Tamil books

Thursday 21 April 2011

தமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்

கார்த்திகேசு சிவத்தம்பி

அனைத்திந்திய மட்டத்திலே தமிழ் நாட்டின் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்குமுள்ள முக்கியத்துவத்தை முதன்முதல் நிறுவியது தமிழின் பண்டைய நூற்பதிப்புகளே. புரூஸ் ஃபூட் (ஙிக்ஷீuநீமீ திஷீஷீtமீ) சென்னைப் பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு பெற்ற சில முந்து வரலாற்-றுத் தொல்லியற் சான்றுகளிருந்தனவெனினும் அவை பெரிதும் கணக்கெடுக்கப்படவில்லை. பண்டைய தமிழ் நூற்களின் பதிப்பும் அவை பற்றிய ஆங்கில எழுத்துகளும் அந்நூல்கள் சிலவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தமிழகத்தின் வரலாற்றை இந்தியப் பின்புலத்தில் முக்கியப்படுத்தின. அசோகனுடைய 13_வது கல்வெட்டாணை சில முக்கியத்தரவுகளை குறிப்பாக, சேர, சோழ, பாண்டிய பெயர்களைத் தந்திருந்ததாயினும் தமிழகத்தில் வளர்த்தெடுக்-கப்பெற்ற நாகரிகத்தின் செழுமையைக் குறிப்பிடாது போயிற்று என்றே கூற வேண்டும்.
இப்பின்புலத்திலே தான் சிலப்பதிகாரத்தினை இராம சந்திரதீட்சிதர் ஆங்கிலத்தில் மொழி-பெயர்த்தார். அம்மொழி பெயர்ப்பே 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் தமிழின் பழமையை வட இந்தியாவுக்குக் கொண்டு சென்றது.
அச்சு முறைமை இந்தியாவில் முதற் தடவையாக தமிழிலே தான் நடைபெற்றது என்பர். அது 1547லேயே நடந்தேறியது. ஆனால் சுதேசிகள் அச்சுரிமையைப் பயன்படுத்தலாமென்ற இணக்கம் 1835ஆம் ஆண்டிலேயே வந்தது. அதன் பின்னரேயே பொதுவில் இந்திய நிலைப்பட்ட சிறப்பாக தமிழ் நிலைப்பட்ட நூல்கள் வெளி-வந்தன. ஆயினும் தமிழ்நாட்டு கிறிஸ்தவ போதனைகளினூடே திருக்குறளும் நாலடியாரும் பயன்படுத்தப்பட்டன என்றும் அவற்றுள் சிலவற்-றிற்கான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்திலே இருந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால் வரன்முறையான பண்டைய நூற்பதிப்பு 1835க்குப் பின்னரே ஏற்பட்டது.
‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்ற எனது நூலில் இந்த பிரசுர அட்டவணைகள் தரப்பட்-டுள்ளன. அவற்றைப் பின்வருமாறு காலவரிசைப்-படுத்தியுள்ளேன். 1835_1929, 1930--_1948, 1950_1979, 1980_2000 இவ்வாறு பகுத்துத் தரப்பட்டதன் மேலே பண்டைய இடைக்கால இலக்கியங்கள் சிலவற்றின் அச்சுப்பதிப்புப் பற்றிய ஒரு பட்டிய-லுண்டு. இக்கட்டுரைகளின் தேவைகளுக்கு அப்பட்டியல் முற்றுமுழுதாகத் தரப்படுவது அவசியமாகிறது.
1847     தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நச்சினார்க்கினியருரையும்.
1860    திருக்கோவையாரும், ஆறுமுக நாவலருரையும்
1868    தொல்காப்பியம் சொல்லதிகாரம். சேனாவரையம், (பதி.) சி.வை. தாமோதரம்-பிள்ளை
1868    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம், சுப்பராயச் செட்டியார் பதிப்பு.
1881    வீரசோழியம், சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பு.
1883    இறையனார் களவியலுரை, சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பு
1885    தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர், சி.வை.தா. பதிப்பு
1887    கலித்தொகை, சி.வை.தா. பதிப்பு
1887    சீவக சிந்தாமணி, நச்சினார்க்கினியர் உரை, உ.வே.சா. பதிப்பு
1889    பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியர், உ.வே.சா. பதிப்பு
1892    சிலப்பதிகாரம், உ.வே.சா. பதிப்பு
1894    புறநானூறு பழைய உரை, உ.வே.சா. பதிப்பு
1898    மணிமேகலை, உ.வே.சா. பதிப்பு
1903    ஐங்குறுநூறு, உ.வே.சா. பதிப்பு
1904    பதிற்றுப்பத்து, உ.வே.சா. பதிப்பு
1914    நற்றிணை, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு.
