ட பல நாடகங்களை ஜான் ஃபிளெட்-
சருடன் சேர்ந்து சேக்ஸ்பியர் எழுதினார் என்னும்
கணினி ஆய்வும் உண்டு. இதனால்தான் மார்க்
ட்வெய்ன் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்: சேக்ஸ்பியரை எழுதியது சேக்ஸ்பியர் அல்ல, மாறாக அவரது
பெயரில் இன்னொருவர்
1870இல் "The Merchant of Venice" உட்பட குறைந்தது
30 தழுவல் படைப்புகள்தமிழில் வந்துள்ளன. பம்மல்
சம்பந்த முதலியாரின் மனோகரா, Hamlet இன் தழுவல்.
மராத்தியில் 65 தழுவல்கள்மேற்கொள்ளப்பட்
டுள்ளன. இப்படியே இந்தியாவில் 17 மொழிகளில்
சேக்ஸ்பியர் நாடகங்களை மொழிபெயர்த்தும் தழுவியும்
நடத்தியுள்ளனர்.4
ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஏ.சி. பிராட்லி போன்ற சீரிய
சேக்ஸ்பியர் விமர்சகர்களின் வரிசையில் ‘ஹரால்ட்
ப்ளூமையும் சேர்த்துக் கொள்ளலாம். ÔÔதம்முடனோ /
பிறருடனோ/இருதரப்புடனோ பாத்திரங்கள்உரத்துப்
பேசுவதும், அதுபற்றி உரத்துச் சிந்திப்பதும்,
அச்சிந்தனையின் போக்கில் தீவிர மாறுதலுக்குள்ளாகி,
வேறுவிதமான பாத்திரமாக/ஆளுமையாக ஆகின்றனர்.
இது சேக்ஸ்பியரில் தான் முதல் முறை-யாக நிகழ்கிறது.
பைபிளிலோ, தாந்தேயிலோ, ஹோ-மரிலோ,
ஈரிபிடிஸிலோ நிகழ்வதில்லை என்பது ப்ளூமின்
பார்வை. ஃபிராய்டிய வாசிப்பில் சேக்ஸ்-பியரை
அμகுவதை விடவும், சேக்ஸ்பியரின் வாசிப்-புடன்
ஃபிராய்டை அணுக வேண்டும் என்பார் ப்ளூம், ஒரு
வகையில் ஃபிராய்ட், சேக்ஸ்பியரின் உரைநடை வடிவம்;
ஃபிராய்டின் மனித வரைபடம் நிஜமாகவே சேக்ஸ்பியர்
தன்மை மிக்கது... ஃபிராய்டிய உளவியல் என நாம்
எண்ணிக் கொண்டிருப்பது, உண்மையில் சேக்ஸ்பியர்
கண்டுபிடிப்பே...Õ5 என்று ப்ளூம் இதனை விளக்குகிறார்.
ப்ளூமின் இவ்வாசகத்திற்கு ஆதாரமாக ஓரிடத்தைக்
குறிப்பிடலாம். As you like இல் ஒரு வரி:
from his mad humour of love to a loving humour  of madness?
வட அமெரிக்காவின் மனநோய்சிகிச்சை மருத்துவம
னையில் உள்ள 29 வயது மனநோயாளிப் பெண்ணின்
கதையை விவரிக்கும் தன் நாவலுக்கு, அதன் ஆசிரியர்
கிளேர் ஆலன் தந்துள்ள தலைப்பு, Poppy Shakespeare. A Noval (Bloomsbury, 2007).
17ஆம் நூற்றாண்டில் சேக்ஸ்பியரை பென்ஜான்-
ஸன் என்னும் நாடகாசிரியருக்கு அடுத்தபடியாகவே
மதிப்பிட்டனர்; சில சமயங்களில் டீவ்மாண்ட் மற்றும்
ஃபிளெட்சபீருக்கு அடுத்த நிலையில் மூன்றாவதாகக்
கருதினர். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து
முதல் நிலைக்கு வந்து விட்டார். நாடக அம்சம் மட்டு-
மின்றி, அவரது கவிதையின் மாட்சிமையும் சேர்ந்து,
அவரை மேதையாக்குவதில் வியப்பில்லை. இன்று
அவரது பிறப்பிடமான ஸ்டார்ட்போர்ட் ஆன்_ஈவான்
உலகெங்கிலுமுள்ள இலக்கிய அபிமானிகளின்
யாத்திரைத் தலமாக உள்ளது.

No comments:

Post a Comment