Tamil books

Saturday 28 September 2013

கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி

கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி


இதயம் தருவோம் குழந்தை களுக்கு....` என்ற தலைப்பில் சோவியத் நாட்டில் மிகப் பிரபலமான நூல் இது. ஆசிரியர் சுகம்லீன்ஸ்கி ஒரு கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியர்; நாட்டைக் காப்பதற்கு நடைபெற்ற போரில் (1941-45) 23 வயதிலேயே ஈடுபடச் சென்றவர். அவரது மனைவியும், மகனும் ஜெர்மன் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். தோட்டாக்கள் நெஞ்சில் தங்கி விடுமளவிற்குக் கடுமையான காயம்பட்ட சுகம்லீன்ஸ்கி, இறுதி நாள் வரை பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்து மறைந்தவர். ‘தாய் தந்தையின் இதய பூர்வப் பிரியம், விவேகம் நிறைந்த கண்டிப்பு, கடுமை ஆகியவை ஒன்றுகலந்த ஆழமான அன்பு, மனிதத் தன்மை ஆகியவை ஆசிரியரின் முக்கியப் பண்புகளிற் சிலவாகும்` என்பது இவரின் கருத்து. வெய்யிலுக்கும் குளிருக்கும் அச்சப்படாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்கிறார். ‘குழந்தை உருவங்களாகச் சிந்திக்கிறது; பெருவெள்ளமாக அறிவைக் குழந்தை மீது கொட்டாதீர்கள்; மனித சிந்தனையின் சாதனைகள் அளவற்றவை. ஒரு புத்தகத்திலுள்ள அழகை, விவேகத்தை, சிந்தனையின் ஆழத்தைக் குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டுங்கள்.

இசை அறை` ஒன்றை ஏற்படுத்தி அங்கு இயற்கை படைத்த மனிதன் உருவாக்கிய அழகினைப் பருகி ஆனந்தமடைவோம். பாடுவோம், பிடிலும் பியானோவும் வாசிக்கக் கற்றுக் கொள்வோம். உயிரூட்டும் ஊற்றுக் கண் தாய்மொழிச் செல்வம். சொந்த மொழியில் தேர்ச்சி பெறாமலும், அதன் அழகை உணராமலும் ஒருவன் இருந்தால் அவனுக்கு மற்ற மொழிகளின் களஞ்சியங்களில் உருவகம் கொண்டிருக்கிற செல்வம் எட்டாமலே இருந்து விடும். இளம் இதயத்தில் மென் மையையும் உள நெகிழ்ச்சி நுண்μ ணர்வையும் நீங்கள் பயிற்றுவிக்க வேண்டும்...’ _ என்றெல்லாம் தனது சொந்த அனுபவங்களிலிருந்து பல கருத்துகளைப் பதிவு செய்கிறார் வசிலீன்ஸ்கி. தமிழாக்கித் தந்திருப்பவர்கள் முனைவர் வள்ளிநாயகம், . அம்பிகா இருவருமே நீண்ட பலவருட காலமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கற்பித்தல் பரிசோதனைகளில் நேரடி அனுபவம் பெற்றவர்கள். எனவே மிகுந்த ஈடுபாட்டு டன், உணர்ச்சித் துடிப்புடன் சுகம்லீன்ஸ்கியின் சிந்தனைகளைத் தமிழில் தந்துள்ளனர்.
வசீலி அலெக்சாந்திரவிச் சுகம்லீன்ஸ்கி
தமிழில்வள்ளிநாயகம்.அம்பிகாமறுவரைவு
ரூ: 70 | பக் : 144

No comments:

Post a Comment