1915    குறுந்தொகை, திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கன், பதிப்பு
1918    பரிபாடல், உ.வே.சா. பதிப்பு
1918    அகநானூறு, இராஜகோபாலாரியன்
இவை பண்டைய தமிழ் நூற்பதிப்பின் காலவரன்முறையாகும். இந்தப் பதிப்புகள் எத்தகைய ஆய்வினடிப்படையில் நிகழ்ந்தன என்பது தெளிவற்றதாகவேயுள்ளது.
இவ்விடயத்தில் வையாபுரிப்பிள்ளை அவர்கள் சி.வை.தாமோதரம் பிள்ளை பற்றி எழுதியுள்ள கட்டுரையிலே (தமிழ் சுடர்-மணிகள்) தரும் ஒரு குறிப்பு முக்கியமாகிறது. ‘ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்-களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கி-விட்டார்கள். மழவை மகாலிங்கையர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்-கினியர் உரையோடு பதிப்பித்து, வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்கள் அப்பொழுது-தான் சீவகசிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளையவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெருமுயற்சியை மேற்கொண்டனர்’.
இக்குறிப்புரையின்படி ஆறுமுக நாவலர்,   உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரே முதன்மைப்படுகின்றனர். உண்மை-யில் நாம் இந்தப் பட்டியலில் வையாபுரிப்-பிள்ளை அவர்களின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி  முக்கிய மைற்கல்லாக-வுள்ள நாவலர் பதிப்பு, சி.வை.தா. பதிப்பு,  உ.வே.சா. பதிப்பு, வையாபுரிப்பிள்ளைப் பதிப்பு ஆகியன பற்றி மிகச் சுருக்கமாக நோக்குதல் வேண்டும்.
ஆறுமுக நாவலர் 37 நூல்களைப் பதிப்பித்-துள்ளார். இவற்றுள் மதநிலை முக்கியத்துவத்-துக்கு அப்பாற்பட்டனவாக அவரது தொல்காப்பியம் சொல்லதிகாரம், நன்னூல் காண்டிகையுரை ஆகியன ஒட்டுமொத்தமான முக்கியத்துவமுடையவை. நாவலரின் பதிப்பு முறைமை பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்படவில்லையெனினும், அவர் பாட (ஜிமீஜ்t) நிர்ணயத்திலே மிகுந்த கவனம் செலுத்தினார் என்பது தெரிகிறது. நாவலர் பதிப்பு முறைமை பற்றிக் குறிப்பிடும் பொழுது, (ஈழத்துப்) பண்டிதமணி கி. கணபதிப்பிள்ளை அவர்கள் உரையாடலொன்றின் பொழுது கூறியது மிக முக்கியமானதாகும்.
“நாவலரின் பதிப்புகளில் அவராலேயே
செய்யப்பெற்ற கடைசிப் பதிப்பையே
பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்
பதிப்புக்குப் பதிப்பு பாடங்களைத் திருத்தியுள்ளார்.’’
இதற்குக் காரணம் தொடர்ந்தும் பல்வேறு ‘பிரதிரூப’ச் சான்றுகளைப் பார்த்தமையே-யாகும்.
நாவலர் பதிப்பித்த நூல்களைப் பார்க்கும்-பொழுது அவர் அடிப்படையில் தமிழ் அறிவுத் தாகமுடையவர் என்பது மறுக்கப்பட முடியா-மல் மேற்கிளம்புகின்றது. நாவலர் பதிப்பித்த நூல்களைப் பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்.
