Tamil books

Wednesday 20 April 2011

நிலைத்த பொருளாதாரம்

 க, பழனிதுரை

அடிப்படையில் மானுட செயல்பாடுகள்அனைத்தும்
பொதுமையை நோக்கியதுதான். ஏனென்றால்
பொதுமையில்தான் தனிமனித சுதந்திரமும்
உள்ளடங்கியுள்ளது. பொதுமையை நோக்கிச் செயல்படு-
கின்றபோது எல்லையை மீறிய தனிமனித செயல்பாடு-
களுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில் தனிமனித
பாதிப்புகளும் இல்லை. ஆனால் தனிமனித வளர்ச்சிக்கு
வரையறை வந்துவிடும். எல்லையிலாச் செல்வத்தினைக்
குவிக்கவும், போக வாழ்க்கையில் திளைக்கவும் வாய்ப்பு
இல்லை. இன்றைய புதிய பொருளாதாரம் பொதுமையைப்
பற்றிப் பேசுவது இல்லை. வளர்ச்சியைப் பற்றியும், பொருள்
உற்பத்தியைப் பற்றியும், நுகர்வைப் பற்றியும்தான் பேசுகிறது.
எதிர்காலத்தைப் பற்றியோ, மானிட இயற்கை
ஒருங்கிணைப்பைப் பற்றியோ, உறவைப் பற்றியோ, கிடைத்த
வளர்ச்சியின் நிலைத்த தன்மையைப் பற்றியோ, ஒழுக்க
நியதிகளைப் பற்றியோ மானுட சுரண்டலைப் பற்றியோ
பேசுவது கிடையாது. எனவேதான் உபரி வருமானத்தையும்,
புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம்
பெரிய அளவில் உற்பத்தியைப் பெருக்குவது காலத்தின்
கட்டாயம் எனக் கருதுகின்றனர். இந்த உபரியும்,
தொழில்நுட்பமும் எல்லையில்லா அளவிற்கு மானுடத்தில்
பிரிவினையையும், பிளவினையும், ஏற்றத்தாழ்வினையும்
உருவாக்கி விட்டிருக்கின்ற நிலையினை நாம் பார்த்து
வருகிறோம். ஆனால் மானுடம் அடிப்படையில் சுரண்டி
வாழும் தன்மைக்குச் சென்றால் அது மானுடத்தின்
மாண்பை இழந்து விடும். தனிமனித நுகர்வின் உச்சத்தில்
மானுடம் நின்று, இயற்கையின் வளங்களை எல்லாம்
அழித்து, சூறையாடி, வளர்ச்சியின் உச்சி எல்லைக்குச்
செல்லும் மானுடம் சந்திக்கின்ற இடர்ப்பாடுகள்
கொஞ்சநஞ்சமல்ல. இயற்கை தன் வலிமையைக்
காட்டும்போது மானுடம் அனுபவிக்கின்ற தொல்லைகளும்
கொஞ்சநஞ்சமல்ல. உலகம் வெப்பமயமாதல், சீதோஷ்ண
நிலை மாறுதல், பெருவெள்ளம், சுனாமி போன்ற பல்வேறு
இயற்கைச் சீற்றத்திற்கு நாம் ஆளாக வேண்டியிருந்தது.
இருந்தபோதிலும் இன்றைய பொருளாதாரச்
செயல்பாடுகளை ஒரு வரலாற்றுப் போக்காகத்தான் பார்க்க
வேண்டும். இந்தச் சூழலில் காந்தியப் பொருளாதார மேதை
டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்Õ
என்ற நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இது
ஒரு மாற்று வாழ்க்கைப்பாதை. பொருளாதாரத்திற்கு
வாழ்க்கையைத் தருவதைத் தவிர்த்து உயர்ந்த உன்னதமான
வாழ்க்கையை வாழ்வதற்கு குமரப்பா காட்டும் பாதை.
அறநெறிப் பொருளாதாரப் பார்வை. இன்றைய
பொருளாதாரச் செயல்பாடுகள்உச்சத்திற்குச் சென்று
மானுடத்தைத் தீர்க்க இயலாச் சிக்கலுக்கு
உள்ளாக்கும்போது கட்டாயமாக மானுடம் காந்தி கண்ட
இந்த மாற்றுப்பாதைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்.
இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தவுடன் புரிந்து
கொள்வது கடினம். இரண்டு அல்லது மூன்று
முறையாவது கவனமாகப் படித்தால்தான் புரிந்து கொள்ள
முடியும் என்று காந்தி அடிகளே கூறியுள்ளார். இந்தப்
புத்தகத்தில் அடிப்படையில் மானுட வாழ்க்கையின்
நோக்கத்தை நிறைவு செய்ய, இயற்கை மானுட உறவின்
நியதியைப் பின்பற்றிச் செயல்படுதலுக்கு உரிய வரையறை
முக்கியமாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மானுடத்தின் அறிவையும், திறனையும் ஆங்காங்கே
பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள உயர்ந்த எண்ணங்களுடன்
குறைந்த தேவைகளைக் கொண்டு மானுடம்
செயல்பட வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தில் அடிப்ப
டையாகக் கொண்டே விளக்குகிறார் நூல் ஆசிரியர்.
அடிப்படையில் தமிழராக இருந்தாலும் இந்நூலை
ஆங்கிலத்தில்தான் எழுதினார். இந்த நூல் முதலில் டாக்டர்
மு. அருணாச்சலம் அவர்களால் தமிழில் ÔÔஅழிவற்ற
பொருளாதாரம்ÕÕ என்ற தலைப்பில் கொண்டு வரப்பட்டது.
அடுத்து திரு அ.கி. வேங்கடசுப்பிரமணியன் அவர்கள்
மொழிபெயர்த்து ÔÔநிலைத்த பொருளாதாரம்ÕÕ என்ற தலைப்-
பில் காந்தி கிராம அறக்கட்டளையால் வெளியிடப்-பட்-
டது. இந்த இரண்டு பதிப்புகளுமே இன்று கிடைப்பதி
ல்லை. இன்றைய மானுடம் தன் கூட்டு வாழ்க்கையை
இழக்கும் சூழலில், மற்றவருக்காக மற்றவருடன் பகிர்ந்து
உணர்ந்து வாழும் சூழலை இழக்கும் நிலையில் இப்புத்தகம்
ஒரு வழிகாட்டி நூலாக இருக்கும் என்பதில் எந்தச்
சந்தேகமும் இல்லை. இந்தப் புத்தகத்தை இன்னொரு முறை
அச்சிட்டு வெளியிடுவது இன்றைய தேவை.

No comments:

Post a Comment