Tamil books

Thursday 21 April 2011

கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும்

பெ. மாதையன்


தமிழின் பெயரடை_வினையடை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்றைய இலக்கணங்களில் அவை தனித்த இலக்கணக் கூறுகளாக ஏற்கப்பட்டுள்-ளன. அந்த அளவுக்குச் சங்ககாலம் தொட்டு இவற்றின் பயிற்சி எல்லாக் காலகட்ட மொழியி-லும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அதனால் ஆரம்பகால அகராதிகள் தொடங்கி இன்றுவரை வெளிவந்துள்ள அகராதிகளில், குறிப்பாக இரு-மொழி அகராதிகளில் பரவலாகப் பதிவுகளாய் ஏற்கப்பட்டுள்ள அளவுக்கு மொழிப் பயன்பாட்-டில் இவை மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்-ளன. இந்த இருவகை இலக்கணக்கூறுகளும் பற்றி, கமில் சுவெலபில் எழுதிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் பற்றியும் தொடர்புடைய கருத்துகள் பற்றியும் ஆராய்வதே இந்த ஆய்வுரையின் அடிப்படை நோக்கம்.
1.    தமிழில் பெயரடை வினையடை-களும் அவை பற்றிய  ஆய்வுகளும்
பண்டைக் காலந்தொட்டே வழக்கில் பயின்றுவரும் இந்த இருவகை இலக்கணக் கூறுகளும் பற்றித் தமிழ் மரபிலக்கணங்கள் எந்தவித வரையறையும் செய்யவில்லை. இருந்தபோதிலும் தொல்காப்பியருக்கு அடை பற்றிய கருத்து இருந்ததை ‘அடைசினை முதல் என்ற முறை மூன்றும்’ (சொல்லதிகாரம், 1981:1:23) ‘அடையடு தோன்றினும் அதனோரற்றே’ (எழுத்ததிகாரம், 1981:8:23) என்பன போன்ற நூற்பாக்கள் வெளிப்படுத்துகின்றன. பெயரினும் வினையினும் மெய் தடுமாறிவரும் பெயரடை வினையடைச் சொற்களை உரியியலில் தந்திருந்-தாலும் அவற்றுக்கான வரையறை அவரின் இலக்கண வரைவில் இடம்பெறவில்லை. பின்வந்த ஐரோப்பியர் தாங்கள் எழுதிய அகராதிகளிலும் கற்பித்தல் இலக்கணங்களிலும் பெயரடை வினையடைகளுக்குத் தமிழ் இலக்கண ஒருங்கில் உரிய இடத்தையும் அவற்றுக்கான வரையறையுடன் வகைகளையும் தந்துள்ளனர். பின்வந்த சென்னைப் பல்கலைக்-கழக அகராதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்றவற்றிலும் பெயரடை வினையடைகள் பேரளவில் இடம்பெற்றுள்ளன. நுஃமான் (2000), பொற்கோ (2002) போன்றோர் எழுதிய தற்காலத் தமிழ் இலக்கணங்களிலும் இந்த இலக்கணக்-கூறுகள் உரிய வரையறையைப் பெற்றுள்ளன. இருந்தபோதிலும் இந்த இருவகை இலக்கணக் கூறுகளைப் பதிவு செய்வதில் அகராதிகளுக்குள் பலவித உள் முரண்பாடுகளும் அகராதிக-ளிடையே பலவித வேறுபாடுகளும் காணப்படு-கின்றன. எனவே இந்தச் சூழலில் இந்த இலக்கணக் கூறுகளின் பொருள்வரையறை பற்றிய ஆய்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவனாக உள்ளன. இந்த வகையில் சுவெலபில் எழுதிய இரு கட்டுரைப் பொருண்-மைகளும் இங்கு ஆராயப் பெறுகின்றன.