நாவலரது நூல்கள்
பாடப்புத்தகங்கள்
இலங்கைப் பூமி சாஸ்திரம்
சைவ வினா_விடை _ முதற்புத்தகம்
சைவ வினா_விடை _ 2ஆம் புத்தகம்
முதற் பாலபாடம்
இரண்டாம் பாலபாடம்
நான்காம் பாலபாடம்
இலக்கணச் சுருக்கம்
இலக்கண வினா_விடை
உரையாக்கப்பட்ட பிரதான மத நூல்கள்         பெரிய புராணம்
திருவிளையாடற்புராணம்
பெரியபுராண வசனம் (ஒரு பகுதி)
பதிப்பித்த நூல்கள்
உரையுடன் பதிப்பித்தவை
 கோயிற் புராணவுரை
திருவள்ளுவர் பரிமேலழகர் உரை
நன்னூல் விருத்தியுரை
திருச்செந்தில் நீரோட்டகயமக அந்தாதி உரை
பிரயோக விவேக உரை
திருச்சிற்றம்பலக் கோவையாருரை
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
சேனாவரையர் உரை
மருதூரந்தாதியுரை
நன்னூற் காண்டிகையுரை
சூடாமணி நிகண்டுரை
உபநிடதவுரை
பதிப்பித்த பிற நூல்கள்:
சிவாலய தரிசன விதி
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
கந்தரலங்காரம்
ஏரெழுபது
திருக்கை வழக்கம்
புட்பவிதி
மறைசையந்தாதி
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
பட்டணத்துப் பிள்ளையார் பாடல்
அருணகிரிநாதர் வகுப்பு
திருச்செந்தூரகவல்
விநாயக கவசம்
சீவக கவசம்
சக்தி கவசம்
சேது புராணம்
தருக்க சங்கிரகம்
இலக்கணக் கொத்து
கந்தபுராணம்
பதினோராந் திருமுறை
நால்வர் நான்மணிமாலை
இரத்தினச் சுருக்கம்
சிதம்பர மான்மியம்
வாதப்பிரதிவாத எழுத்துகள்:
சைவதூஷண பரிகாரம்
யாழ்ப்பாணச் சமயநிலை
(தகவல் வெ. கனகரத்தின உபாத்தியாயரின்         ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம்)
ஆறுமுக நாவலரை அடுத்து முக்கியத்துவம் பெறும் பதிப்பாசிரியர்களாக இருவரைக் கொள்ளல் வேண்டும். ஒருவர் சி.வை.தா. இன்னொருவர் உ.வே.சா.
சி.வை.தா. பதிப்பித்த நூல்கள் பின்வருமாறு.
ஆண்டு விவரம் தெரியாதவை.
மி. நட்சத்திரமாலை
மிமி. ஆதியாகம கீர்த்தனம்
மிமிமி. கட்டளைக் கலித்துறை (இலக்கணம்)
மிக்ஷி. ஆறாம் வாசகப் புத்தகம்
க்ஷி. ஏழாம் வாசகப் புத்தகம்
க்ஷிமி. காந்தமலர் (அ) கற்பின்மாட்சி (நாவல்)
உ.வே.சா. பதிப்பித்த நூல்களின் பட்டியல் அவரின் ‘என் சரித்திரம்’ எனும் நூலில் புதிய பதிப்பிலே வந்துள்ளது. அதன் விரிவு கருதி அவை இங்கு பிரதி செய்யப்படவில்லை. சி.வை.தா., தான் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு பிரதிகளைப் பெற்றதாகவும் அவற்றிலே சில பாட வேறுபாடுகள் காணப்படு-கின்றன என்றும் தனது கலித்தொகை பதிப்பு முன்னுரை-யிலே விரிவாகக் கூறியுள்ளார். இவரின் கலித்தொகையின் பதிப்புரையின் படி இவர் உண்மைப்பாடம் எனக் கொள்ளும் சொல் தேர்வு பற்றியதற்கான காரணங்கள் விளக்கப்பட-வில்லை.
இவரோ அல்லது உ.வே.சா.வோ தங்களுக்குக் கிடைத்த பிரதிகளுள் எதனை சிரேஷ்ட பிரதியாகக் (விணீstமீக்ஷீ சிஷீஜீஹ்) கொண்டனர் என்பது பற்றியோ ஏன் அவ்வாறு கொண்டனர் என்பது பற்றியோ எழுதவில்லை. இது ஒரு  முக்கிய குறைபாடாகும்.
இதை விட இன்னொரு முக்கிய குறைபாடு யாதெனில் இவர்களுக்குக் கிடைத்த பிரதிகளுள் பெரும்பாலானவை மீட்டெழுதப்பட்ட படிகளே. இவர்கள் ஏடுகளிலிருந்து நேரடியாகப் பதிப்பித்தனர் என்று சொல்வது சிரமமாகவேயுள்-ளது. ஏனெனில் ஏடு என்பது பனை-யோலை காரணமாக, ஆகக் கூடியது 50, 60 வருடங்-களுக்கு மேலே பாவிக்க முடியாது. சில வேளை-களில் 100 வருடங்கள் இருக்கலாம். எனினும் அப்படியானவை குறைவு. மீட்டெழுதி-யவர்கள் பிழைவிட்டு எழுதினார்களா என்பது தெரியாது. இத்தகைய பிழைகள் உள்ளன என்பதற்கு இளம்பூரணர், தொல்காப்பியப் பொருளதிகார உரையில் கூறும் ‘விழ எழுதினார்’ போலும் என்ற கூற்று நல்ல சான்றாகும். கிரேக்க நூல்கள் எழுதப்பட்ட தோல், மரப்பட்டைகள் போன்று இங்கு பயன்படுத்தப்படவில்லை.
