மதுசுதன்
வண்ணபூக்களும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் குழந்தைகளின் உலகில் பிரவேசிக்கும் போதே வர்ணஜாலங்களில் மாயமந்திரங்களால் உலகம் பேசுவதும் இறக்கை தோன்றி பறக்க நேரிடுவதும் வியப்பேதுமில்லை.சிறுவர்களின் உலகம் அத்தகைய அதிசயங்களால் நிறைந்தது தான் இருக்கிறது .நாளுக்கு நாள் அவர்களின் உலகம் விச்தரித்துகொன்டே தான் இருக்கிறது இவர்களோடு ஒட்டி வாழ இயலாத நாம் தான் அருகே இருந்தும் பல தூர தொலைவில் வாழ்த்து கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளோடு சில நோடிபொழுதுகளில் நாம் பெரும் சந்தோசங்களோடு நீண்ட தூரம் பயணிக்க இயலாதது நம் வயதின் அல்லது சூழலின் சாபமாகவே தான் தொடர்கிறது.சாதிமத இன வேறுபாடுகள் கடந்து கூடிபழகி இதழ்கள் பூக்க பூரித்து புன்னகைத்து புழுதி பறக்க விளையாடி மகிழ்வது அவர்களுக்கே இன்றளவும் சாத்தியமாகிறது.
குழந்தை திரைப்படங்களை பார்க்கும் போதும் சரி சிறுவர் இல்லகியங்களை வாசிக்கும் போதும் சரி அர்த்தமில்லாமல் விளகிபோகும் நம்மை காட்டிலும் மிகுந்த அர்த்தபூர்வமாக வாழ்ந்து களிப்பது அவர்களுக்கே உரியதாய் நீள்கிறது.வறுமை,கோவம்,சந்தோசம் என எல்லாமும் கலந்த அர்த்தபூர்வமான் அவர்களின் நேசப்பகிர்வை வாசிக்கும் போது சிறுவர் உலகை நாம் இழந்து நிற்கிறோம் என்பதைத்தான் மேலும் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினான்கு கதைகளும் நமக்கு சுட்டிகாடுகிறது .
கலை பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து நாடகம் மற்றும் எழுத்துலகிற்கு அறிமுகமாகிய தோழர் ச.முருகபூபதி அவர்களின் நாடக கதை சொல்லலின் அனுபவத்திலும் குழந்தைகளோடு பத்துவருடங்களுக்கு மேலாக குழந்தைகளோடு படைப்பாக்க செயல் ஈடுபாட்டுவரும் அனுபவத்தில் பூத்ததே இந்த கதை தொகுப்பு.
கதைமாந்தர்களாக மாறி வேற்றுலகில் பயணிக்கும் குழந்தைகளோடு தானும் பயணத்து பெற்ற நிகழ்வுகளாகவே விரிகிறது அனைத்து கதைகளும் மாய மந்திரங்களின் வலைப்பின்னலாக ஒவ்வொரு கதையும் வேறு வேறு கதை கருவோடு புனையப்படிருந்தாலும் அடித்தட்டு மக்களின் வாழ் நிலையையே கதையின் உயிரோட்டமாக பாய்ந்தோடுவதே இத்தொகுப்பின் சிறப்பு.
கண்ணாடி நிறைந்த ஊரில் மனிதர்கள் அற்று மாய உலகாக மாறும் கிராமம்,இரவு முழுவதும் வளரும் பெண்ணின் கூந்தல்,பார்வையற்ற சிறுமியின் அதிசயத்தால் பஞ்சமும் நீரும் ஊற்றெடுக்கும் கிராமம்,பாடல் இசையும் நிறைந்து ஓலிக்கும் மாயக்குகை,தும்பல் பிறந்த கதை,ஏப்பம் உருவான் விந்தை,இயற்கையோடு ஒன்றிப்போகும் விவசாய மக்கள்,முதலியுடன் நாடக மேடை ஏறும் கோமாளி,நியாபக மறதியை விரட்டும் சூ,மலையே மனித சிலையாக மாறி சிறுவனோடு விளையாடுவது, கேட்டதை கொடுக்கும் மந்திர மரம் பொம்மைகளின் கதை,கவிதை எழுத சொல்லித்தரும் பறவை கூட்டம்,விளக்கொளியில் உருவாகும் மனித உருவங்கள் என எந்த கதையை வாசித்தாலும் வாசீகரமும் வியப்பும் விந்தையும் அகலாது பரவிக்கிடக்கிறது .
ஆவியூர் TVS பள்ளியில் பயிலும் ஐந்து மற்றும் நான்காம் வகுப்பு மானவமணிகளிடம் கெட்ட கதைகளே சிவ அரவிந்த் போன்ற குழந்தைகளிடம் கேட்ட கதைகளை சொல்லலின் வழியே மேலும் செழுமைபடுத்தி அபராஜிதன் ,மணிவண்ணன் ,நரேந்தர்,கிருஷ்ணபிரியா,பேய்க்காமன் என அவர்களின் ஓவியங்களோடு ஏற்படும் வாசக அனுபவம் வாசக கண்களில் வர்ணஜாங்களை நிகழ்திக்காட்டுகிறது.
சிறுவர் இலக்கியங்களில் தொடர்ந்து புதுப்புது யுக்தியை கையாண்டு சாதனை பல படைத்து வரும் பாரதி புத்தகாலய முயற்சியின் இன்னொரு படைப்பே இது.சிறுவர்கள் மட்டுமிலாமல் பெரியவர்களும் இந்த வாசக அனுபவத்தை பெற்று அவர்களின் உலகில் பயணிக்க இப்புத்தகம் மூலம் முயற்சிக்கலாம்....
மந்திரமரம்
ச.முருகபூபதி
ரூ.90
பாரதி புத்தகாலயம்
044 24332924
No comments:
Post a Comment