2.    சுவெலபிலின் பெய-ரடை வினையடை ஆய்வு-களும் உருவாக்கப் பின்னணி-யும்
ஜிலீமீ மீஜ்வீstமீஸீநீமீ ஷீயீ ணீபீஸ்மீக்ஷீதீs வீஸீ ஜிணீனீவீறீ (ஜிணீனீவீறீ சிuறீtuக்ஷீமீ, க்ஷிஷீறீ. க்ஷிமிமிமி ழிஷீ.1), விஷீக்ஷீமீ ணீதீஷீut ணீபீஸ்மீக்ஷீதீs ணீஸீபீ ணீபீழீமீநீtவீஸ்மீs வீஸீ ஜிணீனீவீறீ (ஜிணீனீவீறீ சிuறீtuக்ஷீமீ, க்ஷிஷீறீ. மிஙீ ழிஷீ.3) எனும் இரண்டு கட்டுரைகளும் இந்த ஆய்வுக்-கான ஆய்வுக்களங்களாக அமைகின்றன. இந்த இரண்டும் திராவிட மொழிகளில் உண்மைப் பெயரடை-களும் வினையடைகளும் இல்லை என்ற பொதுக்கருத்தை மறுப்பதற்கென்று எழுதப்-பட்டவை. இந்தக் கருத்தை வலுப்படுத்திய யிuறீமீs ஙிறீஷீநீளீ என்பாரின், பெயரடைகள் பெயர்களாக அவை ஏற்கும் பெயர்களுடன் முற்றிசைவு உடையவனாக வேற்றுமை, பால் இவற்றுக்கேற்ப விரிவன (கிபீழீமீநீtவீஸ்மீs ணீக்ஷீமீ ஸீஷீuஸீs வீஸீயீறீமீநீtமீபீ வீஸீ நீணீsமீ ணீஸீபீ ரீமீஸீபீமீக்ஷீ வீஸீ நீஷீஸீரீuக்ஷீமீஸீநீமீ ஷ்வீtலீ ஷீtலீமீக்ஷீ ஸீஷீuஸீs) என்ற கருத்தை மறுத்து இந்த இரண்டு கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
2.1    கருத்து மறுப்பும் கட்டுரைப் பொருளும்
ஜூல்ஸ் பிளாக்கின் இந்தக் கருத்து இயந்திரத் தனமான, இந்தோ_ஐரோப்பிய மொழியின் கலைச்சொல்லையும் வரையறைகளையும் அப்படியே தழுவியதாக உள்ளது எனக்கூறி இந்த ஐரோப்பியமயமாக்கம் திராவிட மொழிகளுக்கு ஏற்கக் கூடியதல்ல எனவும் குறிப்பிடுகின்றார் சுவெலபில். (ப. 44) கி. விணீstமீக்ஷீ, ஜி. ஙிuக்ஷீக்ஷீஷீஷ் ஆகிய இருவரும் இதை மறுத்ததையும்  இந்தக் கட்டுரை-யில் குறிப்பிட்டுள்ளார் கமில் சுவெலபில். ஜூல்ஸ் இந்தக் கருத்தைக் குறிப்பிடக் காரணமாக இருந்த கோண்டா/கன்னட மொழிகளின் சான்றுகளில் ஒன்றான வீஸீவீஹ்ணீறீ ளீணீபீணீறீமீ (sஷ்மீமீt தீமீறீஷீஷ்மீபீ) என்ற கன்னடத் தொடரையும் எடுத்துக் காட்டி இதற்கு tலீமீ sஷ்மீமீt ஷீஸீமீ, tலீமீ தீமீறீஷீஸ்மீபீ எனப் பொருள் கொள்ள வேண்டும் என்பதையும் கூறியுள்ளார். ஜூல்ஸின் கருத்தை மறுப்பதற்கான இந்தக் கட்டு 1. பெயரடை, வினையடை வரையறை, 2. வகைப்பாடு, 3. பெயரடை வினை-யடை அடி/பெயரடை வேர் எனும் கூறுகளை விளக்குவதாக அமைந்துள்ளது.
2.1.1    வரையறை
பெயரடைகள் மேலும் பகுக்க இயலாத சொல்லன்களாக (லிமீஜ்மீனீமீs) குறிப்பிட்ட சில அடிப்படைப் பண்புகளை வெளிப்படுத்துவன-வாகத் தம்மைத் தொடரும் பெயர்களுடன் அடைநிலைத் தொடரக உறவு உடைய னவாக வருவன (ப.45) என்றும் இவை வேற்றுமை உருபேற்று விரிந்துவருவன அல்ல (ப.286) என்றும் வடிவில் பெயர் வினைகளுக்கு இடைப்பட்டன (ப.287) என்றும் பெயர்களுடன் எண், பாலியைபு உடையன அல்ல என்றும் வரையறை கூறுகிறார்.  வினையடைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் தொடரியல் தொடர்பில் வினையின் செயல், நிலை ஆகியனவற்றை உறுதிப்படுத்தும் இயல்பினவாக வருவன (ப.46) என்றும் சொற்-பொருள் அடிப்படையில் தனித்த இலக்கணக் கூறாக வரையறுக்கத் தக்கன (ப. 285) என்றும் பெயர் வினைகள் போன்று சொல்விரிவு விகுதி-களை எடுக்காதன (ப. 286) என்றும் கூறுகிறார்.