மேலும் எழுத்துருவம் தரப்படுத்தப்பட்டது அச்சின் வருகைக்குப் பின்னரே. ஏட்டு நிலையில் இவை எவ்வாறு போற்றப்பட்டன என்றோ அல்லது பாரம்பரியத்துக்குப் பாரம்பரியம் கையளிக்கப்பட்டன என்றோ நமக்குத் தெரியாது. வைஸ்னவத்துக்கு மலிவுப் பதிப்பு என்ற சொற்றொடரைப் பயன்படுத்த முடியா-தெனினும் நியூ செஞ்சுரி புக் ஹவுசினர் வெளியிட்டுள்ள சங்க இலக்கியத் தொகுதிகள் மிக முக்கியமானவையாகும். பாடல்களின் கருத்துகள் தரப்படவில்லையெனினும் பாடத்தில் (ஜிமீஜ்t) வரும் சொற்கள் பிரித்து எழுதப்பட்-டுள்ளன. இது அப்பாடல்களின் யாப்பமைதி பற்றிய ஒரு பெரும் பிரச்சனையைக் கிளப்பு-கின்றது. எனினும் ஏற்கெனவே சங்க நூற்பரிச்சய-முள்ளவர்களுக்கு இத்தொகுதி பெரிதும் பயன்படுகின்றது.
ஈழத்தைப் பொறுத்தவரையில், தி. சதாசிவ ஐயர், சி. கணேசையர், நவநீத கிருஷ்ண பாரதியார், பண்டிதர் அருலம்பலவாணர் ஆகியோர் முக்கியமானவர்கள். கணேசையரின் தொல்காப்பியப் பதிப்பு மிகச் சிறந்தது என்பது தமிழகத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடய-மாகும். ஆனால் துரதிஷ்டவசமாக கணேசையர் பதிப்பு தமிழகத்திலே அதிகம் பிரபல்யப்பட-வில்லை. நவநீத கிருஷ்ண பாரதியாரின் திருவாசக விளக்கவுரை மிகச் சிறப்பானதொன்றாகும். அது இப்பொழுது மீளச்சுப் பெறாமலேயே போய்-விட்டது.
நீதி நூல்களின் பதிப்பு, தமிழ் நூற்பதிப்பு வரலாற்றில் முக்கியவிடத்தைப் பெறுவனவாகும். குறிப்பாக திராவிட கருத்து நிலை, முதுநிலை எய்தத் தொடங்கிய 60கள் முதல் திருக்குறள் பரிமேலழகர் உரை பின்னர் வரதராசனின் உரை பெரிதும் பதிக்கப் பெற்றன. தமிழ் நூல்களிலே திருக்குறளே அதிகம் பதிக்கப் பெற்ற நூலென-லாம். இந்திய நூல்களுள்ளும் திருக்குறளுக்கு அதன் அச்சுப் பதிப்பு நிலையில் முக்கிய இடமுண்டு. கம்பராமாயணம் பதிப்புப்பற்றி வையாபுரிப்பிள்ளை ‘கம்பன் காவியம்’ என்ற தனது கட்டுரைத் தொகுப்பில் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். கோயிலிலே (சிரீரங்கத்திலே) கம்பராமாயணம் பதிக்கப்பெற்று வந்தது என்ற மரபுமுண்டு.
திராவிட இயக்கத்தினர் குறிப்பாக அண்ணா அவர்களே ‘கம்பரசம்’ என்ற நூலில் கம்பரை காமச் சார்புள்ள ஒரு புலவனாகக் காட்ட முனைந்தார். இது கம்பரைப் பற்றிய மீளாய்-வுக்கும் அவர் மேதாவிலாசப் போற்றுகைக்கும் இடமளித்தது. கம்பராமாயணத்தில் பாலகாண்-டத்தை தி.த. கனகசுந்தரம்பிள்ளை பதிப்பித்-திருந்தாரெனினும் கம்பராமாயணம் முழுவதை-யும் கிருஷ்ணமாச்சாரியார் என்பவரே பதிப்பித்-தார். திருமுறைப்பதிப்புகளும் முக்கியமாக தேவாரத் தொகுதிகளும் பெரியபுராணமும் பல பதிப்பு நிலையங்களினாலே வெளிக்கொணரப்-பட்டன. அவற்றுள் முக்கியமானது சைவ சித்தாந்த மகாசமாஜ பதிப்பாகும். தொல்-காப்பியம், நன்னூல் பதிப்புகளுக்கு வரும்பொழுது நாவலர், சி.வை.தா. முக்கிய இடம்பெறத் தொடங்குவர்.