2.1.2. வகைகள்
பெயரடை, வினையடை இரண்டையும் முறையே ணீபீழீமீநீtவீஸ்மீs, ணீபீழீமீநீtவீஸ்ணீறீs என்றும் ணீபீஸ்மீக்ஷீதீs, ணீபீஸ்மீக்ஷீதீவீணீறீs என்றும் வகைப்படுத்திக் கூறியுள்ளார் (ப. 285) இந்த வரையறைகளின்படி சிறு, பெரு என்பன ணீபீழீமீநீtவீஸ்மீs சிறந்த, பொன் (பொன்னகரம்) என்பன ணீபீழீமீநீtவீஸ்ணீறீs. சிறு, பெரு என்பன சிற், பெர் என்ற வேர்களுடன் உ விகுதி சேர்ந்தவை என்பதால் ணீபீழீமீநீtவீஸ்மீs என்றும் சிறந்த என்பது சிற என்ற வினையடியாகப் பிறந்தது என்பதாலும் பொன் பெயராகவும் வர வல்லது என்பதாலும் இவற்றை ணீபீழீமீநீtவீஸ்ணீறீs என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் போலவே இனி, இங்கு என்பனவற்றை ணீபீஸ்மீக்ஷீதீs என்றும் நாளைக்கு, இந்தமாதிரி என்பனவற்றை ணீபீஸ்மீக்ஷீதீவீணீறீs என்றும் குறிப்பிடு-கிறார். இனி இங்கு என்பன வேறு சொல்-வகையாகச் செயற்படாமல் வினையடையாக மட்டுமே செயல்படுவதால் அவை போல்வன-வற்றை ணீபீஸ்மீக்ஷீதீs என்றும் நாளைக்கு, போன்றவை பெயருடன் நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்தவை என்பதால் ணீபீஸ்மீக்ஷீதீவீணீறீs என்றும் கூறுகிறார். இந்தமாதிரி, இந்த வழியே என்பன முறையே பெயரடையுடன் பெயரும், பெயரடை-யுடன் இணைந்த பெயருடன் ஏ விகுதியும் இணைந்தனவாக இருப்பதனால் இவையும் ணீபீஸ்மீக்ஷீதீவீணீறீs.
இந்தப் பொது வகைப்பாட்டுடன் உள்வகைப்-பாடுகளையும் செய்துள்ளார் சுவெலபில். பெயரடைகளைப் பேரளவில் வகைப்படுத்திக் கூறவில்லை என்றாலும் வினையடைகளை வகைப்படுத்திக் காட்டியுள்ளார். வினையடை-களில் இரண்டு வகைகளையும் அவற்றின் உள்வகைப்பாடுகளையும் தந்துள்ளார்.
வகை -1
1. பெயராக இருந்தும் வினையடையாகப் பயன்படுத்தப்படுபவை
(எ.டு. 1. பெயர்கள் : முன்,பின், 2. பெயருடன் ஏ சேர்ந்தவை: புறம்பே, அருகே, உள்ளே)
2. பிறமொழிச் சொற்களான வினையடைகள்
(எ.டு. தினம் <ஷிளீt. பீவீஸீணீ, சரி<றிளீt. sணீக்ஷீவீ, சுமார்<றிமீக்ஷீs. sலீuனீணீக்ஷீ)
3. வினையடியாகப் பிறந்தவை. அஃதாவது செய்ய, செய்து வாய்பாட்டில் வரும் எச்ச வடிவங்கள்.
(எ.டு. மெல்ல < மெல், கிட்டே < கிட்டு, ரொம்ப < நிரம்பு, மீண்டும் < மீள்)
4. tக்ஷீuறீஹ், க்ஷீமீணீறீறீஹ் எனும் பொருட்களில் மாற்றுப் பெயராக வரும் தான்.
வகை -2
இவர் குறிப்பிடும் இரண்டாவது வகையுள் அடங்குவன மேலும் சொல்லன்களாகப் பிரிக்க இயலாதவை என்கின்றார் அவர் (ப. 47). இவற்றையும் பின்வருமாறு நான்காக வகைப்படுத்தித் தந்துள்ளார்.
1. சுட்டெழுத்து, வினாவெழுத்து ஆகியவற்-றுடன் நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்தவை
(எ.டு.இங்கு,அங்கு,ஈங்கு,ஆங்கு,எங்கு (இ+கு>இ+ங்+கு>இங்கு).
2.பெயர் வினைகளிலிருந்து உருவாக்கம் பெற்று நான்காம் உருபேற்றவை
(எ.டு.ஒருங்கு,உடங்கு,பிறகு). இவர் கருத்துப்படி ஒருங்கு என்ற தன்னிலைப் பெயர்ச்-சொல்     (ஷிuதீstணீஸீtவீஸ்மீ) ஒருங்கு எனும் வினை-யடை-யிலிருந்தும் ஒருங்கு எனும் வினை ஒருங்கு எனும் பெயரிலிருந்தும் பிறந்த வடிவங்கள்.
3. நான்காம் வேற்றுமை உருபேற்காமல் வேறு விகுதி பெற்று வரும் இ
(எ.டு.இனி,இன்னே,இன்னும் (இ+ன்+இ, இ+ன்ன்+ஏ, இ+ன்ன்+உம்).
4. நனி போன்றவை
இந்தச் சொல்லை இவர் நல் +இ>நன்+இ> நனி எனவும் ஐயப்பட்டுடன் நன்+தி>நன்தி> நன்னி>நனி எனவும் பிரித்துக் காட்டியுள்ளார்.
நன்தி > நன்னி >நனி எனவும் பிரித்துக் காட்டி-யுள்ளார்.