ஆங்கிலக் கல்வி முறை வழியாக வந்த கல்வி முறையில் பாடப் புத்தகங்கள் (ஜிமீஜ்t ஙிஷீஷீளீs) முக்கிய இடம்பெறத் தொடங்குகின்றன. இப்பாடப் புத்தகங்களிலே சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள் ஆகியனவற்றிலிருந்து பாடப்பகுதிகள் தேர்ந்தெடுத்துப் போடப் பெற்றன. இவ்வாறு பாடப்புத்தகங்களுக்கு தெரிந்-தெடுக்கும் பொழுது முக்கியமான பகுதிகள் தேர்ந்தெடுக்கப் பெற்றன. பாடப்புத்தகங்களிலே காணப்பெறும் இத்தெரிவு முறைமை பண்டைய தமிழிலக்கியம் பற்றிய ஒரு மேலோட்டமான மனப்பதிவினை மாணவர்களிடையே ஏற்படுத்-திற்று எனலாம். ஆங்கிலக் கல்வி முறைமை காரணமாக வெளிவந்த பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு அவர் தம் நிலையில் தமிழிலக்கியம் பற்றிய நல்ல மனப்பதிவினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். தமிழ் நூல்களின் அச்சுமுறைமை பெருக்கத்துக்கும் பண்பாட்டு மீள்கண்டுபிடிப்புக்கும் ஒரு தொடர்புண்டு. அதன் காரணமாகவே தமிழ் பற்றிய தமிழ் நூல்கள் குறைந்த விலையில் விற்கப் பெறும் வழக்கமுண்டாயிற்று எனலாம்.
ஆங்கிலக் கல்வி வழியாக வந்த முக்கிய மரபுகளென இரண்டினை அடையாளம் காணலாம். ஒன்று, உரைநடையிலேயே முழு நூலும் எழுதப்பெறுகின்ற தன்மை. இரண்டாவது, கட்டுரை (ணிssணீஹ், கிக்ஷீtவீநீறீமீ) எனும் வடிவம். கட்டுரை எனும் சொல் முன்னர், பொருள் பொதிந்த உரை (பேச்சு) என்ற கருத்தினையும் உரைநடையில் எழுதப்பெற்றது என்ற கருத்தினையும் கொண்டிருந்தது. ஆங்கிலக்கல்வி முறையினூடே அது ணிssணீஹ் என்ற கருத்தில் வருகிறது. கட்டுரை எனும் சொல்லைக் கட்டமைவுள்ள உரை வடிவ எழுத்துருவம் என்று கூறலாம். சஞ்சிகைகள், புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சியுடன் கட்டுரை வடிவத்துக்கு  இலக்கிய அந்தஸ்-தொன்று கிடைத்தது. கல்கி, தினமணி சிவராமன் என்ற பத்திரிகையாசிரியர்கள் எழுத்துகளும் கல்வி நிலையில் நின்று எழுதப்பெற்ற ஆய்வு-களும் கட்டுரை என்ற பொதுப்பெயரால் அழைக்-கப்படத் தொடங்கின. கட்டுரை-யாசிரியர்களாக நவீன கால தமிழிலக்கியத்தில் முக்கிய இடம் பெறுபவராக திரு. வி. கல்யாண சுந்தரம் முதலியாரைக் கூறலாம். மறைமலை-யடிகள் சிந்தனைக் கட்டுரைகள் இத்துறையில் மிக முக்கியமான ஒரு நூலாகும்.