இரண்டாவது வகையுள் அடங்கும் இந்த நான்கு வகைகளையும் சுவெலபில் உண்மை வினையடைகள் (tக்ஷீuமீ ணீபீஸ்மீக்ஷீதீ அல்லது ஷீக்ஷீவீரீவீஸீணீறீ ணீபீஸ்மீக்ஷீதீ) எனக் குறிப்பிடுகின்றார். இவற்றை உண்மை வினையடைகள் என்று குறிப்பிடுவதற்-கான அடிப்படைக் காரணங்களாக அவர் கூறுவன 1. வேறு இலக்கணக் கூறுகளாகச் செயல்படாதிருத்தல் 2. மொழியின் தொடக்க காலம் முதற்கொண்டே இவை வினையடை-யாகச் செயற்படுதல் 3. சிறு பொருட்கூறுகளாகப் பிரிக்க இயலாதனவாக இருத்தல் என்பன ஆகும். இந்த வகைப்பாடுகள் எல்லாம் இவர் முதல் கட்டுரையில் ஆராய்ந்த செய்திகள்.
3. வேரும் அடியும் சொல்விரிவும்
பெயர்களும் வினைகளும் வேர், அடி, சொல்விரிவு (மிஸீயீறீமீநீtவீஷீஸீ) ஆகிய மூன்றையும் உடையனவாக உள்ளன. பெயரடைகளும், வினையடைகளும் இந்த இயல்புடையன அல்ல, குறிப்பாகச் சொல்விரிவு உடையவை அல்ல என்கின்றார் சுவெலபில். வேர், அடி வரையறை-களில் அடிப்படையில் இவர் பெயரடை வினையடைகளின் வேர், அடிகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.
3.1. வேர்
பொருளுக்கு அடிப்படையாக அமைவதும் சொற்களின் வடிவில் முதல் இடத்தைப் பெற்று முதல் கூறாக அமைவதுமான சொற்களை வேர் என்கின்றார். இவற்றைப் பெயரடி, வினையடி, பெயர்வினையடி எனக் காட்டியுள்ளார். முறையே ஐ,விட், ஆள் என்பன இவற்றுக்கு உரிய எடுத்துக்காட்டுகள் (ப.281).
3.2. அடி
வேரோடு வேர் அல்லாத உருபன்கள் சேர்ந்தது அடி; சில வேளைகளில் வேரே (எ.டு: ஆள், ஈ போன்றவை) அடியாகவும் வரலாம். பெரும்பாலும் இந்த அடிகள் வேருடன் ஆக்க உருபன்கள் சேர்ந்து உருவானவை என்கின்றார். (எ.டு: விட் +உ>விடு, விட் +அர்>விடர்) (ப. 281, 282).
இந்தக் கருத்துகளின் அடிப்படையில் வேர்கள், அடிகள், ஆக்க விகுதிகள் என்று மூன்று கூறுகள் வருகின்றன. பட், கட், கள், வர், சொல் என்பன முறையே படு, கடு, களிறு, வருத்தம், சொல்ல என்பனவற்றின் வேர்கள். இவை உ, ம், இ, ற்ற், த்த், இன், அ எனும் ஆக்க-விகுதி-களில் உரியவற்றைப் பெற்று படு, கடும், களிற்ற், வருத்த், சொலி என வருகையில் அவை அடிகளாகின்றன.
இந்த அடிப்படைப் பாகுபாட்டின் அடிப்-படையில் தமிழில் தனித்த சொல்வகையாகப் பெயரடை வினையடைகள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு விடை காண்கின்றார் கமில் சுவெலபில். இந்த அடிப்படையில் தமிழ் வினையடைகளுக்கான அடிப்படை வேர்களைக் காண்பது இயலாது என்கின்றார் (ப.285). பெரும்பாலான வினையடைகள், நன்+இ>நனி, இ+ன்ன்+உம்>இன்னும் என வேரும் ஆக்க விகுதிகளும் சேர்ந்தனவே எனும் இவர் கருத்துப்படி இவ்வாறு வருவன அடிகள். இவை பெயர்வினை போலச் செயற்படாதவை என்பதால் இவற்றைத் தனித்த இலக்கண வகையாகக் கொள்ளலாம் என்கின்றார் (ப.286).
பெயரடைகளைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கு வேர்களும் அடிகளும் உண்டு. பெர் என்பது பெயரடை வேர், பெரு என்பது என்ற வேருடன் உ என்ற விகுதி சேர்ந்த அடி. பெருமை என்பது இந்த வேரிலிருந்து பிறந்த பெயர்ச்சொல். இந்த வேரும் அடியும் பெயரடையாகச் செயற்பட வல்லன. நல் + தமிழ் > நற்றமிழ், பெரு + நாள் > பெருநாள் என்பனவற்றில் முன்னது வேரடியாகவும் பின்னது அடிச்சொல் அடியாகவும் பிறந்த பெயரடைகள். சுவெலபில் பெருமை, சிறுமை, ஒன்று போன்றவற்றை பெரு, சிறு, ஒரு என்ற அடிகளின் அடியாகப் பிறந்தனவாகக் காட்டியுள்ளார். ஸிuநீளீமீக்ஷீt என்பவரின் கருத்தான பெயரடைகளிலிருந்து பெயர்கள் உருவாயின என்ற கருத்தை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் சுவெலபில்.
இவரின் இந்தக் கருத்துகளின் அடிப்படை-யில் பெயர், வினை, பெயரடை என்பன வேர், அடி இரண்டும் உடையன; வினையடைகள் அடி மட்டுமே உடையன. பெயரடை, வினை-யடைகள் திணை, பால், எண், இடங்களுக்கு ஏற்பவும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்பவும் சொல்விரிவுகளாக விரியாதன. நல் போன்ற பெயரடைகள் அடியாக நல்லோர், நல்லேம் என்பன போன்ற சொற்கள் விரிந்தாலும் பெயரடைகள் பெயர்கள் அல்ல.
4. அறிஞர்களின் கருத்துரைகள்
1. பர்ரோவின் பெயரடை வினையடை பற்றிய வரையறையைத் தெளிவுபடுத்தும் வகையிலும் திராவிட மொழிகளில் பெயரடை வினை-யடைகள் இல்லை என்ற கருத்தை மறுக்கும் வகையிலும் எழுதப்பட்ட சுவெலபிலின் இந்தக் கட்டுரைகளை அடியற்றியே மு. வரதராசன், (1964), வேலுப்பிள்ளை (1966), மோ.இசரயேல் (1966) ஆகியோரின் பெயரடை பற்றிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழின் இலக்கணக்கூறுகள் பற்றி ஆராயும் மோ. இசரயேல், சுவெலபிலின் வரையறையைப் பின்பற்றியே பெயரடை வினையடைகளை விளக்கியுள்ளார். இந்த வழித்தடத்தில் அமைந்ததுதான் மு.வரதராசனாரின் கட்டுரையும், கல்வெட்டுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பெயரடைகளை ஆராயும் ஏ. வேலுப்பிள்ளைக்குச் சுவெலபிலின் கட்டுரைகள் பெயரடைக்கான வரையறை ஆதாரங்களாக அமைந்துள்ளன. இந்த வகையில் சுவெலபிலின் இந்த இரு கட்டுரைகளும் பெயரடை வினையடை பற்றிய ஆய்வில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாக உள்ளன.
செம்மை, சேய்மை, சிறுமை முதலான சொற்-களை எல்லாம் பவணந்தியார் பண்பிற்பகாப்-பதங்கள் (நூற்பா 135) என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பகாப் பதங்களிலிருந்து சிறு, சிறிய, பெரு, பெரும், பேர், கரு போன்ற வடிவங்களை எல்லாம் விதிகளின் மூலம் வருவிப்பதே பவணந்தியார் கொள்கை. மாற்றுருபுகளைச் சந்திவிதிகள் மூலம் வருவித்துக்கொள்ளும் இவ்வகை ஆய்வைப் பொற்கோ விதிமுறை ஆய்வு என்கின்றார் (1989: 21), “அகம் + கை என்பதிலிருந்து அங்கை என்பதையும் ஒன்று என்பதிலிருந்து ஒரு ஓர் என்பனவற்றையும், இரண்டு என்பதிலிருந்து இரு, ஈர் என்பனவற்றையும் வருவித்திருக்கிறார்... இவை எல்லாவற்றையும் ஒருங்கு வைத்து நோக்கும் போது தொல்காப்பியப் பெருந்தகையின் இலக்கணப் கோட்பாட்டில் அடிநிலைக்கிளவிக் கோட்பாட்டிற்கு இருந்த இன்றியமையாமை இனிது விளங்கும்’’ (1989: 27) என்கின்றார் பொற்கோ. இவ்வாறு முழுச்சொற்களிலிருந்து சந்தி விதிகளின் மூலம் சொற்களை வருவிக்கும் முறைப்படி செந்தாமரை, கருங்குவளை என்பனவற்றில் உள்ள செம், கரும் என்ற பண்புச் சொற்களை பண்பின் பகாப் பதங்களாகிய செம்மை, கருமை, என்பனவற்றிலிருந்து வருவிக்கும் பவணந்தியின் கொள்கையிலான இந்த முறையே இன்று வரையிலும் தமிழ் மரபிலக்கணக்கல்வியில் கற்றுத் தரப்பட்டு வருகின்றது. சென்னைப் பல்கலைக்கழக அகராதி போன்றவற்றிலும் பெயரடைகளின் மூலங்களாக முழுச்சொற்களே காட்டப்பட்டுள்ளன. இந்தக் கொள்கையை மறுத்துள்ளார் சுவெலபில். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. வேலுப்-பிள்ளையும் முழுச் சொற்களிலிருந்து அடை-களை வருவிக்கும் இந்த முறை மொழி இயற்கைக்கு முரணானது என்று கூறுகின்றார். (1966: 818).
பெயரீடு என்ற நிலையில் பெயரடை, வினை-யடைகளைச் சுட்ட சுவெலபில் பெயருரிச்சொல் (ஸீஷீuஸீ ஹீuணீறீவீயீவீமீக்ஷீ), வினையுரிச்சொல் (ஸ்மீக்ஷீதீ ஹீuணீறீவீயீவீமீக்ஷீ) என்ற சொற்களையே ஆண்டுள்ளார். உரிச்சொற்களைக் குறிப்பிடுகையில் ஹீuணீறீவீயீவீமீக்ஷீs என்றே குறிப்பிடுகின்றார் (ப.45). தொல்காப்பிய உரையாசிரியர்கள் பெயர்ப்போலி, வினைப்போலி (சேனாவரையர், 1980:185 நச்சினார்க்கினியர், 1974: 191) என்று குறிப்பிட்டதற்கு மாறாக ஜி.யு.போப் கி பிணீஸீபீ தீஷீஷீளீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீ லிணீஸீரீuணீரீமீ (முதல் பதிப்பு-1855) என்ற நூலில் ணீபீழீமீநீtவீஸ்மீ என்பதற்கு உரிச்-சொல் பண்புச்சொல் என்பனவற்றையும் ணீபீஸ்மீக்ஷீதீ என்பதற்கு வினையுரி என்பதையும் கையாண்-டுள்ளார். இந்த நூலுக்கு முன்னர் வெளிவந்த இராட்லர் அகராதியில் (முதல் பதிப்பு 1834) உரி/உரிச்சொல்லுக்கு ணீ ரீமீஸீமீக்ஷீணீறீ ஸீணீனீமீ யீஷீக்ஷீ ணீபீழீமீநீtவீஸ்மீ ணீஸீபீ ணீபீஸ்மீக்ஷீதீ எனப் பொருள் தரப்பட்டுப் பெயருரி, வினையுரி எனும் சொற்களும் ஆளப்பட்டுள்ளன. இந்தச் சொற்களையே பின்னாளில் இலக்கணம் எழுதிய ஜான் லாசரஸ§ம் (1878) ஆண்டுள்ளார். சுவெலபிலும் இந்தக் கருத்துகளையே ஏற்றுள்-ளார். ஆனால், 1862-இல் வெளிவந்த வின்சுலோ அகராதியில் உரிச்சொல்லுக்கான பொருள்-விளக்கம் மேற்குறிப்பிட்டவாறு பொத்தம்பொது-வாக அமையவில்லை. வின்சுலோ நான்கு வகை-யான சொற்களில் ஒன்று என்றும் உரிச்சொல் பெயரடை வினையடைகளையும் உள்ளடக்கி-யது என்றும் கூறியுள்ளார். 1925-இல் வந்த சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் “சொல்-விரிவுபெறாது என்பொழுதும் பெயரடையாகவும் வினையடையாகவும் செயற்படவல்ல சிலவற்றை உள்ளடக்கிய, தமிழின் நால்வகை இலக்கணக்-கூறுகளில் ஒன்று’’ (ளிஸீமீ ஷீயீ ணீ யீமீஷ் வீஸீபீமீநீறீவீஸீணீதீறீமீs ஷ்லீவீநீலீ ணீறீஷ்ணீஹ்s லீணீஸ்மீ tலீமீ யீஷீக்ஷீநீமீ ஷீயீ ணீபீழீமீநீtவீஸ்மீ ணீபீஸ்மீக்ஷீதீ; ஷீஸீமீ ஷீயீ யீஷீuக்ஷீ ஜீணீக்ஷீts ஷீயீ sஜீமீமீநீலீ வீஸீ ஜிணீனீவீறீ) என உரிச்சொல்லுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தைப் பின்பற்றிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் “பெயரெச்சம், வினையெச்சம் போன்றவற்றிற்கு அடியாக விளங்கும் தமிழின் நால்வகைச் சொற்களில் ஒன்று’’ எனப் பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அகராதியில் ணீபீழீமீநீtவீஸ்மீ ணீபீஸ்மீக்ஷீதீ என்பனவற்றிற்கு இணையான சொற்களாகப் பொருத்தமிலாத வகையில் பெயரெச்சம், வினையெச்சம் என்பன ஆளப்பட்டுள்ளன. வின்சுலோவின் விளக்கத்-திற்குப் பின்வந்த இந்த விளக்கம் பொருத்த-மானதாகப் படவில்லை. சென்னைப் பல்கலைக்-கழக அகராதியில் அந்த அகராதியின் விளக்-கத்தை உறுதிப்படுத்தும் வகையில் உறு, தட, தய, குழ போன்றவை பெயரடை எனவும், தவ, நனி, சால போன்றவை வினையடை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில் நளி, நன்று, புரை, கெழு, நம்பு, மேவு, வயா, உசா போன்றவை பெயர் எனக் குறிப்பிடப்பட்டுள்-ளன. இதனடிப்படையில் பார்க்கின்றபொழுது உரிச்சொற்களைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரியர்கள் பெயரடை, வினையடைகளாக மட்டும் கருதவில்லை என்பது புலனாகின்றது. இன்றைய ஆய்வாளர்-கள் இதை அடி அல்லது அகராதியின் (லிமீஜ்மீனீமீ) என்கின்றனர் (செ.வை. சண்முகம் 1986:159). உரிச்சொற்கள் எல்லாம் பொருளுக்குரிய அகராதிச்சொற்கள் என்கின்றார் க. பாலசுப்பிர-மணியன் (செ.வை.சண்முகம், 1986:106 கலந்துரை-யாடல் பகுதி). “தொல்காப்பியரின் உரிச்சொல் என்ற பகுப்பே அகராதிச்சொல் அல்லது பொருளுக்குரிய சொல் என்ற அடிப்படையை உடையதாதலால் அச்சொற்களின் பொது இலக்கணம் கூறி அமைகிறார்’’ (1989: 60) எனும் இவரின் அகராதிச்சொல் எனும் கருத்தே இங்கு வலியுறுத்திச் சொல்லத் தகுந்த கருத்தாக உள்ளது. எனவே தனக்கு முற்பட்ட காலத்தி-லேயே உரிச்சொற்கள் பெயரடை வினையடை-களையும் உள்ளடக்கிய வகைப்பாடு என்ற கருத்து நிலவினாலும் சுவெலபில் உரிச்சொற்-களை அடைச்சொற்கள் (ஹீuணீறீவீயீவீமீக்ஷீs) எனக் குறிப்பிட்டது பொருத்தமாக இல்லை.
சுவெலபில் மெல்ல என்பதை மெல் என்ற வினையடியாகப் பிறந்த, செயவென் எச்ச வடிவில் அமைந்த வினையடை என்கின்றார். இதுவும் பொருத்தமாக இல்லை. இவரின் வரையறைப்படி மெல்ல என்பது மெல் என்ற வேருடன் அ விகுதி சேர்ந்த அடி. மெல் என்ற வேர் பெயரடை வேராகவும் உள்ளது. மெல் என்ற வேருடன் இ விகுதி சேர்ந்து மெலி என்ற வினையடியும் மென்மை என்ற பெயரும் மெல்லிய என்ற பெயரடையும் தோன்றும். தூர் என்ற வேருடனும் பை என்ற வேருடனும் அ விகுதி சேர்ந்து வினையடைகள் உருவாவது போல் மெல் என்ற அடியுடன் அ விகுதி சேர்ந்து மெல்ல என்ற வினையடி உருவாகி-யுள்ளது.
மாற்றுப் பெயரான (க்ஷீமீயீறீமீஜ்வீஸ்மீ ஜீக்ஷீஷீஸீஷீuஸீ) தான் என்பது tக்ஷீuறீஹ், க்ஷீமீணீறீறீஹ் என்ற பொருளில் வினையடையாக வரும் என்பதற்குச் சான்றுகள் இல்லை. தான் என்பது ஆக என்ற வினைய-டையாக்க விகுதியும் ஏ என்ற விகுதியும் பெற்றுத் தானாக, தானே என வந்தே வினை-யடையாகச் செயற்படும். க்ரியா அகராதியில் தானாக என்பதற்கு, 1. பிறரின் அல்லது பிறவற்றின் உதவி இல்லாமல்; வெளித்தூண்டுதல் இல்லாமல், 2. எதிரில் யாரும் இல்லாமல்; தனியாக எனப் பொருள் தரப்பட்டுள்ளது. எனவே, தான் என்பது அப்படியே நின்று வினையடையாக வருவதில்லை என்பதுடன் உண்மையாக என்ற பொருளிலும் வருவதில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் இலக்கணிகள் எல்லோரும் பெயரடை வினையடைகளைத் தனித்த சொல்வகைகளாகக் கொண்டு அவற்றை உரிச்சொல் எனும் சொல்-லாலேயே குறித்துள்ளனர் என்றும் பெயரடை வினையடைகளைப் பற்றிப் பேசுகையில் அவர்கள் பெயர் என்ற குறியீட்டை ஆளாமல் சொல் என்ற பொதுச் சொல்லையே ஆண்டுள்-ளனர் என்கின்றார் சுவெலபில் (ப. 45). தொல்-காப்பிய உயிரியலில் பெயர் (படர், மாதர்), வினையடி (துவன்று, படர், பரவு, பழிச்சு, கவவு), தொழிற்பெயர் (அலமரல், ஓய்தல், ஆய்தல், சிலைத்தல்) ஆக்கப்பெயர் (பசப்பு, கறுப்பு, விதிர்ப்பு, சீர்த்தி, கவவு), பெயரடை (குழு, உறு, தட), வினையடை (சால, தவ, நனி) போன்ற பல்வகைச் சொற்களும் இடம்பெற்றிருந்தாலும் தொல்காப்பியர் அவற்றை உரிச்சொல் எனவே குறிப்பிட்டுள்ளார். நன்னூலைப் பொறுத்த-மட்டில் அவர் உரிச்சொல்லுக்குத் தரும் வரையறையே வேறு.
பல்கவகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்-வினை
ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (442)
என்பது பவணந்தியார் வரையறை. பல்வகைப் பண்பையும் வெளிப்படுத்தும் ஒரு பொருள், பலபொருள் தழுவிப் பெயர்வினையிலிருந்து நீங்காமல் செய்யுட்கு உரியனவாக வருவன உரிச்சொல் என்பது அவர் வரையறை. இதற்கு உரை எழுதிய சங்கரநமச்சிவாயரும் “பண்பு-பொறியால் உணரப்படும் குணம். இவற்றை அடக்கி நின்ற குணமும் தொழிலும் பொருள் எனவும் படும். ஆதலின் இவற்றை உணர்த்தும் உரிச்சொல்லும் பெயர்ச்சொல் எனப்படும். ஆதலால் பல்வகைப் பண்புகள் பகர்பெயராகி என்றார்’’ என்று விளக்குகின்றார் (1999:512). ஆக உரிச்சொற்களைப் பெயர் எனல் பொருந்தாது என்றாலும் பெயர் எனக் குறிப்பிடும் மரபு பவணந்தியாரிடம் காணப்படுவது வெளிப்படை இது தனிப்பட்ட ஆய்வுக்கு உரியது.
5.     தமிழின் இலக்கண ஆய்வில் இலக்கணத்-தின் பின்னிணைப்பாகக் (கிஜீஜீமீஸீபீவீஜ் tஷீ tலீமீ நிக்ஷீணீனீனீணீக்ஷீ) கருதப்படும் தமிழ் அகராதிகளையும் இணைத்தே ஆராய வேண்டியுள்ளது. மொழி வரலாற்றின் பல்வேறு காலகட்டத் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவான தமிழ் அகராதிகள் இலக்கணிகள் சொல்லாத இலக்கணக் கூறுகளையும், தரவுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்துவனவாக உள்ளன. இந்தவகையில் தமிழின் பல்வேறு அகராதிகளிலும் பெயரடை வினையடைச் சொற்கள் பதிலிகளாகத் தரப்பட்டுள்ளன. இராட்லர், வின்சுலோ போன்ற அகராதிகளைத் தொடர்ந்து வெளிவந்த பல்வேறு இருமொழி அகராதிகளிலும் இந்தப் பதிவுகள் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அகராதிப் பதிவுத் தெரிவில் சொல்லின் வடிவ வேறுபாடும், பொருள் வேறுபாடும் கவனத்தில் கொள்ளப்-பட்டு அவை பதிவுகளாகக் கொள்ளப்பெறும். இதனால்தான் நாளைக்கு, எப்பொழுதும், திரும்ப, மீண்டும், தினமும், நாளும், வைகலும்; நேற்றைய, இன்றைய, பசு, பசிய, பச்சு, பை, பலத்த என்பன போன்ற சொற்களும் பெயர் வினையெச்சங்கள் எனும் செயற்பாடுகளிலிருந்து வேறுபட்டுச் செயற்படும் பச்சை, உரக்க, உரத்து, அடித்து என்பன போன்ற சொற்களும் அகராதிகளில் தொடர்ந்து பதிவுச் சொற்களாக ஏற்கப்பட்டு வந்துள்ளன. இவை அகராதி நெறிமுறைப்படி தலைச்சொற்கள் அல்ல. காரணம் இவை சொல்விரிவுகளை உடையன அல்ல என்பதால் இந்தப் பதிவுகளில் இந்தச் சொற்கள் மட்டுமே மேற்கோள்களாகத் தரப்பெறும். எனவே இவற்றைப் பதிவுச்சொற்களாக மட்டுமே கருதுவது அகராதியியல் மரபு. சுவெலபில் கூறிய, பெயரடை வினையடைகள் சொல்விரிவுகளை உடையனவல்ல என்ற கருத்து தமிழ் அகராதியியலாளர்கள் முன்பே நிலைநிறுத்திய கருத்தாக உள்ளது என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் இவற்றை அகராதியியலாளர்கள் தனித்த இலக்கணக்-கூறுகளாகக் கருதியதால் தான் இவற்றின் தனித்த செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு இவற்றுக்குத் தனிப்பதிவுகள் அமைத்துள்ளனர். தொல்காப்பியர் பல்வேறு பெயரடைகளையும் வினையடைகளையும் உரியியலில் பதிவுசெய்-திருப்பதையும் இங்கே கருதிப் பார்க்க வேண்டும். எனவே அகராதிகள் இந்த இலக்கணக்கூறு-களுக்கான தரவுகளைக் கொண்டிருப்பதுடன் வரையறையையும் கொண்டனவாக உள்ளன. எனவே பெயரடை வினையடை பற்றிய ஆய்வில் அகராதித் தரவுகள் மிக முக்கியமாகக் கவனத்-தில் கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன.

No comments:

Post a Comment