உரை எனும் சொல் முதலில் பாடங்களுக்கு எழுதப்பெறும் உரை வடிவ விளக்கங்களேயாகும். பேச்சு நிலையிலுள்ள பயன்பாட்டையும் உரை எனும் சொல் குறித்திருக்க வேண்டும் போல் தெரிகிறது. கட்டுரைகள் தொகுதிகளாகவோ அல்லது தனித்தோ நூல்வடிவில் வரும் மரபு இன்று நிலையாகிவிட்டதெனலாம். பிரதானமாக சஞ்சிகைகள் வழியாக தொடர்கதை முறைமை தமிழில் வளர்ந்து வந்தது. தமிழில் நாவலுக்கும் தொடர்கதைகளுக்குமுள்ள உறவு பற்றி ‘நாவலும் வாழ்க்கையும்’ என்ற எனது நூலிலே குறிப்பிட்-டுள்ளேன். தொடர்கதைகளை நாவல்களாக வெளியிடும் வழக்கம் 10 வருடங்களுக்கு முன்னர் பெருமளவில் நிகழ்ந்தது. ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகிய முக்கிய நாவலாசிரியர்களின் ஆக்கங்கள் இவ்வாறு தான் வெளிவந்தன.
ஒரு ரூபாய் நாவல் என்ற விலை மலிவு, தர மலிவு நாவல்களிடையே ஜெயகாந்தன், ஜானகிராமன் போன்றோரது நாவல்களும் வெளிவரத் தொடங்கின. 20ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்திலிருந்து சிறுகதையின் மேலாண்மை குறைந்துவிட்டதெனலாம். இப்பொழுது நாவல்களே பெரிதும் வெளிவரு-கின்றன.
பாடப்புத்தக அச்சிடுகை மரபை இப்பொழுது இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அரசாங்கங்-களே செய்கின்றன.
பழந்தமிழ் நூற்பதிப்பினை நோக்கும்பொழுது தமிழின் நவீன காலங்களுக்கு முந்திய இலக்கிய நூல்கள் யாவும் பதிப்பிக்கப் பெற்றுவிட்டன என்றே கூறலாம். ஆனால் இசை, கூத்து பற்றிய நூல்கள் இன்னும் பிரசுரிக்கப்படவேயில்லை. கூத்தநூல் போன்ற சில பதிப்புகள் வந்துள்ளன-வெனினும் அடியார்க்கு நல்லார் உரையில் பேசப்படும் இசை, நாடக நூல்கள் யாவும் மீளக் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளனவென்றோ எல்லாம் பிரசுரிக்கப்பட்டு விட்டதென்றோ கூற முடியாதுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து எழுதப்பெற்ற முக்கிய புனைகதை நூல்களிற் சிலவே அச்சிடப் பெற்றுள்ளன. இக்கட்டுரையில் தமிழ் நூல் பதிப்புகளின் சராசரி அச்சுத்தொகை பற்றிக் கூற வேண்டும். ஆனால் அவை பற்றிய போதிய தகவல்கள் இல்லை. பாடப்புத்தகங்-களைத் தவிர்த்த எழுத்து வகைகளுக்கு வரும்-பொழுது மு. வரதராசனின் நாவல்களே பெரிதும் அச்சிடப்பெற்றன என்று கூறலாம். ஆனால் இப்பொழுது (கடந்த 10 வருடங்களாக) அத்த-கைய ஓர் இலக்கியச் சந்தை வலுவிழந்துவிட்டது என்றே கூற வேண்டும்.
இலங்கையின் போர்ச்சூழல் காரணமாக பொது வாசிப்புக்கான தமிழ் நூல்கள் பெரிதும் அச்சிடப்பெறுவதில்லையெனலாம். ஆனால் தமிழகத்தில் நிலைமை வேறு. அவர்களுக்கு இந்தியச் சந்தை மாத்திரமல்லாது இலங்கையி-லிருந்து வெளிநாடுகளுக்-குச் சென்றுள்ள புகலிடத் தமிழர்கள் வலுவான ஓர் இலக்கியச் சந்தை-யாக அமைகின்றனர். மணிமேகலை பிரசுரம் போன்ற நிறுவனங்கள் சில இவர்களின் தேவை-களுக்கான பதிப்புகளை வெளியிடு-கின்றன.
தமிழ் நூற்பதிப்பின் தொகையளவு பற்றி நோக்கும் பொழுது ஓர் அச்சுப் பதிப்பில் பெரும்பாலும் 1000 நூல்களே அச்சிடுவர். மிகப் பிரசித்தமானவர்களின் நூல்களே பதிப்புக்கு 2000, 2500 எனச் செல்லும்.
இவ்விடயம் தொடர்பான தகவல்களை சேகரிப்பதிற் சிரமங்கள் பல உள்ளமையால் இக்கட்டுரை அதன் இலக்கு முழுமையைப் பெறவில்லையென்ற உண்மையைப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment